புதிய பதிவுகள்
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 1:28 pm

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 1:26 pm

» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 1:21 pm

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 9:16 pm

» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 8:20 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 7:45 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 2:51 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 2:48 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 2:44 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 2:41 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 2:41 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 2:40 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 1:42 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:03 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 11:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 18, 2024 11:37 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 11:17 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Jun 18, 2024 11:06 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 10:51 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 10:45 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:49 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 9:46 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 9:45 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 9:43 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 9:40 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 9:39 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 9:36 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 9:34 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 9:33 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 9:07 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 9:06 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Jun 18, 2024 8:43 pm

» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 8:07 pm

» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 8:04 pm

» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 6:35 pm

» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 6:33 pm

» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 6:30 pm

» சிக்கல்கள் என்பவை…
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 6:27 pm

» வாக்குப் பதிவு இயந்திரத்திலே லைக் பட்டன் வைக்கணும்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 6:19 pm

» நல்ல இடமா பாத்து கட்டி வைக்கணும்!
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 6:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 2:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 18, 2024 2:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 2:23 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 2:14 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 2:02 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 1:51 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 1:34 pm

» திருப்பதி பெருமாளுக்கு கறிவேப்பிலையும் கனகாம்பரமும் ஆகாது ஏன்...?
by ayyasamy ram Tue Jun 18, 2024 10:16 am

» ஓவியத்தில் விந்தை --மாறியது புகைப்படமாக
by T.N.Balasubramanian Mon Jun 17, 2024 8:00 pm

» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by Dr.S.Soundarapandian Mon Jun 17, 2024 3:58 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கல கலப் பக்கங்கள்--தென்கச்சியார் - Page 3 Poll_c10கல கலப் பக்கங்கள்--தென்கச்சியார் - Page 3 Poll_m10கல கலப் பக்கங்கள்--தென்கச்சியார் - Page 3 Poll_c10 
53 Posts - 41%
heezulia
கல கலப் பக்கங்கள்--தென்கச்சியார் - Page 3 Poll_c10கல கலப் பக்கங்கள்--தென்கச்சியார் - Page 3 Poll_m10கல கலப் பக்கங்கள்--தென்கச்சியார் - Page 3 Poll_c10 
32 Posts - 25%
Dr.S.Soundarapandian
கல கலப் பக்கங்கள்--தென்கச்சியார் - Page 3 Poll_c10கல கலப் பக்கங்கள்--தென்கச்சியார் - Page 3 Poll_m10கல கலப் பக்கங்கள்--தென்கச்சியார் - Page 3 Poll_c10 
29 Posts - 23%
T.N.Balasubramanian
கல கலப் பக்கங்கள்--தென்கச்சியார் - Page 3 Poll_c10கல கலப் பக்கங்கள்--தென்கச்சியார் - Page 3 Poll_m10கல கலப் பக்கங்கள்--தென்கச்சியார் - Page 3 Poll_c10 
6 Posts - 5%
ayyamperumal
கல கலப் பக்கங்கள்--தென்கச்சியார் - Page 3 Poll_c10கல கலப் பக்கங்கள்--தென்கச்சியார் - Page 3 Poll_m10கல கலப் பக்கங்கள்--தென்கச்சியார் - Page 3 Poll_c10 
3 Posts - 2%
mohamed nizamudeen
கல கலப் பக்கங்கள்--தென்கச்சியார் - Page 3 Poll_c10கல கலப் பக்கங்கள்--தென்கச்சியார் - Page 3 Poll_m10கல கலப் பக்கங்கள்--தென்கச்சியார் - Page 3 Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
கல கலப் பக்கங்கள்--தென்கச்சியார் - Page 3 Poll_c10கல கலப் பக்கங்கள்--தென்கச்சியார் - Page 3 Poll_m10கல கலப் பக்கங்கள்--தென்கச்சியார் - Page 3 Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கல கலப் பக்கங்கள்--தென்கச்சியார் - Page 3 Poll_c10கல கலப் பக்கங்கள்--தென்கச்சியார் - Page 3 Poll_m10கல கலப் பக்கங்கள்--தென்கச்சியார் - Page 3 Poll_c10 
304 Posts - 50%
heezulia
கல கலப் பக்கங்கள்--தென்கச்சியார் - Page 3 Poll_c10கல கலப் பக்கங்கள்--தென்கச்சியார் - Page 3 Poll_m10கல கலப் பக்கங்கள்--தென்கச்சியார் - Page 3 Poll_c10 
179 Posts - 30%
Dr.S.Soundarapandian
கல கலப் பக்கங்கள்--தென்கச்சியார் - Page 3 Poll_c10கல கலப் பக்கங்கள்--தென்கச்சியார் - Page 3 Poll_m10கல கலப் பக்கங்கள்--தென்கச்சியார் - Page 3 Poll_c10 
59 Posts - 10%
T.N.Balasubramanian
கல கலப் பக்கங்கள்--தென்கச்சியார் - Page 3 Poll_c10கல கலப் பக்கங்கள்--தென்கச்சியார் - Page 3 Poll_m10கல கலப் பக்கங்கள்--தென்கச்சியார் - Page 3 Poll_c10 
26 Posts - 4%
mohamed nizamudeen
கல கலப் பக்கங்கள்--தென்கச்சியார் - Page 3 Poll_c10கல கலப் பக்கங்கள்--தென்கச்சியார் - Page 3 Poll_m10கல கலப் பக்கங்கள்--தென்கச்சியார் - Page 3 Poll_c10 
21 Posts - 3%
prajai
கல கலப் பக்கங்கள்--தென்கச்சியார் - Page 3 Poll_c10கல கலப் பக்கங்கள்--தென்கச்சியார் - Page 3 Poll_m10கல கலப் பக்கங்கள்--தென்கச்சியார் - Page 3 Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
கல கலப் பக்கங்கள்--தென்கச்சியார் - Page 3 Poll_c10கல கலப் பக்கங்கள்--தென்கச்சியார் - Page 3 Poll_m10கல கலப் பக்கங்கள்--தென்கச்சியார் - Page 3 Poll_c10 
3 Posts - 0%
JGNANASEHAR
கல கலப் பக்கங்கள்--தென்கச்சியார் - Page 3 Poll_c10கல கலப் பக்கங்கள்--தென்கச்சியார் - Page 3 Poll_m10கல கலப் பக்கங்கள்--தென்கச்சியார் - Page 3 Poll_c10 
2 Posts - 0%
Anitha Anbarasan
கல கலப் பக்கங்கள்--தென்கச்சியார் - Page 3 Poll_c10கல கலப் பக்கங்கள்--தென்கச்சியார் - Page 3 Poll_m10கல கலப் பக்கங்கள்--தென்கச்சியார் - Page 3 Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
கல கலப் பக்கங்கள்--தென்கச்சியார் - Page 3 Poll_c10கல கலப் பக்கங்கள்--தென்கச்சியார் - Page 3 Poll_m10கல கலப் பக்கங்கள்--தென்கச்சியார் - Page 3 Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கல கலப் பக்கங்கள்--தென்கச்சியார்


   
   

Page 3 of 3 Previous  1, 2, 3

avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Fri Sep 12, 2014 1:01 pm

First topic message reminder :

அகந்தை அழிந்தது எப்படி?
- தென்கச்சி சுவாமிநாதன்


அ து மிகவும் பழைமையான ஒரு கோயில். அங்கே அர்ச்சகர்கள் நிறையப் பேர் இருந்தார்கள். எல்லோருமே பிரம்மச் சாரிகள். ஆகவே, அவர்கள் உடலில் வலிவு இருந்தது. முகத்தில் பொலிவு இருந்தது.
ஒரு நாள் -
அந்த ஆலயத்தின் முன்னால் சில குதி ரைகள் வந்து நின்றன. அவற்றிலிருந்து சில வீரர்கள் கீழே இறங்கினார்கள். உள்ளே வந் தார்கள்.
‘‘நாங்கள் அரண்மனையிலிருந்து வருகி றோம்’’ என்றார்கள் அந்த வீரர்கள்.
‘‘வாருங்கள்’’ என்றனர் அர்ச்சகர்கள்.
‘‘மன்னர் எங்களை அனுப்பி வைத்தார்!’’
‘‘என்ன வேண்டும் உங்களுக்கு?’’
‘‘நீங்கள்தான் வேண்டும்!’’
‘‘அப்படியென்றால்?’’
‘‘உங்களை அழைத்து வரச் சொன்னார் மன்னர்!’’
அர்ச்சகர்கள் அலட்சியமாக அவர்களைப் பார்த்தார்கள். ‘‘அரசனை வேண்டுமானால் இங்கே வரச்சொல்லுங்கள்!’’
அழைக்க வந்தவர்கள் திகைத்துப் போனார்கள். திரும்பிப் போனார்கள். அரசனிடம் விவரத்தைச் சொன்னார்கள். அரசர், அமைச்சர்களை வரச் சொன்னார். ஆலோசனை நடத்தினார்.
‘‘அர்ச்சகர்களின் அகந்தை அடங்க வேண்டும். அதற்கு என்ன செய்யலாம்?’’
ஒரு முடிவுக்கு வந்தார்கள். அதன்படி செய்தார்கள்.
அவ்வளவுதான். அதன் பிறகு அந்த அர்ச்சகர்களை அரண்மனைக்குக் கூப்பிட்டு அனுப்ப வேண்டிய அவசியமே வரவில்லை! அவர்களாகவே தேடி வர ஆரம்பித்தார்கள். ‘‘மன்னா! தங்களை ஆசீர்வாதம் பண்ண வந்திருக்கிறோம். இதோ அர்ச்சித்த மலர்களைக் கொண்டு வந்திருக்கிறோம். பெற்றுக் கொள்ளுங்கள்!’’ என்றார்கள்.
கூடவே சில கோரிக்கைகளையும் வைத்தார்கள். ‘‘மன்னா! நாங்கள் வீடு கட்ட வேண்டும். வீடுகளில் சில விழாக்களையும் சடங்குகளையும் நடத்த வேண்டும். அதற்கு நீங்கள்தான் அருள் புரிய வேண் டும்!’’
அர்ச்சகர்களின் இந்த மாற்றத்துக்கு என்ன காரணம்?
அரசன் என்ன செய்தார்?
வேறொன்றுமில்லை... அர்ச்சகர்கள் அத்தனை பேருக்கும் கல்யாணம் பண்ணி வைத்துவிட்டார். அவ்வளவுதான். அதன் பின், சொன்னபடி கேட்க ஆரம்பித்து விட்டார்கள் அர்ச்சகர்கள். இது, குருதேவர் ராமகிருஷ்ணர் சொன்ன ஒரு கதை.
நண்பர்களே! ஒன்றைப் புரிந்து கொள்ளுங்கள்.
இந்த உலகில் மூன்று வகைத் துறவுகள் இருப்பதாகச் சான்றோர்கள் சொல்லி இருக்கிறார்கள்.
அறிவையும் இன்பத்தையும் சமயத்துக்காக வெறுத்தல் - சமயத் துறவு. அதிகாரத்துக்காக வெறுத்தல் - போர்த் துறவு.
பணத்துக்காக வெறுத்தல் - பணத் துறவு.
இந்த மூன்றாவது வகைத் துறவே இன்றைக்கு அதிகமாகக் காணப்படுகிறது.

தொடரும்


avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Sun Sep 14, 2014 10:47 pm

சொர்க்கத்துக்கு அனுமதிச் சீட்டு!


ஒ ரு பெரிய மனிதன். இந்த உலகத்தில் மிகவும் வசதியாக வாழ்ந்தான்.

ஒரு நாள் அவன் உலக வாழ்க்கையை முடித்துக் கொண்டு சொர்க்கத்துக்குப் போனான்.

அங்கே போன பிறகுதான் தெரிந்தது... சொர்க்கத்தின் வாசல் கதவு மூடி இருந்தது.

மூடிய கதவின் முன்னால் போய் நின்றான்.
‘‘இங்கே யாருமே இல்லையா?’’ என்று உரக்கக் கத்தினான். பதில் இல்லை.

‘‘நான் ஒரு பெரிய மனிதன் வந்தி ருக்கிறேன். கதவைத் திறந்து விடு!’’

சற்று நேரத்தில் சித்ரகுப்தன் அங்கே வந்தான்.

உடனே இந்தப் பெரிய மனிதன், தனது சட்டைப்பையிலிருந்து பத்து ரூபாய் நோட்டை எடுத்து அவன் கையில் திணித்தான்.

‘‘இந்தா... இதை வெச்சுக்கோ... சீக்கிரம் கதவைத் திற... நான் உள்ளே போகணும்!’’

சித்ரகுப்தன் சிரித்தான்.
‘‘இதெல்லாம் உங்கள் பூலோக நடைமுறை கள்- லஞ்சம் கொடுக்கறது, கதவைத் திறக்கச் சொல்றது... அதெல்லாம் இங்கே ஒண்ணும் எடுபடாது!’’

‘‘அப்படின்னா நான் எப்படி உள்ளே வர்றது?’’

‘‘சொர்க்கத்துலே நுழையறதுக்கான அனு மதிச் சீட்டு கொண்டு வந்திருக்கியா?’’

‘‘அனுமதிச் சீட்டா? அது எங்கே கிடைக்கும், சொல். எவ்வளவு செலவானா லும் பரவாயில்லை. வாங்கிக்கலாம்.’’

‘‘அதைக் காசு கொடுத்து வாங்க முடியாது!’’

‘‘வேறே எப்படி வாங்கறது?’’

‘‘அடுத்தவர்களுக்கு ஏதாவது உதவி செஞ்சாத்தான் அது கிடைக்கும்.’’

‘‘என்ன சொல்றே நீ?’’

‘‘பூலோகத்துலே நீ செய்யுற புண்ணிய காரியங்கள்தான் சொர்க்கத்துலே நுழையறதுக் கான அனுமதிச் சீட்டு!’’

‘‘இப்ப நான் உள்ளே வர என்ன வழி?’’

‘‘பூலோகத்துலே நீ யாருக்காவது... ஏதாவது உதவி செஞ்சிருக்கியா?’’

பெரிய மனிதன் ரொம்ப நேரம் யோசித் தான்.

பிறகு சொன்னான்: ‘‘ஒரு முறை ஒரு கிழவிக்கு 10 காசு தானம் கொடுத்திருக்கேன்.... அப்புறம் இன்னொரு நாள் ஓர் அநாதைப் பையனுக்கு ஐந்து காசு கொடுத்திருக்கேன்.’’

‘‘கொஞ்சம் பொறு!’’ என்று சொல்லிவிட்டு சித்ரகுப்தன் உள்ளே போனான்.

கொஞ்ச நேரம் கழித்து வெளியே வந்தான்.

‘‘உள்ளே போய் சொர்க்கத்தின் தலைவர்கிட்டே உனது கதையைச் சொன்னேன். அவர் உடனே உத்தரவு போட்டுட் டார்!’’

‘‘என்ன உத்தரவு?’’

‘‘அந்தப் பதினஞ்சு காசை உன்கிட்டே திருப்பிக் கொடுத்துடச் சொன்னார்!’’

‘‘அப்புறம்?’’

‘‘உன்னை நரகத்துக்கே அனுப்பி வெச்சுடச் சொன்னார்!’’ பெரிய மனிதன் மயங்கி விழுந்தான்.

ஆன்மிக உலகில் பயணம் செய்கிறவர்கள் புரிந்து கொள்ள வேண்டிய ஒரு முக்கியமான பாடம்:

காசு கொடுத்து சொர்க்கத்தை வாங்க முடியாது; ஆனால், கருணையைக் கொடுத்து அதைச் சுலபமாக வாங்க முடியும்!


avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Sun Sep 14, 2014 10:48 pm

மாளிகையின் விலை ஒரு ரூபாய்!




க டலில் கப்பல் ஒன்று போய்க் கொண்டிருந்தது.
பக்தர் ஒருவர் அதில் பயணம் செய்தார்.
நடுக் கடலில், சூறாவளிக் காற்றில் கப்பல் சிக்கிக் கொண்டது.
‘கரையைத் தொடுவோமா?’ என்ற கவலை எல்லோரையும் பற்றிக் கொண்டது.
கப்பலைக் கட்டுப்படுத்த முடியவில்லை.
கப்பல் திசை மாறிப் போனது.
‘ஏதாவது பாறையில் மோதி மூழ்கி விடுமோ?’ என்கிற நிலைமை. பக்தர் கண்களை மூடினார். கடவுளை நினைத்து வேண்டினார்.
‘‘கடவுளே... எப்படியாவது என்னைக் காப்பாற்றி விடு! நான் உயிர் பிழைத்து ஊர் போய்ச் சேர்ந்து விட்டால் எனக்குச் சொந்தமான ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள மாளிகையை உனக்குக் காணிக்கையாக்குகிறேன்!’’
அவரது வேண்டுதல் பலித்தது.
புயல் ஓய்ந்தது.
கப்பல் பத்திரமாகக் கரைக்கு வந்து சேர்ந்தது.
கரையேறிய பக்தன் யோசித்தான்.
‘கப்பலில் என்னோடு ஏராளமானவர்கள் பயணம் செய்தனர். அவர்களும் பத்திரமாகக் கரையேறியிருக்கிறார் கள். நான் கொஞ்சம் அவசரப்பட்டு விட்டேனோ? ஆண் டவனுக்கு அப்படி ஒரு வாக்குறுதியைக் கொடுத்திருக்க வேண்டியதில்லையோ?’
பக்தரின் சிந்தனை தொடர்ந்தது.
‘எப்படி இருந்தாலும் பிரார்த்தனையிலிருந்து பின்வாங்க முடியாது. அதை நிறைவேற்ற வேண்டியது உண்மையான பக்தனின் கடமை. என்ன செய்யலாம்?’ யோசித்தான்.
முடிவாக, அவன் ஓர் ஏற்பாடு செய்தான்.
அந்த மாளிகையை ஏலம் விடுவதாக அறிவித்தான்.
ஏலம் கேட்க எல்லோரும் வந்து கூடினார்கள். அவன் சொன்னான்:
‘‘இந்த மாளிகையின் விலை ஒரு ரூபாய். இதன் தூணில் கட்டப்பட்டிருக்கும் பூனையின் விலை ஒரு கோடி ரூபாய். இரண்டையும் சேர்த்தே நீங்கள் ஏலம் கேட்க வேண்டும்!’’
ஏலம் கேட்டார்கள்.
விற்பனை முடிந்தது.
கோயிலுக்குப் போனான்.
‘‘கடவுளே... சொன்னபடி எனது மாளிகையை ஏலம் விட்டேன். அதற்குரிய தொகையை இதோ உனது உண்டியலில் சேர்த்து விட்டேன்!’’ என்றபடி ஒரு ரூபாயை உண்டியலில் போட்டுவிட்டு அந்த பக்தன் கம்பீரமாக வெளியே வந்தான்.
நண்பர்களே!
கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்.
இன்றைய பக்தி, கடவுளையும் வியாபாரப் பொருளாக்கி விடுகிறது!


avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Sun Sep 14, 2014 10:48 pm

குளித்தால் புனிதமா?




ஒ ரு பெரிய மனிதர். வேலைக்காரனைக் கூப்பிட்டார்.
‘‘புறப்படு!’’ என்றார்.
‘‘எங்கே?’’ என்றான்.
‘‘புனிதமான இடங்களுக்கெல்லாம் போய் வரலாம். புண்ணிய நதிகளிலெல்லாம் நீராடி வரலாம்.’’
‘‘குளிக்கறதுக்கு அவ்வளவு தூரம் போகணுங்களா முதலாளி?’’
‘‘அட முட்டாளே! ஒன்றைப் புரிந்து கொள்... புண்ணிய தீர்த்தங்களில் நீராடினால், நாம் செய்த பாவங்கள் எல்லாம் போகும். நாம் புனிதமடையலாம்!’’
‘‘அப்படின்னா... போயிட்டு வரலாங்க!’’
‘‘வெளியூர் சாப்பாடு எனக்கு சரிப்படாது... அதனாலேதான் வேளாவேளைக்குச் சமைச்சுப் போட உன்னை அழைச்சிக்கிட்டுப் போறேன். ஒரு மாசத்துக்குத் தேவையானதையெல்லாம் மூட்டை கட்டி எடுத்துக்கோ!’’
அவர்கள் இருவரும் புறப்பட்டார்கள். புனிதத் தலங்களுக்கெல்லாம் போனார்கள். புண்ணிய நதிகளில் எல்லாம் நீராடினார்கள். ஒரு மாதம் கழித்து ஊருக்குத் திரும்பினார்கள். வீட்டுக்கு வந்தவுடன் அந்த வேலைக்காரன் தன் முதலாளிக்கு வேண்டியதை அவசர அவசரமாகச் சமைத்தான்.
‘‘சாப்பிட வாங்க முதலாளி!’’ என்றான்.
பசியோடிருந்த முதலாளி வேகமாக வந்து உட்கார்ந்தார்.
வேலைக்காரன் பரிமாறினான்.
முதலாளியின் முகம் மாறியது.
முகம் சுளித்தார்.
மோசமான வாசனை. எங்கே இருந்து வருகிறது? சாப்பாட்டில் இருந்துதான்.
‘‘என்னடா சமையல் பண்ணியிருக்கே... துர்வாசனை. சகிக்க முடியல!’’ என்று சத்தம் போட்டார்.
அவன் பணிவோடு அவர் முன்னால் வந்து நின்று சொன்னான். ‘‘ஐயா... புனிதமான காய்கறிகளைக் கொண்டுதான் இன்னிக்கு சமையல் பண்ணியிருக்கேன்!’’
‘‘என்னடா சொல்றே?’’
‘‘அது வந்துங்க ஐயா... நாம இங்கே இருந்து புறப்படும்போது நம்ம தோட்டத்துலே விளைஞ்ச உருளைக் கிழங்கையும் கொஞ்சம் எடுத்துக்கிட்டு வந்தேன். நாம நீராடினபோதெல்லாம் நான் இந்த உருளைக் கிழங்குகளையும் புண்ணிய தீர்த்தத்துலே குளிப் பாட்டினேன். அந்த உருளைக் கிழங்கைத்தான் இப்ப உங்களுக்கு சமைச்சுப் போட்டேன்!’’
‘‘என்னடா இப்படி பண்ணிப்புட்டே?’’
‘‘புண்ணிய நதிகளிலே குளிச்சா, புனிதமாகலாம்னு சொன்னீங்களே முதலாளி?!’’
முதலாளி யோசிக்க ஆரம்பித்தார்.
புழக்கடையில் உள்ள கிணற்றில் குளிப்பதற்கும், புண்ணிய நதிகளில் குளிப்பதற்கும் வித்தியாசம் உண்டு!
ஆன்மிகம் சொல்லுகிறது.
வெளியே சுத்தமாக இருந்தால் மட்டும் போதாது!
உள்ளேயும் சுத்தமாக இருக்க வேண்டும்!


avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Sun Sep 14, 2014 10:48 pm

எதையும் சாப்பிடும் சாமியார்!




ஓ ர் ஊரில் ஒரு சாமியார் இருந்தார். ஆனாலும் அவர் ஒரே ஊரில் இருப்பதில்லை. ஒரு நாளைக்கு ஓர் ஊர் என்று போய்க் கொண்டே இருப்பார். யாரிடமும் எதுவும் பேச மாட்டார். எப்பவும் மௌன விரதம்.
அவரிடம் இன்னொரு விரதமும் உண்டு.
யாராவது விரும்பி அழைத்துச் சாப்பிடச் சொன்னால்... எதைப் போட்டாலும் சாப்பிட்டு விடுவார். பிடிக்கிறதோ பிடிக்கவில்லையோ... சிரமப்பட்டாவது சாப்பிட்டு விடுவார். அப்படி ஒரு பழக்கம்!
இப்படிப்பட்டவரை ஒரு கணவனும் மனைவியும் தங்கள் வீட்டுக்குச் சாப்பிடக் கூப்பிட்டார்கள். மறுக்காமல் போனார் சாமியார். இலை போட்டார் கள். சாப்பாடு பரிமாறினார்கள்.
சாப்பிட ஆரம்பித்தார் சாமியார். கணவனும் மனைவியும் கவனித்துப் பார்த்தார்கள். இவர் எதை விரும்பிச் சாப்பிடுகிறாரோ, அதை அதிகமாகக் கொண்டு வந்து வைக்க வேண்டும் என்பது அவர்களின் ஆசை.
அன்றைக்கென்று பார்த்துச் சமையலில் எதிர்பாராத விதமாக ஒரு கொட்டாங்கச்சித் துண்டு கலந்து விட்டது.
சாமியார் எதையும் மிச்சம் வைக்காமல் சாப்பிடுகிறவர் அல்லவா? ஆகவே, அந்தக் கொட்டாங்கச்சித் துண்டை எடுத்து வாயில் போட்டார். எப்படியோ சிரமப்பட்டுக் கடித்து மென்று விழுங்கி விட்டார்.
கணவர் இதைக் கவனித்தார். உடனே மனைவியின் காதைக் கடித்தார். ‘‘அடியேய்... இந்த சாமியாருக்குக் கொட்டாங்கச்சின்னா ரொம்பப் பிரியம் போலிருக்கு!’’
அவ்வளவுதான்! உடனே அந்தப் பெண்மணி விறுவிறுவென கொல்லைப் பக்கம் ஓடினாள். அங்கே கிடந்த தேங்காய் ஓடுகளையெல்லாம் பொறுக்கி வந்தாள். அம்மியில் வைத்து நொறுக்கினாள். அப்படியே அள்ளிக் கொண்டு வந்து சாமியாரின் இலையில் பயபக்தியோடு வைத்தாள்.
சாமியார் விழிக்க ஆரம்பித்தார். என்ன செய்வது? எதுவும் பேசாமல் அவற்றை அள்ளி வாயில் போட்டுக் கடிக்க ஆரம்பித்தார்.
கணவன் குதூகலிக்க ஆரம்பித்தான். ‘‘சாமி! இது உங்களுக்குப் பிடிக்கும்னு ஏற்கெனவே எங்களுக்குத் தெரியாமப் போச்சு! மன்னிக்கவும். கொஞ்சம் இருங்க... இன்னும் கொண்டு வர்றேன்!’’ என்றவன் ஒரு பெரிய கூடையை எடுத்துக் கொண்டு அடுத்த வீட்டுக் கொல்லைப் புறத்துக்கு ஓடினான். ஒரு மூட்டையுடன் திரும்பினான்.
சாமியாருக்கு விழி பிதுங்க ஆரம்பித்தது.
கண்கள் சிவந்து நீர் வழிந்தது!
கணவன் மனைவியிடம் சொன்னான்: ‘‘சாமி முகத்தை கவனிச்சியாடீ... ஆனந்தக் கண்ணீர்!’’
சாமியார் மெள்ள எழுந்தார்.
ஒரே ஓட்டம். கொல்லைப்புறமுள்ள முள் வேலியைத் தாண்டிக் குதித்துப் பறந்து போனார்!
‘‘சாமிக்கு நம்ம பேர்லே ஏதோ கோபம்... வாங்க, போய்க் கூப்பிட்டுக்கிட்டு வரலாம்!’’ _ கணவனும் மனைவியும் சாமியாரைத் துரத்திக் கொண்டு ஓடினார்கள்.
நண்பர்களே! இன்றைக்கு ஆன்மிகம் இப்படித்தான் நம்மையும் துரத்திக் கொண்டிருக்கிறது.
ஒரு வேடிக்கை என்ன தெரியுமா? கடவுளை நம்புகிறவர்களைவிட, கடவுளை எனக்குத் தெரியும் என்று சொல்கிறவர்களை நம்புகிறவர்கள் இன்றைக்கு அதிகமாகிப் போனார்கள்!


avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Sun Sep 14, 2014 10:49 pm

எலுமிச்சம்பழமும் பலாப்பழமும்!




ஆ லயம் ஒன்றின் வாசலில் அந்தப் பெரியவர் உட்கார்ந்திருந்தார். அருகில் ஓர் இளைஞன் நின்று கொண்டிருந்தான்.
பக்தர்கள் விதவிதமான பொருள்களைச் சுமந்தபடி உள்ளே சென்று கொண்டிருந்தனர்.
இளைஞன், பெரியவரிடம் கேட்டான்: ‘‘ஐயா... இவர்கள் எல்லாம் என்ன கொண்டு செல்கிறார்கள்?’’
‘‘பழங்கள்... பலகாரங்கள்!’’
‘‘எதற்காக?’’
‘‘ஆண்டவன் காலடியில் வைத்துப் படைப்பதற்காக!’’
‘‘இவை எல்லாம் ஆண்டவனுக்குப் பிடிக்குமா?’’
‘‘இவர்களுக்குப் பிடிக்கும்!’’
‘‘அப்படியென்றால்?’’
‘‘திரும்ப எடுத்துக் கொண்டு வந்து இவர்களே சாப்பிட்டு விடுவார்கள்!’’
‘‘வேடிக்கையாக இருக்கிறது!’’
‘‘ஒரு மன்னரின் கதை தெரியுமா உனக்கு?’’
‘‘என்ன அது?’’
‘‘ஒரு வேடிக்கையான மன்னர். அவருக்குப் பிறந்த நாள் வந்தது. அவருக்கு வாழ்த்துச் சொல்வதற்காக மக்கள் வரிசையாக நின்று கொண்டிருந்தனர். அவர்கள் கையில் விதவிதமான பழங்கள். அந்த மன்னர் சில நேரங்களில் இயல்பாக நடந்து கொள்வார். சில நேரங்களில் விபரீதமாக நடந்து கொள்வார். வரிசையில் நின்றவர்களில் முதல் ஆள் உள்ளே சென்றார். அவர் கையில் ஒரு எலுமிச்சம்பழம். அதை மன்னர் கையில் கொடுத்தார். மன்னர் அதை வாங்கி என்ன செய்தார் தெரியுமா?’’
‘‘என்ன செய்தார்?’’
‘‘அதைக் கொடுத்தவர் வாயைத் திறக்கச் சொன்னார். அவர் திறந்தார். மன்னர் உடனே எலுமிச்சம்பழத்தை அவர் வாயில் திணித்து ஒரு நாள் முழுதும் ‘இப்படியே இருக்க வேண்டும்’ என்று உத்தரவு போட்டு விட்டார். மன்னர் உத்தரவை மீற முடியுமா, என்ன? எலுமிச்சம்பழம் கொண்டு வந்தவர், அதைத் தன் வாயில் கவ்வியபடியே வெளியே சென்றார். அதற்கு முன்பாக மன்னரைப் பார்த்து ஒரு சிரிப்புச் சிரித்தார்.
‘ஏன் சிரிக்கிறே?’ என்றார் மன்னர் கோபமாக.
‘அதுக்கில்லே மன்னா... இந்த எலுமிச்சம்பழத்தை ஒரு நாள் முழுவதும் என் வாயிலே வெச்சிருக்கிறது எனக்கு ஒன்றும் கஷ்டமில்லே. ஆனா... இதே வரிசையிலே பின்னால ஒருத் தன் வந்துகிட்டிருக்கான். அவன் நிலைமையை நினைச்சுப் பார்த்தேன்... சிரிப்பு வந்துட்டது!’ என்றான்.
‘ஏன்?’ என்று கேட்டார் மன்னர்.
‘அவன் கையிலே பெரிய பலாப் பழத்தை வெச்சிட்டு நிக்கறான்’ என்றான் வந்தவன்!’’_ முடித்தார் பெரியவர்.
இந்தக் கதையைக் கேட்ட இளைஞன் வாய்விட்டுச் சிரித்தான். ‘‘இப்படித்தான் இருக்கிறது இந்த பக்தர்களின் செய்கையும்!’’ என்றார் பெரியவர்.
‘‘அப்படியானால், ஆண்டவன் காலடியில் வைக்கக் கூடிய எதுவும் நம்மிடம் இல்லையா?’’
‘‘ஏன் இல்லை... இருக்கிறது. நம் எல்லோரிடமும் அது இருக்கிறது! அதைத்தான் இறைவனிடம் சமர்ப்பிக்க வேண்டும்!’’
‘‘என்ன அது?’’
‘‘நம்மிடம் இருக்கிற ஆணவம்!’’


avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Sun Sep 14, 2014 10:50 pm

நாயாக மாறிய கழுதை!




கா லை நேரம். அந்த மனிதன் நடந்து போய்க் கொண்டி ருந்தான். கூடவே, அவனது நாயும் நடந்து போகிறது. அவன் மிகவும் செல்லமாக வளர்க்கும் நாய் அது. அவன் ஒரு கழுதையையும் வளர்த்து வந்தான்.
நாய், நடு வீட்டில் விளையாடிக் கொண்டிருக்கும். கழுதை, கொல்லைப் புறத்தில் நின்று கொண்டிருக்கும்.அந்த நாய்க்கு வீட்டுக்குள் ராஜ மரியாதை நடக்கும்.
அது குளிப்பதற்கு என்று தனியாக சோப். இரண்டு வேளை பால்; பிஸ்கட். மதியம் சத்துள்ள சாப்பாடு. கொஞ்சம் சோர்ந்து காணப்பட்டால், உடனே தூக்கிக் கொண்டு மருத்துவமனைக்கு ஓடுவார்கள்.
காலையில் முதலாளியுடன் நடைப் பயிற்சி. முதலாளி தனியாக எங்காவது வெளியே சென்று விட்டு, மாலையில் வீடு திரும்பினால்... அந்த நாய் ஆவலோடு ஓடி வரும். அப்படியே எழும்பி முன்னங்கால் இரண்டையும் அவர் தோள் மீது போட்டுக் கொள்ளும். அவரும் சிரித்துக் கொண்டே அதன் முதுகில் செல்லமாகத் தட்டிக் கொடுப்பார்.
சாய்வு நாற்காலியில் சாய்ந்தபடி முதலாளி செய்தித்தாள் படிப்பார் அல்லது தொலைக்காட்சி பார்ப்பார். அப்போதெல்லாம் இந்த நாய் அவர் காலடியில் படுத்துக் கிடக்கும். அவரின் கை இதன் தலையை செல்லமாகத் தடவிக் கொண்டிருக்கும்.
அந்த நாய் படுப்பதற்கென்றே ஒரு மெத்தை. சில நேரம் அது அங்கே இருக்கும் மேஜை- நாற்காலி மீது கூட ஏறி விளையாடும். சோபாவில் ஏறி உட்கார்ந்து கொள்ளும். அவ்வளவு செல்வாக்கு. இவ்வளவையும் அந்தக் கழுதை கொல்லைப் புறத்தில் இருந்தே கவனித்தது. அப்புறம் யோசித்தது.
‘என்ன இது... இந்த வீட்டுல நாம கழுதையா உழைக்கிறோம். பொதி சுமக்கிறோம். நமக்கு ஒரு நல்ல சாப்பாடு கிடையாது... படுக்கை கிடையாது... ஒரு நாளாவது நம்ம தலையையோ, முதுகையோ நம்ம முதலாளி தடவிக் கொடுத்தது கிடையாது. ஆனா, இந்த நாய் இந்த வீட்டுக்காக ஒரு நாள் கூட ஒரு துரும்பைக்கூட அசைச்சது இல்லை. அதைப் போய் இந்த வீட்டுல உள்ளவங்க இப்படி தலையிலே வெச்சுத் தாங்கறாங்களே?’ இப்படி யோசித்த கழுதை, இறுதியாக ஒரு முடிவுக்கு வந்தது. ‘சரி... இனிமே நாமும் அந்த நாய் மாதிரியே நடந்துக்குவோம். அதுக்குப் பிறகாவது நமக்கும் அந்த மரியாதை கிடைக்குதா பார்க்கலாம்!’
முதலாளி எங்கோ வெளியே சுற்றிவிட்டுக் களைப்போடு வீடு திரும்பினார். இந்தக் கழுதை அவரிடம் ஓடியது. முன்னங்கால்களை அவர் தோள் மீது தூக்கிப் போட்டது. நடுங்கிப் போனார் முதலாளி. விலகி ஓடினார். கழுதை அவர் பின்னாலேயே ஓடி, நாய் மாதிரி தன் வாலை ஆட்டிக் கொண்டே அவரைச் சுற்றிச் சுற்றி வந்தது. உள்ளே ஓடினார். கழுதை விடவில்லை. உள்ளே ஓடி அங்கே இருந்த மேஜை மீது தாவி ஏறி உட்கார்ந்தது. பொருள்கள் எல்லாம் கீழே விழுந்து சிதறின.
முதலாளி பார்த்தார். ‘‘இந்தக் கழுதைக்கு என்னமோ ஆயிட்டுது!’’ என்று முனகிக் கொண்டே ஓடிப் போய் ஒரு பெரிய கயிறு கொண்டு வந்தார். கழுதையின் கால்களையும் கழுத்தையும் சேர்த்துக் கட்டினார். கொல்லைப் புறத்துக்கு இழுத்துப் போய் தள்ளி விட்டார். சாப்பாடு எதுவும் கொடுக்காமல் பட்டினி போட்டார்.
இப்போது அந்தக் கழுதை யோசித்ததாம்: ‘இந்த மனிதனுக்கு என்ன ஆயிற்று?’
இயல்பு மாறினால் இதுதான் நிலைமை. இயற்கையின் படைப்புகள் பாதை மாறிப் போகக் கூடாது. இது ஆன்மிகத்தில் ஒரு முக்கியமான பாடம்.
ஆகவே, இன்றைய மனிதர்கள் முக்கியமாகத் தெரிந்து கொள்ள வேண்டியது: தாங்கள் எப்போதும் மனிதர்களாக நடந்து கொள்ள வேண்டும் என்பதுதான்!


avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Sun Sep 14, 2014 10:52 pm

கரடிகள் சொல்லும் உண்மை!



இ ரண்டு நண்பர்கள் ஒரு காட்டில் நடந்து போய்க் கொண்டிருக்கிறார்கள். எதிரே திடீரென்று ஒரு கரடி நடந்து வந்து கொண்டிருக்கிறது.
‘‘இப்ப என்னடா பண்றது?’’ என்றான் ஒருத்தன்.
‘‘எப்படியாவது தப்பிக்கணும்!’’ என்றான் இன்னொருத்தன்.
ஒருவன் பக்கத்தில் இருந்த மரத்தைப் பார்த்தான். கிடுகிடுவென்று அதில் ஏறி உச்சியில் போய் உட்கார்ந்து கொண்டான்.
இன்னொருவன், அருகே தெரிந்த குகை ஒன்றில் ஓடி ஒளிந்து கொண்டான்.
கரடி வந்தது. மரத்தடியில் நின்று கொண்டது.
குகைக்குள் ஓடியவன் இரண்டு நிமிடங்கள் கழித்து வெளியே வந்து எட்டிப் பார்த்தான்.
கரடி கண்ணில் பட்டது. உடனே உள்ளே போய்விட்டான்.
இரண்டு நிமிடங்கள் கழிந்தன. மறுபடி வந்து எட்டிப் பார்த்தான். உடனே உள்ளே போய் விட்டான்.
இப்படியே தொடர்ந்து செய்து கொண்டிருந்தான்.
மர உச்சியில் இருந்தவன் இதைத் தொடர்ந்து கவனித்துவிட்டு, அங்கே இருந்து கத்தினான்: ‘‘ஏய்... முட்டாள்... எதுக்காக இப்படி அடிக்கடி வந்து வெளியே தலையை நீட்டுறே? பேசாம உள்ளேயே இருக்க வேண்டியதுதானே?’’
இதற்கு அவன் சொன்னான்: ‘‘உள்ளேயும் ஒரு கரடி இருக்கிறது!’’
நண்பர்களே! இது ஒரு வேடிக்கைக் கதை.
அந்த இரண்டு கரடிகளுமே உண்மையில் கரடிகள் அல்ல.
அவை... அச்சத்தின் அடையாளங்கள்.
அந்த இரண்டு நண்பர்கள் யார் தெரியுமா?
ஒருவர் ‘கடவுள் உண்டு’ என்று சொல்கிறவர்; இன்னொருவர் ‘கடவுள் இல்லை’ என்று சொல்கிறவர்.
உண்டு என்பதில் உறுதியாக இருக்கிறவர்களும் பயப்படத் தேவை இல்லை; இல்லை என்பதில் உறுதியாக இருப்பவர்களும் பயப்படத் தேவையில்லை!
ஆனால், இன்றைக்கு பயப்படாத மனிதர்கள் யாருமே இல்லை!
ஒரு ஞானியிடம் கேட்டார்கள். ‘‘கடவுள் எப்போதும் நம்முடன் இருக்கிறார் என்பதை ஏன் எல்லோரும் ஏற்க மறுக்கிறார்கள்?’’
ஞானி சொன்னார்: ‘‘எல்லாம் ஒரு பாதுகாப்புக்காகத் தான்!’’
‘‘என்ன சொல்கிறீர்கள்... புரியவில்லையே!’’
‘‘விவரமாகச் சொல்கிறேன்... கடவுள் தன்னுடனே இருக்கிறார் என்று நம்பினால், அவனால் எந்தக் குற்றமும் செய்ய முடியாது. ஒரு நல்லவன் உங்கள் கூடவே இருக்கிறான் என்பதை உங்களால் சகித்துக் கொள்ள முடியுமா?
இதை ஈடுகட்டுவதற்காகவேதான் உருவ வழிபாடு வந்தது! நம் உள்ளே இருக்கிற கடவுளைத் தூக்கி வெளியே வைத்துவிட்டு, குற்றங்கள் பல புரிந்து, அதற்கு ஈடாக வேண்டுதல், பாவ மன்னிப்பு, கொண்டாடுதல் - இப்படி சௌகரியமாகப் பல காரியங்களைச் செய்து... ஒரு பொய் சக்தியைத் தேடிக் கொள்வது எவ்வளவு எளிது?’’


avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Sun Sep 14, 2014 10:55 pm

கதவைத் திறக்க முடிந்ததா?

‘எ ல்லாம் என்னால்தான் நடக்கிறது!’ என்று மனிதன் நினைத்துக் கொண்டிருக்கிறான். ஆனால், இவன் இல்லாமலே எல்லாம் நடந்து கொண்டிருக்கிறது.
இந்த உண்மையைப் புரிந்து கொள்வதுதான் ஆன்மிகம்.
ஒரு மனநோய் மருத்துவமனை. ஏராளமானவர்கள் அங்கு சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டிருந்தார்கள். எட்டுப் பேர் மட்டும் அவர்களின் மத்தியில் கொஞ்சம் தெளிந்தவர்களாகத் தெரிந்தார்கள். ஆனாலும் முற்றிலும் குணமாகவில்லை!
தலைமை மருத்துவர் யோசித்தார்.
அந்த எட்டுப் பேருக்கும் ஒரு சோதனை வைப் போம்... அதில் தேறியவர்களை மட்டும் வீட்டுக்கு அனுப்பி விடலாம் என்று முடிவு செய்தார்.
என்ன சோதனை தெரியுமா?
ஒரு நீளமான சுவர் அங்கே இருந்தது. அதில் ‘பெயிண்ட்’டால் அழகான கதவு மாதிரி வரைய வேண்டும்.
அதற்கென சிறந்த ஓவியர் ஒருவரை அங்கே வரவழைத்தார். ‘‘பார்த்தால் நிஜக் கதவு மாதிரியே தெரிய வேண்டும். வரையுங்கள்’’ என்றார்.
அவரும் அப்படியே வரைந்து வண்ணம் பூசிக் கொடுத்தார்.
மறு நாள் அந்த எட்டு மன நோயாளிகளையும் அங்கே அழைத்துக் கொண்டு வந்தார். ‘‘நண்பர்களே! அந்தக் கதவைத் திறந்து காட்டுங்கள், பார்க்கலாம்’’ என்றார்.
ஏழு பேர் அதன் மீது முட்டி மோதி, அதைத் திறக்க முயன்றார்கள்.
ஒருவர் மட்டும் சிரித்துக் கொண்டே ஒரு மூலை யில் உட்கார்ந்திருந்தார். ‘இவர் பரவாயில்லை!’ என்று நினைத்த டாக்டர் அவரிடம் போனார்.
‘‘ஏன் சிரிக்கிறீர்கள்?’’ என்று கேட்டார்.
‘‘பாவம்... அவர்கள் அநாவசியமாக அங்கே முட்டி மோதிக் கொண்டு கிடக்கிறார்கள்!’’
‘‘ஏன்... அதில் என்ன தவறு?’’
‘‘அவர்களால் அந்தக் கதவைத் திறக்க முடியாது!’’
‘‘ஏன்?’’
‘‘அவர்கள் ஏழு பேரும் முட்டாள்கள்!’’
‘‘இருக்கட்டுமே... அதனால் என்ன? தொடர்ந்து முயற்சி செய்தால் முடியாதா?
‘‘நிச்சயமாக முடியாது!’’
‘‘எப்படி அவ்வளவு உறுதியாகச் சொல்றீங்க?’’
‘‘அந்தக் கதவோட சாவி என் கையில் இருக்கும் போது அவர்களால் எப்படி அந்தக் கதவைத் திறக்க முடியும்?’’ என்றான் சிரித்துக் கொண்டே!
அவன் கையில் இருப்பது டாக்டரின் கார் சாவி. நண்பர்களே! ஆணவத்துக்குத் தீனி போடாதீர்கள்.
அது, நமது ஆன்மிகப் பயணத்தின் வேகத்தைக் குறைக்கும்!


avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Sun Sep 14, 2014 10:59 pm

பல் இல்லாத பக்தர்கள்...!




ஒ ரு பெரிய மனிதர். பக்தி மான். அவருக்குப் பல் வலி. வேலைக்காரனைக் கூப்பிட்டார்.
‘‘நீ உடனே போய் பல் வைத்தியர் ஒருவரை அழைத்து வா!’’ என்றார்.
பல் வைத்தியர் வந்து சேர்ந்தார். இவர் பல்லைக் காட்டினார். சோதித்துப் பார்த்து விட்டு அவர் சொன்னார்: ‘‘இந்தப் பல்லை எடுத்துடறதுதான் நல்லது!’’
‘‘சரி... எடுத்துடுங்க!’’ என்றார் இவர்.
இந்த நேரத்தில் வாசல் பக்கம் யாரோ வருவது தெரிந்தது. பார்த்தார். அவர் அடுத்த ஊரைச் சேர்ந்த இன்னொரு பெரிய மனிதர். வேறொரு கடவுளின் பக்தர் அவர். உடனே இவர், ஒரு ‘ஐடியா’ பண்ணினார்.
‘‘வைத்தியரே... நீங்க கொஞ்ச நேரம் அடுத்த அறையில் போய் இருந்துக்கோங்க. நான் கூப்பிடும் போது வரலாம். எடுக்க வேண்டிய பல் இதுதான்... பார்த்துக்கோங்க!’’
அவரும் ‘‘சரி’’ என்று சொல்லிவிட்டு, அடுத்த அறைக்குள் சென்று விட்டார்.
அடுத்த ஊர் பெரிய மனிதர் உள்ளே வந்தார். இருவரும் பேச ஆரம்பித்தார்கள்.
‘‘உங்கள் கடவுளிடம், நீங்க வெச்சிருக்கிற பக்தியை விட, எங்கள் கடவுள் மேலே நான் வெச்சிருக்கிற பக்தி அதிகம்!’’ என்றார் இவர்.
‘‘எப்படி சொல்றீங்க...?’’ என்றார் அவர்.
‘‘நீங்க, உங்க கடவுளுக்கு என்ன காணிக்கை செலுத்தறீங்க?’’
‘‘முடி காணிக்கை செலுத்துவோம்!’’
‘‘நான் எங்க கடவுளுக்கு என் பல்லையே காணிக்கையா இப்ப செலுத்தப் போறேன்.’’
‘‘என்ன சொல்றீங்க?’’
‘‘கொஞ்சம் பொறுங்க!’’ என்று சொல்லிவிட்டு வேலைக்காரனைக் கூப்பிட்டு, ‘‘அவரை அழைத்துக் கொண்டு வா!’’ என்றார்.
பல் வைத்தியர் வந்தார்.
‘‘இதோ பாருங்க... என் கடவுளுக்கு என் பல்லையே காணிக்கையா செலுத்த விரும்பறேன். அதனால ஒரு பல்லைப் பிடுங்கி எடுத்துடுங்க!’’
பல் வைத்தியர் புரிந்து கொண்டார். அந்தச் சொத்தைப் பல்லைச் சரியாகப் பிடுங்கி எடுத்து விட்டார்.
இதைப் பார்த்த அடுத்த ஊர்ப் பிரமுகருக்கு ஆவேசம் வந்து விட்டது.
‘‘நானும் பக்தியில் உங்களைவிட குறைந்தவன் இல்லை!’’ என்று சொல்லிவிட்டு, ‘‘ஐயா வைத்தியரே... அவரு ஒரு பல்லைத்தானே தியாகம் பண்ணினார். நான் என் கடவுளுக்காக இரண்டு பற்களைத் தியாகம் பண்றேன். வாங்க... என்கிட்டே இருந்து இரண்டு பற்களைப் பிடுங்கி எடுத்துடுங்க!’’ என்றார்.
வைத்தியர் பார்த்தார். அவருக்கா வலிக்கப் போகிறது? நல்ல பல்லாகப் பார்த்து இரண்டைப் பிடுங்கிப் போட்டு விட்டார். இப்போது பல் இல்லாத அந்த இரண்டு பக்தர்களும் ஒருவரைப் பார்த்து ஒருவர் பெருமையாகச் சிரித்துக் கொண்டிருக்கிறார்கள்.
இவர்களைப் பற்றி நான் என்ன சொல்வது? கடவுளே இவர்களைப் பார்த்துச் சிரித்துக் கொண்டிருக்கிறார்!


Sponsored content

PostSponsored content



Page 3 of 3 Previous  1, 2, 3

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக