புதிய பதிவுகள்
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
kavithasankar |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தாய்!
Page 1 of 1 •
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
'சொன்னது நினைவிருக்கா... மொதலாளி குடும்பத்த ரயில்வே ஸ்டேஷன்ல, 'ட்ராப்' செஞ்சதும், காரை எடுத்துகிட்டு, கோயம்பேடு வந்திடு,'' ரகசியமாக சொன்னான் ஆறுமுகம்.கோபி காரை துடைத்து, ஈரத்துண்டை வண்டி டாப்பின் மீது பரத்தினான்; அவனுள் என்றுமில்லாத பதற்றம், முதன்முதலாய் தவறு செய்யப் போகிற பயம்.
''யோசிக்காத... உன் தங்கச்சிக்கு சடங்கு வைக்க வேணாமா... மஞ்ச நீராட்டு விழான்னாலே செலவு அதிகமாகும். முதலாளியும் கை விட்ட பின்ன, பணத்துக்கு என்ன செய்ய முடியும்ன்னு நினைக்கறே,'' என்றவன், ''என்னடா முழிக்குற... நேத்து சொன்னதெல்லாம் ஞாபகம் இருக்கா, இல்லையா?'' என்று அதட்டினான்.
''அதெல்லாம் தப்புண்ணே... மாட்டிக் கிட்டா அசிங்கம்,'' என்று தயக்கமாக இழுத்தான் கோபி.
''ஒண்ணும் பிரச்னை வராது; கோயம்பேடுல நூத்துக்கணக்கான காருங்க இருக்கு. ஒரு கார் வெளியில போறதயோ, வர்றதயோ யாரும் கவனிக்க மாட்டாங்க. டிரைவர் எல்லாரும் செய்ற வேலை தான் இது. இன்னிக்கு உன் மொதலாளி குடும்பத்தோட கொடைக்கானல் போறாரு; திரும்பி வர ஒரு வாரம் ஆகும். வண்டி ஒரு வாரத்துக்கு உன் கைவசம் தான் இருக்கப் போகுது. பெங்களூரு ரெண்டு சவாரி போயிட்டு வந்தாப் போதும்; பத்தாயிரம் ரூபாய் சம்பாதிச்சிடலாம்; மறந்துராத,'' என்றான்.
கோபியின் முதலாளி வீட்டுக்குள்ளிருந்து வெளி வருவதைக் கண்டு ஆறுமுகம் விலகினான்.
எஜமானனிடம் விரைந்த கோபி, அவர் குடும்பத்தார் வைத்திருந்த பெட்டிகளை வாங்கி டிக்கியில் அடுக்கி, அவர்கள் காரில் அமர்ந்ததும், தன் இருக்கையில் அமர்ந்து, காரைப் கிளப்பிய, கோபிக்கு, 20 வயது. கடைக்கோடி மாவட்டத்தில் பின்தங்கிய கிராமம்; வானம் பார்த்த பூமி. மழை பெய்தால் ஒரு போகம் துவரையோ, கடலையோ எடுக்கலாம். அதை வைத்து தான் ஆண்டு முழுதும் ஓட்ட வேண்டும். அவர்களுக்கு இருந்த இரண்டு ஏக்கர் நிலத்தில் அப்பாவும், அம்மாவும் பாடுபட்டு தான் அவனையும், அவன் தங்கையையும் காப்பாற்றி வந்தனர்.
அப்பா காச நோய் முற்றி இறந்து போன பின், குடும்பம் கஷ்ட ஜீவனத்தில் தள்ளாடியது. 'எப்பாடுபட்டாவது குழந்தைகளை நல்லா படிக்க வைக்கணும்...' என்று சொல்வார் அப்பா. அவர் இறந்த பின், விவசாயத்தில் அம்மாவுக்கு கை கொடுக்க வேண்டியிருந்ததால், அவன் பத்தாம் வகுப்போடு படிப்பை நிறுத்த வேண்டியிருந்தது. 'நான் படிக்கலன்னா என்னம்மா; தங்கச்சிய படிக்க வைப்போம்...' என்றான் பெருந்தன்மையோடு. தங்கை ஏழாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தாள்.
தொடர்ந்து மழை ஏமாற்றி வந்ததால், நிலத்தில் ஒரு வேலையும் இல்லாமல் போனது. சாப்பாட்டுக்கு என்ன செய்வது என்று கவலைப்பட்ட போது தான் ஆறுமுகம் வந்தான். அந்த ஊர்க்காரன்; சின்ன வயசிலேயே சென்னைக்கு வந்துவிட்டான். டிரைவர் வேலை பார்க்கிறான்.
மாதம் ஒருமுறையோ, இரு முறையோ ஊருக்கு வருவான்; வீட்டிற்கு ஆயிரக்கணக்கில் பணம் கொடுப்பான்; ஊரே பஞ்சத்தில் இருந்தாலும், அவன் வீட்டில் மட்டுமே சாப்பாடு, துணிமணி, நல்லது, கெட்டதுக்கு செலவழிக்க பணம் இல்லை என்று கவலையில்லாமல் இருந்தனர்.அவனிடம் போய் நிலமையை சொன்னாள் அம்மா. 'அவனுக்கு டிரைவிங் இஷ்டமான்னு கேளு...' என்றான் ஆறுமுகம்; கோபி தலையசைத்தான்.'லைசென்ஸ் எடுக்க நாலாயிரம் ரூபா ஆகுமே...' என்றான் ஆறுமுகம்.
நிலத்தின் மீது நாலாயிரம் ரூபாய் கடன் வாங்கி கொடுத்து வழியனுப்பி வைத்தாள்அம்மா.
சென்னையை முதன் முதலில் பார்த்த கோபி, பெரிய பெரிய கட்டடங்களையும், சாலைகள், மேம்பாலங்கள், வாகனங்கள், ரயில், விமானம், கடற்கரை என, எல்லாவற்றையும் வியப்புடன் பார்த்தான்.'பிழைக்க தெரிஞ்சவனுக்கு சென்னை ஒரு சொர்க்கம்...' என்றான் ஆறுமுகம். அதன் பொருள் அப்போது அவனுக்கு புரியவில்லை; .
இரவு நேரத்தில், தான் ஓட்டும் காரை வைத்தே கோபிக்கு பயிற்சி அளித்து, லைசென்சும் வாங்கித் தந்தான் ஆறுமுகம். பின் அவனே அழைத்துப் போய் ஒரு இடத்தில் வேலைக்கும் சேர்த்து விட்டான்.
'ஓனர் நம்ம பக்கத்து ஆளு; வண்டி ஓட்ட ஆள் வேணும்ன்னு கேட்டுக்கிட்டிருந்தார். தங்க இடம், சாப்பாடு எல்லாம் அவங்களே தந்திருவாங்க; ஆனா, சம்பளம் தான் கொஞ்சம் குறைச்சலாக இருக்கும். உன் வரைக்கும் செலவுக்கு சரியாக இருக்கும்; மேற்கொண்டு சம்பாதிக்க அப்புறம் நான் சொல்லித் தர்றேன்...' என்று சொல்லி விட்டு போனான்.
'நம்ம பக்கத்து பையன்கிறதால மட்டுமில்ல, உன்னைப் பாத்தா நல்லவனாகத் தெரியுது. அந்த நம்பிக்கைய காப்பாத்திக்கிட்டா, உன்னை எங்க குடும்பத்துல ஒருத்தனாவே பாத்து, எல்லா சவுகர்யமும் செஞ்சு தருவோம்...' என்றார் முதலாளி. அப்படி தான் அவனை நடத்தினார்.
முதலாளி அம்மாவும், 'கோபி...' என்று தான் அழைப்பார். மறந்தும், 'டிரைவர்' என்று கூப்பிட்டதில்லை. அக்குடும்பத்தில் உள்ள குழந்தைகள், அவனிடம் ஒரு சகோதரனைப் போல் பழகினர்.
இப்படி ஒரு இடத்தில் வேலைக்கு சேர்த்து விட்டதற்கு, ஆறுமுகத்திற்கு நன்றி சொன்னான் கோபி.
ஆனால், ஆறுமுகம், 'ஆரம்பத்துல எல்லாம் நல்லாத்தான் இருக்கும்; போக போக கஷ்டமாயிடும். நம்மள்ள ஒருத்தன்னு பேசுவாங்க... அன்பா பேசியே எல்லா வேலையையும் வாங்கிக்குவாங்க. இந்த வயசுக்கு எல்லாமே செய்துடலாம். டிரைவர்களுக்கு கை, கால் நல்லா இருக்குற வரை தான் ஓட்டம். ஒரு பத்து நாள் முடியாம படுத்துட்டா, நீ எழுந்து வர வரை எந்த காரும் காத்திருக்காது...' என்றான்.
'நம்பிக்கையோடு வாழ்க்கைய துவங்கும் போது, வழிகாட்டியவனே இப்போது வழி மறிப்பது போல் பேசுகிறானே...' என்று நினைத்து, குழப்பமாக பார்த்தான் கோபி.
'ஆமாண்டா கோபி... உன் மொதலாளி நாலாயிரம் ரூபா தர்றதா பேசியிருக்காரு. போக போக நூறு, இருநூறுன்னு ஏத்தி, ஒரு ஆறாயிரத்துக்கு கொண்டு வரலாம்; ஒரு நாளைக்கு இருநூறு ரூபாய்ங்கிற மாதிரி கணக்கு; இப்ப இருக்கிற விலைவாசியில இந்த சம்பளம் எப்படி கட்டுப்படியாகும்...'
'உனக்கும் இவ்வளவு தானே சம்பளம்...' என்றான்.
'ஆமாம்... ஆனா, நான் இத மட்டும் நம்பியில்ல; மேற்கொண்டு இதுல வருமானம் பாக்குறேன்...' என்றவன், 'பெட்ரோல் திருடி விற்பது, ரிப்பேர் என்று சொல்லி வொர்க் ஷாப்பில் அதிக பில் போடச் சொல்லி கமிஷன் பார்ப்பது, சமயம் வாய்க்கும் போது காரை பிரைவேட் டாக்சியாக பயன்படுத்திக் கொள்வது என பல வழிகளில் சம்பாதிக்கலாம்...' என்ற போது, வாயடைத்துப் போனான் கோபி.
'இதெல்லாம் தப்பில்லயாண்ணே...நம்மள நம்பி தானே மொதலாளி வேலைக்கு வைக்குறாரு...' என்றான்.
'டிரைவர்கள் எல்லாருமே இப்படி தான் சில்லரை பாப்பாங்கன்னு எல்லா மொதலாளிக்கும் தெரியும்; பெருசா தப்பு செய்யாம, இலைமறை காய்மறையா போய்கிட்டிருந்தா கண்டுக்க மாட்டாங்க. இந்த மேல்வரும்படியில நம்ம செலவுகளை சரிகட்டிகிட்டா தான் சம்பளத்த ஊருக்கு அனுப்ப முடியும். வயசுக்குள்ள இப்படி தேத்திகிட்டாத் தான் சொந்தமா ஒரு காரை வாங்கவோ அல்லது ஒரு பெட்டிக்கடை வச்சோ பொழைக்க முடியும். சம்பளத்தை மட்டும் நம்பினா கடைசியில ஒண்ணும் தேறாது...' என்றான்.'தப்புல என்னண்ணே சின்ன தப்பு, பெரிய தப்பு...' என்றான் கோபி.'டேய் கோபி... நான் சொல்றத கேட்டா பொழச்சிக்கலாம்; இப்பவே செய்யணும்ன்னு இல்ல நிதானமா யோசி...' என்றான் ஆறுமுகம்.
அவன் பிடி தன்மேல் இறுகுவதை உணர்ந்தான் கோபி. 'ஊரிலிருந்து கூப்பிட்டு வந்து வேலை கத்துக் கொடுத்தவனிடம், பிடிக்கலன்னு சொல்லி ஒதுங்கிப் போகவும் முடியாது. சொல்றதை சொல்லட்டும்; கண்டுக்காம இருப்போம்...' என்று தீர்மானித்துக் கொண்டான்.
முதல் மாத சம்பளம் வாங்கிய பின் ஊருக்கு போனான். சந்தோஷப்பட்ட அம்மா, அதை அப்படியே, கடங்காரனுக்கு கொடுத்தாள். 'அஞ்சு வட்டி போடுறான்; மாசம் திரும்பறதுக்குள்ள வாசல்ல வந்து நிக்குறான். கஞ்சிக்கு வழியில்லனாலும் போகுது, கடன அடச்சு நிலத்த திருப்பணும் கோபி...' என்றாள். அவனுக்காக வாங்கியதும், ஏற்கனவே அப்பா இறுதி சடங்குகளுக்கு வாங்கியதும் என, இருந்த கடன்களை ஆறு மாதத்தில் அடைத்து, அதன்பின் தான் குடும்பம் நல்ல சாப்பாட்டை பார்த்தது. அந்த நேரம் தான் தங்கச்சி வயதுக்கு வந்தாள்.
'அவரு இருந்துருந்தா, மஞ்ச நீராட்டு விழா செய்துருப்பாரு; சடங்கு செய்யறது நம்ம பழக்கம். இருக்குறது ஒரு பொண்ணு; எளிமையா செஞ்சாலுமே பத்தாயிரம் ரூபா ஆகுமே...' என்று கவலைப்பட்டாள் அம்மா.
'மொதலாளிய கேட்டுப் பாக்குறேன்ம்மா... அவர் நல்லவரு...' என்று சொல்லி சென்னை வந்தவன், விஷயத்தை முதலாளியிடம் சொன்னான்.'மூணு வருஷமாவது வேலை பாத்தா தான் முன் பணம் தர முடியும். நீ நல்லவந்தான்; இருந்தாலும், இப்ப அவ்வளவு இல்ல...' என்றார்.
இது குறித்து ஆறுமுகத்திடம் பேசியபோது, 'சொல்லல... பெருசா ஒண்ணும் எதிர்பாக்க முடியாதுன்னு. நீ பணம் கொடுக்கலன்னா உன் அம்மா மறுபடியும் அஞ்சு வட்டிக்கு நிலத்த அடகு வைக்கும். அதை மீட்கறது பெரும்பாடுன்னு உனக்கு தெரியும். கூடுதல் பணத்துக்கு நான் வழி சொல்றேன்...' என்றான் ஆறுமுகம்.
அந்த நேரம் தான் மொதலாளி குடும்பத்தோடு வெளியூர் கிளம்பினார்.
'சந்தர்ப்பம் தேடி வந்துருக்கு கோபி...விட்றாத...' என்ற ஆறுமுகம், இப்போது எல்லா ஏற்பாடுகளையும் செய்து வைத்திருக்கிறான்.
ஸ்டேஷனில் இறக்கி விடும் போது முதலாளி, ''.கோபி... உன்னை நம்பி காரை விட்டுட்டு போறேன்; நீ தப்பு செய்ய மாட்டேன்னு தெரியும். சம்பிரதாயத்துக்கு தான் மீட்டர் ரீடீங் குறிச்சு வச்சுருக்கேன்,'' என்று சொல்லிப் போனார்.
தொடரும்................

ரயில் புறப்பட்டு போய் வெகு நேரமாகியும், குழப்பத்துடன் நின்று கொண்டிருந்த கோபியை, ஆறுமுகம் மொபைலில் அழைத்தான். மனதை இறுக்கிக் கொண்டு வண்டியை எடுத்து, அவன் சொன்ன இடத்துக்கு சென்றான். பார்ட்டிகள் தயாராக இருந்தனர். ஐந்து பேரை ஏற்றி, பெட்ரோல் நிரப்பி சவாரியை துவங்கினான்.
சில தினங்களுக்குள் பணம் சம்பாதித்து விட வேண்டிய கட்டாயம். வண்டியை காற்றாய் பறக்க விட்டான். ஆறுமுகம் என்னமோ தந்திரம் செய்து, மீட்டரில் பழைய எண்ணே இருக்கும்படி பார்த்துக் கொண்டான். முதல் சவாரி செய்யும் போது துணைக்கு வந்திருந்தான். முதலாளியிடமிருந்து போன் வந்தால், எப்படி பேச வேண்டுமென்று சொல்லித் தந்தான். சவாரி போன சுவடே தெரியாமல், வண்டி கார் ஷெட்டில் இருப்பது போலவும், கோபி, அம்மாவை பார்க்க ஊருக்கு போயிருப்பது போலவும் அழகாக செட்டப் செய்திருந்தான் ஆறுமுகம்.
நினைத்தே பார்த்திராத வகையில், தங்கை விசேஷத்துக்கு வேண்டிய பணம் கிடைத்து விட்டது. ஆறுமுகத்துக்கு நன்றி சொன்னான் கோபி.''இது ஆரம்பம் தான்; சாமர்த்தியமாய் நடந்தால், உன் தங்கச்சி படிப்பு, கல்யாணம், உன் வாழ்க்கைன்னு எல்லாமே சிறப்பா அமைச்சுக்கலாம்,'' என்றான்.
கோபிக்கு மகிழ்ச்சியாக இருந்தது. அழகான எதிர்காலம் கண்ணில் விரிந்தது. ஆனால், அந்தக் கனவு ஊருக்கு போய் அம்மாவை பார்க்கும் வரை தான். பணத்தை பார்த்து மகிழ்ந்தவள், உண்மையிலேயே உன் முதலாளி ரொம்ப நல்லவர், இவ்வளவு பெரிய தொகையை முன் பணமாக கொடுத்திருக்கிறாரே,'' என்று பரவசப்பட்டாள்.
''இது, அவர் கொடுத்ததுல்ல...'' என்றவன், சட்டென்று நாக்கை கடித்துக் கொண்டான்.
அம்மா பார்வையை கூர்மையாக்கி, ''அப்படின்னா...'' என்றாள். அந்தப் பார்வைக்கு முன்னால், அவனால் எதையும் மறைக்க முடியவில்லை. அவன் மீது வீசப்பட்ட பணத்தை எடுத்துக் கொண்டு, சென்னைக்கே வந்து விட்டான்.
முதலாளி குடும்பம் ஊர் திரும்பியதும், கார் சாவியையும், பண கவரையும் ஒப்படைத்து, ''என்ன மன்னிச்சிடுங்க... நான் வேலையை விட்டு நின்னுக்குறேன்,'' என்றான். அவர்கள் குழம்பத்துடன் பார்த்தனர்.''ஏன் என்னாச்சு... எதுக்கு வேலையை விட்டு நிக்கணும்... இது என்ன பணம்?''
''நீங்க அவ்வளவு நம்பிக்கையோடு விட்டுட்டு போன உங்க காரை, தங்கச்சி விசேஷத்துக்காக தவறா பயன்படுத்தி, பெங்களூரு வரை சவாரி அடிச்சு சேர்த்த பணமுங்க; ஏதோ ஒரு வேகத்துல செய்துட்டேன். தொடர்ந்து இங்க வேலை செய்ய, எனக்கு யோக்கியதை இல்ல. நீங்க விரட்டறதுக்கு முன், நானே போயிடறேன்,'' என்று கிளம்பத் தயாரானான்.
சிறிது நேரம் யோசனையாய் பார்த்தவர் பின், ''முதல் முறை அறியாம தப்பு செய்துட்ட... அது தப்புன்னு தெரிஞ்சதும், மன்னிப்பும் கேட்டுட்ட. அதனால ஒரு வாய்ப்பு தர்றேன். நீ இங்கேயே வேலை பாக்கலாம். இந்தப் பணத்தை எடுத்துக்க; அம்மாக்கிட்ட கொடுத்து, தங்கச்சி சடங்கை நல்லபடியா நடத்தச் சொல்லு,'' என்று கூறி, அவன் கொடுத்த பணத்தை நீட்டினார்.
கையை பின்னுக்கு இழுத்து, கோபி, ''அம்மா இந்த பணத்த வாங்க மாட்டேன்னுட்டாங்க சார்... 'ஏமாத்தி சம்பாதிச்ச பணத்துல தங்கச்சிக்கு நல்லது செய்யறதை விட, அவள் சும்மாவே இருக்கலாம். நேர்மையாய் உன்னால சம்பாதிக்க முடியலைன்னா ஊருக்கு வா. உனக்கும் சேர்த்து, நான் சோறு போடுறேன்'னு சொல்லிட்டாங்க. முதல்ல இந்த பணத்த உங்ககிட்ட ஒப்படைச்சுட்டு வரச் சொன்னதும், அவுங்க தான்,'' என்றான்.
மொதலாளியும், அவர் மனைவியும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர். ''வறுமையிலும் நேர்மையாக வாழ நினைக்கும் அருமையான தாய்; அவங்க நேர்மைக்காக, உன்னை நாலு முறை மன்னிக்கலாம். போய் வேலையை கவனி,'' என்று சாவியை எடுத்து நீட்டினார்.
''இல்லீங்க சார்... நீங்க மன்னிச்சாலும் காரை ஓட்டற ஒவ்வொரு முறையும், எனக்கு மனசு உறுத்திகிட்டேயிருக்கும். எதார்த்தமாக அரை லிட்டர் பெட்ரோல் குறைஞ்சாலும், உங்க மனசுல மெல்லிசா ஒரு சந்தேகம் எம்மேல வரலாம். சங்கடங்களை தவிர்க்கணும்ன்னா நான் இங்கிருந்து போறது தான் சரி,''' என்று கும்பிட்டு வெளியேறினான் கோபி.கோபியை கோபமாக முறைத்தான் ஆறுமுகம்.''உன்னையெல்லாம் கொண்டு வந்து தொழில் கத்துக் தந்தேன் பாரு; என்னைச் சொல்லணும்டா,'' என்றான்.
''உங்கள குத்தம் சொல்ல மாட்டேன்ண்ணே... உங்க அனுபவ அடிப்படையில வழி காட்டினீங்க. அம்மா அதை விரும்பல; அவங்களுக்கு விருப்பமில்லாத வகையில, நான் கோடி ரூபா சம்பாதிச்சாலும், அவங்களை பொறுத்தவரை, அது தூசுக்கு சமம். நல்ல வகையில நாலு காசு சம்பாதிக்கறதைதான் அவங்க விரும்புறாங்க. அதன்படி நடந்து, அவங்க நம்பிக்கையை காப்பாத்துறது தானே ஒரு மகனோட கடமை; முடிஞ்சா என்ன வேற இடத்துல சேர்த்துவிடு,'' என்றான்.''என்னை காட்டிக் கொடுக்காம விட்டியே அது வரையில சந்தோஷம். தேவைப்பட்டா நான் சொல்லியனுப்புறேன்,'' என்றான்.லேசான மனதுடன் ஊரை நோக்கி நடைபோட்டான் கோபி.
எஸ்.கருணாகரன்

Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1