ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

66 கோடி சொத்துக் குவிப்பை விசாரிக்க மூன்று கோடி செலவு!

Go down

66 கோடி சொத்துக் குவிப்பை விசாரிக்க மூன்று கோடி செலவு! Empty 66 கோடி சொத்துக் குவிப்பை விசாரிக்க மூன்று கோடி செலவு!

Post by சிவா Thu Sep 18, 2014 4:21 am


பெங்களூரு ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கின் இறுதித் தீர்ப்பு வரும் 20-ம் தேதி அறிவிக்கப்படும் நிலையில் பெங்களூருவைச் சேர்ந்த மனித உரிமை ஆர்வலர் நரசிம்ம மூர்த்தி, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் இந்த வழக்குக்கு கர்நாடக அரசு எவ்வளவு செலவு செய்திருக்கிறது என்பதோடு, கடந்த 10 ஆண்டுகளில் ஜெயலலிதா நீதிமன்றத்துக்கு வராமல் இருந்ததே பெரும் குற்றம் என்று பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார்.

நரசிம்ம மூர்த்தியை சந்தித்துப் பேசியபோது, ''சட்டத்தின் முன் அனைவரும் சமம். ஆனால், அரசாங்கத்தை ஏமாற்றி வருமானத்துக்கு அதிகமாக ரூ.66 கோடி சொத்துகள் சேர்த்ததாகக் குற்றம்சாட்டப்பட்ட ஜெயலலிதா என்ற ஒரு தனி மனிதருக்கு இந்த அரசாங்கம் எவ்வளவு செலவு செய்கிறது என்ற ஆதங்கத்தில்தான் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் வழக்குக்கு ஆன செலவுகளைப் பெற்றேன்.

இந்த வழக்கு கர்நாடகத்துக்கு மாற்றப்பட்ட பிறகு, 2004 முதல் 31.3.2014 வரை ஒவ்வோர் ஆண்டும் ஆன செலவு விவரம்:

2004-05-ம் ஆண்டு ரூ.20,57,318, 2005-06-ம் ஆண்டு ரூ.35,07,489, 2006-07-ம் ஆண்டு ரூ.11,02,878, 2007-08-ம் ஆண்டு ரூ.16,62,143, 2008-09-ம் ஆண்டு ரூ.9,99,542, 2009-10-ம் ஆண்டு ரூ.8,68,891, 2010-11-ம் ஆண்டு ரூ.19,92,031, 2011-12-ம் ஆண்டு ரூ.38,96,828, 2012-13-ம் ஆண்டு ரூ.39,61,506, 2013-14-ம் ஆண்டு ரூ.86,50,990... என கடந்த 10 ஆண்டுகளில் ரூ.2,86,99,616 செலவாகி இருக்கிறது. இன்னும் இந்த வருடம் மார்ச் மாதத்திலிருந்து இன்றைய தேதி வரை கடந்த 6 மாதங்களுக்கான செலவையும், சென்னையில் ஏழு ஆண்டுகள் நடைபெற்றபோது ஆன செலவையும் சேர்த்தால் ரூபாய் ஐந்து கோடியைத் தாண்டும்.

கர்நாடகாவில் உள்ள பல நீதிமன்றங்களில் இன்னும் அடிப்படை வசதிகள்கூட இல்லை. கர்நாடக ஏழை எளிய மக்கள் சட்ட விழிப்பு உணர்வு, சட்ட உதவிகள் இல்லாமல் தவிக்கிறார்கள். ஓர் அரசு துறையில் ஒரு விண்ணப்பப் படிவம் கேட்டால்கூட, 'போய் ஜெராக்ஸ் எடுத்துக் கொண்டு வா’ என்று ஜெராக்ஸ் எடுப்பதற்கான ஒரு ரூபாயைக்கூட மக்களுக்கு அரசாங்கம் செலவு செய்யத் தயங்குகிறது. ஆனால், ஒரு தனி மனித வழக்குக்கு அரசாங்கம் இவ்வளவு பணம் செலவு செய்திருப்பதை நினைக்கும்போது, ஜனநாயகத்தின் மீது நம்பிக்கையை இழக்கச் செய்கிறது. அதனால் வழக்குக்கு ஆன மொத்த செலவுகளையும் ஜெயலலிதாவின் சொந்தப் பணத்தின் மூலமாகவே வசூலிக்கப்பட வேண்டும்.

மேலும் கர்நாடகாவில் உள்ள பல கீழ் நீதிமன்றங்களிலும் உயர் நீதிமன்றத்திலும் நீதிபதிகள் பற்றாக்குறையாக இருக்கின்றனர். இதனால் பல்லாயிரக்கணக்கான வழக்குகள் விசாரணை செய்ய முடியாமல் தேங்கிக் கிடக்கின்றன. ஆனால், இந்த வழக்குக்காக ஒரு தனி நீதிமன்றத்தையே ஒதுக்கி, அதற்கு ஒரு தனி நீதிபதியையும் அரசு சிறப்பு வழக்கறிஞர்களையும் நியமித்து நீதிமன்றத்தின் முழு வேலை நேரத்தையும் பயன்படுத்திக்கொள்ளாமல் பல நேரங்களில் 1/2 மணி நேரமும், ஒரு மணி நேரமும் நீதிமன்றம் நடைபெற்றுள்ளது. இது எந்த விதத்தில் நியாயம்?

சிட்டி சிவில் கோர்ட் வளாகத்தில் உள்ள தலைமை நீதிபதியின் நீதிமன்றம்கூட சாதாரணமாக இருக்கிறது. ஜெயலலிதா வழக்கு நடைபெறும் சிறப்பு நீதிமன்றம் 50, 60 ஸ்பெஷல் இருக்கைகள் போட்டு அலங்கரிக்கப்பட்டுள்ளது.

இதே மாநிலத்தின் முன்னாள் முதல்வர் எடியூரப்பா மீது ஒரு நில அபகரிப்பு புகார் நீதிமன்றத்தில் நடைபெற்றபோது நீதிமன்றத்தின் ஒவ்வொரு வாய்தாவுக்கும் மக்களோடு மக்களாக வந்து வழக்கைச் சந்தித்தார். முன்னாள் பாரத பிரதமர் இந்திரா காந்தி மீது கர்நாடக மாநிலத்தில் ஒரு மிகச் சிறிய சிக்கபல்லாபூர் தாலுக்கா நீதிமன்றத்தில் எலெக்ஷன் சம்பந்தமான புகார் வழக்கு ஒன்று நடைபெற்றது. அந்த வழக்குக்காக டெல்லியில் இருந்து வந்து ஆஜரானார். இப்படி எத்தனையோ தலைவர்கள் நீதிமன்றங்களுக்குத் தலைவணங்கி வருகிறார்கள். ஜெயலலிதாவுக்கு இந்த நீதிமன்றம் எந்த மூலையில் இருக்கிறது என்றுகூட தெரியாது.

நீங்கள் நீதிமன்றத்துக்கு வராமல் புறக்கணித்ததைப் பலரும் பின்பற்றுவார்கள்'' என்று கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தினார்.

விகடன்


66 கோடி சொத்துக் குவிப்பை விசாரிக்க மூன்று கோடி செலவு! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

Back to top

- Similar topics
» சொத்துக் குவிப்பு வழக்குச் செலவு: 12 ஆண்டுகளில் ரூ.12.04 கோடி!
» தேர்தல் ஊழலின் பிறப்பிடமாகி விட்டது: ரூ.2 கோடி செலவு செய்து ரூ.10 கோடி சம்பாதிக்கின்றனர்
» உலகத் தமிழ் செம்மொழி மாநாடு: செலவு 305 கோடி; மீதம் 10 கோடி
» 3 ஆண்டில் கசாபிற்கு ரூ. 16 கோடி செலவு: சிறப்பு அறை மட்டுமே ரூ.5.3 கோடி
» எந்திரன் செலவு ரூ 132 கோடி... வருமானம் ரூ 179 கோடி! - சன் டிவி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum