ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 10:50 pm

» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:54 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:14 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:04 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இறைவா! இன்னும் சில நாட்கள் தருவாயா?

4 posters

Go down

இறைவா! இன்னும் சில நாட்கள் தருவாயா? Empty இறைவா! இன்னும் சில நாட்கள் தருவாயா?

Post by jesifer Wed Sep 17, 2014 5:19 pm

இறைவா! இன்னும் சில நாட்கள் தருவாயா?
(தினமலர்)

''அங்கிள்! எனக்கொரு கலர் புக் வாங்கிக் கொடுப்பீங்களா?,''
''வாங்கித்தர்றேம்மா...ஆனா, இந்த ராத்திரியில எங்க போய் வாங்குறது? நாளைக்கு...!,''

''ஓ.கே., அங்கிள்! ஆனா, நாளைக்காவது எனக்குக் கிடைக்குமா? ஏன்னா....,''
இந்த உரையாடல் தொடரும்போதே, அங்கே கைகளில் புத்தகங்களோடு வருகிறாள் அந்தச் சிறுமி.
''சார்....சார்! 8 புக் தான் சார் இருக்கு. ரெண்டே ரெண்டு புக் வாங்கிக்கோங்க சார். ப்ளீஸ் சார்...!''
''ரெண்டு வேணாம்மா. எட்டையும் கொடு!''

அந்த புத்தகங்கள் அத்தனையையும் வாங்கிக் கொடுக்கிறார், அவர். இப்போது மூவரின் கண்களிலும் ஆனந்தக்கண்ணீர். கலர் புக் விற்ற பாத்திமாவுக்கு 10 வயது. வாங்கிக்கொண்ட ரெஹானாவுக்கு 16 வயது.இந்த வயதில், 'கலர் புக்' கேட்கிறாள் என்றால், அவளுக்கு குழந்தை மனது அல்லது வளர்ச்சி பெறாத மூளை என்று நீங்கள் யோசிக்கத்தோன்றுமே...இல்லை.ரெஹானாவுக்கு அழகையும், அறிவையும் கொடுக்க ஆண்டவன் தவறவில்லை; ஆயுளை மட்டும் தான், குறைத்துக் கொடுத்திருக்கிறார்.காரமடையைச் சேர்ந்த ஏழைத்தம்பதி ஜாகீர் உசேன்-மகமுதா தம்பதியினரின் மகள் தான் இந்த ரெஹானா. பத்தாம் வகுப்பு வரை படித்த ரெஹானாவை, அவளது தந்தை ஜாகீர் கஷ்டப்பட்டு, டிப்ளமோ படிப்பில் சேர்த்து விட்டிருக்கிறார். அங்கே, சந்தோஷமாய் அவள் படித்துக் கொண்டிருந்தபோது
தான், ஒரு விடியல், அவளின் சந்தோஷக் கனவுகளை சருகுகளாய் மாற்றிப்போட்டது.

கடுமையான காய்ச்சல் தாக்கி, அவள் பாதிப்புக்குள்ளானபோது, சாதாரண மருந்து, மாத்திரைகள் அவளை குணப்படுத்தவில்லை. கோவையில் ரத்தப்பரிசோதனை செய்தபோது தான் தெரிந்தது, அவளுக்கு ரத்தப்புற்றுநோய் இருப்பது; அதுவும் முற்றிய நிலையில் நாட்களைக் குறித்து விட்டது மருத்துவம்.மருந்துகளை வாங்கிக் கொடுக்குமளவுக்கு, குடும்பத்தில் வசதி இல்லை. அப்போது தான், அவளைப்பற்றி அறிந்து, அவளைத் தத்து எடுத்தது கோவை 'அறம்' அறக்கட்டளை. கோவை குப்புசாமி நாயுடு மருத்துவமனையிலுள்ள தீவிர புற்றுநோய் சிகிச்சைப் பிரிவில் வைத்து, அவளைப் பராமரிப்பதோடு, அவளின் சின்னச்சின்ன ஆசைகளையும் நிறைவேற்றி வருகிறது.வலியும், வேதனையும் ரெஹானாவை பின்னிக் கொள்கின்றன; இப்போது, கால்கள் வீங்கிக் கொள்கின்றன; அவளால் நடக்க முடியவில்லை; வீல்சேரில் தான் வலம் வருகிறாள். ஆனாலும், அவளின் கண்களில் கண்ணீருக்குப் பதில், அன்பின் தேடல் தான் இருக்கிறது. இந்த உலகத்தின் எல்லா உயிர்களையும், மனிதர்களையும் நேசிக்கும் மனசு அவளிடம் இருக்கிறது.

கோவையில் முதல்வர் ஜெ., வருகைக்காக பிரமாண்ட ஏற்பாடுகள் நடப்பதை அறிந்த ரெஹானா, 'நான் ஜெயலலிதா அம்மாவைப் பாக்கணும்னு ஆசைப்படுறேன்' என்று தன் ஆசையை மெதுவாய் தெரிவித்திருக்கிறாள். ஆனால், முதல்வர் வருவதற்கு முந்தைய நாளில் தெரிவித்ததால், எந்த ஏற்பாட்டையும் அவர்களால் செய்ய முடியவில்லை.அதற்கு மாற்றாக, அவள் கேட்ட வேண்டுகோள், எல்லோரது இதயத்தையும் நொறுங்கச் செய்து விட்டது, ''முதல்வர் அம்மா வந்துட்டுப்போன பிறகாவது, அவுங்க உட்கார்ந்த சேர்ல நான் உட்காரலாமா?'' என்பது தான் ரெஹானாவின் ஆசை. அதையும் நிறைவேற்ற முயற்சித்தார் 'அறம்' அறக்கட்டளை நிர்வாகி ரகுராம்.மருத்துவர்களிடம் கடிதம் பெற்று, காவல்துறை அதிகாரிகளிடம் அனுமதி பெற்றார். முதல்வர் பேசி முடித்துக் கிளம்பிய பின், கூட்டமெல்லாம் கலைந்தபின், வீல்சேரில் அழைத்து வந்து, அந்த மேடையில் அவளை ஏற்றினர். தோரணம், நுழைவாயில், அலங்கார வளைவுகள் எல்லாவற்றையும் ஆச்சரியமாகப் பார்த்த அவள், மேடையில் ஏறி, முதல்வருக்காக வைக்கப்பட்டிருந்த நாற்காலியில் உட்கார்ந்தாள்.

எதிரில் இருந்த வெறும் மைதானத்தைப் பார்த்து, மகிழ்ச்சியாய் கையசைத்தாள். ஆளும்கட்சியின் முக்கியப் பிரமுகர்கள் இருவர், ரெஹானாவை பற்றி கேள்விப்பட்டு, அங்கு வந்து அவளை சந்தித்தபோது, 'அங்கிள்! உங்களோடயாவது கடைசியா நான் ஒரு படம் எடுத்துக்கவா?' என்று சிறு குழந்தையைப் போல் ரெஹானா கேட்க, இருவரும் ஒரு கணம் அதிர்ந்து, கண்ணீர் சிந்தி விட்டனர்.அறக்கட்டளை ஏற்பாடு செய்த காரில், இரவில் கோவையை வலம் வந்தாள் ரெஹானா. அவளது பெற்றோரையும் அழைத்துக்கொண்டு, ஓட்டலில், அவளுக்குப் பிடித்த 'எக் பிரைடு ரைஸ்' வாங்கிக் கொடுத்தும், இரு கவளத்துக்கு மேல் அவளால் சாப்பிட முடியவில்லை. அதன்பின், வ.உ.சி., பூங்காவை வலம் வந்தபோது தான், 'கலர் புக்' கேட்டு, தன் குழந்தை மனதை வெளிப்படுத்தினாள்.அந்த புத்தகங்களில், வானத்தையும், சந்திரனையும், நட்சத்திரங்களையும் வரைந்து, 'விரைவில் நான் உங்களிடம் வருகிறேன்' என்று ரெஹானா எழுதியிருக்கக்கூடும். ஆனாலும், இன்று வரையிலும், ஒவ்வொரு விடியலையும் நம்பிக்கையோடும், நன்றியோடும் துவக்குகிறாள் ரெஹானா. அவளைப் பார்க்கும் ஒவ்வொரு கணமும், இதயத்திலிருந்து ரணத்தோடு ஒரு கேள்வி முட்டி முளைக்கிறது... ரெஹானாவுக்கு உதவ 80126 47274 என்ற எண்ணில் அழைக்கவும்.

நன்றி தினமலர் பத்திரிகை
jesifer
jesifer
கல்வியாளர்


பதிவுகள் : 466
இணைந்தது : 03/04/2014

Back to top Go down

இறைவா! இன்னும் சில நாட்கள் தருவாயா? Empty Re: இறைவா! இன்னும் சில நாட்கள் தருவாயா?

Post by ஜாஹீதாபானு Wed Sep 17, 2014 5:36 pm

படிக்கும்போதே கண்ணீர் வருகிறது. ஆண்டவன் அந்தக் குழந்தைக்கு நல்ல விடியலை தரட்டும்


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

இறைவா! இன்னும் சில நாட்கள் தருவாயா? Empty Re: இறைவா! இன்னும் சில நாட்கள் தருவாயா?

Post by T.N.Balasubramanian Wed Sep 17, 2014 6:18 pm

உருக்கும் செய்தி
ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

இறைவா! இன்னும் சில நாட்கள் தருவாயா? Empty Re: இறைவா! இன்னும் சில நாட்கள் தருவாயா?

Post by jesifer Wed Sep 17, 2014 6:51 pm

அவருக்காக பிரார்த்திப்பதை தவிர வேறன்ன நம்மளால் செய்ய முடியும்.
jesifer
jesifer
கல்வியாளர்


பதிவுகள் : 466
இணைந்தது : 03/04/2014

Back to top Go down

இறைவா! இன்னும் சில நாட்கள் தருவாயா? Empty Re: இறைவா! இன்னும் சில நாட்கள் தருவாயா?

Post by மாணிக்கம் நடேசன் Thu Sep 18, 2014 9:50 am

சில நாட்கள் வேண்டாம், இன்னும் பல ஆண்டுகள் வேண்டும் என்று  கேட்போம். வேண்டுவோம்.  நடக்கும் நிச்சயம் நடக்கும்.
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

இறைவா! இன்னும் சில நாட்கள் தருவாயா? Empty Re: இறைவா! இன்னும் சில நாட்கள் தருவாயா?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» ஜெ. சொத்துக்குவிப்பு வழக்கு...தீர்ப்புக்கு இன்னும் 16 நாட்கள்! மினி தொடர்:
» தமிழகத்தில் இன்னும் எத்தனை நாட்கள் மழை நீடிக்கும்? விரிவான விபரம்
» பேஸ்புக்கில் உங்கள் அந்தரங்கத் தகவல்களைப் பாதுகாக்க இன்னும் 6 நாட்கள் மட்டுமே _
» நாளை முதல் வாரத்தில் 4 நாட்கள் மட்டும் வேலை! 3 நாட்கள் விடுமுறை! – ஜெர்மனியில் அமல்!
» ஒரு மண்டலம் என்பதற்கு 45 நாட்கள், 48 நாட்கள் என்று இருவிதமாகக் கூறுகின்றனர். எது சரி?

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum