புதிய பதிவுகள்
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 10:41 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 10:30 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 10:25 am

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Today at 8:05 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:15 am

» கருத்துப்படம் 20/06/2024
by mohamed nizamudeen Today at 6:50 am

» நாவல்கள் வேண்டும்
by manikavi Today at 6:45 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:33 pm

» ரயில் – விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:23 pm

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:31 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 3:25 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Yesterday at 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 3:00 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:57 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Yesterday at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Yesterday at 1:09 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:08 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Yesterday at 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:52 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Yesterday at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:56 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Jun 19, 2024 12:12 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கலகலப் பக்கம்! - பாக்கியம் ராமசாமி - Page 4 Poll_c10கலகலப் பக்கம்! - பாக்கியம் ராமசாமி - Page 4 Poll_m10கலகலப் பக்கம்! - பாக்கியம் ராமசாமி - Page 4 Poll_c10 
69 Posts - 40%
heezulia
கலகலப் பக்கம்! - பாக்கியம் ராமசாமி - Page 4 Poll_c10கலகலப் பக்கம்! - பாக்கியம் ராமசாமி - Page 4 Poll_m10கலகலப் பக்கம்! - பாக்கியம் ராமசாமி - Page 4 Poll_c10 
51 Posts - 30%
Dr.S.Soundarapandian
கலகலப் பக்கம்! - பாக்கியம் ராமசாமி - Page 4 Poll_c10கலகலப் பக்கம்! - பாக்கியம் ராமசாமி - Page 4 Poll_m10கலகலப் பக்கம்! - பாக்கியம் ராமசாமி - Page 4 Poll_c10 
31 Posts - 18%
T.N.Balasubramanian
கலகலப் பக்கம்! - பாக்கியம் ராமசாமி - Page 4 Poll_c10கலகலப் பக்கம்! - பாக்கியம் ராமசாமி - Page 4 Poll_m10கலகலப் பக்கம்! - பாக்கியம் ராமசாமி - Page 4 Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
கலகலப் பக்கம்! - பாக்கியம் ராமசாமி - Page 4 Poll_c10கலகலப் பக்கம்! - பாக்கியம் ராமசாமி - Page 4 Poll_m10கலகலப் பக்கம்! - பாக்கியம் ராமசாமி - Page 4 Poll_c10 
4 Posts - 2%
ayyamperumal
கலகலப் பக்கம்! - பாக்கியம் ராமசாமி - Page 4 Poll_c10கலகலப் பக்கம்! - பாக்கியம் ராமசாமி - Page 4 Poll_m10கலகலப் பக்கம்! - பாக்கியம் ராமசாமி - Page 4 Poll_c10 
3 Posts - 2%
manikavi
கலகலப் பக்கம்! - பாக்கியம் ராமசாமி - Page 4 Poll_c10கலகலப் பக்கம்! - பாக்கியம் ராமசாமி - Page 4 Poll_m10கலகலப் பக்கம்! - பாக்கியம் ராமசாமி - Page 4 Poll_c10 
2 Posts - 1%
Anitha Anbarasan
கலகலப் பக்கம்! - பாக்கியம் ராமசாமி - Page 4 Poll_c10கலகலப் பக்கம்! - பாக்கியம் ராமசாமி - Page 4 Poll_m10கலகலப் பக்கம்! - பாக்கியம் ராமசாமி - Page 4 Poll_c10 
2 Posts - 1%
Guna.D
கலகலப் பக்கம்! - பாக்கியம் ராமசாமி - Page 4 Poll_c10கலகலப் பக்கம்! - பாக்கியம் ராமசாமி - Page 4 Poll_m10கலகலப் பக்கம்! - பாக்கியம் ராமசாமி - Page 4 Poll_c10 
2 Posts - 1%
prajai
கலகலப் பக்கம்! - பாக்கியம் ராமசாமி - Page 4 Poll_c10கலகலப் பக்கம்! - பாக்கியம் ராமசாமி - Page 4 Poll_m10கலகலப் பக்கம்! - பாக்கியம் ராமசாமி - Page 4 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கலகலப் பக்கம்! - பாக்கியம் ராமசாமி - Page 4 Poll_c10கலகலப் பக்கம்! - பாக்கியம் ராமசாமி - Page 4 Poll_m10கலகலப் பக்கம்! - பாக்கியம் ராமசாமி - Page 4 Poll_c10 
320 Posts - 50%
heezulia
கலகலப் பக்கம்! - பாக்கியம் ராமசாமி - Page 4 Poll_c10கலகலப் பக்கம்! - பாக்கியம் ராமசாமி - Page 4 Poll_m10கலகலப் பக்கம்! - பாக்கியம் ராமசாமி - Page 4 Poll_c10 
198 Posts - 31%
Dr.S.Soundarapandian
கலகலப் பக்கம்! - பாக்கியம் ராமசாமி - Page 4 Poll_c10கலகலப் பக்கம்! - பாக்கியம் ராமசாமி - Page 4 Poll_m10கலகலப் பக்கம்! - பாக்கியம் ராமசாமி - Page 4 Poll_c10 
61 Posts - 9%
T.N.Balasubramanian
கலகலப் பக்கம்! - பாக்கியம் ராமசாமி - Page 4 Poll_c10கலகலப் பக்கம்! - பாக்கியம் ராமசாமி - Page 4 Poll_m10கலகலப் பக்கம்! - பாக்கியம் ராமசாமி - Page 4 Poll_c10 
27 Posts - 4%
mohamed nizamudeen
கலகலப் பக்கம்! - பாக்கியம் ராமசாமி - Page 4 Poll_c10கலகலப் பக்கம்! - பாக்கியம் ராமசாமி - Page 4 Poll_m10கலகலப் பக்கம்! - பாக்கியம் ராமசாமி - Page 4 Poll_c10 
22 Posts - 3%
prajai
கலகலப் பக்கம்! - பாக்கியம் ராமசாமி - Page 4 Poll_c10கலகலப் பக்கம்! - பாக்கியம் ராமசாமி - Page 4 Poll_m10கலகலப் பக்கம்! - பாக்கியம் ராமசாமி - Page 4 Poll_c10 
6 Posts - 1%
ayyamperumal
கலகலப் பக்கம்! - பாக்கியம் ராமசாமி - Page 4 Poll_c10கலகலப் பக்கம்! - பாக்கியம் ராமசாமி - Page 4 Poll_m10கலகலப் பக்கம்! - பாக்கியம் ராமசாமி - Page 4 Poll_c10 
3 Posts - 0%
manikavi
கலகலப் பக்கம்! - பாக்கியம் ராமசாமி - Page 4 Poll_c10கலகலப் பக்கம்! - பாக்கியம் ராமசாமி - Page 4 Poll_m10கலகலப் பக்கம்! - பாக்கியம் ராமசாமி - Page 4 Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
கலகலப் பக்கம்! - பாக்கியம் ராமசாமி - Page 4 Poll_c10கலகலப் பக்கம்! - பாக்கியம் ராமசாமி - Page 4 Poll_m10கலகலப் பக்கம்! - பாக்கியம் ராமசாமி - Page 4 Poll_c10 
2 Posts - 0%
Anitha Anbarasan
கலகலப் பக்கம்! - பாக்கியம் ராமசாமி - Page 4 Poll_c10கலகலப் பக்கம்! - பாக்கியம் ராமசாமி - Page 4 Poll_m10கலகலப் பக்கம்! - பாக்கியம் ராமசாமி - Page 4 Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கலகலப் பக்கம்! - பாக்கியம் ராமசாமி


   
   

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Sun Sep 14, 2014 8:07 pm

First topic message reminder :

புகழ் மயக்கம்

புகழுக்கு மயங்காதவர்கள் எவரேனும் உண்டா?
சமூக சேவகர் ஒருத்தர் இருந்தார். அவர் பெயர் கருப்பசாமி. அவருடைய அப்பா பெயர் எல்லப்பன். ஆகவே, எ.கருப்பசாமி! படாடோபம் இல்லாத எளிமையானவர்; காலுக்குச் செருப்புகூட போடமாட்டார். என்ன வெயில் அடித்தாலும், காலைத் தூக்கித் தலையில் வைத்துக்கொண்டு போனாலும் போவாரே தவிர, செருப்பு போடமாட்டார்!
எ.கருப்பசாமியின் சமூக சேவைகளை அக்கம்பக்கத்தவர் புகழத் தொடங்கினர். 'எ.கருப்பசாமி என்றால் எளிமை கருப்பசாமி' என்று ஒரு கூட்டத்தில் யாரோ பேசி வைக்க, அவரது பெயர் எளிமை கருப்பசாமி என்றே ஆகிவிட்டது. பெயரில் எளிமை வந்து ஒட்டிக்கொண்டதால், முன்பைவிட அதிக எளிமையாக இருக்கத் தொடங்கினார் கருப்பசாமி. ஆரம்பத்தில் இயல்பான எளிமையுடன் இருந்தவர்... இப்போது, தனது ஒவ்வொரு செயலிலும் நடவடிக்கையிலும் எளிமை இருக்கிறதா என்று பார்க்கத் தொடங்கினார்.

இஸ்திரி போட்ட சட்டை போடமாட்டார். எப்போதும் துவைத்த வேட்டி-சட்டைதான். ஒருதடவை இவரது வேட்டி-சட்டையைச் சலவைக்குப் போட்டுவிட்டாள் இவரின் மனைவி. சலவையிலிருந்து வந்த அத்தனை துணிகளையும் தண்ணீரில் போட்டு நனைத்து, சுருக்கத்துடன்தான் போட்டுக்கொண்டார்!
அவர் எளிமையாக இருக்க இருக்க, அவரது புகழ் மேலும் பரவியது. நகராட்சி கவுன்சிலர் தேர்தலில் நின்றே தீரவேண்டும் என்று பேட்டைவாசிகள் அவரை வேண்டினர். எளிமை கருப்பசாமி முதலில் மறுத்தாலும், எல்லோரும் வற்புறுத்தியதால் ஒப்புக்கொண்டார்.
சுவரில் தனது பெயரை பெரிய எழுத்துக்களில் எழுதக்கூடாது என்று கட்டளையிட்டிருந்தார். அப்பாவி சுவர் எழுத்தாளர் ஒருவருக்கு இது தெரியாமல், பெரிதாகக் கொட்டை எழுத்தில், 'எளிமை கருப்பசாமியை ஆதரிப்பீர்' என்று எழுதி வைத்துவிட்டார்.
இதைப் பார்த்து திகைத்த கருப்பசாமி, தாமே வீட்டிலிருந்து வாளியில் சுண்ணாம்பு கரைத்து எடுத்து வந்து எழுத்துக்களை அழித்தார். இதைப் பார்த்த அவரது ஆதரவாளர்கள், அவசர அவசரமாக வீடியோ கேமரா கொண்டு வந்து அந்தக் காட்சியைப் படம் பிடித்தனர்.
'தனது பெயரை தானே அழிக்கும் பிரமுகர்' என்று சில பத்திரிகைகளில் அவரது பெயரும் புகைப்படமும் வெளிவந்தன. ஏதோ ஒரு டி.வி. சேனலின் செய்தித் தொகுப்பில், அவர் சுண்ணாம்பு அடிக்கும் காட்சி ஒரு நிமிடம் வரக்கூடும் என்று தெரிந்தது. ஆனால், எந்தச் சேனலில், எந்த நேரத்தில் வரும் என்பது தெரியவில்லை. எல்லா சேனல்களையும் போட்டுப் போட்டுப் பார்த்தார். நண்பர்களிடமும், ஆதரவாளர்களிடமும் சொல்லி வைத்துத் தேடினார். ஆனாலும், பலனில்லை.
மிக சோகமாக இருந்தார். அப்போது அருகில் வந்தாள், அவரின் எட்டு வயது பேத்தி. ''தாத்தா! நீங்க என்ன பாக்கணும்... சேனலை மாத்திக்கிட்டே இருக்கீங்களே, ஏன்?'' என்று கேட்டாள்.
''நான் டி.வி-ல வருவேன்னாங்க! அதான்...''
''ஓகோ! நீங்க உங்களையே தேடுறீங்களாக்கும்! நீங்க இங்கதானே இருக்கீங்க; நீங்க செஞ்ச காரியமும் என்னான்னு உங்களுக்குத் தெரியும். அப்புறம் எதுக்கு தாத்தா சிரமப்படுறீங்க?'' என்று கேட்டாள் சிறுமி.
தாத்தா கருப்பசாமிக்கு வெட்கமாகிவிட்டது.
'என்னைப்போல எளிமையானவன் கிடையாது' என்று நினைப்பதும்கூட கர்வம்தான். 'அடியேன், அடியேன்' என்று பக்தர்கள் கூறிக்கொள்வது தங்களைத் தாழ்வுபடுத்திக்கொள்ளத்தான்.
குலசேகர ஆழ்வார் தமது 'முகுந்த மாலை'யில், ''லோகநாதா, உமது அடியார்க்கு அடியார் என்ற வரிசையில், ஏழாவது அடியேனாக என்னை நீர் நினைக்கவேண்டும்'' என்று தெய்வத்திடம் வேண்டுகிறார்.
'த்வத் ப்ருத்ய ப்ருத்ய, பரிசாரஹ ப்ருத்ய ப்ருத்ய, ப்ருத்யஸ்ய ப்ருத்ய, இதிமாம் ஸ்மர லோகநாத...'



avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Sun Sep 14, 2014 8:51 pm

நண்பன் நாராயணனின் பேரன் யோகுவுக்கு ஏழு வயது. வயதுக்கு மீறிய துறுதுறுப்பு. தினமும் அவனது பொல்லாத விஷமங்களைப் பட்டியலிட்டு நாராயணனிடம் முறையிடுவாள் அவரின் மனைவி. ஆனாலும், நாராயணன் பேரனைக் கோபித்துக்கொள்ள மாட்டார். இதமாகப் பேசியே, அவன் செய்த தவற்றை அவனுக்குப் புரிய வைப்பார்.
ஒருமுறை, பேரனை ஜில் தண்ணீரில் குளிப்பாட்டிக்கொண்டே, சிநேகமாகச் சிரித்தபடி, ''யோகு கண்ணா, ஏண்டா உன்னைக் கடவுள் இப்படி வெல்லம் திருடி யோகுவா படைச்சுட்டான்?'' என்று கேட்டாராம். அலமாரியின் உச்சிக்கு ஏறி, அங்கிருந்த வெல்ல டப்பாவைத் திறந்து, கை நிறைய வெல்லம் எடுத்துத் தின்றான் என்பது அவன் மீதான அன்றைய ரிப்போர்ட்!
தாத்தாவின் கேள்விக்குப் பேரனிடம் இருந்து எதிர்பாராத ஒரு கேள்வியே பதிலாக வந்தது. ''வெல்லம்தானே தாத்தா தித்திப்பா இருக்கு! அதான் திங்கிறேன். கடவுள் ஏன் வெல்லத்துல தித்திப்பை வெச்சார்?'' என்றானாம். பேரனின் பதிலைக் கேட்டு, திக்குமுக்காடிப் போனார் நாராயணன். நானும்தான்! பின்னே... அதென்ன சாமான்ய கேள்வியா? சிருஷ்டி தத்துவம் பற்றிய கேள்வியாச்சே! இதற்குப் பதில் சொல்ல நம்மால் ஆகுமா?
பல வருடங்களுக்கு முன்பு, நாராயணன் மாதிரி நானும் ஒருமுறை குழம்பித் தவித்திருக்கிறேன்.
சாலை ஒன்றில் நடந்து வந்துகொண்டிருந்தபோது, ஓரத்தில் இருந்த முரட்டுப் பசு மாடு ஒன்று, கயிற்றை அறுத்துக்கொண்டு சாலைக்கு நடுவே வந்துவிட்டது. இதனால் சகல போக்குவரத்தும் ஸ்தம்பித்தது. அத்துடன், அந்த மாடு ஒரு கிழவரைக் கீழே மல்லாக்கத் தள்ளி, அவரது நெஞ்சின் மேல் தன் காலை வைத்து அழுத்தியபடி, ரோமானிய வீரனைப் போல, 'ஹம்மா...’ என பெருங்குரல் கொடுத்தது. 'இந்தக் கிழவனைக் கொல்லவா? வேண்டாமா?’ என்று சுற்றுமுற்றும் இருந்தவர்களை அபிப்ராயம் கேட்பது போலிருந்தது, அந்தச் சத்தம்.

அந்த மாட்டை விரட்டவோ, அதை நெருங்கவோ யாருக்கும் தைரியமில்லை. சில விநாடிகள்தான்... அந்தப் பசு, கிழவரை ஏதும் செய்யாமல் தாண்டிப் போய்விட்டது. நல்லகாலமாக, கிழவருக்குப் பெரிய காயம் ஏதுமில்லை. அந்த முரட்டுப் பசு, ஏன் கிழவரைத் தள்ளி வீழ்த்தியது? அவர் செய்த தப்பு என்ன? சரி, எதனால் அவரை எதுவும் செய்யாமல் கடந்து போனது பசு? அவரை மன்னித்து விட்டதா? இதற்கெல்லாம் காரணம் உண்டா? இல்லை, எல்லாமே தற்செயலாக நடந்தவையா? புரியவே இல்லை.
செயல்கள் ஏன் நடக்கின்றன என ஆராய்ந்தால், சிலவற்றுக்குத்தான் சரியான காரணங்கள் கிடைக்கும். சிலவற்றுக்கு வெறும் யூகங்கள்தான் தோரணமாகப் போய்க்கொண்டே இருக்கும். நேரம்தான் விரயமாகும். எனவே, 'எல்லாம் கடவுள் செயல்’ என்று சுருக்கமாக முடித்துக் கொண்டுவிட்டால் வம்பே இல்லை.
வெல்லத்தில் இனிப்பை வைத்ததும் கடவுள்; அதைத் தின்னும் ஆசையை நாராயணனின் பேரனுக்கு ஏற்படுத்தியதும் கடவுள் என அதை அதோடு விட்டுவிட்டு, அடுத்த காரியத்தைச் செயலாற்றப் போய்விட வேண்டும்.
'ஒன்றை நினைக்கின் அது ஒழிந்திட்டு ஒன்றாகும்
அன்றி அதுவரினும் வந்தெய்தும் ஒன்றை
நினையாத முன்வந்து நிற்பினும் நிற்கும்
எனையாளும் ஈசன் செயல்’ - என்பது ஒளவையார் வாக்கு.
''அப்படியா! இனியரு முறை அந்தப் பிள்ளை வெல்லத்தைத் திருடித் தின்னா, முதுகுல ஒரு பூசை வைக்கிறேன். அதுவும் ஈசன் செயல்தான்னு எடுத்துக்குங்கோ. பேரனுக்குப் பரிஞ்சிண்டு வராதீங்கோ'' என்றாள் நாராயணனின் மனைவி.
அதுவும் சரிதான்.
'எங்கெங்கே பார்த்தாலும் எவ்வுயிர்க்கும் அவ்வுயிராய்
அங்கங்கு இருப்பது நீ அன்றோ பராபரமே! ’
- என தாயுமான சுவாமிகள் சொல்லியிருக்கிறாரே! வெல்லம் திருடுகிறவனும் அவனே! அடி வாங்குகிறவனும் அவனே!


avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Sun Sep 14, 2014 8:51 pm

நண்பன் நாராயணன் போன வாரம், ஒரு போன் அடித்தான். அவன் வீட்டிலிருந்து அல்ல; மகாபலிபுரத்திலிருந்து.
''நீ எப்போடா அங்கே போனே? என்கிட்டே சொல்லவே இல்லையே?'' என்றேன்.
''அதான்டா இப்போ அவதிப்படறேன். எனக்காக ஒரு காரியம் பண்ணு. உடனே 10,000 ரூபா எடுத்துண்டு சொந்தக் காரிலோ, அல்லது ஒரு கால் டாக்ஸி பிடித்துக்கொண்டோ மகாபலிபுரம் வந்து சேரு. அங்கே ரிதம் ரிஸார்ட்ஸ், ரூம் நம்பர் டூ நாட் டென்!''
''வரேன்,'' என்று வாக்கு கொடுத்துவிட்டு, உடனே கிளம்பி, ராத்திரிக்குள் ஹாலிடே ரிஸார்ட்டை அடைந்து, அவன் ரூமுக்குப் போய்ச் சேர்ந்தேன்.
''நாளைக் காலை எட்டு மணிக்கு செக் அவுட் டைம். நான் ஒரு 20,000 காஷாக கொண்டு வந்தேன். இன்னும் ஒரு 10,000 ஆகும் போலிருக்கு. கிரெடிட் கார்டு அக்ஸெப்ட் பண்ணிக்கமாட்டாங்களாம். செக் அக்ஸப்டென்ஸ் கிடையாது. அதான் உனக்கு ஃபோன் அடிச்சேன். ஆபத்பாந்தவா, அனாத ரட்சகா! காப்பாத்தினியே!'' என்று கும்பிடு போட்டான்.

மிஸஸ் நாராயணன் முகம் அழாத குறையாகக் காட்சி தந்தது. '’அக்கா பிள்ளைக்கு மெடிக்கல் ஸீட் கிடைச்சிட்டுதாம். இவர் ட்ரீட் தந்தே தீருவேன்னு அக்கா குடும்பத்தைக் கூப்பிட்டுவிட்டார். எங்க குடும்பமும் சேர்ந்து, பத்துப் பேர் நேத்து வந்தோம். ஒரு நாள் சந்தோஷமா இருக்கணும்னு உங்க நண்பர் திட்டம் போட்டு, மூணு ரூம் எடுத்தார். 15,000 ரூபாய் வாடகை. சாப்பாடு மெனு கார்டைப் பாருங்களேன்.''
ரிஸார்ட்டின் சைவ உணவுப் பட்டியலின்மீது பார்வையைச் செலுத்தி னேன். கத்தரிக்கா காரக் குழம்பு கண்ணில் பட்டது. அதிக விலையில்லை. 275 (குழம்பு மட்டும்)! கடையில் 12 ரூபாய்க்கு வாங்குகிற தண்ணீர் பாட்டில் இங்கே 87 ரூபாய்! 'ஒரு பாட்டில் தண்ணி 87 ரூபாயா!’ என்று எனக்கு மயக்கம் வராத குறை. தடால்னு ஒரு சந்தேகம்... ''ஏண்டா நாராயணா, நான் வந்ததும் வராததுமா மடக் மடக்குனு அரை பாட்டில் தண்ணியைக் குடிச்சு பாட்டிலை காலி பண்ணிட்டேனே! அப்போ, 44 ரூபா தண்ணியை முழுங்கிட்டனா? அடடா... அதன் விலை எனக்குத் தெரியாம போச்சே!'' என்று வருத்தப்பட்டேன்.
மறுநாள் காலையில், சாப்பிடும்போது என் மனைவி செம்பு நிறையத் தண்ணீரை வைத்தாள். ''இதை எவ்வளவு அலட்சியப்படுத்துகிறோம்! இது சும்மாவும் கிடைக்கிறது; பாட்டிலுக்குள் புகுந்துகொண்டு, 87 ரூபாய் குடு என்றும் கேட்கிறது'' என்றேன்.
''நம்ம பக்தி மாதிரி!'' என்றாள் மனைவி. ''ஒரு இன்ச் பூ போட்டு யாரை பக்தி பண்ணுகிறோமோ, அதே ஆண்டவனுக்குத்தான் லட்ச ரூபாய் செலவில் கோயில் கட்டிக் கும்பாபிஷேகம் செய்து, மூச்சுத் திணற முண்டியடித்துக்கொண்டு தள்ளுமுள்ளு செய்து, பக்தி செய்கிறோம்.''
காரைக்காலம்மையார் பாடி வைத்தது நினைவுக்கு வந்தது...
எக்கோலத் தெவ்வுருவாய் எத் தவங்கள் செய்வார்க்கும்
அக்கோலத்து அவ்வுருவே ஆம்
நம்ம வீட்டு பூஜை அறையில் நாம் வழிபடும் சாமியும், சிரமப் பயணம் போய் தள்ளுமுள்ளுடன் நாம் தரிசிக்கும் சாமியும் ஒண்ணேதான்! பக்தி செய்பவரும் நாம்தான். கடவுள்களைக் கொண்டாடி ஏற்றிப் புகழ்ந்து, சில தலங்களை பிரசித்தியாக்குவதும் நாம்தான்; சிலவற்றைக் கண்டுகொள்ளாமல் விடுவதும் நாமேதான். கடவுள் இந்த இரண்டு நிலைகளுக்கும் அப்பாற்பட்டவர்- தண்ணீர் மாதிரி!


avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Sun Sep 14, 2014 8:52 pm

அமாவாசை தினம் வந்துவிட்டால் போதும், நண்பன் நாராயணனுக்கு வாயில் நுரை தள்ளிவிடும். இறந்துபோன அப்பாமீது மனசுக்குள் எரிச்சல் மூளும்; மனைவிமீது வள்வள்ளென்று விழுவான்; ''காபியும் வேணாம், ஒரு மண்ணாங்கட்டியும் வேணாம்'' என்று ஆர்ப்பாட்டம் செய்வான்.
அன்றைக்கு அப்படித்தான், ஒரு அமாவாசை தினத்தில் அவன் அமர்க்களம் செய்துகொண்டி ருந்தபோது போய் நின்றேன். ''எனக்குன்னு வந்து வாய்ச்சிருக்கா பாரு!'' என்று மனைவியைத் திட்டிக்கொண்டு இருந்தான்.
அப்போது அவன் மனைவி அவசரம் அவசரமாக ஒரு துண்டுக் காகிதத்தில் எதையோ எழுதி அவன் முன் வைத்தாள். அப்புறம்தான் சாந்தமானான்.
அந்த சீட்டில் அப்படி என்னதான் எழுதியிருந் தது? வேறொன்றுமில்லை; அன்றைய கிழமை, நட்சத்திரம், மாசப் பெயர், ருது, அயனம் இவை தான் குறிப்பிட்டிருந்தன.
''சின்ன விஷயம், பெரிய எரிச்சல்டா..!'' என்று எனக்குச் சமாதானம் கூறுவதுபோல் சொல்லிவிட்டு, பூஜை அறைக்குச் சென்று நீர்க்கடன், தர்ப்பணம் தருவதில் ஈடுபட்டான்.
அவன் மனைவி எனக்கு வழக்கம்போல் காபி உபசரித்துவிட்டு, ''அமாவாசைன்னாலே உங்க நண்பருக்கு ஒரு படபடப்பு வந்துவிடும். என்ன நட்சத்திரம், நாள், மாசம், வருஷம் எல்லாம் ஒரு சீட்டில் தயாராக எழுதிக் கொடுத்துடணும். அவருக்குப் பஞ்சாங்கம் பார்க்கத் தெரியாது. இப்போ நடக்கும் தமிழ் வருஷத்துப் பெயர்கூடத் தெரியாது. அதிலெல்லாம் அக்கறை இல்லை.காலண்டரைப் பார்த்து நாள் நட்சத்திரம் கண்டுபிடிக்கச் சோம்பல். அது ஒரு பெரிய டாஸ்க்னு அவருக்குள் நினைப்பு'' என்றாள்.
தர்ப்பணம் செய்து முடித்துவிட்டு வந்த நாராயணன், சாந்தமாக இருந்தான்.
''வள்ளுவர்கூட நீத்தார் வழிபாடு செய் யணும்னு சொல்லியிருக்காரேன்னுதான் நான் செய்துகொண்டு வரேன். ஆனால், எதுக்குச் செய்யறோம், ஏன் செய்யறோம்னு தெரியாமலேயே ஏனோ தானோன்னு எள்ளையும் தண்ணியையும் கொட்டிட்டு வரோமேன்னு உறுத்தலாகவும் இருக்கு'' என்றான்.
''பரவாயில்லை'' என்றேன். ''குருத் குஹன்னு நினைத்துக் கொள்!'' என்று புதிர் போட்டேன்.
''அது யார் குருத்குஹன்?'' என்றான்.
''ஸ்ரீராமசரித்திரத்திலே 'குகன்’ என்கிற வேடன் வருகிறானில் லையா? நின்னோடு ஐவரானோம் என்று ராமர் கட்டிக்கொண்டாரே, அவனது முன் ஜென்மப் பெயர்தான் குருத் குஹன்.
முந்தைய ஜென்மத்தில், ஒரு சிவராத்திரி தினம் காட்டுக்கு வேட்டையாடப் போனான். இருட்டிவிட்டதால் ஒரு மரத்தில் ஏறி, இரவைக் கழித்தான். மிருகங்களின் சலசலப்பு கேட்கும் போதெல்லாம், வில்லில் அம்பைப் பூட்டி எய்வான். அப்போது அவன் கையில் உள்ள குடுவையிலிருந்து சிறிது நீர் கீழே விழும்.
மரத்திலிருந்து வில்வ இலையும் இரண்டொன்று கீழே உதிரும். இப்படியாக, நாலு தடவை அந்த இரவில் அவன் முயன்றான்.
மரத்தின் கீழிருந்த ஒரு சிவலிங்கத்தின்மீது, அந்தப் புண்ணிய தினத்தில் நாலு சாமத்தில் வில்வமும் நீரும் அவனது செய்கையில் விழுந்தமையால், கடவுள் அதை அவன் செய்த அர்ச்சனையாக ஏற்றுக்கொண்டு, 'அடுத்த ஜென்மத்தில் நீ ஸ்ரீராமருக்கு உதவும் பாக்கியம் பெற்று, அவரால் சகோதரனாகப் பாவிக்கப்படுவாய்!’ என்று ஆசீர்வதித்தாராம். ஆகவே, ஒரு நல்ல செயலை உணர்ந்து செய்கிறோமோ, உணராமல் செய்கிறோமோ... அதற்குப் பலன் நிச்சயம் கிடைத்துவிடும்'' என்றேன்.
மகாகவி பாரதியார் தன் சக்தி திருப்புகழில் பாடுகிறார்.
சக்தி சக்தி என்றால் சக்தி தானே சேரும் கண்டீரே
சக்தி சக்தி என்றால் வெற்றி தானே நேரும் கண்டீரே
சக்தி சக்தி என்றே செய்தால் தானே செய்கை நேராகும்
சக்தி சக்தி என்றால் அஃது தானே முக்தி வேராகும்.


avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Sun Sep 14, 2014 8:52 pm

நண்பன் நாராயணனுக்குப் புதுப் பிரச்னை, சமீபத்தில் அவன் வீட்டுக்கு வந்திருந்த ஓமலூர் அத்தை. ரொம்பவே ஆசாரம், மடி! எந்நேரமும், 'இதைத் தொடாதே, அதைத் தொடாதே, நான் மடி, என் மேல் பட்டுவிடாதே, அதன் மேல் தண்ணீர் தெளி, ஸ்டவ்வை அலம்பு...’ அது இது என்று ஏகத்துக்கும் அலட்டிக்கொண்டே இருந்தாள். அத்தை எப்போதடா ஊருக்குக் கிளம்புவாள் என்று நாராயணன் குடும்பத்தினர் தவியாய்த் தவித்தனர்.
சில நாட்கள் கழித்து, என் பெரியப்பா பிள்ளைக்குத் தொண்டையில் ஆபரேஷன் நடந்தது. ஐ.சி.யு-வில், டியூப் செருகியபடி பத்து நாள் வாசம். பார்க்கப் போயிருந்தோம். அவ்வளவு சாமானியத்தில் உள்ளே போக முடியவில்லை. ஏகப்பட்ட கெடுபிடி. செருப்புகளைக் கழற்றிவிட்டு, பிளாஸ்டிக் உறைகளை அணியச் சொன்னார்கள். நோயாளியின் அருகில், உடனே உலரும் திரவ சோப்பில் கைகளைக் கழுவிக்கொண்டு, அவர்கள் தந்த துண்டுத் துணியால் வாயையும் மூக்கையும் கட்டிக்கொண்டு, நோயாளியை ஒரேயரு நிமிடம் பார்க்க அனுமதித்து, துரத்திவிட்டார்கள்.

'அநியாயத்துக்கு இத்தனை கெடுபிடியா? என்று நான் கேட்டது, அங்கிருந்த நர்ஸின் காதில் விழுந்துவிட்டது. அவள் முறைப்புடன், ''நீங்க படிச்சவர்தானே? நோயாளியை இன்ஃபெக்ஷனில் இருந்து காப்பாற்றத்தானே, இத்தனை ஜாக்கிரதையா நடவடிக்கை எடுக் கிறோம்; அதை நீங்க அலட்சியமா, கெடுபிடிங்கறீங்களே!'' என்றாள். என் மண்டையில் ஓங்கி அடித்தாற்போல் இருந்தது.
நாராயணனின் அத்தைகூட மடி, ஆசாரம் என்று புலம்புவது இன்ஃபெக்ஷன் ஆகிவிடக்கூடாது என்பதற்காக ஏற்பட்டதாக இருக்குமோ?
காலைக் கழுவிக்கொண்டுதான் கோயிலில் நுழையவேண்டும்; சில கோயில்களில், சட்டையையும் கழற்றச் சொல்லுகிறார்கள். அர்ச்சகர் நீட்டுகிற தட்டைத் தொடுவதற்கு முன், உத்தரணியில் தண்ணீர் தந்து, கையைச் சுத்தப்படுத்திக்கொள்ளச் சொல்கிறார். அபிஷேகப் பாத்திரங்களை அந்த அர்ச்சகர் தொட்டுத் தூக்கும் முன் தண்ணீர் தெளிக்கிறார். இவை வேஷம் அல்ல; துவேஷமும் அல்ல; மூடப் பழக்க வழக்கமும் கிடையாது. ஆண்டவன் பெயரால் ஏற்பட்ட ஆரோக்கியக் குறிப்புகள்!
'ஆசாரக் கோவை’ என்கிற நீதி நூலில், மனிதர் கடைப்பிடிக்க வேண்டிய ஆசாரங்கள் (ஒழுக்கங்கள்) ஏராளமாகக் கூறப் பட்டிருக்கின்றன. அவற்றில் ஒன்று...
தேவர் வழிபாடு, தீக் கனா, வாலாமை,
உண்டது கான்றல், மயிர் களைதல், ஊண்பொழுது,
வைகு துயிலோடு, இணைவிழைச்சு, கீழ் மக்கள்
மெய் உறல், ஏனை மயல் உறல் - ஈர்ஐந்தும்
ஐயுறாது ஆடுக நீர்!
தெய்வத்தை வழிபடும்போதும், தீய கனவைக் கண்டபோதும், தூய்மை குன்றிய காலத்தும், வாந்தி எடுத்தபோதும், முடி வெட்டிக்கொண்டபோதும், உண்ணும்போதும், பொழுதேற உறங்கியவிடத்தும், புணர்ச்சிக் காலத்திலும், குணங்கெட்ட மக்கள் தீண்டியபோதும், மலசலம் கழித்த காலத்தும்... இந்தப் பத்து நேரங்களிலும் கண்டிப்பாக நீராட வேண்டும்.
கலகலப் பக்கம்! - பாக்கியம் ராமசாமி
எல்லாம் தேவுடு செயல்!

நண்பன் நாராயணன் வற்புறுத்திக் கேட்டதற்கு இணங்க, அவனுடன் 'பெத்த கோவிந்தராயலு’ என்பவரின் பங்களாவுக்குச் சென்றேன். ஒரு காலத்தில் நாராயணனுக்கு முதலாளி யாக இருந்தவர், அவர். சென்னையின் பிரபலமான அவரது நகைக் கடையில் நாராயணன் வேலை பார்த்தது உண்டு.
அவர், சிறந்த ஆத்திகர். கோயில் விழாக்களுக்கும், புது கோயில்கள் கட்டவும் அள்ளி அள்ளித் தருவார். நண்பனது குடியிருப்புப் பகுதியில், அவனது முயற்சி யால், சிறிய பிள்ளையார் கோயில் ஒன்று உருவாகிக் கொண்டிருந்தது. அதற்குக் குறைந்தபட்சம் இரண்டு லட்ச ரூபாயாவது வேண்டியிருந்தது. தன் பழைய முதலாளியிடம் நன்கொடை பெறலாம் என்றுதான் அங்கே சென்றான் நாராயணன்.
பராமரிப்பு இல்லாத பழைய மைசூர் பேலஸ் மாதிரி இருந்தது அந்தப் பங்களா. ஜமீன்தார் போல கம்பீரத் தோற்றம் கொண்டிருந்த அவரிடம் குசல விசாரிப்புகள் முடிந்ததும், கோயில் கட்டும் விஷயத்தைச் சொன்னான் நாராயணன். ரசீது புத்தகத்தைப் பிரித்து, அவர் முன் பரப்பினான். குறைந்தது பத்தாயி¢ரம் ரூபாயாவது எதிர்பார்த்தான். ஆனால், அவர் ஒரு பைசா கூடத் தரவில்லை. மாறாக, ''என்னப்பா, இன்றைக்கு நீ பேப்பரே பார்க்கவில்லையா?'' என்று விரக்திச் சிரிப்புடன் கேட்டவாறு, அன்று வந்த தினசரியை எங்கள் முன் போட்டார். அதில் கொட்டை எழுத்தில் இருந்த செய்தி, எங்களைத் திகைக்க வைத்தது. 'நடிகைக்கு இரண்டு கோடி நஷ்ட ஈடு! கோர்ட் தீர்ப்பு! பெத்த கோவிந்த ராயலுவுக்கு அதிர்ச்சி!’
''படிங்க, படிங்க! பேப்பரில்தான் வந்துவிட்டதே என் பேரு. நல்லா ரிப்பேராகிவிட்டது. எல்லாம் தேவுடு செயல்'' என்று தொப்பை குலுங்க, போலித்தனமாகச் சிரித்தார். சூழ்நிலை சரியில்லாததால், 'அப்புறம் வருகிறோம்’ என்று நாராயணன் இறுகிய முகத்துடன் விடைபெற்றுக் கிளம்ப... வெளியே வந்தோம்.
''பெத்த கோவிந்தராயலு கோயில்களுக்குச் செய்திருக்கிற கைங்கர் யங்களுக்கு அளவே கிடையாது. எத்தனையோ கோயில்களுக்கு காஷ்மீரிலிருந்து அசல் குங்குமப் பூ வரவழைத்து அபிஷேகம் செய்திருக்கார்; தேன் அபிஷேகம் குடம் குடமாக அவர் செய்ததை கண்ணால் பார்த்திருக்கிறேன். அவருக்கா இந்தச் சோதனை?'' என்று ஆதங்கப்பட்ட நாராயணன் தொடர்ந்து சொன்னான்...
''ஏதோ சொந்தமாகப் படம் எடுக்க ஆரம்பிச்சு, அந்த நடிகையோடு தொடர்பு. கல்யாணமும் செஞ்சுக்கிட்டார். முதல் மனைவியும் இருக்கிறார். நாலஞ்சு வருஷம் கழிச்சு, நடிகை விவாகரத்துக் கோரி வழக்கு போட்டிருக்கிறாள். இரண்டு கோடி நஷ்ட ஈடு தர தீர்ப்பாகியிருக்கிறது. விழுந்து விழுந்து எல்லா சாமிகளுக்கும் தேனாகக் கொட்டினார்; குங்குமப் பூவாக வாங்கி அர்ச்சனை செய்தார். இப்போது அந்த பங்களாவை பராமரிக்கக்கூட வசதி இல்லாதவர்போல் இருக்கிறார். கடவுள் செயல், கடவுள் செயல் என்கிறார்கள். எனக்குப் புரியலை'' என்று அங்கலாய்த்தான். எனக்கு, எப்போதோ படித்த திருமந்திரப் பாடல் ஒன்று ஞாபகத்துக்கு வந்தது.
நெறியைப் படைத்தான் நெருஞ்சில் படைத்தான்
நெறியின் வழுவின் நெருஞ்சில் முள் பாயும்
நெறியில் வழுவாது இயங்க வல்லார்க்கு
நெறியின் நெருஞ்சில் முள் பாய் கிலாவே

'ஒழுங்கான பாதையையும் இறைவன்தான் படைக்கிறான்; நெருஞ்சி முள்ளையும் அவனேதான் படைக்கிறான். ஒழுங்கான நெறியில் (பாதையில்) செல்பவரை நெருஞ்சில் குத்தாது!’
நாம்தான் கடவுள் நமக்குக் கொடுத்திருக்கும் புத்தியை உபயோகித்து நல்ல பாதையில் செல்லவேண்டும். கடவுள் பேரில் தப்பில்லை!


avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Sun Sep 14, 2014 8:53 pm

அம்பத்தூரில் என் உறவினர் ஒருவர், சத்சங்கம் நடத்தி வந்தார். அதில் கலந்துகொள்ளும் பலரும், ஆன்மிகம் தொடர்பான சந்தேகங்களை எழுப்புவார் கள். ஒருமுறை, 'எது கடவுள் செய்கை? எது நம் செய்கை?’ என்று கேட்டார் வேதாசலம் என்கிற அன்பர்.
இதற்கு, 'எல்லாமே ஆண்டவன் செயல்’ என்று சிலர் பதில் சொல்ல, வேதாசலம் உடனே, 'அப்படி நம்பித்தான் மூணு நாலு வருஷமா கஷ்டப்பட்டுக்கிட்டிருக்கேன்’ என்றாராம்.
'எல்லாம் கடவுள் செயல்’ என்று நம்பினால், என்ன கஷ்டம்?!

வேதாசலம் வேலை பார்க்கும் தனியார் அலுவலகத்தில், ஒவ்வொரு செக்ஷன் ஆபீசரின் வீட்டுக்கும் ஆபீஸ் செலவில் டெலிபோன் வைத்துத் தந்திருந்தனர் (செல்போன் வராத காலம் அது!). வேதாசலம் செக்ஷன் ஆபீசர் இல்லை. ஆனால், அவரிடம்தான் அந்தரங்கமான, முக்கியமான வேலைகளையெல்லாம் தருவார் எம்.டி. ஆகவே, 'தன் வீட்டுக்கும் டெலிபோன் இணைப்பு தரவேண்டும் எனக் கேட்கலாமா? அல்லது, கடவுள் எப்போது நினைக்கிறாரோ, அப்போது டெலிபோன் கிடைக்கட்டும் என்று பேசாமல் இருந்துவிடலாமா?’ எனக் குழப்பம் வேதாசலத்துக்கு! கிட்டத்தட்ட மூன்று வருடங்களாக இருதலைக் கொள்ளி எறும்பெனத் தவித்து மருகினார். வாய்விட்டுக் கேட்டால், கடவுள் மீது நம்பிக்கை இல்லை என்றாகிவிடும். அதே நேரம், நடப்பது நடக்கட்டும் என்று பேசாமல் இருந்ததால், இன்றுவரை டெலிபோன் வந்தபாடில்லை.
இந்த நிலையில், புதுச்சேரியில் உள்ள எழுத்தாள நண்பரைச் சந்திக்கச் சென்றார், வேதாசலம். அங்கே சுவாமி ஆத்மசுகானந்தா எனும் சாதுவைத் தரிசிக்கும் வாய்ப்பு கிடைத்தது. தன்னுடைய சந்தேகத்தையும் ஆதங்கத்தையும் நண்பர் மூலம், அந்தச் சாதுவிடம் தெரிவித்தார். அதைக் கேட்டுச் சிரித்த சாது, 'எதுவுமே நம் செயல் அல்ல; எல்லாமே ஆண்டவன் செயல்தான். செய்பவன் அவன்; கருவிதான் நீங்கள்!’ என்றார்.
''அப்படியெனில் எம்.டி.யிடம் டெலிபோன் வேண்டும் என்று நான் வாய்விட்டுக் கேட்கட்டுமா, வேண்டாமா?'' என்று மீண்டும் கேட்டார் இவர். உடனே சாது, ''நீங்கள் தயங்குவதும் அவன் செயல்; தயங்காமல் கேட்டால், அதுவும் அவன் செயல்; அதன் விளைவுகளும் அவனுடைய செயல்; எல்லாமே கடவுள் செயல்!'' என்றார் சிரித்தபடி.
பிறகென்ன? கடவுளின் மீது பாரத்தைப் போட்டுவிட்டு, டெலிபோன் இணைப்பு கேட்டு எம்.டி-க்குக் கடிதம் எழுதிவிட்டார் வேதாசலம். அடுத்த நாலாம் நாள், இவர் ஆபீசுக்குப் போனபோது, மேஜை மீது ஒரு கடிதம்... 'உங்கள் கோரிக்கை ஏற்கப்பட்டது. உங்கள் டெலிபோன் செலவுகளை ஆபீஸே ஏற்கும். இப்படிக்கு நிர்வாகி’ என்று கடிதம் இருந்தது.
நைவ கிஞ்சித் கரோமீதி யுக்தோ மன்யேத தத்வவித்
பச்யன் ச்ருண்வன் ஸ்ப்ருசன் ஜிக்ரன்அச்னன் கச்சன் ஸ்வபன் ச்வஸன்
'கண்டாலும், கேட்டாலும், தொட்டாலும், முகர்ந்தாலும், உண்டாலும், சென்றாலும், தூங்கினாலும், மூச்சு விட்டாலும் ஒன்றையும் தான் செய்ய வில்லை; தன்னைக் கருவியாகக் கொண்டு இறைவனே இயக்குகிறான் என யோகியானவர் நினைக்க வேண்டும்’ என்கிறது கீதை.
யோகிகளுக்கு மட்டுமில்லை; இது சாதாரணர்களுக்கும் பொருந்தும்!


avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Sun Sep 14, 2014 8:54 pm

விருந்தாளியைக் காக்க வைத்துவிட்டு (அதாவது, அவர் கண்ணில் தின்பண்டத்தைக் காட்டாமல்) தான் மட்டும் உண்பதைச் சான்றோர் ஒப்புக்கொள்ளவில்லை.
என் சின்ன வயதில், நான் செய்த ஓர் அற்பத்தன மான செயலை நினைத்து இன்றைக்கும் வெட்கப் படுகிறேன்.
மாம்பழத்துக்குப் பெயர்பெற்றது எங்களின் சேலம் மாவட்டம். என் சொந்த ஊரான ஜலகண்டபுரத்தில் அப்போது ஹைஸ்கூல் வசதியெல்லாம் இல்லை. எனவே, பத்து வயதுச் சிறுவர்களான நாங்கள் ஒரு ஐந்தாறு பேர் சின்னதாக அறை ஒன்றைச் சேலத்தில் வாடகைக்கு எடுத்து தங்கிப் படித்து வந்தோம். என் மூத்த சகோதரர் அடிக்கடி சேலத்துக்கு வந்து, எங்களைப் பார்த்துவிட்டு, ஓட்டல் பில், வீட்டு வாடகை மற்றும் இதரச் செலவுகளுக்கு உரியவர்களிடம் பணம் கொடுத்துச் செல்வார். அப்படி ஒருமுறை வந்தபோது, மல்கோவா மாம்பழங்களைக் கொண்டு வந்து தந்தார். அவை, எங்கள் தோப்பில் காய்த்தவை. கூடுதல் பருமன்; அதிக வாசனை; அருமையான ருசி கொண்டவை. அதில் ஒரு மாம்பழம், இயல்பான அளவைக் காட்டிலும் ரொம்பப் பெரிதாக இருந்தது. அதை என் பங்கில் இணைத்துக் கொண்டேன்.

மூன்று நான்கு வீடுகள் தள்ளி, பள்ளியின் தமிழ்ப் பண்டிதர் குடியிருந்தார். அவருடைய மகன், எனக்கு இனிய சிநேகம். அவனிடம் எங்கள் தோப்பின் மாம்பழப் பெருமையை, முக்கியமாக பெரிய சைஸ் மல்கோவா பெருமையைச் சொல்லாமல் இருக்க முடியவில்லை. சாயந்திரம் பள்ளி விட்டதும், அவன் என்னோடு வந்து அந்த அதிசய மாம்பழத்தைப் பார்க்க விரும்புவதாகச் சொன்னான். அவ்வளவுதான்... என் மனம் அற்பத்தனமாக யோசிக்கத் தொடங்கிவிட்டது.
தினமும் பள்ளி விட்டதும், வழக்கமாக நானும் அவனும் ஒன்றாகத்தான் வீடு திரும்புவோம். அன்றைய தினம், கடைசி பாட வேளை ஆசிரியரிடம், ''மாமா வந்திருக்கார்; போகணும்’ என்று ஒரு பொய்யைச் சொல்லிவிட்டு, அனுமதி வாங்கி, பள்ளி விடுவதற்கு முன்பே வேக வேகமாக வீடு திரும்பி, பெரிய சைஸ் மல்கோவாவைத் தின்று தீர்த்தேன்.
நண்பன்தான் பாவம்... பள்ளி முடிந்து, விளையாட்டு மைதானத்தில் என்னைத் தேடி, காணாமல் விசாரித்து, விவரம் அறிந்து, என் அறைக்கு வந்தான். ''அந்த அதிசய மாம்பழத்தைக் காட்டுடா, பார்க்கலாம்!'' என்றான் ஆசை ஆசையாக. ''என் மாமா அவசரமாக ஊருக்குக் கிளம்பணும்னார். அதனால், அதை அறுத்துச் சாப்பிட்டுட்டார். எனக்கும் ரெண்டு துண்டு தந்தார்'' என்று கூறி, மல்கோவா கதையை முடித்துவிட்டேன். கேவலம், ஒரு மாம்பழத்துக்காக அன்று நான் அப்படி நடந்துகொண்டதை நினைத்தால், இப்போதும் வெட்கமாக இருக்கிறது.
பிறருக்கு கொடுத்துச் சாப்பிடுகிற பழக்கம், சின்ன வயதிலேயே வரவேண்டும். இந்தப் பழக்கத்தைத் தாய்மார்கள்தான் தங்கள் குழந்தைகளின் மனதில் பதிய வைக்க வேண்டும்.
முன்னெல்லாம் குழந்தைகளுக்குச் சாதம் ஊட்டும் போது, 'அப்பாவுக்கு ஒரு வாய், அம்மாவுக்கு ஒரு வாய், நிலாவுக்கு ஒரு வாய், நாய்க் குட்டிக்கு ஒரு வாய்...’ என்று எல்லாருக்கும் பங்கு சொல்லியவாறு ஊட்டுவார்கள் தாய்மார்கள். ஆனால் இன்றைக்கோ, ''தோ தோ நாய்க்குட்டி... என்ன, உனக்கும் ஒரு வாய் வேணுமா? போ போ! உனக்குக் கிடையாது. எங்க குட்டிப் பாப்பாக்குதான்!'' என்றல்லவா ஊட்டி வளர்க்கிறார்கள்!
'விருந்து புறத்ததாத் தானுண்டல் சாவா மருந்தெனினும் வேண்டற்பாற் றன்று’ என்கிறது திருக்குறள்.
அமுதமாகவே இருந்தாலும், அதை அந்த நாய்க் குட்டிக்கும் தருவோமே!


avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Sun Sep 14, 2014 8:56 pm

காலையில் எழுந்ததும் வழக்கம்போல் காலண்டரில் அன்றைய தினத் தேதியைக் கிழித்துக் கசக்கிப் போட்டேன். பின்பு, சட்டென்று எடுத்து அதை நீவி, சட்டைப் பையில் வைத்துக் கொண்டேன். வேறொன்றுமில்லை... 'எது பாவம், எது புண்ணியம்?’ என்ற கேள்விக்கு, 'வெறுப்பது பாவம்; நேசிப்பது புண்ணியம்’ என்று சுவாமி விவேகானந்தரின் பொன்மொழி அதில் அச்சிடப்பட்டிருந்தது. என் வீட்டு காலண்டரில், ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பொன்மொழி அச்சிடப்பட்டிருக்கும். கிழித்த தேதியைக் குப்பைக் கூடையில் போடுவது, பொன்மொழியையே குப்பையில் போடுவது போன்று மனசுக்குக் கஷ்டமாக இருக்கும்.
இதைச் சொன்னதற்கு என் மனைவி பலமாகச் சிரித்துவிட்டு, ''நல்லா இருக்கு கதை! அந்தப் பொன்மொழியை நாலு தரம் படிச்சு, மனசுல வாங்கிக்கிட்டு, காகிதத்தைக் குப்பைத் தொட்டில போடுவீங்களா... இதுக்குப் போய் இவ்ளோ யோசனை பண்ணிக்கிட்டு!'' என்றாள். அதன்படி, 'வெறுப்பது பாவம்; நேசிப்பது புண்ணியம்’ எனும் வாசகத்தை மீண்டும் மீண்டும் படித்தேன். சட்டென்று பெரியவர் மாசிலாமணியின் ஞாபகம் வந்தது.

மாசிலாமணி, நான் வேலை பார்த்த தனியார் கம்பெனியின் விற்பனைப் பிரிவு மேலதிகாரி. அலுவலகத்தில், அவருக்குப் போதுமான வசதிகளைச் செய்து தரவில்லை என எப்போதும் புலம்பிக்கொண்டே இருப்பார். 'அறையில் ஏ.ஸி. வசதி இல்லை; போக்குவரத்து அலவன்ஸ் தருவதில்லை; இன்ஸென்டிவ் வழங்குவதில்லை’ எனக் குறைகளைப் பட்டியலிட்டுக்கொண்டே இருப்பார். சீனியரான அவரிடம் மதிப்பு உண்டு என்றாலும், நிர்வாகிகளைக் குறை சொல்லியபடியே இருக்கும் அவர் பேச்சை நான் ரசிப்பதில்லை.
ஒருவழியாக அவர் ஓய்வு பெற்றார். ஒருநாள், அவருடைய உறவினர் போன் செய்து, ''உங்களை மாசிலாமணி சார் பாக்கணும்னார்'' என்றார். போய்ப் பார்த்தேன். அலுவலகத்தில் இருந்து சிறு தொகை ஒன்று அவருக்கு வரவேண்டியிருந்தது. 'கொஞ்சம் சீக்கிரம் செட்டில் பண்ணச் சொல்லுப்பா’ என்றார். சிறிது நேரம் பேசிக்கொண்டு இருந்துவிட்டுக் கிளம்பியபோது, 'இதைப் பார்த்தியா?’ என்று கேட்டு, புகைப்படம் ஒன்றைக் காட்டினார் அவர். அது ஒரு குரூப் போட்டோ. வருடந்தோறும், ஆண்டு விழாவின்போது அதிகாரிகளும் ஊழியர்களுமாகச் சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படம்.
அந்தப் படத்தைப் பார்த்ததும் திடுக்கிட்டுப் போனேன். 30 பேர் கொண்ட அந்த போட்டோவில் சிலருடைய கண்கள் கிழிக்கப்பட்டிருந்தன. அதிர்ந்து போய் அவர் பக்கம் திரும்பினேன். ''எனக்கு அநியாயம் பண்ணினவங்க, வசதி செய்து தராதவங்க கண் அவிஞ்சு போயிடணும்னு வேண்டிக்கிட்டு, அவுங்க கண்ணை நோண்டிட்டேன்'' என்றார். வெறுப்பு, வெறுப்பு, வெறுப்பு! அலுவலகத்திலிருந்து ஓய்வு பெற்ற பிறகுகூடவா, அலுவலகத்தின்மீது ஒருத்தர் இத்தனை வெறுப்புடன் இருக்க முடியும் என்று அவர் மீதே எனக்கு வெறுப்பாக இருந்தது!
சற்று நிதானமாக யோசிக்கையில், 'இப்படி வெறுக்கிறாரே’ என்று அந்த ஆசாமியை நான் வெறுப்பது மட்டும் சரியா என்று தோன்றியது. மனிதர்களில் சிலர் இப்படியும்தான் இருப்பார்கள். உண்மையான அன்பு உள்ளம் கொண்டவர்கள், இப்படியானவர்களிடமும் அன்பாகத்தான் இருக்கவேண்டும் என்கிறார்கள் சான்றோர்கள்!
பாரதி பாடியது நினைவுக்கு வருகிறது...
தின்னவரும்புலி தன்னையும் அன்பொடு
சிந்தையிற் போற்றிடுவாய் நன்னெஞ்சே!
அன்னை பராசக்தி யவ்வுரு வாயினள்
அவளைக் கும்பிடுவாய் நன்னெஞ்சே!




avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Sun Sep 14, 2014 8:56 pm

குண்டுமாமணிகளுக்கு ஒரு கும்பிடு!

எல்லாமே பழக்கம்தான்! எழுத்து ஒரு பழக்கம்; பாட்டு, சித்திரம், பக்தி... எல்லாமே பழக்கம்தான்.
என் உறவினர் சபேசனை சமீபத்தில் பார்க்க நேர்ந்தது. மனிதர் பார்க்க தொப்பையும் தொந்தியுமாக, தளக் புளக்கென்று கன்னமும் சதையுமாக, நாட்டுத் தக்காளி நிறத்தில் இருப்பார். வி.ஆர்.எஸ். வாங்கி, ஓய்வு பெற்று உல்லாசமாக இருக்கிறார். 'குழந்தை குட்டி இல்லையே’ என்று ஏக்கம் இருக்குமோ என்னவோ... ஆனால், அதை வெளிப்படுத்திக் கொண்டதில்லை. குழந்தைகளைக் கண்டால் 'வா வா வா... தொப்பை மாமா கிட்டே வா வா’ என்று அருகே அழைத்து தூக்கி வைத்துக்கொண்டு, குஷன் மாதிரியான தனது தொப்பை மீது குழந்தையின் பஞ்சுப் பாதம் குதிப்பதை ரசித்து மகிழ்வார்.
நான் போயிருந்த நேரத்தில், அவர் கீழே தரையில் அமர்ந்து, மட்டைத் தேங்காய் உரித்துக்கொண்டு இருந்தார்.
''இதெல்லாம்கூட உங்களுக்குத் தெரியுமா மாமா, உரிக்க முடிகிறதா உங்களால்?'' என்று கேட்டேன். ''எல்லாம் பழக்கம்தான்'' என்று சொல்லிச் சிரித்தார்.
''நான் ஒல்லிதான். ஆனாலும், கீழே உட்கார முடியறதில்லை. நீங்க எப்படி அநாயாசமாகக் கீழே உட்கார்ந்து தேங்காய் உரிக்கிறீங்க?'' என்றேன் ஆச்சரியமாக.
''பழக்கம்தான். தொந்தி, தொப்பை இருந்தால் கீழே உட்கார முடியாது, குனிய முடியாது, நிமிர முடியாதுங்கறதெல்லாம் நாமளாவே நினைச்சுக்கறது. நீ டி.வி-யில வேர்ல்ட் ரெஸ்லர்ஸ் மோதிக்கற சீரியலைப் பார்க்கிறாயோ?'' என்றார்.
''ரொம்ப சுவாரஸ்யமான மல்யுத்த நிகழ்ச்சியாச்சே!'' என்றேன்.
''அவங்க எத்தனை குண்டா, தொப்பையும் தொந்தியுமா இருக்காங்க. ஆனா, எப்படி விழறாங்க, எப்படி சடால்னு எழுந்துக்கறாங்க, பறந்து பறந்து உதைச்சுக்கறாங்க... பார்த்தியா? என்னைவிட மூணு நாலு மடங்கு பருமனாக இருக்கும் அவங்களாலே எப்படி இது முடியுது? பழக்கம்தான் காரணம். 'டயட்... டயட்’னு பார்த்துப் பார்த்துப் பட்டினிச் சாப்பாடு சாப்பிடற உன்னைப் போன்ற ஆசாமிகளால எல்லாம் அப்படிக் குதிச்சு, எழுந்திருக்க முடியாது. உடம்பை, அது எந்த சைஸில் இருந்தாலும், பழக்கி வைக்கணும். சர்க்கஸ் யானை முக்காலியில் உட்காருதே, ஒத்தைக் காலில் நிக்குதே... எப்படி? பழக்கம்தானே?'' என்றார்.
சபேசன் மாமாவின் பேச்சை நினைத்தபடியே வீடு வந்து சேர்ந்தேன். உடம்பைப் பற்றி அவர் சொன்னாரே... உள்ளத்துக்கும் அது பொருந்தும் என்று தோன்றியது. உடம்பைப் போலவே மனசையும் கொஞ்சம் கொஞ்சமாக, விடாமுயற்சியுடன், பலவித உபாயங்களைக் கொண்டு பழக்கப்படுத்த வேண்டும்.
'எனக்குப் பக்தி வரவில்லையே! அதற்கெல்லாம் கொடுப்பினை வேண்டும்’ என்று சிலர் சௌகரியமாகக் கூறி, பக்திக்கு முயற்சியே செய்யமாட்டார்கள். பக்தி மார்க்கத்தில் மனத்தைச் செலுத்த, அதற்கு நாம் பயிற்சி தரவேண்டும். பயிற்சி; பயிற்சியால் பழக்கம்; பழக்கத்தால் பலன்!
அஸம்ஸயம் மஹாபாஹோ மனோ துர்நிக்ரஹம் சலம்
அப்யாஸேன து கௌந்தேய வைராக்யேண ச க்ருஹ்யதே

'மனம் அடங்குவதற்கு அரியதுதான்; நிலையற்றதுதான். அதில் சந்தேகமில்லை. ஆனால், பழக்கத்தாலும் வைராக்கியத்தாலும் மனத்தை அடக்க முடியும். பக்திக்கு அதைப் பழக்க முடியும்’ என்கிறது கீதை.


avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Sun Sep 14, 2014 8:56 pm

வயிற்றில் அல்ஸர் என்பதால், பிரபல ஹோமியோபதி டாக்டர் ஒருவரிடம் சிகிச்சைக்குப் போயிருந்தேன். அவர் என் வயிற்றை அழுத்தோ அழுத்தென்று, அரை மணி நேரம் அழுத்திப் பரிசோதித்தார். கையால் அழுத்தியே, வயிற்றில் உள்ள என் குடலிடம் நேரடியாக 'என்ன சங்கதி’ என்று கேட்டுவிடலாம் என்கிற அபிப்ராயமோ என்னவோ!
மாபெரும் மருந்து அலமாரியே எனக்குப் பின்னால் அனுப்பி வைப்பார் என்று நினைத்து நடுங்கிக்கொண்டிருந்தேன். ஆனால், ஒரேயரு சிறிய பொட்டலத்தில் மருந்து தந்தார். எக்ஸ்ரே, எண்டாஸ்கோபி, எண்டு ஸ்கோபி போன்றவற்றுக்கெல்லாம் எனக்குக் கொடுப்பினை இல்லையோ என்று உள்ளுக்குள் ஏமாற்றத்துடன், அவரை ஏறிட்டேன். ''இந்த பவுடரை அரை லிட்டர் தண்ணீரில் கலந்து ஒரு பாட்டிலில் வைத்துக்கொண்டு, வயிறு வலிக்கிறபோதெல்லாம் ஒரு ஸ்பூன் சாப்பிடுங்க'' என்றார்.

எனக்கு கொஞ்சம் இருமலும் உண்டு. ஆகவே, அவர் முன் வலுவில் இருமிக் காண்பித்து, அதற்கும் மருந்து கேட்டேன். ''உங்களுக்குக் கொடுத்திருக்கிற இதே மருந்தை இன்னும் ஒரு ஸ்பூன் சாப்பிடுங்க'' என்றார். ''இரண்டுக்கும் ஒரே மருந்தா?'' என்றேன். உடனே அவர், ''உங்களுக்குத் தலைவலி வருமா?'' என்று கேட்க, ''எப்பவாவது வரும்'' என்றேன். ''அப்படி வரும்போது, இதே மருந்துல இன்னும் ஒரு ஸ்பூன் சாப்பிடுங்க'' என்றார். ''அட... சகல ரோக நிவாரணி என்பார்களே, அந்த மாதிரியா இது!'' என்று சிரித்தேன் (வயிற்றெரிச்சலுடன்).
மேலும் அவர், 'இப்போ நான் எங்கே இருக்கேன்?’ என்று புதிர் போட்டார். 'இது என்ன கேள்வி? இந்த ரூம்லதான் இருக்கீங்க’ என்றேன். உடனே அவர், 'இந்த ரூம்னா, அதுக்கு என்ன பேரு?’ எனக் கேட்க, 'கன்ஸல்டிங் ரூம்’ என்றேன். ''சரி, கொஞ்ச நேரத்துல சாப்பிட, மாடியில் இருக்கும் டைனிங் ரூமுக்குப் போகப்போறேன்'' என்று சொல்லிவிட்டு, ''இங்கே, கன்ஸல்டிங் ரூம்ல உங்ககிட்ட பேசிட்டிருக்கேனே... என் பேரு என்ன?’ என்றார். உடனே நான், 'டாக்டர் சிவகாமிநாதன்’ என்றேன்.
''சரி, கொஞ்சம் நேரம் கழித்து, மாடியில, டைனிங் ஹால்ல சாப்பிடுவேனே... அப்ப என் பேரு என்ன?'' என்று கேட்க, ''என்ன டாக்டர் தமாஷ் பண்றீங்க... அப்பவும் டாக்டர் சிவகாமிநாதன்தான்'' என்றேன், சற்றே சலிப்புடன்.
''ஆகவே, இருப்பது ஒரே நான்தான். வேறு வேறு இடத் தில் தோன்றுகிறேன். ஆனால், எல்லா இடத்திலும் என் பெயர் சிவகாமிநாதன்தான். வியாதியும் அப்படித்தான். ஒவ்வொருத்தருக்குள்ளேயும் இருப்பது ஒரே வியாதிதான். அது தலையில் வரும்போது தலைவலி என்றும், வயிற்றில் வரும்போது வயிற்றுவலி என்றும், கால் கை மூட்டுகளில் வரும்போது மூட்டுவலி என்றும், சளி பிடிக்கும்போது ஜலதோஷம் என்றும் பெயர் மாறுகிறது. மூல காரணத்தை அறிந்து வைத்தியம் செஞ்சுட்டா, எல்லா வியாதிகளும் ஒரே வித மருந்தில் குணமாகிடும். என் மருந்தின் ரகசியம் இதுதான்'' என்றார்.
மருந்துப் பொட்டலத்தைக் கையில் எடுத்துக்கொண்டு, சிந்தனையுடன் வீட்டுக்கு நடந்தேன். நோய் மட்டுமல்ல, கடவுளுடைய செயல்கள்கூட அப்படித் தான்! நமக்கு இருப்பது ஒரே மனம்தான்.
கெட்ட மனம், வஞ்சக மனம், சூழ்ச்சி மனம், தாராள மனம் என்று அதைப் பலவிதமாகச் சொல்கிறோம்.
கந்தர் கலிவெண்பா, 'ஏகத்து உருவும் அருவும் உரு அருவும் ஆகி பருவ வடிவம் பலவாய்’ என இறைவனைக் குறிப்பிடுகிறது. 'ஒரு வடிவிலேயே உருவமும் அருவமும் உரு அருவமும் ஆகி பக்குவ வடிவங்கள் அநேகமாகி’ என்று இறைவனைப் புகழ்கிறது.
நமக்கு இறைவனால் அளிக்கப்பட்ட மனமும் அப்படித்தான்! அது எங்கெங்கு எப்படி எப்படி சஞ்சரிக்கிறதோ, அத்தகைய பெயர்களைப் பெறுகிறது. நமக்கு அளிக்கப்பட்டுள்ள அந்த ஒரு மனத்தைச் சுத்தமாக வைத்துக்கொண்டால் போதும்; அது எந்தச் செயலைச் செய்தாலும் தூய்மையாகவே இருக்கும்!


ks.parani
ks.parani
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 2
இணைந்தது : 23/11/2015

Postks.parani Mon Nov 23, 2015 4:10 pm

Hello sir,

I have downloaded lot of very good stories from your blog like sandilyan, na.pa and vikraman. But today i've tried to access your blog. it says permission denied and request an invitation to access your blog. kindly help me as i want to read lot of books which you have posted. ப்ளீஸ் give permission to me. எனது ஈமெயில் முகவரி ks.parani@gmail.com

thanks.
பரணிதரன் கே

Sponsored content

PostSponsored content



Page 4 of 4 Previous  1, 2, 3, 4

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக