ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஐ.எஸ்.ஐ.எஸ் - செய்திகள்

+5
M.Saranya
SajeevJino
அகிலன்
யினியவன்
சிவா
9 posters

Page 7 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

Go down

ஐ.எஸ்.ஐ.எஸ் - செய்திகள்  - Page 7 Empty ஐ.எஸ்.ஐ.எஸ் - செய்திகள்

Post by சிவா Wed Aug 20, 2014 9:28 pm

First topic message reminder :

ஈராக்கில் பயங்கரவாதிகள் அட்டூழியம் : அமெரிக்க பத்திரிக்கையாளர் தலை துண்டித்துக் கொலை

ஈராக்கில், இஸ்லாமிய பயங்கரவாதிகள், அமெரிக்காவைச் சேர்ந்த பத்திரிக்கையாளர் ஜேம்ஸ் போலேவின் தலையை துண்டித்து கொடூரமாகக் கொன்றுள்ளனர். இதனை வீடியோவாக எடுத்து வெளியிட்டுள்ளனர்.

அமெரிக்காவுக்கு ஒரு தகவல் என்ற தலைப்பில், அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவுக்காக அந்த வீடியோ வெளியிடப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொல்லப்பட்ட போலே (40)  கடந்த 2012ஆம் ஆண்டு துருக்கிக்கு சென்று கொண்டிருந்த போது சிரியாவில் ஆயுதம் ஏந்திய பயங்கரவாதிகளால் கடத்திச் செல்லப்பட்டவர். அந்த வீடியோவின் இறுதியில் மற்றொரு அமெரிக்கரும் தோன்றுகிறார். அவர் சிரியாவில் இருந்து 2013ஆம் ஆண்டு பயங்கரவாதிகளால் கடத்திச் செல்லப்பட்ட பத்திரிக்கையாளர்.

ஈராக் விவகாரத்தில் அமெரிக்கா தலையிடுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று எச்சரிப்பதற்காகவே இந்த படுகொலையை பயங்கரவாதிகள் நிகழ்த்தியுள்ளனர் என்று கூறப்படுகிறது.


Last edited by சிவா on Mon Sep 15, 2014 10:21 pm; edited 1 time in total


ஐ.எஸ்.ஐ.எஸ் - செய்திகள்  - Page 7 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down


ஐ.எஸ்.ஐ.எஸ் - செய்திகள்  - Page 7 Empty Re: ஐ.எஸ்.ஐ.எஸ் - செய்திகள்

Post by ராஜா Tue Apr 07, 2015 11:16 am

சிவா wrote:இஸ்லாமிக் அல்லாத உடைகளுக்கு தீவிரவாதிகள் தடை ;இறுக்கமாக ஜீன்ஸ் அணிந்த வாலிபருக்கு ஜெயில்

சிரியா மற்றும் ஈரான் சில பகுதிகளை கைப்பற்றி தங்கள் கட்டுபாட்டில் வைத்துள்ள ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் பல்வேறு சட்டதிட்டங்களை அங்கு நிறைவேற்றி வருகிறார்கள். அங்கு தற்போது இஸ்லாம மத சம்பந்தம் அல்லாத ஆடைகள் அணிய தடை விதிக்கபட்டு உள்ளது. மேலும் இஸ்லாமிய சட்டங்களுக்கு மீறிபவர்களை சிறையில் அடைக்கவும் உத்தரவிட்டு உள்ளனர். இதன படி இறுக்கமாக ஜீன்ஸ் அணிந்த வாலிபர் ஒருவருக்கு ஜெயில் தண்டனை கொடுத்து உள்ளனர்.அவருக்கு 10 நாட்கள் ஜெயில் தண்டனை விதிக்கபட்டு உள்ளது.

ஐ.எஸ்.ஐ.எஸ் எதிர்ப்பு குழு இந்த சட்ட திட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்துவருகின்றனர். ஐஎஸ் வினோதமான சட்ட திட்டங்களை கொண்டு வந்து அதை எதிர்ப்பவர்கள் கடவுளின் சட்டங்களை எதிர்ப்பவர்களாக கூறி கைது செய்ய படுகிறார்கள். மொபைல் போனில் இசை கேட்டால் கூட துன்புறுத்த்ப்படுகிறார்கள் தண்டிக்கப்படுகிறார்கள்.
இப்படி பார்த்தால் , உலகில் பெரும்பாலான இஸ்லாமியர்களை தண்டித்துவிடுவார்கள் போல இருக்கே
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஐ.எஸ்.ஐ.எஸ் - செய்திகள்  - Page 7 Empty Re: ஐ.எஸ்.ஐ.எஸ் - செய்திகள்

Post by சிவா Wed Apr 15, 2015 9:53 pm

ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அச்சுறுத்தல் – மலேசிய காவல் நிலையங்களில் பாதுகாப்பு அதிகரிப்பு

கோலாலம்பூர் - ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் விதமாக நாடு முழுவதும் உள்ள காவல் நிலையங்களில் பாதுகாப்பு அதிகரிப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அண்மையில் பேராக் மாநிலம் கிரிக்கில் உள்ள ராணுவ முகாமில் உள்ள வீரர்களுக்கு ஆடவர் ஒருவரால் விடுக்கப்பட்ட மிரட்டலையடுத்து இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும், சுற்றுக்காவல் பணியில் ஈடுபடும் காவல் துறையினருக்கு ஆயுதங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது.

நாடு முழுவதிலும் உள்ள ராணுவ முகாம்கள் மற்றும் காவல் நிலையங்களை ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் குறி வைத்திருப்பதாக மலேசிய பாதுகாப்புத் துறை அதிகாரிகள் நம்புகின்றனர்.

அங்கிருந்து ஆயுதங்களை கடத்திச் செல்ல அவர்கள் திட்டமிட்டிருப்பதாக உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ அகமட் சாஹிட் ஹமிடி அண்மையில் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் கடந்த 8ஆம் தேதி கிரிக் ராணுவ முகாமின் நுழைவுப் பகுதி அருகே வந்த 30 வயது மதிக்கத்தக்க ஓர் ஆடவர் அம்முகாமில் உள்ள பிரார்த்தனைக் கூடத்தை பயன்படுத்த தன்னை அனுமதிக்க வேண்டும் எனக் கோரியுள்ளார்.

ஆனால் இதற்கு அனுமதி மறுக்கப்பட்டது. பலமுறை கேட்டும் அனுமதிக்கப்படாததால் அந்நபர் முகாமின் நுழைவுப் பகுதியிலேயே தனது தொழுகையை முடித்துள்ளார். இதையடுத்து ஆத்திரமடைந்த அவர், முகாம் காவலர்களை எச்சரித்ததாக தெரிகிறது.

“நீங்கள் அனைவரும் உங்களது ஆன்மாவை சுத்தம் செய்யுங்கள். முகாமிற்குள்ளேயே இருந்துவிடுங்கள். வெளியே வராதீர்கள்,” என்று அவர் கூறியதாக ‘தி ஸ்டார் ஒன்லைன்’ ஆங்கில இணைய செய்தித் தளம்  குறிப்பிட்டுள்ளது.

இச்சம்பவத்தையடுத்தே ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளின் திட்டம் குறித்து சாஹிட் ஹமிடி தகவல் வெளியிட்டார்.

இந்நிலையில் அனைத்து மாவட்ட காவல்துறை தலைவர்களுக்கு புக்கிட் அம்மான் சில உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது.

காவல் நிலையங்களுக்கு வரும் அனைவரையும் தீர விசாரிக்க வேண்டும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பலப்படுத்த வேண்டும், பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும் என அந்த உத்தரவுகளின் வழி காவல் துறைஅறிவுறுத்தப்பட்டுள்ளது.


ஐ.எஸ்.ஐ.எஸ் - செய்திகள்  - Page 7 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஐ.எஸ்.ஐ.எஸ் - செய்திகள்  - Page 7 Empty Re: ஐ.எஸ்.ஐ.எஸ் - செய்திகள்

Post by சிவா Fri Apr 24, 2015 11:28 pm

ஐ..எஸ்.ஐ.எஸ் தீவிரவாத இயக்கத்திற்கு இயற்பியல் ஆசிரியர் புதிய தலைவரராகிறார்

ஐ.எஸ்.ஐ.எஸ் - செய்திகள்  - Page 7 201504241633261395_Physics-Teacher-Heads-Isis-after-Baghdadis-Injury_SECVPFஐ.எஸ்.தீவிரவாத அமைப்பின் தலைவராக அபுபகர் அல் - பக்தாதி இருந்தார். கடந்த மாதம் (மார்ச்) மேற்கு ஈராக் பகுதியில் அமெரிக்க கூட்டு படைகள் தீவிரவாதிகள் மீது குண்டு வீச்சு நடத்தியது. இத் தாக்குதலில் ஐ.எஸ்.தீவிரவாத இயக்கத்தலைவர் அபு பகர் அல் - பக்தா படுகாயம் அடைந்தார். உயிருக்கு போராடும் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. எனவே அவரால் பணியாற்ற முடியவில்லை.

அதை தொடர்ந்து ஐ.எஸ்.தீவிரவாத இயக்கத்தை வழிநடத்த தற்போது தற்காலிகமாக புதிய தலைவர் நியமிக்கப்பட்டுள்ளார். அவரது பெயர் அபு அலா அப்ரி.

இத் தகவலை ஈராக் அரசு ஆலேசாகர் டாக்டர் ஹிசம் அல் ஹஷிமி தெரிவித்துள்ளார். ஒரு வேளை அல் - பக்தாதி இறந்து விட்டால் தற்போது தற்காலிக தலைவராக நியமிக்கப்பட்டிருக்கும் அப்ரி தொடர்ந்து தலைவராக இருப்பார் என்ற தகவலும் கிடைத்துள்ளதாக அவர் கூறினார்.

புதிய தலைவராக அறிவிக்கப்பட்டுள்ள அப்ரி ஈராக்கின் மொசூல் நகரை சேர்ந்தவர் தல் அபர் நகரில் உள்ள பள்ளியில் இயற்பியல் ஆசிரியராக பணிபுரிந்துள்ளார். இவரை ஹாஜி இமான் என்றும் அழைப்பார்கள். அல் - பக்தாதியின் வலது கரமாக திகழ்ந்தவர்.


ஐ.எஸ்.ஐ.எஸ் - செய்திகள்  - Page 7 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஐ.எஸ்.ஐ.எஸ் - செய்திகள்  - Page 7 Empty Re: ஐ.எஸ்.ஐ.எஸ் - செய்திகள்

Post by சிவா Wed May 13, 2015 10:38 pm

47 பேர் பலியான கராச்சி தாக்குதல் – ஐஎஸ்ஐஎஸ் பொறுப்பேற்பு!

பாகிஸ்தானில் கராச்சி நகரில் இன்று காலை இரு சக்கர வாகனத்தில் வந்த தீவிரவாத கும்பல், பேருந்து ஒன்றின் மீது கண்மூடித்தனமான துப்பாக்கிச் சூடு நடத்தியது. இதில் 16 பெண்கள் உட்பட 47 அப்பாவிகள் உயிரிழந்தனர்.

இந்நிலையில், இந்த சம்பவத்திற்கு ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத இயக்கம் பொறுப்பேற்றுள்ளதாக பாகிஸ்தான் வட்டாரங்கள் தகவல்கள் தெரிவித்துள்ளன.

இது தொடர்பாக பாகிஸ்தான் நாளிதழ்கள் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “ஈராக், சிரியா போன்ற நாடுகளில் வேரூன்றி உள்ள ஐஎஸ்ஐஎஸ் இயக்கம், இன்று கராச்சியில் நடைபெற்ற பேருந்து தாக்குதலுக்கு பொறுப்பேற்றுள்ளது. இது தொடர்பாக அந்த இயக்கத்தினர் துண்டுப்பிரசுரம் மூலம் தங்கள் நிலைப்பாட்டை வெளிப்படுத்தி உள்ளனர். இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

எனினும், பாகிஸ்தானில் ஐஎஸ்ஐஎஸ் இயக்கத்தினர் ஊடுருவி உள்ளனரா என்பது குறித்து அந்நாட்டு அரசு எவ்வித தகவல்களையும் தெரிவிக்கவில்லை.

இதற்கிடையில், கராச்சி தாக்குதலுக்கு மோடி, நவாஷ் ஷெரிப் உள்ளிட்ட உலகத் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.


ஐ.எஸ்.ஐ.எஸ் - செய்திகள்  - Page 7 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஐ.எஸ்.ஐ.எஸ் - செய்திகள்  - Page 7 Empty Re: ஐ.எஸ்.ஐ.எஸ் - செய்திகள்

Post by சிவா Sat May 23, 2015 11:39 pm

30 பேரை பலிவாங்கிய சவுதி வெடி குண்டு தாக்குதலுக்கு ஐஎஸ் தீவிரவாதிகள் பொறுப்பு ஏற்பு

ரியாத், -சவுதி அரேபியாவில் ஷியா பிரிவு மசூதியில் நேற்று மனித வெடிகுண்டு தாக்குதல் நடைபெற்றது. இதில் 30 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு ஐஎஸ் தீவிரவாத இயக்கம் பொறுப்பேற்றுள்ளது.

சவுதி அரேபியாவின் கிழக்கு பகுதியில் உள்ள குவாதிப் மாகாணத்தில் அல் கியுதிஹ் என்ற கிராமம் உள்ளது. இங்கு ஷியா பிரிவு முஸ்லிம்கள் அதிக அளவில் வசிக்கின்றனர். இங்குள்ள மசூதி ஒன்றில் நேற்று 150க்கும் மேற்பட்டோர் தொழுகை செய்து கொண்டிருந்தனர். அப்போது அந்த கூட்டத்துக்குள் ஊடுருவிய தீவிரவாதி ஒருவன் தன் உடலில் மறைத்து வைத்திருந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்தார். இதில் 30 பேர் பலியானார்கள். 100க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்தனர். மசூதி முழுவதும் ரத்தக்கறையாக காட்சி அளித்தது. காயம் அடைந்தவர்கள் உடனடியாக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். இதில் 52 பேர் சிகிச்சை முடிந்து நேற்றிரவு வீடு திரும்பினர். மற்றவர்கள் உள்நோயாளிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை  அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த குண்டு வெடிப்பு சம்பவத்துக்கு ஐஎஸ் தீவிரவாத இயக்கம் பொறுப்பேற்றுள்ளது. ஐஎஸ் தீவிரவாத இயக்கம் சன்னி பிரிவு முஸ்லிம்களின் ஆதரவு பெற்றது. இந்த குண்டுவெடிப்பு சம்பவம் வளைகுடா பகுதியில் சன்னி மற்றும் ஷியா பிரிவு முஸ்லிம்களிடையே பதற்றத்தை அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.

அண்மைக்காலமாக வளைகுடா நாடுகளில் சன்னி, ஷியா பிரிவு மோதல் அதிகரித்து வருகிறது. சிரியாவில் தொடங்கி, ஈராக், பஹ்ரைன், ஏமன் என பல நாடுகளில் உள்நாட்டு போர் தீவிரமடைந்து வருவது குறிப்பிடத்தக்கது.


ஐ.எஸ்.ஐ.எஸ் - செய்திகள்  - Page 7 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஐ.எஸ்.ஐ.எஸ் - செய்திகள்  - Page 7 Empty Re: ஐ.எஸ்.ஐ.எஸ் - செய்திகள்

Post by சிவா Sat May 23, 2015 11:40 pm

பல்மைரா மியூஸியத்திற்குள் நுழைந்த ஐ.எஸ். தீவிரவாதிகள்; சிலைகளை சூறையாடி அட்டகாசம்

ஐ.எஸ்.ஐ.எஸ் - செய்திகள்  - Page 7 201505231919187999_IS-enters-Palmyra-museum-Syria-antiquities-chief_SECVPFசிரியா–ஈராக் இடையேயான கடைசி எல்லையையும் ஐ.எஸ். தீவிரவாதிகள் கைப்பற்றியிருப்பது அமெரிக்க கூட்டுப்படைகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில், பல்மைரா நகரை கைப்பற்றியுள்ள ஐ.எஸ். தீவிரவாதிகள் அங்குள்ள வரலாற்று பெருமை வாய்ந்த அருங்காட்சியத்திற்குள் நுழைந்து விட்டனர். கிரேக்க-ரோம நினைவு சின்னங்களை அழித்து தீவிரவாதிகள் தங்கள் கொடியை பறக்கவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

டமாஸ்கஸில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய அந்த அருங்காட்சியகத்தின் இயக்குனர் மாமோன் அப்துல்கரீம் இதை உறுதிப்படுத்தியுள்ளார். அருங்காட்சியகத்தில் இருந்த வரலாற்று நினைவு சின்னங்கள் மற்றும் சிலைகளையும் சேதப்படுத்தி தீவிரவாதிகள் அட்டகாசம் செய்வதாகவும் கவலை தெரிவித்துள்ளார்.

யுனெஸ்கோவால் பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ள பால்மைராவுக்கு ஒரு ஆண்டுக்கு 1,50,000 சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம் என்பது நினைவு கூரத்தக்கது.


ஐ.எஸ்.ஐ.எஸ் - செய்திகள்  - Page 7 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஐ.எஸ்.ஐ.எஸ் - செய்திகள்  - Page 7 Empty Re: ஐ.எஸ்.ஐ.எஸ் - செய்திகள்

Post by சிவா Sat May 23, 2015 11:41 pm

பாகிஸ்தானிடம் இருந்து ஓராண்டுக்குள் அணு ஆயுதங்கள் வாங்குவோம்: ஐ.எஸ். தீவிரவாதிகள்!

அல்கொய்தா தீவிரவாதிகளை விட கொடியவர்கள் என அமெரிக்காவையே அலற வைத்துள்ள ஐ.எஸ்.தீவிரவாதிகள், சிரியாவிலும், ஈராக்கிலும் தங்களது எல்லையை விரிவுபடுத்தி வருகின்றனர்.இந்த தீவிரவாதிகள் அமெரிக்கா, ஈரானிடம் இருந்து பீரங்கி வண்டிகள், ராக்கெட் ராஞ்சர்கள், ஏவுகணைகள், விமான எதிர்ப்பு பீரங்கிகள் என ஆயுதங்களை கைப்பற்றி குவித்துள்ளனர்.

இவர்களிடம் கோடிக்கணக்கில் பணம் உள்ளது. வங்கியில் குவித்துள்ள இந்த பணத்தைக் கொண்டு ஓராண்டுக்குள் பாகிஸ்தானிடம் இருந்து அணுக்குண்டு வாங்க திட்டமிட்டுள்ளனர்.இது தொடர்பான தகவல், ஐ.எஸ். தீவிரவாதிகளின் ஆன்லைன் பத்திரிகையான தாபிக்கில் வெளியாகி உள்ளது.

அதில், ஐ.எஸ். அமைப்பினர், வங்கியில் பல கோடி டாலர்களை குவித்து வைத்துள்ளனர். இந்தப் பணத்தை கொண்டு, அவர்கள் பாகிஸ்தானில் உள்ள தங்களது அமைப்பினரிடம் கூறி, அங்குள்ள ஆயுதத்தரகர்கள் மூலமாக ஊழல் அதிகாரிகளின் துணை கொண்டு அணு குண்டு வாங்கப்படும் என கூறப்பட்டுள்ளது.அந்த அணுக்குண்டை அமெரிக்கா மீது தாக்குதல் நடத்த பயன்படுத்த முடியும் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


ஐ.எஸ்.ஐ.எஸ் - செய்திகள்  - Page 7 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஐ.எஸ்.ஐ.எஸ் - செய்திகள்  - Page 7 Empty Re: ஐ.எஸ்.ஐ.எஸ் - செய்திகள்

Post by சிவா Sun May 24, 2015 12:03 am

ஈராக்கில் ஐ.எஸ். தீவிரவாதிகள் மேலும் ஒரு நகரை கைப்பற்றினர்

ஈராக்கில் அன்பார் மாகாணத்தில் ஐ.எஸ். தீவிரவாதிகள் மேலும் ஒரு நகரை பிடித்தனர். சிரியா–ஈராக் இடையேயான கடைசி எல்லையையும் அவர்கள் கைப்பற்றினர்.

அன்பார் மாகாணம்

ஈராக்கில் அன்பார் மாகாணம் முழுவதையும் ஐ.எஸ். தீவிரவாதிகள் தங்கள் ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வருவதில் குறியாக இருக்கிறார்கள்.

ஏறத்தாழ 18 மாதம் நடத்திய சண்டைக்கு பின்னர் அந்த மாகாணத்தின் தலைநகரான ரமாடி நகரை கடந்த 17–ந் தேதி கைப்பற்றினர். இது ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிரான அமெரிக்க கூட்டு படையினருக்கு பெருத்த பின்னடைவு என்று அமெரிக்கா ஒப்புக்கொண்டுள்ளது.

ஹசிபா நகர்

அதைத் தொடர்ந்து ரமாடி நகருக்கும், ஹப்பானியா ராணுவ தளத்துக்கும் இடையே ஹசாய்ஹா அல் ஷர்கியா என்ற இடத்தைப் பிடிக்க முயற்சி மேற்கொண்டனர். ஆனால் அரசு ஆதரவு படையினர் எதிர்தாக்குதல் நடத்தி விரட்டியடித்தனர். இந்த முயற்சி தோல்வியில் முடிந்தது.

இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு நடந்த சண்டையில், அன்பார் மாகாணத்தில் உள்ள ஹசிபா நகரை ஐ.எஸ். தீவிரவாதிகள் கைப்பற்றினர். இது தொடர்பாக ஈராக் பழங்குடி இனத்தலைவர் ஷேக் ரபி அல் பாஹ்தவி கூறும்போது, ‘‘ஐ.எஸ். தீவிரவாதிகளுடன் நடத்திய சண்டையில், பழங்குடி இன படையினர் மற்றும் போலீசாரின் வெடிபொருட்கள் தீர்ந்து விட்டன. இதனால் அவர்கள் வாபஸ் பெற்றனர்’’ என்றார்.

இந்த ஹசிபா நகர், ரமாடி நகருக்கு கிழக்கே 7 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. இந்த நகரை ஐ.எஸ். தீவிரவாதிகள் பிடித்ததின் மூலம் அன்பார் மாகாணத்தில் அவர்கள் மேலும் வலு அடைந்துள்ளனர்.

சிரியா எல்லை

இதே போன்று ஈராக்–சிரியா இடையே உள்ள கடைசி எல்லையையும் (இது சிரியாவில், ஹாம்ஸ் மாகாணத்தில் உள்ளது) ஐ.எஸ். தீவிரவாதிகள் பிடித்து விட்டனர். அங்கிருந்து சிரிய அரசு படைகள் பின்வாங்கி விட்டன. இதை செய்தி நிறுவனம் ஒன்றிடம் ஐ.எஸ். தீவிரவாதி ஒருவர் உறுதி செய்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

சிரியாவில் பல்மைரா என்னும் வரலாற்று சிறப்புமிக்க நகரை கைப்பற்றியுள்ள நிலையில், இப்போது சிரியா–ஈராக் இடையேயான கடைசி எல்லையையும் ஐ.எஸ். தீவிரவாதிகள் பிடித்திருப்பது அமெரிக்க கூட்டுப்படைகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


ஐ.எஸ்.ஐ.எஸ் - செய்திகள்  - Page 7 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஐ.எஸ்.ஐ.எஸ் - செய்திகள்  - Page 7 Empty Re: ஐ.எஸ்.ஐ.எஸ் - செய்திகள்

Post by சிவா Sun May 24, 2015 9:28 pm

பல்மைராவில் ஐ.எஸ். தீவிரவாதிகள் 400 பேரை கொன்றனர்; அதிர்ச்சி தகவல்

சிரியா–ஈராக் இடையேயான கடைசி எல்லையையும் ஐ.எஸ். தீவிரவாதிகள் கைப்பற்றியது அமெரிக்க கூட்டுப்படைகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.

இதைதொடர்ந்து, பல்மைரா நகரையும் கைப்பற்றியுள்ள ஐ.எஸ். தீவிரவாதிகள் அங்குள்ள வரலாற்று பெருமை வாய்ந்த அருங்காட்சியகத்தை நேற்று சூறையாடினர்.

இந்நிலையில், பல்மைராவில் 400 பேரை ஐ.எஸ். தீவிரவாதிகள் கொன்றுள்ளதாகவும், அவர்களில் பெரும்பாலானோர் பெண்கள் மற்றும் குழந்தைகள் எனவும் சிரியாவின் அரசு தொலைக்காட்சி இன்று அதிர்ச்சி தகவல் வெளியிட்டுள்ளது. அந்நகரத்தின் வீதிகளில் ஆங்காங்கே நூற்றுக்கணக்கான உடல்கள் கிடப்பதாக சமூக வலைத்தளங்களிலும் தகவல் பரவி வருகிறது.


ஐ.எஸ்.ஐ.எஸ் - செய்திகள்  - Page 7 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஐ.எஸ்.ஐ.எஸ் - செய்திகள்  - Page 7 Empty Re: ஐ.எஸ்.ஐ.எஸ் - செய்திகள்

Post by சிவா Tue Jun 09, 2015 12:02 am

செல்ஃபியால் சிக்கிய ஐ.எஸ். தீவிரவாதிகள்; 24 மணி நேரங்களில் தலைமையகம் தகர்ப்பு

சிரியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகள் எடுத்த செல்ஃபி புகைப்படம், அவர்களது தலைமையகத்தை காட்டிக் கொடுத்து உள்ளது. ஐ.எஸ். தீவிரவாதிகளால் வெளியிடப்பட்ட புகைப்படத்தை கொண்டு, இடத்தை கண்டுபிடித்த அமெரிக்கா 24 மணி நேரங்களில் சரமாரியாக குண்டுகளை வீசி அழித்தது.

ஈராக்கில் கடந்த வருடம் ஜனவரி மாதம் தொடங்கி சன்னி முஸ்லிம் பிரிவைச் சேர்ந்த ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள், ஷியா முஸ்லிம் அரசு படையினருக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தி, தாக்குதல்கள் தொடுத்து வந்தனர். சிரியாவிலும் ஐ.எஸ். தீவிரவாதிகள் வெறியாட்டம் ஆடினர். ஐ.எஸ். தீவிரவாதிகள் தங்கள்வசம் பல நகரங்களை கொண்டு வந்தனர். ஈராக் மற்றும் சிரியா நாடுகளில் தாங்கள் கைப்பற்றிய நிலப்பரப்பை ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் இஸ்லாமிய தேசமாக அறிவித்தனர். தொடர்ந்து அவர்கள் முன்னேறினர்.

இந்நிலையில் ஈராக்கில் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் மீது அமெரிக்கா வான்வழி தாக்குதல் நடத்த வேண்டும் என்று ஈராக்கும், குர்திசும் தொடர்ந்து வலியுறுத்தியது. இதனையடுத்து சிரியா மற்றும் ஈராக்கில் அமெரிக்கா தலைமையில் உலக நாடுகளின் படை வான்வழி தாக்குதலை நடத்தி வருகிறது. இதுவரையில் சிரியா, ஈராக்கில் அமெரிக்கா தலைமையிலான உலகநாடுகள் படை நடத்திய வான்வெளி தாக்குதலில் 10 ஆயிரம் ஐ.எஸ். தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர் என்று அமெரிக்கா தெரிவித்து உள்ளது. இருப்பினும், ஐ.எஸ். தீவிரவாதிகளும் பதிலடி கொடுத்து வருகின்றனர். அவர்களின் முன்னேற்றமானது, அமெரிக்கா தலைமையிலான படைக்கு மிகவும் பின்னடைவு என்று கருதப்பட்டது.

இந்நிலையில் சிரியாவில் ஐ.எஸ். தலைமையகம் தகர்க்கப்பட்டு உள்ளது. சிரியா மற்றும் ஈராக்கில் செயல்பட்டு வரும் ஐ.எஸ். தீவிரவாதிகள் அவ்வபோது தங்களது வெற்றி கொண்டாட்டத்தை போட்டோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்வதை வழக்கமாக கொண்டு உள்ளனர். ஐ.எஸ். தீவிரவாதிகள் எடுத்த செல்ஃபி அவர்களுக்கு அழிவை தற்போது எற்படுத்தி உள்ளது. சிரியாவில் உள்ள ஐ.எஸ். தலைமையகத்தில் எடுத்த செல்ஃபியை தீவிரவாதிகள் சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்து உள்ளனர். இதுதொடர்பான புகைப்படங்களை ஆய்வு செய்த அமெரிக்கா, சிறிதும் தாமதிக்காமல் தாக்குதலை தொடுத்தது. சுமார் 24 மணிநேரங்களில் சிரியாவில் ஐ.எஸ். தலைமையகத்தை தரைமட்டம் ஆக்கியது.

அமெரிக்க போர் விமானங்கள் உடனடியாக சென்று சரமாரியாக நடத்திய குண்டுவீச்சு தாக்குதலில் தீவிரவாதிகளும் கொல்லப்பட்டனர், கட்டிடமும் அழிக்கப்பட்டது. அமெரிக்காவின் ஜெ.டி.ஏ.எம்.(மொத்தமாக நேரடியாக குண்டு போட்டு தாக்கும் படை)பிரிவு வெற்றிகரமாக தாக்குதலை நடத்தியது என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஆனால் முழு விபரங்களை அமெரிக்கா வெளியிடவில்லை. இதுவரையில் மிகவும் கவனமாக செயல்பட்டு, உலக நாடுகளின் படையிடம் அடையாளத்துடன் சிக்காத ஐ.எஸ். தீவிரவாதிகள் புகைப்பட்டத்தை வெளியிட்டு மாட்டிக் கொண்டு, அழிவை சந்தித்தனர் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.


ஐ.எஸ்.ஐ.எஸ் - செய்திகள்  - Page 7 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஐ.எஸ்.ஐ.எஸ் - செய்திகள்  - Page 7 Empty Re: ஐ.எஸ்.ஐ.எஸ் - செய்திகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 7 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum