புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Today at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Today at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Today at 1:40 pm

» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Today at 1:38 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Today at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Today at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Today at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Today at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Today at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Today at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:45 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:07 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Today at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Yesterday at 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ராயல் என்ஃபீல்ட்  தண்டர்பேர்டு  Poll_c10ராயல் என்ஃபீல்ட்  தண்டர்பேர்டு  Poll_m10ராயல் என்ஃபீல்ட்  தண்டர்பேர்டு  Poll_c10 
29 Posts - 62%
heezulia
ராயல் என்ஃபீல்ட்  தண்டர்பேர்டு  Poll_c10ராயல் என்ஃபீல்ட்  தண்டர்பேர்டு  Poll_m10ராயல் என்ஃபீல்ட்  தண்டர்பேர்டு  Poll_c10 
9 Posts - 19%
Dr.S.Soundarapandian
ராயல் என்ஃபீல்ட்  தண்டர்பேர்டு  Poll_c10ராயல் என்ஃபீல்ட்  தண்டர்பேர்டு  Poll_m10ராயல் என்ஃபீல்ட்  தண்டர்பேர்டு  Poll_c10 
8 Posts - 17%
mohamed nizamudeen
ராயல் என்ஃபீல்ட்  தண்டர்பேர்டு  Poll_c10ராயல் என்ஃபீல்ட்  தண்டர்பேர்டு  Poll_m10ராயல் என்ஃபீல்ட்  தண்டர்பேர்டு  Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ராயல் என்ஃபீல்ட்  தண்டர்பேர்டு  Poll_c10ராயல் என்ஃபீல்ட்  தண்டர்பேர்டு  Poll_m10ராயல் என்ஃபீல்ட்  தண்டர்பேர்டு  Poll_c10 
194 Posts - 73%
heezulia
ராயல் என்ஃபீல்ட்  தண்டர்பேர்டு  Poll_c10ராயல் என்ஃபீல்ட்  தண்டர்பேர்டு  Poll_m10ராயல் என்ஃபீல்ட்  தண்டர்பேர்டு  Poll_c10 
36 Posts - 14%
mohamed nizamudeen
ராயல் என்ஃபீல்ட்  தண்டர்பேர்டு  Poll_c10ராயல் என்ஃபீல்ட்  தண்டர்பேர்டு  Poll_m10ராயல் என்ஃபீல்ட்  தண்டர்பேர்டு  Poll_c10 
10 Posts - 4%
Dr.S.Soundarapandian
ராயல் என்ஃபீல்ட்  தண்டர்பேர்டு  Poll_c10ராயல் என்ஃபீல்ட்  தண்டர்பேர்டு  Poll_m10ராயல் என்ஃபீல்ட்  தண்டர்பேர்டு  Poll_c10 
8 Posts - 3%
prajai
ராயல் என்ஃபீல்ட்  தண்டர்பேர்டு  Poll_c10ராயல் என்ஃபீல்ட்  தண்டர்பேர்டு  Poll_m10ராயல் என்ஃபீல்ட்  தண்டர்பேர்டு  Poll_c10 
5 Posts - 2%
Balaurushya
ராயல் என்ஃபீல்ட்  தண்டர்பேர்டு  Poll_c10ராயல் என்ஃபீல்ட்  தண்டர்பேர்டு  Poll_m10ராயல் என்ஃபீல்ட்  தண்டர்பேர்டு  Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
ராயல் என்ஃபீல்ட்  தண்டர்பேர்டு  Poll_c10ராயல் என்ஃபீல்ட்  தண்டர்பேர்டு  Poll_m10ராயல் என்ஃபீல்ட்  தண்டர்பேர்டு  Poll_c10 
3 Posts - 1%
Barushree
ராயல் என்ஃபீல்ட்  தண்டர்பேர்டு  Poll_c10ராயல் என்ஃபீல்ட்  தண்டர்பேர்டு  Poll_m10ராயல் என்ஃபீல்ட்  தண்டர்பேர்டு  Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
ராயல் என்ஃபீல்ட்  தண்டர்பேர்டு  Poll_c10ராயல் என்ஃபீல்ட்  தண்டர்பேர்டு  Poll_m10ராயல் என்ஃபீல்ட்  தண்டர்பேர்டு  Poll_c10 
2 Posts - 1%
nahoor
ராயல் என்ஃபீல்ட்  தண்டர்பேர்டு  Poll_c10ராயல் என்ஃபீல்ட்  தண்டர்பேர்டு  Poll_m10ராயல் என்ஃபீல்ட்  தண்டர்பேர்டு  Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ராயல் என்ஃபீல்ட் தண்டர்பேர்டு


   
   

Page 1 of 2 1, 2  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Sep 12, 2014 2:57 am

ராயல் என்ஃபீல்ட்  தண்டர்பேர்டு  P49

ராயல் என்ஃபீல்டு பைக்குகளுக்கு, எப்போதும் இந்திய வாடிக்கையாளர்கள் மனதில் தனி இடம் உண்டு. 50 ஆண்டுகளையும் தாண்டி இந்தியாவில் வெற்றிகரமான மோட்டார் சைக்கிள் நிறுவனமாக ராயல் என்ஃபீல்டு இருப்பதற்குக் காரணம், அதன் மீது இருக்கும் 'லைஃப் ஸ்டைல்’ இமேஜ்தான்! அன்றாடப் போக்குவரத்துக்கான பைக்குகள் சூழ்ந்திருக்கும் இந்திய மார்க்கெட்டில், தனித்துவத்தோடு தெரிய விரும்புவர்களுக்கான சாய்ஸாக தொடர்ந்து இருந்து வருகிறது ராயல் என்ஃபீல்டு.

ஒவ்வொரு மோட்டார் சைக்கிள் நிறுவனமும், சின்னச் சின்ன மாற்றங்களுடன் ஒன்று அல்லது இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை 'புத்தம் புதிய பைக்’ என்று பழைய பைக்கையே வெளியிடும். ஆனால், ராயல் என்ஃபீல்டு பைக்குகளில் அடிக்கடி மாற்றங்களை எதிர்பார்க்க முடியாது. அப்படி மாற்றங்கள் செய்கிறது என்றால், அது 'ஜஸ்ட் லைக் தட்’ மாற்றமாக இருக்காது. புத்தம் புதிய 'தண்டர்பேர்டு 500’ என்ற பெயருக்கு ஏற்றபடி, உண்மையிலேயே பெரிய மாற்றங்களுடன் புதிய பைக்காக விற்பனைக்கு வந்திருக்கிறது தண்டர்பேர்டு 500.

தண்டர்பேர்டு வரலாறு

இதுவரை இரண்டு மாற்றங்களைக் கண்டிருக்கிறது தண்டர்பேர்டு. முதலில் அலுமினியம் இன்ஜினுடனும், அதனைத் தொடர்ந்து 'யூனிட் கன்ஸ்ட்ரக்ஷன்’ இன்ஜினுடனும் வெளிவந்திருக்கும் தண்டர்பேர்டின் தோற்றத்தில், இதுவரை பெரிய மாற்றங்கள் செய்யப்படவில்லை. இப்போது தோற்றத்திலும், சிறப்பம்சங்களிலும் பல மாற்றங்கள் செய்திருக்கிறது ராயல் என்ஃபீல்டு!

ஸ்டைல்

புதிய தண்டர்பேர்டைப் பார்த்தவுடனே, பெரிய மாற்றமாகத் தெரிவது பெட்ரோல் டேங்க்தான். 20 லிட்டர் பெட்ரோல் டேங்க் பார்ப்பதற்குப் பிரம்மாண்டமாக இருக்கிறது. சின்ன புரொஜக்டர் விளக்குடன் இருக்கும் புதிய ஹெட்லைட், முன் பக்கத் தோற்றத்தை இன்னும் எடுப்பாக்கி இருக்கிறது. கிழக்குக் கடற்கரைச் சாலையில் நாம் தண்டர்பேர்டு 500 பைக்கை நள்ளிரவில் டெஸ்ட் செய்தோம். உண்மையிலேயே வெறும் ஸ்டைலுக்காக மட்டும் இல்லாமல், ஹெட் லைட் பவர்ஃபுல்லாகவும் இருப்பதை உணர முடிந்தது.

டயல்களைப் பொறுத்தவரை இரட்டைக் குடுவை டயல்கள். ஒன்று அனலாக். மற்றொன்று டிஜிட்டலில் இருக்கிறது. நீல வண்ணத்தில் மின்னும் டிஜிட்டல் டயலில் ஃப்யூல் இண்டிகேட்டரும், இரட்டை ட்ரிப் மீட்டரும், கடிகாரமும் இடம்பெற்று இருக்கின்றன. ஸ்பீடோ மற்றும் டேக்கோ மீட்டர்கள் அனலாக் ஆக உள்ளன. இந்திய பைக்குகளிலேயே முதன்முறையாக, இரட்டை டயல்களுக்கு நடுவே கார்களில் இருப்பதுபோல் வார்னிங் லைட் சுவிட்ச் வைக்கப்பட்டுள்ளது. இந்த சுவிட்சைத் தட்டினால், நான்கு இண்டிகேட்டர் விளக்குகளும் ஒரே நேரத்தில் அணைந்து அணைந்து ஒளிரும். நடு ரோட்டில் அல்லது இரவு நேரங்களில் பைக் நிற்கும்போது, இந்த விளக்குகள் மிகவும் உதவியாக இருக்கும். ரியர்வியூ கண்ணாடிகள் அகலமாகவும், பின்னால் வரும் வாகனங்களைத் தெளிவாகவும் காட்டுகின்றன. சாவி மற்றும் சைடு லாக் துவாரம் ஹேண்டில் பாரிலேயே வைக்கப்பட்டு இருக்கிறது.

பின் பக்கத்தைப் பொறுத்தவரை, பின் பக்க விளக்கில் ஐந்து நீளமான கோடுகள் போன்று எல்ஈடி விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. உயரம் குறைவானவர்களும் வசதியாக உட்கார்ந்து ஓட்டும் வகையில், புதிய தண்டர்பேர்டு இருக்கையின் உயரம் குறைக்கப்பட்டு இருக்கிறது. பின் பக்க இருக்கையும் இதுவரை ராயல் என்ஃபீல்டு பைக்குகளில் இல்லாத அளவுக்கு சொகுசாக இருக்கிறது. பின் பக்க இருக்கை தேவை இல்லை என்றால், அகற்றிவிட்டு பைகளை மாட்டிக் கொள்ள ஹூக் கொடுக்கப்பட்டுள்ளது. க்ரூஸர் பைக் என்பதற்கு சாட்சியாக, கால்களை வைக்க ஃபுட் ரெஸ்ட் இன்னும் முன்னால் தள்ளி வைக்கப்பட்டு இருப்பது சொகுசான ரைடிங் பொசிஷனை ஏற்படுத்தியிருக்கிறது.

இருக்கை உயரம் குறைவாக இருப்பதால், சுவிட்ச்சுகளைப் பொறுத்தவரை பெரிதாகக் குறை சொல்ல முடியாதபடி இருந்தாலும், நாம் டெஸ்ட் செய்த பைக்கில் ஃப்ளாஷ் லைட் வேலை செய்யவில்லை. கறுப்பிலேயே மூன்று வகையான கறுப்பு நிறங்களுடன் வெளிவந்திருக்கிறது தண்டர் பேர்டு 500. இதில் மேட் ஃபினிஷ்தான் சூப்பர்!

ஒட்டுமொத்தமாக ஃபிட் அண்டு ஃபினிஷில் முன்னேற்றம் தெரிந்தாலும், கிட்டத்தட்ட இரண்டு லட்ச ரூபாயை நெருங்கும் இந்த பைக்கின் தரம், சுமார் ரகம்தான்!

இன்ஜின்

கிளாஸிக் 500 பைக்கில் இருந்த அதே யூனிட் கன்ஸ்ட்ரக்ஷன் இன்ஜின் கறுப்பு வண்ண மாற்றத்தைத் தவிர, பெரிய மாற்றங்கள் எதுவும் இன்றி தண்டர்பேர்டு 500 பைக்குக்கு இடம் மாறியிருக்கிறது. 499 சிசி, சிங்கிள் சிலிண்டர், ஏர்-கூல்டு இன்ஜின் அதிகபட்சமாக 27.2 bhp சக்தியையும், 4000 ஆர்பிஎம்-ல் அதிகபட்சமாக 4.17 kgm டார்க்கையும் வெளிப்படுத்துகிறது. 500 சிசி இன்ஜினுக்கு இந்த பவர் ரொம்பவும் குறைவு என்பதோடு, தண்டர்பேர்டு 350 பைக்கைவிட வெறும் 7.4 bhp சக்திதான் அதிகம். செல்ஃப் ஸ்டார்ட் பட்டனைத் தட்டினால், கிளாஸிக்கை விட அதிகமான சத்தத்துடன் உயிர்பெற்று எழுகிறது தண்டர்பேர்டு 500. ஆக்ஸிலரேட்டரைக் கொஞ்சம் வேகமாக முறுக்கினாலே, அதிர்வுகளால் ஆட்டம் போட ஆரம்பித்து விடுகிறது. 1.75 லட்சம் ரூபாய் கொடுத்து தண்டர்பேர்டு 500 பைக்கை வாங்குபவர்களுக்கு இந்த அதிர்வுகள் இலவசமோ?

வேகத்தைப் பொறுத்தவரை, ஆக்ஸிலரேட்டரை முறுக்க முறுக்க சட்டென வேகம் பிடித்து விடுகிறது தண்டர்பேர்டு 500. அதிகபட்சமாக மணிக்கு 130 கி.மீ வேகத்தில் சென்றோம்.

நகருக்குள் ஓட்டும்போது, கியர்பாக்ஸ் மிகவும் அசௌகரியத்தை ஏற்படுத்துகிறது. ஒவ்வொரு கியரையும் மாற்றுவதற்கு தினமும் காலையில் எக்ஸ்ட்ராவாகச் சாப்பிட வேண்டும். கியர்களில் ஏறி நின்று மிதிக்க வேண்டியிருப்பதோடு, அடிக்கடி ஃபால்ஸ் நியூட்ரலும் விழுகிறது. கியர் பாக்ஸில் முன்னேற்றம் தேவை!

ஓட்டுதல் மற்றும் கையாளுமை

சீட்டின் உயரம் குறைவாகவும், ஃபுட் ரெஸ்ட் முன் பக்கமாகத் தள்ளி வைக்கப்பட்டு இருப்பதும், ஒரு சிறந்த க்ரூஸருக்கான ரைடிங் பொசிஷனை தண்டர்பேர்டில் ஏற்படுத்தி இருக்கிறது. சீட்டும் மிகவும் சாஃப்ட்டாக இருப்பதால், நீண்ட தூரம் தொடர்ந்து ஓட்டினாலும் வலி இல்லை. பெரிய பைக்கை ஓட்டுகிறோம் என்கிற ஃபீல் இல்லை என்பது பெரிய ப்ளஸ். பழைய பைக்கைவிட வீல் பேஸ் 20 மிமீ குறைக்கப்பட்டு இருப்பதால், வளைவுகளில் வளைத்து நெளித்து ஓட்டுவதற்குச் சிறப்பாக இருப்பதோடு, புதிதாகப் பொருத்தப்பட்டு இருக்கும் எம்ஆர்எஃப் டயர்களில் நல்ல கிரிப்!

இரண்டு வீல்களிலுமே டிஸ்க் பிரேக் பொருத்தப்பட்டு இருந்தாலும், பின் பக்க டிஸ்க் பிரேக் ஒப்புக்காக இருப்பது போலவே இருக்கிறது. முன் பக்க பிரேக்ஸ் படு ஷார்ப்!

மைலேஜ்

கிழக்குக் கடற்கரைச் சாலையில் நாம் ஓட்டிப் பார்த்தபோது, லிட்டருக்கு 29.9 கி.மீ வரை மைலேஜ் தந்தது தண்டர்பேர்டு 500. ஒருமுறை பெட்ரோல் டேங்க்கை நிரப்பினால், 600 கிமீ வரை பயணிக்கலாம்!

விகடன்



ராயல் என்ஃபீல்ட்  தண்டர்பேர்டு  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Sep 12, 2014 2:59 am

ஒரு வயது குழந்தைக்கு கூட பிடித்த வண்டின்னு சொல்லுங்க பாஸ்




சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Sep 12, 2014 2:59 am

வாசகர் அனுபவம் - மினி ஹார்லி!

ராயல் என்ஃபீல்ட்  தண்டர்பேர்டு  P121a

எப்போதும் எனக்கு ட்ரெண்டியாக இருப்பது தான் பிடிக்கும். ஹேர் ஸ்டைல் முதல் மொபைல் போன், பைக் வரை எல்லாம் அப்படித்தான். ஸ்டைலிஷான டிசைனுக்காக நீண்ட நாள் காத்திருந்து வாங்கிய பைக் இது.

ஏன் தண்டர்பேர்டு?

எந்த ஸ்டைல் பைக்காக இருந்தாலும், திருச்சியில் அறிமுகமானதுமே முதலில் அந்த பைக்கை வாங்கும் நபர் நானாகத்தான் இருக்க வேண்டும் என நினைப்பேன். ஏற்கெனவே அப்பாச்சி 150, கரீஸ்மா, ஆர்டிஆர்180 வைத்திருந்ததால், ஸ்போர்ட்டிவாகவும், அதேசமயம் எல்லா சிறப்பம்சங்களும் கொண்ட ஸ்டைலிஷான பைக் வாங்க வேண்டும் எனக் காத்திருந்தேன். அதற்கேற்றவாறு ராயல் என்ஃபீல்டில் 'டெஸர்ட் ஸ்டார்ம்’ வாங்கலாம் என திருச்சி என்.ஏ மோட்டார்ஸ் ஷோரூம் சென்று புக் செய்தேன். பைக் வர பல மாதங்கள் காத்திருக்க வேண்டும் என்பது தெரியும்.

இதற்கிடையே புதிய தண்டர்பேர்டு அறிமுகமாக, ஷோரூமில் இருந்து என்னை அழைத்தனர். ஷோரூமில் புத்தம் புதிய தண்டர்பேர்டு பைக்கைப் பார்த்ததும் எனது எண்ணத்தை மாற்றிக்கொண்டேன். தண்டர்பேர்டு 350 பைக்கின் லுக் ரொம்பவே என்னைக் கவர, டெஸர்ட் ஸ்டார்ம் புக்கிங்கை கேன்சல் செய்துவிட்டு தண்டர்பேர்டு 350 பைக்கை புக் செய்தேன். தற்போது கிளாஸிக் கலெக்ஷன்தான் மீள் உருவாக்கம் செய்யப்பட்டு அதிகம் விற்கப்படுகிறது. கிளாஸிக் டிசைனிலும் சரி, நியூ டிரெண்டிலும் சரி, இரண்டு அம்சங்களையும் கொண்டிருந்தது தண்டர்பேர்டு 350.

ஷோரூம் அனுபவம்

புக் செய்து ஆறு மாதங்களுக்குப் பிறகுதான் தண்டர்பேர்டு கிடைத்தது. நினைத்தபடியே திருச்சியில் நான்தான் முதல் வாடிக்கையாளர். ஷோரூமில் உள்ள ஒவ்வொருவரும் பைக்கைப் பற்றி அனைத்தும் தெரிந்துவைத்திருந்தார்கள். ஒரு ஸ்க்ரூவின் சுற்றளவு முதல் பைக்கைப் பற்றி அவர்கள் விவரித்த விதம் அருமை. பைக் வாங்கிய பிறகு இதுவரை இரண்டு முறை ஃப்யூஸ் போனது. போன் செய்தவுடன் வீட்டுக்கே வந்து சரிசெய்து கொடுத்தார்கள். பைக் ஓட்டும் போது ஹெல்மெட்டின் அவசியம் குறித்து அவர்கள் சொன்ன பிறகுதான், 4,500 ரூபாய்க்கு நல்ல ஹெல்மெட் வாங்கினேன். பைக்கை விற்க வேண்டும் என்ற நோக்கத்தைவிட, வாடிக்கையாளர் சேவைக்கு அவர்கள் முன்னுரிமை கொடுத்த விதம் என்னை அதிகம் கவர்ந்தது.

மைலேஜ்?

மைலேஜைப் பொறுத்தவரையில் என் டிரைவிங் ஸ்டைலுக்கு லிட்டருக்கு 38 - 42 கி.மீ வரை தருகிறது. சமீபத்தில் ஊட்டி சென்று வந்தேன். கரெக்ட்டாக 40 கி.மீ மைலேஜ் தந்தது.

பெர்ஃபாமென்ஸ் எப்படி?

பக்கவாக இருக்கிறது. வழக்கமான புல்லட் சத்தம் இல்லை என்றாலும், நான் இதுவரை ஓட்டிய பைக்குகளிலேயே இதுதான் சிறந்த பைக். எவ்வளவு தூரம் ஓட்டினாலும் கொஞ்சமும் அலுப்பு இல்லை. அதிகபட்சமாக மணிக்கு 140 கி.மீ வேகம் வரை சென்றிருக்கிறேன். மற்ற பைக்குகளைப்போல இல்லாமல், ஒரே சீராக வேகத்தை அதிகரிக்க முடிகிறது. 140 கி.மீ வேகத்தில் சென்றாலும், பைக் நம் கட்டுப்பாட்டில் இருப்பது ஆச்சரியம். 350 சிசி இன்ஜினில் 20 லிட்டர் பெட்ரோல் நிரப்பலாம். ஒரு முறை டேங்க் நிரப்பினால் போதும், திருச்சியில் இருந்து சென்னை வரை சென்று வரலாம். ரோட்டில் போகும் எவரையும் ஒரு கணம் திரும்பிப் பார்க்கவைப்பது இதன் சிறப்பம்சம்.

ப்ளஸ்

பின் பக்கமாகப் பார்த்தால், அச்சு அசல் ஹார்லி டேவிட்சன்தான். ஓடோ மீட்டர், ஃபியூல் இண்டிகேஷன் முதற்கொண்டு அனைத்தும் டிஜிட்டலைஸ் செய்யப் பட்டுள்ளது. பின்பக்கத்தில் எல்இடி லைட்ஸ், ஹெட்லைட்டில் புரொஜெக்டர் லேம்ப் என அட்டகாசமாக டிசைன் செய்யப்பட்டுள்ளது. இன்ஜின் வடிவம் அப்படியே மனதைக் கொள்ளை கொள்கிறது. ஊட்டிக்கு ரைடிங் சென்றபோது 70 - 80 டிகிரி கோணத்தில் இருந்த மலைகளில் ஏறும்போதுகூட, எந்தவித சலனமும் இல்லாமல் ஜிவ்வென்று ஏறுகிறது.

மைனஸ்

கறுப்பு தவிர மற்ற நிறங்களில் இந்த பைக் கிடைப்பது இல்லை. செல்ஃப் ஸ்டார்ட்டர், இரண்டு முறைக்கு மேல் இக்னீஷன் செய்தால்தான் ஸ்டார்ட் ஆகிறது. இது ஏன் என்றே புரியவில்லை. ஆனால் பழகிவிட்டதால், இது ஒரு குறையாக எனக்குத் தெரியவில்லை.

என் தீர்ப்பு!

புல்லட் பைக் வாங்க வேண்டும். கிளாஸிக்காகவும் ட்ரெண்டியாகவும் இருக்க வேண்டும் என நினைப்பவர்கள், நிச்சயம் இந்த பைக்கைப் பரிசீலிக்கலாம். 350 சிசி இன்ஜின் அளவு போதாது என நினைப்பவர்கள் இதிலேயே 500 சிசி பைக்கை வாங்கலாம். வாங்கும் முன் உடலைப் பலப்படுத்திக் கொள்வது மிக அவசியம் அப்போதுதான் பைக்கை லாவகமாகக் கையாள முடியும். அதேபோல், பராமரிப்பும் முக்கியம்.

ஹார்லி டேவிட்சன் பைக் வாங்க வேண்டும் என்று ஆசை. ஆனால், பட்ஜெட் தாங்காது என்றால், தாராளமாக தண்டர்பேர்டு வாங்கலாம். ஏனெனில், என்னைப் பொறுத்தவரை இது ஒரு மினி ஹார்லி டேவிட்சன்.



ராயல் என்ஃபீல்ட்  தண்டர்பேர்டு  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84709
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Sep 12, 2014 5:35 am

அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை
-
#மொபெட் மட்டுமே ஓட்டத் தெரியும்...

avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Fri Sep 12, 2014 6:33 am

ராயல் என்ஃபீல்ட்  தண்டர்பேர்டு  103459460 ராயல் என்ஃபீல்ட்  தண்டர்பேர்டு  1571444738

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Sep 12, 2014 8:02 pm

ayyasamy ram wrote:அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை
-
#மொபெட் மட்டுமே ஓட்டத் தெரியும்...


என்னைப் போலவே நீங்களும்! சூப்பருங்க



ராயல் என்ஃபீல்ட்  தண்டர்பேர்டு  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Sep 12, 2014 8:06 pm

சிவா wrote:
ayyasamy ram wrote:அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை
-
#மொபெட் மட்டுமே ஓட்டத் தெரியும்...


என்னைப் போலவே நீங்களும்! சூப்பருங்க
மேற்கோள் செய்த பதிவு: 1086951

ஏன் சிவா மேலே சொன்ன பைக் உங்களிடம் இல்லையா ? புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Sep 12, 2014 8:22 pm

krishnaamma wrote:
ஏன் சிவா மேலே சொன்ன பைக் உங்களிடம் இல்லையா ? புன்னகை

இருக்கு அக்கா, ஆனால் அதற்கு ஷிவானி உரிமை கொண்டாடிவிட்டார்!



ராயல் என்ஃபீல்ட்  தண்டர்பேர்டு  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Sep 12, 2014 8:32 pm

சிவா wrote:
krishnaamma wrote:
ஏன் சிவா மேலே சொன்ன பைக் உங்களிடம் இல்லையா ? புன்னகை

இருக்கு அக்கா, ஆனால் அதற்கு ஷிவானி உரிமை கொண்டாடிவிட்டார்!
மேற்கோள் செய்த பதிவு: 1086992

பெண்களுக்கு ஒன்று சொல்லுவா :"பொண்ணு வரத்துக்குள்ளே பூட்டிக்கோ; மாட்டுப்பெண் வரத்துக்குள்ளே சாப்பிட்டுக்கோ" என்று வசனம் சொல்லுவாங்க புன்னகை ............இது ஆண்களுக்கும் பொருந்தும் என்று இன்று தான் தெரிந்து கொண்டேன் ஜாலி ஜாலி ஜாலி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி  

சூப்பர் ஷிவானி புன்னகை சூப்பருங்க அன்பு மலர் முத்தம் இதை அவளுக்கு பார்சல் பண்ணிடுங்கோ புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Sep 12, 2014 8:40 pm

krishnaamma wrote:
சிவா wrote:
krishnaamma wrote:
ஏன் சிவா மேலே சொன்ன பைக் உங்களிடம் இல்லையா ? புன்னகை

இருக்கு அக்கா, ஆனால் அதற்கு ஷிவானி உரிமை கொண்டாடிவிட்டார்!
மேற்கோள் செய்த பதிவு: 1086992

பெண்களுக்கு ஒன்று சொல்லுவா :"பொண்ணு வரத்துக்குள்ளே பூட்டிக்கோ; மாட்டுப்பெண் வரத்துக்குள்ளே சாப்பிட்டுக்கோ" என்று வசனம் சொல்லுவாங்க புன்னகை ............இது ஆண்களுக்கும் பொருந்தும் என்று இன்று தான் தெரிந்து கொண்டேன் ஜாலி ஜாலி ஜாலி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி  

சூப்பர் ஷிவானி புன்னகை சூப்பருங்க அன்பு மலர் முத்தம் இதை அவளுக்கு பார்சல் பண்ணிடுங்கோ புன்னகை

ராயல் என்ஃபீல்ட்  தண்டர்பேர்டு  10485810_743892465656863_2895970165021135597_n



ராயல் என்ஃபீல்ட்  தண்டர்பேர்டு  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக