ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

Top posting users this month
No user

நிகழ்நிலை நிர்வாகிகள்

தீர்ப்பு... எகிறுது எதிர்பார்ப்பு!

5 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

தீர்ப்பு... எகிறுது எதிர்பார்ப்பு! Empty தீர்ப்பு... எகிறுது எதிர்பார்ப்பு!

Post by தமிழ்நேசன்1981 Thu Sep 25, 2014 12:07 pm

தீர்ப்பு... எகிறுது எதிர்பார்ப்பு!


செப்டம்பர் - பெரியார் மற்றும் அண்ணா பிறந்த நாள் விழா என தி.மு.க., அ.தி.மு.க ஆகிய இரண்டு பெரிய திராவிடக் கட்சிகளுக்கும் கொண்டாட்டமான மாதம் எப்போதும். இப்போது, கோர்ட் மாதமாக மாறிவிட்டது!

2ஜி ஸ்பெக்ட்ரம், ஏர்செல் - மேக்சிஸ் வழக்குகளில் டெல்லியில் தி.மு.க-வும், சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரில் அ.தி.மு.க-வும் மாட்டிக்கொண்டு முழிக்கின்றன. தி.மு.க-வைச் சேர்ந்தவர்கள் மீதான வழக்குகளின் விசாரணைப் படலம் தொடர்ந்துகொண்டிருக்க, ஜெ. மீதான சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்பு, செப்டம்பர் 27-ம் நாள் பெங்களூரு நீதிமன்றத்தில் வரப்போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசியல் செப்டம்பர் 27-க்கு முன் - பின் எனப் பிரித்துச் சொல்லும் அளவுக்கு திடீர் முக்கியத்துவம் கிளம்பி இருக்கிறது.

தி.மு.க தலைவர் கருணாநிதி, காலையும் மாலையும் பெங்களூரு வழக்கின் தீர்ப்பைப் பற்றி விசாரிப்பதையே வேலையாகக் கொண்டிருக்கிறார். சட்டம் தெரிந்தவர்களிடம் மட்டும் அல்ல, தன்னைப் பரிசோதிக்கும் மருத்துவர்களிடமும்கூட, 'பெங்களூரு வழக்கு பத்தி என்னய்யா சொல்றாங்க... தீர்ப்பு எப்படி வருமாம்?’ என அதைப் பற்றியே விசாரிக்கிறார்.

கடந்த வாரத்தில் மூன்று நாட்கள் கருணாநிதி, திருவாரூரில் இருந்திருக்க வேண்டும். தொகுதிப் பணிகள், தி.மு.க பொதுக்கூட்டம் எனப் பயணத் திட்டம் வைத்திருந்தார். முதலில் தீர்ப்பு தேதி செப்டம்பர்-20 என அறிவிக்கப்பட்டு இருந்தது. அதனால் தனது திருவாரூர் பயணத்தைத் தள்ளிவைத்தார் கருணாநிதி. அதாவது தீர்ப்புக்குப் பிறகு எல்லா நிகழ்ச்சிகளையும் வைத்துக்கொள்ளலாம் என முடிவெடுத்தார்.

கடந்த சட்டமன்றத் தேர்தல் தோல்வி, நாடாளுமன்றத் தேர்தல் படுதோல்விக்குப் பிறகு... இனி, இன்னொரு முறை தனக்கான அரசியல் அதிகார வாய்ப்பு இல்லை எனச் சோர்ந்துபோயிருந்த கருணாநிதியை, மலர்ச்சியுடன் தெளிச்சிபெற வைத்துள்ளது பெங்களூரில் ஜெ.வுக்கு எதிராக நடந்த சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்பு முஸ்தீபுகள்!

அப்படித்தான் மு.க.ஸ்டாலினுக்கும்!

தமிழ்நாட்டுக்கு முதலமைச்சர் ஆவதற்கு முன்பாக தி.மு.க-வுக்கு தலைவர் ஆகிவிடுவோம் எனத் தனி ஆவர்த்தன குதிரையை நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாகத் தட்டிவிட்டவர் மு.க.ஸ்டாலின். தேர்தல் தோல்வி, 'இந்தக் குதிரையை நம்பி பணம் கட்டலாமா?’ என்ற பயத்தை தி.மு.க நிர்வாகிகள் மத்தியிலேயே விதைத்தது. ஆனால், சில 'விடலை’களுக்கு இது விளங்கவில்லை. ஸ்டாலினுக்கு நல்லது செய்வதாக நினைத்து அவரைத் தூக்கியும் கருணாநிதியைப் பலவீனப்படுத்தியும் இணையதளங்களில் கருத்துக்களைப் பரப்பினர். இவையெல்லாம் தனது கையெழுத்துப் பத்திரிகைக் காலத்திலேயே கருணாநிதி பயன்படுத்திய அஸ்திரங்கள்தான் என்பது, அந்தப் புதியவர்களுக்குப் புரிவதற்கு முன், 'தலைவரை வீழ்த்த நினைக்கிறாரா தளபதி?’ என்ற கெட்ட பெயர் ஸ்டாலின் மீது ஏற்பட்டது. 'கருணாநிதியா... ஸ்டாலினா?’ என்ற நேருக்கு நேர் கோதா தொடங்கியது!

ஜெயலலிதாவுக்கு சொத்துக்குவிப்பு வழக்குத் தீர்ப்பு நெருக்கடி நெருங்கும் நேரத்தில், இப்படி ஓர் உள்குத்து கோபாலபுரத்தில் நடப்பது ஆரோக்கியமானது அல்ல என்பதை உணர்ந்த ஸ்டாலின், தி.மு.க முப்பெரும் விழாவில் தன்னிலை விளக்க முரசு கொட்டினார்... 'தலைவருக்கும் எனக்கும் தகராறு என பத்திரிகைகள் எழுதுகின்றன. தலைவரைவிட்டால் இந்த நாடு இல்லை; நான் இல்லை; நீங்கள் இல்லை. அவருக்காக இன்னும் ஊக்கத்தோடும் உற்சாகத்தோடும் உழைக்கவே விரும்புகிறேன். வேறு பதவியை விரும்பவில்லை. அண்ணன் துரைமுருகன் சொன்னதுபோல 2016-ல் தலைவர் கலைஞர் தலைமையில் கழக ஆட்சி அமையும்’ என்று ஸ்டாலின் சொன்னது கடந்த இரண்டு மாத மனக் கசப்புகளைத் தள்ளிவைத்துவிட்டு, கருணாநிதிக்கும் ஸ்டாலினுக்குமே நிம்மதியைக் கொடுத்துவிட்டது. இணைந்தும் பிணைந்தும் ஸ்டாலின் செயல்பட முடிவெடுத்தது கட்சியினர் மத்தியில், பெங்களூரு தீர்ப்பைவிட மகிழ்ச்சியைக் கொடுத்துள்ளது.

இது தி.மு.க நிலவரம் என்றால்... இதுவரை தனது உடல்நலன் பற்றியும் மகனது நடிப்புத் திறன் பற்றியும் மட்டுமே கவலைப்பட்டுக்கொண்டிருந்த விஜயகாந்தை, அரசியல் தூக்கத்தில் இருந்து கொஞ்சம் எழுப்பியிருக்கிறது இந்தத் தீர்ப்பு தேதி. 'ஜெயலலிதாவின் சட்டவிரோத ஆட்சிக்கு எதிராக சட்டமன்ற மாண்பைக் காப்பதற்காக அனைத்து கட்சிகளும் ஒன்றுசேர வேண்டும்’ என கருணாநிதி பலதடவை வலைவிரித்தபோது எல்லாம் அதைக் கண்டுகொள்ளாமல் இருந்த விஜயகாந்த், 'உள்ளாட்சித் தேர்தலில் ஜனநாயகப் படுகொலையைக் கண்டித்து அனைத்து கட்சிகளும் ஒன்றுசேர வேண்டும்’ என அறிக்கைவிடும் அளவுக்கு யதார்த்த நிலைக்கு இறங்கிவந்துவிட்டார். எதிர் அணியினரது வாக்குகளை மொத்தமாக வாங்க, ஐக்கியம் முக்கியம் என்பதை உணர்ந்துவிட்டார் அவர். பா.ஜ.க-வுடன் சேர்ந்து இருந்தால் மட்டுமே இந்த நிலைமையைச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ள முடியும்; தனித்துச் செயல்படுவதால் லாபம் இல்லை என்பதுதான் விஜயகாந்தின் இப்போதைய புரிதல்!

இந்தச் சூழ்நிலையில் அதிரடியாக வைகோவும் ஜெயலலிதா எதிர்ப்பு அரசியலைத் தீவிரமாகக் கையில் எடுத்துவிட்டார். கடந்த செப்டம்பர் 15-ம் தேதி, பூவிருந்தவல்லியில் நடந்த பேரறிஞர் அண்ணா பிறந்த நாள் விழா மாநாட்டில் பேசிய வைகோ, சுமார் 45 நிமிடங்களுக்கு மேல் ஜெயலலிதாவை மட்டுமே விமர்சித்தார். 'முல்லைப் பெரியாறுக்காக எதையுமே செய்யாதவர் தனக்குத்தானே பாராட்டு விழாவை நடத்திக்கொள்கிறார். தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சி அதலபாதாளத்துக்குப் போய்விட்டது. எதிர்க்கட்சிகளே இல்லை எனச் சொல்லும் ஜெயலலிதா, உள்ளாட்சித் தேர்தலில் தெருத்தெருவாகப் போய் எதற்காகப் பிரசாரம் செய்யவேண்டும்?’ என்று கேட்டு, 'ஜெயலலிதா ஆட்சியை வீழ்த்துவதற்கு கட்சிகள் ஒன்றுபட்டு கைகோக்க வேண்டும்’ என்று கோரிக்கை வைத்தார். உள்ளாட்சி தேர்தலில் பா.ம.க.வும் பா.ஜ.க-வை வலியப் போய் ஆதரித்து தனது இருப்பை கூட்டிக் கொண்டது.

பா.ஜ.க-வைப் பற்றி சொல்லவே வேண்டாம். இப்போதைக்கு அ.தி.மு.க.வு-க்கு எதிராக உள்ளாட்சித் தேர்தல் களத்தில் இருந்த ஒரே கட்சி அதுதான். பா.ஜ.க வேட்பாளர்களை வாபஸ் வாங்கவைத்து, அவர்களது கட்சி வேட்பாளர்கள் வேட்பு மனுக்களைத் தள்ளுபடி செய்யவைத்து, தேவைக்கு அதிகமான முக்கியத்துவத்தை பா.ஜ.க-வுக்குக் கொடுத்துவிட்டது அ.தி.மு.க.. நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க உருவாக்கிய கூட்டணியை அப்படியே தக்கவைத்திருக்கிறார்கள். ஒரே மேடையில் தோன்றாவிட்டாலும், ஒரே கூட்டணியில் விஜயகாந்த், வைகோ, ராமதாஸ் ஆகியோரைக் கட்டிவைத்துள்ளது பா.ஜ.க. மேலும், பேசிப் பேசி ரஜினி மனதைக் கரைத்தும் வருகிறார்கள். '2016-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் 'ரஜினி’ எனும் அஸ்திரத்தைக் கைப்பற்றவே, நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னதாக மோடியே ரஜினியின் வீட்டுக்கு வந்து சென்றார். அப்போது முதல் ரஜினியை எங்கள் பக்கம் இழுக்க பேச்சுவார்த்தைகள் நடந்துகொண்டிருக்கின்றன. சீக்கிரமே அவரது வருகை அல்லது ஆதரவு தாமரைக்குக் கிட்டும்!’ என்ற அபார நம்பிக்கையில் இருக்கிறார்கள் பா.ஜ.க-வினர். 'பா.ஜ.க பக்கம் பார்வையைத் திருப்பலாமா... வேண்டாமா?’ என்பதைத் தீர்மானிக்க ரஜினி காத்திருப்பதும்... செப்டம்பர் 27-ம் தேதி தீர்ப்புக்குப்பிறகுதான்!

பொதுவாக, சட்டமன்றத் தேர்தலுக்கு மூன்று மாதங்களுக்கு முன்பு எத்தகைய அனல், கனல், கொந்தளிப்பு இருக்குமோ... அந்த வெப்பம் இப்போதே தகிக்கிறது, தமிழக அரசியல் வட்டாரத்தில்!

அதில், பெங்களூரு தீர்ப்பு ஊற்றப்போவது எண்ணெயையா... தண்ணீரையா?
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Back to top Go down

தீர்ப்பு... எகிறுது எதிர்பார்ப்பு! Empty Re: தீர்ப்பு... எகிறுது எதிர்பார்ப்பு!

Post by M.Saranya Fri Sep 26, 2014 2:40 pm

பெங்களூரு தீர்ப்பு ஊற்றப்போவது எண்ணெயையா... தண்ணீரையா?[/quote] மேற்கோள் செய்த பதிவு: 1090633

என்னை பொருத்தவரை இதில் தண்ணீர் தேவைஇல்லை என்றே நினைக்கிறேன்.


கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

தீர்ப்பு... எகிறுது எதிர்பார்ப்பு! W5td1pX3QFi1kBRhH0I3+Affection
M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

Back to top Go down

தீர்ப்பு... எகிறுது எதிர்பார்ப்பு! Empty Re: தீர்ப்பு... எகிறுது எதிர்பார்ப்பு!

Post by தமிழ்நேசன்1981 Fri Sep 26, 2014 2:54 pm

தமிழர் அனைவரது விருப்பமும் அதுதான்... புன்னகை
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Back to top Go down

தீர்ப்பு... எகிறுது எதிர்பார்ப்பு! Empty Re: தீர்ப்பு... எகிறுது எதிர்பார்ப்பு!

Post by ஜாஹீதாபானு Sat Sep 27, 2014 12:13 pm

தீர்ப்பு என்னாச்சு?


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

தீர்ப்பு... எகிறுது எதிர்பார்ப்பு! Empty Re: தீர்ப்பு... எகிறுது எதிர்பார்ப்பு!

Post by ராஜா Sat Sep 27, 2014 12:54 pm

தாமதமாகி கொண்டிருப்பதாக புதிய தலைமுறை செய்தி வெளியிடுகிறது
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

தீர்ப்பு... எகிறுது எதிர்பார்ப்பு! Empty Re: தீர்ப்பு... எகிறுது எதிர்பார்ப்பு!

Post by krishnaamma Sat Sep 27, 2014 2:04 pm

ம்....இன்னும் தீர்ப்பு   வரவில்லை.......இங்கு ஒரே அமர்க்களமாம்...............ஹோசூரில் எல்லா பஸ்களும் நிருத்தபடிருக்காம்  ...............தமிழ்நாட்டில் பல மாவட்டங்களில் மின்சாரம் இல்லையாம்...தீர்ப்பை மக்கள் டிவி இல் பார்க்கக்கூடாது  என்று அப்படி செய்துள்ளதாக  டிவி இல் சொல்கிறார்கள்.................அண்ணா சாலை வெறிச்சோடி இருக்காம்........
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

தீர்ப்பு... எகிறுது எதிர்பார்ப்பு! Empty Re: தீர்ப்பு... எகிறுது எதிர்பார்ப்பு!

Post by ஜாஹீதாபானு Sat Sep 27, 2014 2:16 pm

1 மணிக்கு தீர்ப்பு வந்துருச்சாமே


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

தீர்ப்பு... எகிறுது எதிர்பார்ப்பு! Empty Re: தீர்ப்பு... எகிறுது எதிர்பார்ப்பு!

Post by krishnaamma Sat Sep 27, 2014 2:19 pm

ஜெயலிதா குற்றவாளி என்றுதீர்ப்பு வந்து விட்டது புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

தீர்ப்பு... எகிறுது எதிர்பார்ப்பு! Empty Re: தீர்ப்பு... எகிறுது எதிர்பார்ப்பு!

Post by தமிழ்நேசன்1981 Sat Sep 27, 2014 2:28 pm

பெங்களூரு நீதிமன்றத்தில் ஜெயலலிதா; பிற்பகல் 3 மணிக்கு தீர்ப்பு!

சென்னை: ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் மதியம் 1 மணிக்கு தீர்ப்பு வழங்கப்படும் நீதிமன்றத்தினுள் இருக்கும் வழக்கறிஞர்கள் தெரிவித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இவ்வழக்கை விசாரித்த பெங்களூரு தனி நீதிமன்ற சிறப்பு நீதிபதி குன்ஹா இன்னும் சற்று நேரத்தில், நாடு முழுவதும் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள தீர்ப்பை வழங்க உள்ளார்.

ஜெயலலிதா தவிர்த்து இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சசிகலா சுதாகரன், இளவரசி உள்ளிட்டோரும் ஆஜராகி உள்ளனர். அவர்கள் தற்போது தீர்ப்புக்காக நீதிமன்றத்தில் காத்திருக்கின்றனர்

ஓ.பி. எஸ். உடன் பேசிய ஜெயலலிதா

இதனிடையே நீதிமன்றத்தில் அமர்ந்திருந்த ஜெயலலிதா, திடீரென வெளியே வந்து அமைச்சர் ஓ. பன்னீர் செல்வத்தை சந்தித்துப் பேசிவிட்டு சென்றார்.


பாதுகாப்பு
ஜெயலலிதா நீதிமன்றத்தில் ஆஜராவதால், பாதுகாப்பு காரணங்களுக்காக நீதிமன்றம் பெங்களூரு பரப்பன அக்ரஹாராவில் உள்ள மத்திய சிறை வளாகத்தில் அமைந்துள்ள காந்தி பவனுக்கு மாற்றப்பட்டுள்ளது. அங்கு முற்பகல் 11 மணிக்கு நீதிபதி ஜான் மைக்கேல் டி குன்ஹா, இந்த வழக்கின் தீர்ப்பை வெளியிடுகிறார்.

தீர்ப்பு இன்று கூறப்படுவதையடுத்து, பரப்பன அக்ரஹாரா மத்திய சிறை வளாகத்தை சுற்றிலும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. மேலும், எந்தவித அசம்பாவிதங்களும் நடக்காமல் தடுப்பதற்காக பாதுகாப்புப் பணியில் சுமார் 6 ஆயிரம் போலீஸார், ஆயுதப் படை, அதிரடிப் படையைச் சேர்ந்த ஆயிரம் பேரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

சிறை வளாகம் முழுவதும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. தமிழகத்தில் இருந்து கர்நாடகத்துக்கு வரும் வாகனங்கள் அனைத்தும் சோதனைக்குப் பிறகே அனுமதிக்கப்படுகின்றன.

ஜெயலலிதா பெங்களூர் புறப்பட்டார்

இந்த வழக்கில் நேரில் ஆஜராக தமிழக முதல்வர் ஜெயலலிதா சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் இன்று காலை பெங்களூரு புறப்பட்டு சென்றார். அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் வழக்கு நடைபெறும் நீதிமன்ற வளாகத்திற்கு செல்ல உள்ளார். சென்னையில் இருந்து பெங்களூருவின் பரப்பன அக்ரஹாரம் நீதிமன்றத்திற்கு செல்லும் ஜெயலலிதாவுக்கு, தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

வாகனங்கள் நிறுத்தம்
தமிழ்நாட்டுக்கு வரும் கர்நாடக மாநில பேருந்துகள் எல்லையோடு நிறுத்தப்பட்டுள்ளது. தீர்ப்பின் முடிவை அறிந்த பிறகு பேருந்துகளை இயக்க கர்நாடக போக்குவரத்து கழகம் முடிவு செய்துள்ளது. இதேபோல், தமிழ்நாட்டில் இருந்து கர்நாடகா செல்லும் பேருந்துகளும் தமிழக எல்லையோடு நிறுத்தப்பட்டுள்ளது. மேலும், பெங்களூரு, ஓசூர் இடையே பேருந்து, கார், லாரி உள்பட அனைத்து வாகனங்களும் நிறுத்தப்பட்டுள்ளது.

அமைச்சர்கள், அ.தி.மு.க.வினர் படையெடுப்பு
தமிழக அமைச்சர்கள் அனைவரும் தீர்ப்பை அறிவதற்காக பெங்களூர் வந்து முகாமிட்டுள்ளனர். அ.தி.மு.க. வழக்கறிஞர்கள், முக்கிய நிர்வாகிகள் மற்றும் பல்லாயிரக்கணக்கான அ.தி.மு.க.வினர் பெங்களூருவில் குவிந்துள்ளனர்.

வழக்கு விவரம்

தமிழக முதல்வராக 1991 முதல் 1996 ஆம் ஆண்டு வரை ஜெயலலிதா பதவி வகித்தபோது, வருமானத்துக்கு அதிகமாக ரூ.66.56 கோடி அளவுக்கு சொத்துகள் சேர்த்ததாக 1996 ஆம் ஆண்டு ஜூன் 14 ஆம் தேதி சென்னை செஷன்ஸ் நீதிமன்றத்தில் ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் மீது தி.மு.க. அரசு வழக்கு தொடர்ந்தது.

2001 ஆம் ஆண்டில் ஜெயலலிதா முதல்வரானது இந்த வழக்கின் விசாரணையை கர்நாடகத்துக்கு மாற்ற வேண்டும் என தி.மு.க. பொதுச் செயலாளர் அன்பழகன் மனு அளித்தார். அதை ஏற்று கொண்ட நீதிமன்றம், ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கை கர்நாடகத்துக்கு மாற்றி கடந்த 2003 ஆம் ஆண்டு நவம்பர் 18 ஆம் தேதி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதை தொடர்ந்து பெங்களூருவில் உள்ள மாநகர சிட்டி சிவில் நீதிமன்ற வளாகத்தில் சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்பட்டு கடந்த 2004 ஆம் ஆண்டு பிப்ரவரி 14 ஆம் தேதி விசாரணை தொடங்கியது. இதுவரை 252 அரசுத் தரப்பு சாட்சிகளிடமும், 99 எதிர்தரப்பு சாட்சிகளிடமும் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. குற்றவியல் நடைமுறைச் சட்டப் பிரிவு 313ன் கீழ், ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளன.

கடந்த ஆகஸ்ட் 27 ஆம் தேதியுடன் வாதங்கள் நிறைவடைந்தன. அரசுத் தரப்பு வழக்கறிஞர் பவானி சிங் 17 நாட்கள் தனது வாதத்தை முன்வைத்தார். ஜெயலலிதா வழக்கறிஞர் பி.குமார் தனது தரப்பு வாதங்களை 25 நாட்கள் பதிவு செய்தார். இருதரப்பு வாதங்கள் முடிவடைந்துள்ள நிலையில் இன்று சனிக்கிழமை (செப்.27) தீர்ப்பு வழங்கப்படுகிறது.
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Back to top Go down

தீர்ப்பு... எகிறுது எதிர்பார்ப்பு! Empty Re: தீர்ப்பு... எகிறுது எதிர்பார்ப்பு!

Post by krishnaamma Sat Sep 27, 2014 2:30 pm

தீர்ப்பு வந்தாச்சு நேசன்.........ஜெயலலிதா பதவிவிலகுகிறார்.......டிவி இல் இது தான் breaking நியூஸ் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

தீர்ப்பு... எகிறுது எதிர்பார்ப்பு! Empty Re: தீர்ப்பு... எகிறுது எதிர்பார்ப்பு!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum