புதிய பதிவுகள்
» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
சைவ சம்பு சர்மா! Poll_c10சைவ சம்பு சர்மா! Poll_m10சைவ சம்பு சர்மா! Poll_c10 
29 Posts - 38%
ayyasamy ram
சைவ சம்பு சர்மா! Poll_c10சைவ சம்பு சர்மா! Poll_m10சைவ சம்பு சர்மா! Poll_c10 
22 Posts - 29%
Dr.S.Soundarapandian
சைவ சம்பு சர்மா! Poll_c10சைவ சம்பு சர்மா! Poll_m10சைவ சம்பு சர்மா! Poll_c10 
12 Posts - 16%
Rathinavelu
சைவ சம்பு சர்மா! Poll_c10சைவ சம்பு சர்மா! Poll_m10சைவ சம்பு சர்மா! Poll_c10 
7 Posts - 9%
mohamed nizamudeen
சைவ சம்பு சர்மா! Poll_c10சைவ சம்பு சர்மா! Poll_m10சைவ சம்பு சர்மா! Poll_c10 
3 Posts - 4%
Guna.D
சைவ சம்பு சர்மா! Poll_c10சைவ சம்பு சர்மா! Poll_m10சைவ சம்பு சர்மா! Poll_c10 
1 Post - 1%
mruthun
சைவ சம்பு சர்மா! Poll_c10சைவ சம்பு சர்மா! Poll_m10சைவ சம்பு சர்மா! Poll_c10 
1 Post - 1%
Sindhuja Mathankumar
சைவ சம்பு சர்மா! Poll_c10சைவ சம்பு சர்மா! Poll_m10சைவ சம்பு சர்மா! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சைவ சம்பு சர்மா! Poll_c10சைவ சம்பு சர்மா! Poll_m10சைவ சம்பு சர்மா! Poll_c10 
104 Posts - 48%
ayyasamy ram
சைவ சம்பு சர்மா! Poll_c10சைவ சம்பு சர்மா! Poll_m10சைவ சம்பு சர்மா! Poll_c10 
67 Posts - 31%
Dr.S.Soundarapandian
சைவ சம்பு சர்மா! Poll_c10சைவ சம்பு சர்மா! Poll_m10சைவ சம்பு சர்மா! Poll_c10 
16 Posts - 7%
mohamed nizamudeen
சைவ சம்பு சர்மா! Poll_c10சைவ சம்பு சர்மா! Poll_m10சைவ சம்பு சர்மா! Poll_c10 
11 Posts - 5%
Rathinavelu
சைவ சம்பு சர்மா! Poll_c10சைவ சம்பு சர்மா! Poll_m10சைவ சம்பு சர்மா! Poll_c10 
7 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
சைவ சம்பு சர்மா! Poll_c10சைவ சம்பு சர்மா! Poll_m10சைவ சம்பு சர்மா! Poll_c10 
3 Posts - 1%
Karthikakulanthaivel
சைவ சம்பு சர்மா! Poll_c10சைவ சம்பு சர்மா! Poll_m10சைவ சம்பு சர்மா! Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
சைவ சம்பு சர்மா! Poll_c10சைவ சம்பு சர்மா! Poll_m10சைவ சம்பு சர்மா! Poll_c10 
2 Posts - 1%
manikavi
சைவ சம்பு சர்மா! Poll_c10சைவ சம்பு சர்மா! Poll_m10சைவ சம்பு சர்மா! Poll_c10 
2 Posts - 1%
mruthun
சைவ சம்பு சர்மா! Poll_c10சைவ சம்பு சர்மா! Poll_m10சைவ சம்பு சர்மா! Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சைவ சம்பு சர்மா!


   
   
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Mon Sep 08, 2014 10:24 pm

கணபதி துணை

சைவ சம்பு சர்மா பகுதி 1.

ஓங்கி வளர்ந்த ஒருபெருங் காடு
மூங்கில் வேங்கை முதலிய மரங்கள்
செழுமை யான செடிகொடி யினங்கள்
மழுவைக் காண மாட்டா இயல்பின

சிங்கம் கரடி சிறுத்தைப் புலியிவை
எங்குந் திரியும் எழில்மிகும் அடவி
கதிரொளி காணாக் காட்டின் தரையை
மதியொளி மட்டுங் காண வல்லதோ?

உதிர்ந்த சருகுகள் ஓரடி உயரம்
அதிர்ந்து நடக்க யார்க்குமொண் ணாது
அடவி நடுவிலோர் ஆல மரந்தான்
புடவியை விழுதுகள் தடவிய படியே

ஆயிரக் கணக்காம் ஆண்டுக ளாக
மாய்ந்திட லின்றி வளர்ந்து வந்தது
ஆல மரத்தின் அருகொரு வாவியுங்
காலங் காலமாய்க் காணப் பட்டது

வாவியின் நீரில் வாழும் மீன்கள்
தீவினை தீரச் செய்த தவத்தால்
ஆல மரந்தான் ஆற்றிய தவத்தால்
சீலமார் வனத்துறை ஊழியர் சிலர்தாம்

கள்ளம் இல்லா வெள்ளை உள்ளப்
பள்ளந் தன்னில் பாயும் வெள்ளமாய்க்
கொள்ளை யன்பு கொண்டு மூத்தப்
பிள்ளையார் சிற்பங் கல்லில் வைத்தனர்

கல்லால் நீழற் கடவுள் போல
எல்லாம் வல்ல இபமுகன் இருந்தனன்
காலையும் மாலையும் கருத்தொரு மித்தே
ஞால முதல்வனாம் நாக முகற்குப்

பூசனை மஞ்சனம் போற்றி யருச்சனை
நேச மாகவும் நியதி யாகவும்
நாளும் செயவொரு நபர்தான் இல்லை
மீளவும் வனத்துறை ஊழியர் மேவிடின்

பேரகல் தீபம் பிறங்கொளி உமிழ்ந்து
காரிருள் காட்டில் கடிந்திட அமைத்தே
அவல்பொரி கடலை அப்ப முப்பழம்
இவற்றில் ஒன்றோ விரண்டோ படைத்தே

விளங்குவெண் ணீறு வெறிகமழ் சந்தனம்
துளங்கொளி குங்குமம் துதைந்து சிறக்கவே
ஒருகுட நீரோடு ஓரிரு பூவோடு
உருகிடும் உளத்துடன் வழிபடு வாரே

அந்தி சாய்ந்தங்கு அல்லிருள் சூழ்ந்திட
தந்திர நரியொன்று தனித்தே வந்தது
சம்பு சர்மா பெயர்கொள் அந்நரி
உம்பல் முகனை உற்றுநோக் கிற்று

தொடரும். . . நன்றி: பிள்ளையார் பித்தன் இணையம்

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Mon Sep 08, 2014 10:30 pm

கரிமுகம் தொப்பை கருணை விழிகளை
நரிசம்பு சர்மா நன்குநோக் கிற்று
வனத்துறை யினர்விட்டு வைத்த அமுதை
தினத்தொடங் கியநரி தீப்பசி தீர்ந்தது

பிள்ளை யார்க்குப் பிடித்த மான
வெள்ளை அவல்பொரி விருப்போடு உண்டதால்
நரியின் குணந்தான் நல்லதாய் மாறிட
கரிமா முகனின் காலடி யருகே

சுகமாய் இராமுழு துந்தூங் கிற்றே
ககன மதனில் காரிருள் கிழித்தே
கதிரவன் செவ்வொளிக் கற்றைகள் ஒருசில
விதிநன் காகிட விரிந்த வனம்மேல்

வெற்றி கரமாய் விழுந்துள் சென்றதால்
நற்றாள் அருகே நரியும் விழித்தது
வாரண முகனை வலம்வந் தேத்தி
ஆரணி யத்துள் ஆழ்ந்து சென்றது

கரிமா முகனின் கருணையி னாலே
அரிமா முதலிய அடவி விலங்கால்
வருந்துயர் நீங்கி வனத்தில் உள்ள
தருதரும் கனிகளைச் சாப்பிட லுற்றுப்

பலதினம் அந்தப் பரந்த வனத்தில்
நலமிகு ஞான நற்சிந் தனையுடன்
சம்பு சர்மா தனித்துத் திரிகையில்
வம்பு நரிகள் வந்தெதிர்ப் பட்டன

கும்பலாய் வந்த குறுநரி மாக்கள்
சம்புசர் மாவே தருக்கள் மிகுந்த
விரிந்தவிக் காட்டில் வெகுநா ளாய்நீ
தரிசனம் எமக்குத் தராத தேனோ?

நெற்றியில் ஏனோ நீற்றுப் பூச்சு?
ஒற்றை நாடியாய் உனதுடல் மெலிந்ததென்?
மனிதரில் ஒருசிலர் மதிநுதல் அதனில்
புனிதமாய்க் கருதிப் போற்றிப் பூசிடும்

திருநீறு உன்மேல் திகழ்வ தேனோ?
வருமோ வதனால் வயிற்றுக் குணவு?
எனப்பல வினாக்கள் இயல்பாய்க் கேட்டன
சம்பு சர்மா தலையில் நீற்றை

வம்பு நரிகள் மருண்டு நோக்கிக்
கெக்கலி கொட்டி கேலி செய்து
பக்கலில் வந்து பரிபவம் புரியினும்
இனத்து நரிகளுக்கு இன்முகத் தோடு

வரவேற் புநல்கி வணக்கங் கூறி
நரிசம்பு சர்மா நவில லுற்றது

தொடரும். . . நன்றி: பிள்ளையார் பித்தன் இணையம்

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Mon Sep 08, 2014 10:33 pm

பத்துயோ சனைக்கப் பால்ஓர் ஆலடி
அத்தி முகவனின் அருள்பெற் றேன்நான்
அதன்பின் அடவியில் ஆனை முகனை
இதயந் தன்னில் இருத்திக் கொண்டே

காட்டுத் தீதருங் காய்ந்த சாம்பலைத்
சூட்டிக் கொண்டே சுற்றித் திரிந்தேன்
கரேணு முகத்தோன் கருணையைப் பெற்ற
ஒரேநரி இக்கணம் உலகினில் நானே

விலாழிநீர் பொழியும் விநாயகன் அருளால்
புலாலுண வதனின் புன்மையை உணர்ந்தேன்
சைவ உணவையே சாப்பிடு வதென்று
தெய்வமுன் சபதம் தீரமாய்ச் செய்தேன்

குதிரை நண்டு கோழி யாடு
முதலிய வற்றை மொக்குதல் விடுத்தேன்
காய்கனி கிழங்குணக் கற்றுக் கொண்டு
தூயநன் னெறிசெலச் சூளு ரைத்தேன்

சைவ நன்னெறி சார்ந்ததன் விளைவாய்
தெய்வவெண் ணீறு தினமும் அணிந்தேன்
நிலையா வாழ்க்கையை நினைப்பிப் பதனால்
தலையில் நீற்றைத் தரித்துக் கொண்டேன்

சம்பு சர்மா தந்த பதிலை
வம்பு நரிகள் மதித்துக் கேட்டன
தாழ்ந்திடும் சம்பு சர்மா தன்னிடம்
கீழ்வருங் கேள்வியைக் கேட்டன நரிகள்

நீற்றைப் புனைந்தும் நிலத்தில் பலபேர்
சோற்றொடு புலாலின் சுவையை விட்டிலர்
நரர்கள் புலாலை நாடி இருக்க
நரிநீ விடுத்தல் ஞாயந் தானோ?

நாரை யூரில் நற்றமிழ் மதுரையில்
நாரை மீன்களை நாடுதல் ஒழிந்து
சிந்தையில் எந்தைச் சிவனை யிருத்தி
முந்தை வினையற முத்தி பெற்றது

பறவை சைவம் பழகிடும் எனின்அத்
திறமை நரியிடம் திகழ்ந்தி டாதோ
அத்தி முகத்தோன் அருள்பெற் றமையால்
அத்திறன் உடைய அருநரி நானே

நம்பன் தமக்கும் நரிகள் நமக்கும்
சம்பு எனும்பெயர் சார்தலை ஓர்மின்
வேதம் ஓதும்முன் வேதியர் யாவரும்
ஓதும் மந்திரம் ஓங்கா ரம்மே

களிறு தும்பிக் கையை உயர்த்திப்
பிளிறிடல் மட்டும் பிரணவ மாமோ?
நாளும்அக் குடிலையை நரிகள்நாம் இசைத்திடின்
ஊளை யிடலென உளறுவ தேனோ?

சம்பு சர்மா தந்தவித் தடைக்கு
வம்பு நரிகள் வருமாறு உரைத்தன
கரிசெயும் பிளிறலின் கம்பீ ரத்தை
நரியிடும் ஊளையில் நாடுவ தெங்ஙனம்?

முட்டாள் தனமாய் முன்வரும் தடைக்குப்
பட்டெனச் சம்பு பதில்சொல் லிற்று
வரகுண பாண்டிய மன்னனைத் தவிர
நரியினோங் கார நாதமார் அறிவார்?

வரகுண பாண்டியன் மனமுரு கிடவே
பிரணவம் இசைத்த பீடுடை நரிக்கே
பளபளப் பான பலபட் டாடைகள்
புளகாங் கிதமுறப் போர்த்தினன் அன்றே

மணிவா சகர்க்காய் மகேசன் முன்னம்
அணியணி யாக அசுவ மாக்கிட
நம்முடை முன்னோர் நரிகளை யன்றோ
நம்பினார் அந்த நம்பன் தானும்

ஆனைக் காவில் ஆனையும் சிலந்தியும்
மானிட மேந்தியை வழிபட் டுய்ந்தன
குரங்கு அணில் காக்கை கூடி வழிபட
குரங்கணில் முட்டம்பேர் கொண்ட தோரூர்

எறும்புகள் கூடி யீசனைப் பூசனை
எறும்பூ ரினில்செய்து ஏற்றம் பெற்றன
அரிமா பன்றி ஆமை பாம்பு
கரிய குருவி கழுதை குதிரை

நண்டு மயில்மீன் நாரை தவளை
வண்டு காளை மாடு கருடன்
முயல்முத லியபல முக்கிய வுயிர்கள்
முயன்று முன்னவன் பூசை முடித்தன

தொடரும். . . நன்றி: பிள்ளையார் பித்தன் இணையம்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக