ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வெயிட்டேஜ் மதிப்பெண்' பிரச்னை: ஆசிரியர்கள் பிரதிநிதிகளை அழைத்து பேச கருணாநிதி வலியுறுத்தல்!

2 posters

Go down

வெயிட்டேஜ் மதிப்பெண்' பிரச்னை: ஆசிரியர்கள் பிரதிநிதிகளை அழைத்து பேச கருணாநிதி வலியுறுத்தல்! Empty வெயிட்டேஜ் மதிப்பெண்' பிரச்னை: ஆசிரியர்கள் பிரதிநிதிகளை அழைத்து பேச கருணாநிதி வலியுறுத்தல்!

Post by தமிழ்நேசன்1981 Tue Sep 02, 2014 3:59 pm

'
(02/09/2014)

சென்னை: 'வெயிட்டேஜ் மதிப்பெண்' பிரச்னை தொடர்பாக ஆசிரியர்கள் பிரதிநிதிகளை அழைத்து பேச வேண்டும் என தமிழக அரசை திமுக தலைவர் கருணாநிதி வலியுறுத்தி உள்ளார்.

இத்உ தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், "பட்டதாரி ஆசிரியர்கள் பத்து நாட்களாகத் தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கின்றார்கள். நேற்றைய தினம் கூட ஆசிரியர் தகுதித் தேர்வில் “வெயிட்டேஜ்” முறையை ரத்து செய்யக்கோரி பட்டதாரி ஆசிரியர்கள் நான்கு பேர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அனைத்து நாளேடுகளிலும் பெரிதாக வெளி வந்து என்னுள்ளே பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழக ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய தேர்வில் 60 ஆயிரம் பேர் பங்கேற்றனர்.

அதில் சுமார் 45 ஆயிரம் பேர் தேர்ச்சி பெற்றனர். அவர்களுக்கு சான்று சரிபார்ப்பும் நடத்தப்பட்டாகி விட்டது. கடந்த மாதம் பட்டியல் வெளியிட்டார்கள். அதன்படி 14,700 பேர் ஆசிரியர் பணிக்கு தகுதி பெற்றதாகக் கூறப்பட்டது.

ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகளில், கல்லூரிகளில் பயிற்சி பெற்று தேர்வு எழுதி வெற்றி பெற்றவர்களுக்கு ஆசிரியர் பணிக்கான தகுதிச் சான்றை தமிழக அரசு தான் தந்துள்ளது. தமிழக அரசு இவ்வாறு சான்றிதழ் கொடுத்தவர்களுக்கே, மீண்டும் ஒரு தகுதித் தேர்வை நடத்துவது என்பது ஏன் என்று தான் புரியவில்லை. அதிலும் “வெயிட்டேஜ்” என்ற பெயரில் ஒரு குழப்பத்தை ஏற்படுத்தியிருக்கிறார்கள்.

தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற இடைநிலை ஆசிரியர்கள் பன்னிரண்டாம் வகுப்பிலும், பயிற்சிப் பள்ளித் தேர்விலும் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையிலும், பட்டதாரி ஆசிரியர்கள் பன்னிரண்டாம் வகுப்பிலும், கல்லூரித் தேர்விலும், பயிற்சிக் கல்லூரித் தேர்விலும் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையிலும், வழங்கப்படுகிற மதிப்பெண்களை “வெயிட்டேஜ்” மதிப்பெண்களாகத் தந்து மொத்த மதிப்பெண்களின் அடிப்படையிலும் பணி நியமனம் தற்போது நடைபெறுகிறது.

இந்த “வெயிட்டேஜ்” மதிப்பெண்ணை கூடுதலாக கிராமப்புறங்களில் வாழ்வோர், தாழ்த்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், மலைவாழ் மக்கள், குடும்பத்தில் முதல் பட்டதாரிகள் ஆகியோரில் 90 சதவிகிதம் பேர் பெறவே முடியாது என்பதையும் அதற்கான சூழ்நிலைகளையும் அனைவரும் அறிவர்.

“வெயிட்டேஜ்” மதிப்பெண்கள் முறையால், 1988-2000 வரை படித்தவர்கள் மிகவும் பாதிப்புக்கு ஆளாகியிருக்கின்றன. இதற்குக் காரணம் அப்போதைய காலக்கட்டத்தில் அரசுப் பள்ளிகளில் மட்டும் படித்து 600 முதல் 800 மதிப்பெண்கள் வரை மட்டுமே பெற முடிந்தது.

ஆனால் தற்போது 2000ஆம் ஆண்டுக்குப் பிறகு ஒரே பள்ளியில் நூற்றுக்கு மேற்பட்டோர் ஆயிரம் மதிப்பெண்களுக்கு மேல் பெறக் கூடிய சூழ்நிலை உருவாகியிருக்கின்றது. பல்வேறு பல்கலைக்கழகங்களில், பல்வேறு பாடத் திட்டங்களில் படிக்கும் மாணவர்கள் அதிக மதிப்பெண்கள் பெறவும் வாய்ப்புகள் பெருகியிருக்கின்றன.

இந்த “வெயிட்டேஜ்” மதிப்பெண் காரணமாக 30 வயதுக்கு மேற்பட்ட பட்டதாரி ஆசிரியர்கள் தகுதித் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று சான்றிதழ் சரிபார்ப்பு நடந்து முடிந்த பின்னரும் வேலை கிடைக்காத சூழ்நிலை உருவாகியிருக்கிறது.

அதனால்தான் இந்த “வெயிட்டேஜ்” முறையை ரத்து செய்யக் கோரி கடந்த சில நாட்களாகத் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர்கள் சென்னையில் ஆகஸ்ட் 21–ம் தேதி உண்ணாவிரதத்தை நடத்தி முடித்து, முதலமைச்சர் ஜெயலலிதாவைச் சந்தித்து முறையிட முயற்சித்து, கைதாகி பின்னர் விடுதலையானார்கள்.

அவர்களுடைய கோரிக்கை ஆசிரியர் தகுதித் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் பணி நியமனம் செய்ய வேண்டும்; “வெயிட்டேஜ்” முறையை முழுவதும் ரத்து செய்ய வேண்டும் என்பதுதான்.

இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி நேற்றைய தினம் நடத்திய பேரணியில் கலந்து கொண்ட நான்கு பேர் குளிர்பானத்தில் பூச்சிக் கொல்லி மருந்தைக் கலந்து குடித்து, அவர்களைக் காவல் துறையினர் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.

அவர்களுடைய போராட்டம் பற்றி அரசாங்கம் இதுவரை அக்கறை காட்டியதாகத் தெரியவில்லை. அனைத்துப் பிரச்னைகளிலும் அலட்சியம் காட்டுவது போல இல்லாமல், ஆசிரியர் பிரச்னை தலையானது என்பதை மனதிலே கொண்டு, தமிழக அரசு, குறிப்பாக முதலமைச்சரோ அல்லது அந்தத் துறையின் அமைச்சர் என்று இருப்பவரோ போராட்டம் நடத்தும் ஆசிரியர்களின் பிரதிநிதிகளை உடனடியாக அழைத்துப் பேசி, சுமூகமாக ஒரு முடிவுக்கு வர வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்" எனக் கூறியுள்ளார்.
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Back to top Go down

வெயிட்டேஜ் மதிப்பெண்' பிரச்னை: ஆசிரியர்கள் பிரதிநிதிகளை அழைத்து பேச கருணாநிதி வலியுறுத்தல்! Empty Re: வெயிட்டேஜ் மதிப்பெண்' பிரச்னை: ஆசிரியர்கள் பிரதிநிதிகளை அழைத்து பேச கருணாநிதி வலியுறுத்தல்!

Post by தமிழ்நேசன்1981 Wed Sep 03, 2014 10:30 pm

பட்டதாரி ஆசிரியர்களை தமிழக அரசு அழைத்து பேச வேண்டும்: விஜயகாந்த் வலியுறுத்தல்!
வெயிட்டேஜ் மதிப்பெண்' பிரச்னை: ஆசிரியர்கள் பிரதிநிதிகளை அழைத்து பேச கருணாநிதி வலியுறுத்தல்! Vijayakanth%201a(7)
சென்னை: தகுதிகாண் மதிப்பெண் முறைக்கு எதிராக போராடி வரும் பட்டதாரி ஆசிரியர்களை தமிழக அரசு அழைத்து பேச வேண்டும் என்று விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''தமிழகத்தில் பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர்கள், ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம், பேரணி என தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். பேரணியில் கலந்து கொண்டவர்களில் ஒரு சிலர் தற்கொலை செய்துகொள்ளவும் முயற்சி செய்துள்ளனர். ஆனால் தமிழக அரசோ இதை கண்டும், காணாமல் இருந்து கொண்டுள்ளது. இந்த பிரச்னைக்கும், தனக்கும் துளிகூட சம்பந்தம் இல்லாதது போலவும், அருகில் உள்ள மாநிலத்தில் இப்பிரச்னை நடப்பதுபோலவும் தமிழக அரசு நடந்து கொள்கிறது.

தற்போது, போராட்டம் நடத்திவரும் அனைவருமே சுமார் 30லிருந்து 40 வயது வரை உள்ளவர்கள். இவர்கள் கடந்த பதினைந்து, இருபது ஆண்டுகளுக்கு முன்பு பெரும்பாலும் அரசு பள்ளியில் படித்து சுமார் 600 முதல் 750 மதிப்பெண்கள் வரை பெற்று, ஆசிரியர் பயிற்சி பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் பயிற்சி பெற்று அதற்கான தகுதி சான்றிதழையும் பெற்றுள்ளனர். ஆனால், தமிழக அரசு தகுதிகாண் மதிப்பெண் அடிப்படையில் தேர்வு செய்யும் முறையை கொண்டு வந்துள்ளதால், இவர்களில் பெரும்பாலானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

குறிப்பாக கிராமப்புறங்களில் வசிப்பவர்கள், மிகவும் பிற்படுத்தபட்டோர்கள், ஆதிதிராவிடர்கள், பழங்குடியினர்கள் ஆகிய குடும்பங்களில் உள்ளவர்களால் கண்டிப்பாக இந்த தகுதிகாண் மதிப்பெண்ணை பெறமுடியாது. தற்போதுள்ள முறைப்படி இவர்களுக்கு வாய்ப்பும் கிடைக்காது. பொருளாதாரத்தில் முன்னேறியவர்கள், நகர்புறத்தை சார்ந்தவர்கள், தனியார் பள்ளிகளில் படித்தவர்கள் ஆகியோருக்கு மட்டுமே இந்த தகுதிகாண் மதிப்பெண் முறை அதிகம் பயன் அளிக்கும்.

எனவே, தமிழக அரசு இப்பிரச்னையில் உரிய கவனம் செலுத்தி ஆசிரியர் தகுதி தேர்வில்பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் பணி நியமனம் செய்ய வேண்டும். தகுதிகாண் மதிப்பெண்ணை அடிப்படையாக கொண்டு பணி நியமனம் செய்வதை முழுமையாக ரத்து செய்ய வேண்டும். பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர்களுக்கு பணி நியமனம் வழங்கும் வரை ஆசிரியர் தகுதி தேர்வு நடத்துவதை நிறுத்தி வைக்க வேண்டும். சட்டபேரவையில் அறிவிக்கப்பட்ட ஆசிரியர் காலி பணியிடங்களை தற்போது தேர்ச்சி பெற்றுள்ள ஆசிரியர்களை கொண்டே நிரப்ப வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

இந்தியா முழுவதும் ஆசிரியர்களை போற்றும் விதமாக நாளை மறுதினம் (05.09.2014) ஆசிரியர்கள் உண்மையான மகிழ்ச்சியுடன் ஆசிரியர் தினத்தை கொண்டாடும் வகையில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர்களை தமிழக அரசு அழைத்து பேசி இப்பிரச்சனைக்கு சுமூக தீர்வுகாண வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்" என்று கூறியுள்ளார்.
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Back to top Go down

வெயிட்டேஜ் மதிப்பெண்' பிரச்னை: ஆசிரியர்கள் பிரதிநிதிகளை அழைத்து பேச கருணாநிதி வலியுறுத்தல்! Empty Re: வெயிட்டேஜ் மதிப்பெண்' பிரச்னை: ஆசிரியர்கள் பிரதிநிதிகளை அழைத்து பேச கருணாநிதி வலியுறுத்தல்!

Post by தமிழ்நேசன்1981 Wed Sep 03, 2014 10:32 pm

வெயிட்டேஜ் மதிப்பெண் முறையை ரத்து செய்ய வேண்டும்: தமிழக அரசுக்கு ராமதாஸ் கோரிக்கை!
(03/09/2014)
வெயிட்டேஜ் மதிப்பெண்' பிரச்னை: ஆசிரியர்கள் பிரதிநிதிகளை அழைத்து பேச கருணாநிதி வலியுறுத்தல்! Ramadoss%20200(26)
சென்னை: பட்டதாரி ஆசிரியர் நியமனத்தில் வெயிட்டேஜ் மதிப்பெண் முறையை ரத்து செய்ய வேண்டும் என்று தமிழக அரசுக்கு ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''தமிழ்நாட்டில் பட்டதாரி ஆசிரியர்கள் நியமனத்தில் வெயிட்டேஜ் மதிப்பெண் முறையை தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் அறிமுகம் செய்திருக்கிறது. இதனால், ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்றும் ஆசிரியர் வேலை பெற முடியாமல் பல்லாயிரக்கணக்கான பட்டதாரிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஆசிரியர்களைத் தேர்வு செய்யும் விஷயத்தில் தமிழக அரசு தொடர்ந்து தவறான அணுகுமுறையையே கடைபிடித்து வருகிறது. அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்ததுமே, மத்திய அரசு விதிகளை காரணம் காட்டி, வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பின் அடிப்படையில் ஆசிரியர்களை தேர்வு செய்யும் முறையை ரத்து செய்துவிட்டு, போட்டித்தேர்வு மற்றும் தகுதித்தேர்வின் அடிப்படையில் ஆசிரியர்களை தேர்வு செய்யும் புதிய நடைமுறையை கொண்டு வந்தது. மத்திய அரசு நடத்தும் மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு, ஆந்திரம், அஸ்ஸாம் உள்ளிட்ட மாநிலங்கள் நடத்தும் தகுதித் தேர்வு ஆகியவற்றில் ஒவ்வொரு இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கும் தனித்தனி தகுதி மதிப்பெண் நிர்ணயிக்கப்பட்டிருந்த நிலையில், தமிழகத்தில் மட்டும் அனைத்து பிரிவினருக்கும் ஒரே தகுதி மதிப்பெண் நிர்ணயிக்கப்பட்டிருந்தது.
சமூக நீதிக்கு எதிரான தமிழக அரசின் இந்த நடவடிக்கைக்கு எதிராக பாட்டாளி மக்கள் கட்சியும், தமிழகத்தில் உள்ள மற்ற அமைப்புகளும் குரல் கொடுத்தன. இதைத் தொடர்ந்து இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கான தகுதி மதிப்பெண்ணை 5 விழுக்காடு குறைத்த தமிழக அரசு, அதற்குப் பதிலாக வெயிட்டேஜ் மதிப்பெண் முறையை அறிமுகம் செய்தது. தமிழக அரசின் இந்த நடவடிக்கை தான் 10 ஆண்டுகளுக்கு முன் பட்டப்படிப்பு படித்த ஆசிரியர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கி உள்ளது.

வெயிட்டேஜ் முறை அறிமுகப்படுத்தப்படுவதற்கு முன் தகுதித்தேர்வு மதிப்பெண் அடிப்படையில் தான் இடைநிலை ஆசிரியர்களும், பட்டதாரி ஆசிரியர்களும் நியமிக்கப்பட வேண்டும் என்று விதி இருந்தது. ஆனால், வெயிட்டேஜ் மதிப்பெண் முறைப்படி தகுதித்தேர்வு மதிப்பெண்களில் 60 விழுக்காடு மட்டுமே கணக்கில் கொள்ளப்படும். மீதமுள்ள 40% வெயிட்டேஜ் மதிப்பெண்கள் 12 ஆம் வகுப்புப் பொதுத்தேர்வு, பட்டப்படிப்பு, பி.எட். தேர்வு ஆகியவற்றில் பெற்ற மதிப்பெண்களைக் கொண்டு கணக்கிடப்படுகிறது. பள்ளி மற்றும் கல்லூரித் தேர்வுகளில் பத்தாண்டுகளுக்கு முன் வழங்கப் பட்டதைவிட இப்போது அதிக மதிப்பெண் வழங்கப்படுவதால் புதிதாக ஆசிரியர் பயிற்சி பெற்றவர்கள் அதிக வெயிட்டேஜ் மதிப்பெண்களைப் பெற்று எளிதாக ஆசிரியர் பணிக்கு தேர்வாகிவிடுகிறார்கள்.

அதேநேரத்தில் பத்தாண்டுகளுக்கு முன் படித்தவர்கள் தகுதித் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றாலும் பள்ளி மற்றும் கல்லூரிகளில் அவர்கள் பெற்ற மதிப்பெண் குறைவு என்பதால் அவர்களுக்கு வேலை கிடைப்பதில்லை. உதாரணமாக அண்மையில் நடந்த தகுதித் தேர்வில் 150க்கு 110 மதிப்பெண் பெற்ற பழைய மாணவருக்கு வேலை கிடைக்கவில்லை. அதேநேரத்தில், 150க்கு 85 மதிப்பெண் பெற்ற புதிய மாணவர்களுக்கு வெயிட்டேஜ் மதிப்பெண் உதவியுடன் வேலை கிடைத்திருக்கிறது. தமிழக அரசின் இந்த புதிய அணுகுமுறை அனைவருக்கும் சம வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்ற இயற்கை விதிக்கு முற்றிலும் எதிராக அமைந்துள்ளது. இது மிகப்பெரிய சமூக அநீதி ஆகும்.

தமிழ்நாட்டில் இடைநிலை பட்டதாரி பயிற்சி பெற்ற 2 லட்சத்து 30,701 பேரும், பட்டதாரி ஆசிரியர் படிப்பு முடித்த 3 லட்சத்து 76,719 பேரும் வேலையில்லாமல் உள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் 10 ஆண்டுகளுக்கு முன் படிப்பை முடித்தவர்கள் ஆவர். தமிழக அரசு கடைபிடிக்கும் வெயிட்டேஜ் மதிப்பெண் முறையால் இவர்களுக்கு வேலைகிடைப்பது குதிரைக் கொம்பாக மாறியிருக்கிறது. பட்டதாரி ஆசிரியர்களைவிட உயர்ந்த நிலையில் உள்ள முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணிக்கு போட்டித்தேர்வு நடத்தப்பட்டு, அதில் அவர்கள் பெறும் மதிப்பெண்களின் அடிப்படையில் மட்டுமே பணி வழங்கப்படுகிறது. அவ்வாறு இருக்கும்போது பட்டதாரி ஆசிரியர்களுக்கு மட்டும் புதிய முறையை கடைபிடிப்பது சரியல்ல.

வேலைவாய்ப்பில் தங்களுக்கு இழைக்கப்படும் அநீதியைக் கண்டித்து பட்டதாரி ஆசிரியர்கள் கடந்த ஆகஸ்ட் 18 ஆம் தேதி முதல் தொடர் போராட்டங்களை நடத்திக் கைதாகி வருகின்றனர். முதலமைச்சரை சந்திக்க அனுமதி மறுக்கப்பட்டதால் மனம் உடைந்த 4 பேர் நேற்று முன்தினம் நஞ்சு அருந்தி தற்கொலைக்கு முயன்று ஆபத்தான நிலைக்கு சென்று உயிர் பிழைத்துள்ளனர். இதற்குப்பிறகும் அரசு மனமிறங்கி இவர்களுடன் பேச்சு நடத்த முன்வராதது ஜனநாயக செயல்பாடாக தோன்றவில்லை.

ஆசிரியர்கள் அறிவை வழங்குபவர்கள். அவர்கள் சம்பந்தப்பட்ட விஷயத்தில் தேவையற்ற பிடிவாதம் காட்டுவதை விடுத்து சம்பந்தப்பட்ட பட்டதாரி ஆசிரியர் சங்க நிர்வாகிகளை அழைத்துப் பேசி, வெயிட்டேஜ் மதிப்பெண் முறையை ரத்து செய்யவும், தகுதி மதிப்பெண்களின் அடிப்படையில் மட்டும் பட்டதாரி ஆசிரியர்களை நியமிக்கவும் தமிழக அரசு முன்வர வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்" என்று கூறியுள்ளார்.
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Back to top Go down

வெயிட்டேஜ் மதிப்பெண்' பிரச்னை: ஆசிரியர்கள் பிரதிநிதிகளை அழைத்து பேச கருணாநிதி வலியுறுத்தல்! Empty Re: வெயிட்டேஜ் மதிப்பெண்' பிரச்னை: ஆசிரியர்கள் பிரதிநிதிகளை அழைத்து பேச கருணாநிதி வலியுறுத்தல்!

Post by தமிழ்நேசன்1981 Wed Sep 03, 2014 10:32 pm

ஆசிரியர் நியமனத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு இடஒதுக்கீடு: தமிழக அரசுக்கு நோட்டீஸ்!
(03/09/2014)
வெயிட்டேஜ் மதிப்பெண்' பிரச்னை: ஆசிரியர்கள் பிரதிநிதிகளை அழைத்து பேச கருணாநிதி வலியுறுத்தல்! Court(53)
சென்னை: ஆசிரியர் நியமனத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான இடஒதுக்கீட்டை முறையான பின்பற்றக்கோரி தொடர்ந்த வழக்கில், தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

"ஆசிரியர் பணியிடங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கான 3 சதவீத இடஒதுக்கீடு முறையாக அமல்படுத்தப்படவில்லை. ஆசிரியர் பணியிடங்களில் 1007 பின்னடைவு இடங்கள் காலியான உள்ளன.

எனவே, ஆசிரியர் நியமனத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான இடஒதுக்கீட்டை முறையாக பின்பற்ற உத்தரவிட வேண்டும்" என தமிழ்நாடு அனைத்து மாற்றுத்திறனாளிகள் அமைப்பு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தது.

இந்த மனு இன்று (3ஆம் தேதி) விசாரணைக்கு வந்தது. இதை விசாரித்த நீதிபதி, இந்த மனு மீது பதிலளிக்குமாறு தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Back to top Go down

வெயிட்டேஜ் மதிப்பெண்' பிரச்னை: ஆசிரியர்கள் பிரதிநிதிகளை அழைத்து பேச கருணாநிதி வலியுறுத்தல்! Empty Re: வெயிட்டேஜ் மதிப்பெண்' பிரச்னை: ஆசிரியர்கள் பிரதிநிதிகளை அழைத்து பேச கருணாநிதி வலியுறுத்தல்!

Post by தமிழ்நேசன்1981 Wed Sep 03, 2014 10:33 pm

இடைநிலை பட்டதாரி ஆசிரியர் நியமனத்திற்கு தடை: மதுரை ஐகோர்ட் உத்தரவு!
(03/09/2014)
வெயிட்டேஜ் மதிப்பெண்' பிரச்னை: ஆசிரியர்கள் பிரதிநிதிகளை அழைத்து பேச கருணாநிதி வலியுறுத்தல்! Madurai%20high%20court%20200(8)
மதுரை: இடைநிலை பட்டதாரி ஆசிரியர் நியமனத்திற்கு தடை விதித்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

நெல்லை மாவட்டம், சேரன்மகாதேவியை சேர்ந்த பி.எட். பட்டதாரியான பவுசிநேசல் பேகம், உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.

அதில், நான் ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்று, பட்டதாரி ஆசிரியர் பணிக்கான தகுதித் தேர்விலும் தேவையான மதிப்பெண்களை பெற்றுள்ளேன். தற்போது பட்டதாரி ஆசிரியர் பணிக்கான தேர்வு நடைபெற்று வருகிறது. இந்த தேர்வில் ஆசிரியர் தகுதித் தேர்வு மதிப்பெண் மட்டுமல்லாமல் பிளஸ்-2, டிகிரி, பி.எட். படிப்புகளில் எடுத்த மதிப்பெண்களையும் கொண்டு வெயிட்டேஜ் மதிப்பெண்கள் கணக்கிடப்பட்டு அதன் அடிப்படையில் பணி நியமனம் செய்யப்படுகிறது.

2000 மாவது ஆண்டுக்கு முந்தைய பாடத்திட்டங்கள் கடினமாக இருந்தன. அப்போது போதிய கல்வித்தரமும் இல்லை. இந்நிலையில், தற்போது வெயிட்டேஜ் மதிப்பெண் அடிப்படையில் ஆசிரியர் பணி நியமனம் வழங்கினால் என்னைப் போன்றோர் பாதிக்கப்படுவார்கள். எனவே, வெயிட்டேஜ் முறையில் ஆசிரியர் பணி நியமனம் செய்ய தடை விதிக்க வேண்டும்'' எனக் கூறியிருந்தார்.

இதே கோரிக்கையை வலியுறுத்தி, புதுக்கோட்டையைச் சேர்ந்த தமிழரசன் உள்ளிட்ட 18 பேர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தனர்.

இந்த மனு இன்று (3ஆம் தேதி) விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி கே.கே.சசிதரன், ஆசிரியர் பணி நியமனத்திற்கு கவுன்சிலிங் நடத்திக் கொள்ளலாம். ஆனால், பணி நியமனங்கள் வழங்கக்கூடாது என உத்தரவிட்டார்.
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Back to top Go down

வெயிட்டேஜ் மதிப்பெண்' பிரச்னை: ஆசிரியர்கள் பிரதிநிதிகளை அழைத்து பேச கருணாநிதி வலியுறுத்தல்! Empty Re: வெயிட்டேஜ் மதிப்பெண்' பிரச்னை: ஆசிரியர்கள் பிரதிநிதிகளை அழைத்து பேச கருணாநிதி வலியுறுத்தல்!

Post by M.M.SENTHIL Wed Sep 03, 2014 10:57 pm

நல்ல தீர்ப்பை எதிர்நோக்குவோம் தமிழக அரசிடமிருந்து..


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

வெயிட்டேஜ் மதிப்பெண்' பிரச்னை: ஆசிரியர்கள் பிரதிநிதிகளை அழைத்து பேச கருணாநிதி வலியுறுத்தல்! Empty Re: வெயிட்டேஜ் மதிப்பெண்' பிரச்னை: ஆசிரியர்கள் பிரதிநிதிகளை அழைத்து பேச கருணாநிதி வலியுறுத்தல்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» ஆசிரியர் தகுதி தேர்வில் இதுவரை தேர்ச்சி பெற்ற பட்டதாரிகளுக்கு வெயிட்டேஜ் மதிப்பெண் இணையதளத்தில் வெளியீடு
» ஆசிரியர்கள், ஊழியர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி மாத்திரைகளை வழங்கிடுக: தனியார் பள்ளிகள் சங்கம் வலியுறுத்தல்
» குருபெயர்ச்சியால் ஜெ.,க்கு பிரச்னை : கருணாநிதி முதல்வர் வாய்ப்பு
» திராவிட இயக்கங்கள் ஒன்று சேர வேண்டும்: கருணாநிதி வலியுறுத்தல்
» ஆசிரியர்கள் தினம், குரு உத்சவ் என மாற்றம்: மத்திய அரசுக்கு கருணாநிதி கண்டனம்!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum