ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 1:05 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

கலகலப் பக்கம்! - பாக்கியம் ராமசாமி

2 posters

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

Go down

கலகலப் பக்கம்! - பாக்கியம் ராமசாமி - Page 2 Empty கலகலப் பக்கம்! - பாக்கியம் ராமசாமி

Post by தமிழ்நேசன்1981 Sun Sep 14, 2014 8:07 pm

First topic message reminder :

புகழ் மயக்கம்

புகழுக்கு மயங்காதவர்கள் எவரேனும் உண்டா?
சமூக சேவகர் ஒருத்தர் இருந்தார். அவர் பெயர் கருப்பசாமி. அவருடைய அப்பா பெயர் எல்லப்பன். ஆகவே, எ.கருப்பசாமி! படாடோபம் இல்லாத எளிமையானவர்; காலுக்குச் செருப்புகூட போடமாட்டார். என்ன வெயில் அடித்தாலும், காலைத் தூக்கித் தலையில் வைத்துக்கொண்டு போனாலும் போவாரே தவிர, செருப்பு போடமாட்டார்!
எ.கருப்பசாமியின் சமூக சேவைகளை அக்கம்பக்கத்தவர் புகழத் தொடங்கினர். 'எ.கருப்பசாமி என்றால் எளிமை கருப்பசாமி' என்று ஒரு கூட்டத்தில் யாரோ பேசி வைக்க, அவரது பெயர் எளிமை கருப்பசாமி என்றே ஆகிவிட்டது. பெயரில் எளிமை வந்து ஒட்டிக்கொண்டதால், முன்பைவிட அதிக எளிமையாக இருக்கத் தொடங்கினார் கருப்பசாமி. ஆரம்பத்தில் இயல்பான எளிமையுடன் இருந்தவர்... இப்போது, தனது ஒவ்வொரு செயலிலும் நடவடிக்கையிலும் எளிமை இருக்கிறதா என்று பார்க்கத் தொடங்கினார்.

இஸ்திரி போட்ட சட்டை போடமாட்டார். எப்போதும் துவைத்த வேட்டி-சட்டைதான். ஒருதடவை இவரது வேட்டி-சட்டையைச் சலவைக்குப் போட்டுவிட்டாள் இவரின் மனைவி. சலவையிலிருந்து வந்த அத்தனை துணிகளையும் தண்ணீரில் போட்டு நனைத்து, சுருக்கத்துடன்தான் போட்டுக்கொண்டார்!
அவர் எளிமையாக இருக்க இருக்க, அவரது புகழ் மேலும் பரவியது. நகராட்சி கவுன்சிலர் தேர்தலில் நின்றே தீரவேண்டும் என்று பேட்டைவாசிகள் அவரை வேண்டினர். எளிமை கருப்பசாமி முதலில் மறுத்தாலும், எல்லோரும் வற்புறுத்தியதால் ஒப்புக்கொண்டார்.
சுவரில் தனது பெயரை பெரிய எழுத்துக்களில் எழுதக்கூடாது என்று கட்டளையிட்டிருந்தார். அப்பாவி சுவர் எழுத்தாளர் ஒருவருக்கு இது தெரியாமல், பெரிதாகக் கொட்டை எழுத்தில், 'எளிமை கருப்பசாமியை ஆதரிப்பீர்' என்று எழுதி வைத்துவிட்டார்.
இதைப் பார்த்து திகைத்த கருப்பசாமி, தாமே வீட்டிலிருந்து வாளியில் சுண்ணாம்பு கரைத்து எடுத்து வந்து எழுத்துக்களை அழித்தார். இதைப் பார்த்த அவரது ஆதரவாளர்கள், அவசர அவசரமாக வீடியோ கேமரா கொண்டு வந்து அந்தக் காட்சியைப் படம் பிடித்தனர்.
'தனது பெயரை தானே அழிக்கும் பிரமுகர்' என்று சில பத்திரிகைகளில் அவரது பெயரும் புகைப்படமும் வெளிவந்தன. ஏதோ ஒரு டி.வி. சேனலின் செய்தித் தொகுப்பில், அவர் சுண்ணாம்பு அடிக்கும் காட்சி ஒரு நிமிடம் வரக்கூடும் என்று தெரிந்தது. ஆனால், எந்தச் சேனலில், எந்த நேரத்தில் வரும் என்பது தெரியவில்லை. எல்லா சேனல்களையும் போட்டுப் போட்டுப் பார்த்தார். நண்பர்களிடமும், ஆதரவாளர்களிடமும் சொல்லி வைத்துத் தேடினார். ஆனாலும், பலனில்லை.
மிக சோகமாக இருந்தார். அப்போது அருகில் வந்தாள், அவரின் எட்டு வயது பேத்தி. ''தாத்தா! நீங்க என்ன பாக்கணும்... சேனலை மாத்திக்கிட்டே இருக்கீங்களே, ஏன்?'' என்று கேட்டாள்.
''நான் டி.வி-ல வருவேன்னாங்க! அதான்...''
''ஓகோ! நீங்க உங்களையே தேடுறீங்களாக்கும்! நீங்க இங்கதானே இருக்கீங்க; நீங்க செஞ்ச காரியமும் என்னான்னு உங்களுக்குத் தெரியும். அப்புறம் எதுக்கு தாத்தா சிரமப்படுறீங்க?'' என்று கேட்டாள் சிறுமி.
தாத்தா கருப்பசாமிக்கு வெட்கமாகிவிட்டது.
'என்னைப்போல எளிமையானவன் கிடையாது' என்று நினைப்பதும்கூட கர்வம்தான். 'அடியேன், அடியேன்' என்று பக்தர்கள் கூறிக்கொள்வது தங்களைத் தாழ்வுபடுத்திக்கொள்ளத்தான்.
குலசேகர ஆழ்வார் தமது 'முகுந்த மாலை'யில், ''லோகநாதா, உமது அடியார்க்கு அடியார் என்ற வரிசையில், ஏழாவது அடியேனாக என்னை நீர் நினைக்கவேண்டும்'' என்று தெய்வத்திடம் வேண்டுகிறார்.
'த்வத் ப்ருத்ய ப்ருத்ய, பரிசாரஹ ப்ருத்ய ப்ருத்ய, ப்ருத்யஸ்ய ப்ருத்ய, இதிமாம் ஸ்மர லோகநாத...'
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Back to top Go down


கலகலப் பக்கம்! - பாக்கியம் ராமசாமி - Page 2 Empty Re: கலகலப் பக்கம்! - பாக்கியம் ராமசாமி

Post by தமிழ்நேசன்1981 Sun Sep 14, 2014 8:31 pm

இந்த மனசை யாராவது வாங்கிக்கொள்ளத் தயாராக இருந்தால் உடனே கொடுத்துவிடுவேன். சில பேர் தங்கள் பிளாட்டுகளை அவசரப்பட்டு விற்றுவிட்டு, பிற்காலத்தில் 'ஐயோ, கொடுத்துவிட் டோமே! இப்ப அது இருந்தால் கோடி ரூபாய் போகுமே! காப்பாற்றி வைக்கத் தெரியவில்லையே' என்று வருத்தப்படுவதுபோல, இந்த மனத்தை விற்றதற்காக ஒரு நாளும் நான் வருந்தமாட்டேன்.

மனசு அந்தப் பாடு படுத்துகிறது. 'என் மனசு' என்பதால், அது நான் சொன்னபடி கேட்டுவிடுகிறதா, என்ன? அதன் இஷ்டத்துக்கு ஆட்டம் போடுகிறது.

வீட்டுச் சொந்தக்காரன் நான்; குடித்தனக்காரன் மனம். கண்ட இடத்தில் ஆணி அடிப்பது, வாசல் கேட்டை உடைப்பதுபோல் டமாலென்று அடித்துச் சாத்துவது, தன் போர்ஷனைக் குப்பையும் கூளமுமாக வைத்திருப்பது, கெட்ட சகவாசங்களை வரவழைத்துக்கொண்டு கூத்தடிப் பது... இப்படியெல்லாம் ஒரு குடித் தனக்காரன் நடந்துகொண்டால், வீட்டு உரிமையாளர் பொறுப்பாரா? ஆனால், வீட்டுக்காரரால் அந்தக் குடித்தனக்காரனைத் திருத்தவும் இயலவில்லை; காலி பண்ணவும் முடியவில்லை. பயம், நயம், கெஞ்சல் எதுவும் செல்லுபடியாகவில்லை.

பெரிய யோகிகளும், பக்தர்களும் தங்கள் மனசைச் சாமர்த்தியமாகக் கடவுளிடமே தள்ளிவிட முயற்சி செய்திருக்கிறார்கள். ஆதிசங்கர பகவத் பாதாள், சிவானந்தலஹரி ஸ்லோகங்களில் இறைவனைப் பல வகைகளில் நயம்பட வேண்டுகிறார்.

''என்னிடம் ஒரு குரங்கு இருக்கிறது. அங்குமிங்கும் இஷ்டத்துக்கு ஓடித் திரிந்து சேட்டை செய்கிறது. அந்தக் குரங்கை உங்களுக்கே உங்களுக்கென்று இனாமாகக் கொடுத்துவிடுகிறேன். நீங்கள் அதை ஒரு கயிற்றைக் கட்டி எடுத்துகொண்டுவிடுங்கள்'' என்கிறார்.

சிவபிரான் வேட்டைக்காரனாக அர்ஜுனனிடம் வம்பு செய்திருக்கிறார் அல்லவா? அதை நினைவு படுத்தி இன்னொரு ஸ்லோகத்தில், ''நீங்கள் ஒரு சரியான வேட்டைக்காரர். என் மனம் என்னும் காட்டில் பொறாமை, மதி மயக்கம், பேராசை போன்ற பல மிருகங்கள் இருக் கின்றன. அவற்றைத் தாங்கள் அருமையாக வேட்டையாடி மகிழலாம். உங்களுக்குச் சிறந்த பொழுதுபோக்காக இருக்கும். வாருங்கள்; வந்து, என் மனத்தில் வேட்டையாடி மகிழுங்கள்'' என்று அழைக்கிறார்.

நண்பன் நாராயணனிடம், மனத்தைக் கட்டுப்படுத்த முடியவில்லையே என்று ஒரு தினம் அங்கலாய்த்தேன். அவன் என்னை, சேத்துப்பட்டு மேம்பாலத்தில் சுருண்டு படுத்திருந்த ஓர் அழுக்குச் சாமியாரிடம் கூட்டிப் போனான்.அந்தச் சாமியார் என் காதோடு ஒரு வார்த்தை சொல்லிவிட்டு, ''இதுதான் மந்திரம். எந்தப் பிரச்னையானாலும், இதை மனசுக்குள் உச்சரித்துக் கொள். பிரச்னைகள் ஓடிப்போகும்'' என்று ஆசீர்வதித்துவிட்டு, மீண்டும் சுருண்டு படுத்துக்கொண்டு விட்டார்.

அன்றிலிருந்து என்னிடம் ஏற்பட்ட மாற்றத்தைக் கண்டு, மனைவியும் சிநேகிதர்களும் ஆச்சரியப்பட்டனர். ''எப்படி நீங்க இத்தனை அமைதியானவரா ஆகிட்டீங்க? சாம்பாரில் சிறிது உப்புக் குறைந்தால்கூடத் தட்டைத் தள்ளிவிட்டு எழுந்துவிடுவீர்களே? அப்படி என்ன மந்திரம் அது? எனக்கும் சொல்லக்கூடாதா?'' என்று கேட்டாள் மனைவி.

'புறப்பட்டாச்சு' என்பதே அந்த மந்திரம்.

கோபமூட்டும்படி யார் எது சொன்னாலும், 'புறப்பட்டாச்சு' என்று சாமியார் சொல்லிக்கொடுத்தபடி, மனதில் ஒருதரம் சொல்லிக்கொள்வேன். பொங்கிய பாலில் தண்ணீர் தெளித் ததுபோல், கோபம் புஸ்ஸென்று அடங்கிவிடும்.

'ஆமாம். நம்ம ஆயுள் முடிஞ்சு புறப்பட்டாச்சு... இப் பவோ, நாளைக் காலையிலேயோ! அதன்பின் இந்தத் திட்டோ, பாராட்டோ, பட்டமோ, பதவியோ, லாபமோ, நஷ்டமோ வந்தால் நமக்கு என்ன? நம்மை எதுதான் என்ன செய்துவிடமுடியும்? நாம்தான் புறப்பட்டாச்சே!'

நாமெல்லாரும் ஒருநாளைக்குப் புறப்படப் போகிறவர்கள் தான்! அதன்பின் இந்த உடம்பு ஒரு பிடி சாம்பலாகப் போகிறது என்பதை நமக்கு அடிக்கடி நினைவூட்டிக்கொண்டு இருக்கத்தான் நெற்றியில் விபூதி (சாம்பல்) பூசுகிறோம் என்று உபந்யாசகர் ஒருவர் சொன்னார்.

என்றைக்கோ புறப்படப் போகிறோம் என்றிருப்பதைவிட, 'இதோ, புறப்பட்டாச்சு!' என்று நினைத்துக்கொண்டால், குரங்கு மனம் கட்டுக்குள் அடங்கும்; போட்டி, பொறாமை, கோபம், வெறுப்பு போன்ற சகல உபாதைகளும் நீங்கும்.
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Back to top Go down

கலகலப் பக்கம்! - பாக்கியம் ராமசாமி - Page 2 Empty Re: கலகலப் பக்கம்! - பாக்கியம் ராமசாமி

Post by தமிழ்நேசன்1981 Sun Sep 14, 2014 8:34 pm

புராதன காலத்தில், 'ஒண்ணே ஒண்ணு, கண்ணே கண்ணு' என்றெல்லாம் பிரஜைகளை உற்பத்தி செய்கிற வழக்கமில்லை. நிறைய ஆட்கள் தேவையாயிருந்த காலம் அது. இருக்கும் ஒண்ணு ரெண்டையும் பட்டாளத்தில் சேர்த்துக்கொண்டுவிடுவர். ஆகவே, நிறைய பிரஜைகள் தேவைப்பட்டனர்.

நிறையக் குழந்தைகளை உண்டாக்கிய நம் முன்னோரின் பிரதான கஷ்டம் - அத்தனைக் குழந்தைகளுக்கும் என்ன பெயர் வைப்பது என்பதாகவே இருந்திருக்கும். ஏதோ ஏழெட்டு உருப்படிகள் என்றால், அழகாக யோசித்துப் பெயர் வைக்கலாம். ஆனால், சில அரசர்களுக்கு ஐம்பது, நூறு என்று புத்திர- புத்திரிகள் பல மனைவியரால் உருவாக்கப்பட்டிருக்கின்றனர்.

இன்னும் சில அரசர்களின் ஏக பத்தினியே ஏகப்பட்ட புத்திரர்களைப் பெற்றுத் தந்திருக்கிறாள்! மகாபாரத திருதராஷ்டிரனுக்கு நூறு புத்திரர்கள் (மூவுலகையும் ஆளக்கூடியவன் என்ற அர்த்தத்தில், திரிதராஷ்டிரன் என்று வழங்கப்பட்ட அவனது பெயர், பிற்காலத்தில் திருதராஷ்டிரனாக மருவியதாம்!). நூறு பேரில் ஒரு சிலரின் பெயர்களே மக்களுக்குத் தெரியும்.

அப்பா துஷ்டராக இருந்து தொலைத்தால், பிள்ளைகளுக்கும் வில்லத்தனமான பெயர்களையே சூட்டி மகிழ்வார். சாதுவன், இனியோன், அன்பரசன், இன்னமுதன் என்றெல்லாம் துஷ்ட அரசன் பெயர் வைக்கமாட்டான். அசுராசுரன், வீரியராட்சஸூ, சிம்ம கர்ஜனன்... இப்படியான தினுசில் பெயர் தேர்ந்தெடுப்பான். திருதராஷ்டிரன் தன் பிள்ளைகளுக்குச் சூட்டிய பெயர்களை மேலோட்டமாகப் பார்த்தால், திருடாயுதன், துர்பிரகாஷன் எனப் பெரும்பாலானவை பொல்லாத பெயர்களாகவே தெரிகின்றன.

'வக்கிரமாகவோ, விகாரமாகவோ குழந்தைக்குப் பெயர் சூட்டுவதால், அந்தக் குழந்தை வக்கிரமான, விகாரமான பண்புகளையே கொண்டதாகிவிடும்' என்ற கருத்து பலரிடம் இருப்பதால், மங்களகரமான பெயர்களையே சூட்டவே பலரும் விரும்புகிறார்கள். லலிதா சகஸ்ரநாமம், விஷ்ணு சகஸ்ரநாமம், சிவ சகஸ்ரநாமம் போன்ற நூல்களில் நூற்றுக்கணக்கான நல்ல பெயர்கள் கொட்டிக்கிடக்கின்றன. அப்படி இருந்தும், ஒரு சிலர் ஏன் விபரீதமான பெயர்களையே தேர்ந்தெடுக்கிறார்கள்?

மக்களிடம் சத்வ, ரஜ, தமஸ் என மூன்று வகையான குணங்கள் இருக்கின்றன. தாமஸ புத்தி கொண்டவர்கள், உண்ணும் உணவிலும் கீழானவற்றையே தேர்ந்தெடுப்பார்கள் என்கிறது கீதை (வசதியுள்ளவர்களில்கூட 'எனக்கு ரசமோ குழம்போ கொஞ்சம் ஊசியிருந்தால்தான் பிடிக்கும்' என்று சொல்பவர்கள் இருக்கிறார்களே!).

யாதயாமம் கதரஸம் பூதி பர்யுஷிதம் சயது I
உச்சிஷ்டமபி சாமேத்யம் போஜனம் தாமஸப்ரியம் II

யாமம் கழிந்த (மூன்று மணி நேரத்துக்கு முன் சமைக்கப்பட்ட) சுவையற்ற, துர்நாற்றமான, பழைய, எச்சிலான, தூய்மையற்ற உணவு, தமோ குணத்தாருக்குப் பிரியமானது என்கிறது கீதை.
பெயர்களை உயர்வாக வைப்பதற்குக் காரணம் - அந்தப் பெயருக்குண்டான உயர்ந்த பண்புகள் அந்தக் குழந்தைக்கும் ஏற்படும் என்பதால்தான். ஆகவே வைக்கிற பெயரை, துஷ்டத்தனமான பெயராக வைக்காமல், உயர்ந்த கருத்துள்ள பெயராகத் தேர்ந்தெடுத்து வைப்பது நல்லது.
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Back to top Go down

கலகலப் பக்கம்! - பாக்கியம் ராமசாமி - Page 2 Empty Re: கலகலப் பக்கம்! - பாக்கியம் ராமசாமி

Post by தமிழ்நேசன்1981 Sun Sep 14, 2014 8:38 pm

என்னை ஏன் பெத்தே?' என்று அடிக்கடி கேட்கிறாய். இதனை மறுக்கிறேன். நீ என் பிள்ளை அல்ல; கடவுளின் பிள்ளை. கடவுள், உன்னை என்னிடம் தந்துள்ளார். அப்படித் தருகிறபோது, உன்னைப் பராமரிக்கும் செலவுக்குக் கொஞ்சம் பொருளையும் தந்தார். சிலருக்கு மட்டும், குழந்தையை வளர்க்க தாராளமாகப் பொருள் தந்துள்ளார். ஆனால், எனக்குச் சொற்பமாகவே தந்திருக்கிறார்.

எனவே, அந்த பட்ஜெட்டில்தான் உன்னை வளர்த்து வருகிறேன். இதில் நீ கேட்கும் பைக், லேப்டாப் மற்றும் இதர வசதிகளை என்னால் செய்து தர இயலாது.

மதிப்பு மிக்க பரிசுப் பொருளைப் பெற்றவர்கள், அதனை அக்கறையுடன் பராமரிப்பார்கள். நீயும்கூட கல்லூரியில், டென்னிஸ் சாம்பியன்ஷிப்பில் உனக்குக் கிடைத்த கோப்பையைத் துடைத்து வைத்துப் போற்றுகிறாய், அல்லவா?! கோப்பை, உனக்குப் பெருமை; அதுபோல், நீ எனக்குப் பெருமை! ஆகவே, 'ஏன் பெற்றாய்?' என்று என்னைக் கேட்பதைவிட, ''ஏன் தந்தாய்?' என்று கடவுளைக் கேள்.

திருமணமான அனைவருக்குமே குழந்தை பாக்கியம் கிடைத்துவிடுவதில்லை. நமது தெருவிலேயே ஒரு ஃபெர்டிலிடி சென்டர் (Fertility Centre) உள்ளது. குழந்தைப் பேறு இல்லாதவர்கள், கருத்தரிக்க உதவி செய்யும் மருத்துவ நிலையம் இது!

இங்கே, ஏக்கத்துடன் வரும் தம்பதிகள் ஏராளம். அவர்களையெல்லாம் பார்க்கும்போதுதான், 'குழந்தை பாக்கியம் என்பது மனிதனாகச் சம்பாதித்துக்கொள்வது அல்ல; மனிதச் செயலுக்கு அப்பாற்பட்டது அது; கடவுளே கருணையுடன் வழங்கும் பரிசு அது' என்பது புரிகிறது.
'நான் பெற்றேன்' என்று சொல்வது அகங்காரம்; கடவுள் தந்தார் என்பதே சரியான வார்த்தை. கடவுள் என்னிடம் தந்தார் என்பதைவிட, கடவுள் என்னிடம் ஒப்படைத்தார் என்பதே மிகச் சரியாக இருக்கும்!

கடவுள் ஒன்றும் சும்மா ஒப்படைக்கவில்லை. அதை வைத்துக் காப்பாற்ற, கொஞ்சம் பொருளையும் தந்துள்ளார். இதில், முன்னேபின்னே உண்டுதான்! ஆனால்... ஏன் இப்படி? இதையும் கடவுளிடமே கேள்.
'கடவுளைக் காட்டுங்கள்' என்று விவேகானந்தர் கேட்டதற்கு, ஸ்ரீராமகிருஷ்ணர் என்ன சொன்னார்? ''நீயே வேண்டு! 'கடவுளே! உம்மை எனக்குக் காட்டி அருளுங்கள்' என மன்றாடு!'' என்றாரில்லையா? அதேபோல், 'என்னை இவரிடம் ஏன் ஒப்படைத்தீர்கள்? என்னைத் தந்ததுதான் தந்தீர்களே, கூடவே... நான் சீரும் சிறப்புமாக வளர்வதற்கு ஏராளமான செல்வத்தை இவருக்கு ஏன் தரவில்லை?' என்று கேள். புலம்பு. மன்றாடு! ஆனால், 'வறுமை நிலையில் என்னை ஏன் பெற்றாய்?' என்று என்னைக் கேட்காதே.

உன்னை நான் பெற்றெடுக்கவில்லை. 'என்னை ஏன் பிறப்பித்தாய்?' என்று கேட்டு, தெய்வத்துக்கு நிகரான புகழை எனக்குத் தராதே!

கருணை எனும் வார்த்தையைக் கவனி. அவனது கருணையில் 'கரு'வை வைத்திருக்கிறான். எவருடைய வீட்டில் நீ வளரவேண்டும் என்பது, அவனது சித்தம்!

'எல்லாம் அவன் போட்ட பிச்சை' என்கிறோம். பிச்சையையும் பிச்சையிட்டவரையும் விமர்சிக்கக்கூடாது. மனிதர் போடுவது பிச்சை; அதையே கடவுள் தந்தால், பிரசாதம்!
கடவுள் தந்த பிரசாதத்தை, சிப்பந்தி விநியோகிக்கிறார். அதற்காக அந்தச் சிப்பந்தி, தர்மகர்த்தா ஆகிவிடுவாரா? இல்லை; அவர் வெறும் கருவிதான். அதேபோல், நம் வீடு இல்லையெனில், வேறு ஏதோ வீட்டில் நீ பிறந்திருப்பாய். ஆகவே, பிரசாதம் யார் கையில் விழவேண்டும் எனக் கடவுளே நிர்ணயிக்கிறார்; அவரே வழங்குகிறார்!

இன்னொரு முறை என்னிடம், 'என்னை ஏன் பெற்றாய்?' என்று கேட்காதே. நீ என் குழந்தை அல்ல. புதுக்கோட்டை ஸ்ரீசாந்தானந்த சுவாமிகள் கூறியபடி, 'நீ கடவுளின் குழந்தை. மறந்துவிடாதே!'
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Back to top Go down

கலகலப் பக்கம்! - பாக்கியம் ராமசாமி - Page 2 Empty Re: கலகலப் பக்கம்! - பாக்கியம் ராமசாமி

Post by தமிழ்நேசன்1981 Sun Sep 14, 2014 8:39 pm

திருச்சிக்குப் பக்கத்தில், வேதம்பட்டு என்று ஒரு சிறிய கிராமம். இயற்கை எழிலும், தெய்வீக அழகும் கொழிக்கும் அந்தக் கிராமத்தில், சிவன் கோயிலை ஒட்டி, ஆஸ்ரமம் போன்ற இடம். அங்கே நாலைந்து கீற்றுக் கொட்டகைகள்; தென் னந்தட்டிகள்தான் சுற்றுச் சுவர்.

அது ஒரு வேத பாடசாலை. கிருஷ்ணமூர்த்தி கனபாடிகள் என்கிற பெரியவரின் முயற்சியால் உருவான அந்த வேத பாடசாலையில் சுமார் 40 சிறுவர்கள் வேதாப்பியாசம் பயின்று வந்தனர். உணவு, உடை, உறைவிடம் எல்லாம் பாடசாலை யிலேயேதான்! அதை மிகவும் சிரத்தையாக நடத்தி வந்தார் கிருஷ்ணமூர்த்தி கனபாடிகள்.

சென்ற வருஷம், நவராத்திரி முடிந்த கையோடு, எங்கள் நண்பர்கள் குழுவில் சுமார் 20 பேர், ஒரு எக்ஸ்கர்ஷன் மாதிரி கிளம்பி, வேதம்பட்டுக்குச் சென்றோம். எங்கள் குழுவில் சிகரெட் பிடிப்பவர்களும், மது மாமிசம் சாப்பிடுகிறவர்களும் அதிகம் இருந்தனர். ஆனால், எல்லோருமே அந்தப் பாட சாலைக்குத் தாராளமாகப் பண உதவி செய்பவர்கள்; மனமுவந்து நன்கொடை தருபவர்கள்.

முன்கூட்டியே சொல்லி வைத்திருந்ததால், கனபாடிகள் வேத பாடசாலையிலேயே எங்களுக்குச் சிற்றுண்டி, உணவு எல்லாவற்றுக்கும் தகுந்த ஏற்பாடுகள் செய்திருந்தார்.

வேதம் பயிலும் சிறுவர்களின் பால் வடியும் முகங்களைப் பார்ப்பதே பெரிய புண்ணியம் என்ற எண்ணம் ஏற்பட்டது. அத்தனை சிறுவர்களின் களையான முகங்களிலும், வேத மாதாவின் அன்பும் பாசமும் பிரியமும் பிரதிபலித்தது. சிறுவர்களிடம் தெய்வீகம் சொட்டியது.

ஆனால், கடலை சாப்பிடும்போது, இடையில் ஒரு சொத்தைக் கடலை வாயில் தட்டுப்பட்டதுபோல், நெருடலான நிகழ்ச்சி ஒன்று என் கண்ணில் பட்டது. வேறு யாரும் அந்தக் காட்சியைக் கவனித்ததாகவோ, அது அவர்களைப் பாதித்ததாகவோ தெரியவில்லை.

இரவு 7 மணி; அனைவரும் பலகாரம் சாப்பிட்டு முடித்தோம். உடனே, மாணவர்கள் சுறுசுறுப்பாக எங்கள் எச்சில் இலைகளை அப்புறப்படுத்தித் தரையைச் சுத்தம் செய்தனர். டம்ளர்களைக் கழுவி அடுக்கி வைத்தனர்.

இந்தக் காட்சிதான் என் கண்களைக் கீறியது. சிறுவர்கள் தாங்கள் சாப்பிட்ட எச்சில் இலைகளை எடுக்கட்டும். ஆனால், வெளியிலிருந்து வரும் விசிட்டர்கள் சாப்பிட்ட எச்சில் இலைகளைக்கூட வேதம் படிக்கும் மாணவர்களையே விட்டு எடுக்கச் சொல்லுவது சரியல்ல என்று எனக்குத் தோன்றியது.

இது பற்றிக் கனபாடிகளைக் கேட்க எனக்குத் தைரியமில்லை. ஒரு குட்டிப் பையனின் வாயைக் கிளறினேன். ''ஏன் அம்பி, நீங்க வேதமெல்லாம் கத்துக்கறீங்க. ஆனா, இப்படி ஊரார் எச்சில் இலைகளை எடுக்கலாமோ? அநாசாரம் இல்லையோ?'' என்றேன்.

அந்தச் சுட்டிப் பயல் அழகாகப் புன்னகைத்தான். ''ஒரு ஸ்லோ கம் சொல்லட்டுமா?'' என்றான். ''சொல்லு, சொல்லு,'' என்றேன்.

''வித்யாவினயஸம்பன்னே ப்ராஹ்மணே கவி ஹஸ்தினி./
சுனி சைவ ச்வபாகே ச பண்டிதா ஸமதர்சின //
நீங்க கேட்ட கேள்விக்கு இந்த ஸ்லோகம்தான் பதில்!'' என்றான் அந்தச் சிறுவன்.

ஊர் திரும்பிய பிறகு, கீதைப் புஸ்தகத்தைப் பார்த்து, அந்த ஸ்லோகத்தின் அர்த்ததைத் தெரிந்துகொண்டேன்.

'வேதம் கற்றுத் தெளிந்தவனுக்கு அனைவரிடத்திலும் சம புத்தியே இருக்கும். ஒரு பிராமணனிடமோ, ஒரு யானையிடமோ, ஒரு பசு விடமோ, நாயிடமோ, நாயைத் தின்னும் புலையனிடமோ அவனுக்குச் சம திருஷ்டிதான் இருக்கும். அனைவரையும், அனைத்தையும் அவன் சமமாகத்தான் பாவிப்பான்!' என்பதே அதன் பொருள்.

'வேதம் கற்பவர் சாப்பிட்ட எச்சில் உசத்தி; மற்றவர் சாப்பிட்ட எச்சில் மட்டமா? அதைச் சுத்தப்படுத்தியது தவறா?' என்று அந்தச் சிறுவன் சிரித்தபடியே கேட்பதுபோல் இருந்தது எனக்கு.
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Back to top Go down

கலகலப் பக்கம்! - பாக்கியம் ராமசாமி - Page 2 Empty Re: கலகலப் பக்கம்! - பாக்கியம் ராமசாமி

Post by தமிழ்நேசன்1981 Sun Sep 14, 2014 8:41 pm

எனக்குத் தெரிந்த ஒரு சாஸ்திரி மாமாவுக்கு ஏழெட்டுக் குழந்தைகள். துரதிர்ஷ்டவசமாக, அத்தனையுமே ஆண் குழந்தைகள். வீட்டைப் பார்த்தால், குண்டு விழுந்த இடம் போல் இருக்கும். எல்லாச் சாமான்களும் போட்டது போட்டபடி கிடக்கும்!

எட்டு தடிப்பசங்களும் (கணவருடன் சேர்த்து ஒன்பது) துரும்பைக்கூட நகர்த்தமாட்டார்கள். வேலைக்காரி பெருக்கும்போது, சில விநாடிகளுக்குக் கால்களைச் சில அங்குல உயரம் தூக்கி வைத்துக்கொள்வார்களே தவிர, வேறிடம் நகருவதற்கு அத்தனைச் சோம்பேறித்தனம்!

சாஸ்திரி மாமாவின் பார்யாளுக்குக் கனமான சரீரம். எந்தச் சிறு காரியத்தையும் பிறரது உதவியின்றி, அவளால் செய்யமுடியாது. குனிந்து தரையிலிருந்து ஒரு டம்ளரை எடுத்துத் தேய்க்கப் போட்டாள் எனில், அன்றைய தமிழ், ஆங்கில தினசரிகளில், கொட்டை எழுத்தில் இந்தச் செய்தி வெளியாகிவிடும்!

மதிய வேளையில், அந்தச் சின்ன கூடத்தில், பூதாகரமான தனது ஆகிருதியைக் கிடத்திப் படுத்திருப்பாள். அவளைச் சுற்றி காபி டம்ளர்கள், டபராக்கள், அரிவாள்மணை, காய்கறிகள், பாதி சலித்த மாவு, பறந்தும் விரிந்தும் கிடக்கிற அன்றைய தினசரியின் ஏடுகள், துணிமணிகள், சீப்பு, எண்ணெய், கண்ணாடி, ஒரு பிளாஸ்டிக் வாளியில் உலர்த்தவேண்டிய ஈரப் புடவைகள் என ஆங்காங்கே விழுந்து கிடக்கும்.

டைனிங் டேபிள் அதைவிடக் கோரம். கிட்டத்தட்ட சமையலறையே அது தானோ என்பதுபோல் பாத்திரங்கள், மளிகைச் சாமான்கள் நிரம்பியிருக்க, டூத்பிரஷ்கள், பேஸ்ட், ஷூக்கள், சாக்ஸூகள், நவீன லேப்டாப், ஆறி அவலாகி ஏடு தட்டின காபி அரை டம்ளர் எனக் கிடக்கும்.

ஆனால், அன்றைக்கு எனக்கு அதிர்ச்சி! டைனிங் டேபிள் பளிச்சென்று சுத்தமாக இருந்தது.
ஆச்சரியமும் குழப்பமுமாக சாஸ்திரி மாமாவை ஏறிட்டேன். அவரும் என் பார்வையில் உள்ள கேள்வியைப் புரிந்துகொண்டவராய், சிரித்தபடி, ''சின்ன டெக்னிக்தான்! இன்னும் பத்து நாள் கழித்துப் பாருங்கள். வீடே சுத்தமாக இருக்கும்'' என்றார். அவரே தொடர்ந்தார்... ''எடுத்த எடுப்பில் இந்த வீடு பூராவையும் சுத்தமா வைச்சுக்கறது சாத்தியம் இல்லேன்னு தோணித்து. அதான், அட்லீஸ்ட் இந்தச் சின்ன டேபிளையாவது சுத்தமா வைச்சுக்கலாமேனு நினைச்சேன். சாப்பிடுற நேரம் தவிர, இந்த மேஜையில் ஒரு டம்ளர் இருந்தாக்கூட, தூக்கிக் கீழே கடாசிடுவேன். அதனால, பசங்களும் சம்சாரமும் இப்ப மேஜை மேல எதையும் வைக்கிறது இல்லை. டி.வி. அலமாரியிலயும் இதே டெக்னிக்கை அனுசரிக்கிறேன்'' என்றார்.

மனத்தை அடக்கும் வித்தையை, கீதையில் பகவான் விவரிக்கிறார்... 'ஸனை ஸனைருபரமேத் புத்யா த்ருதிஹீதயா... ஆத்மஸம்ஸ்தும் மன க்ருத்வா நகிஞ்சதிபி சிந்தயேத்'

தைரியத்துடன் கூடிய புத்தியால், மனத்தை மெள்ள மெள்ள (ஸனை ஸனை) அடக்கவேண்டும் என்கிறார் பகவான். 'மெள்ள மெள்ள' என்பதை அனுசரித்துப் பார்த்தால், எந்தக் கடினமான பழக்கத்தையும் நம்மால் மாற்றிக்கொள்ள முடியும்; திருத்திக்கொள்ள முடியும்.

ஒரு கெட்ட பழக்கத்திலிருந்து மீளுவதோ, அல்லது நல்ல பழக்கத்துக்கு ஆட்படுவதோ, ஒரே நாளில் வந்துவிடாது. Eat a little, sleep a little, enjoy a little, study a little, meditate a little என்று போதிக்கிறார் ரிஷிகேச சிவானந்த மகரிஷி. 'எறும்பு ஊரக் கல்லும் தேயும்' என்பது பழமொழி.

புத்திசாலி மாணவர்கள், இன்றைக்கு இன்னின்ன பகுதிகள் என சிறிது சிறிதாகப் பகுத்து வைத்துக்கொண்டு படிக்கிறார்கள்; வெற்றி அடைகிறார்கள்.
வாழ்க்கையில் வெற்றி பெறவும் இதே டெக்னிக் உதவும்!
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Back to top Go down

கலகலப் பக்கம்! - பாக்கியம் ராமசாமி - Page 2 Empty Re: கலகலப் பக்கம்! - பாக்கியம் ராமசாமி

Post by தமிழ்நேசன்1981 Sun Sep 14, 2014 8:43 pm

ஒருமுறை, ரயில்வே பிளாட்பாரம் ஒன்றில் சில மாடுகள் அசைபோட்டபடி படுத்திருந்ததைப் பார்த்தேன்.

எப்போதும் எதையேனும் மெல்லுவது, மேய்வது, அசை போடுவது என்பது மாடுகளுக்கு மாத்திரமல்ல; நமக்கும் வாழ்க்கையுடன் ஒட்டிய வழக்கமாகிவிட்டது. வாயில் எதையாவது போட்டு மென்றுகொண்டிருக்கவேண்டும் சிலருக்கு! அதிலும் ஓவியர்கள், எழுத்தாளர்கள், கவிஞர் கள் ஆகியோர் தங்களது கற்பனைக்குச் செலவிடும் நேரத்தைவிட, கிண்ணத்தில் வேர்க்கடலை, காராபூந்தி, சுண்டல் என வைத்துக் கொரிக்கின்ற நேரமே அதிகம்.

பெரும்பாலான விளையாட்டு வீரர்களிடம் சூயிங்கம் மெல்லும் பழக்கம் இருப்பதை டி.வி-யில் க்ளோசப் காட்சிகளில் பார்க்கிறோம். சூயிங்கம் மெல்லுவதற்கு பல வருடங்களுக்கு முன்பே தடை விதித்தது சிங்கப்பூர். உடலுக்குக் கெடுதல், அப்படி இப்படி... எனும் குற்றச்சாட்டு காரணமல்ல. அதன் இசுக்குப் பிசுக்குத் தன்மை மிகப் பெரிய உபத்திரவமான சமாசாரம் என்பதால்தான் இந்தத் தடை!

பெரிய அங்காடிகளில் விற் பனைப் பொருட்கள்மீது விலைக் கோடு அச்சிடப்பட்டிருக்கும், அல் லவா?! அவை தெளிவாக இருந் தால்தான், என்ன விலை என்பதை எந்திரத்தால் கணிக்கமுடியும். சூயிங்கம் மெல்லும் சில குறும்புக்கார இளைஞர்கள், நைஸாக தங்கள் இசுக்குப் பிசுக்கை விலைக்கோடுகளின்மீது ஈஷிவிடுவார்கள். இப்படி ஈஷிவிட்டால், எடுப்பது ஈஸியல்ல! தியேட்டர்களில் நாற்காலிக் கைகளில் கையை ஊன்றினால், அவ்வளவுதான்... ஒரே இசுக் பிசுக்!
பிசின் தொல்லை இல்லாத சூயிங்கம்மைக் கண்டு பிடிக்கும் முயற்சியில் பல கம்பெனிகள் இப்போது முயன்றுகொண்டிருப்பதாகக் கேள்வி!

உண்மையில், சூயிங்கம் கெடுதலா? இல்லவே இல்லை. இதனால் பல்லுக்கு ஏராளமான நன்மையே உண்டு என்று பட்டியலிடுகிறது ஒரு புள்ளிவிவரம்.

1. சூயிங்கம் மெல்லுவது, பற்களுக்கும் அவற்றைப் பற்றியிருக்கும் ஈறுகளுக்கும் உறுதியை அளிக்கிறது.

2. அடிக்கடி சூயிங்கம் மெல்லுவதால், பற்களின் மேல் படரும் அழுக்கு உட னுக்குடன் அகற்றப்படுவதால், கிருமித் தொற்று ஏற்படாமல் இருக்க ஏதுவாகிறது.

3. நொறுக்குத் தீனி தின்பதற்குச் சரி யான மாற்று சூயிங்கம் மெல்லுவதுதான். கண்ட நேரத்தில் கண்ட தீனியை வாயில் போட்டுத் தின்பதால், பல் இடுக்குகளில் மேற்படி தீனி சிக்கித் தங்கிவிடுவது தவிர்க்கப்படுகிறது. தீனி தின்னும் உணர்ச்சி ஏற்படுவதை சூயிங்கம் தடுக்கிறது.

4. புகை பிடிக்கவேண்டும் என்கிற உந்துதலைக்கூட சிகரெட் பிரியர்களி டமிருந்து நீக்கிவிடுகிறது சூயிங்கம்.

அந்தக் காலத்தில் பெரியவர்கள் 'கிருஷ்ணா ராமா என்று வாயை மூடிக் கொண்டு சும்மா இரு' என்பார்கள். 'சூயிங்கம் மெல்லுவதற்குச் சமமாகுமா கிருஷ்ணா ராமா ஜபம்?' என்று விஷயம் தெரியாத சிலர் கேட்கக்கூடும்.

ஆனால் பெரியவர்களோ, 'ஓ ராமா, நீ நாம எந்த ருசிரா' என்கின்றனர். ராம நாமத்தை உச்சரித்தாலே, அது ஒரு ருசி என்கிறார்கள். அந்த ருசியை அவர்கள் அனுபவித்திருப்பதால் அப்படிக் கூறுகிறார் கள். 'திருப்புகழைப் பாடப் பாட வாய் மணக்கும்' என்று சும்மாவா சொன்னார்கள்!
சூயிங்கத்தை சதா சர்வ காலமும் மெல்லுவதைப்போல இறைநாமத்தையும் நமது வாய் சதா உச்சரித்துக்கொண்டு இருந்தால், பக்தி ருசியையும் அனுபவிக் கலாம்; நொறுக்குத் தீனி பழக்கத்தையும் துறக்கலாம்.

இன்று முதல், தினமும் 1008 நாமங் கள் ஜபிப்பது என முயன்றுதான் பாருங்களேன்!
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Back to top Go down

கலகலப் பக்கம்! - பாக்கியம் ராமசாமி - Page 2 Empty Re: கலகலப் பக்கம்! - பாக்கியம் ராமசாமி

Post by தமிழ்நேசன்1981 Sun Sep 14, 2014 8:44 pm

நண்பன் நாராயணனின் பேரன் ரகு, கொல்கத்தா சென்றிருந்தான். அவன் டேபிள் டென்னிஸ் விளையாட்டில் கெட்டிக் காரன். அவன் வீட்டு அலமாரியில் ஏராள மான வெற்றிக் கோப்பைகளை அடுக்கி வைத்திருப்பான். இத்தனைக்கும் வயது பன்னிரண்டுக்குள்தான்!
டென்னிஸ் பந்தயங்களில் ஒரு பாயின்ட் கிடைத்தவுடன், வெற்றி பெற்ற ஆட்டக்காரர் செய்யும் சேட்டையைப் பார்த்திருப்பீர்கள். எதிரியை நசுக்கிப் பொடிப் பொடியாக்கிவிட்டது போல் கையைக் குத்தி அபிநயிப்பார்கள். இதுவாவது பரவாயில்லை; கால்பந்தாட்டக் களிப்புதான் பரம பயங்கரம். கோல் போட்ட வீரன் பைத்தியம் மாதிரி நினைத்த திசையில் எல்லாம் ஓடுவான். அணியின் மற்ற வீரர்கள் அவனைத் துரத்திச் சென்று (பாராட்டத்தான்), கீழே தள்ளி, மல்லாத்தி, அவனைப் பஞ்சாமிர்தம் செய்துவிடுவார்கள். வெற்றியை இத்தனை உணர்ச்சிவசப்பட்டு பயங்கரமாகக் கொண்டாட வேண்டுமா?

இப்படியெல்லாம் ரகு ஒரு நாளும் செய்து நான் பார்த்ததில்லை.
சரி, கொல்கத்தா விஷயத்துக்கு வருகி றேன். அங்கே ரகு கலந்துகொண்ட பந்த யத்தில் அவனுக்கு வெற்றி கிட்டவில்லை. அங்கு நடந்த பல பந்தயங்களில் வென் றாலும், இறுதிப் பந்தயத்தில் தோற்று, ரன்னர்-அப் இடமே கிடைத்தது.
ரகு விம்மி விம்மி அழுதுவிட்டானாம். அவனைத் தேற்றுவதற்கு மிகவும் சிரமப்பட்டுவிட்டார்களாம். சென்னை திரும்பிய பின்பும், அவன் சோகம் தணியவில்லை. யாரிடமும் ஒரு வார்த்தை பேசவில்லை; சாப்பிடவில்லை. அவனைச் சமாதானப்படுத்த நாராயணன் என்னைக் கூப்பிட்டிருந்தான். சென்றிருந்தேன்.
ரகுவை அணைத்துக்கொண்டு பக்குவமாகக் கூறினேன்... ''ரகு! கண் ணைத் திறந்து, எதிரேயுள்ள அலமாரியைப் பார். பந்தயங்களில் நீ வென்ற கோப்பைகளைப் பார். எண்ணினால் நூறுக்கு மேல் இருக்கும். இத்தனை வெற்றிகள் குறித்து நீ கும்மாளமிட்டதில்லை. ஆனால், ஒரே ஒரு தோல்வியில் துவண்டுவிட்டாய். தோல்வியின்போது நீ அடைந்த கடந்த கால வெற்றிகளை எண்ணிப் பார்க்கவேண்டும். அதை நினைவுபடுத் தத்தான் பரிசுக் கோப்பைகள் தரப்படுகின்றன. கண்ணாடி அலமாரியில் அலங்காரமாக வைத்து, வெறுமே அவற்றை அழகு பார்க்க அல்ல!
சுழற்கோப்பை (ரோலிங் கப்) வழங்குகிறார்கள். ஒரே கோப்பைதான். 'இந்த ஆண்டு சுழற்கோப்பை என்னிடம் உள்ளதால், எப்போதும் அது என் அணியிடமே இருக்கும்; அது என்னுடையது' என்று யாரும் உரிமை கோர முடியாது. அடுத்த ஆண்டு, வேறு அணி திறமையாக ஆடினால், அந்த அணிக்கு இந்த வெற்றிக் கோப்பை சென்றுவிடும்.
ஸூக துக்கே ஸமே க்ருத்வா லாபாலாபௌ ஜயாஜயௌ
ததோ யுத்தாய யுஜ்யஸ்வ நைவம் பாப-மவாப்ஸ்யஸி
'சுகமும் துக்கமும், லாபமும் நஷ்டமும், வெற்றியும் தோல்வியும் சமமென்று நினைத்து, போருக்காகவே போர் செய்' என்கிறது கீதை. விளையாடுவது, விளையாட்டுக்காகவே! அதனுடைய வெற்றி தோல்வி நம்மைப் பாதித்துவிடக்கூடாது!''
ரகு பொறுமையாகக் கேட்டுக்கொண்டான். கண்களை அழுந்தத் துடைத் துக் கொண்டான். தெளிவு பிறந்ததுபோலும்! ''ஸாரி அங்கிள்! நான் கொஞ்சம் பாலன்ஸ் தவறிட்டேன்'' என்றான் பெரிய மனுஷன்போல.
தன்னை உணர்ந்துகொள்ளும் எவனும் பெரிய மனுஷன்தானே!
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Back to top Go down

கலகலப் பக்கம்! - பாக்கியம் ராமசாமி - Page 2 Empty Re: கலகலப் பக்கம்! - பாக்கியம் ராமசாமி

Post by தமிழ்நேசன்1981 Sun Sep 14, 2014 8:44 pm

ருத்ராட்சப் பெரியப்பாவின் கிராமத்துக்குப் போவதென்றால், எனக்கு ரொம்பப் பிடிக்கும். அவர் ஒரு கிளி வளர்த்து வந்தார். அதன் பெயர் சிவ பிரேமி. அங்கு போனால், அந்தச் சுட்டிக் கிளியை நாள் பூரா பார்த்துக் கொண்டே இருப்பேன். 'சிவக் கண்ணு’ என்று பெரியப்பா கூப்பிட்டால், 'வந்துட்டேன்... வந்துட்டேன்’ என்று அது மழலையாய்க் குரல் கொடுக்கும்.

ருத்ராட்சப் பெரியப்பா, கோயில் ஒன்றில் பிரதம குருக்களாக இருந்தார். உடம்பில் எங்கெங்கே ஆபரணங்கள் அணியமுடியுமோ, அங்கெல்லாம் ஏதாவது ஒரு நகையை மாட்டிக்கொண்டு ஜொலிப்பார். போதாக்குறைக்கு, கழுத்து நிறைய விதவிதமான ருத்ராட்ச மாலைகள். 'இது அந்த சதஸில் தந்தது, இது பெரியவா தந்தது, இது நேபாளத்தில் வாங்கினது, இது வாரியார் சாமி தந்தது’ என்று ஒவ்வொரு மாலைக்கும் வரலாறு சொல்லிச் சிலிர்ப்பார். தவிர, பூஜை அலமாரியில் சின்னச் சின்ன பேழைகளில் அவர் சேகரித்து வைத்திருக்கும் அபூர்வ ருத்ராட்சங்களையும் காட்டி, ''இது த்ரிபாஹி. மிக அபூர்வம். இது கௌரி ருத்ராட்சம். இது கௌரி சங்கர ருத்ராட்சம்...'' என்று பெருமைப்படுவதில் சளைக்கமாட் டார். இத்தனைக்கும் மத்தியில், கிளி மீது அளவற்ற பாசம் அவருக்கு!
பெரியப்பா கழுத்தில் உள்ள ருத்ராட்ச மாலைகள் எனக்கு வியப்பூட்டும். ''ஒரு டஜனுக்கும் மேலே இருக்கும் போலிருக்கே, உங்களுக்குக் கழுத்து வலிக்காதா பெரி யப்பா?!'' என்று கேட்டால், ''சுமக்கிறது ஒரு சுகம்டா!'' என்பார்.
தான் அணிவது போதாதென்று தன் செல்லக் கிளியின் கழுத்திலும் குட்டிக் குட்டி ருத்ராட்ச மாலைகள் போட்டு வைத்திருப்பார். கடந்த முறை ஊருக்குச் சென்றபோது, ''அதனுடைய முகத்தைப் பார். புதுசா ஒரு ருத்ராட்ச மாலை அதன் கழுத்தில் போட்டிருக்கேனில்லையா... அந்தப் பெருமை பிடிபடவில்லை என்பது அதன் கண் ணிலேயே தெரிகிறதே, கவனித்தாயா?'' என்று கேட்டார்.
'தெரிகிறது, தெரிகிறது’ என்று சொல்லி வைத்தேன்.
பெரியப்பாவின் ஊருக்கு ஒருமுறை, சாந்தானந்த சுவாமிகள் வந்து முகாமிட்டிருந்தார். அவரைத் தன் வீட்டுக்கு அழைத்தார் பெரியப்பா. சுவாமிகள் நுழைந்ததும், அந்த சிவக்கண்ணு கிளி, 'வாங்கோ வாங்கோ’ என்று கூவி வரவேற்றது (அப்படிப் பழக்கி வைத்திருந்தார்).
சுவாமிகள் கிளியைப் பார்த்துவிட்டு, ''அட! உன் கிளி கூட ருத்ராட்சம் போட்டுண்டிருக்கே! ருத்ராட்சப் பூனை தெரியும். ருத்ராட்சக் கிளியை இப்பத்தான் முதன்முதலா பார்க்கறேன்'' என்றார்.
ருத்ராட்சக் கிளி வீடெங்கும் தத்தித் தத்தி நடந்தபடியும், மெள்ளப் பறந்தபடியும் இருந்தது.
''நான் கிளியைக் கூண்டில் அடைக்கிறது இல்லை. ஆனாலும் அது பறந்து வெளியே போகறதில்லை'' என்று பெருமிதத்துடன் சொன்னார் பெரியப்பா.
''போகாது'' என்று சிரித்தார் சுவாமி. ''எப்படிப் போகும்? இத்தனை ருத்ராட்சங்கள் போட்டு, நீதான் அதைப் பறக்க ஒட்டாமல் கனம் பண்ணிட்டியே..! கிளிக்கு மட்டுமில்லடா, உனக்கும் சேர்த்துத்தான் சொல்றேன்'' என்றார்.
மின்சாரம் தாக்கினாற்போல் பெரியப்பா திகைத்தார். சுவாமிகளின் காலில் சாஷ்டாங்கமாக விழுந்தார். 'மன்னிக்கணும் சுவாமி’ என்று குலுங்கிக் குலுங்கி அழுதார்.
''உயிர்களுக்கு, அவை வாழ என்ன அத்தியாவசியமோ, அவற்றைக் கடவுள் தந்தே அனுப்புகிறார். அவற்றை மட்டும் அந்த உயிர் சுமந்தாலே போதும்- ஒரு பறவை தன் இரண்டு சிறகுகளைச் சுமப்பதுபோல! பாவங்கள் மட்டுமல்ல, புண்ணியங்களும் ஒரு வகைச் சுமையே! 'ஈசனோடாயினும் ஆசைகள் அறுமின்’ என்கிறார் திருமூலர். ஆசைகளை அறுப்பது எப்படி? அதற்கு வள்ளுவர் ஓர் உபாயம் சொல்கிறார்...
பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்
பற்றுக பற்று விடற்கு
எப்படி உத்தேசமோ?'' என்று கேட்டுச் சிரித்தார் சுவாமிகள்.
பற்றுகளையெல்லாம் உதறுவதுபோல பெரியப்பாவின் முதுகும் உடம்பும் குலுங்கிக்கொண்டு இருந்தன.
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Back to top Go down

கலகலப் பக்கம்! - பாக்கியம் ராமசாமி - Page 2 Empty Re: கலகலப் பக்கம்! - பாக்கியம் ராமசாமி

Post by தமிழ்நேசன்1981 Sun Sep 14, 2014 8:44 pm

நம்ம ஆள் ஒருத்தர், கோயிலுக்கு வர்றதுன்னா ரொம்பச் சங்கடப்படுவார். ஆனா, நாத்திகர் இல்லை அவர். தெய்வத்தை இகழமாட்டார். விபூதி இட்டுக்கொள்வார். ஆனால், அவரைக் கட்டாயப் படுத்தி அழைத்து வந்தாலும், கோயில் வாசல் வரை வருவாரே தவிர, உள்ளே வரமாட்டார். வெளியிலேயே காத்திருப்பார். ''உள்ளே வர உமக்கென்னய்யா கேடு? கடவுள் பக்தர்தானே நீர்?'' என்று அவரைக் கோபித்துக்கொண்டேன் ஒருநாள்.
நண்பர் சொன்னார்... ''பகவான், என்னை ஒரு பக்தனாகவே ஏத்துக்கமாட்டார். நாயன்மார்கள், ஆழ்வார்கள் என நாட்டில் எத்தனையோ பக்தர்கள், அடியார்கள் தோன்றியிருக்கிறார்கள். பகவானைக் காணக் கதறியிருக்கிறார்கள். கொடியவர்களால் சித்ரவதைப்பட்டிருக்கிறார்கள். தங்கள் உடல் பொருள் ஆவி அனைத்தையும் தியாகம் செய்திருக்கிறார்கள். அவர்கள் அல்லவா பக்தர்கள்! கோயிலுக்குப் போய் ஐந்து நிமிஷம் கண்ணை மூடிக் கொண்டு தெய்வத்தின் முன் நின்றால், நானும் பக்தனாகிவிடுவேனா என்ன?''

நண்பரின் வாதம் என்னைச் சற்றே தடுமாறச் செய்தது. அன்று கோயிலிலிருந்து திரும்பும் போது, நான் படித்த கதை ஒன்றை நண்பருக்குச் சொன்னேன்.
''ஓர் ஊரில் பெரிய பணக்காரர் ஒருத்தர் இருந்தார். தினமும் காலையில் அவர் வீட்டு வாசலில் ஏராளமான பிச்சைக்காரர்கள் நிற்பார்கள். இதில் என்ன விசேஷம் என்றால், அத்தனை பேரும் ஒழுங்காக வரிசையில்தான் நிற்பார்கள்.
பணக்காரர் குளித்து முடித்து, பூஜையெல்லாம் செய்துவிட்டு, வெளியில் வரும்போது காலை ஏழு மணி ஆகிவிடும். வாசலில் உள்ள நாற்காலியில் அமர்ந்துகொண்டு, அந்தப் பிச்சைக்காரர்கள் வரிசையைக் கவனிப்பார் அந்தப் பணக்காரர். பிறகு, 'அதோ, அவனை வரச் சொல்லுங்கள்’ என்று, வரிசையில் ஏழாவதாகவோ எட்டாவதாகவோ நிற்கிற ஒரு பிச்சைக்காரனைக் கை காட்டுவார். அருகில் அவன் வந்ததும், அவனுக்கு உணவையும் பணத்தையும் தாராளமாகத் தன் கையால் கொடுத்து அனுப்புவார். இவ்வளவு பணம் என்று சீரான கணக்கு இல்லை. ஒருத்தனுக்கு அதிகம் இருக்கும்; ஒருத்தனுக்குக் குறைவாக இருக்கும்.
அவர் கூப்பிடுவதும், வரிசைப்படி இருக்காது. ஒரு தினம் கட்டக் கடைசியில் நிற்கும் ஆளை முதலில் கூப்பிடுவார். முதல் நபராக நிற்பவரைக் கடைசியாகக் கூப்பிடுவார்.
வரிசையில் முதலாவதாக நின்றுகொண்டிருக்கும் பிச்சைக்காரன் மனசுக்குள் பணக்காரரைத் திட்டிக்கொள்வான். 'அடே, கண்ணில் லாத கபோதி! நான் காலையிலிருந்து நிற்கிறேனடா! அவன் கொஞ்சம் முன்னேதான் வந்தான். அவனைக் கூப்பிட்டு முதலில் தர்மம் தருகிறாயே!’ என்று மனசுக்குள் பொருமுவான்.
ஆனால், பணக்காரர் என்னவோ, கொஞ்சம் முன்னே பின்னே இருந்தாலும், நிற்கிற அத்தனை பேருக்கும் கண்டிப்பாகத் தர்மம் செய்துவிடுவார். எனவே, அவரைப் புரிந்துவைத்திருக்கும் பிச்சைக்காரர்கள் கோபித்துக் கொண்டு போய்விடமாட்டார்கள். அந்தப் பணக்காரர்தான், கடவுள்; அவர் அருளை யாசிக்கும் பிச்சைக்காரர்கள் நாம்.
சைவ சித்தாந்த சாஸ்திரத்துக்குக் கருத்துரை செய்த சிற்றம் பல நாடிகள் என்ற பக்தர் கூறுகிறார்...
'இரைதேர் கொக்கொத்(து) ஏசற இருந்தேன்
என்செயல் நடக்குந் தன்மையுங் கண்டேன்’
இரை தேடும் கொக்கு மாதிரி செயலற்றவராக, உரிய காலம் வரும் வரை கடவுள் சந்நிதியில் பொறுமையாகக் காத்திருக்க வேண்டும். செயலற்றுக் காத்திருந்தாலும், பக்தர்களின் செயல் கள் நடந்துவிடும்’ என்கிறார்கள் பெரியவர்கள்.
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Back to top Go down

கலகலப் பக்கம்! - பாக்கியம் ராமசாமி - Page 2 Empty Re: கலகலப் பக்கம்! - பாக்கியம் ராமசாமி

Post by தமிழ்நேசன்1981 Sun Sep 14, 2014 8:45 pm

நம்ம ஆள் ஒருத்தருக்கு 'அரவை மாஸ்டர்’னு பேரு. சதா காலமும், எதையாவது வாயில் போட்டு அரைத்துக் கொண்டே இருப்பார். சமையலறை டப்பாக்களில் கடுகு, மிளகாய், பெருங்காயம் போன்ற ஒரு சில வஸ்துக்கள்தான் அவரது பார்வைக்குத் தப்பிப் பிழைக்கும்.
வீட்டில் தின்பது போதாதென்று, ஆபீசில் தனது மேஜைக்குள் ஒரு (தின்)பண்டக சாலையே வைத்திருப்பார். ஆபீசில் அவருக்கு ஏதோ இலாகாவில் சூப்பரின்டெண்டன்ட் பதவி. பியூனை அனுப்பி, 'இந்தக் கடையிலே இப்போ வடை சூடா போட்டிருப்பான்; இன்ன கடையிலே போளி தயாராயிருக்கும். தயிர்வடைக்கு இப்போ போகாதே; பழசைத் தலையில கட்டிடுவான். மூணு மணிக்குப் போ; ஃப்ரெஷ்ஷா போடுவான்!’ என்று கையேடு அச் சடித்துத் தராத குறையாக, வாங்கித் தின்று மகிழ்வார்.
இத்தனையும் தின்றுத் தின்று அவரது வயிறு சால் மாதிரி பெருத்துவிட்டது. 'தொப்பை விழுந்து அசிங்கமா இருக்கோ?!’ என நிலைக் கண்ணாடி முன், ஸைடு போஸில் பார்த்துக்கொள்ளும் போது நினைத்துக்கொள்வார். ஆனால், அசை போடுவதை மட்டும் நிறுத்தவே இல்லை, அவர்!

இடையில் அவரை நீண்ட நாள் பார்க்க முடியாமல் போயிற்று. தர்மபுரிக்கு மாற்றலாகிவிட்டார். ஆறு மாதம் கழித்து, விசேஷம் ஒன்றுக்காகச் சென்னை வந்தவர், அப்படியே என் வீட்டுக்கும் வந்திருந்தார். அவரைப் பார்த்ததும், தூக்கிவாரிப்போட்டது. அரவை மாஸ்டர், அரை மாஸ்டராகி இருந்தார். ஆமாம், அடை யாளமே தெரியாத அளவுக்கு ஒல்லிப்பிச்சானாகி இருந்தார்.
''என்னய்யா ஆச்சு..? ஏதாவது வியாதி கியாதி வந்து படுத் துட்டியா? இப்படி இளைச்சுப் போயிட்டியே?’ என்று பேசிக்கொண்டி ருந்த சுவாரஸ்யத்தில், அவருக்குக் காபி உபசரிக்க மறந்தே போனோம். அவரும் தனது வழக்கப்படி, 'என்னப்பா... காபி கீபி எதுவும் கிடையாதா?’ என்று உரிமையோடு கேட்கவில்லை.
அவர் எப்போது என் வீட்டுக்கு வந்தாலும், உரிமையோடு ஃப்ரிஜ் ஜைத் திறந்து முந்திரியோ, திராட்சையோ, பிஸ்கட்டோ, வேறு கொறிக்கும் பொருளோ இருந்தால், சுவாதீனமாக எடுத்து வாயில் போட்டு மெல்லுவார். இப்போது ஆசாமி இடத்தைவிட்டே எழுந்தி ருக்கவில்லை. உடல் இளைக்க ஏதோ ஒரு கட்டுப்பாட்டுக்குள் இருக்கிறார் என்று தோன்றியது.
''என்னய்யா, ஆளே அடியோடு மாறிட்டே?'' என்று சிரித்தேன். புரிந்துகொண்டவராய், ''என்னுடைய இளைப்பின் ரகசியம் என் னன்னு தெரிஞ்சுக்க ஆசைப்படறீர்! அதானே?'' என்றவர், தொடர்ந்து சொன்னார்... ''அது ஒரு மந்திரம் - நானா, தானா, வேணா!''
''இதுவரை நான் கேள்விப்படாத மந்திரமாய் இருக்கே?'' என்றேன்.
''சொல்றேன். 'நானா’ என்றால், நானாக எதையும் இஷ்டப்படி எடுத்துச் சாப்பிடுவது; 'தானா’ என்றால், தானாக வருவதை- அதாவது, பிறர் தானாக முன் வந்து தருவதை மட்டுமே சாப்பிடுவது; 'வேணா’ என்றால், யார் வலிய வந்து கொடுத்தாலும் வேணாம் என்று சொல்லிவிடுவது.
முதல் நாள் 'நானா’, மறுநாள் 'தானா’, மூன்றாம் நாள் 'வேணா’. சாப்பிடுவதில் இந்த மாதிரி ஒரு வழிமுறையை நானே உருவாக்கிக்கொண்டு, அதன் படி நடக்கத் தொடங்கினேன். என் தொப்பை நாலே மாதத்தில் கரைந்துவிட்டது!'' என்றார் அரவை மாஸ்டர்- மன்னிக்கவும், என் நண்பர் ரமணி.
அவராக ஃப்ரிஜ்ஜைத் திறக்காததும், எதையும் கேட்காததும் ஏன் என்று புரிந்தது. அதாவது, அன்று அவருக்கு 'தானா’ தினம்; யாராவது கொடுத்தால், மட்டுமே அதைச் சாப்பிடும் தினம்.
யோகியின் லட்சணங்களில் ஒன்றாக, 'யத்ருச்சயா லாப சந்துஷ்ட:’ என்கிறார் ஸ்ரீகிருஷ்ண பகவான். 'தற்செயலாகக் கிடைக்கும் நன்மையில் திருப்தி அடைபவன்’ என்பது அதற்குப் பொருள். சாப்பாட்டு விஷயத்தில், நண்பர் ரமணி அந்தப் புத்திமதியை அனுசரித்துப் பலன் கண்டுவிட்டார்!
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Back to top Go down

கலகலப் பக்கம்! - பாக்கியம் ராமசாமி - Page 2 Empty Re: கலகலப் பக்கம்! - பாக்கியம் ராமசாமி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum