ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Today at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Today at 6:52 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by T.N.Balasubramanian Today at 6:46 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Today at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

புரட்டாசி மாத ராசி பலன்கள்!

Page 2 of 2 Previous  1, 2

Go down

புரட்டாசி மாத ராசி பலன்கள்! - Page 2 Empty புரட்டாசி மாத ராசி பலன்கள்!

Post by krishnaamma Sun Sep 07, 2014 8:08 pm

First topic message reminder :

மேஷம்: தானுண்டு தன் வேலையுண்டு என்றிருக்கும் உங்களை சீண்டினால், எரிமலையாய் பொங்கி எழுவீர்கள். அரண்மனையில் வேலைக்காரனாய் இருப்பதை விட குப்பத்தில் தலைவனாய் இருப்பதையே விரும்புவீர்கள். 26ந் தேதி முதல் சுக்கிரன் உங்கள் ராசிக்கு 6ல் மறைவதால் மனைவியின் உடல்நிலை பாதிக்கும். மனைவிக்கு மாதவிடாய்க் கோளாறு, கழுத்துவலி, முதுகு வலி வந்துபோகும். சிறுசிறு வாகன விபத்துகள் ஏற்படும். குரு 4ம் வீட்டில் அமர்ந்திருப்பதால் அலைச்சல் இருந்தாலும் குரு உச்சம் பெற்றிருப்பதால் ஓரளவு பணவரவு உண்டு.

கண்டகச் சனி நடைபெறுவதால் கணவன்-மனைவிக்குள் கருத்து மோதல்கள் வரும். வீண் சந்தேகத்தால் பிரிவு ஏற்படக்கூடும். உங்களின் பூர்வ புண்யாதிபதியான சூரியன் 6ம் வீட்டிற்குள் நுழைந்திருப்பதால் சவாலான காரியங்களைக் கூட எளிதாக முடிப்பீர்கள். வழக்குகள் சாதகமாகும். சூரியன், ராகுவுடன் நிற்பதால் பிள்ளைகளின் ஆரோக்யம் பாதிக்கும். அவர்களுடன் சின்னச் சின்ன விவாதங்கள் வந்துபோகும்.

கர்ப்பிணிப் பெண்கள் நீண்ட தூரப் பயணங்களை தவிர்ப்பது நல்லது. உங்களின் ராசிநாதனான செவ்வாய் 8ல் மறைந்திருப்பதால் வேலைச்சுமை அதிகமாகிக் கொண்டே போகும். கனவுத் தொல்லை அதிகரிக்கும். சகோதரர்களுடன் மோதல் வரும். 13ந் தேதி முதல் செவ்வாய் 9ம் வீட்டிற்கு செல்வதால் அலைச்சல் குறையும். ராகு சாதகமாக இருப்பதால் எவ்வளவு பிரச்னைகள் வந்தாலும் அதை எதிர்கொண்டு சமாளிக்கும் சக்தி கிடைக்கும். பழைய நண்பர்கள் உதவுவார்கள். கேது 12ல் மறைந்து கிடப்பதால் உள்ளுணர்வுத் திறன் அதிகரிக்கும்.

மாணவ-மாணவிகளே! விளையாட்டுத்தனத்தைக் குறைத்துக் கொண்டு படிப்பில் ஆர்வம் காட்டுங்கள். கணிதம், அறிவியல் பாடங்களில் அதிக கவனம் செலுத்தப் பாருங்கள். விடைகளை எழுதிப் பாருங்கள்.

கன்னிப் பெண்களே! உயர்கல்வியில் அதிக கவனம் செலுத்துங்கள். அலர்ஜி, இன்ஃபெக்ஷன் வந்து போகும்.

அரசியல்வாதிகளே! எதிர்ப்புகளும், ஏமாற்றங்களும் அதிகரிக்கும். வியாபாரத்தில் போட்டிகளால் லாபம் குறையும். அவசரப் பட்டு பெரிய முதலீடுகளை தொழிலில் போட வேண்டாம். வேலையாட்களாலும் பிரச்னைகள் வரக்கூடும். பங்குதாரர்களிடம் பணிந்து போவது நல்லது. கமிஷன், புரோக்கரேஜ், கெமிக்கல் வகைகளாலும் லாபம் வரும். சட்டத்திற்கு புறம்பான வகையில் உதவிகள் கிடைத்தால் அதை ஏற்றுக் கொள்ள வேண்டாம்.

உத்யோகத்தில் அதிகாரி உங்களை புரிந்து கொள்ளமாட்டார். உங்கள் உழைப்பிற்கு வேறு சிலர் உரிமை கொண்டாடுவார்கள். சக ஊழியர்களில் ஒருசாரர் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். வெளிமாநிலத்தில் வேலை கிடைக்க வாய்ப்பிருக்கிறது. உத்யோகத்தில் போராட்டங்கள் அதிகரிக்கும். வேலையில் இருப்போமோ, இருக்க மாட்டோமோ என்ற ஒரு அச்சஉணர்வு தினந்தோறும் வந்துபோகும்.

கலைத்துறையினரே! வருவதாக இருந்த வாய்ப்புகள் கை நழுவிப் போகும். வயதில் குறைந்த கலைஞர்களால் உதவிகள் கிடைக்கும்.

விவசாயிகளே! பூச்சித் தொல்லை, எலித் தொல்லையால் மகசூல் பாதிக்கும். செயற்கை உரங்களை குறைவாகப் பயன்படுத்துங்கள். சிக்கனமும், பொறுமையும் தேவைப்படும் மாதமிது.
ராசியான தேதிகள்: செப்டம்பர் 18, 24, 25, 26 அக்டோபர் 3, 4, 5, 13, 14, 15.

சந்திராஷ்டம தினங்கள்: செப்டம்பர் 28ந் தேதி மாலை 4.30 மணி முதல் 29 மற்றும் 30ந் தேதி வரை எதிலும் நிதானித்து செயல்படுவது நல்லது.

பரிகாரம்: மதுரைக்கு அருகேயுள்ள திருமோகூர் தலத்தில் சுதர்சன மூர்த்தியை தரிசியுங்கள். ரத்ததானம் செய்யுங்கள்.



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down


புரட்டாசி மாத ராசி பலன்கள்! - Page 2 Empty Re: புரட்டாசி மாத ராசி பலன்கள்!

Post by krishnaamma Sun Sep 07, 2014 8:14 pm

கும்பம்: எறும்புபோல் அயராது உழைத்து, தேன்போல் சேமிக்கும் இயல்பு கொண்ட நீங்கள் எப்போதும் நல்லதே நினைப்பவர்கள். செவ்வாய் சாதகமான வீடுகளில் செல்வதால் சோர்வு, களைப்பிலிருந்து விடுபடுவீர்கள். உற்சாகமாக சில முக்கிய காரியங்களில் ஈடுபடுவீர்கள். பழைய கடனை நினைத்து அவ்வப்போது ஒரு பயம் வரும். அதை சமாளிக்கும் வழி இந்த மாதத்தில் கிடைக்கும். உங்களுடைய ராசிநாதன் சனிபகவான் உச்சம் பெற்று நிற்பதால் புதிய பாதை தெரியும். நட்பு வட்டம் விரிவடையும். தெலுங்கு, ஹிந்தி பேசுபவர்களால் ஆதாயமடைவீர்கள்.

சிலர் சொந்த ஊர், சொந்த மாநிலத்தை விட்டு வேறு மாநிலம் அல்லது வேறு நாட்டிற்கு போக வேண்டிய சூழ்நிலை உருவாகும். உங்களுடைய ராசிக்கு 6ல் குரு மறைந்து கிடப்பதால் உங்களைப் பற்றிய வதந்திகள் அதிகமாகும். வெளிவட்டாரத்தில் வெளிப்படையாகப் பேசி சிக்கிக் கொள்ள வேண்டாம். பணப் பற்றாக்குறை இருக்கும். உங்களின் பிரபல யோகாதிபதி சுக்கிரன் 26ந் தேதி முதல் நீசபங்க ராஜயோகம் அடைவதால் ஷேர் மூலம் பணம் வரும். குடும்ப வருமானத்தை உயர்த்த வழி பிறக்கும்.

அநாவசியச் செலவுகளை கட்டுப்படுத்துவீர்கள். மனைவிவழியில் மதிப்பு கூடும். பெற்றோருடன் இருந்த மனத்தாங்கல் நீங்கும். பழுதான வாகனம் சரியாகும். உங்களின் பூர்வ புண்யாதிபதி புதன் 8ல் மறைந்திருப்பதால் பிள்ளைகளுடன் சின்னச் சின்ன வாக்குவாதம் வரும். ஆனால், புதன் உச்சம் பெற்று அமர்ந்திருப்பதால் பிள்ளைகளால் அந்தஸ்து உயரும். மகனின் அலட்சியப்போக்கு மாறும். மகளுக்கு நல்ல வரன் அமையும். ராசிக்கு 2ல் கேது நிற்பதால் கண்வலி, காதுவலி வந்துபோகும்.

மாணவ-மாணவிகளே! படிப்பில் முன்னேறுவீர்கள். வகுப்பறையில் அரட்டைப் பேச்சை தவிர்ப்பது நல்லது. கூச்சப்படாமல் சந்தேகங்களை கேட்டுத் தெரிந்துக் கொள்ளுங்கள்.

கன்னிப் பெண்களே! பழைய நண்பர்களிடமிருந்து விடுபடுவீர்கள். புதியவர்கள் நண்பர்களா வார்கள். வேலை கிடைக்கும். திருமணம் தள்ளிப் போனவர்களுக்கு கூடி வரும்.

அரசியல்வாதிகளே! தலைமை உங்களை மதிக்கும். ஆனால், கீழ்மட்ட நிர்வாகிகளுடன் சண்டை, சச்சரவு வந்துபோகும். வியாபாரத்தில் ரகசியங்கள் பங்குதாரர்களாளோ, வேலையாட்களாளோ கசியாமல் பார்த்துக் கொள்ளுங்கள். வெளிநாட்டுத் தொடர்புள்ள வியாபாரத்தால் லாபம் அதிகரிக்கும். உணவு, கட்டிட உதிரி பாகங்கள், வாகனம், ரியல் எஸ்டேட் வகைகளால் ஆதாயமடைவீர்கள்.

பொறுப்பான வேலையாட்கள் பணியில் வந்து சேருவார்கள். ஏட்டிக்குப் போட்டியாகப் பேசிக் கொண்டிருக்கும் பங்குதாரர்களை மாற்றுவீர்கள். செவ்வாய் வலுவாக இருப்பதால் உத்யோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும். மூத்த அதிகாரி மனம் விட்டுப் பேசுவார். உங்களுடைய ஆலோசனைகளையும் ஏற்றுக் கொள்வார். வதந்திகளிலிருந்து விடுபடுவீர்கள். இழந்த சலுகைகளை மீண்டும் பெறுவீர்கள். சக ஊழியர்களும் மதிப்பார்கள்.

கலைத்துறையினரே! சக கலைஞர்கள் மத்தியில் செல்வாக்கு கூடும். கடுமையான போட்டிகள், பிரச்னைகளுக்கிடையே படத்தை வெளியிடுவீர்கள்.

விவசாயிகளே! பக்கத்து நிலக்காரருடன் இருந்த சண்டை, சச்சரவு நீங்கும். விளைச்சல் அதிகமாகும். பெரியோர்களின் ஆலோசனையாலும், ராஜதந்திரத்தாலும் சாதிக்கும் மாதமிது.

ராசியான தேதிகள்: செப்டம்பர் 19, 20, 21, 22, 29, 30, அக்டோபர் 1, 10, 11, 12, 16, 17.

சந்திராஷ்டம தினங்கள்: செப்டம்பர் 24, 25 மற்றும் 26ந் தேதி காலை 9 மணி வரை எதிர்காலம் பற்றிய கவலைகள் வந்து போகும்.

பரிகாரம்: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரரை தரிசித்து வாருங்கள். கட்டிடத் தொழிலாளர்களுக்கு இயன்ற உதவிகளைச் செய்யுங்கள்.


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

புரட்டாசி மாத ராசி பலன்கள்! - Page 2 Empty Re: புரட்டாசி மாத ராசி பலன்கள்!

Post by krishnaamma Sun Sep 07, 2014 8:14 pm

மீனம்: கடல் அலை ஓயாததைப்போல வாழ்க்கை என்றால் பிரச்னைகளும் இருக்கும் என்பதை உணர்ந்த நீங்கள் எச்சரிக்கை உணர்வுடன் எப்போதும் இருப்பீர்கள். கடந்த ஒரு மாதகாலமாக உங்களுடைய ராசிக்கு 6ம் வீட்டில் அமர்ந்து உங்களுக்கு அலைச்சலையும், செலவுகளையும், காரியத் தடைகளையும், மனஉளைச்சலையும் தந்து கொண்டிருக்கும் சுக்கிரன் 26ந் தேதி முதல் 7ம் வீட்டில் அமர்ந்து உங்கள் ராசியைப் பார்க்க இருப்பதால் மனநிம்மதி உண்டாகும். புதன் சாதகமாக இருப்பதால் கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும்.

நட்பால் ஆதாயமடைவீர்கள். நல்ல அந்தஸ்தில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். விவாதங்களில் வெற்றி பெறுவீர்கள். சூரியன் சாதக மாக இல்லாததால் தாயாரின் உடல்நிலை பாதிக்கும். அவருடன் கருத்து மோதல்களும் வரக்கூடும். 5ம் வீட்டில் குரு அமர்ந்திருப்பதால் குழந்தை பாக்யம் உண்டு. பிள்ளைகளின் வருங்காலம் குறித்த கவலைகள் நீங்கும். உறவினர்களில் ஒருசிலர் உங்களுடைய புத்திசாலித்தனத்தை மெச்சுவார்கள். புகழ்பெற்ற புண்ணிய தலங்களுக்குச் சென்று வருவீர்கள்.

அஷ்டமத்துச் சனி நடைபெறுவதால் பண விஷயத்தில் கறாராக இருங்கள். மற்றவர்களுக்காக கேரண்டர் கையொப்பமிட வேண்டாம். அவ்வப்போது மறதி, முன்கோபம் வந்து போகும். பழைய கசப்பான சம்பவங்களை நினைத்துப் பார்த்து அச்சப்படாதீர்கள். உங்களின் தன-பாக்யாதிபதியான செவ்வாய் சாதகமான வீடுகளில் செல்வதால் வருமானம் உயரும். வசதி, வாய்ப்புகள் பெருகும். புது ரக ஆடை, ஆபரணங்கள் வாங்குவீர்கள். சகோதர, சகோதரிகள் மிகவும் உதவியாக இருப்பார்கள். சொத்து வாங்குவது, விற்பது நல்ல விதத்தில் முடியும்.

மாணவ-மாணவிகளே! அஷ்டமத்துச் சனி நடைபெறுவதால் விடைகளை எழுதிப் பாருங்கள். அலட்சியமாக இருக்காதீர்கள். வகுப்பாசிரியர் உங்கள் மீதுள்ள அக்கறையில் உங்களின் குறைகளை சுட்டிக் காட்டு வார். நீங்கள் திருத்திக் கொள்வது நல்லது.

கன்னிப் பெண்களே! காதல் விவகாரத்தில் திடீர் முடிவுகள் வேண்டாம். நட்பு வட்டத்திலும் கவனமாக இருங்கள். சிலர் உங்களை தவறான பாதைக்கு கொண்டு செல்வார்கள்.

அரசியல்வாதிகளே! கட்சிக்குள் உங்களுக்கு முக்கியத்துவம் அதிகரிக்கும். தொகுதி மக்களிடமும் செல்வாக்கு அடைவீர்கள். பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு புகழடைவீர்கள். வியாபாரத்தில் போட்டிகள் இருந்தாலும் சமயோஜித புத்தியுடன் வாடிக்கையாளர்களிடம் பேசி லாபம் ஈட்டுவீர்கள். கமிஷன், ஸ்டேஷனரி, கிஃப்ட் ஆர்ட்டி கல் வகைகளாலும் லாபம் அதிகரிக்கும். பிரச்னை தந்த பங்குதாரர்களையும், வேலையாட்களையும் மாற்றுவீர்கள். உத்யோகத்தில் அனைவரும் பாராட்டும்படி நடந்து கொள்வீர்கள். உங்களுடைய திறமைகள் வெளிப்படும். மூத்த அதிகாரி உங்களுக்கு முக்கியத்துவம் தருவார். சம்பள பாக்கி கைக்கு வரும். புது நிறுவனங்களிலிருந்து நல்ல வாய்ப்புகள் வரும்.

கலைத்துறையினரே! புதிய கலைஞர்களால் பெரிய வாய்ப்புகளைப் பெறுவீர்கள்.

விவசாயிகளே! பூச்சித் தொல்லை, எலித் தொல்லை இருக்கும். தண்ணீர் வசதி உண்டாகும். இடம், பொருள், ஏவலறிந்து பேசி சாதிக்கும் மாதமிது.

ராசியான தேதிகள்: செப்டம்பர் 17, 18, 22, 23, 24, 25, அக்டோபர் 1, 10, 11, 12, 16, 17.

சந்திராஷ்டம தினங்கள்: செப்டம்பர் 26ந் தேதி காலை 9 மணி 27, 28 மாலை 4:30 மணி வரை பதறாமல் பக்குவமாக செயல்படப்பாருங்கள்.

பரிகாரம்: நாமக்கல் ஆஞ்சநேயரையும் அருகேயுள்ள நரசிம்மரையும் தரிசித்துவிட்டு வாருங்கள். முதியோர் இல்லங்களுக்குச் சென்று இயன்றவரை உதவுங்கள்.


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

புரட்டாசி மாத ராசி பலன்கள்! - Page 2 Empty Re: புரட்டாசி மாத ராசி பலன்கள்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum