புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Today at 10:09 pm
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Today at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Today at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Today at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Today at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Today at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Today at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Today at 10:59 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 10:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:51 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஜனவரி 16 - நான் மறுபிறவி எடுத்த நாள் குறித்த அனுபவங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்!
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
நான் விபத்தில் சிக்கியிருந்த நேரத்தில் எனக்காக பிரார்த்தனை செய்த என் ஈகரை உறவுகளுக்கு கோடானு கோடி நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்!
ராஜா துவங்கியிருந்த “அன்பு உறவுகளே - அன்பு சகோதரர் தலைவர் சிவாவிற்காக பிரார்த்தனை செய்யுங்கள்” திரியைப் முழுதாகப் படித்ததும் என் கண்களில் ஆனந்தக் கண்ணீர் வருவதை என்னால் கட்டுப்படுத்த இயலவில்லை. இவ்வளவு அன்பான உள்ளங்களில் நான் இருக்கிறேன் என்பதை எண்ணும் பொழுது மிக மிக மகிழ்ச்சியாக உள்ளது!
எனக்கு விபத்து நேர்ந்து மீண்டும் ஈகரையில் இணைந்ததும் அதைப்பற்றி எழுத நினைத்தேன், ஆனால் அந்தச் சம்பவங்களை என்னால் மீண்டும் நினைத்துப் பார்க்க முடியாமல் இருந்தது. அதைப் பற்றி நினைக்கத் துவங்கினாலே இரத்த அழுத்தம் அதிகமாகியது, தலையில் அடிபட்ட இடத்தில் வலி ஏற்பட்டது. அதன் பிறகு மீண்டும் எழுத வேண்டும் என்பதை மறந்தே போயிருந்தேன், ஆனால் இன்று மீண்டும் ராஜா துவங்கிய திரியைப் படித்ததும் எனக்கு நிகழ்ந்த விபத்து குறித்து எழுத வேண்டும் என்று எண்ணித் துவங்கிவிட்டேன்!
என் மகள் பிறந்து இரண்டு மாதம் ஆன மகிழ்ச்சியில் தமிழகம் சென்றேன், ஒருவாரம் என் மகளைவிட்டு வெளியில் எங்கும் செல்ல மனமில்லாமல் வீட்டிலேயே இருந்தேன். (இதற்குமுன் தமிழகம் வந்தால் வீட்டில் சில விநாடிகள் கூட இருப்பதில்லை) இந்நிலையில் நண்பர் ஒருவர் சிறாவயல் மஞ்சுவிரட்டு அருமையாக இருக்கும், வாருங்கள் செல்வோம் என்றார். நானும் சரி என்று கிளம்பிவிட்டேன். ஆனால் அங்கு சென்றதும் தான் தெரிந்தது அது மஞ்சுவிரட்டு இல்லை, ஜல்லிக்கட்டாக மாற்றிவிட்டார்கள் என்று. நின்று பார்க்கக்கூட இடமில்லாததாலும் வெயில் அதிகமாக இருந்ததாலும் வீட்டிற்கு செல்வோம் என்று கிளம்பிவிட்டோம்.
சிறாவயலில் இருந்து சில கிமீ தொலைவில், காரைக்குடிக்கு அருகில் மானகிரி என்னுமிடத்தில் வந்து கொண்டிருந்தோம், நான் தான் இருசக்கர வாகனத்தை ஓட்டி வண்டு கொண்டிருந்தேன். சாலையின் இருபுறமும் நூற்றுக்கணக்கான இருசக்கர வாகனங்கள் சென்று கொண்டிருக்கிறது, அதனால் 30கிமீ மேல் வேகமாகச் செல்ல முடியாது, அதனால் மிக மெதுவாகத்தான் வந்துகொண்டிருந்தேன். திடீரென கண்ணிமைக்கும் நேரத்திற்குள் எதிரே வந்த கார் (bolero) நான் வந்து கொண்டிருந்த பக்கமாக வந்து என்னை அடித்துவிட்டது. என் தலை அந்தக் காரில் மோதி சாலையிலிருந்து வெளியே தூக்கியெறிந்ததுதான் தெரியும், அடுத்த அரை மணி நேரம் எனக்கு என்ன ஆனது என்றே தெரியாமல் போயிருந்தது. (கீழே விழும் பொழுது, ராகவேந்திரா... என் மகளை விட்டுவிட்டுச் சாகப் போகிறேனா என்று நினைத்துக் கொண்டுதான் விழுந்தேன்)
அங்கு நூற்றுக்கணக்கான மக்கள் கூடி நின்று வேடிக்கை பார்க்கிறார்கள், யாரும் உதவவில்லை. காரணம் நான் இரத்த வெள்ளத்தில் மிதந்தேன். அதனால் இறந்துவிட்டதாகக் கருதி அப்படியே விட்டுவிட்டனர். அந்த நேரத்தில் அங்கு வந்த ஒரு நண்பர், அவர் ஒரு மெக்கானிக். எனது பைக்கில் ஈகரை.காம் என்று எழுதியிருந்ததைப் பார்த்து நான் தான் என அடையாளம் தெரிந்து என்னை ஓடோடி வந்து தூக்கியுள்ளார். அவர் தூக்கி என் முகத்தில் தண்ணீர் அடித்து இரத்தத்தைக் கழுவியதும் எனக்கு சுயநினைவு வந்துவிட்டது. அவரை நீண்ட நேரம் உற்றுப் பார்த்தேன், ஆனால் அவர் யார் என அடையாளம் தெரியவில்லை. கண்பார்வை மங்கிப் போயிருந்தது. பிறகு அவரை அறிமுகம் செய்து கொண்டார். கொஞ்சம் பொறுங்கள் ஆம்புலன்ஸ் வந்துவிடும் என்று கூறினார்.
அப்பொழுதுதான் எனக்கு நினைவு வந்தது, நம் பின்னால் ஒருவர் இருந்தாரே என்று! அவரைத் தேடினேன், அவர் என் பக்கத்தில் தான் அமர்ந்திருந்தார். நல்லவேளை அவருக்கு கால் முட்டியில் மட்டுமே அடிபட்டிருந்தது. வேறு எதுவும் ஆகவில்லை. தங்களை விபத்துக்குள்ளாக்கியதற்கு என்னை மன்னித்துவிடுங்கள் என்றேன். அப்பொழுதுதான் அவர் கூறினார், அடிபட்டது எனக்கு இல்லை, உங்களுக்குத்தான் தலையிலிருந்து இரத்தம் பீய்ச்சியடிக்கிறது, இதில் நீங்கள் எதற்கு என்னிடம் மன்னிப்புக் கேட்கிறீர்கள் என்று!
அப்பொழுதுதான் நன்றாக உற்றுப் பார்த்தேன், நான் கீழே விழுந்து கிடந்த இடம் முழுதும் இரத்தம் ஓடிக் கொண்டிருந்தது, என் உடல் முழுதும் இரத்தம் வழிந்து கொண்டிருந்தது. தலை உடைந்து தனியாக தொங்கிக் கொண்டிருந்தது. இவற்றைப் பார்த்ததும் என் மகளின் முகம் என் கண் முன் வந்து நின்றது. என் மகளுக்காக நான் வாழ்ந்தாக வேண்டும் என்ற எண்ணம் என்னை மயக்க நிலையிலிருந்து மீட்டெடுத்து எழுந்திரிக்க வைத்தது.அங்கு நின்ற ஒருவரிடம் அவர் தோளில் போட்டிருந்த துண்டைக் கேட்டு வாங்கி என் தலையை இறுகக் கட்டினேன். நான் எழுந்ததைப் பார்த்ததும் மெக்கானிக் நண்பர், ஆம்புலன்ஸ் வர தாமதாகும் என நினைக்கிறேன், உங்களால் என் பைக்கில் உட்கார முடியுமா என்றார். உடனடியாக சரி என்று சொல்லி அமர்ந்து அவருடன் மருத்துவமனைக்குச் சென்றேன். மூன்று கிமீ தூரம் இருக்கும் என நினைக்கிறேன், அங்கு செல்வதற்குள் என் மனைவியின் அத்தை மகன் தகவல் அறிந்து அங்கு வந்து நின்றார்.
என்னை காரைக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர், அங்கு டெட்டனஸ் ஊசி மட்டும் எனக்கு போடுங்கள் என்று கூறினேன். அதற்கே அங்கிருந்த டாக்டர்கள், வார்டு பாய்கள் ரூ500, ரூ1000 எனப் பிடுங்கிக் கொண்டார்களாம். பணம் தரவில்லையென்றால் இவரை வெளியே அனுப்ப முடியாது என்றிருக்கிறார்கள். காரைக்குடி அப்பல்லோ மருத்துவமனையிலிருந்து ஆம்புலன்ஸ் வந்து என்னை அங்கு கொண்டு சென்றது. அரசு மருத்துவமனையே பரவாயில்லை என்னும் அளவிற்கு இருந்தது அவர்களின் மருத்துவம். எனக்கு தலையில் மரத்துப் போகும் ஊசி (Numbness) எதுவும் போடாமல் தைக்கத் துவங்கிவிட்டார்கள். அந்தச் சூழ்நிலையிலும் எனக்கு தாங்க முடியாத வலி ஏற்பட்டு எழுந்து அடிக்கப் போய்விட்டேன். அதன் பிறகு ஊசிபோட்டு (தலைமுடியைக் கூட நீக்காமல்) தையல் போட்டு இரத்தம் வெளியேறாமல் காப்பாற்றினார்கள்! ஆனால் MRI செய்து பார்த்துவிட்டு இவருக்கு மூளையில் இரத்தக் கசிவு அதிகமாக உள்ளது, இவரை எங்களால் காப்பாற்ற முடியாது என்று கூறிவிட்டார்கள்!
மதுரை மீனாட்சிமிஷன் மருத்துவமனைக்குச் செல்ல வேண்டும் என்று உடனடியாகக் கிளம்பிவிட்டோம். எனக்கு மயக்கம் வந்தாலும் அதைக் கட்டுப்படுத்திக் கொண்டு அமர்ந்திருந்தேன். திருப்பத்தூர் சென்றதும் (அங்கு ஒரு கடையில் மாதுளம் பழ ஜூஸ் நன்றாக இருக்கும், மானிக் வீட்டிற்குச் சென்ற பொழுது ஒருமுறை குடித்திருக்கிறேன்) எனக்கு மாதுளம் பழ ஜூஸ் வேண்டும் என்றேன். என் அண்ணனும், மாமனாரும் அதெல்லாம் முடியாது, உடனடியாக நாம் மதுரைக்கு போக வேண்டும் என்றனர். முடியாது எனக்கு ஜுஸ் வேண்டும் என்று கூறி ஜூஸ் வாங்கிவரச் சொல்லி குடித்துவிட்டுத்தான் சென்றேன்.
பாதி தூரம் சென்றது வரை தான் தெரியும், அதற்குமேல் மயக்கமாகிவிட்டேன். என் உறவினர் ஒருவர் அங்கு வேலை மருத்துவராக உள்ளார், அவரிடம் போகும் பொழுதே அழைத்து விவரத்தைச் சொல்லியதால் நாங்கள் மருத்துவமனைக்குள் செல்லும்பொழுதே வெளியில் தயாராக வந்து நின்றிருக்கிறார்கள். அவர்கள் வந்து என்னை தூக்க முயற்சிக்கும் பொழுது (நன் என்ன சின்ன உருவமா, எளிதாக தூக்கிச் செல்ல) நான் மீண்டும் கண்விழித்து என்ன வேண்டும் என்றேன், மருத்துவமனைக்கு வந்துவிட்டோம், உள்ளே செல்ல வேண்டும் என்றனர். அவ்வளவு தானே நகருங்கள் என்று நானே எழுந்து stretcher-ல் படுத்துக் கொண்டேன்.
உள்ளே தள்ளிச் சென்றது மட்டுமே என் நினைவில் இருந்தது, அதன் பிறகு மறுநாள் தான் நான் ICU-ல் இருப்பதை உணர்ந்தேன். தலைவலி வந்தால் கூட மாத்திரை சாப்பிட மாட்டேன், ஆனால் அதற்கெல்லாம் சேர்த்தார்போல் ஊசியும் மருந்தும் அங்கு தந்தார்கள். மருத்துவமனையில் இருந்த நாட்கள் மிகத் துயரம் நிறைந்ததாகவே இருந்தது. ICU-லிருந்து வெளியே வந்ததும் படுத்திருக்க முடியாமல் எழுந்து நடக்கத் துவங்கிவிட்டேன். அப்பொழுது எதார்த்தமாக என் முகத்தைக் கண்ணாடியில் பார்த்து நானே பயந்துவிட்டேன். முகம் கருத்து, தலை வீங்கி ஒரு பிணத்தைப் போலக் காட்சியளித்தது.
நம் உறவுகள் அனைவரும் அழைத்து நலம் விசாரித்தது என்னை மேலும் உற்சாகப்படுத்தி சீக்கிரம் குணமடைய வைத்தது. தற்பொழுது ஆறு மாதங்கள் ஆகிவிட்ட நிலையில் எந்தப் பிரச்சனையும் இன்றி நலமுடன் உள்ளேன். முடி முளைத்தால் தலையில் வலி ஏற்படுவதால் கடந்த ஆறு மாதமாக தொடர்ந்து மொட்டை அடித்து வருகிறேன்! மேலும் வலது சுண்டிவிரலில் ஒரு பிளாஸ்டிக் சர்ஜரி செய்ய வேண்டியுள்ளது. என் மகள் பிறந்த நாளுக்குச் செல்லும் பொழுது செய்ய வேண்டும்.
இனிமேல் இப்படி ஒரு நிலை யாருக்கும் வரக்கூடாது என்று கடவுளை வேண்டிக் கொள்கிறேன்!

Re: ஜனவரி 16 - நான் மறுபிறவி எடுத்த நாள் குறித்த அனுபவங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்!
#1071987அப்பல்லோ மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸில் சென்றபொழுது:
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: ஜனவரி 16 - நான் மறுபிறவி எடுத்த நாள் குறித்த அனுபவங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்!
#1071988அப்பல்லோ சிகிச்சைக்குப் பிறகு:
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: ஜனவரி 16 - நான் மறுபிறவி எடுத்த நாள் குறித்த அனுபவங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்!
#1071989மதுரையில் சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய பிறகு:
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: ஜனவரி 16 - நான் மறுபிறவி எடுத்த நாள் குறித்த அனுபவங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்!
#1071990இப்பொழுது:

#1072031- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
மருத்துவம் பாதி காப்பாற்றினால் நம் மனநிலையும் மனதைரியமும் மீதி காப்பாற்றும்....என்று சொல்லுவார்கள்...அது மிக உண்மை அண்ணா........நீங்கள் ரத்த வெள்ளத்தில் எழுந்து நின்றது தாங்களே துண்டை கேட்டு கட்டியது ஸ்ட்ரெச்சரில் தாங்களே சென்று படுத்தது....முக்கியமாக ஜூஸ் குடித்தே ஆக வேண்டும் என்று குடித்து விட்டு சென்றது அனைத்துமே அந்த கூற்றை உறுதி செய்கின்றன...
மனதை உலுக்கும் புகைபடம்.....
தாங்கள் நலமாய் இருப்பது குறித்து மிக்க மகிழ்ச்சி அண்ணா

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
Re: ஜனவரி 16 - நான் மறுபிறவி எடுத்த நாள் குறித்த அனுபவங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்!
#1072038- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
தன்னம்பிக்கை, தைரியம் அதோடு நண்பர் ஒருவரின் உதவியுடன் நீங்கள் மீண்டு வந்து எங்களுடன் இணைந்தது அற்புதம் சிவா.
Re: ஜனவரி 16 - நான் மறுபிறவி எடுத்த நாள் குறித்த அனுபவங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்!
#1072042தமிழுக்கு ஆயுள் கெட்டி !
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
» நான் என் அலைபேசியில் பயன்படுத்தும் அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்!
» உங்களுடன் இணைவதில் மகிழ்ச்சி கொள்கிறேன்...
» Dr.சுந்தரராஜ் தயாளன் அவர்களின் அண்ணன் திரு சின்னதுரை M.A.B.L அவர்கள் இன்று காலை கோவையில் இயற்கை எய்தினார்கள்.
» 2017-ம் ஆண்டு நடராஜனை ஏலம் எடுத்தது குறித்த நினைவலைகளை பகிர்ந்து கொண்ட சேவாக்
» உங்களுடன் நான்

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2