ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Today at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Today at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 8:59 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Today at 8:56 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:45 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 8:45 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஜெ. சொத்துக்குவிப்பு வழக்கு...தீர்ப்புக்கு இன்னும் 16 நாட்கள்! மினி தொடர்:

+4
ராஜா
சிவா
M.M.SENTHIL
தமிழ்நேசன்1981
8 posters

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

Go down

ஜெ. சொத்துக்குவிப்பு வழக்கு...தீர்ப்புக்கு இன்னும் 16 நாட்கள்! மினி தொடர்:   - Page 4 Empty ஜெ. சொத்துக்குவிப்பு வழக்கு...தீர்ப்புக்கு இன்னும் 16 நாட்கள்! மினி தொடர்:

Post by தமிழ்நேசன்1981 Thu Sep 04, 2014 5:22 pm

First topic message reminder :


Posted Date : 13:02 (04/09/2014)Last updated : 13:09 (04/09/2014)
ஜெ. சொத்துக்குவிப்பு வழக்கு...தீர்ப்புக்கு இன்னும் 16 நாட்கள்! மினி தொடர்:   - Page 4 Jaya%205(29)
நீதிபதி முடிகவுடரின் கண்டிப்பு!

18 வருடங்களாக நடைபெற்று வரும் தமிழக முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் செப்டம்பர் 20 ஆம் தேதி தீர்ப்பு. வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த வழக்கை ஒட்டுமொத்த இந்தியாவே உற்றுநோக்கிக்கொண்டிருக்கிறது. தமிழக அரசியல் களத்திலும் ஏக எதிர்பார்ப்பு. அந்த நீண்ட நெடிய வழக்கை ஆரம்பத்தில் இருந்து அலசுவோமா..?

21.6.96 ல் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் சுப்பிரமணியன் சுவாமி ஒரு வழக்கு தாக்கல் செய்தார். அது தொடர்பாக அவர் தாக்கல் செய்த மனுவில், "கடந்த 1.7.91 முதல் 30.4.96 வரை தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா, வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளார்" என்று கூறப்பட்டிருந்தது.

அந்த மனுவை விசாரித்த நீதிபதி, தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத் துறையின் டிஜிபி-யாக இருந்த லத்திகா சரணை விசாரிக்க ஆணையிட்டார். அந்த விசாரணைக்குப் பிறகு, ஜெயலலிதா கைது செய்யப்பட்டு, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்றது.
ஜெ. சொத்துக்குவிப்பு வழக்கு...தீர்ப்புக்கு இன்னும் 16 நாட்கள்! மினி தொடர்:   - Page 4 Sasi,%20ilavarasi
2004 தேர்தலில் மீண்டும் ஜெயலலிதா வெற்றிபெற்று முதல்வர் ஆனார். இதனையடுத்து தி.மு.க பொதுச்செயலாளர் பேராசிரியர் அன்பழகன், ஜெ. சொத்துக்குவிப்பு வழக்கை வேறு மாநிலத்துக்கு மாற்ற வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அதனைத் தொடர்ந்து, 2004 ல் இந்த வழக்கு பெங்களூரு தனி நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது. பெங்களூரிலும் பல நீதிபதிகள், அரசு வழக்கறிஞர்கள் மாற்றப்பட்டனர்.

எனவே அந்த காலக்கட்டத்தை எல்லாம் தாண்டிவிட்டு இந்த வழக்கின் 7 ஆவது நீதிபதியாக முடிகவுடர் நியமனத்துக்குப் பிறகு நடந்தவற்றை சற்று விரிவாக பார்க்கலாம்...

2013 அக்டோபர் 2 ஆம் தேதி வழக்கை விசாரிக்க ஆரம்பித்த முடிகவுடர், குற்றவாளிகள் நீதிமன்றத்தில் ஆஜர் ஆகாதது குறித்து கேள்வி எழுப்பினார். ‘‘இது என்னுடைய நீதிமன்றம். இந்த வழக்கை விசாரிக்க முழு அதிகாரத்தையும் கர்நாடக உயர் நீதிமன்றம் எனக்குக் கொடுத்திருக்கிறது. இதுநாள் வரை இந்த வழக்கு எப்படி நடந்தது என்று எனக்கு ஆட்பேசணை இல்லை. இனி என்னுடைய ஒவ்வொரு வாய்தாவுக்கும் இந்த வழக்கின் குற்றவாளிகள் (ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன்) நான்கு பேரும் ஆஜராக வேண்டும். மீண்டும் 30 ஆம் தேதிக்கு வாய்தா போடுகிறேன். அன்று நான்கு பேரும் கண்டிப்பாக ஆஜராக வேண்டும் இல்லை என்றால் பிடிவாரண்ட் பிறப்பிப்பேன்’’ என்று கண்டிப்பு காட்டினார்.

இது ஜெயலலிதா தரப்பினரை அதிர்ச்சி அடைய வைத்தது. உச்ச நீதிமன்றத்தை அணுகி, ‘நீதிபதி நியமனத்தில் விதிமுறை மீறல் நடந்திருக்கிறது. கோர்ட்டில் நேரில் ஆஜராவதில் எங்கள் அனைவருக்கும் விலக்கு அளிக்க வேண்டும்’ என்று கோரிக்கை வைத்தனர்.

இதை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள், ‘‘முடிகவுடர் நியமனத்தில் என்ன விதிமீறல்கள் இருக்கிறது? அதற்கு சான்று ஏதாவது வைத்திருக்கிறீர்களா? வெறும் ஊகத்தின் அடிப்படையில் இப்படி குற்றச்சாட்டுகளை வைக்கக் கூடாது’’ என்றவர்கள், தமிழக சட்டசபை கூட்டம் நடைபெற்றுக்கொண்டிருந்தால், ஜெயலலிதா ஒருவருக்கு மட்டும் 30 ஆம் தேதி ஒரு நாள் மட்டும் விலக்கு அளிப்பதாக உத்தரவிட்டனர்.

30 ஆம் தேதி வாய்தாவுக்கு சசிகலா, இளவரசி, சுதாகர் கோர்ட்டுக்கு வருவது உறுதியானதால், அ.தி.மு.க வக்கீல்கள் காலையிலேயே கோர்ட்டில் குவிந்திருந்தனர். சரியாக 10.30 மணிக்கு ஒயிட் அண்ட் ஒயிட் ஜிப்பாவில் சுதாகரன் வந்தார். 10 நிமிடங்கள் கழித்து ஒரே காரில் இளவரசியும் சசிகலாவும் கோர்ட் வளாகத்துக்குள் வந்திறங்கினார்கள். 6 ஆவது மாடியில் வழக்கு நடைபெறுவதால், ஜெ. தரப்பு வழக்கறிஞர்கள் ஒவ்வொரு மாடியிலும் லிப்ட் அருகே நின்று சசிகலா லிஃப்டில் செல்ல யாரும் இடையூறாக இருந்திடக் கூடாது என்று பாதுகாத்து அழைத்துச் சென்றனர்.

சசிகலா வழக்கத்துக்கு மாறாக மிகவும் வருத்தத்தோடு காணப்பட்டார். கழுத்தில் நகைகள் எதுவும் இல்லை. சிம்பிளாக இருந்தார். நேராக கோர்ட்டுக்குள் சென்று மூவரும் கூண்டுக்குள் ஏறி நின்று கைகளைக் கட்டி நீதிபதி முடிகவுடரைப் பார்த்து வணக்கம் வைத்தனர். முடிகவுடர் தலையை மட்டும் ஆட்டிவிட்டு அமரச் சொன்னார். கூண்டுக்குள்ளேயே பெஞ்ச் போடப்பட்டிருந்தது. வலது பக்கத்தில் சசிகலாவும், இடது பக்கத்தில் இளவரசியும், நடுவில் சுதாகரனும் நீதிபதியை பார்த்தவாறு அமர்ந்திருந்தார்கள்.

நீதிபதி முடிகவுடர்: ‘‘இன்னும் எத்தனை நாட்கள் சட்டமன்றக் கூட்டத்தொடர் நடைபெற இருக்கிறது?’’

ஜெ தரப்பு வழக்கறிஞர் குமார்: ‘‘தெரியவில்லை.’’

நீதிபதி முடிகவுடர்: ‘‘இந்த வழக்கை நவம்பர் 5 ஆம் தேதிக்கு ஒத்தி போடுகிறேன்’’

குமார்: ‘‘உச்ச நீதிமன்றத்தில் நீதிபதி நியமனத்தில் விதிமுறை மீறல் இருப்பதாகவும், கோர்ட்டில் ஆஜராவதில் நான்கு பேருக்கும் விலக்கு அளிக்க வேண்டும் என்று வழக்கு நடைபெற்றுக்கொண்டிருப்பதால், இந்த வழக்கை நான்கு வார காலத்துக்கு தள்ளிப்போட வேண்டும். குறைந்தது மூன்று வார காலத்துக்காவது தள்ளிப்போட வேண்டும்.’’

நீதிபதி முடிகவுடர், ‘‘இதை நீங்கள் ஆட்சேபிக்கிறீர்களா?’’ என்று அரசு தரப்பு வழக்கறிஞர் பவானிசிங்கிடம் கேட்டதற்கு அவர், ‘‘நான் ஆட்சேபிக்கவில்லை’’ என்றதால், நீதிபதி முடிகவுடர் வழக்கை நவம்பர் 21 ஆம் தேதிக்கு தள்ளிப்போடுவதாக சொன்னார்.

வழக்கு முடிந்ததும், வந்ததைப் போலவே சுதாகரன் தனி காரிலும், சசிகலா, இளவரசி இருவரும் தனி காரிலும் சென்றனர்.

- வி.கே. ரமேஷ்

புதிய நீதிபதி மைக்கேல் டி.குன்ஹா வருகையும், அதைத் தொடர்ந்த பரபரப்புகளும் நாளை...


avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Back to top Go down


ஜெ. சொத்துக்குவிப்பு வழக்கு...தீர்ப்புக்கு இன்னும் 16 நாட்கள்! மினி தொடர்:   - Page 4 Empty Re: ஜெ. சொத்துக்குவிப்பு வழக்கு...தீர்ப்புக்கு இன்னும் 16 நாட்கள்! மினி தொடர்:

Post by தமிழ்நேசன்1981 Sat Sep 20, 2014 9:27 pm

ஜெ. சொத்துக்குவிப்பு வழக்கு...தீர்ப்புக்கு இன்னும் சில நாட்கள்! (மினி தொடர்: பகுதி- 15)

‘‘இன்னும் எத்தனை மனுக்கள்தான் கொடுப்பீர்களோ?’’

ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்ற இளவரசி, சுதாகரன் தரப்பு வழக்கறிஞர் அமீத் தேசாய் வாதம் தொடர்கிறது...

‘‘ஜெயலலிதா வருமானத்துக்கு அதிகமான சொத்துகளைச் சேர்க்க எந்தெந்த வகையில் என் மனுதாரர்கள் குற்றம் செய்ய தூண்டுதலாக இருந்தார்கள் என்று புலன் விசாரணை அதிகாரிகள் தகுந்த ஆதாரங்களோடு நிரூபிக்கவில்லை. அதனால், என் மனுதாரர்கள் கூட்டுச்சதி செய்துள்ளதாக கூறுவது உண்மைக்குப் புறம்பானது. 120பி பிரிவில் வழக்குப் பதிவுசெய்யும்போது என்னென்ன விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என்று, மும்பை வெடிகுண்டு வழக்கில் தெளிவாக விளக்கியிருக்கிறார்கள். ஆனால், இந்த வழக்கைப் பொறுத்தவரை கூட்டுச்சதி செய்ததற்கான சாட்சியங்களும் ஆதாரங்களும் கிடையாது. முகமது உஸ்மான், அஜய் அகர்வால், கே.ஆர்.பரசுராமன் வழக்குகளில், கூட்டுச்சதி வழக்கு பதிவுசெய்யும்போது போலீசார் பின்பற்ற வேண்டிய விதிமுறைகளையும் உச்ச நீதிமன்றம் தெளிவாக விளக்கியுள்ளது. ஆனால், அதையெல்லாம் இந்த வழக்கில் கடைப்பிடிக்கவில்லை.

இந்தச் சொத்துக்குவிப்பு வழக்கை விசாரித்த புலன்விசாரணை அதிகாரி நல்லம நாயுடு, ஆரம்பம் முதலே இந்த வழக்கை முறையாக விசாரணை செய்யவில்லை. எங்கள் தரப்பினருக்கு 32 நிறுவனங்கள் சொந்தமானது என்று காட்டியிருக்கிறார்கள். அதில் 25க்கும் மேற்பட்ட நிறுவனங்களின் முகவரியைக்கூட சரியாகக் குறிப்பிடவில்லை. ஒரு நிறுவனத்தைத் தொடங்கியதும் வருமானம் கிடைக்காது. கம்பெனி தொடங்கி ஆறு மாதங்கள், ஒரு வருடம், இரண்டு வருடங்கள், ஐந்து வருடங்கள் ஆன நிலையில்தான், நல்ல வருமானம் கிடைக்கும். அப்படிதான் இந்த வழக்கில் சேர்க்கப்பட்டுள்ள பல நிறுவனங்களுக்கு வழக்கு காலத்தில் வருமானம் வந்தது. அதற்கும் ஜெயலலிதாவுக்கும் சிறிதும் தொடர்பு கிடையாது.

நமது எம்.ஜி.ஆர், சூப்பர் டூப்பர் டி.வி நிறுவனங்கள் மூலம் இந்த வழக்கில் குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டுள்ள என் மனுதாரர்களுக்குக் கிடைத்த வருமானத்தை கணக்கில் எடுத்துக்கொள்ளவில்லை. வருமானங்களைக் காட்டினால் அது என் மனுதாரர்களுக்குச் சாதகமாக அமைந்துவிடும் என்பதால், தவிர்த்துவிட்டார்கள். நமது எம்.ஜி.ஆர் நிறுவனத்துக்கு அரசு விளம்பரங்கள் மூலம் 1,34,00,000 ரூபாய் வருமானம் வந்தது. நல்லம நாயுடுவும் வரவு வந்துள்ளது என்று ஒப்புக்கொண்டுள்ளார். ஆனால், அதை வருமானத்தில் சேர்க்க முடியாது என்று கூறியுள்ளார். இது எந்த விதத்தில் நியாயம்?

என் மனுதாரர் இளவரசியின் கணவர் பெயர் ஜெயராமன். இவர் ஜெயலலிதாவுக்குச் சொந்தமான ஹைதராபாத் திராட்சைத் தோட்டத்தில் வேலை பார்த்தார். அவர் மின்சாரம் தாக்கி இறந்துவிட்டார். அதனால், இளவரசிக்கு யாரும் ஆதரவு இல்லை என்பதற்காகக்கூட, அவரை தன் வீட்டுக்கு அழைத்து வந்து ஆதரவு கொடுத்திருக்கலாம். ஒரே இடத்தில் இருந்தார்கள் என்பதற்காக, கூட்டுச்சதி செய்தார்கள் என்பது தவறு. அதனால், இந்தக் குற்றச்சாட்டை குற்றப்பத்திரிகையில் இருந்து நீக்க வேண்டும்.

என் மனுதாரர்கள் வாங்கிய நிலத்துக்கு, வங்கி மூலமாக காசோலைகள் கொடுக்கப்பட்டுள்ளன. இந்தத் தொகையைக் காட்டிலும் நில உரிமையாளர்களுக்கு ரொக்கமாக நிறையத் தொகைகள் கொடுக்கப்பட்டுள்ளதாக லஞ்ச ஒழிப்புத் துறையினர் குற்றம்சாட்டுகிறார்கள். ஆனால், அதற்கு எந்தவித ஆதாரங்களையும் காட்டவில்லை. நில உரிமையாளர்கள் தங்கள் சாட்சியத்தில்கூட இதுபற்றி எதுவும் கூறவில்லை. ஒருவர் மீது குற்றம் சுமத்தி குற்றப்பத்திரிகை தயாரிப்பதற்கு முன், குற்றம் சுமத்தப்படுபவருக்கு நோட்டீஸ் அனுப்பி நேரில் வரவழைத்து, அவர்களின் வாக்குமூலத்தையும் பதிவு செய்ய சந்தர்ப்பம் கொடுத்து குற்றப்பத்திரிகை தயாரிக்க வேண்டும். ஆனால், என் மனுதாரர்கள் சுதாகரன், இளவரசி மீது போடப்பட்ட குற்றப்பத்திரிகை பற்றி அவர்களுக்குத் தெரியாது. என் மனுதார்களிடம் இதுபற்றி கேட்கவும் இல்லை. அதனால் இந்திய குற்றவியல் நடைமுறைச் சட்டங்களை நல்லம நாயுடு மீறியுள்ளார்.’’

இவ்வாறு அமித் தேசாய் வாதங்களை முன் வைத்தார்.

அமீத் தேசாய் அன்றைய தன் வாதத்தை முடித்துவிட்டு, ‘‘இன்னும் என் வாதங்கள் முடியவில்லை. எனக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் பல வழக்குகள் இருப்பதால், அடுத்த வாரம் மீண்டும் வந்து என் வாதத்தைத் தொடர்கிறேன்’’ என்றதும் நீதிபதி ஜான் மைக்கேல் டி.குன்ஹா, ‘‘என்ன... அடுத்த வாரமா? தொடர்ந்து கோர்ட்டில் வாதங்கள் நடைபெறும். அடுத்த வாரத்தில் எல்லா வாதங்களும் நிறைவு பெற்றுவிடும்’’ என்றார்.

‘‘சென்னையில் ஒரே நாளில் உங்கள் தரப்பு வாதத்தை முடித்தீர்கள். இங்கு 2013ஆம் ஆண்டு, உங்கள் தரப்பின் அனைத்து வாதத்தையும் 13 நாட்களில் முடித்துள்ளீர்கள். ஆனால், இப்போது 40 நாட்கள் தாண்டியும் இங்கு முடித்தபாடில்லை. அரசுத் தரப்பு வழக்கறிஞர் 15 நாட்கள் வாதம் செய்தார். ஜெயலலிதா தரப்பு வழக்கறிஞர் குமார் 25 நாட்களும், சசிகலா வழக்கறிஞர் மணிசங்கர் வாதம் ஆறு நாட்களைத் தாண்டி இன்னும் நீடித்து வருகிறது. நீங்கள் நான்கு நாட்கள் வாதம் செய்துள்ளீர்கள். 40 நாட்களுக்கு மேல் இறுதி வாதங்கள் நடைபெற்றுள்ளது. இன்னும் எத்தனை நாட்களுக்கு வாதத்தை நடத்துவீர்கள்? இதற்கு ஒரு முடிவு கட்ட வேண்டும்’’ என்றார்.

அமீத் தேசாயின் வாதங்களுக்கு இடையில் ஜெயலலிதா தரப்பு வழக்கறிஞர் பன்னீர்செல்வம், ஒரு புதிய மனுவைத் தாக்கல் செய்தார். அதில், ‘‘கடந்த 1997ஆம் ஆண்டு தமிழில் இருந்த குற்றப்பத்திரிகை அறிக்கை, ஆங்கிலத்தில் மொழி மாற்றம் செய்யப்பட்டது. ஆனால், அந்த மொழி மாற்றம் சரியானதாக இல்லை. அதனால், சென்னை மாவட்ட அமர்வு நீதிமன்ற நீதிபதி தியாகராஜன் மூலமாக, நாங்கள் அந்த குற்றப்பத்திரிகையை சரியாக ஆங்கிலத்தில் மொழி மாற்றம் செய்துள்ளோம். நீதிமன்றத்தில் உள்ள மொழி பெயர்ப்பாளர் மூலம் ஆய்வு செய்து, அதனை நீதிமன்றம் ஏற்றுக்கொள்ள வேண்டும்’’ என்ற ஒரு புதிய மனு நீதிபதியிடம் கொடுக்கப்பட்டது.

அதை பெற்றுக்கொண்ட நீதிபதி குன்ஹா, இது தொடர்பாக ஆட்சேபனை இருந்தால், மனு தாக்கல் செய்யும்படி அரசு சிறப்பு வழக்கறிஞர் பவானி சிங்கிடம் கூறினார். மறுநாள் பதில் மனு தாக்கல் செய்வதாக பவானி சிங் கூறினார்.

மறுநாள் பவானி சிங் தாக்கல் செய்த பதில் மனுவில், ‘‘1997ஆம் ஆண்டு குற்றப்பத்திரிகை தமிழில் இருந்து ஆங்கிலத்தில் சரியாகத்தான் மொழி பெயர்ப்பு செய்யப்பட்டுள்ளது. அப்போது இந்த வழக்கை விசாரித்த நீதிபதிதான் மொழி பெயர்ப்பு செய்துள்ளார். அவருக்கு தமிழும், ஆங்கிலமும் நன்றாக தெரிந்ததால்தான், தமிழில் இருந்த இந்தக் குற்றப்பத்திரிகையை அவரே ஆங்கிலத்தில் மொழி பெயர்ப்பு செய்திருக்கிறார். அதனால், இந்த புதிய மனுவை ஏற்றுக்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. அதுவும் இந்த வழக்கு இறுதிகட்டத்தில் இருக்கும்போது, குற்றவாளிகள் தரப்பில் தேவையில்லாமல் இந்த மனுவைத் தாக்கல் செய்திருக்கிறார்கள்'' என்றார். அந்த பதில் மனுவைப் பார்வையிட்ட நீதிபதி அந்த மனு மீதான தீர்ப்பை ஒத்திவைத்தார்.

இந்த நிலையில், ஜெயலலிதா சார்பாக தனியாக ஒரு மனுவும், சசிகலா, சுதாகரன், இளவரசி மூன்று பேர் சார்பாக தனியாக ஒரு மனுவும் தாக்கல் செய்யப்பட்டது. ஜெயலலிதா சார்பில் தாக்கல் செய்த மனுவில், ‘மற்ற குற்றவாளிகளோடு சேர்ந்து கூட்டுச்சதி செய்ததற்கான எந்த ஆதாரமோ, சாட்சியமோ கிடையாது. அதனால், குற்றப்பத்திரிகையில் இருந்து, கூட்டுச்சதியில் ஈடுபட்டார் என்ற குற்றத்தை நீக்க வேண்டும்’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது. மற்ற மூன்று பேர் சார்பில் தாக்கல் செய்த மனுவில், 'ஜெயலலிதாவோடு சேர்ந்து வருமானத்துக்கு அதிகமாக சொத்துகளைச் சேர்த்த குற்றச் செயலுக்கு நாங்கள் எந்தவிதத்தில் தூண்டுதலாக இருந்தோம் என்பதையும், எந்தெந்த சொத்துகள் கூட்டுச்சதி திட்டம் தீட்டி வாங்கப்பட்டது, எப்படி கூட்டுச்சதி செய்தோம் என்பதை நிரூபிக்க எந்த ஆதாரமும் சாட்சியமும் நிரூபிக்கப்படாததால் இந்தக் குற்றச்சாட்டுகளைக் குற்றப்பத்திரிகையில் இருந்து நீக்க வேண்டும்’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த மனுக்களைப் பெற்றுக்கொண்ட நீதிபதி, ‘‘இன்னும் எத்தனை மனுக்கள்தான் கொடுக்கப்போகிறீர்கள் என்பதை நானும் பார்க்கப்போகிறேன்’’ என்று சற்று காட்டமாகவே சொன்னார்.

-வீ.கே.ரமேஷ்

படங்கள்: ரமேஷ் கந்தசாமி

அமீத் தேசாயின் வாதம் நாளையும் தொடரும்...
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Back to top Go down

ஜெ. சொத்துக்குவிப்பு வழக்கு...தீர்ப்புக்கு இன்னும் 16 நாட்கள்! மினி தொடர்:   - Page 4 Empty Re: ஜெ. சொத்துக்குவிப்பு வழக்கு...தீர்ப்புக்கு இன்னும் 16 நாட்கள்! மினி தொடர்:

Post by தமிழ்நேசன்1981 Sat Sep 20, 2014 9:28 pm

ஜெ. சொத்துக்குவிப்பு வழக்கு...தீர்ப்புக்கு இன்னும் சில நாட்கள்! (மினி தொடர்: பகுதி- 16)

‘‘நாங்கள் லாபம் அடைய மன்மோகன் சிங்தான் காரணம்!’ - இளவரசி, சுதாகரன் வழக்கறிஞர்!

பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் இளவரசி, சுதாகரன் தரப்பு வழக்கறிஞர் அமீத் தேசாய் எடுத்து வைத்த வாதங்கள் இன்றும் தொடர்கிறது...

‘‘சசிகலா தொடக்க காலம் முதலே பல நிறுவனங்களை நடத்தி வந்தார். இளவரசி இளம் வயதிலேயே கணவனை இழந்து கைக்குழந்தைகளோடு பிழைக்க வழியில்லாமல் ஜெயலலிதா வீட்டில் தங்கியிருந்தார். சுதாகரன் போதிய வருமானம் இல்லாமல் கஷ்டப்பட்டு இருந்தார். இவர்கள் தொழில் தொடங்க சசிகலா உதவி செய்துள்ளார். நலிந்தோருக்கு உதவிசெய்து அவர்களை வாழ்க்கையில் முன்னேறச் செய்வது சமூகத்தில் வரவேற்கத்தக்கது. இது குற்றமாகாது.

பொருளாதார வல்லுநரான மன்மோகன் சிங் 1991-ல் இந்தியாவின் நிதி அமைச்சராக பொறுப்பேற்றதும், புதிய பொருளாதாரக் கொள்கைகளை வகுத்தார். அதனால், அந்தக் காலகட்டத்தில் இந்தியா மிகப்பெரிய பொருளாதார வளர்ச்சி கண்டது. இந்தியாவில் உள்ள சிறு, குறு தொழிற்சாலைகளுக்கு பல சலுகைகள் வழங்கப்பட்டன. இதன் மூலம் இந்தியா முழுவதும் உள்ள பல தொழிற்சாலைகள் பன்மடங்கு லாபம் ஈட்டியது. அந்த நேரத்தில் என் மனுதாரர்கள் பங்குதாரர்களாக இருந்த நிறுவனங்களுக்கும் நல்ல லாபம் கிடைத்தது. குறிப்பாக சூப்பர் டூப்பர் டி.வி-யில் பல லட்சம் லாபம் கிடைத்தது. இதில் கிடைத்த லாபத்தால் பல சொத்துகளும் நிறுவனங்களும் தொடங்கப்பட்டன. அந்த காலகட்டத்தில் எங்கள் நிறுவனங்கள் மட்டும் பெரிய லாபம் ஈட்டியது என்று சொல்வது தவறானது’’ என்று தனது வாதத்தை எடுத்து வைத்தார்.

ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோரின் வழக்கறிஞர்களின் இறுதி வாதம் நிறைவடைந்ததை அடுத்து, ஆகஸ்ட் 27 ஆம் தேதி ஜெயலலிதாவின் வழக்கறிஞர் குமார், தனது நிறைவு தொகுப்புரையை வாசிக்க வேண்டும். ஆனால் குமார் தன்னுடைய நிறைவு தொகுப்புரையை வாசிக்க அன்றைய தினம் நீதிமன்றத்துக்கு வராததால், அடுத்து அரசு தரப்பு வழக்கறிஞர் மராடியை நிறைவு தொகுப்புரையை வாசிக்க அழைத்தார் நீதிபதி குன்ஹா. ஆனால் மராடி, ‘‘என்னுடைய சீனியர் பவானி சிங்கும் உயர் நீதிமன்றத்துக்குச் சென்றுவிட்டதால் நாங்களும் வாதிட முடியாது’’ என்றார்.

இதனால் கோபம் அடைந்த நீதிபதி குன்ஹா, ‘‘இரு தரப்பு இறுதி வாதங்கள் முடிந்துவிட்டதால் தீர்ப்புக்காக ஒத்தி வைத்துவிடுவேன். இருந்தாலும், இன்று 11 டு 5 வரை அமர்ந்திருப்பேன். இன்று வந்து நிறைவுரையை முடிக்க வேண்டும்’’ என்றார். 3 மணி வரை காத்திருந்த நீதிபதி குன்ஹா, ‘‘நாளை 28 ஆம் தேதி குமார் தன்னுடைய நிறைவு தொகுப்புரையை முடிக்க வேண்டும். அதைத் தொடர்ந்து நாளையே அரசு தரப்பும் நிறைவு தொகுப்பைத் தொடங்க வேண்டும்’’ என்றார்.

ஆகஸ்ட் 28 ஆம் தேதி காலை 11 மணிக்கு ஜெயலலிதா வழக்கறிஞர் குமார், சசிகலா வழக்கறிஞர் மணிசங்கர் மற்றும் செந்தில், பன்னீர்செல்வம், அசோகன், அன்புக்கரசு, கருப்பையா, தனஞ்செயன், பரணிகுமார் என அனைவரும் ஆஜர் ஆனார்கள். சரியாக 11 மணிக்கு நீதிபதி குன்ஹா வந்தமர்ந்தார். 27 ஆம் தேதி யாரும் வராததால் கோபமாகவே இருந்தார் நீதிபதி.

குமார் இறுதி வாதத்தின் நிறைவு தொகுப்புரையை வாசிக்கத் தொடங்கினார். ‘‘கம்பெனி சட்டம் 159, 209, 210, 213 விதிகளை 32 நிறுவனங்களும் கடைப்பிடித்திருக்கிறார்கள். ஒவ்வோர் ஆண்டும் கம்பெனியில் ஆடிட்டிங் செய்து அதற்கு முறையாக வருமான வரிகளையும் கட்டியிருக்கிறார்கள். எங்களுடைய ஆவணங்களை ஜெராக்ஸாக கொடுக்க வருமான வரித்துறை ஒரிஜனல் ஆவணங்கள் தராததால், நகல் ஆவணங்களை சமர்ப்பித்து இருக்கிறோம். ஐட்டம் நம்பர்...’’ என்று சொல்லிக்கொண்டே போக... குறுக்கிட்ட நீதிபதி குன்ஹா, ‘‘என்ன ஐட்டம் நம்பரா? இன்று நடப்பது வாதம் கிடையாது. நிறைவுரைதான். இன்னும் 15 நிமிடம்தான் உங்களுக்கு இருக்கிறது. அதற்குள் உங்கள் முடிவுரையை முடிக்க வேண்டும்’’ என்றார்.

அதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த ஜெயலலிதா தரப்பு வழக்கறிஞர்கள் அனைவரும் நீதிபதியை நோக்கி, ‘‘எங்களுக்கு இன்னும் நேரம் கொடுக்க வேண்டும்’’ என்று முறையிட்டனர்.

நீதிபதி ஒப்புக்கொள்ளாததால் இறுதியாக, ‘‘தன் வருமானத்தில் 10 சதவிகிதம் அதிகமாக சொத்துகள் வாங்கி இருந்தால்தான் வழக்காக எடுத்துக்கொள்ள வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் சொல்லியிருக்கிறது. என் மனுதாரர் தன் வருமானத்துக்கு 10 சதவிகிதம் குறைவாகத்தான் சொத்துகளை வாங்கியிருக்கிறார். அதனால், இந்த வழக்கை இந்த நீதிமன்றம் தள்ளுபடி செய்ய வேண்டும். இது அரசியல் காழ்ப்பு உணர்ச்சி காரணமாகப் போடப்பட்டுள்ளது’’ என்றார்.

சரியாக 12 மணி ஆனதும், குமாரின் இறுதி வாதத்தின் நிறைவு தொகுப்புரையை முடிக்க செய்த நீதிபதி குன்ஹா, ‘இனி சொல்ல விரும்புவதை இன்றே எழுத்துபூர்வமாகக் கொடுக்க வேண்டும். இன்று கொடுத்தால் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்’ என்று உத்தரவிட்டார்.

- வீ.கே.ரமேஷ்

படங்கள்: ரமேஷ் கந்தசாமி

அரசு வழக்கறிஞரின் நிறைவுரை நாளை...
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Back to top Go down

ஜெ. சொத்துக்குவிப்பு வழக்கு...தீர்ப்புக்கு இன்னும் 16 நாட்கள்! மினி தொடர்:   - Page 4 Empty Re: ஜெ. சொத்துக்குவிப்பு வழக்கு...தீர்ப்புக்கு இன்னும் 16 நாட்கள்! மினி தொடர்:

Post by தமிழ்நேசன்1981 Sat Sep 20, 2014 9:29 pm

ஜெ. சொத்துக்குவிப்பு வழக்கு...தீர்ப்புக்கு இன்னும் சில நாட்கள்! (மினி தொடர்: பகுதி- 17)

‘‘திருடு போன ஆவணங்கள் வந்தது எப்படி?’’ - அரசு வழக்கறிஞர் மராடி

பெங்களூரு சிறப்பு நீதிமன்றம்... ஆகஸ்ட் 28ஆம் தேதி... மதியம் சரியாக 12 மணிக்கு தன் இறுதி வாதத்தின் நிறைவு தொகுப்புரையை ஜெயலலிதாவின் வழக்கறிஞர் குமார் முடித்ததும். நீதிபதி குன்ஹா அரசு வழக்கறிஞர்களை நோக்கி ‘வாதத்தைத் தொடங்குங்கள்’ என்றார். பவானி சிங் தன் அறைக்குச் சென்றார். அவரது ஜூனியர் மராடியைப் பார்த்து, ‘உங்கள் நிறைவு வாதத்தைத் தொடங்குங்கள்’ என்ற நீதிபதி குன்ஹா, ‘அவர் (குமார்) வருவாரா?’ என்று சிரித்தபடி கேட்டார். மராடியும் சிரித்துக்கொண்டே, ‘தெரியவில்லை’ என்று தன் வாதத்தைத் தொடங்கினார்.

‘‘கட்டடத்தின் மதிப்பை அதிகப்படுத்திக் காட்டி இருப்பதாகவும், தகுதி வாய்ந்த பொறியாளர்கள் மதிப்பீடு செய்யவில்லை என்றும் சொல்லியிருந்தார்கள். ஆனால், அதெல்லாம் உண்மைக்குப் புறம்பானது. அனைத்து கட்டடங்களும் தகுதி வாய்ந்த வல்லுநர்களைக்கொண்டுதான் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. எந்தக் கட்டடத்தின் மதிப்பையும் அதிகப்படுத்திக் காட்டவில்லை. மாறாக, அவர்கள் வாயாலேயே ‘கட்டடங்களுக்கு வாங்கிய மார்பிள்ஸ், டைல்ஸ் அனைத்தும் இம்போர்ட்டட் என்று சொல்லிவிட்டு, பிறகு ‘பொதுப்பணித் துறை அதிகாரிகள் இம்போர்ட்டட் என்று சொல்கிறார்கள்’ என்று சுதாகரித்துக்கொண்டு மாற்றிச் சொல்லுகிறார்கள். ஆனால், உண்மையில் கட்டடத்துக்குள் போடப்பட்டுள்ள மார்பிள்ஸ், டைல்ஸ் அனைத்தும் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ளதுதான்.

ஜெயா பப்ளிகேஷனில் ஏ1 ஜெயலலிதா செயல்படாத பங்குதாரர் என்று சொல்லியிருக்கிறார்கள். அது தவறானது. அவர் செயல்படக்கூடிய பங்குதாரராகத்தான் இருந்துள்ளார். ஏ3 சுதாகரனை வளர்ப்பு மகனாகத் தத்துக்கெடுத்துக்கொண்டதும், அவரின் திருமணச் செலவுகளை ஜெயலலிதா தான் செய்தார் என்பதற்கு போட்டோ ஆதாரங்கள் முதல் சாட்சியங்கள் வரை நிரூபிக்கப்பட்டுள்ளது. அதேபோல அவரது வீட்டில் கைப்பற்றப்பட்டுள்ள தங்க நகைகள், வெள்ளி நகைகள் மற்றும் ஆவணங்கள் அனைத்தும் இந்த வழக்குக்கு சாட்சியங்களாக இருக்கின்றன’’ என்றார்.

பிறகு 2 மணிக்கு உணவு இடைவேளை விடப்பட்டது. ‘‘மீண்டும் 3 மணிக்கு நீதிமன்றம் தொடங்கும்’’ என்றார் நீதிபதி குன்ஹா.

3 மணிக்கு மீண்டும் அரசு வழக்கறிஞர் மராடி, ‘‘இந்த வழக்கைப் பொறுத்தவரை உரிய ஆவணங்களோடும், சாட்சியங்கள் விசாரிக்கப்பட்டும்தான் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது, அரசியல் பழிவாங்கும் நோக்கத்தில் புனையப்பட்டுள்ளது அல்ல. இந்த வழக்கை முதன்முதலில் தொடுத்ததே சுப்பிரமணியன் சுவாமிதான்.

‘நமது எம்.ஜி.ஆர்.’ பத்திரிகை நிறுவனத்துக்கு சந்தா மூலமாக 14 கோடி கிடைத்துள்ளதாகச் சொல்கிறார்கள். ஆனால், சந்தா பெற்றதற்கான ஆவணங்கள் அனைத்தும் ஒரிஜினலாக இல்லை. அனைத்தும் ஜெராக்ஸ்களாகத்தான் இருந்தன. இதுகுறித்து நீதிமன்றம் கேட்டதற்கு, ‘ஒரிஜனல் ஆவணங்களை காரில் எடுத்துச் சென்றுக்கொண்டிருக்கும்போது டீ சாப்பிடுவதற்காக இறங்கினோம். அப்போது யாரோ ஒரிஜினல் ஆவணங்களைத் திருடிக் கொண்டுபோய்விட்டனர்’ என்றனர். ஆனால், இந்த நீதிமன்றத்தில் குற்றவாளிகள் தரப்பு சாட்சியத்தின்போது, அந்த ஒரிஜினல் ஆவணங்களை இந்த நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருக்கின்றனர். ஒரிஜினல் தொலைந்துவிட்டது என்றவர்களுக்கு எப்படி மீண்டும் இந்த ஒரிஜனல் ஆவணங்கள் கிடைத்தன. ‘நமது எம்.ஜி.ஆர்.’ பத்திரிகை நிறுவனத்துக்கு சந்தாதாரர்கள் மூலம் 14 கோடி ரூபாய் கிடைத்துள்ளது என்பது பொய்யானது.

அதேபோல சூப்பர் டூப்பர் நிறுவனத்துக்கு கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் மூலம் 6 கோடி ரூபாய் வருமானம் வந்துள்ளதாகச் சொல்கிறார்கள். கேபிள் டி.வி. நெட்வொர்க் கட்டுப்பாட்டு சட்டம் 1995, கேபிள் டி.வி. ஆபரேட்டர்களிடம் வாங்கிய டெபாசிட் தொகையைத் திருப்பிக் கொடுக்க வேண்டும் என்று சொல்லியிருக்கிறது. அதனால், அதை வருமானத்தில் எடுத்துக்கொள்ள முடியாது. இவர்கள் டெபாசிட் வாங்கியதை திருப்பிக் கொடுக்காமல் இருந்தால், அதுவும் சட்டத்துக்குப் புறம்பானது. அப்படி எந்த ஆபரேட்டரிடமும் வாங்கவில்லை. இந்தத் தொகையையும் வருமானத்துக்கு அதிகமான சம்பாதித்தத் தொகையைத்தான் இதில் செலுத்தியிருக்கிறார்கள்.

ஏ2 சசிகலாவுக்கு பூர்வீகமாக 5 ஏக்கர் நிலம் மட்டும்தான் இருந்துள்ளது. அதற்கு ஆதாரமாக, மன்னார்குடி வருவாய்த் துறையின் வருமானச் சான்றிதழில் உள்ள ஆவணத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இவரின் கணவர் அரசு பணியில் இருந்தவர். ஏ3 சுதாகரனுக்கு வருட வருமானம் 40 ஆயிரமும், ஏ4 இளவரசிக்கு வருட வருமானமாக 48 ஆயிரமும்தான் வந்துள்ளது. இந்தத் தொகையை வைத்துக்கொண்டு எப்படி பல கோடி மதிப்புள்ள சொத்துகளை வாங்க முடியும்? இவர்கள் வாங்கிய அனைத்து சொத்துக்களும், ஏ1 ஜெயலலிதா தன் பதவியை தவறாகப் பயன்படுத்தி சம்பாதித்த பணத்தில்தான் வாங்கப்பட்டுள்ளது. ஏ1 ஜெயலலிதாவின் ஏஜெண்ட்கள்தான் ஏ2 சசிகலா, ஏ3 சுதாகரன், ஏ4 இளவரசி’’ என்று முடித்தார்.

அதன் பிறகு அரசு தரப்பு, ஜெயலலிதா தரப்பு, தி.மு.க. தரப்பு வழக்கறிஞர்கள் தாங்கள் சொல்ல விரும்பும் கருத்துகளை எழுத்துபூர்வமாகக் கொடுத்தனர்.

-வீ.கே.ரமேஷ்

படங்கள்: ரமேஷ் கந்தசாமி

தீர்ப்பு தேதி அறிவிப்பு நாளை...
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Back to top Go down

ஜெ. சொத்துக்குவிப்பு வழக்கு...தீர்ப்புக்கு இன்னும் 16 நாட்கள்! மினி தொடர்:   - Page 4 Empty Re: ஜெ. சொத்துக்குவிப்பு வழக்கு...தீர்ப்புக்கு இன்னும் 16 நாட்கள்! மினி தொடர்:

Post by தமிழ்நேசன்1981 Sat Sep 20, 2014 9:30 pm

ஜெ. சொத்துக்குவிப்பு வழக்கு...தீர்ப்புக்கு இன்னும் சில நாட்கள்! (மினி தொடர்: பகுதி- 18)
செப்டம்பர் 27... ஜெயலலிதாவுக்கு ஜெயமா.. பயமா?

பெங்களூரு சிறப்பு நீதிமன்றம். ஆகஸ்ட் 28ஆம் தேதி... ஜெயலலிதா தரப்பு வழக்கறிஞர் குமார் மற்றும் அரசு தரப்பு வழக்கறிஞர் மராடி ஆகியோர் தங்கள் இறுதி வாதத்தின் நிறைவு தொகுப்புரையை முடித்தனர்.

அதனைத் தொடர்ந்து அரசு வழக்கறிஞர்கள் பவானி சிங், முருகேஷ் மராடி, ஜெயலலிதா வழக்கறிஞர்கள் குமார், மணிசங்கர், செந்தில், அசோகன், பன்னீர்செல்வம், குலசேகரன், பரணிகுமார், தனஞ்செயன், விஜயகுமார், கருப்பையா, அன்புக்கரசு, ராஜன் மற்றும் தி.மு.க வழக்கறிஞர்கள் தாமரை செல்வன், சரவணன், குமரேசன், ராமசாமி மற்றும் தமிழக ஊழல் மற்றும் கண்காணிப்புத் துறை சிறப்பு அதிகாரி குணசீலன் மற்றும் பத்திரிகையாளர்கள் அனைவரும் நீதிபதி என்ன சொல்லப்போகிறார் என்று அமைதியாகக் காத்திருந்தனர்.

தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைப்பார் என்றுதான் அனைவரும் நினைத்துக்கொண்டிருந்தனர். ஆனால், யாருமே எதிர்பார்க்காத வகையில் நீதிபதி ஜான் மைக்கேல் டி.குன்ஹா, ‘‘கர்நாடகாவில் குற்றவியல் நடைமுறை சட்டத்தின்படி தீர்ப்பு வழங்குவதற்கு குறைந்தது 14 நாட்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். ஆனால், இந்த வழக்கைப் பொறுத்தவரை நிறைய ஆவணங்கள் இருக்கின்றன. அதைப் படிக்க வேண்டியிருப்பதால் கூடுதலாக ஒரு வார காலம் தேவைப்படுகிறது. அதனால், செப்டம்பர் 20ஆம் தேதி தீர்ப்பு அறிவிக்கப்படும்’’ என்று அறிவித்ததும் அனைவரும் திகைத்து போய் நீதிபதியைப் பார்த்தனர். சட்டென்று எழுந்து அனைவருக்கும் நன்றி சொல்லிவிட்டு சென்றுவிட்டார் நீதிபதி குன்ஹா.

இதையடுத்து, இந்த தீர்ப்பு தேதியை ஒட்டுமொத்த இந்தியாவே எதிர்பார்த்துக்கொண்டிருந்த நிலையில், செப்டம்பர் 15ஆம் தேதி பெங்களூரு நீதிமன்றத்தில் ஜெயலலிதா சார்பில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், ஜெயலலிதாவுக்கு அச்சுறுத்தல் இருப்பதால் நீதிமன்றத்தை பரப்பன அக்ரஹாராவுக்கு மாற்றக் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

‘‘சொத்துக்குவிப்பு வழக்கில் 20ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என்றும், வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு உள்ளவர்கள் நேரில் ஆஜராக வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழக முதல்வராக உள்ள ஜெயலலிதா ‘இசட்’ பிரிவு பாதுகாப்பில் உள்ளார். இப்போது வழக்கு நடைபெறும் சிறப்பு நீதிமன்றத்தில் போதிய பாதுகாப்பு வசதிகள் இல்லை. ஜெயலலிதா நேரில் வந்து வாக்குமூலம் அளித்தபோது உச்ச நீதிமன்றம் உத்தரவுப்படி பரப்பன அக்ரஹாராவுக்கு நீதிமன்றம் தற்காலிகமாக மாற்றப்பட்டது. அதேபோல், தீர்ப்பு வழங்கப்படும் தினத்தன்று நீதிமன்றத்தை பரப்பன அக்ரஹாராவுக்கு மாற்ற வேண்டும். போதிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யுமாறு கர்நாடக அரசுக்கு உத்தரவிட வேண்டும்’’ என்றும் கூறப்பட்டிருந்தது.

இந்த மனுவை 16ஆம் தேதி விசாரித்த நீதிபதி ஜான் மைக்கேல் குன்ஹா, ஜெயலலிதாவின் கோரிக்கையை ஏற்றுக்கொண்டார். ‘‘பாதுகாப்பு கருதி பரப்பன அக்ரஹாரா சிறை வளாக நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்கப்படும். செப்டம்பர் 20ஆம் தேதிக்குப் பதில், 27ஆம் தேதிக்கு தீர்ப்பு வழங்கப்படும்’’ என்று குன்ஹா உத்தரவிட்டார்.

செப்டம்பர் 27ஆம் தேதி என்ன தீர்ப்பு வருமோ என்று முதல்வர் ஜெயலலிதா மட்டுமல்லாது ஒட்டுமொத்த இந்தியாவே காத்திருக்கிறது. (தொடர் நிறைவுற்றது)
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Back to top Go down

ஜெ. சொத்துக்குவிப்பு வழக்கு...தீர்ப்புக்கு இன்னும் 16 நாட்கள்! மினி தொடர்:   - Page 4 Empty Re: ஜெ. சொத்துக்குவிப்பு வழக்கு...தீர்ப்புக்கு இன்னும் 16 நாட்கள்! மினி தொடர்:

Post by யினியவன் Sat Sep 20, 2014 10:56 pm

கொஞ்ச வருஷம் உள்ள வச்சா தான் மத்தவனுங்களுக்கும் பயம் இருக்கும்.

அடுத்து அய்யா குடும்பத்து வழக்குகளையும் விசாரித்து உள்ள புடிச்சு போடட்டும் சீக்கிரம்.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

ஜெ. சொத்துக்குவிப்பு வழக்கு...தீர்ப்புக்கு இன்னும் 16 நாட்கள்! மினி தொடர்:   - Page 4 Empty Re: ஜெ. சொத்துக்குவிப்பு வழக்கு...தீர்ப்புக்கு இன்னும் 16 நாட்கள்! மினி தொடர்:

Post by அசுரன் Sat Sep 20, 2014 11:04 pm

அம்மா பத்தரை மாற்று தங்கம்னு நிரூபிச்சிட்டு நிரபராதின்னு விடுதலையாகத்தான் போறாங்க பாருங்க! இருங்க இருங்க!
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

ஜெ. சொத்துக்குவிப்பு வழக்கு...தீர்ப்புக்கு இன்னும் 16 நாட்கள்! மினி தொடர்:   - Page 4 Empty Re: ஜெ. சொத்துக்குவிப்பு வழக்கு...தீர்ப்புக்கு இன்னும் 16 நாட்கள்! மினி தொடர்:

Post by யினியவன் Sun Sep 21, 2014 12:23 am

ஆசானே அப்படி ஆச்சுன்னா அத விட அவமானம் நீதிக்கு இருக்கவே போறதில்ல.

அப்படி ஆச்சுன்னா ஊழல் பல்கிப் பெருகும் டாஸ்மாக் வியாபாரம் போல்.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

ஜெ. சொத்துக்குவிப்பு வழக்கு...தீர்ப்புக்கு இன்னும் 16 நாட்கள்! மினி தொடர்:   - Page 4 Empty Re: ஜெ. சொத்துக்குவிப்பு வழக்கு...தீர்ப்புக்கு இன்னும் 16 நாட்கள்! மினி தொடர்:

Post by அசுரன் Sun Sep 21, 2014 1:39 pm

யினியவன் wrote:ஆசானே அப்படி ஆச்சுன்னா அத விட அவமானம் நீதிக்கு இருக்கவே போறதில்ல.

அப்படி ஆச்சுன்னா ஊழல் பல்கிப் பெருகும் டாஸ்மாக் வியாபாரம் போல்.
மேற்கோள் செய்த பதிவு: 1089419

ஒரு பேச்சுக்கு சொன்னா நம்பிடுறதா? ஹி ஹி
ஜெ. சொத்துக்குவிப்பு வழக்கு...தீர்ப்புக்கு இன்னும் 16 நாட்கள்! மினி தொடர்:   - Page 4 Z
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

ஜெ. சொத்துக்குவிப்பு வழக்கு...தீர்ப்புக்கு இன்னும் 16 நாட்கள்! மினி தொடர்:   - Page 4 Empty Re: ஜெ. சொத்துக்குவிப்பு வழக்கு...தீர்ப்புக்கு இன்னும் 16 நாட்கள்! மினி தொடர்:

Post by யினியவன் Sat Sep 27, 2014 7:14 pm

யினியவன் wrote:கசிந்து வந்த தகவல் - அம்மணிக்கு எதிராக தான் தீர்ப்பு இருக்கும் என தெரிந்து கோகுல இந்திராவை தயாராக்கி வருகிறார்களாம் நமை ஆள்வதற்கு...
மேற்கோள் செய்த பதிவு: 1087263

நாங்க அன்னிக்கே சொல்லிட்டோமே - அதேபோல ஆயிடுச்சே புன்னகைபுன்னகைபுன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

ஜெ. சொத்துக்குவிப்பு வழக்கு...தீர்ப்புக்கு இன்னும் 16 நாட்கள்! மினி தொடர்:   - Page 4 Empty Re: ஜெ. சொத்துக்குவிப்பு வழக்கு...தீர்ப்புக்கு இன்னும் 16 நாட்கள்! மினி தொடர்:

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

Back to top

- Similar topics
» இன்னும் எத்தனை மனுக்கள்தான் கொடுப்பீர்களோ? சொத்துக்குவிப்பு வழக்கு நீதிபதி குன்ஹா கோபம்
» சொத்துக்குவிப்பு வழக்கு: சசிகலா மறு சீராய்வு மனு
» ஜெ - சொத்துக்குவிப்பு வழக்கு! - 17 ஆண்டுகள்... அதிர்வலைகள்!
» சொத்துக்குவிப்பு வழக்கு நடக்கும்போது முதல்வராக பதவி வகிக்கலாமா?
» சொத்துக்குவிப்பு வழக்கு : ஜெ., வாங்கிய சம்பளம் எவ்வளவு ? நீதிபதி கேள்வி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum