புதிய பதிவுகள்
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» கருத்துப்படம் 19/06/2024
by mohamed nizamudeen Yesterday at 7:44 pm

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 7:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by ayyasamy ram Yesterday at 5:18 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 10:17 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 18, 2024 10:07 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Jun 18, 2024 9:36 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 9:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:15 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Jun 18, 2024 8:19 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Jun 18, 2024 7:13 pm

» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm

» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm

» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm

» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:03 pm

» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:00 pm

» சிக்கல்கள் என்பவை…
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:57 pm

» வாக்குப் பதிவு இயந்திரத்திலே லைக் பட்டன் வைக்கணும்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:49 pm

» நல்ல இடமா பாத்து கட்டி வைக்கணும்!
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:48 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 1:23 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 18, 2024 1:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:53 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:21 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:04 pm

» திருப்பதி பெருமாளுக்கு கறிவேப்பிலையும் கனகாம்பரமும் ஆகாது ஏன்...?
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:46 am

» ஓவியத்தில் விந்தை --மாறியது புகைப்படமாக
by T.N.Balasubramanian Mon Jun 17, 2024 6:30 pm

» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by Dr.S.Soundarapandian Mon Jun 17, 2024 2:28 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அரிசியும் நோய் தீர்க்கும் Poll_c10அரிசியும் நோய் தீர்க்கும் Poll_m10அரிசியும் நோய் தீர்க்கும் Poll_c10 
53 Posts - 42%
heezulia
அரிசியும் நோய் தீர்க்கும் Poll_c10அரிசியும் நோய் தீர்க்கும் Poll_m10அரிசியும் நோய் தீர்க்கும் Poll_c10 
32 Posts - 25%
Dr.S.Soundarapandian
அரிசியும் நோய் தீர்க்கும் Poll_c10அரிசியும் நோய் தீர்க்கும் Poll_m10அரிசியும் நோய் தீர்க்கும் Poll_c10 
28 Posts - 22%
T.N.Balasubramanian
அரிசியும் நோய் தீர்க்கும் Poll_c10அரிசியும் நோய் தீர்க்கும் Poll_m10அரிசியும் நோய் தீர்க்கும் Poll_c10 
6 Posts - 5%
ayyamperumal
அரிசியும் நோய் தீர்க்கும் Poll_c10அரிசியும் நோய் தீர்க்கும் Poll_m10அரிசியும் நோய் தீர்க்கும் Poll_c10 
3 Posts - 2%
mohamed nizamudeen
அரிசியும் நோய் தீர்க்கும் Poll_c10அரிசியும் நோய் தீர்க்கும் Poll_m10அரிசியும் நோய் தீர்க்கும் Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
அரிசியும் நோய் தீர்க்கும் Poll_c10அரிசியும் நோய் தீர்க்கும் Poll_m10அரிசியும் நோய் தீர்க்கும் Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அரிசியும் நோய் தீர்க்கும் Poll_c10அரிசியும் நோய் தீர்க்கும் Poll_m10அரிசியும் நோய் தீர்க்கும் Poll_c10 
304 Posts - 50%
heezulia
அரிசியும் நோய் தீர்க்கும் Poll_c10அரிசியும் நோய் தீர்க்கும் Poll_m10அரிசியும் நோய் தீர்க்கும் Poll_c10 
179 Posts - 30%
Dr.S.Soundarapandian
அரிசியும் நோய் தீர்க்கும் Poll_c10அரிசியும் நோய் தீர்க்கும் Poll_m10அரிசியும் நோய் தீர்க்கும் Poll_c10 
58 Posts - 10%
T.N.Balasubramanian
அரிசியும் நோய் தீர்க்கும் Poll_c10அரிசியும் நோய் தீர்க்கும் Poll_m10அரிசியும் நோய் தீர்க்கும் Poll_c10 
26 Posts - 4%
mohamed nizamudeen
அரிசியும் நோய் தீர்க்கும் Poll_c10அரிசியும் நோய் தீர்க்கும் Poll_m10அரிசியும் நோய் தீர்க்கும் Poll_c10 
21 Posts - 3%
prajai
அரிசியும் நோய் தீர்க்கும் Poll_c10அரிசியும் நோய் தீர்க்கும் Poll_m10அரிசியும் நோய் தீர்க்கும் Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
அரிசியும் நோய் தீர்க்கும் Poll_c10அரிசியும் நோய் தீர்க்கும் Poll_m10அரிசியும் நோய் தீர்க்கும் Poll_c10 
3 Posts - 0%
JGNANASEHAR
அரிசியும் நோய் தீர்க்கும் Poll_c10அரிசியும் நோய் தீர்க்கும் Poll_m10அரிசியும் நோய் தீர்க்கும் Poll_c10 
2 Posts - 0%
Anitha Anbarasan
அரிசியும் நோய் தீர்க்கும் Poll_c10அரிசியும் நோய் தீர்க்கும் Poll_m10அரிசியும் நோய் தீர்க்கும் Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
அரிசியும் நோய் தீர்க்கும் Poll_c10அரிசியும் நோய் தீர்க்கும் Poll_m10அரிசியும் நோய் தீர்க்கும் Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அரிசியும் நோய் தீர்க்கும்


   
   

Page 1 of 2 1, 2  Next

avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Wed Sep 03, 2014 10:40 am

தென்னிந்திய மக்களின் மிக முக்கிய உணவுப்பொருள் அரிசி. நம்மில் பெரும்பாலானோருக்கு ஒரு வேளையாவது அரிசி சாதம் சாப்பிட்டே ஆகவேண்டும். அண்மைக்காலமாக அரிசிக்குப் பதில் அல்லது அரிசியைக் குறைத்துக்கொண்டு கோதுமையை அதிக உணவாகப் பயன்படுத்தும் பழக்கம் பெருக ஆரம்பித்திருக்கிறது. அரிசியை முழுமையாகத் தவிர்க்க வேண்டும் என்று சிந்திப்பதே தவறு. அகத்தியர் குணவாகடம், பதார்த்தகுண சிந்தாமணி போன்ற மருத்துவ நூல்களில் 25க்கும் மேற்பட்ட அரிசி வகைகள் மருந்தாகவும், உணவாகவும் பயன்படும் முறை விளக்கப்பட்டுள்ளது.

ஆதிச்சநல்லூர் அகழ்வாராய்ச்சியில் 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நெல் மற்றும் அரிசியின் பயன்பாடும் நம் முன்னோர்களிடையே இருந்ததற்கான சான்றுகள் கிடைத்துள்ளன. அரிசியையும் மற்ற தானியங்களையும் அவற்றின் தன்மைகளுக்கேற்ப எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்பதை தெரிந்து கொண்டு அதற்கேற்ப உணவாக்கிக் கொள்வது நல்லது. அரிசி என்றால், மேலோட்டமாய் புழுங்கல் அரிசி, பச்சரிசி, பாசுமதி அரிசி, சிகப்பரிசி இவைகளைத்தான் நம்மில் பலர் அரிசி என்று தெரிந்து வைத்திருக்கிறோம். இவைதவிர வெவ்வேறு சூழல்களில் வளரக்கூடிய பல்வேறு வகையான நெல் வகைகள் அந்தந்தச் சூழலின் மண்ணின் தன்மையையும் சிறந்த மருத்துவ குணங்களையும் கொண்டிருப்பதை நாம் அறிந்திருக்கவில்லை.

கருங்குறுவை என்றொரு அரிசி கறுப்பு நிறத்திலும் செங்குறுவை என்றொரு அரிசி சிகப்பு நிறத்திலும் இருக்கும். இவைபோல வண்ண அரிசி வகைகளும் நம் பாரம்பரியத்தில் இருந்தன. அரிசியில் மட்டுமல்ல, எந்தப்பொருளிலுமே நிறமிகளிருந்தால் அவற்றில் ஆன்டி ஆக்சிடென்ட் தன்மை நிறைவாக இருக்கும் என்பதை நாம் மனதில் கொள்ள வேண்டும். அரிசியின் மேல் இருக்கும் தவிடு, உமி, அன்னக்காடி இவை எல்லாவற்றிலும் நல்ல மருத்துவ குணங்களும் உடலுக்குத் தேவையான சத்துக்களும் நிறைந்துள்ளன. பருமனாக இருக்கும் அரிசியில் நார்ச்சத்து அதிகம் இருக்கும். இவ்வகை பருமனான அரிசி சமைக்க அதிக நேரம் எடுக்கும் என்பதும் அதேபோல் செரிமானத்துக்கும் அதிக நேரம் எடுத்துக்கொள்ளும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இவை ரத்தச் சர்க்கரையைக் கட்டுப்படுத்தக் கூடிய தன்மைக் கொண்டவை உதாரணத்துக்கு மணிச்சம்பா அரிசியை கூறலாம். இதுபோல், மாப்பிள்ளைச் சம்பா அரிசியில் சாதம் சமைத்து மதிய உணவு சாப்பிட்டால் இளவட்டக்கல்லைத் தூக்கும் அளவுக்கு உடல் உறுதியும், வலிமையும் பெறலாம். புரதச்சத்து, நார்ச்சத்து, தாதுச்சத்து, உப்புச்சத்து எல்லாம் இந்த அரிசியில் நிரம்ப உள்ளன. விஷமுறிவுக்கு கருங்குருவை, பாலூட்டும் தாய்மார்களுக்கு நீளச்சம்பா, பொலிவான தோற்றத்திற்கு அன்னம் அழகி, வாதத்தை போக்க (கெட்ட நீரை போக்க) சீரகச்சம்பா உள்ளிட்ட அரிசிகள் உள்ளன. வயிறு தொடர்பான பிரச்னைகள் இருந்தால் பச்சரிசிச் சாதம் சாப்பிடக்கூடாது.

கைக்குத்தல் அரிசி என்பது தவிடு பிரியாமல் இருக்கக்கூடியது. இதில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. கூடவே ஆன்ட்டி ஆக்சிடென்ட் தன்மையும் உள்ளது. புழுங்கல் அரிசி எளிதில் ஜீரணமாகும். மலச்சிக்கல் ஏற்படுத்தாது. அரிசி சாதம் மட்டுமல்ல அரிசிப் பொரியும் பித்தத்தைச் சமப்படுத்தக்கூடியது தான். அவல் வாதத்தைச் சமப்படுத்தும் மாவுச்சத்து மிகுந்தது. அரிசியை முற்றிலுமாகத் தவிர்க்காமல் அதனூடாகவே மற்ற பல தானியங்களையும் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டியது அவசியம்.

avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Wed Sep 03, 2014 10:45 am

சர்க்கரை நோய் வராமல் தடுக்க 7 கட்டளைகள்
சர்க்கரை ஆரம்ப நிலையில் உள்ள போது, சில முன்னேற்பாடுகளை கடைப்பிடித்தால் சர்க்கரை நோய் வராமல் தடுக்கலாம். இல்லாவிட்டால் 5 ஆண்டில் சர்க்கரை நோய் வந்து விடும். சர்க்கரை நோய் வராமல் தடுப்பது எளிது. அதற்கு 7 கட்டளைகளை கடைப்பிடிக்க வேண்டும் என்கின்றனர் மருத்துவர்கள்.

1. வாரத்திற்கு குறைந்தபட்சம் 3 நாளாவது குறைந்தபட்சம் 30 நிமிடமாவது கையை வீசி, வேகமாக நடக்க வேண்டும். இதனால் உடலில் சேரும் சர்க்கரை குறையும்.

2. சிகரெட் குடிப்பவர்களுக்கு வழக்கமாக வரக்கூடிய நோய்கள் என்று சில இருந்தாலும், கூடுதலாக சர்க்கரையின் அளவு ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனால் சிகரெட் குடிப்பதை விட வேண்டும்.

3. பெரும்பாலானோர் மாலை முதல் இரவு வரை அமர்ந்து டி.வி.பார்க்கின்றனர். இதனால் உடலுக்கு உழைப்பு கிடைப்பதில்லை. அப்போது நொறுக்கு தீனி உண்கின்றனர். இதனால் உடலுக்கு சர்க்கரை நோய் வரும். மாலை முழுவதும் விளையாட்டு என்று கடைப்பிடிக்க வேண்டும்.

4. நாம் சமையலுக்கு பயன்படுத்தும் எண்ணெய் வகைகள் ரத்தத்தில் சர்க்கரை அளவை கூட்டுகிறது. ரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தக்கூடிய, நல்ல கொழுப்பை உருவாக்கக்கூடிய எக்ஸ்ட்ரா வர்ஜின் ஆலிவ் ஆயிலை சமையலுக்கு பயன்படுத்த வேண்டும். அல்லது எதாவதொரு வகையில் தினசரி 5 மில்லி ஆலிவ் ஆயில் உடலில் சேர்க்க வேண்டியது கட்டாயம்.

5.அரிசி, சர்க்கரை, உப்பு, மைதா, சாதம், தேங்காய், பால், தயிர் உள்ளிட்ட வெள்ளை உணவு பொருள்களை தவிர்க்க வேண்டும். பேக்கரியில் விற்கும் எல்லா பொருள்களும் சர்க்கரையை கூட்டக்கூடியது. அதையும் தவிர்க்க வேண்டும்.இதில் அரிசி சாதம் முற்றிலுமாக நீக்க தேவையில்லை ஒரு வேளை மட்டும் அளவை குறைத்து உண்ணலாம்

6. மூன்று வேளை சாப்பிடுவதை 5 வேளையாக மாற்றி கொள்ள வேண்டும். 3 வேளை சாப்பிடும் அளவை 5 வேளைகளில் சாப்பிட வேண்டும்.

7. தினசரி 25 முதல் 30 கிராம் வெந்தயத்தை உணவின் மூலம் உடலில் சேர்க்க வேண்டும். அது சர்க்கரையின் அளவு கூடாமல் தடுக்கும். வால்நட், பாதாம்பருப்பு கொஞ்சம், நிறைய காய்கறிகள், பப்பாளி, ஆரஞ்சு, ஆப்பிள் ஆகிய பழங்கள் ஆகியவற்றை உணவில் சேர்க்க வேண்டும். இவையெல்லாம் கடைப்பிடித்தால் சர்க்கரை நோய் வராது. சர்க்கரை நோய் எந்த நிலையில் உள்ளது என்பதை கண்டறிந்து, அதற்கான ஆலோசனையும், சிகிச்சையும் பெறுவது முக்கியம்.


avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Wed Sep 03, 2014 10:48 am

காலமிது... காலமிது கண்ணுறங்கு மகனே..
அரிசியும் நோய் தீர்க்கும் Ht2759
இன்றைய உலகில் பலருக்கு தூக்கமின்மை என்பது ஒரு வியாதியாகவே இருந்துவருகிறது. இவ்வியாதிக்கு மருந்தை தேடுபவர்கள், பாட்டி கூறும் வைத்தியம் முதல் நவீன மருத்துவர்கள் கூறும் சிகிச்சை முறைகள் வரை அனைத்தையும் ஏற்றுக்கொள்ளும் முடிவுக்கு வருகின்றனர். உடலின் ஒவ்வொரு செயல்பாட்டிற்கும் ஆணையிட பல்வேறு திரவங்கள் மற்றும் சுரப்பிகள் செயல்பட்டுவருகிறது. இதில் நமக்கு தூங்க கட்டளையிடும் ஒரு வேதியியல் பொருள் மெலடோனின். இதன் குறைபாட்டாலேயே இன்று பலர் தூக்கமின்மை வியாதிகளால் தவித்துவருகின்றனர். மருத்துவத்துறையில் உள்ள தூக்க மாத்திரைகளில் இது கட்டாயம் இருக்கும்.

ஆனால் யாரோ தயாரித்த வேதியியல் பொருளை சாப்பிட்டு தூங்க முயற்சி செய்யும் நாம், இயற்கை அளித்துள்ள வரப்பிரசாதங்களை பயன்படுத்த தவறிவருகிறோம். ஆதிகாலங்களில் ஒவ்வொரு உணவுப்பண்டமும் மனித உயிருக்கு வலுவூட்டும் விதமாக இருந்தது. ஆனால் நாகரீகம் மாறிய பின்னர் இயற்கையாக நமக்கு கிடைத்த சத்துள்ள உணவுகளை கூட, ருசிக்காக பல்வேறு வேதியியல் பொருட்களை சேர்த்து சத்தில்லாத உணவாகத்தான் உண்டு வருகிறோம். தூக்கம் வராமல் தவிக்கும் மனிதர்களுக்காக இதோ 5 வரப்பிரசாதங்கள் தயாராக உள்ளது. வாருங்கள் இந்த வரப்பிரசாதங்களை பற்றி தெரிந்துகொள்வோம். தூக்கம் வராமல் தவிப்பவர்கள் இனி மாத்திரையை தேடி ஓடாமல், கீழ்கண்ட உணவு வகைகளை சாப்பிட்டு நன்றாக உறங்குங்கள்.

தூக்கத்தின் உறைவிடம் செர்ரி:

மனிதன் தூங்குவதற்கு மூலகாரணமாக உள்ள மெலடோனின் வேதியியல் பொருள் செர்ரி பழத்தில் அதிகம் உள்ளது. இதனால் இரவில் தூங்க செல்வதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன் 2 முதல் 5 செர்ரி பழங்களை சாப்பிட்டால், அதில் உள்ள மெலடோனின் திரவம் ரத்தத்தில் கலந்து மூளைக்கு சென்று தூக்கம் வருவதற்காக சாத்தியக்கூறுகளை அதிகரிக்கும்.

வாழைப்பழம்:

இதில் இயற்கையிலேயே பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் ஆகியவை அதிகம் உள்ளது. இது மட்டுமில்லாமல் எல்ட்ரிப்டோபன் என்ற அமினோ அமிலமும் உள்ளது. வாழைப்பழம் சாப்பிட்ட பின்னர் அமினோ அமிலம் ரத்தத்தில் கலந்து எச்டிபி என்ற வேதிப்பொருளாக மாறி மூளைக்கு செல்கிறது. பின்னர் அதில் நடக்கும் மாற்றங்களால் செரடோனின் மற்றும் மெலடோனினாக மாறி தூக்கத்தை வரவழைக்கிறது.

ஓட்ஸ் கஞ்சி:

இது ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை அதிகரித்து, அதன் மூலம் இன்சுலீன் ஹார்மோன் சுரப்பை அதிகப்படுத்துகிறது. இன்சுலின் மந்த நிலையை உருவாக்கி நம்மை தூக்கத்தில் ஆழ்த்துகிறது. ஓட்ஸ் மற்றும் டோஸ்ட் இரண்டுமே இன்சுலின் சுரப்பதன் மூலம் தூக்கத்தை வரவழைக்கிறது.

சூடான பால்:

மேற்கண்ட அனைத்தை பற்றி நமக்கு பெரிய அளவில் தெரியாவிட்டாலும் நாம் தினமும் குடிக்கும் பாலை பற்றி சற்று தெரிந்துகொள்வோம். வாழைப்பழத்தில் உள்ளதை போலவே எல்ட்ரிப்டோபன் அமினோ அமிலம் பாலில் அதிகம் உள்ளது. இதனால் பாலை குடித்தவுடன் அது ரத்தத்தில் கலந்து செரடோனின் வேதிபொருளாக மாறி உறக்கத்தை வரவழைக்கின்றன. மேலும் கால்சியமும் உறக்கத்தை அதிகரிக்க ஏதுவானது. பாலில் இது அதிகம் உள்ளதால் இதை குடித்தால் தூக்கம் வருவதற்கான மூலக்கூறுகள் அதிகமாகும்.

டோஸ்ட்:

மாவுச்சத்துள்ள உணவு வகைகள் அனைத்துமே தூக்கம் வருவதற்கு ஏதுவானதாகும். மாவு சத்துள்ள உணவுகள் அனைத்துமே இன்சுலின் ஹார்மோன் சுரப்பதை அதிகரிக்கும் தன்மையுடையது. இன்சுலின் தூக்கத்தை தூண்டும் ஒரு வேதிப்பொருளாகும். மாவுச்சத்துள்ள உணவுகளில் நாம் சாப்பிடும் பிரட் டோஸ்ட் முக்கியமானதாகும். இதை நாம் பெரும்பாலும் காலை நேர உணவாகவே பயன்படுத்தி வருகிறோம். ஆனால் இரவு நேரங்களில் இதை சாப்பிடுவதன் மூலம் இதில் உள்ள இன்சுலின் ஹார்மோன்கள் ஒருவித மந்த நிலையை ஏற்படுத்தி தூக்கம் வரவழைக்கும்.

avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Wed Sep 03, 2014 10:51 am

நீங்கள் எவ்வளவு உப்பு சாப்பிடுகிறீர்கள்?
அரிசியும் நோய் தீர்க்கும் Ht2704
ஷாக் தரும் சால்ட் வில்லன்

“நாலு காபி’’ என ஆர்டர் சொன்னதுமே, எதிரில் இருப்பவர்களிடம் ‘‘ஷுகர் நார்மல்தானே?’’ எனக் கேட்கும் பழக்கம் நம்மிடம் வந்துவிட்டது. ஸோ, சர்க்கரை விஷயத்தில் நாம் கொஞ்சம் உஷார்தான். ஆனால், உப்பு?‘‘உங்களுக்கு உப்பு எவ்வளவு போடணும்?’’ என்ற கேள்வியே நமக்கு பரிச்சயமில்லை. ஆனால், சமீபத்தில் ‘உலக உயர் ரத்த அழுத்த நோய் நாளை’க் கடைப்பிடித்த உலக சுகாதார நிறுவனம், உலக அளவில் ஏற்படுகிற இறப்புகளுக்கு முக்கியமான காரணிகளில் ஒன்றாக உப்பைக் குறிப்பிட்டிருக்கிறது. ‘உப்புதானே... என்ன செய்துடும்?’ என்ற நம் அசட்டை மனப்போக்கை சட்டை பிடித்து உலுக்குகிறது இந்தத் தகவல்.

‘‘எல்லோரது உடம்புக்கும் உப்பு தேவை. ஆனால், அது கொஞ்சமும் அளவு தாண்டக் கூடாத அமிர்தம். அந்தக் கால மனிதர்கள் உணவில் நிறைய உப்பு எடுத்துக்கொண்டார்கள். ஆனால், உடல் உழைப்பால் வியர்வை வழியாக அதை வெளியேற்றினார்கள். இன்றைய ஏசி லைஃப் ஸ்டைலில் அந்த உப்பின் அளவை குறைக்க வேண்டும். ஆனால், நவீன உணவுகள் உப்புக் கரிக்காத வகையில் நூதனமான உப்பு வகைகளை நம் உடலுக்குள் திணிக்கின்றன’’ என ஷாக் துவக்கம் கொடுத்தார் சென்னையைச் சேர்ந்த டயட்டீஷியனான தாரிணி கிருஷ்ணன்.

‘‘நம் உடலின் ஒவ்வொரு ரத்த செல்களுக்கு உள்ளேயும் பொட்டாஷியம் எனும் உப்பு உள்ளது. செல்களுக்கு வெளியே சோடியம் எனும் உப்பு உண்டு. இந்த இரண்டுமே சமமான அளவுகளில் இருந்தால்தான் ரத்த ஓட்டம் சீராக இருக்கும். அதிகம் உப்பு சேர்ப்பதால் இந்த சமன்பாடு கெட்டு, ரத்தம் சரியாகப் பாயாமல் போகும். இதைத்தான் ரத்த அழுத்தம் என்கிறோம். ரத்த அழுத்தம் வ ந்துவிட்டால், அது இதய நோய்களையும், சிறுநீரகப் பிரச்னைகளையும், ஸ்ட்ரோக்கையும் காலப் போக்கில் அழைத்து வந்துவிடும். ஆக, உப்பு விஷயத்தில் கவனமாய் இருக்க வேண்டியது மிக மு க்கியம்.

உப்பென்றால் ஏதோ தயிர் சாதத்தில் நாமாக போட்டுக் கொள்வது மட்டுமே என பலர் நினைக்கிறார்கள். உண்மையில் எல்லா வித உப்புகளையும் குறைத்துப் பயன்படுத்த வேண்டும். இன்றைய பாக்கெட் உணவுகள் நீண்ட நாள் கெட்டுவிடாமல் இருப்பதற்கான பிரிசர்வேட்டிவாக சோடியம் பென்சொயேட் சேர்க்கப்படுகிறது. ருசியைக் கூட்டுவதற்காக மோனோசோடியம் க்ளூடமேட் போன்ற உப்புப் பொருட்கள் சேர்க்கப்படுகின்றன. பேக்கிங் சோடா, ஆப்ப சோடா போன்றவை மிருதுத் தன்மைக்காக சேர்க்கப்படுகின்றன. இவை எல்லாமே உப்புதான். ஒரு உணவுப் பொருளில் இருக்க வேண்டிய உப்பின் அளவை இவை கண்ணுக்குத் தெரியாமல் கூட்டி விடுகின்றன.

சாதாரணமாக ஒரு நாளைக்கு ஒரு மனிதன் ஒரு டீ ஸ்பூன், அதாவது 5 கிராம் உப்பைத்தான் உண்ண வேண்டும் என்று உலக சுகாதார நிறுவனம் சொல்கிறது. ஆனால் பாக்கெட் உணவுகளிலும், பதப்படுத்தப்பட்ட உணவுகளிலும் உள்ள உப்பின் அளவு, இதைவிட பத்து மடங்கு அதிகம். சாதாரணமாக நாம் வீட்டில் செய்யும் 200 மில்லி கிராம் சூப்பில் 2 மில்லி கிராம் உப்புதான் இருக்கும். ஆனால், பாக்கட்டுகளில் விற்கப்படும் 200 மில்லி கிராம் சூப்புகளில் 20 மில்லி கிராம் உப்பு இருக்கும். காரணம், இவற்றில் இருக்கும் பல வகையான உப்புச் சேர்க்கைகள்தான்.

பிளட் பிரஷர் இருக்கும் நோயாளிகள் மருத்துவரை அணுகி சிகிச்சை எடுப்பது இந்தியாவில் குறைவாக இருக்கிறது என்று ஒரு புள்ளிவிபரம் சொல்கிறது. அப்படியே டாக்டர்களிடம் போனாலும் ‘ஊறுகாயை சாப்பிடாதே’, ‘வீட்டில் சாப்பிடும் உணவில் உப்பை அதிகம் சேர்க்காதே’ என்றுதான் அட்வைஸ் செய்வார்கள். ‘பாக்கெட் உணவை சாப்பிடாதே’, ‘ரெடிமேட் உணவைத் தொடாதே’ என்று யாரும் சொல்வதில்லை. உப்பு பற்றிய விழிப்புணர்வு இங்கு குறைவாகவே இருக்கிறது’’ என்றவர், உப்பின் தரம் இன்று கவலைக்கிடமாக இருப்பதை சுட்டிக் காட்டினார்.

‘‘அன்று நாம் பயன்படுத்திய கல் உப்பு உண்மையிலேயே சிறந்தது. அதில் நிறம் குறைவாக இருந்தாலும் எல்லா வித சத்துக்களும் நிறைந்திருந்தன. இன்று வெள்ளையாக எதுவும் இருக்கவேண் டும் என்பதற்காக பெரிய நிறுவனங்கள் விற்கும் தூள் உப்பைப் பயன்படுத்தி வருகிறோம். அவர்கள் கல் உப்பை வெள்ளையாக்குகிறேன் பேர்வழி என்று உப்பில் உள்ள பல சத்துக்களை வெளியேற்றி விடுகிறார்கள். சத்தும் இல்லை அளவும் இல்லை என்றாகிவிட்டது நம் உப்பு டயட்!’’ என்றார் அவர் வேதனையோடு... உப்புப் பெறாத விஷயத்துக்கெல்லாம் கவலைப்படுவதை விட்டுவிட்டு, உப்புக்காக கவலைப்படுவோம்!

உப்பு எவ்வளவு!

ஒரு நாளில் ஒருவர் சாப்பிட வேண்டிய உப்பின் அளவு ஐந்து கிராம் என்றால், ஒரு சராசரி இந்தியர் 12 முதல் 18 கிராம் உப்பு சாப்பிடுகிறார் என்கிறது ஆய்வு ஒன்று. இந்த மாற்றத்துக்கான காரணகர்த்தா, ‘ஃபாஸ்ட்ஃபுட் உணவு’! பாக்கெட் உணவுகள் மூலம் உடலில் மறைமுக உப்பு சேர்வதே விபரீதங்களுக்கு பிள்ளையார் சுழி போடுகிறது. உலக மக்கள் இப்போது சாப்பிடும் உப்பில் 30 சதவீதத்தை 2025ம் ஆண்டுக்குள் குறைக்க வேண்டும் என உலக சுகாதார நிறுவனம் இலக்கு நிர்ணயித்துள்ளது.

ஐரோப்பிய நாடுகளில் பாக்கெட் உணவுகளின் மேற்புறத்தில், அதில் எவ்வளவு உப்பு இருக்கிறது என்பதையும் குறிப்பிட்டாக வேண்டும். இந்தியாவில் அப்படி சட்டம் இல்லை. இங்கே கலோரி, புரோட்டீன், சர்க்கரை, கொழுப்பு மற்றும் கார்போஹைட்ரேட் அளவை மட்டும் குறிப்பிட்டால் போதும். ஜார்ஜ் இன்ஸ்டிடியூட் என்ற தொண்டு நிறுவனம், இந்தியாவில் விற்கப்படும் 7124 உணவுகளை ஆய்வு செய்தது. இவற்றில் 73 சதவீத உணவு பாக்கெட்டுகளில் ‘உப்பு அளவு’ குறிப்பிடப்படவில்லை. ‘‘இதையும் கட்டாயமாக்க வேண்டும். விலை மற்றும் காலாவதி தேதி பார்ப்பது போல உப்பு அளவு பார்த்து பொருளை வாங்க வேண்டும்’’ என்கிறார்கள் இந்த நிறுவனத்தினர்!

உடலில் உப்பைக்கூட்டும் 10 உணவுகள்!

* சமையல் சோடா
* சாஸ்
* ரெடிமேட் இறைச்சி மற்றும் மீன்
* பாலாடைக்கட்டி
* ஊறுகாய்
* இன்ஸ்டன்ட் சூப்
* உப்பிட்டு வறுத்த பயிறுகள்
* ஸ்நாக்ஸ் அயிட்டங்கள்
* ஃபாஸ்ட் ஃபுட் உணவுகள்
* பாக்கெட்டில் அடைத்த காய்கறிகள்


avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Wed Sep 03, 2014 10:53 am

வேப்பிலையை வறுத்து சூடோடு தலைக்கு வைத்து தூங்கினால் காய்ச்சல் குணமடையும். மிளகு மற்றும் சீரகம் சேர்த்து தினமும் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் மலேரியா காய்ச்சல் குணமாகும். கோரை கிழங்கை கழுவி சுத்தம் செய்து நீர்விட்டு காய்ச்சி குடித்து வந்தால் அனைத்து வகையான காய்ச்சலும் சரியாகும். நெல்லிக்காய் லேகியம் சிறு உருண்டையாக செய்து தினமும் காலை மற்றும் மாலை சாப்பிட்டு வந்தால் எலும்புக் காய்ச்சல் குணமடையும்.

அகத்தி மரப்பட்டையை காஷாயமாக காய்ச்சி குடித்தால் அம்மை காய்ச்சல் குணமாகும். ஓமவல்லி இலை காம்பு கஷாயம் மற்றும் ஆடாதோடா இலை கஷாயம் குடித்தால் சளிக்காய்ச்சல் குணமாகும். பற்பாடகம், நிலவேம்பு, சுக்கு, சீரகம், அதிமதுரம் உள்ளிட்டவைகளை சேர்த்து கஷாயமாக காய்ச்சி குடித்தால் நச்சு காய்ச்சல் தீரும். புன்னைப்பூவை உலர்த்தி பொடியாக்கி, ஒரு சிட்டிக் பவுடரை தினமும் காலை மற்றும் மாலையில் சாப்பிட்டால் டைபாய்டு காய்ச்சல் குணமாகும்.

முருங்கை பட்டையின் சாறு எடுத்து ரசமாக்கி சாப்பிட்டால் குளிர் காய்ச்சல் தீரும். நொச்சி இலை, மிளகு, லவங்கம், பூண்டு உள்ளிட்டவைகளை மென்று விழுங்கி வந்தால் ஆஸ்துமா நோய் குணமாகும். 100 கிராம் உருளையில் 100 மி.கி. கோலின் உள்ளது. கோலின் என்பது மூளையிலுள்ள மிக முக்கியமான நியூரோ டிரான்ஸ்மீட்டர். கரைகிற மற்றும் கரையாத நார்ச்சத்து கொண்ட தால் கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்துகிறது.

வெங்காயத்தை வதக்கி வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் நரம்பு தளர்ச்சி குணமாகும். வெங்காயத்தை வதக்கி தேன் விட்டு இரவில் சாப்பிட்டு பின்னர் பசும்பால் குடித்தால் ஆண்மை பெருகும். படை, தேமல், மீது வெங்காயத்தின் சாற்றை பூசி வந்தால் படை மற்றும் தேமல் மறைந்து விடும். திடீரென மயக்கம் ஏற்படும் போது வெங்காயத்தை நசுக்கி முகர்ந்தால் மயக்கம் தெளியும். வெங்காய சாற்றையும், தேனையும் கலந்து சாப்பிட்டால் சீதபேதி நிற்கும். வெங்காயத்தை ரசத்தை நீர் கலந்து குடித்தால் நன்கு தூக்கம் வரும்.

வெங்காயம், அவரை இலை ஆகிய இரண்டையும் சேர்த்து சாப்பிட்டால் வந்தால் ஆசன கடுப்பு நீங்கும். கண்களுக்கு கண்ணாடி போடாமல் இருக்க கேரட் அதிகமாக சாப்பிடவேண்டும். வயிற்றில் அமிலம் காரணமாக புளியேப்பம், பசி மந்தம் ஏற்பட்டால் கேரட்டை துருவி பச்சடி செய்து சாப்பிடலாம். உடலில் உள்ள கொழுப்பை குறைக்கும் சக்தி கேரட்டிற்கு உண்டு. தொற்று நோய் நமக்கு வராமல் தடுக்கிறது. சிறுநீர் சம்பந்தமான கோளாறுகளை சரிபடுத்தும் சக்தி கேரட்டிற்கு உள்ளது. உருளைக்கிழங்கில் உள்ள ரிuளீஷீணீனீவீஸீமீ ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துகிறது.

வைட்டமின் பி 6, இதய நோய்கள் குறைக்கிறது. பி 6, மாரடைப்பு மற்றும் பக்கவாத அபாயங்களைக் குறைக்கிறது. மன அழுத்தத்தை பேலன்ஸ் செய்ய உதவுகிறது. பேக் செய்யப்பட்ட 110 கிராம் உருளைக்கிழங்கில் 21 சதவிகித வைட்டமின்கள் பாதுகாக்கப்படுகின்றன. எனவே, உருளைக்கிழங்கின் நன்மைகளைப் பெற பேக்கிங் முறையே சிறந்தது. மிக முக்கியமான அமினோ அமிலமான லைசீன் கொண்டது.

avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Wed Sep 03, 2014 10:56 am


அற்புதமான 6 உணவுகள்
அரிசியும் நோய் தீர்க்கும் Ht2584
ஆப்பிள்:

அமெரிக்காவில் ஆப்பிள் தொடர்ந்து சாப்பிடும் 34 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்களை கிட்டத்தட்ட 20 ஆண்டுகள் தொடர்ந்து கண்காணித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில் இந்தப் பெண்களுக்கு இதயம் தொடர்பான நோய்கள் வருவதற்கான வாய்ப்பு பெருமளவு குறைந்ததைக் கண்டறிந்தனர். ஆப்பிள், எல்.டி.எல். என்ற கெட்ட கொழுப்பைக் குறைக்கிறது. இதில் அதிக அளவில் ஆன்டிஆக்சிடன்ட் உள்ளது. இந்த ஆன்டிஆக்சிடன்ட்கள் திசுக்களைப் பாதிக்கும் ரசாயன மூலக்கூறுகளை எதிர்த்துப் போராடி திசுக்கள் சேதம் அடைவதைத் தடுக்கின்றது. இதனால் திசுக்கள் விரைவாக முதிர்வடையும் தன்மை குறைவதுடன், நோய்கள் வராமலும் தடுக்கப்படுகிறது.

பாதாம்:

வைட்டமின் ஈ மற்றும் நல்ல கொழுப்பு நிறைந்தது. இரும்பு, கால்சியம், மக்னீசியம் போன்ற தாது உப்புகள், நார்ச்சத்துகள் ஆகியவையும் இதில் அதிக அளவில் உள்ளன. நாள் ஒன்றுக்கு மூன்று பாதாம் சாப்பிட்டு வந்தால் உடலில் உள்ள நல்ல கொழுப்பின் அளவு சீராக இருக்கும். இதில் உள்ள தாமிரம் மற்றும் மக்னீசியம் உடலுக்கு ஆற்றலை அளிக்கும். பாதாமில் ஃபோலிக் அமிலம் அதிகம் உள்ளது. இது ஆரோக்கியமான செல் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும்.

எலுமிச்சை:

தினமும் எலுமிச்சைச் சாறு குடிப்பது என்பது வெறும் தினசரி வைட்டமின் சி தேவையை 100 சதவிகிதம் பூர்த்தி செய்வது மட்டுமல்ல, நல்ல கொழுப்பான ஹெச்.டி.எல். அளவை அதிகரிக்கவும் உதவும். மேலும், இது எலும்பை உறுதிப்படுத்தும். எலுமிச்சையில் உள்ள சிட்ரஸ், திசுக்கள் வீக்கம் அடையும் பிரச்னையைச் சரிசெய்வதுடன் புற்றுநோய் செல்களின் வளர்ச்சியையும் தடுக்கும்.

பூண்டு:

நாம் அன்றாடம் சமையலில் பயன்படுத்தும் ஒரு பொருள். உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை பெருகச் செய்வதுடன், புற்றுநோய் செல்களின் வளர்ச்சியையும் தடுக்கும். இது எல்.டி.எல். எனப்படும் கெட்ட கொழுப்பு அளவைக் குறைத்து இதயத்தைப் பாதுகாக்கும். மேலும் கொழுப்பையும் கட்டுப்படுத்தும். இதில் உள்ள அலிசின்( ணீறீறீவீநீவீஸீ )உயர் ரத்த அழுத்தத்தைக் குறிப்பிடத் தகுந்த அளவில் குறைக்கிறது. கல்லீரலில் கொழுப்புப் படிவதைத் தடுக்கும் ஆற்றல் பூண்டுக்கு உண்டு.

டார்க் சாக்லேட்:

குறைந்த அளவில் டார்க் சாக்லேட் அல்லது கறுப்பு சாக்லேட்டை வாரத்தில் இரண்டு அல்லது மூன்று முறை எடுத்துக்கொள்வது உயர் ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தும். ரத்த ஓட்டத்தைச் சீராக்கும், ரத்தம் கட்டிப்போகும் பிரச்னையைத் தவிர்க்கும். ஆன்டிஆக்சிடன்ட் நிறைந்தது. இதில் உள்ள தாமிரம் மற்றும் பொட்டாசியம் தாது உப்புகள் பக்கவாதம், இதயம் சம்பந்தப்பட்ட நோய்களில் இருந்து காக்கும். இரும்புச் சத்து மிகுதியாக உள்ளதால் ரத்தசோகை பிரச்னை உள்ளவர்கள் இதைச் சாப்பிடலாம். மேலும் உயர் ரத்த அழுத்தம், டைப் 2 சர்க்கரை நோய் வராமல் தடுக்கும் ஆற்றல் டார்க் சாக்லேட்டுக்கு உண்டு.

சோயாபீன்:

சோயாபீனை தாவர இறைச்சி என்று சொல்லலாம். அந்த அளவுக்கு அதில் புரதச் சத்து உள்ளது. உடலில் புரதச் சத்து குறையும்போது நோய் எதிர்ப்பு சக்தி குறைவு, சோர்வு போன்றவை ஏற்படுகிறது. இந்தப் பிரச்னையைத் தவிர்க்கும் ஆற்றல் சோயாபீனுக்கு உள்ளது. சோயாபீனில் உள்ள லெசிதின்
(lecithin )என்ற வேதிப் பொருள் கொழுப்பில் கரையக்கூடிய வைட்டமின்களை எளிதில் கிரகித்து திசுக்கள் மற்றும் உறுப்புகளை வலுப்படுத்தும். மேலும், இது கொழுப்பு அளவைக் குறைத்து, வளர்ச்சிதை மாற்றப் பணிகளை மேம்படுத்தும். ரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்க உதவுகிறது. அதே நேரத்தில் இது நல்ல கொழுப்பை எதுவும் செய்வதில்லை!

avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Wed Sep 03, 2014 10:57 am

துள்ளும் இளமைக்கு நடைபயிற்சி
அரிசியும் நோய் தீர்க்கும் Ht2612
காடுகளில் வாழ்ந்த மனிதன் இப்போது கட்டிடத்திற்குள் வாழும் நிலை உள்ளது. உடல் இயக்கம் என்பது 90 சதவிகிதம் குறைந்து விட்டது. இது நீரழிவு, ரத்த அழுத்தம், உடல்பருமன் என பல்வேறு கோளாறுகளுக்கு காரணமாகிறது. இவற்றை தவிர்க்க உடற்பயிற்சி அவசியமாகும். யோகா, நடைப்பயிற்சி போன்ற எளிய பயிற்சிகள் கூட போதுமானவை. அதுவும் 40 வயதுக்கு மேல் அனைவரும் நடைபயிற்சி மேற்கொள்வது நல்லது.

நடைபயிற்சியின் பலன்கள் குறித்து சமீபத்தில் ஒரு ஆய்வு நடத்தப்பட்டது. 70 வயது முதல் 89 வயது வரையிலான சுமார் 1500 முதியவர்களிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. தினமும் 20 நிமிடம் நடைபயிற்சி மேற்கொள்ளும் முதியவர்கள், நடைபயிற்சி மேற்கொள்ளாத முதியவர்கள் என இரு பிரிவாக பிரிக்கப்பட்டு அவர்களிடம் ஆய்வு நடத்தப்பட்டது.

நடைபயிற்சியின் பலன்கள் குறித்து சமீபத்தில் ஒரு ஆய்வு நடத்தப்பட்டது. 70 வயது முதல் 89 வயது வரையிலான சுமார் 1500 முதியவர்களிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. தினமும் 20 நிமிடம் நடைபயிற்சி மேற்கொள்ளும் முதியவர்கள், நடைபயிற்சி மேற்கொள்ளாத முதியவர்கள் என இரு பிரிவாக பிரிக்கப்பட்டு அவர்களிடம் ஆய்வு நடத்தப்பட்டது. ஆய்வு முடிவுகள் வியக்கத்தக்க வகையில் இருந்தன. தினமும் குறைந்தது 20 நிமிடம் நடைபயிற்சி மேற்கொண்ட முதியவர்கள் யார் உதவியும் இன்றி நீண்டதூரம் நடக்கும் திறனுடன் இருந்தனர். ஆனால் நடைபயிற்சி மேற்கொள்ளாத முதியவர்களின் திறன் குறைந்திருந்தது. அவர்களால் பிறர் உதவியின்றி நடக்க முடியவில்லை.

அவர்களின் கால்கள், உடல் உறுப்புகள் வலு குறைந்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. சிலர் நடமாட முடியாமல் படுக்கையில் இருக்கும் நிலை இருந்தது. எனவே தினமும் அருகில் உள்ள பூங்காக்கள், மைதானங்களில் நடைபயிற்சி மேற்கொள்ளலாம். அல்லது வீட்டை சுற்றி நடக்கலாம்.
வீட்டு மொட்டை மாடிகளில் கூட நடக்கலாம். தினமும் அருகில் உள்ள கோயிலுக்கு சென்று வருவதை பழக்கப்படுத்திக் கொள்லலாம். இது முதியவர்கள் உடல், மனம் ஆரோக்கியத்துடன் உற்சாகமாக இருக்க வழி வகுக்கும்.

M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Wed Sep 03, 2014 12:14 pm

அனைத்தும் அரிசியும் நோய் தீர்க்கும் 3838410834
M.M.SENTHIL
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் M.M.SENTHIL



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Sep 03, 2014 2:40 pm

நல்ல தகவல் நன்றி புன்னகை



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Wed Sep 03, 2014 2:42 pm

அரிசியும் நோய் தீர்க்கும் 103459460 அரிசியும் நோய் தீர்க்கும் 1571444738



அரிசியும் நோய் தீர்க்கும் EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஅரிசியும் நோய் தீர்க்கும் L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312அரிசியும் நோய் தீர்க்கும் EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக