ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Today at 19:01

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Today at 10:28

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Today at 10:27

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Today at 10:04

» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 9:59

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 8:49

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 8:49

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 8:36

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 18:20

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 18:06

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 17:56

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:37

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 16:50

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 14:19

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:09

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:56

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 13:20

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:14

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 13:10

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 13:06

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:55

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 11:27

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 11:25

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 11:23

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 11:20

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Yesterday at 0:45

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 0:41

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Yesterday at 0:40

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun 2 Jun 2024 - 23:12

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun 2 Jun 2024 - 19:03

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun 2 Jun 2024 - 18:49

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun 2 Jun 2024 - 18:47

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun 2 Jun 2024 - 16:16

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun 2 Jun 2024 - 15:09

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun 2 Jun 2024 - 13:32

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:59

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:52

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:31

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:30

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:25

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:23

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:22

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:21

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat 1 Jun 2024 - 21:20

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:20

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 16:46

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 14:50

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 14:46

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 14:27

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 8:13

Top posting users this week
ayyasamy ram
கல கலப் பக்கங்கள்--தென்கச்சியார் Poll_c10கல கலப் பக்கங்கள்--தென்கச்சியார் Poll_m10கல கலப் பக்கங்கள்--தென்கச்சியார் Poll_c10 
heezulia
கல கலப் பக்கங்கள்--தென்கச்சியார் Poll_c10கல கலப் பக்கங்கள்--தென்கச்சியார் Poll_m10கல கலப் பக்கங்கள்--தென்கச்சியார் Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

கல கலப் பக்கங்கள்--தென்கச்சியார்

3 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

கல கலப் பக்கங்கள்--தென்கச்சியார் Empty கல கலப் பக்கங்கள்--தென்கச்சியார்

Post by தமிழ்நேசன்1981 Fri 12 Sep 2014 - 13:01

அகந்தை அழிந்தது எப்படி?
- தென்கச்சி சுவாமிநாதன்


அ து மிகவும் பழைமையான ஒரு கோயில். அங்கே அர்ச்சகர்கள் நிறையப் பேர் இருந்தார்கள். எல்லோருமே பிரம்மச் சாரிகள். ஆகவே, அவர்கள் உடலில் வலிவு இருந்தது. முகத்தில் பொலிவு இருந்தது.
ஒரு நாள் -
அந்த ஆலயத்தின் முன்னால் சில குதி ரைகள் வந்து நின்றன. அவற்றிலிருந்து சில வீரர்கள் கீழே இறங்கினார்கள். உள்ளே வந் தார்கள்.
‘‘நாங்கள் அரண்மனையிலிருந்து வருகி றோம்’’ என்றார்கள் அந்த வீரர்கள்.
‘‘வாருங்கள்’’ என்றனர் அர்ச்சகர்கள்.
‘‘மன்னர் எங்களை அனுப்பி வைத்தார்!’’
‘‘என்ன வேண்டும் உங்களுக்கு?’’
‘‘நீங்கள்தான் வேண்டும்!’’
‘‘அப்படியென்றால்?’’
‘‘உங்களை அழைத்து வரச் சொன்னார் மன்னர்!’’
அர்ச்சகர்கள் அலட்சியமாக அவர்களைப் பார்த்தார்கள். ‘‘அரசனை வேண்டுமானால் இங்கே வரச்சொல்லுங்கள்!’’
அழைக்க வந்தவர்கள் திகைத்துப் போனார்கள். திரும்பிப் போனார்கள். அரசனிடம் விவரத்தைச் சொன்னார்கள். அரசர், அமைச்சர்களை வரச் சொன்னார். ஆலோசனை நடத்தினார்.
‘‘அர்ச்சகர்களின் அகந்தை அடங்க வேண்டும். அதற்கு என்ன செய்யலாம்?’’
ஒரு முடிவுக்கு வந்தார்கள். அதன்படி செய்தார்கள்.
அவ்வளவுதான். அதன் பிறகு அந்த அர்ச்சகர்களை அரண்மனைக்குக் கூப்பிட்டு அனுப்ப வேண்டிய அவசியமே வரவில்லை! அவர்களாகவே தேடி வர ஆரம்பித்தார்கள். ‘‘மன்னா! தங்களை ஆசீர்வாதம் பண்ண வந்திருக்கிறோம். இதோ அர்ச்சித்த மலர்களைக் கொண்டு வந்திருக்கிறோம். பெற்றுக் கொள்ளுங்கள்!’’ என்றார்கள்.
கூடவே சில கோரிக்கைகளையும் வைத்தார்கள். ‘‘மன்னா! நாங்கள் வீடு கட்ட வேண்டும். வீடுகளில் சில விழாக்களையும் சடங்குகளையும் நடத்த வேண்டும். அதற்கு நீங்கள்தான் அருள் புரிய வேண் டும்!’’
அர்ச்சகர்களின் இந்த மாற்றத்துக்கு என்ன காரணம்?
அரசன் என்ன செய்தார்?
வேறொன்றுமில்லை... அர்ச்சகர்கள் அத்தனை பேருக்கும் கல்யாணம் பண்ணி வைத்துவிட்டார். அவ்வளவுதான். அதன் பின், சொன்னபடி கேட்க ஆரம்பித்து விட்டார்கள் அர்ச்சகர்கள். இது, குருதேவர் ராமகிருஷ்ணர் சொன்ன ஒரு கதை.
நண்பர்களே! ஒன்றைப் புரிந்து கொள்ளுங்கள்.
இந்த உலகில் மூன்று வகைத் துறவுகள் இருப்பதாகச் சான்றோர்கள் சொல்லி இருக்கிறார்கள்.
அறிவையும் இன்பத்தையும் சமயத்துக்காக வெறுத்தல் - சமயத் துறவு. அதிகாரத்துக்காக வெறுத்தல் - போர்த் துறவு.
பணத்துக்காக வெறுத்தல் - பணத் துறவு.
இந்த மூன்றாவது வகைத் துறவே இன்றைக்கு அதிகமாகக் காணப்படுகிறது.

தொடரும்
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Back to top Go down

கல கலப் பக்கங்கள்--தென்கச்சியார் Empty Re: கல கலப் பக்கங்கள்--தென்கச்சியார்

Post by தமிழ்நேசன்1981 Fri 12 Sep 2014 - 15:33

இவன் எதிரி இல்லையே!
- தென்கச்சி சுவாமிநாதன்


ஓர் ஊரில் பெரியவர் ஒருவர் இருந்தார்.

அவர் ஒரு நாள் தன் நண்பரின் வீட்டுக்குப் போயிருந்தார். வீட்டு வாசலில் இரண்டு குழந்தைகள் விளையாடிக் கொண்டிருந்தன.

மூன்று வயதில் ஒரு பெண் குழந்தை; இரண்டு வயதில் ஓர் ஆண் குழந்தை. அவர்கள் இருவரும் அந்த நண்பரின் பிள்ளைகள்.

இந்தப் பெரியவர் அங்கே போய்ச் சேர்ந்த சமயத்தில் மூன்று வயதுச் சிறுமி இரண்டு வயதுச் சிறுவனைத் திட்டிக் கொண்டிருந்தாள்... ‘‘உன் மண்டையிலே இருக்கிறது மூளை இல்லை... களிமண்ணு! அதனாலதான் நீ சரியா படிக்க மாட்டேங்கறே. உன்னைப் போல ஒரு முட்டாள் இந்த உலகத்துல யாருமே கிடையாது!’’

பெரியவர் இதைக் கவனித்தார்.

உடனே அந்தச் சிறுமியை அருகில் அழைத்தார். ‘‘குழந்தே... இங்கே வா!’’

அவள் வந்தாள். இவர் கேட்டார்: ‘‘ஏன் இப்படி சண்டை போடுகிறாய்?’’

‘‘அவன் ஒரு திருடன்!’’

‘‘அப்படியா?’’

‘‘ஆமாம்!’’

‘‘அப்படி என்னத்தைத் திருடினான்?’’

‘‘நான் விளையாடுவதற்காக வைத்திருந்த என்னுடைய கரடி பொம்மையைத் திருடி விட்டான்!’’

‘‘அப்படின்னா... அவன் செஞ்சது தப்புதான்.’’

‘‘அதனாலதான் திட்டினேன்.’’

‘‘இதுவும் தப்புதான்!’’

‘‘என்ன சொல்றீங்க?’’

‘‘நான் சொல்லலே... பெரிய மகான்கள் எல்லாம் சொல்லியிருக்காங்க.’’

‘‘என்ன சொல்லி இருக்காங்க?’’

‘‘மனிதன் செய்கிற செயல்களிலேயே மிகவும் சிறந்த செயல் _ அடுத்தவர்களை மன்னிக்கறதுதான் என்று சொல்லியிருக்கிறார்கள்!’’

‘‘அப்புறம் என்ன சொல்லியிருக்காங்க?’’

‘‘நாம் யார் கூடவும் சண்டை போடக் கூடாது. நமக்கு எதிரியாக இருந்தாலும் நாம் அவர்களை மன்னிக்க வேண்டும்!’’

‘‘நீங்க சொல்றது சரி... இவன் என் எதிரியாக இருந்தால் மன்னிக்கலாம். இவன் என் எதிரி இல்லையே!’’

‘‘பின்னே...’’

‘‘என் சகோதரன்!’’

இது ஒரு வேடிக்கைக் கதை. என்றாலும் நடைமுறை வாழ்க்கையில் நாம் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும்.

அதாவது, ஆன்மிக உலகில் அறிவுரை சொல்கிறவனைவிட, அதை ஏற்றுச் செயல் படுத்துகிறவன் சில சமயம் உயர்ந்து விடுகிறான்.

தொடரும்
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Back to top Go down

கல கலப் பக்கங்கள்--தென்கச்சியார் Empty Re: கல கலப் பக்கங்கள்--தென்கச்சியார்

Post by தமிழ்நேசன்1981 Fri 12 Sep 2014 - 15:56

வாழ வைக்கும் நம்பிக்கை!
தென்கச்சி சுவாமிநாதன்


ஓ ர் ஊரில் பெரிய குளம் ஒன்று இருந்தது.

அந்தக் குளம் ஒரு பெரிய மனிதருக்குச் சொந்தமானது.

அதில் பல வகையான மீன்களை விட்டு வளர்த்துக் கொண்டிருந்தார். மீன்கள் வளர வளர அவற்றைப் பிடித்து விற்பனை செய்வது அவரது வழக்கம். அதில் நல்ல லாபம் கிடைத்து வந்தது.
இந்த நிலையில் அந்தக் குளத்தில் இருந்த மீன்கள் அவ்வப்போது திருட்டுப் போக ஆரம்பித்தன.

யார் திருடுவது?

அதைக் கண்டுபிடிக்க ரகசியமாக சில காவலர்களை நியமித்தார்.

வழக்கமாகத் திருடுகிறவன், ஒரு நாள் இரவு நேரத்தில் வலை வைத்து மீன்களைப் பிடித்துக் கொண்டிருந்தான்.

காவலர்கள் கையில் விளக்குடன் வருவது கண்ணில் பட்டது.
அவ்வளவுதான்! அவன் பிடித்த மீன்கள் அனைத்தையும் குளத்திலேயே போட்டுவிட்டு பக்கத்திலிருந்த மரங்களுக்கு இடையே ஓடினான்.

காவலர்கள் நெருங்குவது தெரிந்தது.

பளிச்சென்று அவனுக்குள் ஒரு யோசனை. உடம்பெல்லாம் சாம்பலைப் பூசிக்கொண்டான். ஒரு மரத்தடியில் சாமியார் மாதிரி கண்களை மூடிக் கொண்டு உட்கார்ந்து விட்டான்.

காவலர்கள் ஓடி வந்தார்கள்.

‘‘சுவாமி... இந்தப் பக்கம் யாராவது ஓடி வந்தார்களா?’’

சாம்பல் பூசியவன் வாயே திறக்கவில்லை.

‘‘மௌன சாமியார் போல் இருக்கிறது!’’ என்றான் ஒருவன். அனைவரும் பொத்தென்று அவன் காலில் விழுந்து வணங்கினார்கள்.

‘‘சாமி! நாங்க தேடுகிற ஆள் எங்களுக்குக் கிடைக்கணும். அதுக்கு நீங்கதான் ஆசீர்வாதம் பண்ணணும்!’’

சுவாமி கைகளை உயர்த்தினார்.

காவலர்கள் திருப்தியோடு எழுந்து போனார்கள்.

‘‘இந்தப் பக்கமாகத்தான் ஓடினான்’’ என்றான் ஒருத்தன்.

எல்லோரும் அந்தப் பக்கம் ஓடினார்கள்.

மரத்தடியில் சாமியார் இருக்கிற செய்தி பரவியது.

மக்கள் கூட்டம் கூட்டமாக வரத் தொடங்கினார்கள். காணிக்கை செலுத்தினார்கள்.

கணக்குப் பார்த்தார் சாமியார். எதிர்பார்ப்புக்கு அதிகமாகவே பணம் சேர்ந்திருந்தது.
அவர் மனசுக்குள் ஒரு கணக்குப் போட்டார்.

உழைத்துச் சாப்பிடுவதைவிட, உட்கார்ந்து சாப்பிடுவது சுலபமாக இருக்கிறது.

உழைத்துப் பிழைப்பதைவிட மக்களின் நம்பிக்கையில் பிழைப்பது எளிதான வழி என்பது புரிந்தது.
ஆன்மிகம் இன்றைக்கு இப்படித்தான் திசைமாறிப் போய்க் கொண்டிருக்கிறது.

எது மெய், எது பொய் என்பது புரிவதில்லை.

ஆனால், ஒன்று மட்டும் புரிகிறது.

நம்பிக்கை என்பது நம்புகிறவனையும் வாழ வைக்கிறது. நம்பப்படுகிறவனையும் வாழ வைக்கிறது.
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Back to top Go down

கல கலப் பக்கங்கள்--தென்கச்சியார் Empty Re: கல கலப் பக்கங்கள்--தென்கச்சியார்

Post by தமிழ்நேசன்1981 Fri 12 Sep 2014 - 15:59

‘நீங்க ராமசாமிதானே?’
தென்கச்சி சுவாமிநாதன்


பேருந்து போய்க் கொண்டிருந் தது.
அதில் பயணம் செய்யும் ஒருவர், பக்கத்தில் உட்கார்ந்திருந்தவரைத் திரும்பிப் பார்த்தார்.

‘‘நீங்க ராமசாமியா..?’’ என்று கேட்டார்.

‘‘இல்லை!’’ என்றார் அவர்.

கொஞ்ச நேரம் ஆயிற்று.

இவர் மறுபடியும் கேட்டார்.

‘‘சும்மா சொல்லுங்க... நீங்க ராமசாமி தானே?’’

‘‘இல்லீங்க!’’ என்றார் அவர் அழுத்த மாக.

இவர் விடுவதாக இல்லை.

‘‘என்கிட்டே சொல்றதுலே எந்தத் தப்பும் இல்லே. தைரியமா சொல்லலாம். நீங்க ராமசாமிதான். சரியா?’’

‘‘நிச்சயமா சொல்றேன்... நான் ராமசாமி இல்லை. போதுமா?’’

கேட்டவர் மௌனமானார்.

கொஞ்ச நேரம் ஆயிற்று.

மறுபடியும் ஆரம்பித்தார்.

‘‘நிச்சயமா சொல்றேன்... நீங்க ராம சாமியேதான்!’’

அவர் யோசித்தார்.

இவரிடமிருந்து தப்பிக்க ஒரே வழிதான் உண்டு.

‘‘ஆமாம் சார்! நான் ராமசாமிதான்!’’ என்றார் சற்று எரிச்சலாக.

இவர் மறுபடி மெள்ள அவர் பக்கம் திரும்பி னார்.

‘‘உங்களைப் பார்த்தா அப்படித் தெரியலையே!’’ என்று ஆரம்பித்தார்.

அவர் திடீரென்று எழுந்தார். இடத்தை மாற்றிக் கொண்டு போய்விட்டார்.

இந்தக் கதை வேடிக்கையாக இருந்தாலும், இதில் இருக்கிற கருத்து ஆழமானது.
நாம் பல சந்தர்ப்பங்களில், முதலில் முடிவு எடுத்து விடுகிறோம்.
அதன் பிறகு அதை உறுதிப்படுத்த வழி கண்டு பிடிக்கிறோம்.
நாம் முடிவு செய்ததுதான் சரி என்று நிரூபிப்பதில் நமக்கு ஒரு பெருமை!
அந்தப் பெருமைக்காக பெரும் பொழுதுகளை எல்லாம் வீணாக்கிக் கொண்டிருக்கிறோம்.
ஆன்மிக உலகிலும் இந்த மனித சுபாவம் நிறையக் குழப்பங்களை உண்டு பண்ணிக் கொண் டிருக்கிறது.

ஆலய வாசலில் நின்று கொண்டு, உள்ளேயிருந்து வெளியே வருகிறவர்களை விசாரித்துக் கொண்டிருந்தார் ஒரு பெரியவர்.

‘‘என்ன வேண்டிக்கொண்டீர்கள்?’’

வந்து கொண்டிருந்தவர்கள் ஆளுக்கொரு பதில் சொன்னார்கள்...

‘‘தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற வேண்டும்!’’

‘‘தேர்தலில் வெற்றி பெற வேண்டும்!’’

‘‘வேலை கிடைக்க வேண்டும்!’’

இவையெல்லாம் ஏற்கெனவே செய்து கொண்ட முடிவுகள். இந்த முடிவுகளுக்கு ஆதரவு தேடி அவர்கள் ஆலயத்துக்கு வந்திருக்கிறார்கள்.

நண்பர்களே!
ஒன்றைப் புரிந்து கொள்ளுங்கள்:
ஆலயம் என்பது...
உங்கள் முடிவுகளை உறுதிப்படுத்துகிற இடம் அல்ல!
பரம்பொருளின் இருப்பிடம் என்பது வேறு; பத்திரப் பதிவு அலுவலகம் என்பது வேறு!
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Back to top Go down

கல கலப் பக்கங்கள்--தென்கச்சியார் Empty Re: கல கலப் பக்கங்கள்--தென்கச்சியார்

Post by M.Saranya Fri 12 Sep 2014 - 16:03

உழைத்துப் பிழைப்பதைவிட மக்களின் நம்பிக்கையில் பிழைப்பது எளிதான வழி என்பது புரிந்தது.
ஆன்மிகம் இன்றைக்கு இப்படித்தான் திசைமாறிப் போய்க் கொண்டிருக்கிறது.

நம்பிக்கை என்பது நம்புகிறவனையும் வாழ வைக்கிறது. நம்பப்படுகிறவனையும் வாழ வைக்கிறது.

எவ்வளவு உண்மையான செய்தி!!!
நம் மக்கள் ஆனாலும் அதிகமாகவே நம்புகின்றனர்


கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

கல கலப் பக்கங்கள்--தென்கச்சியார் W5td1pX3QFi1kBRhH0I3+Affection
M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

Back to top Go down

கல கலப் பக்கங்கள்--தென்கச்சியார் Empty Re: கல கலப் பக்கங்கள்--தென்கச்சியார்

Post by தமிழ்நேசன்1981 Fri 12 Sep 2014 - 16:11

கை எங்கே? கால் எங்கே?

- தென்கச்சி சுவாமிநாதன்

ஓ ர் ஊரில் பத்து நண்பர்கள் இருந்தார்கள்.

அவர்கள் எங்கே போனாலும் சேர்ந்தேதான் போவார்கள்; வருவார்கள். அப்படியரு பாசப் பிணைப்பு.
பக்கத்து நகரத்துக்கு அவர்கள் ஒரு தடவை சினிமா பார்க்கப் போனார்கள்.

இரண்டாவது ஆட்டம்...
படம் முடிந்து வெளியே வந்தார்கள்.

பக்கத்தில் இருந்த மதுக்கடைக்குள் நுழைந் தார்கள்.
மயக்கத்தோடு வெளியே வந்தார்கள்.

ஊரை நோக்கி நடக்க ஆரம்பித்தார்கள்.
வழியில் ஒரு பெருங்காடு.
அதைத் தாண்டித்தான் செல்ல வேண்டும்.

நள்ளிரவு நேரம்.
நடுக்காட்டில் அவர்கள் நடந்து வந்து கொண்டிருந்த போது திடீரென்று மழை... நேரம் ஆக ஆக மழை வலுத்தது.

‘‘இனி... நாம இங்கேயே தங்கிக்கறதுதான் நல்லது. விடிஞ்சதும் ஊருக்குப் போகலாம். இப்ப நாம இந்த ஆல மரத்துக்குக் கீழே படுத்துக்கலாம்!’’ என்று அந்தப் பத்துப் பேரில் ஒருவன் சொன்னான்.
எல்லோரும் படுத்துக் கொண்டார்கள்.

குளிர் ஒரு பக்கம்; பயம் ஒரு பக்கம்.
எப்படியோ தூங்கிப் போனார்கள்.

பொழுது விடிந்தது.
விழித்துப் பார்த்தால் அவர்களுக்குள் ஒரு புதிய சிக்கல்.

ஆமாம்... அவர்களின் கைகளும் கால்களும் ஒன்றோடு ஒன்று பின்னிக் கொண்டிருந்தன.
பிரிக்க முடியவில்லை. காரணம் அவரவர்களின் கை எது? கால் எது என்பது அவர்களுக்கே அடையாளம் தெரியவில்லை.

அழ ஆரம்பித்தார்கள். இந்த அழுகைச் சத்தம் அந்த வழியாக வந்து கொண்டிருந்த ஒரு வழிப்போக்கனின் காதில் விழுந்தது.

நெருங்கி வந்தான்.

‘‘என்ன ஆச்சு உங்களுக்கு?’’

‘‘பயத்துலே நடுங்கிக்கிட்டே படுத்தோம்... காலை யிலே பாத்தா கை - கால் எல்லாம் பின்னிக்கிட்டு கிடக்குது!’’

‘‘அதாங்க பிரச்னை... எது எங்களுடையதுனு அடையாளம் தெரியலே.. இப்ப என்ன பண்றது..?’’

‘‘கவலைப்படாதீங்க... நான் உங்க சிக்கலைத் தீர்த்து வைக்கிறேன்!’’

வழிப்போக்கன் பக்கத்திலிருந்த கருவேல மரத்தி லிருந்து ஒரு நீண்ட முள்ளை ஒடித்துக் கொண்டு வந்தான். ஒரு காலில் குத்தினான்.

‘‘ஆ...!’’ என்றான் ஒருத்தன்.

‘‘இந்தக் கால் உன்னுடையது. எடுத்துக்கோ...!’’ என்று சொல்லிவிட்டு ஒரு கையில் குத்தினான்.
‘‘ஐயோ!’’ என்று அலறினான் ஒருத்தன்.

‘‘இந்தக் கை உன்னுடையது. இழுத்துக்கோ’’ என்றான்.

வெடுக்கென்று இழுத்துக் கொண்டான்.

இப்படியாக அந்த நண்பர்களின் கை-கால்களை அவர் அடையாளம் காட்டினார். அவர்கள் விடு பட்டார்கள்.

பந்தபாசம் இப்படித்தான். பல சமயம் மனிதர்களைக் கட்டிப் போட்டு விடுகிறது. சிக்கிக் கொள்கிறார்கள்.

ஆன்மிக வெளிச்சம் என்கிற முள் வந்துதான் அவர்களை விடுவிக்க வேண்டி இருக்கிறது!
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Back to top Go down

கல கலப் பக்கங்கள்--தென்கச்சியார் Empty Re: கல கலப் பக்கங்கள்--தென்கச்சியார்

Post by தமிழ்நேசன்1981 Fri 12 Sep 2014 - 16:16

உள்ளே என்ன இருக்கு?
தென்கச்சி சுவாமிநாதன்


ஒ ரு மனிதன். நீண்ட நாளைக்குப் பிறகு கல்யாணம் பண்ணிக் கொண்டான். ‘மனைவியிடம் நல்ல பெயர் வாங்குவது எப்படி?’ அவன் யோசித்து ஒரு முடிவுக்கு வந்தான்.

ஒரு நாள் கடை வீதிக்குப் போனான். கடையில் ஒரு பொருளைப் பார்த்தான். இதுவரையில் அவனுக்குப் பரிச்சயம் இல்லாத ஒரு பொருள் அது. ஆகவே, தனக்குத் தெரியாதது எல்லாமே தன் மனைவிக்கும் தெரியாது என்கிற ஒரு முடிவுக்கு வந்து விட்டான்.

‘‘அது என்னங்க?’’ என்று விசாரித்தான்.

‘‘அதன் பெயர் தர்மாஸ்ஃபிளாஸ்க்!’’ என்றார் கடைக்காரர்.

‘‘அப்படின்னா என்னங்க... அது எதுக்கு உபயோகம்?’’

‘‘இதுக்குள்ளே சூடான பொருளை வெச்சா சூடாவே இருக்கும்! குளிர்ச்சியான பொருளை வெச்சா குளிர்ச்சியாவே இருக்கும்!’’

‘‘அப்படியா சொல்றீங்க...?’’

‘‘ஆமாங்க!’’

‘‘அப்படின்னா அதுலே ஒண்ணு கொடுங்க!’’

வாங்கிக் கொண்டு புறப்பட்டான்.

அவனுக்குள் உற்சாகம் உற்பத்தியாயிற்று.

மனைவிக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்க வேண்டும் என்பது அவன் திட்டம். அந்தத் திட்டப்படி மேலும் சில பொருள்களை வாங்கிக் கொண்டு வேகமாக நடந்து வீட்டுக்குள் நுழைந்தான்.
‘‘சீக்கிரம் இங்கே வா!’’ என்று மனைவியை அழைத்தான்.

அவள் வந்தாள். கவனித்தாள்.

‘‘என்னங்க இது?’’

‘‘இது ஒரு புதுமையான பாத்திரம்!’’

‘‘அப்படியா?’’

‘‘ஆமாம்! இதன் பெயர் தர்மாஸ்ஃபிளாஸ்க்!’’

‘‘எதுக்கு இது?’’ என்று தெரியாதது போல கேட்டாள்.

‘‘இது சூடான பொருளைச் சூடாகவும், குளிர்ச்சியான பொருளைக் குளிர்ச்சியாகவும் அப்படியே வெச்சிருக்கும்! உனக்காக வாங்கிட்டு வந்திருக்கேன்!’’

_ கணவன் தலை நிமிர்ந்து நின்றான்.

மனைவி கேட்டாள்:
‘‘உள்ளே என்ன இருக்கு?’’

அவன் சொன்னான்:

‘‘அதுவும் உனக்காகத்தான் வாங்கி வந்தேன்!’’

‘‘அப்படியா? என்ன அது... சொல்லுங்களேன்.’’

‘‘ஒரு கப் காபியும் ஒரு கப் ஐஸ்கிரீமும்!’’

மனைவி மயங்கி விழுந்தாள்.

நண்பர்களே!
ஒன்றைத் தெரிந்து கொள்வது என்பது வேறு; அதைப் புரிந்து கொள்வது என்பது வேறு!
ஆன்மிகம் என்பது புரிந்து கொள்ள வேண்டிய ஒன்று. அதைத் தெரிந்து கொள்வதோடு நிறுத்தி விடுகிறவர்களுக்குத்தான், தேவை இல்லாத குழப்பங்கள் எல்லாம் வந்து சேர்கின்றன.

‘‘விஞ்ஞானத்துக்கும் மெய்ஞ்ஞானத்துக்கும் என்ன வேறுபாடு?’’ என்று பெர்னாட்ஷாவிடம் கேட்டார்கள். அவர் சொன்னார்: ‘‘விஞ்ஞானம் இருக்கிறதே.... புதிதாகப் பத்துப் பிரச்னைகளை உருவாக்காமல் எந்த ஒரு பிரச்னைக்கும் அது தீர்வு கண்டதில்லை!’’

அறிவால் ஏற்படுகிற வெளிச்சம் - விஞ்ஞானம்; ஆன்மாவால் ஏற்படுகிற வெளிச்சம் - மெய்ஞ்ஞானம்!
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Back to top Go down

கல கலப் பக்கங்கள்--தென்கச்சியார் Empty Re: கல கலப் பக்கங்கள்--தென்கச்சியார்

Post by தமிழ்நேசன்1981 Fri 12 Sep 2014 - 16:20

கடவுளைக் காப்பாற்றுங்கள்!


ஒருவருக்கு திடீரென்று தலைவலி. உடனே மருத்துவ மனைக்குப் போனார்.

டாக்டரிடம் சொன்னார். அந்த டாக்டர், இவரை ஓர் அறையில் படுக்க வைத்தார். ஒரு மருந்துச் சீட்டு எழுதினார்.

அங்கே நின்று கொண்டிருந்த ஒருவரிடம் கொடுத்து, ‘‘இதை உடனே வாங்கி வா!’’ என்றார்.
அவர் அதை வாங்கிக் கொண்டு வெளியே ஓடினார்.

மருந்து வாங்கப் போன ஆசாமி வருவார் என்று காத்திருந்தார்கள். ஆனால், போனவர் வரும் வழியாகத் தெரியவில்லை.

மருந்து கிடைக்காமல் எங்கே அலைகிறாரோ? படுத்திருந்தவருக்குத் தலைவலி இன்னும் அதிகமாயிற்று. டாக்டர் பார்த்தார். உடனடியாக இன்னொரு மருந்தின் பெயரை எழுதினார்.
‘‘இது கிடைத்தாலும் பரவாயில்லை!’’ என்று அந்தச் சீட்டை இன்னொருவரிடம் கொடுத்து வாங்கி வரச் சொன்னார்.

அவரும் அவசரமாக வெளியே ஓடினார். ஆனால், வந்து சேரவில்லை.

படுத்திருந்தவரை தலைவலி பாடாகப்படுத்துகிறது. டாக்டரும் தவித்துக் கொண்டிருக்கிறார்.
இந்த சமயத்தில் அந்த மருத்துவமனையின் வாசல் புறத்தில் ஏதோ கூச்சல் கேட்கிறது. அங்கே ஒரு சுழலும் வழி...

ஒருவர் பின் ஒருவராகத்தான் உள்ளே வர முடியும். கால்நடைகள் நுழையாமல் இருக்க அந்த ஏற்பாடு.

அங்கே இரண்டு பேர், ‘நான்தான் முதலில் உள்ளே நுழைவேன்!’ என்று இருவரும் நின்று கொண்டு தங்களுக்குள் சண்டை போட்டுக் கொண்டிருக்கிறார்கள். விளைவு- இரண்டு பேருமே செல்ல முடியவில்லை.

இவர்கள் போடுகிற சத்தத்தைக் கேட்டு டாக்டர் வெளியே ஓடி வந்து பார்க்கிறார். அந்த இரண்டு பேருமே உள்ளே படுத்திருக்கிற தலைவலிக்காரருக்காக மருந்து வாங்கப் போனவர்கள்.
இருவரின் கையில் இருப்பதும் ஒரே நோய்க்கான மருந்துதான் என்பது அவர்களுக்குப் புரியவில்லை.

உள்ளே படுத்திருப்பவரோ, தலைவலியால் துடித்துக் கொண்டிருக்கிறார். அதற்கான மருந்தை வைத்திருப்பவர்களோ வெளியே சண்டை போட்டுக் கொண்டு இருக்கிறார்கள்.
விளைவு? தலைவலி தொடர்ந்து கொண்டிருக்கிறது! இதுதான் இன்றைய ஆன்மிகம்!

மனித குலம்தான் அந்த நோயாளி. கடவுள்தான் அந்த மருத்துவர். மதவாதிகள்தாம் அங்கே சண்டை போடுகிறவர்கள்.

சரி... இப்போது கதையைத் தொடரலாம். டாக்டர் அவசரமாக வெளியே ஓடி அவர்கள் கையில் இருந்த இரண்டு மருந்தையும் வாங்கிக் கொண்டு உள்ளே ஓடுகிறார்.

ஒரு பாட்டில் மருந்தை அந்த நோயாளிக்குக் கொடுக்கிறார். இன்னொரு பாட்டில் மருந்தை அவசரமாகத் தானே சாப்பிட்டு விடுகிறார்!

ஆமாம்!
இப்போது டாக்டருக்கும் தலைவலி!

மதவாதிகளே!
தயவுசெய்து கடவுளைக் காப்பாற்றுங்கள்!

avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Back to top Go down

கல கலப் பக்கங்கள்--தென்கச்சியார் Empty Re: கல கலப் பக்கங்கள்--தென்கச்சியார்

Post by M.Saranya Fri 12 Sep 2014 - 16:21

ஆலயம் என்பது...
உங்கள் முடிவுகளை உறுதிப்படுத்துகிற இடம் அல்ல!
பரம்பொருளின் இருப்பிடம் என்பது வேறு; பத்திரப் பதிவு அலுவலகம் என்பது வேறு!

மிகச்சரி


கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

கல கலப் பக்கங்கள்--தென்கச்சியார் W5td1pX3QFi1kBRhH0I3+Affection
M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

Back to top Go down

கல கலப் பக்கங்கள்--தென்கச்சியார் Empty Re: கல கலப் பக்கங்கள்--தென்கச்சியார்

Post by தமிழ்நேசன்1981 Fri 12 Sep 2014 - 16:24

ருசிக்கத் தெரிந்த குரு!

 
‘‘இ ந்த உலகத்துல வாழ்ந்து என்ன சுகத்தைக் கண்டேன்?’’ என்று அலுத்துக் கொள்கிறவர்கள் அதிகம்!
‘‘ஆகா... என்ன அற்புதமான உலகம்!’’ என்று ஆனந்தப் படுகிறவர்கள் குறைவு!
ரசிக்கத் தெரிந்தவர்களுக்கு எல்லாமே சுகம்தான்!

இங்கிலாந்து நாட்டில் ஒரு கவிஞர் இருந்தார். அவர் பெயர் ஜார்ஜ் பர்ன்ஸ்.
அவருக்கு 95-வது பிறந்த நாள்.

நண்பர்கள் எல்லாரும் வந்தார்கள். வாழ்த்தினார்கள்.

ஒரு நண்பர் கேட்டாராம்:
‘‘இந்த 95-வது வயது எப்படி இருக்கிறது?’’

உடனே கவிஞர் உற்சாகமாகப் பதில் சொல்ல ஆரம்பித்தாராம்.
‘‘சொல்றேன் கேளுங்க.... இதற்கு முன் எப்போதும் நான் இவ்வளவு ஆரோக்கியமாக இருந்ததில்லை. இதற்கு முன் எப்போதும் நான் இவ்வளவு ஜாலியாக இருந்ததில்லை. இதற்கு முன் எப்போதும் நான் இவ்வளவு அற்புதமாகக் காதலித்ததில்லை!’’ என்று சொல்லி நிறுத்திவிட்டு, ‘‘இன்னொரு ரகசியம்... இதற்கு முன் எப்போதும் நான் இவ்வளவு அதிகமாகப் பொய் சொன்னதில்லை!’’ என்றாராம்.

கூட்டம் ‘கொல்’லென்று சிரித்ததாம்!

அந்தக் கவிஞருக்கு வாழ்க்கை ஒரு சுமையாகத் தெரியவில்லை. சுகமாகத் தெரிகிறது.

வயதான குரு ஒருவர்... அவருக்கு 100 வயது. வாழ்வின் கடைசி நிமிடங்களில் இருக்கிறார்.
சுற்றிலும் சீடர்கள் சோகமாக நின்று கொண்டிருக்கிறார்கள்.

ஒரு சீடர் வேகமாக வெளியே ஓடுகிறார். குரு வழக்கமாக விரும்பிச் சாப்பிடும் ஒரு பலகாரத்தைத் தேடிப் பிடித்து வாங்கி வருகிறார். குருவிடம் நீட்டுகிறார். அவர் ஆவலோடு அதை வாங்கிச் சாப்பிடுகிறார். சாப்பிட்டு விட்டு அந்தச் சீடரை அருகில் அழைக்கிறார். சீடர் அவர் அருகில் குனிகிறார் _ ஏதோ கடைசி உபதேசம் சொல்லப் போகிறார் என்கிற எதிர்பார்ப்பில்!
குருவின் உதடுகள் மெல்ல அசைகின்றன. ‘‘ஆகா! என்ன ருசி!’’ என்று சொல்லி விட்டுக் கண்களை மூடிவிடுகிறார்.

சீடருக்கு அந்த குருவின் உபதேசம் புரிகிறது.

அந்த குருவுக்கு வாழ்க்கையின் கடைசி விநாடிகூட ருசியாக இருந்திருக்கிறது!

வாழ்வின் கடைசி விநாடியைக்கூட ருசிக்கக் கற்றுக் கொள்ளுங்கள் என்பதுதான் அந்த குருவின் உபதேசம்!

ஆன்மிகம் அந்தக் கலையைத்தான் நமக்குக் கற்றுக் கொடுக்க வேண்டும்.

அப்படி ஒரு மனத் தெளிவை உண்டு பண்ணுவதுதான் உண்மையான ஆன்மிகம்!

நண்பர்களே!
வயதாகிவிட்டதே என்று யாரும் கவலைப்படாதீர்கள்.
பல பேருக்கு அந்த வாய்ப்பு கிடைப்பதே இல்லை!
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Back to top Go down

கல கலப் பக்கங்கள்--தென்கச்சியார் Empty Re: கல கலப் பக்கங்கள்--தென்கச்சியார்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum