Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்by heezulia Today at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm
» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
Balaurushya | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Shivanya | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மருத்துவர்கள் கேள்விக்கு அப்பாற்பட்டவர்களா?
5 posters
Page 1 of 1
மருத்துவர்கள் கேள்விக்கு அப்பாற்பட்டவர்களா?
சமீபத்தில் நடந்த ஒரு டிவி விவாத நிகழ்ச்சி குறித்து மருத்துவர்கள் மத்தியில் பெரும் அதிருப்தி நிலவுகிறது. பலரும் சமூக வலைத்தளங்களில் அதற்குக் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
பரிசோதனைகள் அவசியமா?
மருத்துவத் துறை பரிந்துரைக்கும் பரிசோதனைகள் அவசியமா, இல்லையா என்பது பற்றி எய்ம்ஸ் (AIIMS) மருத்துவமனையின் இதய இயல் மருத்துவர்கள் ஆராய்ச்சி மேற்கொண்டனர்.
அதில் வருடத்துக்கு ஒருமுறை மேற்கொள்ள மருத்துவர்கள் பரிந்துரைக்கும் மாஸ்டர் ஹெல்த் பரிசோதனை அவசியமற்றது என்று தெரிவித்திருக்கிறார்கள்.
இத்தகைய பரிசோதனைகள் தெருவுக்குத் தெரு பெருகி வரும் தனியார் பரிசோதனைக் கூடங்களின் லாபத்தைப் பெருக்குவதற்கு, மக்களின் பணத்தை அநாவசியமாகச் செலவு செய்வதற்குமே வழிவகுக்கும் என்றும் அந்த ஆராய்ச்சி தெரிவிக்கிறது.
கிட்டத்தட்ட எல்லோருமே மாஸ்டர் ஹெல்த் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என்ற சூழல் வலிந்து உருவாக்கப்பட்டுவிட்டது. யாரேனும் அப்படிச் செய்துகொள்ளவில்லை என்றால் பெரும் நோய் தாக்கிவிடுமோ என்று அஞ்சும் அளவுக்கு இந்தச் சுற்றுச்சூழல் வலுவாக உள்ளது. சோதனைக் கூடங்களில் கூட்டம் அலைமோதுகிறது.
இந்தப் பின்னணியில்தான் மேற்கண்ட டிவி விவாத நிகழ்ச்சி நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் டாக்டர் கோபிநாத் என்பவர் சொன்ன தகவல் இன்னும் அதிர்ச்சியளிக்கக்கூடியது. மருத்துவத் துறை சார்ந்த வல்லுநர்களைக் கொண்டு இயங்கும் ஒரு தன்னார்வத் தொண்டு நிறுவனமான தி காக்ரேன் கொலாபரேஷன் (www.cochrane.org) தெரிவிப்பதன்படி, இத்தனை பரிசோதனைகள் செய்யப்படுவதால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை என்றும், குறிப்பிட்ட சில நோய்களால் அவதிப்படுபவர்களின் பிரச்சினை தீர்வதில்லை என்றும் அந்த நிறுவனம் கூறுகிறுது.
ஒரு லட்சத்து எண்பதாயிரம் பேரிடம் மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சியின் அடிப்படையில் இந்தத் தகவல் வெளியாகியுள்ளது.
இதெல்லாம் வெறும் புள்ளிவிவரங்கள், இதை வைத்துக்கொண்டு எப்படி மருத்துவத் துறையைக் குற்றம் சாட்ட முடியும் என்று கேட்கலாம். ஆனால், மருத்துவத் துறை செய்த தவறுகளால் பாதிக்கப்பட்டவர்களின் குரலை எப்படிச் சாதாரணமாக ஒதுக்க முடியும்?
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: மருத்துவர்கள் கேள்விக்கு அப்பாற்பட்டவர்களா?
கசக்கும் நிஜம்
தினமும் செய்தித்தாளில் குறிப்பிட்ட சில மருத்துவமனைகள், சில மருத்துவர்களின் "அலட்சியத்தால் குடும்பக் கட்டுப்பாடு செய்துகொள்ளச் சென்றவர் இறந்தார்", "வலது பக்கச் சிறுநீரகத்துக்குப் பதில் இடது பக்கத்தில் ஆபரேஷன் செய்தனர்", "செவிலியர் கவனக்குறைவால் உயிரிழப்பு" என்று ஏதாவதொரு செய்தியைப் படிக்கிறோம். இதெல்லாம் வெறும் செய்தி மட்டும்தானா?
எனக்குத் தெரிந்த ஒரு குடும்பத்தைச் சேர்ந்த, ஒரு பெண்ணின் கண்ணில் கட்டி ஏற்பட்டது. அந்தப் பெண்ணுக்கு 30 வயது இருக்கலாம். அறுவை சிகிச்சை சரியாகவே நடைபெற்றது.
ஆனால், மருத்துவமனையின் அலட்சியத்தால் காரணமே தெரியாமல் அவர் உயிரிழந்தார். அவருடைய குழந்தைக்கு அப்பொழுது ஒன்றரை வயது. யாரோ செய்த குற்றத்துக்காகத் தாயின்றித் தன் வாழ்நாளைக் கடக்கப்போகும் அக்குழந்தையின் நிலை என்ன ஆகும்? இதற்கு என்ன பதில் இருக்கிறது மருத்துவத் துறையிடம்?
நம்மில் பெரும்பாலோருக்கு நிகழ்ந்த கசப்பான அனுபவங்கள், நமக்குத் தெரிந்த மற்றவர்களுக்கு நிகழ்ந்த மோசமான சம்பவங்கள் என்று மருத்துவத் துறை சார்ந்து ஏதாவது நிச்சயம் இருக்கும்.
சிலருக்கு இன்னும் உச்சகட்டமாக, அலட்சியத்தால் உயிர் போகும் நிலையோ, இல்லை என்னைப் போன்று வலிந்து செய்யப்பட்ட சிசேரியனால் வாழ்நாள் முழுவதுக்குமான துன்பமோ இங்கே சர்வ சாதாரணம்.
ஆனால், இவற்றைப் பற்றி எந்தச் சலனமும் இல்லாமல் மருத்துவத் துறையும் தனியார் மருந்து கம்பெனிகளும் ராக்கெட் வேகத்தில் வளர்ந்துகொண்டுதான் இருக்கின்றன.
அதனால் கிடைக்கும் பலனை அனுபவிப்பவர்களாக மட்டும் இல்லாமல், அதன் அலட்சியத்தாலும், லாப நோக்கத்தாலும் ஒவ்வொருவரும் பாதிக்கப்படுகிறோம் என்பதுதான் உண்மை.

கேள்வி கூடாதா?
மருத்துவம் என்பது சேவை என்ற பார்வை காலாவதியாகி, அது வெறும் தொழில் என்றான பிறகு அதில் நடக்கும் அலட்சியத்தை, ஊழலை, அரசியலை விமர்சித்தால் என்ன தவறு? புனிதம் என்று வரையறுக்கப்பட்டதையே கேள்வி கேட்ட மரபு நம்முடையது.
மனசாட்சியுடனும், சக உயிரின் மீது கருணையுடனும் இயங்கும் மருத்துவர்கள் இங்கே எத்தனை சதவீதம்? இதற்கான பதில் மிகக் கசப்பான உண்மை.
ஒட்டுமொத்த மருத்துவத் துறையும் களங்கப்படவில்லைதான். மருத்துவர்களில் சில புண்ணியவான்களும் இருக்கிறார்கள். ஹிதேந்திரனின் உடலுறுப்புகள் எத்தனை பேரின் உயிரை மீட்டுக்கொடுத்தன என்பதையும், அதற்குக் காரணமாக இருந்த மருத்துவர்களையும், தொடர்ச்சியாக இது போன்று உடலுறுப்பு தானங்களில் செம்மையாகச் செயல்படும் மருத்துவர்களையும் மறக்க முடியுமா?
மருத்துவத் துறையின் முறைகேடுகள், அதிகரித்து வரும் மருத்துவச் செலவுகள் பேசினால் உடனே "இந்தியாவில்தான் மருத்துவச் செலவு குறைவு, எல்லாருக்கும் மருத்துவம் எளிதாகக் கிடைக்கிறது" என்று புள்ளிவிவரம் அவசரஅவசரமாகச் சொல்லப்படும்.
மருத்துவர்கள் கட்டணம் வசூலிக்கக் கூடாது என்றும், சமுதாயத் தொண்டு செய்ய வேண்டும் என்றும் சொல்லவில்லை. மருத்துவர்கள் விதிக்கும் அளவுக்கு அதிகமான கட்டணத்துக்கும், அலட்சியத்துக்கும், போலி மருந்துகளுக்கும், தவறான மருந்துகளுக்கும் எதிராகத்தான் குரல்கள் ஒலிக்கின்றன.
என்ன வித்தியாசம்?
எந்த மருந்து கம்பெனியை யாவது எதிர்த்து, இங்கே ஏதாவது செய்துவிட முடியுமா? மற்ற நாடு களில் தடை செய்யப்பட்ட எத்தனை மருந்துகள் சர்வசாதாரணமாக இங்கு விற்கப்படுகின்றன? அரசிடம் ஐந்து ரூபாய்க்குக் கிடைக்கும் மருந்துகள், தனியார் மருந்து கம்பெனிகளிடம் ஐநூறு ரூபாய்க்கு விற்கப்படுவதன் பின்னணியில் இயங்குபவர்கள் யார்? இதற்கு மருத்துவர்களும் மருத்துவத் துறை யும் வைத்திருக்கும் பதில் என்ன?
மருத்துவம் என்ற தொழிலைப்போல் இங்கு ஆயிரக்கணக்கான தொழில்கள் உள்ளன. ஒவ்வொன்றும் மனித வாழ்வுடனும், ஆயுளுடனும் தொடர்புகொண்டவைதான். மருத்துவர்கள் நேரடியாக மற்றவர்களுடைய உயிரைக் காக்கும் சேவையில் ஈடுபடுவதால், அவர்கள் மீது நிச்சயம் இன்னும் ஒரு படி அதிகமான மரியாதையும், அன்பும் அனைவருக்கும் உண்டு.
அந்த அன்பும் மரியாதையும் அவர்களைப் புண்ணியவான் களாக்கி, கேள்விக்கு அப்பாற் பட்டவர்களாக ஆக்குவதற்கு அல்ல. அந்தத் துறையில் நடக்கும் அலட்சியத்தால் ஏற்படும் உயிரிழப்புக்கும் பாதிப்புக்கும் அவர்கள் பொறுப்பேற்க வேண்டும். தங்கள் மீதான குற்றச்சாட்டுகளுக்குப் பொறுப்புடன் பதிலளிப்பதே, அவர்களுடைய தொழிலின் அடிப்படை அறமாக இருக்க முடியும்.
விலாசினி @ தி இந்து

வேண்டியது கிட்டாவிட்டால் நாம் கடவுளைக்கூட கேள்விகள் கேட்கிறோம்...இந்தியாவை பொருத்தவரை பேச்சு சுதந்திரம் பேச்சளவில்தான்..மற்றபடி அது அரசியல்வாதிகளிடமும்...ஆள்பலம்..பணபலம் படைத்தர்களிடமும் ஊமை வெடியாய் பிசுபிசுத்துவிட்டது...
தமிழ்நேசன்1981- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010
Re: மருத்துவர்கள் கேள்விக்கு அப்பாற்பட்டவர்களா?
மேற்கோள் செய்த பதிவு: 1084431தமிழ்நேசன்1981 wrote:வேண்டியது கிட்டாவிட்டால் நாம் கடவுளைக்கூட கேள்விகள் கேட்கிறோம்...இந்தியாவை பொருத்தவரை பேச்சு சுதந்திரம் பேச்சளவில்தான்..மற்றபடி அது அரசியல்வாதிகளிடமும்...ஆள்பலம்..பணபலம் படைத்தர்களிடமும் ஊமை வெடியாய் பிசுபிசுத்துவிட்டது...
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
Re: மருத்துவர்கள் கேள்விக்கு அப்பாற்பட்டவர்களா?
மருத்துவர்கள் நேரடியாக மற்றவர்களுடைய உயிரைக் காக்கும் சேவையில் ஈடுபடுவதால், அவர்கள் மீது நிச்சயம் இன்னும் ஒரு படி அதிகமான மரியாதையும், அன்பும் அனைவருக்கும் உண்டு.
அந்த அன்பும் மரியாதையும் அவர்களைப் புண்ணியவான் களாக்கி, கேள்விக்கு அப்பாற் பட்டவர்களாக ஆக்குவதற்கு அல்ல. அந்தத் துறையில் நடக்கும் அலட்சியத்தால் ஏற்படும் உயிரிழப்புக்கும் பாதிப்புக்கும் அவர்கள் பொறுப்பேற்க வேண்டும். தங்கள் மீதான குற்றச்சாட்டுகளுக்குப் பொறுப்புடன் பதிலளிப்பதே, அவர்களுடைய தொழிலின் அடிப்படை அறமாக இருக்க முடியும்.
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Re: மருத்துவர்கள் கேள்விக்கு அப்பாற்பட்டவர்களா?
கடவுளுக்கும் ஆசிரியருக்கும் அடுத்து நம்முடைய வணக்கத்திற்கு உரியவர்கள் மருத்துவர்கள்
அவர்களின் அலட்சியம் உயிரையே பலி வாங்குகிறது
இதற்கு அவர்கள் செய்யும் தொழிலை தெய்வமாய் கருத வேண்டுமே ஒழிய வியாபாரமாய் மற்றும் கடமைக்காக செய்யக்கூடாது
தாயின்றி ஒரு ஜீவன் எப்படி இந்த உலகில் வாழப்போகிறதோ
நினைத்தாலே பதறுகிறது
அக்குழந்தைகளை கடவுளே காப்பாற்ற வேண்டும்

கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .
M.Saranya- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014
Similar topics
» என் கேள்விக்கு பதில்
» கேள்விக்கு என்ன பதில்..?
» என் கேள்விக்கு பதில் வேண்டும்...........?
» கேள்விக்கு என்ன பதில்
» கேள்விக்கு என்ன பதில்
» கேள்விக்கு என்ன பதில்..?
» என் கேள்விக்கு பதில் வேண்டும்...........?
» கேள்விக்கு என்ன பதில்
» கேள்விக்கு என்ன பதில்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|