புதிய பதிவுகள்
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 9:10 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Yesterday at 8:44 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 8:42 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:13 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:58 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:58 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:43 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:14 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Yesterday at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Yesterday at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Yesterday at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Yesterday at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Yesterday at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:33 am

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Yesterday at 9:31 am

» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:59 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Wed Jun 26, 2024 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm

» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மாதா அமிர்தானந்தமயி I_vote_lcapமாதா அமிர்தானந்தமயி I_voting_barமாதா அமிர்தானந்தமயி I_vote_rcap 
60 Posts - 45%
ayyasamy ram
மாதா அமிர்தானந்தமயி I_vote_lcapமாதா அமிர்தானந்தமயி I_voting_barமாதா அமிர்தானந்தமயி I_vote_rcap 
54 Posts - 40%
T.N.Balasubramanian
மாதா அமிர்தானந்தமயி I_vote_lcapமாதா அமிர்தானந்தமயி I_voting_barமாதா அமிர்தானந்தமயி I_vote_rcap 
6 Posts - 4%
mohamed nizamudeen
மாதா அமிர்தானந்தமயி I_vote_lcapமாதா அமிர்தானந்தமயி I_voting_barமாதா அமிர்தானந்தமயி I_vote_rcap 
3 Posts - 2%
prajai
மாதா அமிர்தானந்தமயி I_vote_lcapமாதா அமிர்தானந்தமயி I_voting_barமாதா அமிர்தானந்தமயி I_vote_rcap 
2 Posts - 1%
Manimegala
மாதா அமிர்தானந்தமயி I_vote_lcapமாதா அமிர்தானந்தமயி I_voting_barமாதா அமிர்தானந்தமயி I_vote_rcap 
2 Posts - 1%
Balaurushya
மாதா அமிர்தானந்தமயி I_vote_lcapமாதா அமிர்தானந்தமயி I_voting_barமாதா அமிர்தானந்தமயி I_vote_rcap 
2 Posts - 1%
Dr.S.Soundarapandian
மாதா அமிர்தானந்தமயி I_vote_lcapமாதா அமிர்தானந்தமயி I_voting_barமாதா அமிர்தானந்தமயி I_vote_rcap 
2 Posts - 1%
Karthikakulanthaivel
மாதா அமிர்தானந்தமயி I_vote_lcapமாதா அமிர்தானந்தமயி I_voting_barமாதா அமிர்தானந்தமயி I_vote_rcap 
2 Posts - 1%
Saravananj
மாதா அமிர்தானந்தமயி I_vote_lcapமாதா அமிர்தானந்தமயி I_voting_barமாதா அமிர்தானந்தமயி I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மாதா அமிர்தானந்தமயி I_vote_lcapமாதா அமிர்தானந்தமயி I_voting_barமாதா அமிர்தானந்தமயி I_vote_rcap 
420 Posts - 48%
heezulia
மாதா அமிர்தானந்தமயி I_vote_lcapமாதா அமிர்தானந்தமயி I_voting_barமாதா அமிர்தானந்தமயி I_vote_rcap 
296 Posts - 34%
Dr.S.Soundarapandian
மாதா அமிர்தானந்தமயி I_vote_lcapமாதா அமிர்தானந்தமயி I_voting_barமாதா அமிர்தானந்தமயி I_vote_rcap 
72 Posts - 8%
T.N.Balasubramanian
மாதா அமிர்தானந்தமயி I_vote_lcapமாதா அமிர்தானந்தமயி I_voting_barமாதா அமிர்தானந்தமயி I_vote_rcap 
35 Posts - 4%
mohamed nizamudeen
மாதா அமிர்தானந்தமயி I_vote_lcapமாதா அமிர்தானந்தமயி I_voting_barமாதா அமிர்தானந்தமயி I_vote_rcap 
28 Posts - 3%
prajai
மாதா அமிர்தானந்தமயி I_vote_lcapமாதா அமிர்தானந்தமயி I_voting_barமாதா அமிர்தானந்தமயி I_vote_rcap 
8 Posts - 1%
Karthikakulanthaivel
மாதா அமிர்தானந்தமயி I_vote_lcapமாதா அமிர்தானந்தமயி I_voting_barமாதா அமிர்தானந்தமயி I_vote_rcap 
5 Posts - 1%
sugumaran
மாதா அமிர்தானந்தமயி I_vote_lcapமாதா அமிர்தானந்தமயி I_voting_barமாதா அமிர்தானந்தமயி I_vote_rcap 
5 Posts - 1%
ayyamperumal
மாதா அமிர்தானந்தமயி I_vote_lcapமாதா அமிர்தானந்தமயி I_voting_barமாதா அமிர்தானந்தமயி I_vote_rcap 
3 Posts - 0%
Srinivasan23
மாதா அமிர்தானந்தமயி I_vote_lcapமாதா அமிர்தானந்தமயி I_voting_barமாதா அமிர்தானந்தமயி I_vote_rcap 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மாதா அமிர்தானந்தமயி


   
   
Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Mon Feb 23, 2009 1:37 am

மாதா அமிர்தானந்தமயி Amirthananthamayi
மாதா அமிர்தானந்தமயி

இன்றைக்கு அமிர்தானந்தமயிக்கு உலகெங்கும் இருக்கும் சீடர்களையும், அன்பர்களையும் கணக்கிட்டால், எந்தக் காலத்திலும் வேறெந்தத் துறவிக்கும் இல்லாத அளவுக்கு அந்தப் பட்டியல் நீண்டிருக்கும்.

கேரள மாநிலத்தில் 1953-ம் வருஷம், ஒரு மிகச் சாதாரண மீனவக் குடும்பத்தில் பிறந்தவர் அமிர் தானந்தமயி. அவரது இயற்பெயர், சுதாமணி என்பது. எல்லாக் குழந்தைகளும் அழுது கொண்டே பிறக்கும் உலகில், ஒரு மாறுதலுக்கு சிரித்துக் கொண்டே பிறந்த குழந்தை, சுதாமணி. அவரது அம்மாவுக்கு அப்போதே ஆச்சர்யம். என்ன இந்தக் குழந்தை அழவே மாட்டேனென்கிறது? விடை அத்தனை சுலபத்தில் கிடைத்து விடுமா என்ன? அந்தக் குழந்தை ஆறாவது மாதத்தில் தடுமாற்றமின்றி நடக்கவும், பேசவும் ஆரம்பித்ததும் அதன் தாய்க்கு இன்னும் ஆச்சர்யம். மூன்று வயதில் சுதாமணி பாட ஆரம்பித்தாள். அது மேலும் ஆச்சர்யம்.

ஐந்தாவது வயதில் சுதாமணி பாடல் களைத் தானே புனையவும் ஆரம்பித்தாள். எல்லாமே பக்திச் சுவை சொட்டும் பாடல்கள். எல்லாமே கண்ணன் மீது உருகி உருகி எழுதப்பட்ட பாடல்கள். தானே இயற்றிய பாடல்களை, மெய் மறந்து தானே பாடிக்கொண்டிருந்தவள், சில நாட்களில் பாடியபடியே ஆடவும் ஆரம்பித்தாள். முதலில் தன் எளிய குடிசைக்குள் தொடங்கிய சுதாமணியின் பாட்டும், லயம் தோய்ந்த நடனமும் வீதிக்கு வந்தது. அப்படியே கடற்கரையோரம் ஆடிக்கொண்டே, கண்மூடி நகர்ந்தபடி இருப்பாள். அவள் ஒன்பதாம் பிராயத்தில் இருந்த போது அம்மாவுக்கு உடம்புக்கு சுகமில்லாமல் போகவே, பள்ளிக்குப் போக முடியாத நிலைமை ஏற்பட்டது.

ஏழு சகோதர, சகோதரிகள் உண்டு அவளுக்கு. அவள்தான் மூத்தவள். ஆகவே உடல்நலமில்லாத அன்னைக்குப் பணிவிடைகள் செய்வதுடன் சகோதர, சகோதரிகளையும் அவள்தான் பராமரிக்க வேண்டும். அதிகாலை இருள் சூழ்ந்திருக்கும் போதே சுதாமணியின் பொழுது விடிந்துவிடும். நள்ளிரவு வரை அவளுக்கு வீட்டுக்காரியங்கள் சரியாக இருக்கும். வீட்டிலிருந்த பசுவுக்கும் அவள்தான் பொறுப்பு.

பசுவுக்குப் புல் தேடிப் புறப்பட்ட அந்த ஒன்பது வயதுப் பெண்ணுக்கு வாழ்வின் துயரங்களுக்கு விடுதலை காண வேண்டும் என்கிற வேட்கை உண்டானது சற்று வியப்பூட்டும் விஷயமே. தன் மீனவக் குப்பத்து மக்கள் அத்தனை பேரையும் அவள் மிக நுணுக்கமாக கவனித்தாள். எல்லாருக்கும் ஏதாவது கஷடங்கள் இருந்தன. ஏழை மைக் கஷடங்கள், உடல்நலக் குறைவு, உறவுச் சிக்கல்கள், சமூக அங்கீகார மறுப்பு, கல்வியின் போதாமை. எத்தனையோ கஷடங்கள். யாரும் ஒரு பேச்சுக் குக்கூட சந்தோஷமாக இருப்பதாக ஏன் சொல்ல மறுக்கிறார்கள்?

அவள் புல் அறுக்கும்போதெல்லாம் இதைத்தான் யோசித்துக் கொண்டிருந்தாள். துன்பங் களிலிருந்து விடுதலை அடையச் செய்வதுதான் அனைத்து ஞானிகளுக் கும், இதுநாள்வரை சவாலாக இருந்திருக்கிறது. விடுதலை என்பதென்ன? மனத்துக்குள் தேடிப் பெறக்கூடிய ஆன்ம விடுதலை இதுநாள் வரை சவாலாக இருந்திருக்கிறது.
விடுதலை என்பதென்ன? மனத்துக்குள் தேடிப் பெறக்கூடிய ஆன்ம விடுதலை மட்டும்தான் நிஜமான விடுதலை. இது ஒன்பது வயதில் சுதாமணிக்குப் புரிந்தது.

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Mon Feb 23, 2009 1:38 am

கொஞ்சம் வளர்ந்தபின் சுதாமணியை அவளது பெற்றோர், தமது குடும்ப நிலை கருதி, உறவினர் வீடுகளுக்கு உதவியாக இருக்கும்படி அனுப்பி வைப்பதை வழக்கமாகக் கொண்டார்கள். வீட்டு வேலை செய்கிற பெண் மாதிரிதான். ஆனால் ஒருபோதும் சுதாமணி முகம் சுளித்ததேயில்லை. தானுண்டு, தன் வேலைகள் உண்டு. ஓய்வு இருந்தாலும் இல்லாவிட்டாலும் சதா சர்வ காலமும் ஸ்ரீகிருஷண ஜெபம் உண்டு. ஒரு கிருஷணர் போட்டோ ஒன்றை அவர் வைத்திருந்தார். எப்போதும் அவருடனேயே இருக்கும் அது. அந்த காலத்தில். போகிற இடங்களுக்கெல்லாம் அதை எடுத்துப்போய், தனக்குக் கிடைக்கும் உணவு எதுவானாலும் அதை அந்தக் கிருஷணர் புகைப்படத்துக்கு நைவேத்தியம் செய்யாமல் உண்ணமாட்டார். அதை ஒரு போட்டோவாகவே அவர் நினைக்க மாட்டார். நிஜமாகவே கிருஷணர் தன்னுடன் இருப்பதுபோன்ற உணர்வுதான். கிருஷண பாவம் என்று இதற்குப் பேர். கடவுளைத் தன்னுள் காணுதல். தன்னைக் கடவுளாகவே பார்த்தல். கடவுளுக் கும், தனக்கும் எந்த ஒரு வித்தியாசமும் இல்லாமல் பரம்பொருளுடன் மனத்துக்குள் இரண்டறக் கலந்துவிடுதல்.

ஆனால் என்ன ஆச்சர்யம் என்றால், சுதா மணிக்கு கிருஷணர் காட்சி தரவில்லை. மாறாக ஒருநாள் அவர் சற்றும் எதிர்பாராத சந்தர்ப்பத் தில் சக்தி சொரூபமான பெண் தெய்வத்தின் காட்சி அவருக்கு சித்தித்ததாகச் சொல்லு வார்கள். அதுகாறும் தனது பக்தியால் பணிகள் எதுவும் பாதிக்காமல் பார்த்துக் கொண்ட சுதாமணியால், அந்தச் சம்பவத்துக்குப் பின் எந்த ஒரு புறப்பணியிலும் ஆர்வம் செலுத்த முடியாமல் போய்விட்டது. அவ்வளவு ஏன், அவருக்குத் தன் நினைவே இல்லாமல் போய்விட்டது. எப்போதும் இறைச் சிந்தனை மட்டுமே அவரை ஆட்கொண்டது. பாட்டும், நடனமும் பக்தியுமாகவே வாழ்நாள் முழுவதையும் கழிக்க அவர் விரும்பினார்.

அவரைச் சுற்றிலும் எப்போதும் ஒரு கூட்டமும் கூட ஆரம்பித்தது. அந்தச் சின்ன வயதில் அந்தப் பெண்ணுக்குத்தான் எப்பேர்ப்பட்ட பக்தி. என்னமாய்ப் பாடுகிறாள். அதைக் கேட்கவாவது பத்துப்பேர் கூடாமல் இருப்பார்களா?

ஆனால் தினசரி சோற்றுக்கே திண்டாடும் குடும்பத் துக்கு ஃபுல்டைம் பக்தியெல்லாம் எப்படிச் சரிப் படும்? சுதாம ணியை அவரது சகோதரர் எச்சரித் துப் பார்த்தார். ம்ஹும். கேட்கிற வழியாக இல்லை. அடித்துப் பார்த்தார். ம்ஹும். கோபம் தலைக்கேறி ஒருநாள் வீட்டை விட்டே துரத்தி விட்டார்கள். அதனாலென்ன? அவர் ஊருக்கு வெளியே காட்டுப் பகுதியிலும், கடற்கரையிலும் ஆனந்தமாக ஆடிப்பாடி பக்தி செய்ய ஆரம்பித்தார்.

அதன்பிறகு கேரளத்தில் பல பகுதிகளுக்குக் கால்நடையாகவே சென்று பாடியும், ஆடியும் பக்தி செய்து, கிட்டத்தட்ட அம்மாநிலத்தில் அவரை அறியாதவரே இல்லை என்கிற அளவுக்குத் தெரிந்தவரானார்.

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Mon Feb 23, 2009 1:38 am

சுதாமணி, அமிர்தானந்தமயியானது திட்டமிட்டோ, ஒரு குறிப்பிட்ட நாளில் நிகழ்ந்ததோ அல்ல. அவரது ஆன்மீகப் பேச்சுகள் மக்கள் மொழியில் இருந்தன. பக்தி ஒன்றே சாமானிய மக்களுக்கு மோட்சம் அளிக்க வல்லது என்று அவர் திடமாக நம்பி, அதையே போதித்தார். வாழ்கிற காலமெல்லாம் அடுத்தவர்களுக்குத் தம்மால் இயன்ற
சிறு சிறு உதவிகளைச் செய்வதில் நமக்குக் கிடைக்கக்கூடிய ஆத்ம திருப்தியை எடுத்துக் காட்டி, அதன்மூலமே, அதனைக் கடந்து, ஆன்ம விடுதலைக்கு இட்டுச் செல்லும் அற்புதமான வழி அவருடையது. பெரிய பெரிய தத்துவங்களை அவர் போதிப்பதே யில்லை. பாடுங்கள், ஆடுங்கள். இறைவனை நினைத்துக் கொண்டிருங்கள். உங்கள் காரியங் களைக் குறைவின்றிச் செய்யப்பழகுங்கள். அதுபோதும். அவ்வளவுதான்.

எந்தச் சிறு குடிசையில் அவர் பிறந்தாரோ, அந்தக் குடிசை இருந்த இடம்தான் இன்றைக்கு அமிர்தபுரி என்று அழைக்கப்படு கிறது. அமிர்தானந்தமயியின் ஆன்மீக மையம் அங்கிருந்துதான் செயல்படுகிறது. உலகெங்கிலுமுள்ள அவரது கோடிக்கணக் கான பக்தர்களுக்கு அமிர்தபுரிக்கு வருவ தென்பது ஒரு புனித யாத்திரை மாதிரி.ஒருநாளில் இருப்பத்தி நாலு மணி நேரமும் அமிர்தானந்தமயி பிஸியாகவே இருக்கிறார். தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்களை நேரில் சந்திக்கிறார். அவரவர் பிரச்சினைகளுக்குப் பிரார்த்தனை நிகழ்த்து கிறார். அறிவுரைகள் சொல்லுகிறார். அன்பாய் அணைத்து ஆறுதல் சொல்லுகிறார். உச்சி மோந்து ஒரு தாயின் பரிவைத் தன் அரவணைப்பில் வழங்குகிறார். உலகெங்கிலு மிருந்து வருகிற பல்லாயிரக்கணக்கான பக்தர்களின் கடிதங்களுக்குத் தவறாமல் பதில் எழுதுகிறார். தினசரிப் பிரார்த்தனைகள், பஜனைகளிலும் கலந்துகொள்கிறார். கோடிக் கணக்கான சொத்து மதிப்புள்ள ஆசிரமத்தின் நிர்வாகப் பொறுப்பும் இருக் கிறது. அறக் கட்டளைப் பணிகள் வேறு. எத்தனை கல்வி நிறுவனங்கள். மருத்துவ மனைகள். தொழிற் கூடங்கள். இதெல்லாம் போகப் பயணங்கள் வேறு. கடந்த முப்பது ஆண்டுகளில் ஒருநாள் கூட உடல்நலக் குறைவு என்று சொல்லி அமிர்தானந்தமயி தன் பணிகளை ஒத்திப் போட்டதோ, அட்டவணையை மாற்றியதோ இல்லை.

உலக அமைதிக்காகவும், சகோதரத்துக்காகவும் தேசம் தேசமாகப் பயணம் செய்து சொற்பொழிவாற்றிவரும் அமிர் தானந்தமயிக்கு 2002-ம் ஆண்டு சர்வதேசப் பெருமைக்குரிய காந்தி-கிங் விருது வழங்கப்பட்டது. ஐக்கிய நாடுகள் சபையில் அவர் சொற்பொழிவாற்றிய சமயம் அமெரிக்கப் பத்திரிகையாளர்கள் சிலர் உலகை ஆளும் வாய்ப்பு உங்களுக்குத் தரப்பட்டால் நீங்கள் முதலில் என்ன செய்வீர்கள்? என்று கேட்டார்கள். முதலில் சுத்தம் செய்யும் பணியைத்தான் மேற்கொள்வேன் என்றுபதில் சொன்னார்.

அதுதான் அமிர்தானந்தமயி. அந்த எளிமையும், பொதுநலச் சிந்தனையும்தான் அவரை உலக அரங்கில் மிக முக்கியமான பெண்மணியாக உயர்த்தியிருக்கிறது.

avatar
Muruges
Guest

PostMuruges Mon Feb 23, 2009 9:31 am

NO OFFNESE TO ANYONE, BUT SHE SHOULD CLEAN KERALA FIRST. KERALA HAS ONE OF THE WORST HEALTH CARE IN THE COUNTRY. RECENT CHIKENGUNYA CAUSED 100S OF DEATHS IN KERALA WHICH WAS CONTROLLED VERY WELL IN OTHER STATES.

avatar
Guest
Guest

PostGuest Sat Jun 27, 2009 4:26 pm

அ௫மையான கட்டுரை மகிழ்ச்சி அன்பு மலர்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக