ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Yesterday at 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Yesterday at 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Yesterday at 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Yesterday at 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Yesterday at 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Yesterday at 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Yesterday at 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Yesterday at 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:32 am

» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Yesterday at 7:23 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 11:33 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Fri Nov 08, 2024 11:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 9:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:02 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:17 pm

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 7:06 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:34 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:31 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 10:05 am

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:41 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:34 am

» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm

» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm

» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm

» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm

» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm

» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm

» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm

» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am

» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am

» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm

» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm

» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வீட்டுக்குள் வந்த வண்ணத்துப்பூச்சி!

4 posters

Go down

வீட்டுக்குள் வந்த வண்ணத்துப்பூச்சி! Empty வீட்டுக்குள் வந்த வண்ணத்துப்பூச்சி!

Post by krishnaamma Wed Sep 03, 2014 7:39 pm

அன்றைய காலை நேரம், உலகின் மிக அழகான விடியலாக தோன்றியது யமுனாவுக்கு. தன் பெயரை, கதாபாத்திரமாகக் கொண்ட மோகமுள் நாயகி யமுனாவின் நினைவு வந்தது. அவளும் இப்படித்தான், அதிகாலையில் எழுந்திருக்கும் பழக்கம் கொண்டவள். காவிரிக்குப் போய் பித்தளைக் குடத்தை, 'பளபள'வென்று தேய்த்து, நதியில் குளித்து, சமையலுக்கு நீர் எடுத்து வருவாள்.
ஹூம்... இங்கு பெயர் மட்டும் தான் பொருத்தம்; மற்றவை எல்லாமே முரண். அதுவும் கல்யாணத்திற்குப் பின் வாழ்க்கையே நரகமாகி விட்டது.

பாலை காய்ச்சி கிண்ணத்தில் ஊற்றி ரூபிக்கு வைத்தாள்.
ரூபி என்றா நினைத்தேன்... அதன் பெயர் ரோசியாச்சே! அப்படித்தானே அவன் பெயர் வைத்தான்; ரோசின்னு தான் கூப்பிடணும்ன்னு வேறு கட்டளையிட்டான்...

'ரோசி பழைய காலத்துப் பேரா இருக்கு அருண்; நாய்க்குட்டினாலே ரோசி, மணி, ஜூலி இப்படித்தானே பேரு வைக்றாங்க... அதனால, நாம வேற பேர் வைக்கலாம்...' என்று, குட்டி ஜெர்மன் ஷெப்பர்டை வருடியபடி அவள் சொன்னபோது, ஒரு கணம் கூட யோசிக்காமல், 'நாய் வளக்கணுங்கிறது என்னோட முடிவு; பணம் கொடுத்து வாங்கிட்டு வந்ததும் நாந்தான். அதனால, இதுல முடிவு எடுக்குற உரிமை எனக்கு தான் இருக்கு; அதோட பேரு ரோசிதான்...' என்று, 'பட்' டென்று சொல்லி விட்டான்.

இது தான் அருண். பிட்சாவை, பர்கர் என்று அவன் சொன்னால், அது பர்கர்தான். பச்சை ஜீன்சை நீலம் என்று சொன்னால், அது நீலம்தான். இந்தக் கட்சிதான் ஜெயிக்கப் போகிறது என்று சொன்னால், அதற்கு மாற்றுக்கருத்தே சொல்லக் கூடாது. குக்கூ வேண்டாம் தெகிடி தான் வேண்டும் என்றால் அவள் வாயை மூடிக்கொண்டு கிளம்ப வேண்டும். அவள் அணிந்து கொள்ள வேண்டிய உடையையும் அவன் தான் சொல்வான்.

ரூபி என்பது, சிறு வயதில் ஹாஸ்டலில் தங்கி படித்த போது அவளுடன் வளர்ந்த நாய்க்குட்டி. எல்லா இளம்பெண்களும் அதனிடம் விளையாடிக்கொண்டே இருப்பர். ஒரு நாள் அது பக்கத்து தெரு நாயுடன் ஓடிவிட்டது என்று வார்டன் சொன்னாள். எல்லா இள மனதும் சோர்ந்து போய் பின், இரண்டொரு நாள் கழித்து சரியானார்கள்.

பழைய நினைவுகளில், மூழ்கியிருந்தவளை, மொபைலின், 'மாலையில் யாரோ மனதோடு பேச...' என்ற பாடல் அழைத்தது. அது ராஜிக்கான ரிங்டோன்.
''ஹாய் ராஜி... எப்படி இருக்கே?'' என்றவளின் முகம் மலர்ச்சியால் விரிந்தது.

''எனக்கென்ன யமுனா, வாழ்க்க அதுபாட்டுக்கு போய்கிட்டிருக்கு; நீ சொல்லு என்ன நடந்ததுன்னு. போன வாரம் அருண் உன்னை கை நீட்டி அடிக்க வந்தாருன்னு சொன்னதிலிருந்து ஒரே பதைப்பாவே இருக்குடி.''
ராஜி, யமுனாவின் உயிர்த்தோழி. அவளுக்கு மனது அடித்துக் கொள்வதில் வியப்பில்லை.
''எல்லாம் முடிஞ்சு போன மாதிரி இருக்கு ராஜி. ரெண்டு பேரோட குணமும் கிழக்கும், மேற்குமா இருக்கு என்ற புரிதலுக்கு வந்தாச்சு. இப்ப வீட்ல நானும், ரூபியும் மட்டும்தான் இருக்கோம்,'' என்றாள்.
''யமுனா...'' என்றாள் அதிர்ச்சி யுடன் ராஜி.

''ஆமாம் ராஜி; இந்த நாலு வருஷத்துல ரொம்ப பட்டுட்டேன். அதுவும் அப்பா போனபின், என்னைக் கொன்னு போட்டாக் கூட கேட்க நாதியில்லேன்னு ஆன பிறகு, அருண் ஒரு ஹிட்லராகவே மாறிப் போனார்,'' என்று சொன்ன போது, தன்னை மீறி விம்மினாள் யமுனா.

''உன்னை மாதிரி அழகு, படிப்பு, சம்பாத்தியம், பொறுப்பு, பொறுமைன்னு ஒரு பொக்கிஷத்தை வச்சு வாழ துப்பில்லாம கூட இருப்பானா ஒரு ஆம்பிள... சே... தாங்க முடியல; என்ன தான் வேணுமாம் அவனுக்கு?'' என்று வெடித்தாள் ராஜி.

''இல்ல ராஜி, நானும் கூட இந்தப் பிரிவுக்கு ஏதோ ஒரு விதத்துல காரணமா இருந்திருக்கலாம். அருணோட முரண் பட்டுகிட்டே தானே இருந்தேன்... ஒத்தே போகலயே...'' என்றாள்.
''நீ என்னதான் சொன்னாலும் மனசுக்கு கஷ்டமா இருக்கு. இந்த பொல்லாத உலகத்துல உன்னை மாதிரி அழகா இருக்கிற இளம்பெண்ணால சுலபமா வாழ்ந்திட முடியாதேங்கிறது தான் என்னோட கவல.''
''உண்மை தான்; வெளியுலகம் பொல்லாததுதான். ஆனா, வீடே விஷமா போன பின், எனக்கு வேற வழி தெரியலே.''
''ரூபின்னு சொன்னியே... அது யாரு?''

''ரோசிதான் இப்ப ரூபி; நேத்து நடந்த ஒரு பெரிய சண்டைக்கு பின் தான் எல்லாமே முடிவுக்கு வந்தது.
''என் சம்பளப் பணத்தில ஆயிரம் ரூபாய எடுத்து மரம் வளர்க்கிற ஒரு அமைப்புக்கு கொடுத்தேன். 'எனக்குத் தெரியாம எப்படி கொடுக்கலாம்'ன்னு ஆரம்பிச்சார் அருண். 'கொடுத்தேன், வந்து சொல்லிட்டேன்; இதைவிட வேற என்ன செய்யணும்'ன்னு கேட்டேன். 'நீ என்னுடைய கஸ்டடில இருக்கிறவ; நீன்னா உன் உடல், உழைப்பு, ஊதியம்ன்னு எல்லாமே என் கண்ட்ரோல்ல தான் இருக்கணும். உன் விரல் கூட என் அனுமதி இல்லாம அசையக்கூடாது'ன்னு சொன்னார்.

'அடிமை வாழ்க்க வாழ்றதுக்காக நான் பி.டெக்., படிக்கலே, படிப்பு கொடுத்த சுதந்திரத்த நான் உயிரா நினைக்கிறேன்'னு சொன்னேன். காது, கன்னம் எல்லாம் கிழியற மாதிரி ஒரு அறை விழுந்தது. அதுக்குப் பிறகு தான் எனக்கு கண்ணீர் நின்னு, தைரியமே வந்தது. நீ கவலைப்படாதே... உன் தோழி இனி மேல் தான் அமைதியா வாழப்போறா,'' என்றாள்.

''யமுனா... நீ எதுக்கும் அவசரப்படுறவ இல்ல; எனக்கு வேற என்ன சொல்றதுன்னு தெரியல,''என்றாள்.
''ராஜி... உனக்கு விலங்குகளோட சைக்காலஜி தெரியுமா?''
''அப்படின்னா?''

''எங்க வீட்டு நாய்க்குட்டி ரூபி இருக்குல்ல... அது, எங்களுக்குள்ள சண்டை வரும்போதெல்லாம் ஒடுங்கி போய் மூலையில உட்காந்துடும்; பால், சாப்பாடுன்னு எதையும் தொடாது; அதோட உடம்பு நடுங்கிகிட்டே இருக்கும். மெல்ல மெல்ல அது நார்மலாகும் போது அடுத்த சண்டை வந்திடும். மொழியா, பாடி லாங்குவேஜா, கண்ணீரா எதுன்னு தெரியலே... ஆனா, அதுக்குப் புரியுது,'' என்றாள் யமுனா.''நீ சொல்றது ஆச்சரியமா இருக்கு; ஐந்தறிவு இருக்றதால அதுகளுக்கும் நம்மோட உணர்ச்சிக புரியுதோ என்னவோ,''என்றாள் ராஜி.

''ரூபி மேல அருணுக்கு பாசம் இருக்கு; பிரியறதுன்னு முடிவு செய்த பின், நான் இந்த வீட்டுலயே கொஞ்ச காலம் இருக்கிறதுன்னும், அருண் மேன்ஷனுக்குப் போறதுன்னும் முடிவாச்சு. அருண் தனி வீடு கிடைச்சு செட்டிலாகிற வரை ரூபி என்கிட்ட இருக்கட்டும்ன்னு முடிவு செய்திருக்கோம். சரி ராஜி, ரொம்ப நேரம் பேசிட்டேன்; உனக்கும் ஆபீசுக்கு நேரமாச்சு அப்புறம் பேசலாம்,'' என்றாள்.''சரி யமுனா, நா எப்பவும் உனக்கு உதவியா இருப்பேன்; மறுந்துடாதே,'' என்றதும் மொபைல் இணைப்பை துண்டித்தாள் யமுனா.

கிண்ணத்தில் ஊற்றிய பால் அப்படியே இருந்தது. எதிர் மூலையில் துவண்டு கிடந்தது ரூபி.
அதன் அருகில் உட்கார்ந்தாள் யமுனா.
''ரூபி...ஏம்மா பட்டினி கிடக்கிறே... நீ ரொம்ப குட்டி பப்பிம்மா. இப்படி சாப்பிடாம இருந்தா உடம்புல வளர்ச்சி இருக்காது எழுந்துக்கோ, பாலைக் குடி,'' என்றாள் மென்மையாக.
அது கண்ணை திறந்து அவளைப் பார்த்துவிட்டு மூடிக் கொண்டது. அதன் வால் பல்லியின் வாலைப்போல ஒரு தடவை துடித்து அடங்கியது.

''இதோ பார் ரூபி... நீ புத்திசாலின்னு எனக்கு தெரியும்; அருணுக்கும், எனக்கும் சுத்தமா ஒத்து வரலே, அருணை மாத்த முடியும்ன்னோ வீடு, மனைவி, குடும்பம்ன்னு அருமையான விஷயங்களைப் புரிய வைக்க முடியும்ன்னோ எனக்கு நம்பிக்கை இல்ல. அண்ணா, அக்கான்னு என் பக்கம் வலிமையா நின்னு பேசுறதுக்கு ஒரு உறவு கூட இல்லே. இதைத்தவிர வேற வழியில்லன்னு தான் பிரிஞ்சிருக்கோம்,'' என்றாள்.
ரூபி முழுமையாக கண்களைத் திறந்து கவனித்தது.

''நீ அருணோட சொத்து; தனியா வீடு கிடைச்சதும் அருண் உன்னை அழைச்சுக்கிட்டு போயிடுவார். அதுவரைக்கும் என்கூட கொஞ்சம், 'அட்ஜஸ்ட்' செய்துக்கோ ப்ளீஸ்...''அந்தக் குரலும், அந்த உணர்வும் அதை அசைத்திருக்க வேண்டும் என்பது போல், ரூபி எழுந்து உட்கார்ந்தது.''தாங்க்ஸ் ரூபி, பாலைக் குடிச்சுடு. நான் குளிச்சுட்டு வரேன்; ரெண்டு பேரும் சாப்பிடலாம்,'' என்று எழுந்தாள் யமுனா.

நாய் குட்டிக்கு மனிதர்களின் மன சிக்கல்கள் புரிகின்றன என்பதை நினைத்த போது ஆச்சரியமாகத்தான் இருந்தது. ஒரு வேளை மிருகங்களுக்கும் உணர்வுசிக்கல் இருக்குமோ! செடிகளுக்குப் பக்கத்தில் நின்று ரசிப்பது, புல்லாங்குழல் இசையைக் கேட்பது, தயிர்ச்சோற்றை பொறுமையாக உண்பது என்று ரூபியின் நடவடிக்கைகள் ஒவ்வொன்றாக அவள் நினைவுக்கு வந்தன.குளித்துவிட்டு வந்தபோது வைத்த பால் வைத்தபடியே இருந்தது; பழையமாதிரி சுவரை ஒட்டி படுத்திருந்தது ரூபி.

''ரூபி... நீ ரொம்ப மோசம்,'' என்றவள், ''உனக்கு பால் பிடிக்கலையா? சரி...உனக்கு பிரியமான தயிர் சாதம் பிசைஞ்சு வைக்கிறேன் சாப்பிடு,'' என்று கூறியவள், சமையலறைக்கு சென்று, குழைய வடித்த சாதத்தில் தயிரை விட்டுப் பிசைந்து, கொஞ்சம் உப்பு சேர்த்து வைத்தாள்.''வா ரூபி...'' என்று எழுப்பினாள்.
எழுவதுபோல எழுந்து, பின் உடனே படுத்துக் கொண்டது; பார்வையால் அவளைக் கெஞ்சியது.
''என்ன ஆச்சு உனக்கு... ஏன் படுத்தறே? தலைக்கு மேல இருக்கிற பிரச்னை போதாதா... நீயும் வேற ஏன் டார்ச்சர் செய்றே?'' என்றாள்.

அடுத்து வந்த நாட்களில் ரூபி தன்னை மவுனமாக்கிக் கொண்டதை கவனித்தாள். பேருக்கு சாப்பிட்டது; பேருக்கு நடந்தது; செடிகள், இசை, உணவு என்று எதிலும் ஆர்வமின்றி நடைப்பிணம் போல இருந்தது. அதனால், மாலை அலுவலகம் முடிந்து வந்ததும், ரூபியை தூக்கிக் கொண்டு கால்நடை மருத்துவரிடம் சென்றாள்.

தொடரும்.......................


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

வீட்டுக்குள் வந்த வண்ணத்துப்பூச்சி! Empty Re: வீட்டுக்குள் வந்த வண்ணத்துப்பூச்சி!

Post by krishnaamma Wed Sep 03, 2014 7:40 pm

பரிசோதனை செய்து பார்த்த டாக்டர், ''மேடம்... ஒரு விஷயத்த புரிஞ்சுக்கங்க... பொதுவாகவே விலங்குகளோட மனசு ரொம்ப மென்மையானது.

உங்க வீடு அதுக்கு அமைதியக் கொடுக்கலே; வீட்டுல இருக்கிற எதிர்மறையான விஷயங்கள் அதோட மனச பாதிக்குது. உடலளவுல அதுக்கு எந்த பிரச்னையும் இல்லேன்னாலும், வீட்டு மனிதர்கள்ட்ட இருக்கிற அமைதியின்மை அதுக்கும் டிரான்ஸ்பர் ஆகுது. முழுமையான அன்பு, எந்த நிபந்தனையும் இல்லாம கிடைக்கும் போது தான் வளர்ப்புப் பிராணி சந்தோஷமா இருக்கும். முடிந்த வரைக்கும் உங்க ரூபிக்கு, உண்மையான அன்பைக் கொடுங்க,'' என்ற போது, அவள் கவலையுடன் பார்த்தாள்.

கை நிறைய பெடிக்ரீயை வைத்து,''வா வா... என் கண்ணுக்குட்டி வா வா... உனக்காக என்ன இருக்கு பார் என் கையில...'' என்று வாய் நிறைய சிரிப்புடன் அழைத்த போது, அது வாசலில் இருந்து அவளுடைய கைப்பையுடன் ஓடி வந்தது. வாயில் கவ்வியிருந்த கைப்பையை அவள் புடவைத்தலைப்பில் வைத்து, காலை ஒட்டி உட்கார்ந்தது. அதைப் பார்த்ததும் சற்றே பதட்டமாகி, ''அய்யோ... என் ஹாண்ட் பேக்... அடடா... வாசல்ல கீரை வாங்கினவ அங்கேயே பேக்கை மறந்து வச்சுட்டேனா... தாங்க்ஸ்டா ரூபி. மாச சம்பளம் பூரா இதுல இருக்குடா...'' என்று குழந்தையைப் போல ரூபியை அணைத்துக் கொண்டாள்.

பதிலுக்கு அவள் வைத்திருந்த பெடிக்ரீ முழுவதையும் சாப்பிட்டு, சந்தோஷமாக வாலை ஆட்டியது ரூபி.
தொடர்ந்து வந்த தினங்களில், கைக்குழந்தையைப் போல அவள் காலை ஒட்டிக்கொண்டு வீடு பூரா திரிந்தது. தோட்டத்தில் அவள் ஆசையா வளர்க்கிற வாழையை மேய வந்த வெள்ளாட்டை துரத்தியது; காயப்போட்ட புடவையின் நிழலில் ஆசையாக படுத்தது; அவள் வைத்த பாலை, துளி மிச்சமில்லாமல் குடித்தது; வாசல் பக்கம் எந்த ஆண் குரல் கேட்டாலும், பாய்ந்து விரட்டியது.

ரூபிக்காக முட்டை சாதம் செய்ய கற்றுக் கொண்டாள் யமுனா. அதன் உடலின் உண்ணிகளை எடுத்தாள்; நகம் வெட்டி, ஷாம்பு குளியல் செய்து, வாக்கிங் அழைத்துப்போய், அதனை சீராட்டினாள்.

காலம் இப்போது நிறைய விஷயங்களைச் சொல்லிக் கொடுத்திருப்பதை உணர்ந்தாள். உண்மையான பொழுதுபோக்குகள், 'டிவி'யும், சினிமாவும் அல்ல என்று தோன்றியது. அப்பேர்ப்பட்ட ஆசுவாசத்தைத் அது அவளுக்கு தந்தது. ரூபியுடனான அன்புக்குப் பிறகே நல்ல உறக்கம் சாத்தியமாகிறது என்ற எண்ணம், யமுனாவின் மனதை நெகிழச் செய்தபோது மொபைல் அழைத்தது; புது எண்ணாக இருந்தது.
''வணக்கம்; யார் நீங்க?'
''அருண் பேசுறேன்.''
ஒரு கணம், காலடியில் பூமி சரிகிற மாதிரி இருந்தது யமுனாவிற்கு.
''நான் அருண் பேசறேன்.... யமுனா நல்லா இருக்கியா?' என்றான்; முதல் தடவையாக அந்தக்குரலில் ஏதோ மாற்றத்தை உணர்ந்தாள்.
''இருக்கேன்.''

''எனக்கு கம்பெனி குவார்ட்டர்ஸ் கெடைச்சுடுச்சு யமுனா. நாய்க்குட்டி வளக்க அனுமதி வாங்கிட்டேன்; சனிக்கிழம வந்து ரூபியை... அயாம் சாரி, ரோசியக் கூட்டிகிட்டு போறேன்... உனக்கும் அன்னிக்கு லீவுதானே?''
''ஆமாம்; இந்த சனிக்கிழமையா... ரெண்டு நாள்தானே இருக்கு?''
''ஏன்... உனக்கு சவுகரியப் படாதா... சொல்லு, நீ சொல்ற நாள்ல வரேன்.''
''அப்படியில்ல, சனிக்கிழமையே வரலாம்.''
''தாங்க் யூ யமுனா; வெச்சிடறேன்.''

ரூபி அவளையே பார்த்தது. அந்த விழிகளில் தெரிந்த பளபளப்பு, கண்ணீரின் பிரதிபலிப்பா என்று தெரியவில்லை. ஆனால், அவளுக்கும் கண்ணீர் வந்தது. இதற்குப் பெயர்தான் ராசியா? எதுவுமே சரியாக அமையாதா அவளுக்கு? அப்படியே அமைந்தாலும் நிலைத்து நிற்காதா?
அவள் பாதத்தில் தலை வைத்து கண்களை மூடிக் கொண்டது ரூபி.
சனிக்கிழமை சொன்ன மாதிரியே வந்து விட்டான் அருண்.
அவனைப் பார்த்து வாலை ஆட்டிவிட்டு, மறுபடி அவளிடமே வந்தது ரூபி.
''வாவ்... நம் பெட்டா இது... கொழு கொழுன்னு கண்ணுக்குட்டியாட்டம்,'' என்று திகைத்து, அதனை இழுத்து முத்தமிட்டான்.

''சாரி யமுனா,'' என்று அவளைப் பார்த்து புன்னகைத்தவன், ''உனக்கு ரொம்ப சிரமம் கொடுத்துட்டேன்; வேலைக்குப் போய்கிட்டே ரூபியையும் பாத்துக்கிறது எவ்வளவு கஷ்டம்... அதுவும் தனியா... சாரி.''
''அப்படியொன்னும் கஷ்டமில்ல... ரூபி என்னோட நேரங்கள அழகானதா, அர்த்தமுள்ளதாக ஆக்கினா.''
''உனக்கு ரூபி; எனக்கு தனிமை,'' என்றவனை விழி உயர்த்தி பார்த்தாள் யமுனா.

''ஆமாம் யமுனா, தனிமை எனக்கு நிறைய விஷயங்கள சொல்லிக் கொடுத்தது. திருமண வாழ்க்கையில பிரச்னைக வரும்போது, ஆண்களோட நிலைப்பாட்டை தீர்மானிப்பதே, ஆண் என்கிற ஈகோதான். அது தான், தவறுகளை ஒப்புக்கொள்ளாம திமிரா நடக்க வைக்குது; விட்டுக் கொடுத்துப் போக முடியாம முட்டுக்கட்டை போடுது; பிரச்னையை மேலும் சிக்கலாக்குது. மனைவி ஞாயமான விஷயங்களுக்கு வாதம் செய்தாலும், சம்பாதிக்கிற திமிருல்ல பேசறாள்ன்னு நினைக்க வைக்குது. நிறைய தப்பு செய்திருக்கேன் யமுனா, சாரின்னு ஒரே வார்த்தைல மன்னிப்பு கேட்கிறது கூட அயோக்கியத்தனம் தான்; இனிமேலாவது நீ நிம்மதியா இரு,'' என்றவன், ''யமுனா... ஒரு சின்ன வேலை செய்ய முடியுமா?'' என்றான் கண்களில் ஏக்கத்துடன்.

அவள் நெஞ்சம் அடித்துக் கொண்டது; கண்கள் எப்போது வேண்டுமானாலும் நீரைப் பொழியும் போலிருந்தது.
''என்ன அருண்...''
''உன் கையால ஒரே ஒரு காபி...''
'தரேன்,'' என்று கூறியவள், உள்ளே வந்து அடுப்பைப் பற்ற வைத்தாள்.

ஏதோ படபடப்பாக இருப்பதை உணர்ந்தாள். 'அருணா பேசுகிறான்... இவ்வளவு மனமுதிர்ச்சி எப்படி வந்தது... விளைவுகளைப் பற்றியோ மற்றவர் மனதைப் பற்றியோ கவலைப்படாமல் தான் என்கிற ஆணவத்துடன் நடந்து கொண்ட சர்வாதிகார அருண் எங்கே போனான்... உடல் மெலிந்து, தளர்ந்த நடையுடன் காணப்படும் இவனை இவ்வளவு மென்மையானவனாக மாற்றியது யார்....' என, பலவாறாக நினைத்துக் கொண்டே, காபி எடுத்து ஹாலுக்கு வந்த யமுனாவின் காதில், அருண் பேசுவது விழுந்தது.
''ரூபி... உன் யஜமானியம்மாகிட்ட எனக்கொரு சந்தர்ப்பம் கொடுக்கச் சொல்லுவியா... மனிதனா மாறுகிற முயற்சியில இருக்கிற எனக்கு அவளோட உதவியும், ஆதரவும், அருகாமையும் தேவைப்படுறத எடுத்துச் சொல்வாயா?'' என்று ரூபியை அணைத்தபடி அவன் கேட்பதை, திகைப்புடன் பார்த்தாள் யமுனா.
கையில் இருந்த காபி கொதித்தது; ஆனால், அதற்கு மாறாக மனம் குளுமையாகத் துவங்கியது.

உஷா நேயா


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

வீட்டுக்குள் வந்த வண்ணத்துப்பூச்சி! Empty Re: வீட்டுக்குள் வந்த வண்ணத்துப்பூச்சி!

Post by தமிழ்நேசன்1981 Wed Sep 03, 2014 8:53 pm

வீட்டுக்குள் வந்த வண்ணத்துப்பூச்சி! 103459460 வீட்டுக்குள் வந்த வண்ணத்துப்பூச்சி! 1571444738
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Back to top Go down

வீட்டுக்குள் வந்த வண்ணத்துப்பூச்சி! Empty Re: வீட்டுக்குள் வந்த வண்ணத்துப்பூச்சி!

Post by ஜாஹீதாபானு Thu Sep 04, 2014 4:28 pm

எதுவுமே இருக்கும் போது தெரியாத அருமை இல்லாத போது தெரிகிறது .

கதை அருமைமா பகிர்வுக்கு நன்றி


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

வீட்டுக்குள் வந்த வண்ணத்துப்பூச்சி! Empty Re: வீட்டுக்குள் வந்த வண்ணத்துப்பூச்சி!

Post by M.M.SENTHIL Thu Sep 04, 2014 11:01 pm

வீட்டுக்குள் வந்த வண்ணத்துப்பூச்சி! 3838410834 சூப்பருங்க


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

வீட்டுக்குள் வந்த வண்ணத்துப்பூச்சி! Empty Re: வீட்டுக்குள் வந்த வண்ணத்துப்பூச்சி!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum