புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:25 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ட்ரோன்... - கில்லர் ரோபோ Poll_c10ட்ரோன்... - கில்லர் ரோபோ Poll_m10ட்ரோன்... - கில்லர் ரோபோ Poll_c10 
37 Posts - 77%
dhilipdsp
ட்ரோன்... - கில்லர் ரோபோ Poll_c10ட்ரோன்... - கில்லர் ரோபோ Poll_m10ட்ரோன்... - கில்லர் ரோபோ Poll_c10 
4 Posts - 8%
வேல்முருகன் காசி
ட்ரோன்... - கில்லர் ரோபோ Poll_c10ட்ரோன்... - கில்லர் ரோபோ Poll_m10ட்ரோன்... - கில்லர் ரோபோ Poll_c10 
3 Posts - 6%
heezulia
ட்ரோன்... - கில்லர் ரோபோ Poll_c10ட்ரோன்... - கில்லர் ரோபோ Poll_m10ட்ரோன்... - கில்லர் ரோபோ Poll_c10 
2 Posts - 4%
mohamed nizamudeen
ட்ரோன்... - கில்லர் ரோபோ Poll_c10ட்ரோன்... - கில்லர் ரோபோ Poll_m10ட்ரோன்... - கில்லர் ரோபோ Poll_c10 
2 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ட்ரோன்... - கில்லர் ரோபோ Poll_c10ட்ரோன்... - கில்லர் ரோபோ Poll_m10ட்ரோன்... - கில்லர் ரோபோ Poll_c10 
32 Posts - 80%
dhilipdsp
ட்ரோன்... - கில்லர் ரோபோ Poll_c10ட்ரோன்... - கில்லர் ரோபோ Poll_m10ட்ரோன்... - கில்லர் ரோபோ Poll_c10 
4 Posts - 10%
வேல்முருகன் காசி
ட்ரோன்... - கில்லர் ரோபோ Poll_c10ட்ரோன்... - கில்லர் ரோபோ Poll_m10ட்ரோன்... - கில்லர் ரோபோ Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
ட்ரோன்... - கில்லர் ரோபோ Poll_c10ட்ரோன்... - கில்லர் ரோபோ Poll_m10ட்ரோன்... - கில்லர் ரோபோ Poll_c10 
2 Posts - 5%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ட்ரோன்... - கில்லர் ரோபோ


   
   
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Thu Sep 11, 2014 11:40 am

உலகமே தீவிரவாதிகளைப் பார்த்துப் பயந்தால், அந்தத் தீவிரவாதிகளைப் பயமுறுத்துவது 'கில்லர் ரோபோ’. 'ட்ரோன்’ (Drone) எனப்படும் ஆள் இல்லா உளவு மற்றும் தாக்குதல் விமானம். 'டெர்மினேட்டர் 3 ரைஸ் ஆஃப் தி மெஷின்ஸ்’ படத்தில் 'ஆர்ட்டிஃபிஷியல் இன்டலிஜென்ஸ்’ மூலம் எதிரிகளை இனம்கண்டு ஆள் இல்லா விமானங்கள் தாக்குதல் நடத்தும். கிட்டத்தட்ட அதே மாதிரி துல்லியமாகத் தாக்குதல் நடத்தி ஆட்களைக் கொல்கிறது இந்த ட்ரோன்!

உண்மையில், இந்த ட்ரோன் நிலங்களை அள க்க, காட்டுத் தீயைக் கண்காணிக்க, மக்கள் கூட்டத்தைக் கண்காணிக்க, பைலட்கள் பயிற்சி எடுக்க... எனப் பலவித சமூக பயன்பாடுகளுக்காக உருவாக்கப்பட்டது. பின்னர் அதை உளவு வேலைகளுக்காகப் பயன்படுத்தினார்கள். ஒரு ட்ரோன் விமானம் மேகக் கூட்டங்களிடையே பறந்து நிலங்களைப் படம் பிடித்து அனுப்பும். அதில் தீவிரவாத முகாம்கள் இருந்தால், அடுத்ததாக போர் விமானங்கள் கிளம்பிச் செல்லும். ஜெகஜ்ஜாலக் கில்லாடிகளான அல்கொய்தாவினர், ஆஃப்கானிஸ்தானில் அமெரிக்கப் படைத்தளத்துக்கு அருகிலேயே தங்களது சோர்ஸை வைத்திருப்பார்கள். ஒரு அமெரிக்கப் போர் விமானம் அரக்கப்பரக்கக் கிளம்பினால், ஊர்சுற்றிப் பார்க்கவா கிளம்பும்? நிச்சயம் தாக்குதல் நடத்தத்தானே! உடனே அல்கொய்தா டீம் தங்கள் கேம்ப்பை காலி செய்துவிடுவார்கள். அப்புறம் என்ன... ஒருவரும் இல்லாத இடத்தில் குண்டுகளை வீசிவிட்டுத் திரும்பும் அமெரிக்கப் போர் விமானம். தீவிரவாதிகள் தப்பிவிட்டார்கள் என்பது ஒரு பக்கம்... தேவை இல்லாத செலவு மற்றொரு பக்கம். (போர் விமான எரிபொருள் அவ்வளவு காஸ்ட்லி. அமெரிக்காவின் எஃப்-22 போர் விமானத்தை ஒரு முறை இயக்க, சுமார் 40 ஆயிரம் டாலர் செலவு ஆகும். இந்திய ரூபாயில் சுமார் 24 லட்சம்!)

அத்தனை டாலர் வீணாகிப்போவதில் அமெரிக்காவுக்குக் கோபம் வரவேண்டுமே? 'அடேய் உங்களை...’ என்று டென்ஷனாகி யோசித்து, பிடித்த ஐடியாதான்... ட்ரோன்களில் சிறிய ஏவுகணைகளைப் பொருத்திவிடுவது. ஏவுகணைகளைத் தூக்கிச்செல்லும் அளவுக்கு ட்ரோன்களைப் பெரிதாக வடிவமைத்தார்கள். அதன் மூக்கில் செம பவர்ஃபுல் கேமராவைப் பொருத்தினார்கள். அதை சேட்டிலைட்டோடு இணைத்தார்கள். இப்போது 'கில்லர் ரோபோ’ தயார்.

இதைவைத்து எப்படி தீவிரவாதிகளைக் கொல்ல முடியும்? தீவிரவாதிகளின் பேச்சை ஒட்டுக்கேட்பது முதல் வேலை. அதற்கு தீவிரவாதத் தலைவர்கள் பயன்படுத்தும் செல்போன் எண் வேண்டும். எக்கச்சக்க டாலரைக் கொட்டி, தீவிரவாத அமைப்போடு நெருக்கமாக உள்ள பணத்தாசை பார்ட்டி யாரையாவது பிடித்து, தலைவர்களின் நம்பரை வாங்கிவிடுவார்கள். அதை ஒவ்வொரு விநாடியும் கண்காணித்துக்கொண்டே இருப்பார்கள். அவர்கள் 'கோடிங்’ வார்த்தைகளில் பேசுவதை 'டி-கோடிங்’ செய்வார்கள். 'நாளைக்கு இந்த இடத்தில் இருந்து இந்த இடத்துக்குப் போறேன்’ என்பதுபோல ஒரு வரி கேட்டால் போதும்... பட்டன் தட்டி ட்ரோனைத் தயார் நிலைக்குக் கொண்டுவருவார்கள். ஜீப்பிலோ, வேனிலோ செல்லும் தீவிரவாதத் தலைவருக்கு ஆறு மைல்களுக்கு மேலே ட்ரோன் சத்தம் இல்லாமல் பறக்கும். ஆஃப்கானில் இருக்கும் அமெரிக்க ராணுவத்தளத்தில் இருந்து, ஏன் சில சமயம் அமெரிக்காவில் இருந்தும்கூட ட்ரோனை இயக்க முடியும். தீவிரவாதிகள் ஜீப்பில் இருந்தால், இன்னும் வசதி. ட்ரோனில் இருக்கும் சக்திவாய்ந்த கேமரா மூலம், ஜீப்பில் பயணம் செய்பவர்கள் துப்பாக்கி வைத்திருக்கிறார்களா என்பது வரை பார்க்க முடியும். இதுதான் அவர்கள் பேசிய ரூட்டா? ஆமாம்! இந்த செல்போன் அலைவரிசைதான் உளவாளிகள் கொடுத்ததா? ஆம்... பொருந்துகிறது! அப்புறம் என்ன... ஃபயர்!

தங்கள் தலைக்கு மேலே சத்தமே இல்லாமல் திடீர் எனச் சீறிவரும் ஏவுகணைகளால் அல்கொய்தா பார்ட்டிகள் நிறையவே நிலைகுலைந்துபோனார்கள். 'இது என்ன புது டெக்னாலஜி?’ என்று அவர்கள் தெரிந்துகொள்வதற்குள், எக்கச்சக்க முக்கியமான தலைகளைப் போட்டுத்தள்ளியது அமெரிக்கா. அதில் நிறைய அப்பாவிப் பொதுமக்களும் பலியானார்கள். ஒரு குடியிருப்புப் பகுதியில் தீவிரவாதத் தலைவர் ஒருவர் பதுங்கியிருக்கிறார் என்று அமெரிக்காவுக்குத் தெரிந்தால், உடனே ஒரு ட்ரோன் பறந்து வந்து ஏவுகணைகளை வீசிவிடும். தங்களுக்குப் பக்கத்தில் ஒரு தீவிரவாதி இருக்கிறான் என்பதைக்கூட அறியாத அப்பாவிகளும், அந்தத் தாக்குதலில் இறக்க ஆரம்பித்தார்கள். இதனால் அமெரிக்காவுக்கு எதிராகக் கடும் கண்டனங்கள் எழுந்தன. அமெரிக்காவிலேயே கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.

ஒரு போர் விமானத்தை இயக்குவதைவிட 300 மடங்கு இதில் செலவு குறைவு. வானில் 30 மணி நேரம் வரைகூடத் தொடர்ந்து பறக்க வைக்கலாம். இலக்கு தப்பவே தப்பாது. தீவிரவாதிகள் பயப்படுகிறார்கள். இத்தனை 'பாசிட்டிவ்’ காரணங்கள் இருக்கும்போது, ஊர் திட்டினால் என்ன... உலகம் திட்டினால் என்ன? சி.ஐ.ஏ., ட்ரோன்களைக் கொண்டாடத் தொடங்கியது. எக்கச்சக்க நிதி ஒதுக்கி ட்ரோன்களை மெருகேற்றத் தொடங்கியது.

இப்போது தீவிரவாதிகள் முறை. அவர்களும் ட்ரோன்களைப் பற்றி தெரிந்துகொண்டார்கள். பழைய 'ஏர்போர்ட் சோர்ஸ்’ முறையை உடனடியாகக் கையில் எடுத்தார்கள். ஒரு ட்ரோன் கிளம்பினால், அங்காளி, பங்காளி அமைப்பைச் சேர்ந்த அத்தனை பேரையும் அலர்ட் செய்தார்கள். பங்கர், குகை, கட்டடங்கள் எனப் பாதுகாப்பான இடங்களில் பதுங்கினார்கள். விமானத்தளத்தில் இருந்து கிளம்பினால்தானே தெரிந்துவிடுகிறது? ட்ரோனை ஏழெட்டு பீஸ்களாகக் கழற்றி, வேறு இடத்துக்குக் கொண்டுசென்று மாட்டி, அங்கே இருந்து ஏவியது அமெரிக்கா. வில்லில் இருந்து அம்பு எய்வதுபோல, உளவு ட்ரோனை மாட்டிப் பறக்கவைக்கிற டெக்னிக் எல்லாம் வந்துவிட்டது. அதிகபட்சம் ஐந்தடி தூரம் இடம் இருந்தாலே போதும்!

இப்போது தீவிரவாதிகள் சுதாரித்துக்கொண்டார்கள். செல்போன் நம்பர் எப்படி வெளியே போகிறது? யார் கொடுக்கிறார்கள் என்று தேடிப்பிடித்து அவர்களைக் கொல்ல ஆரம்பித்தார்கள். செல்போன் இருந்தால்தானே கண்டுபிடிப்பார்கள் என்று, பல அல்கொய்தா தலைவர்கள் கடிதங்களில் தகவல்களை அனுப்ப ஆரம்பித்தார்கள். மலைக் குகைகளில் அமர்ந்துகொண்டு தேடித்திரியும் ட்ரோன்களைச் சுட்டுத் தள்ளினார்கள். இப்போது அமெரிக்கா, ட்ரோன்கள் பறக்கும் உயரத்தை அதிகப்படுத்தியது. தீவிரவாதிகள் மூளைச் சலவை செய்யப்பட்டவர்கள். ஆனால் மூளை இல்லாதவர்கள் இல்லையே? ரஷ்யாவின் 'ஸ்கை கிராப்பர்’ என்கிற கருவியை வைத்து, சத்தம் இல்லாமல் தங்களுக்கு மேல் ட்ரோன் பறந்தால், அறிந்துகொண்டார்கள். உடனே ஆளுக்கொரு திசையாகப் பிரிந்துபோய்விடுவார்கள். இதில் யார் தலைவன், யார் தொண்டன் என்று ட்ரோன் குழம்புவதற்குள் இடத்தைவிட்டு எஸ்கேப். இன்னும் டெக்னிக்கலாக 'ராகல்’ என்கிற கருவி மூலமாக ட்ரோனின் அலைவரிசையைக் குழப்பினார்கள். நிலத்தில் கூடினால்தானே கண்டுபிடிக்கிறார்கள்! மரங்கள் அடர்ந்த பகுதி என்றால் பச்சைக் கூரைகள் அமைப்பது, மலைப்பாங்கான இடங்கள் என்றால் பாறைகளின் நிறத்திலேயே கூரைகள் அமைப்பது, மழை மேகமான நாட்களில் கூட்டம் நடத்துவது, நிலத்தில் பஞ்சடைத்த பொம்மைகளையும், டம்மி துப்பாக்கிகளையும் வைப்பது போன்ற வியூகங்கள் மூலம் ட்ரோன்களைக் குழப்பினார்கள். ட்ரோன்கள் தப்பான இடங்களில் குண்டு போட்டன. வண்டிக் கூரை மீது, வீட்டுக் கூரை மீது கண்ணாடிகளைப் பொருத்தினார்கள். எதிரொளியில் ட்ரோன்கள் ஏமாந்தன!

இருந்தாலும் அமெரிக்காவின் விடாமுயற்சி காரணமாக சுமார் 2,000 அல்கொய்தாவினரை ட்ரோன்கள் கொன்றுகுவித்தன. கூடவே இறந்த அப்பாவிப் பொதுமக்களின் எண்ணிக்கையும் அதற்குச் சமம். ஆனால், அதையெல்லாம் கண்டுகொள்ளாமல், நவீன உத்திகளுடன் எக்கச்சக்க ட்ரோன்களைத் தயாரிக்க ஆரம்பித்திருக்கிறது அமெரிக்கா.

ராணுவச் செலவைப் பலமடங்கு குறைப்பதால், எதிர்காலப் போர்களில் ட்ரோன்களின் பங்கு மிக அதிகமாக இருக்கும் என்று கணித்திருக்கிறார்கள் போர் நிபுணர்கள். இப்போது உலக நாடுகள் பலவும் ட்ரோன் தயாரிப்பில் ஆர்வம்காட்ட ஆரம்பித்திருக்கின்றன. தங்கள் அணு உலைகளைப் படம் எடுக்க வந்த இஸ்ரேலின் ட்ரோன் ஒன்றைக் கொஞ்சமாகச் சுட்டு வீழ்த்தி, அதன் பொறியியல் தொழில்நுட்பத்தைப் படித்து, சொந்தமாக ட்ரோன்களை உருவாக்க ஆரம்பித்திருக்கிறது ஈரான். ஈராக்கில் அமெரிக்காவின் ட்ரோன் ஒன்றைக் கைப்பற்றி இருக்கும் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பினர், அதிலுள்ள கேமரா மூலம் சிரியாவின் விமானத்தளம் ஒன்றை உளவு பார்த்துக் கச்சிதமாக அடித்துக் கைப்பற்றியிருக்கிறார்கள். ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பினர் டெக்னிக்கல் கில்லிகளாக இருப்பதால், ட்ரோன் தொழில்நுட்பத்தைப் பறிகொடுத்த கவலையில் இருக்கிறது அமெரிக்கா.

சரி... உண்மையில் ட்ரோன் ஹீரோவா... வில்லனா? அது அதன் ரிமோட் யார் கையில் இருக்கிறது என்பதைப் பொறுத்தது!

ஆஸ்திரேலியாவில் ஹெலிகாப்டர் போன்ற ஒரு வகை ட்ரோன்களைப் பயன்படுத்தி தனியார் நிறுவனம் ஒன்று, ஆர்டர் கொடுத்த பீட்ஸாவை 10 நிமிடங்களில் வீட்டு வாசலில் தரையிறக்குகிறது. சினிமாவில் எக்கச்சக்க செலவு பிடிக்கும் ஜிம்மிஜிப் போன்ற கேமராக்களுக்குப் பதிலாக ட்ரோன்களைப் பயன்படுத்துகிறார்கள். டாப் ஆங்கிள் ஷாட், கழுகுக் கண் ஷாட், ரயில் சண்டை போன்ற காட்சிகளை ட்ரோன்களை வைத்து சுலபமாக முடித்துவிடலாம். சில நாடுகளில் மருந்து தேவைப்படும் எமர்ஜென்சி நேரங்களில் ட்ரோன்களின் மூலம் சில நிமிடங்களில் மருத்துகளை அனுப்பிவைக்கிறார்கள்.
ட்ரோன்... - கில்லர் ரோபோ P38b
ஆளைக் காலி செய்யும் ஆட்கொல்லி பாம், தலைவலிக்குத் தடவும் ஜண்டு பாம்... இவற்றில் எதை வேண்டுமானாலும் ட்ரோன்களே எதிர்காலத்தில் வீடு தேடி கொண்டுவந்து தரப் போகின்றன. அந்தவகையில் 'எல்லாத்தையும் மேல இருக்கிறவன் பார்த்துப்பான்’ என்று ட்ரோன்களைக் கை காட்டலாம்!

M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

PostM.Saranya Thu Sep 11, 2014 12:05 pm

டிரோன்களை தீயவற்றிர்க்காக பயன்படுத்தாமல் இருந்தால் , அப்பாவி மக்களுக்கு நல்லது



கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

ட்ரோன்... - கில்லர் ரோபோ W5td1pX3QFi1kBRhH0I3+Affection

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக