புதிய பதிவுகள்
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
''பூச்சி கடித்த காய்கறிகளையே சாப்பிடுங்கள்!'' - இப்படியும் ஓர் எளிய வழி Poll_c10''பூச்சி கடித்த காய்கறிகளையே சாப்பிடுங்கள்!'' - இப்படியும் ஓர் எளிய வழி Poll_m10''பூச்சி கடித்த காய்கறிகளையே சாப்பிடுங்கள்!'' - இப்படியும் ஓர் எளிய வழி Poll_c10 
48 Posts - 60%
heezulia

17 Posts - 21%
dhilipdsp

4 Posts - 5%
mohamed nizamudeen

வேல்முருகன் காசி

3 Posts - 4%
Guna.D

1 Post - 1%
D. sivatharan

kavithasankar

Sathiyarajan

இந்த மாத அதிக பதிவர்கள்

43 Posts - 60%

15 Posts - 21%

4 Posts - 6%

2 Posts - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

''பூச்சி கடித்த காய்கறிகளையே சாப்பிடுங்கள்!'' - இப்படியும் ஓர் எளிய வழி

avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Thu Sep 04, 2014 11:45 pm

''பூச்சி கடித்த காய்கறிகளையே சாப்பிடுங்கள்!''
- இப்படியும் ஓர் எளிய வழி

ஆரோக்கியமான வாழ்க்கைக்கு நல்ல உணவுதான் முக்கியம்! ஆனால், ஆரோக்கியம் தரும் என்று நம்புகிற உணவே ஆபத்தாக இருந்தால்? 'பூச்சிக்கொல்லிகளும் ரசாயன உரங்களும், பூச்சிகளுடன் மனிதர்களையும் சேர்த்தே கொல்கின்றன’ என இயற்கை ஆர்வலர்கள் பலரும் குரல் எழுப்பும் நிலையில், நமக்கான நல்ல காய்கறிகளையும் பழங்களையும் எப்படி அடையாளம் கண்டுகொள்வது? மருத்துவம், உணவு, இயற்கை எனப் பலதரப்பட்ட பிரபலங்களிடமும் பேசினோம்.
''பூச்சி கடித்த காய்கறிகளையே சாப்பிடுங்கள்!'' - இப்படியும் ஓர் எளிய வழி P33a
''குறுகிய காலத்தில் லாபம் பார்க்க வேண்டும் என்பதற்காக அரசு நிர்ணயித்து இருப்பதைவிட அதிக அளவு உரங்களை சில விவசாயிகள் பயன்படுத்துகிறார்கள். இதனால், பயிர் விரைவில் பலன் தந்தாலும் அதில் மறைந்திருக்கும் நஞ்சு அதை சாப்பிடுபவர்களை நிச்சயமாகப் பாதிக்கும். காய்கறியின் செல்லிலேயே மருந்துகள் கலந்துவிடுவதால், அதைக் கழுவுவதாலோ, வேகவைப்பதாலோ நச்சுத்தன்மை போய்விடாது. இதுபோன்று பலர் செய்கிற தவறுகளால்தான் புதுப்புது வியாதிகள் உணவுகள் மூலம் வந்து சேர்கின்றன. நம் உடலுக்கான சக்தியைக் கொடுக்க வேண்டிய உணவுகளே வியாதிகளை உண்டாக்கும் தலைகீழ் நிலைமையும் இந்த ரசாயனங்களால் ஏற்படுகிறது!'' - கவலையோடு சொல்கிறார் டாக்டர் புகழேந்தி.
''பூச்சி கடித்த காய்கறிகளையே சாப்பிடுங்கள்!'' - இப்படியும் ஓர் எளிய வழி P33
''வயலில் பயன்படுத்தப்படும் ரசாயனங்கள் உணவுப் பொருட்களில் கலப்பது நேரடிப் பாதிப்பு என்றால், குடிநீர் மற்றும் காற்றில் கலந்து சுற்றுச்சூழலையும் மாசுபடுத்துகிறது. இன்று சிறுமிகள் மிக இளம்வயதிலேயே பருவம் அடைவதற்கு அதீத ரசாயனப் பயன்பாடும் ஒரு காரணம். பொதுவாகக் காய்கறிகளையோ, பழங்களையோ வாங்கும்போது, பூச்சிகள் கடித்திருந்தால் வாங்கக் கூடாது என்று நினைப்போம். ஆனால், பூச்சிகள் கடித்திருப்பதைத் தேர்ந்தெடுப்பதே நல்லது. செடியில் விஷம் ஏதும் இல்லை என்பதன் அடையாளம்தான் பூச்சிகள் கடித்திருப்பது. கத்தரிக்காயில் பூச்சி கடித்திருக்கிறது என்றால், அந்த பாகத்தை மட்டும் வெட்டிப் போட்டுவிட்டு சமைப்பதால் எந்தக் கெடுதலும் இல்லை. பளபளப்பானக் காய்கறிகளைத் தவிர்ப்பதுபோலவே கடைகளில் கிடைக்கும் பளிச் நிறம்கொண்ட உணவுப் பொருட்களையும் தவிர்ப்பது நல்லது!'' என்கிறார் டயட்டீஷியன் ஷைனி சந்திரன்.
''பூச்சி கடித்த காய்கறிகளையே சாப்பிடுங்கள்!'' - இப்படியும் ஓர் எளிய வழி P32
இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வாரும் இந்தக் கருத்துக்களை வழிமொழிகிறார். ''கேரளத்தில் காசர்கோடு மற்றும் அதைச் சுற்றி உள்ள பகுதி மக்கள் புற்றுநோய் மற்றும் நரம்பு மண்டலக் கோளாறுகளால் தொடர்ந்து கடுமையாகப் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். பிறக்கிற குழந்தைகளில் முக்கால்வாசிக்கும் மேலானவை ஊனமாகவே பிறக்கிற கொடுமையும் அங்கே நடக்கிறது. இதற்கு காசர்கோடு பகுதியில் 12,500 ஏக்கர் பரப்பளவில் உள்ள முந்திரிக்காட்டில் என்டோசல்பான் மருந்து தெளிக்கப்பட்டதுதான் காரணம் என்று கண்டுபிடித்து, அதனை ஆதாரப்பூர்வமாக நிரூபித்தும் இருக்கிறார்கள்.

பயிர் அறுவடை செய்வதற்கு 21 நாட்களுக்கு முன் எந்த பூச்சிக்கொல்லியும் தெளிக்கக் கூடாது. அப்படித் தெளித்தால் அறுவடையாகும் பயிரோடு அந்த விஷமும் வந்துவிடும். ஆனால், நம் ஆட்கள் பூச்சிக்கொல்லிகள் தெளித்துத்தான் சந்தைக்கே அனுப்புகிறார்கள். காலிஃப்ளவரும் முட்டைக்கோஸும் கெட்டுப்போகாமல் இருக்க பூச்சிக்கொல்லிகளில் முழுதாக முக்கி எடுத்து சந்தைக்கு அனுப்புகிறார்கள். 'மின்னுவதெல்லாம் பொன்னல்ல’ என்று ஒரு பழமொழி இருக்கிறது. காய்கறி, பழங்கள் வாங்கும்போது ரொம்பவும் பளபளப்பாக, ஃப்ரெஷ்ஷாக இருக்கிறதென்று வாங்கக் கூடாது. பளபளப்பாக இருந்தாலே பூச்சிக்கொல்லி தெளித்திருப்பார்களோ என்ற சந்தேகம் மனதுக்குள் எழ வேண்டும்.

தோட்டத்தில் இருந்து பறிக்கப்பட்ட இரண்டு நாட்களில் பழங்கள் கெட்டுப்போவது இயல்பு. ஆனால், அமெரிக்காவில் இருந்து வரும் ஆப்பிள், காபூலில் இருந்து வரும் மாதுளை என்று பட்டியல் போட்டு விற்கிறார்கள். வெளிநாடுகளில் இருந்து இறக்குமதியாகும் பழங்கள் கெட்டுப்போகக் கூடாது என்பதற்காக பூஞ்சைக்கொல்லிகளில் முக்கி எடுத்துத்தான் அனுப்புகிறார்கள். அவை எல்லாம் ஆபத்தானவை. கத்தரிக்காயில் கத்தரிக்காய் சுவை இல்லை என்றாலோ, கொய்யாப்பழத்தில் கொய்யாப்பழத்தின் சுவை இல்லை என்றாலோ அது பூச்சிக்கொல்லி - உரங்களால் விளைவிக்கப்பட்ட காய்கறி என்று அடையாளம் கண்டுகொள்ளலாம்'' என்று சொன்னவர், ''நல்ல முறையில் விளைவிக்கப்பட்ட காய்கறிகளைத் தேடுவது முன்பு கஷ்டமாக இருந்தது. ஆனால், இப்போதெல்லாம் இயற்கை விவசாயத்தால் பயிர் செய்யப்பட்ட காய்கறிகள், பழங்கள் பசுமை அங்காடிகளில் தேவையான அளவுக்குக் கிடைக்கின்றன!'' என்கிறார் கூடுதல் தகவலாக.

M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Thu Sep 04, 2014 11:53 pm

''பூச்சி கடித்த காய்கறிகளையே சாப்பிடுங்கள்!'' - இப்படியும் ஓர் எளிய வழி 103459460 ''பூச்சி கடித்த காய்கறிகளையே சாப்பிடுங்கள்!'' - இப்படியும் ஓர் எளிய வழி 3838410834 ''பூச்சி கடித்த காய்கறிகளையே சாப்பிடுங்கள்!'' - இப்படியும் ஓர் எளிய வழி 1571444738

M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Thu Sep 04, 2014 11:57 pm

மசாலா பொருட்களைப் பயன்படுத்துவது எப்படி?

தளதள தக்காளி குருமா, கமகமக்கும் கறிக்குழம்பு, பெப்பர் பீஸ் மசாலா... நினைக்கும்போதே, நாக்கில் எச்சில் ஊறும்தானே! வாய்க்கு ருசியையும் சுண்டி இழுக்கும் மணத்தையும் ஒருசேர அளிப்பவை மசாலாப் பொருட்கள். ஆனால், இவை எந்த அளவுக்கு உடலுக்கு நல்லவை?

''பூச்சி கடித்த காய்கறிகளையே சாப்பிடுங்கள்!'' - இப்படியும் ஓர் எளிய வழி P23

''பொதுவாக மசாலா சேர்த்த உணவு வகைகளைக் பகல் பொழுதில் சாப்பிடுவதுதான் நல்லது. அசைவ உணவுகளில் கொழுப்பு அதிகம். இதில் சேர்க்கப்படும் மசாலாப் பொருட்களில் உள்ள நார்ச்சத்து உடலில் கொழுப்பைச் சேரவிடாமல் வெளியே தள்ளிவிடும். அதே சமயம், மசாலாப் பொருட்களை அதிக அளவில் சாப்பிடுவது உடலுக்குக் கெடுதலை விளைவிக்கும். உமிழ்நீர் சுரப்பை அதிகப்படுத்தி உணவு ஜீரணத்துக்கு மசாலா சங்கதிகள் உதவுகின்றன. வயிற்றுப் புண், வாயுத் தொல்லை, நெஞ்சு எரிச்சல், எதுக்களித்தல், ஏப்பம் போன்ற பிரச்னைகளால் அவதிப்படுபவர்கள் மசாலாப் பொருட்களை தவிர்ப்பது நல்லது.'' என்று அட்வைஸ் தருகிறார் உணவியல் நிபுணர் கிருஷ்ணமூர்த்தி.

மசாலாப் பொருட்களில் இருக்கும் சத்துக்கள் குறித்து அவர் தரும் பட்டியல் இங்கே...

ஏலக்காய்

வாய்த் துர்நாற்றத்தைப் போக்கும். ஹார்மோன்களைத் தூண்டும். வளர்சிதை மாற்றத்தை உண்டுபண்ணும். கோலின், மெக்னீஷியம், மாங்கனீஸ், நீரில் கரையாத நார்ச் சத்து (Insoluble Fibre)ஆகியவை மிக அதிகம். கலோரி, புரதம், மாவுச் சத்து மற்றும் பி காம்ப்ளெக்ஸ் வைட்டமின்களான தைமின், ரிபோஃப்ளோவின் ஆகியவை ஓரளவு இருக்கின்றன. கால்சியம் மிகக் குறைந்த அளவே இருக்கிறது. நாள் ஒன்றுக்கு ஐந்து கிராமுக்கு மேல் எடுத்துக்கொள்ளக் கூடாது. நெஞ்சு எரிச்சல், வயிற்றுப் புண், எதுக்களித்தல் பிரச்னை இருப்பவர்கள் கட்டாயம் சாப்பிடக் கூடாது.

சீரகம்

பசியைத் தூண்டும். மலச்சிக்கலைப் போக்கும். தினமும் சாதாரணத் தண்ணீரைக் குடிப்பதைவிட, சீரகத்தைப் போட்டுக் கொதிக்கவைத்த தண்ணீரைக் குடிப்பது மிகவும் நல்லது. கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு, கோலின், மெக்னீஷியம், சோடியம் பொட்டாசியம், தாமிரம் மற்றும் நீரில் கரையாத நார்ச் சத்து (Insoluble Fibre) ஆகியவை மிக அதிகமாக இருக்கின்றன. புரதம், பீட்டா கரோட்டின், தைமின், ரிபோஃப்ளோவின் ஆகியவை ஓரளவு இருக்கின்றன. தினமும் ஐந்து முதல் 10 கிராம் வரை பயன்படுத்தலாம். வயிற்றுப் புண், அசிடிட்டி, வயிற்றுப்போக்கு ஆகிய பிரச்னைகள் இருப்பவர்கள் தவிர்த்துவிட வேண்டும்.

பூண்டு

'ஒரு பல் பூண்டைச் சாப்பிட்டால் ஓராயிரம் வியாதிகள் ஓடும்’ என்பார்கள். வயோதிகர்களுக்கு வரும் மறதி நோயைக் குறைக்கும். நரம்பில் இருக்கும் நியூரான் செல்களைப் பாதுகாத்து, இறந்த செல்களைப் புதுப்பிக்கும். பக்கவாதத்தையும் குறைக்கும். கொழுப்பு மற்றும் உயர் ரத்த அழுத்தத்தைக் குறைக்கும். வாயுத் தொல்லை பிரச்னை இருப்பவர்கள் தவிர்க்க வேண்டும். சமைக்காமல் சாப்பிட்டால், எதுக்களித்தல், வயிறு எரிச்சல் போன்றவை ஏற்படும். மாவுச் சத்து, பாஸ்பரஸ், துத்தநாகம் ஆகியவை அதிகமாக இருக்கின்றன. கலோரி ஓரளவு இருக்கிறது. புரதம், கால்சியம், சோடியம், பொட்டாசியம், ஃபோலிக் ஆசிட், நார்ச் சத்து ஆகியவை குறைந்த அளவு இருக்கின்றன. உடலுக்கு நல்ல எதிர்ப்பு சக்தியைக் கொடுக்கும்.

கிராம்பு

சொத்தைப் பல்லில் இருக்கும் கிருமிகளைக் கொல்லும். பல் வலியைப் போக்கும். உடலுக்கு நல்ல எதிர்ப்பு சக்தியைத் தரும். ரத்தம் உறையாமல் தடுக்கும். மலச்சிக்கலைப் போக்கும். கால்சியம், இரும்புச் சத்து, நீரில் கரையாத நார்ச் சத்து (Insoluble Fibre) ஆகியவை அதிகமாக இருக்கின்றன. மெக்னீஷியம், மாங்கனீஸ், துத்தநாகம் ஆகியவை ஓரளவு இருக்கின்றன. புரதம், எண்ணெய், பாஸ்பரஸ், பீட்டா கரோட்டின், தாமிரம், நீரில் கரையும் நார்ச் சத்து (Soluble Fibre) ஆகியவை குறைந்த அளவு இருக்கின்றன. அதிகம் சாப்பிட்டால் எதுக்களித்தல் வரும் என்பதால், குறைந்த அளவில் எடுத்துக்கொள்ளலாம்.

வெந்தயம்

ஒமேகா 3 கொழுப்பு அமிலம் இருப்பதால் ரத்தம் உறையும் தன்மையைக் கட்டுப்படுத்தும். 100 கிராம் வெந்தயத்தில் 48 கிராம் நார்ச் சத்து இருப்பதால் ரத்தத்தில் உள்ள சர்க்கரை மற்றும் கொழுப்பின் அளவை வெகுவாகக் குறைக்கும். இதனால் உடல் எடை குறையும். உடலுக்கு குளிர்ச்சியைக் கொடுக்கும். மலச்சிக்கலைப் போக்கும். புரதம், கலோரி, ஃபோலிக் ஆசிட், கோலின், மெக்னீஷியம், துத்தநாகம் ஆகியவை அதிகமாக இருக்கின்றன. பாஸ்பரஸ், தைமின், ரிபோஃப்ளோவின், மாங்கனீஸ் ஆகியவை ஓரளவு இருக்கின்றன. கால்சியம், இரும்புச் சத்து, பீட்டா கரோட்டின் ஆகியவை மிகக் குறைந்த அளவே இருக்கின்றன. கர்ப்பத்தின்போது சர்க்கரை நோய் இருப்பவர்கள் மட்டும் சாப்பிடக் கூடாது. அதிகம் சாப்பிட்டால் செக்ஸ் ஹார்மோன்களின் செயல்பாடு பாதிக்கப்படும் என்பதால் நாள் ஒன்றுக்கு ஐந்து கிராம் அளவுக்கு எடுத்துக்கொள்ளலாம்.

பெருங்காயம்

ஜீரண சக்தியை அதிகரிக்கும். மலச்சிக்கலைப் போக்கும். வாயுத் தொல்லைக்கு நல்ல தீர்வு. கால்சியம், மாவுச் சத்து, இரும்புச் சத்து ஆகியவை அதிகமாக இருக்கின்றன. ஓரளவு கலோரியும் உண்டு. தாது உப்புக்களான மெக்னீஷியம், தாமிரம், மாங்கனீஸ், துத்தநாகம், புரதம் ஆகியவை மிகவும் குறைவு. வயிற்றுப் புண், நெஞ்சு எரிச்சல் இருப்பவர்கள் தவிர்ப்பது நல்லது. மற்றபடி அனைவரும் சாப்பிடலாம்.

இஞ்சி

உமிழ்நீரைச் சுரக்கவைக்கும். பசியைத் தூண்டுவதில் இஞ்சிக்கு இணை இல்லை. இஞ்சியில் மெக்னீஷியம், மாங்கனீஸ் ஆகியவை அதிகமாக இருக்கின்றன. துத்தநாகம் ஓரளவு இருக்கிறது. குறைந்த அளவு நார்ச் சத்து இருக்கிறது. இதைத் தேனில் ஊறவைத்தும், ரசமாகச் செய்தும் சாப்பிடலாம். இஞ்சிச் சாறு குடிப்பதன் மூலம் வாயுத் தொல்லையில் இருந்து விடுபடலாம். இஞ்சிச் சாறை உடனே சாப்பிட்டுவிட வேண்டும்; இல்லையெனில், வயிற்றில் புண் ஏற்பட்டுவிடும். வயிற்றுப் பகுதியில் புண் ஏற்பட்டு அதீத ரணம் இருப்பவர்கள் தவிர்ப்பது நல்லது.

கசகசா

ரத்தத்தில் சர்க்கரை மற்றும் கொழுப்பின் அளவைக் குறைக்கும். மலச்சிக்கலைக் குணமாக்கும். சருமத்தை மெருகேற்றும் என்பதால் அழகுப் பொருட்களிலும் பயன்படுத்தப்படுகிறது. கலோரி, புரதம், எண்ணெய், கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச் சத்து, மெக்னீஷியம், மாங்கனீஸ், துத்தநாகம், நீரில் கரையும் நார்ச் சத்து (Soluble Fibre)ஆகியவை அதிகமாக இருக்கின்றன. தாமிரம் ஓரளவு இருக்கிறது. அசைவ உணவில் இருக்கும் எண்ணெய்த் தன்மையைக் குறைக்கும் என்பதால், அசைவ உணவில் அதிகம் இடம்பெறுகிறது.

மிளகு

வெள்ளை மிளகு, கறுப்பு மிளகு, வால் மிளகு என்று மிளகில் பல வகைகள் உண்டு. வால் மிளகும் கறுப்பு மிளகும் மிகவும் காரமாக இருக்கும். உணவில் அதிகம் பயன்படுத்தப்படுவது கறுப்பு மிளகுதான். வெள்ளை மிளகு அதிகக் காரம் இல்லாதது. இரும்புச் சத்து, பீட்டா கரோட்டின், மாங்கனீஸ் மற்றும் நீரில் கரையாத நார்ச் சத்து (Insoluble Fibre) ஆகியவை அதிகமாக இருக்கின்றன. கால்சியம், மெக்னீஷியம், புரதம், துத்தநாகம், தாமிரம், பாஸ்பரஸ், எண்ணெய், நியாசின், நீரில் கரையும் நார்ச் சத்து (Soluble Fibre) ஆகியவையும் ஓரளவு இருக்கின்றன. சளி, இருமல், தொண்டை கரகரப்புப் பிரச்னைகளைச் சரிசெய்யவும் காய்ச்சலைக் குணப்படுத்தவும் மிளகு ரசம் சாப்பிடலாம். பொடித்த மிளகு மற்றும் மஞ்சள் தூளைப் பாலில் கலந்து குடித்தால், தொண்டைக்கு இதமாக இருக்கும். வயிற்றுப் புண், நெஞ்சு எரிச்சல், வாயுப் பிரச்னை இருப்பவர்கள் மிகக் குறைந்த அளவே பயன்படுத்த வேண்டும். தினமும் ஒன்று முதல் இரண்டு டீஸ்பூன் அளவில் மிளகு சேர்த்துக்கொள்ளலாம்.

ஓமம்

வயிறு உப்புசத்தால் அவதிப்படுபவர்களுக்கு ஓமம் கலந்த தண்ணீரைக் கொடுக்கலாம். மலச்சிக்கல் பிரச்னையே இருக்காது. சளி, இருமலைத் தடுப்பதோடு புற்றுநோயையும் வரவிடாமல் தடுக்கும் ஆற்றலைக்கொண்டது ஓமம். கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு, மெக்னீஷியம், மாங்கனீஸ், துத்தநாகம், நீரில் கரையாத நார்ச் சத்து (Insolible Fibre)ஆகியவை அதிகமாக இருக்கின்றன. புரதம், எண்ணெய், தைமின், ரிபோஃப்ளோவின் ஆகியவை ஓரளவு இருக்கின்றன. பீட்டா கரோட்டின் மிகக் குறைந்த அளவே இருக்கிறது. இறைச்சி, பரோட்டா போன்ற உணவு வகைகளைச் சாப்பிடும்போது, கடைசியில் சிறிது ஓமத்தை மெல்வது நல்லது.

மஞ்சள்

நோய்த் தொற்று வருவதைத் தடுத்து, உடலுக்கு எதிர்ப்பு சக்தியைக் கொடுக்கும். தேவைக்கும் அதிகமான சத்துக்கள் சேரும்போது அதைக் கிரகிக்கவிடாமல் தடுத்து, உடலுக்குக் கெடுதல் ஏற்படுத்தக் கூடியவற்றைத் தகர்த்துவிடும். மாவுச் சத்து, இரும்புச் சத்து, மெக்னீஷியம், மாங்கனீஸ், துத்தநாகம், நீரில் கரையாத நார்ச் சத்து (Insolible Fibre)ஆகியவை அதிகமாக இருக்கின்றன. கொழுப்பு, பாஸ்பரஸ், ஃபோலிக் ஆசிட், காப்பர் ஆகியவை ஓரளவு இருக்கின்றன. புரதம் கால்சியம், பீட்டா கரோட்டின், நீரில் கரையும் நார்ச் சத்து (Soluble Fibre) ஆகியவை குறைவாக இருக்கின்றன. வயிறு எரிச்சல், வயிற்றுப் புண் உள்ளவர்கள் மிகவும் குறைந்த அளவு சேர்த்துக்கொள்ள வேண்டும்.

மல்லி

உமிழ்நீரைச் சுரக்கவைக்கும். வாய்க் கசப்பைப் போக்கும். மலச்சிக்கலைக் குறைக்கும்.

நார்ச் சத்து, கால்சியம், கோலின், பொட்டாஷியம், தாமிரம், ஆகியவை அதிகமாக இருக்கின்றன. புரதம், எண்ணெய், மாவு, பாஸ்பரஸ், இரும்பு, பீட்டா கரோட்டின், ஃபோலிக் ஆசிட், மெக்னீஷியம், மாங்கனீஷ், துத்தநாகம் ஆகியவை ஓரளவு இருக்கின்றன. மிகக் குறைந்த அளவில் நியாசினும் உண்டு.

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Fri Sep 05, 2014 9:49 am

''பூச்சி கடித்த காய்கறிகளையே சாப்பிடுங்கள்!'' - இப்படியும் ஓர் எளிய வழி 103459460 ''பூச்சி கடித்த காய்கறிகளையே சாப்பிடுங்கள்!'' - இப்படியும் ஓர் எளிய வழி 1571444738

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Sep 05, 2014 11:48 am

இரண்டு பதிவுகளுமே ரொம்ப அவசியமானவை, தெரிந்து கொள்ள வேண்டியவை புன்னகை பகிர்வுக்கு ரொம்ப நன்றி நேசன் !
krishnaamma
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் krishnaamma

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Fri Sep 05, 2014 5:32 pm

Dr.S.Soundarapandian wrote:''பூச்சி கடித்த காய்கறிகளையே சாப்பிடுங்கள்!'' - இப்படியும் ஓர் எளிய வழி 103459460 ''பூச்சி கடித்த காய்கறிகளையே சாப்பிடுங்கள்!'' - இப்படியும் ஓர் எளிய வழி 1571444738
மேற்கோள் செய்த பதிவு: 1085033

நன்றி ஐயா...

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Sep 06, 2014 12:35 pm

''பூச்சி கடித்த காய்கறிகளையே சாப்பிடுங்கள்!'' - இப்படியும் ஓர் எளிய வழி 103459460 ''பூச்சி கடித்த காய்கறிகளையே சாப்பிடுங்கள்!'' - இப்படியும் ஓர் எளிய வழி 3838410834

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக