புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 08/05/2024
by mohamed nizamudeen Today at 12:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Jenila Today at 11:42 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Yesterday at 9:05 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:55 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Yesterday at 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Yesterday at 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Yesterday at 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Yesterday at 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 8:34 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Yesterday at 8:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:03 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:43 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Yesterday at 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Yesterday at 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Yesterday at 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Yesterday at 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Yesterday at 1:31 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தொடுதல் கற்போம்... கற்பிப்போம்! Poll_c10தொடுதல் கற்போம்... கற்பிப்போம்! Poll_m10தொடுதல் கற்போம்... கற்பிப்போம்! Poll_c10 
32 Posts - 47%
ayyasamy ram
தொடுதல் கற்போம்... கற்பிப்போம்! Poll_c10தொடுதல் கற்போம்... கற்பிப்போம்! Poll_m10தொடுதல் கற்போம்... கற்பிப்போம்! Poll_c10 
26 Posts - 38%
mohamed nizamudeen
தொடுதல் கற்போம்... கற்பிப்போம்! Poll_c10தொடுதல் கற்போம்... கற்பிப்போம்! Poll_m10தொடுதல் கற்போம்... கற்பிப்போம்! Poll_c10 
3 Posts - 4%
prajai
தொடுதல் கற்போம்... கற்பிப்போம்! Poll_c10தொடுதல் கற்போம்... கற்பிப்போம்! Poll_m10தொடுதல் கற்போம்... கற்பிப்போம்! Poll_c10 
3 Posts - 4%
Jenila
தொடுதல் கற்போம்... கற்பிப்போம்! Poll_c10தொடுதல் கற்போம்... கற்பிப்போம்! Poll_m10தொடுதல் கற்போம்... கற்பிப்போம்! Poll_c10 
2 Posts - 3%
Ammu Swarnalatha
தொடுதல் கற்போம்... கற்பிப்போம்! Poll_c10தொடுதல் கற்போம்... கற்பிப்போம்! Poll_m10தொடுதல் கற்போம்... கற்பிப்போம்! Poll_c10 
1 Post - 1%
M. Priya
தொடுதல் கற்போம்... கற்பிப்போம்! Poll_c10தொடுதல் கற்போம்... கற்பிப்போம்! Poll_m10தொடுதல் கற்போம்... கற்பிப்போம்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தொடுதல் கற்போம்... கற்பிப்போம்! Poll_c10தொடுதல் கற்போம்... கற்பிப்போம்! Poll_m10தொடுதல் கற்போம்... கற்பிப்போம்! Poll_c10 
75 Posts - 60%
ayyasamy ram
தொடுதல் கற்போம்... கற்பிப்போம்! Poll_c10தொடுதல் கற்போம்... கற்பிப்போம்! Poll_m10தொடுதல் கற்போம்... கற்பிப்போம்! Poll_c10 
26 Posts - 21%
mohamed nizamudeen
தொடுதல் கற்போம்... கற்பிப்போம்! Poll_c10தொடுதல் கற்போம்... கற்பிப்போம்! Poll_m10தொடுதல் கற்போம்... கற்பிப்போம்! Poll_c10 
7 Posts - 6%
prajai
தொடுதல் கற்போம்... கற்பிப்போம்! Poll_c10தொடுதல் கற்போம்... கற்பிப்போம்! Poll_m10தொடுதல் கற்போம்... கற்பிப்போம்! Poll_c10 
5 Posts - 4%
Jenila
தொடுதல் கற்போம்... கற்பிப்போம்! Poll_c10தொடுதல் கற்போம்... கற்பிப்போம்! Poll_m10தொடுதல் கற்போம்... கற்பிப்போம்! Poll_c10 
4 Posts - 3%
Rutu
தொடுதல் கற்போம்... கற்பிப்போம்! Poll_c10தொடுதல் கற்போம்... கற்பிப்போம்! Poll_m10தொடுதல் கற்போம்... கற்பிப்போம்! Poll_c10 
3 Posts - 2%
ரா.ரமேஷ்குமார்
தொடுதல் கற்போம்... கற்பிப்போம்! Poll_c10தொடுதல் கற்போம்... கற்பிப்போம்! Poll_m10தொடுதல் கற்போம்... கற்பிப்போம்! Poll_c10 
2 Posts - 2%
Baarushree
தொடுதல் கற்போம்... கற்பிப்போம்! Poll_c10தொடுதல் கற்போம்... கற்பிப்போம்! Poll_m10தொடுதல் கற்போம்... கற்பிப்போம்! Poll_c10 
2 Posts - 2%
viyasan
தொடுதல் கற்போம்... கற்பிப்போம்! Poll_c10தொடுதல் கற்போம்... கற்பிப்போம்! Poll_m10தொடுதல் கற்போம்... கற்பிப்போம்! Poll_c10 
1 Post - 1%
M. Priya
தொடுதல் கற்போம்... கற்பிப்போம்! Poll_c10தொடுதல் கற்போம்... கற்பிப்போம்! Poll_m10தொடுதல் கற்போம்... கற்பிப்போம்! Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தொடுதல் கற்போம்... கற்பிப்போம்!


   
   

Page 1 of 2 1, 2  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Sep 16, 2014 7:26 pm

குட் டச்... பேட் டச்...

ராராட்டத் தூணசைய
ராமர் கையில் அம்பசைய
அம்பு முழுதசைய
ஆளப்பிறந்தவனோ
வில்லு முருகசைய
விளங்கப் பிறந்தவனோ
சங்கு முழங்க சமுத்திரத்தில்
மீன் முழங்க
எங்கும் முழங்கவென்று
எழுந்தருளி வந்தவனோ

பிள்ளைக்கலி தீர்க்க வந்த குழந்தையை ஒரு தாய் தான் வணங்கும் கடவுளுக்கு இணையாக நினைத்து பாடும் பாடல் இது. இன்றைய கணக்கெடுப்புப்படி நம் நாட்டில் 54 சதவிகித குழந்தைகள் ஆண்டுதோறும் பாலியல் கொடுமைகளுக்கு ஆளாகின்றனர். இக்குழந்தைகளில் 24 சதவிகிதம் ஆண் குழந்தைகள். பொதுவாக நம் கலாசாரத்தில் ஆண் குழந்தைகள் அழுவது ஏற்கப்படுவதில்லை. ‘ஆம்பளைப் பையன் அழக்கூடாது’ என்று சொல்லியே வளர்த்து வருகிறோம். குறுகிய வட்டங்களில் ஆண் குழந்தைகள் தம்மை அடைத்துக் கொள்வதற்கு இதுவும் காரணமே. ‘யாரால் எல்லாம் நம் குழந்தைகளுக்கு ஆபத்து வரும்’ என்று கற்பனை செய்து கூட பார்க்க முடியாது.

சில உதாரணங்கள் இங்கே... தோழி ஒருவர், 8வது படிக்கும் அப்பா இல்லாத பையனை முடி வெட்ட ஒரு குறிப்பிட்ட சிகையலங்கார நிலையத்துக்கு அழைத்துச் செல்வது வழக்கம். பையன் உள்ளே இருக்கும்போது தோழி வெளியில் இருப்பார்... சில முறைகளுக்குப் பிறகு, பையன் ‘அங்கே முடிவெட்ட வர மாட்டேன்’ என்று சண்டை பிடித்து கோபத்துடன் பொருட்களை உடைத்திருக்கிறான். மெதுவாக விசாரித்ததில் அந்த சலூன் கடைக்காரரும் அவரின் தோழரும் அந்த பையனை மிகவேதனைப்படுத்தி இருப்பது தெரியவந்தது.

நம் நாட்டில் பெண்கள் தாயாகக் கருதப்படுவதால் அவர்கள் தவறிழைக்க மாட்டார்கள் என்ற எண்ணம் உண்டு. ஆனால், சில பெண்கள் தங்களுடைய நிறை வேறாத மன இச்சைகளை தீர்க்க சிறு குழந்தைகளை உபயோகிப்பதும் அதிர்ச்சிகரமான விஷயம். மனவியல் வல்லுநர்கள் இதற்கு என்ன பெயரிட்டு அழைத்தாலும் சிதைவது குழந்தையின் வாழ்க்கையே. இவர், அவர் என எவ்வித வேறுபாடும் இன்றி, குழந்தைகளைச் சுற்றி உள்ள அனைவருமே சந்தேகப்பட வேண்டியவர்களே. சில உறைவிடங்கள், ஆதரவற்றோர் இல்லங்களில் உள்ளவர்களும் பெருமளவில் இதுபோன்ற பாதிப்புகளுக்கு ஆளாவதும் நிதர்சனம்.

சில மதத் தலைவர்கள் கூட இந்தச் சர்ச்சையில் சிக்க காரணம் அடக்கி வைக்கப்படும் அவர்களின் வாழ்க்கை முறை. அதற்குப் பலியாவதோ குழந்தைகள்தான். வெளிநாட்டுச் சுற்றுலா பயணிகள் சிலர் கூட, அதிக பணத்துக்கும் போதைப் பொருட்களுக்கும் ஆசை காட்டி குழந்தைகளை அவர்கள் பக்கம் இழுத்து, அவர்களின் இச்சைகளை நிறைவேற்றி விடுகின்றனர். நாளடைவில் போதையின் பிடியில் சிக்கிச் சீரழியும் குழந்தைகள் தாமாகவே இந்த வேலையை செய்ய முன்வருகின்றனர். ஆண் குழந்தைகளுக்கு ஏற்படும் இந்தப் பாதிப்பு பிற்காலத்தில், அவர்கள் மண வாழ்க்கையில் பெரிய சிக்கலை உண்டாக்கும். பெண்கள் மேல் ஒருவித பயமும் வெறுப்பும் குரோதமும் இருக்கும்.

பெண் குழந்தைகள் அழுதாவது ஆறுதல் தேடும், ஆண் குழந்தைகளின் மனதில் இது தீராத வடுவாகவே இருக்கும். அவர்கள் தங்களை ஒரு முழுமையான ஆணாகவே நினைக்க மாட்டார்கள்... எப்போதும் ஒரு பதற்றம் இருக்கும். மண வாழ்க்கையில் முழுதாக ஈடுபட முடியாமல் பல்வேறு மன அழுத்தங்களுக்கு ஆளாவார்கள். பெண்களைக் கொடுமைப்படுத்தும் ஆண்கள் ஏதோ ஒரு வகையில் அவர்களின் குழந்தைப் பருவத்தில் பாலியல் தொல்லைக்கு ஆளாகி இருப்பவர்களாகவே இருக்கிறார்கள் என்று பல ஆய்வுகள் கூறுகின்றன. ஆண் குழந்தைகளை குடும்ப விஷயங்களில் ஒதுக்கி வைக்கக் கூடாது. பெண் குழந்தைகளை ஈடுபடுத்துவது போலவே, வீட்டுப் பணிகள் அனைத்திலும் ஈடுபடுத்த வேண்டும்.

அவர்களின் வயதுக்கேற்ற உடல் மாற்றங்களை அவர்களுக்கு புரிய வைத்தல் மிக அவசியம். அவர்களின் கூச்சம், பயம், அச்சம் போன்றவற்றை தெளிவாக விளக்க வேண்டியதும் பெற்றோரின் கடமையே. ஒரு குறிப்பிட்ட வயதுக்குப் பின் பெண்கள் மேல் வரும் ஈர்ப்பு குறித்தும், அதன் சாதக, பாதகங்கள் குறித்தும் நண்பனை போல் உரையாடி விளக்குங்கள். பெண்குழந்தைகளின் உடலை அவர்களுக்கு அறிமுகப்படுத்துவது போல, ஆண் குழந்தைகளுக்கும் அறிவுறுத்த வேண்டியது அவசியம். பெண்களைப் போலவே பையன்களும் 12 - 15 வயதுக்குள் உடலியல் மாறுதல்களை சந்திக்கிறார்கள். குரல் மாறுவது, உடலில் ரோமங்கள் வருவது, உயரமாவது, வியர்வை வாசம் வருவது, மார்பு வடிவம் மாறுவது... இவை மட்டுமின்றி, ஆண் உறுப்புகளில் ஏற்படும் மாறுதல்களும் அவர்களை அதிகக் குழப்பத்தில் ஆழ்த்தும். பெண்கள் பூப்பெய்தினால் வீட்டில் உள்ளவர்கள் எதாவது கொஞ்சமாவது சொல்லித் தருவார்கள்.

பையன்களுக்கு அந்த வாய்ப்பு இல்லாததால் பல்வேறு குழப்பங்களுக்கு ஆளாகின்றனர். சக பையன்களுக்குள் பேசிக்கொள்வதில் பாதி ஊகங்களாகவும், மீதி பயங்களாகவுமே இருக்கின்றன. திடீரென அவர்களுக்கு படிப்பின் மீதான ஆர்வம் குறைவதும் தனிமையை விரும்புவதும் அதிக கோபமும் சண்டை போன்றவையும் அவர்களின் குழப்பங்களின் வெளிப்பாடே. இந்த வயதையும் இந்த வயதில் மற்றவர்களை எப்படிக் கையாளுவது என்பதையும் தெளிவாக அவர்களுக்கு கற்றுத் தர வேண்டியது பெற்றோரின் கடமையே.

நன்றி : தினகரன்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Sep 16, 2014 7:29 pm

குட் டச்... பேட் டச்... க்ருஷ்ணி கோவிந்த்

ஆனை விற்கும் வர்த்தகராம் உன் மாமன் சேனைக்கெல்லாம் அதிகாரியாம். சின்னண்ணன் வந்தானோ கண்ணே உனக்கு சின்னச் சட்டை கொடுத்தானோ உனக்கு கண்ணான தம்பிக்கு காதுகுத்தப் போறோமுன்னு முன்னூறு வெத்திலையும் உனக்கு மூத்த அம்மான் சீரு வரும் நானூறு வெத்திலையும் உனக்கு நடு அம்மான் சீரு வரும் கல்கண்டும் சர்க்கரையும் உனக்கு கடை அம்மான் சீரு வரும் அள்ளிக் கொடுப்பார் அருமையம்மான் காப்பரிசி பிடித்துக் கொடுப்பார் பெரியம்மான் காப்பரிசி.

ஒரு குழந்தைக்கு இத்தனை உறவுகள் உள்ளது என்று தாலாட்டில் அறிமுகப்படுத்துகிறார் தாய். உண்மையில் இந்த உறவுகள் சில நேரங்களில் இனிமையும் சில நேரங்களில் துன்பத்தையுமே தருகின்றன. செய்தித்தாளில் உற்றார், உறவினரால் குழந்தைகள் வன்கொடுமைக்கு ஆளாகின்றனர் என்பது போன்ற துயரச் செய்தியைப் படிக்கிறோம். பெற்றவர்களின் சில தவறான நம்பிக்கைகளினால்தான் குழந்தைகள் துன்பப்படுகிறார்கள். குழந்தைகளுக்கு கற்றுத் தரும் முன்பு பெற்றோரின் நம்பிக்கையையும் உண்மையில் நடப்பதையும் தெரிந்து கொள்ளலாம்.

நம்பிக்கை

ஒரு பாதுகாப்பான இடத்தில் குடியிருக்கிறோம். அக்கம்பக்கம் உள்ளவர்கள் அத்தனை பேரும் குடும்பம் போல பழகுகிறோம். அவர்களால் நம் குழந்தைக்கு எந்தக் கெடுதலும் இல்லை. அவர்கள் நம் சகோதரர் போலத்தான். சுற்றிலும் படித்தவர்கள், நல்லவர்கள், வசதியானவர்கள் வாழ்வதால் பாதுகாப்பாக இருக்கிறோம்.

உண்மை

மூன்றில் ஒரு பெண் குழந்தையும் ஐந்தில் ஓர் ஆண் குழந்தையும் அக்கம்பக்கம் உள்ளவர்களாலேயே பாதிப்புக்கு ஆளாகிறார்கள். படிப்பு, சமூக அந்தஸ்து, ஏழை, பணக்காரன் என்ற எந்த பேதமும் இதில் இல்லை.

நம்பிக்கை

நான் என் குழந்தையிடம் ‘குட் டச்’ பற்றி பேசியிருக்கிறேன். அவளுக்கு /அவனுக்கு அதைப் பற்றி தெரியும். எனினும், நல்ல பள்ளியில் படிப்பதால் அங்கெல்லாம் இப்படி நடக்க வாய்ப்பில்லை.

உண்மை

பாதகச் செயல் புரிபவர்கள் எவருமே குழந்தையிடம் அனுமதி கேட்டுச் செய்வதில்லை. கட்டாயப்படுத்தியும், குறுக்கு வழியிலுமே பெரும்பாலும் இது நடக்கும். குழந்தை அறியும்படி செய்தால் அதனால் தடுக்க முடியும். கட்டாயப்படுத்தியோ, பலவந்தமாகவோ செய்தாலோ என்ன செய்ய முடியும்? குழந்தையை தொடுவது மட்டுமே தவறல்ல... குழந்தையைக் கொண்டு தொட வைப்பதும் தவறே. குழந்தைகளைக் குழப்பியும் இதைச் செய்ய முடியும். ஆகவே, எத்தனை தெளிவாக முடியோ அத்தனை தெளிவாக கற்றுத் தருதல் அவசியம்.

நம்பிக்கை

முன் பின் அறியாதவர்களால்தான் குழந்தைகள் பாதிக்கப்படுகின்றனர்.

உண்மை

இது முற்றிலும் தவறு. குறைந்த அளவு குழந்தைகளே அறியாதவர்களால் பாதிக்கப்படுகின்றனர். மிக அறிந்தவர்கள், குழந்தைகள் மிகவும் விரும்புபவர்கள், உறவினர்கள், நண்பர்கள், குழந்தைகள் யாருடன் அதிக நேரம் செலவிடுகின்றனரோ சில நேரம் அவர்களாலும் (டீச்சர், கோச், கார் டிரைவர், பேபி சிட்டர்) பாதிக்கப்படுகின்றனர்.

நம்பிக்கை

எனக்கும் என் குழந்தைக்கும் ஃப்ரெண்ட்லியான உறவு இருக்கிறது. என்னிடம் எல்லாம் சொல்லுவார்கள்... எதையும் மறைக்க மாட்டார்கள்.

உண்மை

எந்த குழந்தையும் தனக்கு நேர்ந்ததை உடனே யாரிடமும் சொல்ல முன்வருவதில்லை. ‘சொன்னால் பெற்றோர் வருத்தப்படுவார்கள்... அல்லது சொல்வதை நம்ப மாட்டார்கள்... அல்லது தன்னால் சுட்டிக்காட்டப்படும் நபர் அப்படிச் செய்திருப்பார் என நம்பமாட்டார்கள்’ என்று எண்ணுவதால் சொல்ல முன்வருவதில்லை. அந்த நேரத்தில் அவர்கள் அதிகபட்ச குழப்பத்திலும் பயத்திலும் இருப்ப தாலும் யாரிடமும் பகிர விரும்புவதில்லை. அப்படி ஏதேனும் குழந்தைகள் குற்றம் சாட்டினால் அது நூறு சதவிகிதம் உண்மையாகவே இருக்கும். ‘அவரா அப்படி செய்வார்... நம்பமுடியலையே’ என்று பெற்றோர் வெளியிடும் ஒரு விமர்சனம் அவர்களின் கருத்துகளை சொல்லவிடாமல் செய்து
விடுகிறது.

நம்பிக்கை

என் பெண் குழந்தைகளை பற்றித்தான் பயம்... ஆண்குழந்தைகள் அவர்களை அவர்களே பார்த்துக் கொள்வார்கள்.

உண்மை

பெண் குழந்தைகளைப் போலவே ஆண் குழந்தைகளும் பாதிக்கப்படுகின்றன. 2007ம் ஆண்டு ஆய்வு அறிக்கையின் படி பெண் குழந்தைகளை விட ஆண் குழந்தைகள் அதிகமாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். 8-12 வயது வரை உள்ள ஆண் குழந்தைகளுக்கு மென்டல் சப்போர்ட், எமோஷனல் சப்போர்ட் இரண்டும் மிக அதிகம் தேவை. இன்னொன்றும் கவனத்தில் கொள்ளுங்கள்... குழந்தைகளைத் துன்பப்படுத்துபவர்கள் அனைவரும் ஆண்கள் அல்ல.

தொடரும்............



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Sep 16, 2014 7:30 pm

நம்பிக்கை

என் குழந்தைகளுக்கு இதெல்லாம் தெரியும், ‘யு ட்யூப்’பில் கூட இதைப் பற்றி காட்டியிருக்கிறேன், அவர்கள் பள்ளியில் ஒரு நாடகத்திலும் சொல்லிருக்கிறார்கள். இன்னும் திரும்ப அதை எதற்கு சொல்லித்தர வேண்டும்? வேறு ஏதேனும் கற்றுக்கொள்ளட்டுமே!

உண்மை

குழந்தைகள் ஒரே வயதினராக இருந்தாலும் அவர்களின் புரிந்து கொள்ளும் திறன், கற்கும் திறன், வெளிப்படுத்தும் திறன் போன்றவை ஒருவருக்கொருவர் மாறுபடும். ஒரு படமாக பார்த்ததோ, என்றோ ஒரு நாள் நாடகமாக பார்த்ததோ அவர்களுக்கு எத்தனை தூரம் மனதில் நிற்கும் என்பது கேள்விக்குறியே. ஒவ்வொரு வயதிலும் ஒவ்வொரு பருவத்திலும் அவர்கள் வெவ்வேறு பிரச்னைகளை எதிர்கொள்கிறார்கள். அதனால், மீண்டும் ஒரு குறிப்பிட்ட இடைவெளியில் இதைப் பற்றி பேசுவது நல்லது.நம்பிக்கைகள் இப்படியும், உண்மைகள் அதற்கு முரணாகவும் இருக்கும்போது இன்னும் கொஞ்சம் கவனத்துடன் இருப்பது பல்வேறு சிக்கல்களை தவிர்க்குமே.

இன்னும் என்ன செய்தால் நம் குழந்தைகளைப் பாதுகாக்கலாம்?

1. உங்கள் குழந்தைகளை சுற்றி உள்ளவர்களை பற்றி அறிந்து கொள்ளுங்கள்.

தினம் தினம் செல்லும் விளையாட்டுப் பயிற்சியோ, ட்யூஷனோ... எப்போதாவது செல்லும் பிறந்த நாள் கொண்டாட்டமோ, குடும்ப விழாவோ, திருமண விழாவோ... அவ்வப்போது பக்கத்து வீட்டில் சினிமா பார்ப்பதோ... எதுவானாலும் உங்கள் குழந்தை மேல் ஒரு கண் இருக்கட்டும். அவர்களைச் சுற்றி உள்ளவர்களையும் கவனித்துக் கொள்ளுங்கள். இது போன்ற நிகழ்வுகளுக்குப் பின் ஒரு குழந்தையின் நடவடிக்கையில் மாறுதல் இருந்தால் அந்த இடத்தில் இருந்தவர்களைப் பற்றியும் விசாரியுங்கள்.

2. அனுமதிக்கும் முன் அறிந்து கொள்ளுங்கள்...

உங்கள் குழந்தைகளை பார்த்துக்கொள்ளும் ஆட்கள், வேலையாட்கள், டிரைவர், பயிற்சியாளர் என யாராக இருந்தாலும் அவர்களைப் பற்றி முடிந்த அளவு ரெஃபரன்ஸ் வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். விசாரிக்காமல் விட்டு, பின்னே வருத்தப்படுவதில் என்ன பயன்?

3. உங்கள் குழந்தை மேல் அக்கறை கொண்டவர்களைப் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்...

புதியவரோ, உறவினரோ - உங்கள் குழந்தையுடன் தொடர்பு கொள்பவர் யாராக இருந்தாலும் அவர்கள் உங்கள் குழந்தை மேல் திடீர் அக்கறை கொண்டால் என்னவெனக் கவனியுங்கள். குழந்தையை பற்றிய திடீர் பாராட்டும் தேவையற்ற விதத்தில் பரிசுகளும் இருந்தால் கண்டிப்பாக விசாரிக்க வேண்டும். ஒரு வேளை குழந்தைகள் அவர்களுடன் பழகுவதை பத்திரமாக உணர்ந்தாலும்கூட, என்ன காரணம் அவருடைய திடீர் பாசத்துக்கு என்பதை நீங்கள் அறிந்திருத்தல் அவசியம்.

4. குழந்தைகளை சுற்றி மனிதர்கள் அவசியம்...

உங்கள் நேரடிக் கவனிப்பில் உங்கள் குழந்தை இல்லாத போது, குடும்ப உறுப்பினர் யாராவது இருப்பது அவசியம். இக்கால ‘மைக்ரோ ஃபேமிலி’அமைப்பில் அது சாத்தியமில்லாமல் இருப்பதால், முடிந்த அளவு குழந்தைகளை தனியாக விடுவதை தவிர்க்கவும்.

தொடரும்............



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Sep 16, 2014 7:30 pm

தொடுதல் கற்போம்... கற்பிப்போம்! Nx6anegISyGdHoakd5KX+ht2765

உன் உடலை நீ அறிவாய்!

எப்போதிருந்து ப்ரா அணிவது? ப்ரா என்பது என்ன? உன் உடலில் மார்பு வளரும்போது அதற்கு ஒரு சப்போர்ட் தேவைப்படும். வெறுமனே சட்டை அல்லது டிஷர்ட் அணிந்து விளையாடினால், பிற்காலத்தில் உன் மார்பின் வடிவம் மாறிவிடும். அதனால் பெரியவள் ஆனது முதல், சரியான ப்ரா அணிய வேண்டும். வயது அதிகமாகும்போது அளவும் மாறும். இப்போதைக்கு எப்படி சரியான அளவெடுப்பது?

ப்ரா அளவு

படத்தில் உள்ள படி உன் மார்பைச் சுற்றி இறுக்கமாக அளவு எடுக்க வேண்டும். (படத்தில் 1). இந்த அளவு இரட்டைப் படை எண்ணாக இருந்தால் 4 இன்ச் கூட்டிக்கொள்... ஒற்றைப் படை எண்ணாக இருந்தால் 5 இன்ச் கூட்டிக்கொள். இதுதான் உன் ப்ரா சைஸ். மார்பளவு 25 எனில், அந்த ஒற்றைப் படை எண்ணுடன் 5 கூட்டிக் கொள். உன் ப்ரா அளவு: 25 + 5 = 30 இன்ச்.

மார்பளவு 28 எனில், அந்த இரட்டைப் படை எண்ணுடன் 4 கூட்டிக் கொள். இப்போது உன் ப்ரா அளவு 28 + 4 = 32 இன்ச்.

கப் அளவு

அண்டர் ஆர்ம் எனப்படும் கைப்பகுதியில் இருந்து இரண்டு இன்ச் கீழே உடலை சுற்றி அளவெடுப்பதே படத்தில் 2ம் அளவு எனக் காட்டப்பட்டுள்ளது. இதனை பிரெஸ்ட் / செஸ்ட் என்றும் சொல்லலாம். 2ம் அளவிலிருந்து முதல் அளவை (ப்ரா அளவு) கழித்தால் வரும் வித்தியாசமே கப் சைஸ்.

உதாரணமாக...

2ம் (செஸ்ட்) அளவு: 32
கப் சைஸ்: 32 - 30 = 2 இன்ச்

கப் சைஸ் அட்டவணையை பார்க்கவும். இதில் 2 இன்ச் என்பது ஙி கப். ஆகவே, உன் ப்ரா சைஸ் 30ஙி கப் சைஸ் அட்டவணை

1/2” AA CUP
1” A CUP
2” B CUP
3” C CUP
4” D CUP
5” DD (or) E CUP
6” F CUP
7” G CUP



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Sep 16, 2014 7:32 pm

நெற்றி சுருங்கக் கண்டால்
எனக்கு நெஞ்சம் பதைக்குதடி...
உன் கண்ணில்
நீர் வடிந்தால்
என் நெஞ்சில்
உதிரம் கொட்டுதடி...
என் கண்ணிற்
பாவையன்றோ?
கண்ணம்மா...
என்னுயிர்
நின்னதன்றோ!

நெற்றி சுருங்குவதை கண்டாலே நெஞ்சம் பதைக்கும்போது, நெஞ்சம் முழுதும் வஞ்சம் வைத்து குழந்தைகளை வதைப்பவரை என்ன செய்யலாம்? குழந்தைகளை பாதுகாக்க வேண்டியது நம் கடமை. நாம் இல்லாத பொழுதில், எதையும் சமாளிக்கும் வகையில், 4 விஷயங்களை குழந்தைகள் கற்றுக்கொள்ள வேண்டும்.

1. ‘நோ’ சொல்வது...

தான் விரும்பாத எதையும் எந்த வகையிலும் பிறர் திணிக்கத் தொடங்கும்போதே, தயங்காமல் மறுக்கச் சொல்லித் தருவது மிக அவசியம். அழுத்தமாகவும் தைரியமாகவும் தன்னை துன்புறுத்துபவரிடம் ‘நோ’ சொல்ல கற்றுக்கொடுங்கள்.

2. சத்தம் போடுவது...

விரும்பத்தகாத செயல்கள் நடப்பதாக உணரும் போது, அடுத்தவரை உதவிக்கு அழைத்தல் அவசியம். ‘அம்மா’ என்றோ, தூரத்தில் செல்பவரையோ, வெறுமனே ‘ஹெல்ப்’ என்று கூட சத்தமாகச் சொல்ல சொல்லுங்கள். அல்லது சட்டென குரல் உயர்த்திப் பேசச் சொல்லித் தரவேண்டும். திடீரென குரலை உயர்த்தி பேசுதல் அருகில் இருப்பவர்களின் கவனத்தை கவரும். கூட்டத்தில் இருப்பதும் பாதுகாப்பாக இருக்க ஒரு வழி.

3. அங்கிருந்து அகன்று விடுவது...

குழந்தை விரும்பாத போது அந்த இடத்தி லிருந்து அகன்று, வேறு மனிதர்கள் இருக்கும் இடத்துக்கோ, தெரிந்தவர்கள் இருக்கும் இடத்துக்கோ செல்ல பழக்குங்கள்.

4. நம்பிக்கையான நபரிடம் சொல்வது...

தனக்கு நிகழும் பிரச்னைகளை தான் நம்பிக்கைக்கு உரியவராக கருதுபவரிடம் சொல்ல, சிறுவயது முதலே பழக்கிவிட வேண்டும். ‘நம்பிக்கை என்பது நம் கருத்தல்ல... அவர்களின் முடிவே’ என்பதையும் நாம் அனுமதிக்க வேண்டும்.

எது தொடக்கூடாத பகுதி? எப்படி விளக்குவது?

அண்டர்வேர் / ஸ்விம் வேர் ரூல்

குழந்தைகளின் உடலில் பிரைவேட் பார்ட் அல்லது அடுத்தவர் தொடக்கூடாத பகுதி எது என்பதே இந்த ரூல். குழந்தைகளின் உள்ளாடை அணியும் இடத்தை யாரும் தொட அனுமதிக்கக் கூடாது என்பதே முதல் விதி. ‘ஆண் குழந்தைக்கும் பெண் குழந்தைக்கும் நீச்சல் உடை வித்தியாசப்படும் அல்லவா? அது போன்றே அவர்களின் உடல் உறுப்புகளும். உள்ளாடை / நீச்சல் உடை அணியும் இடங்களே குழந்தைகளின் பிரைவேட் பார்ட்... அதனை யாரும் தொட அனுமதி இல்லை’ என்பதை மிகத்தெளிவாக புரிய வைக்க வேண்டும்.

இது போன்ற விஷயங்களை குழந்தைகளிடம் பேசத் தகுந்த நேரம்... அவர்கள் மகிழ்ச்சியாகவும் வேறு எந்த கவனச் சிதறல்களும் இல்லாத பொழுதுகளே. உதாரணமாக தொலை தூரப் பயணம், நடைப் பயணம், பள்ளி சென்று அழைத்து வரும் நேரம், நீச்சல் பயிற்சி போன்றவற்றுக்கு அழைத்துச் செல்லும் போது. இதைவிட எளிதாக, தினமும் குழந்தைகள் தூங்க செல்லும் முன், கதை பேசுவது போல, அவர்களின் தினப்படி நடவடிக்கைகளை அறிந்து கொள்ளலாம்... அறிவுறுத்த வேண்டியதை யும் பேசிவிட முடியும். குழந்தைகளின் ‘குட் டச்... பேட் டச்...’ பற்றி எளிய முறையில் எடுத்து கூறுவதே PANTS எனப்படுகிறது.



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Sep 16, 2014 7:32 pm

Privates are private

அண்டர்வேர் அணியும் அவர்களின் பிரைவேட் பகுதிகளை யாரும் தொட அனுமதிக்கக் கூடாது... உடல்நிலை சரியில்லாத போது டாக்டர் போன்றவர்களை தவிர.

Always remember your body belongs to you

குழந்தைகளுக்கு வலியுறுத்தி சொல்ல வேண்டிய முக்கிய விஷயம் இது... அவர்களின் உடல் அவர்களின் சொத்து. யாருக்கும் அதைத் தொட உரிமை இல்லை. ஏதேனும் அவர்களை சிரமப்படுத்துவதாக இருந்தால் உங்களிடம் மறைக்காமல் சொல்ல வேண்டும்.

No means No

குழந்தைகள் விரும்பாத வரை யாரும் அவர்களைத் தொட உரிமை இல்லை. மீறித் தொடும் போது, தைரியமாக ‘நோ’ சொல்ல பழக்க வேண்டும். குடும்ப உறுப்பினர்கள் தொடும் போது கூட அதனை குழந்தைகள் விரும்பாவிட்டால் சொல்ல உரிமை உண்டு. குடும்பத்தில் சொல்ல பழகிவிட்டால் வெளியாட்களிடம் பயம் வராது.

Talk about secrets that upset you

ரகசியம் எது என்பதும், நல்ல ரகசியம் - கெட்ட ரகசியம் குறித்தும் குழந்தைகள் தெளிவாக அறிந்திருத்தல் அவசியம். ஒரு பார்ட்டியோ, சர்ப்ரைஸ் பரிசோ நல்ல ரகசியம். யாரேனும் அவர்களை துன்புறுத்துவதோ, அவர்கள் விரும்பாத எதுவுமோ கெட்ட ரகசியமே. அதனை மறைக்காமல் நம்மிடம் சொல்ல தைரியமூட்டுங்கள்.

Speak up, someone can help

எதுவாக இருந்தாலும் தைரியமாக சொல்லப் பழக்குங்கள். உங்களிடம்தான் சொல்ல வேண்டும் என்பது இல்லை, அவர்களுக்கு விருப்பமான யாரிடம் வேண்டுமானாலும் சொல்லலாம். அது அவர்கள் தாத்தா, பாட்டி, நண்பர்கள் - ஏன் ஆசிரியர்களாக கூட இருக்கலாம். அவர்கள் நம்பிக்கை பெற்ற யாராவது ஒருவரிடம் சொல்வது முக்கியம். அப்படி எதுவானாலும் அது அவர்களின் தவறல்ல என்று நம்பிக்கை அளிப்பது அவசியம்.




http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Sep 16, 2014 7:34 pm

தொடுதல் கற்போம்... கற்பிப்போம்! Ezo5DbjKQ7z7xqVh7JIg+ht2715

வாழப்பழ மேனி!
வைகாசி மாங்கனியே!
கொய்யாப் பழ மேனி!
நான் பெத்த
கொஞ்சி வரும் ரஞ்சிதமே!
கொவ்வை இதழ் மகளே
என் குவிந்த நவரத்தினமே
கட்டிப் பசும்பொன்னே
என் கண்மணியே
கண் வளராய்!

தாலாட்டு பாடல்களில் குழந்தையின் மேனியை தாய் வர்ணிக்கும் காட்சி இது. தொட்டால் கனியும் பழங்களைப் போன்று மிருதுவானதும், விலைமதிப்பில்லாத ரத்தினங்களைப் போன்றதுமான உடலைப் பற்றி குழந்தைகளுக்குத் தெளிவாகக் கற்றுத் தருவோமா! நம் கலாசாரம் பிறப்புறுப்புகளை செல்லப்பெயர் வைத்தே, குழந்தைகளிடம் அடையாளம் காட்ட சொல்லித் தருகிறது. குறிப்பிட்ட வயது வரை அது சரியானதே. அதன்பிறகு அறிவியல் பூர்வமாக அவர்கள் அறிந்துகொள்ள வேண்டும். குறிப்பிட்ட வயது என்பது எது? பிறந்த குழந்தையை பால்குடி மறக்கும் முன்பே பள்ளியில் தள்ளுகிறோம். பள்ளிக்குப் போவதற்கு முன் தெரிந்து கொள்வதுதானே முறை?

குழந்தைகளின் பிரைவேட் பகுதிகள் அவர்களுக்கானது மட்டும் என்று பள்ளி செல்லும் முன்பே சொல்லித்தர வேண்டும். உங்களோடு எப்போது அவர்கள் பேசத் தொடங்குகிறார்களோ அப்போதே அறிமுகப்படுத்துங்கள். முக்கியமாக கவனத்தில் கொள்ள வேண்டியது கலவரப்படுத்தாமல், பயமுறுத்தாமல் அறிமுகம் செய்ய நாம் கற்றுக்கொள்ள வேண்டும்.

‘பாப்பாவை அம்மா மட்டும்தான் குளிக்க வைப்பேனாம்... இல்லைன்னா பாட்டி (அல்லது யார் செய்வார்களோ அவர்கள்)... இந்த இடமெல்லாம் அம்மா தேய்ப்பேனாம்... இதெல்லாம் நீ தேய்ச்சுக்கணுமாம்’ என்று விளையாட்டுப் போக்கிலேயே சொல்லிக் கொடுங்கள். சிறுவயதில் சொல்வது மனதில் நன்றாக பதியும். அதே நேரம் எவ்வளவு கவனமாக பிறப்புறுப்புகளை சுத்தம் செய்ய வேண்டும் என்று அறிவுறுத்துவது எப்பருவத்துக்கும் உதவும்.
முக்கியமான ‘சேஃப்டி ரூல்ஸ் செல்ஃப் கேர்’ பற்றி கொஞ்சம் விவாதிக்கலாம். சேஃப்டி ரூல்ஸ் என்பது குழந்தைகளின் உடல் பற்றிய பாதுகாப்பு விதிகள். முக்கியமான 3 விதிகளை 3ம் வயதிலேயே தொடங்க வேண்டும். 1. உடல் உறுப்புகளை சரியான பெயரில் அறிமுகப்படுத்துதல்...

‘குச்சா, ஜிங்கு, சூச்சு, உச்சா’ போன்று பெயர்களை விடுத்து, சரியான பெயரில் அறிமுகப்படுத்துவதால், வேறு எங்கேனும் குழந்தைகளை அந்தப் பகுதிகளில் யாரேனும் தொட்டாலோ, தொந்தரவு செய்தாலோ, மற்றவர்களுக்குப் புரியும் வகையில் குழந்தைகளால் சொல்ல முடியும். அவசர உதவி தேவைப்படும் நேரங்களில் நமக்குத் தெரிந்த பெயர்களை மற்றவர்களும் புரிந்து கொள்ள வேண்டும் என்று எதிர்பார்க்க முடியாதே?

பள்ளியிலும் அவசரமாக கழிப்பிடம் செல்ல இப்படிச் சொல்லி அங்கு இருப்பவர்களுக்குப் புரிவது போன்ற சிறிய விஷயங்களுக்கும் இது உதவும்.

உன் உடல் உன்னுடையதே... நீ மட்டுமே அதற்கு பாஸ்...

குழந்தையின் உடல் குழந்தைக்கு மட்டுமே சொந்தம். யார், எங்கு, எப்போது தொடலாம் என்பதை குழந்தையே தீர்மானிக்க வேண்டும். வளர்ச்சியடைந்த நாடுகளில், குறிப்பிட்ட வயதுக்கு மேல் அம்மா, அப்பாகூட தொட அனுமதிப்பதில்லை. நாமும் அதை கடைப்பிடிக்கலாம். சில குழந்தைகள் தொட்டுப் பேசுவதையே விரும்ப மாட்டார்கள். ஆனாலும், அடுத்தவர்கள் தொடும்போது சொல்லத் தயங்குவார்கள். அந்த தயக்கத்தை களைவதே ‘உடலுக்கு நீதான் பாஸ்’ என்கிற புரிய வைத்தல்.

குழந்தை விரும்பவில்லை என்றால், அது யாராக இருந்தாலும் தொட உரிமை இல்லை. குழந்தை விரும்பாததை உடனே சொல்ல வைக்க பழக்கப்படுத்துதல் பெற்றோர் கடமையே. ‘பாரு செல்லம்... உனக்கு அந்த ஆன்ட்டி தொட்டுப் பேசறது பிடிக்கலைன்னா நீ தாராளமா சொல்லலாம்... சொல்லாம கஷ்டப்படாதே’ என அவர்களுக்குத் தைரியம் அளித்தல் அவசியம். குறைந்தபட்சம் அங்கிருந்து விலகி விட வேண்டும் என்றாவது புரிய வைக்க வேண்டும்.

எல்லா நேரமும் ‘யெஸ்’ சொல்ல வேண்டியதில்லை... குழந்தைகளுக்கு ‘நோ’ சொல்லவும் கற்றுக்கொடுக்க வேண்டும். பிடிக்காத ஒன்றை தொடர்ந்து ஒரு குழந்தை அனுபவிக்கும் போது மனரீதியாகப் பாதிப்பும் பதற்றமும் ஏற்படும். அது மற்ற வேலைகளை வெகுவாகப் பாதிக்கும்... கவனக்குறைவை உண்டாக்கும். தொடுதல் அல்லது யாரேனும் எதையேனும் கொடுக்கும் போது விருப்பம் இல்லாவிட்டால் தயவுதாட்சண்யம் இன்றி ‘நோ’ சொல்ல பழக்குங்கள். அடுத்தவர்களுக்காக உங்கள் குழந்தை அவஸ்தைப்பட வேண்டுமா? ‘நோ’ என்பது ‘யெஸ்’ சொல்வதைக்
காட்டிலும் எளிதே!



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Sep 16, 2014 7:36 pm

உன் உடலை நீ அறிவாய்!

ஒவ்வொருவருக்கும் மார்புகளின் அளவு வேறுபடும். மார்புகள் வளரும்போது லேசாக வலியும் இருக்கும்... பயப்பட வேண்டாம். மார்பு கொழுப்புகளால் ஆனது... நிப்பிள் என்கிற அதன் காம்பு பல நரம்புகளின் தொகுப்பால் ஆனது. அதனால் அதில் கூடுதல் வலி ஏற்படக்கூடும். சில நேரம் ஒரு நிப்பிள் உள்ளடங்கி இருக்கும்... ஒரு நிப்பிள் வெளியில் இருக்கும். இதுவும் சாதாரணமானது. உன் உடல் திடீரென மாற்றம் அடையும்போது இதெல்லாமே சகஜம்.

மார்பின் ஓரங்களில் கோடு கோடாக வரும். சருமம் பெரிதாவதாலும், அதன் எலாஸ்டிக் தன்மை குறைவாக இருப்பதாலும்தான் இந்தக் கோடுகள் ஏற்படுகின்றன. இது பொதுவாக எல்லா பெண்களுக்குமே இருக்கும். இதையே ‘ஸ்ட்ரெச் மார்க்’ என்கிறார்கள். இது காலப்போக்கில் சரியாகி விடும். அம்மாவிடம் நல்லெண்ணெய் லேசாக வெப்பப்படுத்தித் தரச் சொல்லி, குளிக்கும் முன் உடலில் தேய்க்கலாம். இதனால் உடலில் எண்ணெய்ப்பசை சீராக இருக்கும். மாய்ச்சரைஸ் ஆக இல்லாவிட்டால் தான், உலர்வுத் தன்மை ஏற்பட்டு, கோடுகள் வரும். எப்படி ஒரு மார்பு போல இன்னொன்று இல்லையோ, அதே போலத்தான் இதுவும்.

நிப்பிளில் சில நேரம் ஒரு திரவம்... ஏன் கொஞ்சூண்டு ரத்தம்  கூட வரலாம்... நிப்பிள் வெளியில் வந்து உன் உடையில் உரசிக் கொண்டே இருப்பதாலும் இது நேரலாம். பீரியட்ஸ் இல்லாத போதும் அதிக வலி இருந்தால் டாக்டரிடம் கேட்க தயங்க வேண்டாம்!

தொடுதல் பற்றிய விழிப்புணர்வு...  

குழந்தைகளுக்குத் தொடுதல் பற்றி அறிவுறுத்த வயது வரம்பு கிடையாது. நீங்கள் கூறுவதை உங்கள் குழந்தை எப்போது புரிந்து கொள்கிறதோ அதுவே சரியான வயது. தொடுதலில் 3 வகை உண்டு... பாதுகாப்பான (சேஃப்டி) டச், பாதுகாப்பற்ற (அன் சேஃப்டி) டச், விரும்பாத, தேவையில்லாத (அன்வாண்டட்) டச்.சேஃப்டி டச்... பாராட்டும் விதமான அணைப்பு, தோளில் தட்டிக் கொடுத்தல், முதுகில் தட்டுதல், ‘ஹை ஃபைவ்’ போன்றவை சேஃப்டி டச். இவை குழந்தைகள் விரும்பும் வகையில் மென்மையாக இருக்கும். சில நேரம் வலியுடன் கூட இருக்கும். உதாரணமாக ஏதேனும் ஒரு பொருளால் காயம் பட்டால், அதனை அகற்ற யாராவது ஒருவர் தொட வேண்டி இருக்கும் அல்லவா? இப்படி அவசியமான, பாதுகாப்பான தொடுதலே சேஃப்டி டச்.

அன்சேஃப்டி டச்...  தள்ளிவிடுதல், கிள்ளுதல், உதைத்தல்  இப்படி எது குழந்தைகளை உடல்ரீதியாவும் மனரீதியாகவும் பாதிக்கிறதோ
அனைத்துமே பாதுகாப்பற்ற தொடுதல்தான்.

அன்வாண்டட் டச்... தேவையானதாக இருந்தாலும் குழந்தைகள் விரும்பாதவரை, அது தேவையற்ற தொடுதலே. உறவினரோ, பிறரோ  அவர்களின் தொடுதலை குழந்தைகள் விரும்பாவிட்டால் அது அன்வாண்டட் டச்.

இச்சூழலில்தான் நாம் பழக்கிய ‘நோ’ குழந்தைகளுக்கு உதவும். உறுதியாகவும் அதே நேரம் பணிவாகவும் ‘நோ’ சொல்லத் தெரிந்தால் பாதி பிரச்னை தீரும்!




http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Sep 16, 2014 7:37 pm

ஆரோக்கியம்: க்ருஷ்ணி கோவிந்த்

பச்சை இலுப்பை வெட்டி
பவளக்கால் தொட்டிலிட்டு
பவளக்கால் தொட்டிலிலே
பாலகனே நீயுறங்கு...
கட்டிப் பசும் பொன்னே - கண்ணே நீ
சித்திரப் பூந்தொட்டிலிலே
சிரியம்மா சிரிச்சிடு - கண்ணே நீ
சித்திரப் பூந் தொட்டிலிலே...

எந்தச் சூழலில் வளரும் குழந்தையையும் பெற்றோர் இப்படித்தானே ஆசையாகக் கொஞ்சுவார்கள்? கண்ணுக்குள் வைத்துக் காக்க நினைக்கும் குழந்தை  கண்ணை கசக்கி வரும் வரை காத்திருப்பானேன்? குழந்தைகளின் சேஃப் ரூல், பாடி ரூல் ஆகியவற்றோடு இன்னும் சில அடிப்படை விஷயங்களையும்  விவாதிக்கலாம். குழந்தைகளுக்கும் ரகசியம், தனிமை, முடிவுகள், தீர்மானங்கள், விருப்பு வெறுப்புகள் எல்லாம் உண்டு. அது பற்றி...

பச்சைக் குழந்தைக்கும் பள்ளி செல்லும் குழந்தைக்கும் என்ன ப்ரைவசி என்கிறீர்களா? தனிமை அல்லது ப்ரைவசி என்பது அனைவருக்கும் அவசியம்.  குழந்தையை பாயிலோ தொட்டிலிலோ விட்டு, அவர்கள் தூங்காத நேரம் கவனியுங்கள். தனக்குத் தானே பேசிக்கொண்டு ஆனந்தமாக மறுத்தும்  சிரித்தும் அழுதும் கோபித்தும் சமாளிக்கும். பார்க்கும்போதே அழகு அள்ளும். அதுபோலவே பள்ளி செல்லும் உங்கள் குழந்தை தனக்குத் தானே  பேசிக்கொள்வதை கவனியுங்கள். அதெல்லாம் அவர்களின் ப்ரைவேட் டைம். இந்தத் தனிமையும் சில நேரம் இனிமையாக இருக்கும். உங்கள்  குழந்தைகளுக்கும் அவர்களின் தனிப்பட்ட நேரங்களை அனுமதியுங்கள். அதை அவர்கள் ரசிக்கும்போதே அவர்களுடைய இன்பமும் துன்பமும்  வெளிவரும்.

தனிமை அவசியம் என்றாலும், எவ்வளவு என்பதை நீங்கள்தான் முடிவு செய்ய வேண்டும். குறிப்பிட்ட வயதுக்கு மேலுள்ள குழந்தைகளுக்கு எல்லாம்  புரிந்துவிடும். அதுவரை உங்கள் கவனிப்பு  மிகவும் அவசியம். டி.வி. பார்க்கிறார்கள்... கம்ப்யூட்டரில் விளையாடுகிறார்கள்... இன்டர்நெட் பார்க்கிறார்கள்  என்றால் சிறிது நேரம் அவர்கள் விருப்பத்துக்கு விடுங்கள். ‘அதிக நேர தனிமை தேவையில்லை... டி.வி., கம்ப்யூட்டரில் அவர்கள் செலவிடும் நேரம்  முடிந்தது’ என்று நீங்கள் நினைக்கும்போது, அதிலிருந்து வெளியில் வர அவர்களை வற்புறுத்தாமல், அவர்களிடம் பேச்சு கொடுங்கள். ‘டி.வி.யில் என்ன  புரோக்ராம்?’, ‘கம்ப்யூட்டரில் அது என்ன டெக்னாலஜி’ போன்ற கேள்விகளைக் கேட்டு மெதுவாக வெளியேற்றி விடுங்கள். ஒன்றை அதிகமாக   தடுக்கும்போது அதை நோக்கி மனம் செல்வது இயற்கையே. ‘டி.வி. பார்க்கலாம்...

உனக்கு விருப்பமான நிகழ்ச்சியை இத்தனை மணி நேரம் பார்த்துவிட்டு அடுத்த வேலைக்கு போய்விட வேண்டும்’ என்று சிறிது அழுத்தமாகச் சொல்லி  புரிய வைத்தல் அவசியம். பெற்றோரின் பிம்பம் அல்லது பிரதிபலிப்புதானே குழந்தைகள்? அவர்களை டி.வி. பார்க்க வேண்டாம் என்று தடுத்துவிட்டு,  நீங்கள் நாள் முழுதும் டி.வி.யில் மூழ்குவது தவறான முன்னுதாரணம் ஆகிவிடும்.
ரகசியம்...

இது மிக முக்கியமானது. குழந்தைகள் உங்களிடம் ரகசியம் காக்க தேவையில்லை. குழந்தைகளை தவறாகப் பயன்படுத்துபவர்கள், ‘யாருகிட்டயும்  சொல்லக் கூடாது... சொன்னா அடிவிழும்’ என்றோ, வேறுவிதமாகவோ பயமுறுத்தி வைத்திருப்பார்கள். ‘அந்த ரகசியம் தேவையற்றது... அம்மாவிடம்  அல்லது அப்பாவிடம் எது வேண்டுமானாலும் சொல்லலாம்’ என்ற நம்பிக்கையை விதைப்பது நம் கடமை. குழந்தைகள் எங்கு சென்று வந்தாலும்  விசாரியுங்கள். விசாரணை என்பது கடினமாக இல்லாமல் மிக இயல்பாக இருத்தல் அவசியம். இல்லாவிடில், ‘போனதும் விசாரிப்பாங்க’ என எரிச்சல்  அடைந்து உங்களிடம் கண்டிப்பாக மறைப்பார்கள். உதாரணமாக... குழந்தைகள் சண்டையிட்டு லேசாக அடிபட்டிருப்பார்கள்...

அதை நீங்கள் விசாரித்துக் கோபமடைந்து, அடுத்த நாள் பள்ளியில் புகார் வரை சென்றால் அது அந்தக் குழந்தைகளின் மனநலனை பாதிக்கும். இன்று  சண்டையிடுபவர்கள் நாளை சேர்ந்துவிடுவார்கள். தேவையற்ற பதற்ற விசாரணை ஒரு நல்ல மனநிலையை சிதைக்கக் காரணமாகும். அதற்குப் பதில்,  தினப்படி இதை ஒரு வழக்கமாக்கிக் கொண்டால் அவர்களே உங்களிடம் சொல்வார்கள். இது போன்ற நேரங்களில், ‘சரிடா கண்ணு... நாளைக்கு  சரியாயிடும்... அவனும் குழந்தைதானே? நீயே மிஸ்கிட்ட சொல்லு...’ என்று ஆறுதலளிப்பதே போதும். அவர்களுக்கு உங்களிடம் என்ன  வேண்டுமானாலும் சொல்லலாம் என்ற நம்பிக்கை வர வேண்டும். அது மட்டுமே முக்கியம்!

முடிவுகள் அல்லது தீர்மானங்கள் பிறந்த குழந்தைக்கு கூட முடிவுகளும் தீர்மானங்களும் இருக்கும். சின்னக் குழந்தைக்கு விருப்பமில்லாததை  ஊட்டினால் கூட, நம் மீதே துப்புவதும், இஷ்டமில்லாதவர்கள் தூக்கினால் கை காலை உதறி அழுது எதிர்ப்பை தெரிவிப்பதும் அதனுடைய முடிவும்  தீர்மானமும்தான். சிறுவயதில் இப்படி விளையாட்டாக முடிவெடுக்கவும் தீர்மானிக்கவும் பழகுவது பிற்காலத்தில் அவர்களின் வாழ்க்கைக்கே உதவும்.



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Sep 16, 2014 7:37 pm

‘பள்ளியில் ஒரு விழா...

அதில் கலந்து கொள்ளவேண்டும்’ என்று அடம்பிடிக்கும் குழந்தை எனில், அதிலுள்ள விஷயங்களைத் தெரிந்துகொண்டு, உங்கள் கருத்தையும் சொல்லி,  முடிவை அவர்களையே எடுக்கச் சொல்லலாம். ஏதாவது ஒரு பொருள் தேவைப்படும்போது, அதனுடைய அவசியத் தேவைகளை விவாதித்து புரிய  வைக்கலாம். ஒரு வேளை இது பணம் சம்பந்தப்பட்ட விஷயம் எனில், இன்னும் கொஞ்சம் விரிவாகவே விவாதித்து சொல்லித் தரலாம். எதுவுமே  ஆரம்பிக்கும்போது மட்டுமே கடினம்... பழகிவிட்டால் தானாகவே அவசியத்தையும் காரண காரியங்களையும் யோசிப்பார்கள். கொஞ்சம் பணம்  கொடுத்து அவர்களையே கடைக்குச் சென்று பழக்கலாம். ‘தேவை - தேவையில்லை’யை தானாகவே புரிய வைப்பது எளிது, சொல்லி புரியவைப்பதை  காட்டிலும்!

விருப்பு வெறுப்புகள்...

பெற்றோருக்கும் குழந்தைகளுக்கும் சிறிய பிரச்சனை முதல் பெரிய விவாதம் வரை நிகழக் காரணம் இந்த விருப்பு வெறுப்புகளே. நமக்குப் பிடித்தது குழந்தைகளுக்கும் பிடிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பினால்தான் பிரச்னையே ஆரம்பிக்கும். நம் குழந்தைகள் நம்முடையவை அல்ல... கலீல் ஜிப்ரான் கருத்துப்படி, ‘அவர்கள் நம் மூலம் இந்த உலகத்துக்கு வந்தவர்கள்’... தனிமனித உரிமைகளை அவர்கள் இந்த பூமியை தொட்ட நொடியில் பெறுகிறார்கள்.

ஆகவே, அவர்களுடைய விருப்பு வெறுப்புகளை மதிக்க வேண்டும், குறைந்தபட்சம் காதுகொடுத்தேனும் கேட்கலாம். நம்மால் முடியக்கூடிய விஷயம் எனில் சந்தோஷமாக அனுமதிக்கலாம். இல்லையெனில், ஏன் முடியாது என்று அவர்களிடம் தெளிவுபடுத்துவதும் நம் கடமைதான். மிகச் சிறிய வயதிலிருந்தே இப்படி பழக்கினால் பிற்காலத்தில் பெரும் விவாதம் வருவதை தவிர்க்கலாம்.



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக