புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கருத்துப்படம் 29/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:40 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மகாகவி பாரதியார் நினைவு தினம்: 11-9-1921 Poll_c10மகாகவி பாரதியார் நினைவு தினம்: 11-9-1921 Poll_m10மகாகவி பாரதியார் நினைவு தினம்: 11-9-1921 Poll_c10 
84 Posts - 46%
ayyasamy ram
மகாகவி பாரதியார் நினைவு தினம்: 11-9-1921 Poll_c10மகாகவி பாரதியார் நினைவு தினம்: 11-9-1921 Poll_m10மகாகவி பாரதியார் நினைவு தினம்: 11-9-1921 Poll_c10 
69 Posts - 38%
T.N.Balasubramanian
மகாகவி பாரதியார் நினைவு தினம்: 11-9-1921 Poll_c10மகாகவி பாரதியார் நினைவு தினம்: 11-9-1921 Poll_m10மகாகவி பாரதியார் நினைவு தினம்: 11-9-1921 Poll_c10 
9 Posts - 5%
Dr.S.Soundarapandian
மகாகவி பாரதியார் நினைவு தினம்: 11-9-1921 Poll_c10மகாகவி பாரதியார் நினைவு தினம்: 11-9-1921 Poll_m10மகாகவி பாரதியார் நினைவு தினம்: 11-9-1921 Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
மகாகவி பாரதியார் நினைவு தினம்: 11-9-1921 Poll_c10மகாகவி பாரதியார் நினைவு தினம்: 11-9-1921 Poll_m10மகாகவி பாரதியார் நினைவு தினம்: 11-9-1921 Poll_c10 
5 Posts - 3%
Karthikakulanthaivel
மகாகவி பாரதியார் நினைவு தினம்: 11-9-1921 Poll_c10மகாகவி பாரதியார் நினைவு தினம்: 11-9-1921 Poll_m10மகாகவி பாரதியார் நினைவு தினம்: 11-9-1921 Poll_c10 
2 Posts - 1%
prajai
மகாகவி பாரதியார் நினைவு தினம்: 11-9-1921 Poll_c10மகாகவி பாரதியார் நினைவு தினம்: 11-9-1921 Poll_m10மகாகவி பாரதியார் நினைவு தினம்: 11-9-1921 Poll_c10 
2 Posts - 1%
Manimegala
மகாகவி பாரதியார் நினைவு தினம்: 11-9-1921 Poll_c10மகாகவி பாரதியார் நினைவு தினம்: 11-9-1921 Poll_m10மகாகவி பாரதியார் நினைவு தினம்: 11-9-1921 Poll_c10 
2 Posts - 1%
Balaurushya
மகாகவி பாரதியார் நினைவு தினம்: 11-9-1921 Poll_c10மகாகவி பாரதியார் நினைவு தினம்: 11-9-1921 Poll_m10மகாகவி பாரதியார் நினைவு தினம்: 11-9-1921 Poll_c10 
2 Posts - 1%
சிவா
மகாகவி பாரதியார் நினைவு தினம்: 11-9-1921 Poll_c10மகாகவி பாரதியார் நினைவு தினம்: 11-9-1921 Poll_m10மகாகவி பாரதியார் நினைவு தினம்: 11-9-1921 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மகாகவி பாரதியார் நினைவு தினம்: 11-9-1921 Poll_c10மகாகவி பாரதியார் நினைவு தினம்: 11-9-1921 Poll_m10மகாகவி பாரதியார் நினைவு தினம்: 11-9-1921 Poll_c10 
435 Posts - 47%
heezulia
மகாகவி பாரதியார் நினைவு தினம்: 11-9-1921 Poll_c10மகாகவி பாரதியார் நினைவு தினம்: 11-9-1921 Poll_m10மகாகவி பாரதியார் நினைவு தினம்: 11-9-1921 Poll_c10 
320 Posts - 35%
Dr.S.Soundarapandian
மகாகவி பாரதியார் நினைவு தினம்: 11-9-1921 Poll_c10மகாகவி பாரதியார் நினைவு தினம்: 11-9-1921 Poll_m10மகாகவி பாரதியார் நினைவு தினம்: 11-9-1921 Poll_c10 
77 Posts - 8%
T.N.Balasubramanian
மகாகவி பாரதியார் நினைவு தினம்: 11-9-1921 Poll_c10மகாகவி பாரதியார் நினைவு தினம்: 11-9-1921 Poll_m10மகாகவி பாரதியார் நினைவு தினம்: 11-9-1921 Poll_c10 
38 Posts - 4%
mohamed nizamudeen
மகாகவி பாரதியார் நினைவு தினம்: 11-9-1921 Poll_c10மகாகவி பாரதியார் நினைவு தினம்: 11-9-1921 Poll_m10மகாகவி பாரதியார் நினைவு தினம்: 11-9-1921 Poll_c10 
30 Posts - 3%
prajai
மகாகவி பாரதியார் நினைவு தினம்: 11-9-1921 Poll_c10மகாகவி பாரதியார் நினைவு தினம்: 11-9-1921 Poll_m10மகாகவி பாரதியார் நினைவு தினம்: 11-9-1921 Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
மகாகவி பாரதியார் நினைவு தினம்: 11-9-1921 Poll_c10மகாகவி பாரதியார் நினைவு தினம்: 11-9-1921 Poll_m10மகாகவி பாரதியார் நினைவு தினம்: 11-9-1921 Poll_c10 
5 Posts - 1%
sugumaran
மகாகவி பாரதியார் நினைவு தினம்: 11-9-1921 Poll_c10மகாகவி பாரதியார் நினைவு தினம்: 11-9-1921 Poll_m10மகாகவி பாரதியார் நினைவு தினம்: 11-9-1921 Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
மகாகவி பாரதியார் நினைவு தினம்: 11-9-1921 Poll_c10மகாகவி பாரதியார் நினைவு தினம்: 11-9-1921 Poll_m10மகாகவி பாரதியார் நினைவு தினம்: 11-9-1921 Poll_c10 
4 Posts - 0%
Ammu Swarnalatha
மகாகவி பாரதியார் நினைவு தினம்: 11-9-1921 Poll_c10மகாகவி பாரதியார் நினைவு தினம்: 11-9-1921 Poll_m10மகாகவி பாரதியார் நினைவு தினம்: 11-9-1921 Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மகாகவி பாரதியார் நினைவு தினம்: 11-9-1921

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Sep 11, 2014 1:50 am

மகாகவி பாரதியார் நினைவு தினம்: 11-9-1921 10665946_733846493355117_2120923736609709737_n

சுப்பிரமணிய பாரதி (திசம்பர் 11, 1882 - செப்டம்பர் 11, 1921). இவர் பாரதியார் என்றும், மகாகவி என்றும் அழைக்கப்படுகிறார். பாரதி ஒரு கவிஞர், எழுத்தாளர், பத்திரிக்கையாசிரியர், விடுதலை வீரர், சமூக சீர்திருத்தவாதி என பல்வேறு பரிமாணங்கள் கொண்டவர். சுப்பிரமணியன் என்ற இயற்பெயர் கொண்டவர்.

தமிழின் கவிதை மற்றும் உரைநடையில் தன்னிகரற்ற புலமை பெற்ற பேரறிவாளரும், நவீன தமிழ் கவிதைக்கு முன்னோடியும் ஆவார். தம் எழுத்துக்களின் வாயிலாக மக்களின் மனதில் விடுதலை உணர்வை ஊட்டியவர். இந்திய வரலாற்றின் திருப்பங்கள் நிறைந்த காலகட்டத்தில் வாழ்ந்தவர். இவரின் சமகாலத்தைய மனிதர்கள் மகாத்மா காந்தி, பால கங்காதர திலகர், உ. வே. சாமிநாதையர், வ. உ. சிதம்பரம் பிள்ளை மற்றும் மகான் அரவிந்தர் ஆகியோர்.

தமிழ், தமிழர் நலன், இந்திய விடுதலை, பெண் விடுதலை, சாதி மறுப்பு மற்றும் பல்வேறு சமயங்கள் குறித்து கவிதைகளும் கட்டுரைகளும் எழுதியுள்ளார். இவருடைய கவித்திறனை மெச்சி பாரதி என்ற பட்டம் எட்டப்ப நாயக்கர் மன்னரால் எட்டயபுரம் அரசசபையால் வழங்கப்பட்டது.

1882-ம் ஆண்டு திசம்பர் 11 சின்னசாமி ஐயருக்கும் இலட்சுமி அம்மாளுக்கும் எட்டயபுரத்தில், பிறந்த பாரதி (“சுப்பையா” என்று அழைக்கப்பட்டார்) தனது 11-ம் வயதில் பள்ளியில் படித்து வரும்பொழுதே கவிபுனையும் ஆற்றலை வெளிப்படுத்தினார். 1897 ஆம் ஆண்டு செல்லம்மாளை மணந்தார். 1898 ஆம் ஆண்டு தொழிலில் ஏற்பட்ட நட்டத்தினால் வறுமை நிலையினை அடைந்தார். இதனை எட்டையபுரம் மன்னருக்குத் தெரிவித்து பொருளுதவி வழங்குமாறு கடிதத்தில் கேட்டுக்கொண்டார். பின்னர் எட்டையபுரம் அரண்மனையில் பணி கிடைத்தது. சிறிது காலங்களிலேயே அப்பணியை விடுத்து காசிக்குச் சென்றார். 1898 முதல் 1902 வரை அங்கு தங்கி இருந்தார். பின்னர் எட்டையபுரத்தின் மன்னரால் அழைத்து வரப்பட்டு அரண்மனை ஒன்றினில் பாரதி வாழ்ந்தார். ஏழு வருடங்கள் பாட்டெழுதாமல் இருந்தபின்னர், 1904 ஆம் ஆண்டு மதுரையில் பாரதி எழுதிய பாடல் 'விவேகபானு' இதழில் வெளியானது. வாழ்நாள் முழுதும் பல்வேறு தருணங்களில் பத்திரிகை ஆசிரியராகவும் மதுரையில் சேதுபதி மேல்நிலைப் பள்ளியில் தமிழாசிரியராகவும் பணியாற்றியுள்ளார்.

தமிழ், ஆங்கிலம், இந்தி, சமற்கிருதம், வங்காள மொழி ஆகியவற்றில் புலமை பெற்றவர். பிற மொழி இலக்கியங்களை மொழி பெயர்க்கவும் செய்துள்ளார்.

“    தேடிச் சோறுநிதந் தின்று
   பல சின்னஞ் சிறுகதைகள் பேசி
   மனம் வாடித் துன்பமிக உழன்று
   பிறர் வாடப் பல செயல்கள் செய்து
   நரை கூடிப் கிழப்பருவம் எய்தி
   கொடுங் கூற்றுக் கிரையெனப்பின் மாயும்
   பல வேடிக்கை மனிதரைப் போலே
   நான் வீழ்வே னென்று நினைத்தாயோ?     ”

தம் தாய்மொழியாம் தமிழின்மீது அளவுகடந்த அன்புகொண்டவர். பன்மொழிப் புலமைபெற்ற பாவலரான இவர் "யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவ தெங்கும் காணோம்" என கவிபுனைந்த கவிஞாயிறு. சமற்கிருதம், வங்காளம், இந்தி, பிரான்சியம், ஆங்கிலத்தில் தனிப்புலமை பெற்றவர். அம்மொழிகளின் தனிச்சிறப்புமிக்க படைப்புகளைத் தமிழ் மொழியாக்கம் செய்தவர். பழந்தமிழ்க் காவியங்களின்மீது தனி ஈடுபாடு கொண்டவர். அழகியல் உணர்வும் தத்துவ சிந்தனைகளும் ஒருங்கே கொண்டவர் என்று அறியப்படுகின்றார். தேசிய கவி என்ற முறையிலும் உலகு தழுவிய சிந்தனைகளை அழகியலுடனும் உண்மையுடனும் கவின்றதினாலும், இவர் உலகின் சிறந்த கவிஞர்களுடன் ஒப்பிடப்படும் சிறப்பு பெற்றவர் என்றும் அண்மைக்கால தமிழின் தன்னிகரற்ற கவியேறு என்றும் பலர் கருதுகின்றனர்.

       குயில் பாட்டு
       கண்ணன் பாட்டு - இந்துக் கடவுளான கண்ணன் மீது பாடிய பாடல்களின் தொகுப்பாகும்.
       பாஞ்சாலி சபதம்
       புதிய ஆத்திச்சூடி
       சுயசரிதை
       பாரதி அறுபத்தாறு
       ஞானப் பாடல்கள்
       தோத்திரப் பாடல்கள்
       விடுதலைப் பாடல்கள்
       சந்திரிகையின் கதை

ஆகியன அவர் படைப்புகளில் சில.

பாரதியார் சுதேசமித்திரனில் உதவி ஆசிரியராக நவம்பர் 1904 முதல் ஆகத்து 1906 வரை பணியாற்றியதோடு தம் வாழ்நாளின் இறுதியிலும் ஆகத்து 1920 முதல் செப்டம்பர் 1920 வரை அவ்விதழின் உதவி ஆசிரியராகப் பணியாற்றி மறைந்தார். சக்கரவர்த்தினி என்ற மகளிர் மாத இதழிலும் (ஆக. 1905-ஆக. 1906 ), இந்தியா என்ற வார இதழில் (மே 1905-மார்.1906/செப்.1906, புதுச்சேரி: 10.19.1908- 17.05.1910), சூரியோதயம்(1910), கர்மயோகி (திசம்பர் 1909-1910), தர்மம் (பிப்.1910),என்ற இதழ்களிலும் பாலபாரதா ஆர் யங் இண்டியா என்ற ஆங்கில இதழிலும் ஆசிரியராகப் பணியாற்றினார்.

விடுதலைப் போராட்டக் காலத்தில் தேசிய உணர்வுள்ள பல்வேறு கவிதைகளைப் படைத்து மக்களை ஒருங்கிணைத்த காரணத்தால் பாரதி தேசிய கவியாக போற்றப்படுகிறார். மண்ணும் இமயமலை எங்கள் மலையே... மாநிலமீதிதுபோல் பிறிதிலையே... இன்னறு நீர்க்கங்கை ஆறெங்கள் ஆறே... இங்கிதன் மாண்பிற்கெதிர் எது வேறே என்று எழுதியவர்.

தன்னுடைய தாய்நாட்டை நினைந்து பெருமைகொண்டதோடு மட்டுமன்றி அதன் எதிர்காலம் எவ்வாறிருக்கவேண்டும் என்ற பார்வையும் பெற்றவர். "வந்தேமாதரம் என்போம் எங்கள் மாநிலத் தாயை வணங்குதும் என்போம்" என்றவர், பள்ளித்தலமனைத்தும் கோயில் செய்குவோம் என்றார். வங்கத்தில் ஓடிவரும் நீரின் மிகையால் மையத்து நாடுகளில் பயிர்செய்யும் நதிநீர் இணைப்புத் திட்டத்தை விடுதலைக்கு முன்பே கனவுகண்டவர்.

ஆடுவோமே பள்ளு பாடுவோமே ஆனந்த சுதந்திரம் அடைந்துவிட்டோம் - என்று விடுதலைக்கு முன்பாகவே பாடிக்களித்த பாரதி, தேச விடுதலைக்கு முன்பாகவே உயிர்நீத்தவர்.

பாட்டுக்கொரு புலவன் பாரதி பாடல்களின் இலக்கணக் கட்டுக்களைத் தகர்த்தெறிந்தவன். இவருக்கு முன்பாக கவிபுனைந்த கவிஞர்கள் தொல்காப்பிய இலக்கணம் சிறிதும் வழுவாமல், பொருள்கொள், யாப்பு, அணி என இலக்கணத்தில் கட்டுண்டு கற்றோர் மட்டும் கற்றறியும் கவிதைகளையே புனைந்தனர். இலக்கணச் சட்டங்களைத் தகர்த்தெறிந்த பாரதி, புதுக் கவிதை என புகழப்படும், பாமரரும் கேட்டுணரும் வசன கவிதையைத் தமிழுக்குத் தந்தவர். கேலிச்சித்திரம் (caricature) எனப்படும் வரையும் முறையை தமிழுக்கு முதலில் தந்த பெருமை பாரதியையே சாரும்

தமிழகத்தில் முதலில் பெண்ணுரிமையைப் பேசியது பாரதியாகத்தான் இருக்கமுடியும். பெண்ணடிமை தீருமட்டும் பேசும் இத் திருநாட்டில் மண்ணடிமைதீருதல் முயற்கொம்பே என பெண்ணுரிமையை ஏத்தினார். "போற்றி போற்றியோராயிரம் போற்றி நின் பொன்னடிக்குப் பல்லாயிரம் போற்றிகான்" என்ற பாரதி பெண்மை வாழ்கவென கூத்திடுவோமடா என்றார். பெண்களின் கல்வியறிவுக்காகவும் சட்டங்களை செய்திடவும் கனவு கண்ட பாரதி, சாதம் படைக்க மட்டுமல்லாது தெய்வச் சாதிபடைக்கவும் பெண்கள் தகுதிபடைத்தவர்கள் என்று கண்டார்.

இந்திய விடுதலைப் போராட்டத்தையே பாரதப் போராகவும், பாஞ்சாலியை பாரத தேவியாகவும் உருவகப்படுத்தி மகாகவி படைத்த படைப்புதான் பாஞ்சாலி சபதம். அழகிய இலக்கிய நயத்தையும், மிக அழகான கவிநயத்தையும் கொண்ட தமிழின் அழியாக் காவியமாக பாரதியின் பாஞ்சாலி சபதம் விளங்குகிறது.

தமிழ்நாடு அரசு மகாகவி பாரதியார் நினைவினைப் போற்றும் வகையில் பாரதியார் நினைவுச் சின்னங்களாக எட்டயபுரத்தில் அவர் வாழ்ந்த இல்லம் நினைவு இல்லமாகவும், சென்னை திருவல்லிக்கேணியில் அவர் வாழ்ந்த இல்லம் நினைவு இல்லமாகவும், புதுச்சேரியில் அவர் வாழ்ந்த இல்லம் நினைவு இல்லமாகவும் கொண்டு பராமரிக்கப்பட்டு வருகிறது. இவர் பிறந்த எட்டயபுரத்தில் பாரதி மணிமண்டபமும் அமைக்கப்பட்டுள்ளது. இதன் மைய மண்டபத்தில் மகாகவி பாரதியின் ஏழு அடி உயர திருவுருவச்சிலை அமைக்கப்பட்டு 11-12-1999 அன்று பஞ்சாப் மாநில முதல்வர் தர்பாராசிங் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. 25 சதுர அடி பரப்பளவில் 1000 நபர்கள் அமரக்கூடிய அளவில் திறந்தவெளிக் கலையரங்கம் உள்ளது. இங்கு பாரதியின் வாழ்க்கை வரலாறு தொடர்பான புகைப்படக் கண்காட்சியும் வைக்கப்பட்டுள்ளது.

#மகாகவி #பாரதியார் #சுப்பிரமணியபாரதி

மகாகவி பாரதியார் நினைவு தினம்: 11-9-1921 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Sep 11, 2014 2:04 am

அமெரிக்காவில் உலக வர்த்தக மைய கட்டம் தீவிரவாதிகளால் தகர்க்கப்பட்ட நாள்: 11-9-2001

அமெரிக்காவில் உலக வர்த்தக மைய கட்டம் தீவிரவாதிகளால் தகர்க்கப்பட்ட நாள்: 11-9-2001
2001-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் இதே தேதியில் பயணிகள் விமானங்களை தீவிரவாதிகள் கடத்தி அமெரிக்காவில் உலக வர்த்தக மையக் கட்டடங்கள் மீது மோதச் செய்தனர். அடுத்தடுத்து விமானங்கள் கட்டடங்கள் மீது மோதியதில் கட்டடம் இடிந்து தரைமட்டமானது. தென்கோபுரம் 56 நிமிடங்கள் எரிந்து பிறகு நொறுங்கி விழுந்தது. வடகோபுரம் 102 நிமிடங்கள் எரிந்து நொறுங்கியது.

இந்த கோர சம்பவத்தில் விமானத்தில் பயணம் செய்த 246 பொதுமக்கள், 19 தீவிரவாதிகள் உள்பட மொத்தம் 2973 பேர் கொல்லப்பட்டனர். இதில் 300 பேர் வெளிநாட்டவர் ஆவர். இந்த தாக்குதலுக்கு பின்லேடனின் அல்கொய்தா இயக்கம் பொறுப்பேற்றது.

மகாகவி பாரதியார் நினைவு தினம்: 11-9-1921 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82744
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Sep 11, 2014 6:04 am

என்று அழியாப் புகழ் பெற்ற பாரதி தம் கவிதைகள்
மற்றும் சமூக சீர்திருத்தங்கள் மூலமாக இன்றும்
என்றும் நம்முடன் வாழ்கின்றார்.
-

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Sep 12, 2014 2:36 am

செப்.11: கவிதையுலகின் சூரியன் பாரதி நினைவு நாள் சிறப்பு பகிர்வு

சுப்பையா என்று இளம் வயதில் அழைக்கப்பட்ட தமிழ் கவிதையுலகின் சூரியன் பாரதி நினைவு நாள்

தமிழ் நிலத்தில் ஈரம் பாய்ச்சி வீரம் விதைத்த சொல் உழவன். மண்ணுள்ள காலம் வரை மறக்க முடியாத கவிஞன். மக்கள் மனங்களில் வாழும் ஒருவன். அழகிய தமிழ் மகன் இவன்!. இளம் வயதில் அம்மாவின் பாசம் என்னவென்று தெரியாமல் அப்பாவின் வளர்ப்பில் வளர்ந்த அவருக்கு அப்பொழுது கணக்கு என்றால் பிணக்கு. இது வெகு காலத்துக்கு கல்விமுறையின் மீது வெறுப்பாகவே மாறியது. ஒரு சிறுவன் இளமையில் கல் என்று ஓயாமல் மனனம் செய்து சொல்லிக்கொண்டு இருந்த பொழுது ‘முதுமையில் மண்’ என்று சொல்லிவிட்டு நடக்க ஆரம்பித்தார் இவர்.

அற்புதமான கவிதையாற்றல் பாரதி எனும் கலைவாணியை குறிக்கும் பட்டத்தை தந்தது. பாரதி சின்னப்பயல் என்று கவிதை பாட சொல்ல பார் அதி சின்னப்பயல் என எள்ளல் குறையாமல் பாடியது பாரதி தான், தமிழ் எழுத்துலகில் கார்ட்டூன் என்பதை அறிமுகப்படுத்தியது பாரதியாரே. அதை முழுதாக சித்திர பாரதி என்கிற நூலில் பார்க்கலாம். இளம் வயதில் பாரதிக்கு ஒரு காதல் இருந்தது. அந்த பெண்ணை சாகுந்தலை என்று அடையாளமிட்டு குறிக்கிறார். தன் மகளுக்கு அதே பெயரை வைத்தார் அவர்.

மதுரை தமிழ் சங்கம் நடத்திய போட்டியில் இரண்டாம் பரிசு பெற்றது அவரின் கவிதை. அந்தக்கவிதை தான் ,’செந்தமிழ் நாடெனும் போதினிலே’. பண்டிதர்கள் கடத்திக்கொண்டு போன பைந்தமிழ் குழந்தையை கண்டுபிடித்துக்கொடுத்த காவல் நிலையமான பாரதியின் எளிய நடை அக்காலத்தில் பெரும் விமர்சனத்துக்கு உள்ளானது. அதை பண்டிதர்கள் எதிர்த்தார்கள். பாரதி ,”கவியரசன் தமிழுக்கு இல்லை என்ற வசை என்னால் கழிந்தது !” என்று மட்டும் சொன்னார்.

எக்கச்சக்க வறுமையிலும் குருவிக்கு தானியங்களை கொடுத்துவிட்டு சிரித்த நேசிப்பாளன். வாட்டிய பசியிலும் ,”எத்தனை கோடி இன்பம் வைத்தாய் இறைவா !” என்று பாடிய பெருங்கவிஞன் அவன். எல்லா உயிரிலும் இறைவன் இருக்கிறான் என்று நம்பிய அவர் புதுச்சேரியில் புயலில் பறவைகள் இறந்த பொழுது கனிவோடு அவற்றை அடக்கம் செய்தார்.

நாட்டை தட்டி எழுப்ப கவிதை எழுதிய அந்த சிந்துக்கு தந்தை எப்பொழுதும் தாலாட்டு மட்டும் பாடியதே இல்லை. நாடு உறங்க இது தருணமன்று என்கிற எண்ணமே காரணம். பாரதியும் பாரதிதாசனும் சேர்ந்து ஒருநாள் அடுப்பு பற்ற வைத்தார்கள். அடுப்பு பற்றவே இல்லையாம். சமையல் செய்யப் பெண்கள் எவ்வளவு துன்புறுகிறார்கள் என்பதை உணர்ந்து `பெண்கள் வாழ்கவென்று கூத்திடுவோமடா’ என்ற பாட்டை அன்று தான் எழுதினார் பாரதி. கழுதை குட்டியை தூக்கி போட்டுகொண்டு மனைவியோடு கம்பீரமாக நடந்த பாரதியை ,”பைத்தியங்கள் உலவப்போகின்றன !” என்று ஊரார் சொன்ன பொழுது எழுப்பியது தான் ‘நிமிர்ந்த நன்னடை’ பாடல்

. 'என் பெண் தாழ்ந்த சாதிப் பையனுடன் ரங்கூனுக்கு ஓட வேண்டும். அவரைத்தான் திருமணம் செய்யப்போவதாக எழுத வேண்டும். நான் ஆனந்தப்பட வேண்டும்' என்று சொன்னவர்!என்று கடிதம் எழுதவேண்டும். அதைக்கேட்டு நான் பூரிக்க வேண்டும் ‘ என்று பாரதி எழுதினார்.

‘கடமை அறியோம் தொழில் அறியோம் !” என்று பறவையின் மனப்பான்மையிலும்,’தீக்குள் விரலை வைத்தால் நின்னைத் தீண்டும் இன்பம் தோன்றுதடா நந்தலாலா’ என்றும் பாரதியால் தான் பாட முடியும்
வறுமையில் வாடிப்போன அவர் “பராசக்தி! இந்த உலகின் ஆன்மா நீ. உனக்கு அறிவில்லையா? உனக்குக் காது கேட்காதா? நாள்தோறும் உன்மீது பாட்டுப் பாடுகிறேன். நான் கேட்கும் வரங்களையெல்லாம் கொடுத்துவிடக் கூடாதா?
கடன்காரன் தொல்லை தாங்க முடியவில்லையே. குழந்தைக்கு ஜுரம் வந்தது… வைத்தியனுக்குக் கொடுக்கப் பணம் இல்லை. குழப்பம், குழப்பம்; தீராத குழப்பம்! எத்தனை நாட்கள்! எத்தனை மாதங்கள்! எத்தனை வருஷங்கள்! தாயே! என்னைக் கடன்காரர் ஓயாமல் தொல்லைப்படுத்திக் கொண்டிருந்தால், நான் அரிசிக்கும் உப்புக்கும் யோசனை செய்து கொண்டிருந்தால், உன்னை எப்படிப் பாடுவேன்?” என்று புலம்பினார்

பாரதி காந்திக்கு கடிதம் வரைகிற பொழுது அவர் சென்னையில் ஆங்கிலத்தில் பேசியதை விடுத்து ஏதேனும் இந்திய மொழியில் பேசி இருக்கலாமே என்று கேட்ட பொழுது அவர் அவ்வாறே செய்கிறேன் என்றார். ஆனால்,கடிதத்தை ஏன் ஆங்கிலத்தில் எழுதினீர்கள் என்று கேட்ட பொழுது ,’பிறரை புண்படுத்தும் பொழுது அன்னை மொழியை பயன்படுத்தி பழக்கமில்லை.’ என்று தெறித்து வந்தது பதில் சென்னை கிருஷ்ணாம்பேட்டையில் பாரதி உறங்கிக்கொண்டு இருக்கிறான். அவனின் கீதங்கள் அக்கினி குஞ்சுகளை ஈந்துக்கொண்டே இருக்கின்றன. வேடிக்கை மனிதரைப்போல வீழாத அந்த என்றும் இளைஞன் இறக்கிற பொழுதும் வெள்ளையனை தலை முடியில் கூட அண்ட விடமால் நல்லதொரு வீணையாக நாட்டை மீட்டி மறைந்தான். அவனின் இறுதி அஞ்சலிக்கு வந்தது இருபதுக்கும் குறைவானோர்.

மகாகவி பாரதியார் நினைவு தினம்: 11-9-1921 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Fri Sep 12, 2014 6:46 am

முண்டாசு கவிஞனுக்கு இறப்பில்லை...கவிதைகள் மூலமாக நம்மோடு வாழ்ந்து கொண்டிருக்கிறான்...

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக