Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்by heezulia Today at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm
» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
kavithasankar | ||||
Balaurushya | ||||
prajai | ||||
Shivanya | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இரும்பு குதிரை - திரை விமர்சனம்
2 posters
Page 1 of 1
இரும்பு குதிரை - திரை விமர்சனம்
பாலகுமாரனின் புகழ் பெற்ற நாவலான இரும்புக் குதிரைகளுக்கும் இந்தப் படத்துக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. ஒரு காதல், ஒரு பிளாஷ் பேக், ஒரு பைக் ரேஸ்... அவ்வளவுதான் படம்.
பைக் ரேஸராக இருந்த அதர்வா, ஒரு சாலை விபத்தில் தந்தையைப் பறிகொடுத்த பிறகு, மிக மெதுவாக பைக் ஓட்டுகிறார். சாலை விதிகளை முறையாகக் கடைப்பிடிக்கிறார். அவரை இயல்பு நிலைக்குக் கொண்டு வருவதற்காக, அவர் அம்மா, அவரைப் பீட்சா கடையில் டெலிவரி பாயாக வேலைக்குச் சேர்த்து விடுகிறார். ஆனால், அங்கும் அவர் மிகவும் மெதுவான வண்டியோட்டி என்றே பெயர் எடுக்கிறார்.
சி.ஏ. படித்துக்கொண்டே பகுதி நேரப் பணி புரியும் அதர்வா, பிரான்சிலிருந்து புதுச்சேரிக்கு வந்து மருத்துவம் படிக்கும் பிரியா ஆனந்தைக் காதலிக்கிறார். வழக்கம் போல் பிரியா ஆனந்த், நான் உன்னை நண்பனாகத்தான் பார்க்கிறேன் என்று சொல்ல, பரிதாபமாக நிற்கிறார் அதர்வா.
பிரியா ஆனந்த், பைக் விரும்பி என்பதால், அவர் விருப்பத்துக்காக ஒரு சூப்பர் பைக் வாங்குகிறார். அந்த டுகாட்டி பைக்கிற்குப் பின்னால் இருக்கும் கதை தான், பிற்பாதி.
அதர்வாவின் பாத்திரப் படைப்பு, பலவீனமாக இருக்கிறது. பைக் ரேஸருக்கு உரிய உடல்மொழி, அவரிடம் இல்லை. சி.ஏ. படிப்பதாகச் சொல்லப்படும் அவரை ஒரு முறை கூட, அவரது கல்லூரியிலோ, புத்தகங்களுடனோ காட்டவில்லை. பைக் பற்றி அவருக்குப் பெரிய அறிவு இருப்பதாகவும் அதில் ஆர்வம் இருப்பதாகவோ கூடக் காட்ட இயக்குநர் தவறிவிட்டார்.
ஆனால், பிரியா ஆனந்தை, பைக் விரும்பியாகவும் சத்தத்தை வைத்தே என்ன பைக் வருகிறது என்று சொல்கிறவராகவும் காட்டியிருக்கிறார். இந்தத் திறமைகள் அதர்வாவிடம் இருப்பதாக வைத்திருந்தால், அவரது பாத்திரம் இன்னும் சிறப்பாக அமைந்திருக்கும்.
பிரியா ஆனந்தின் செல்பேசி எண்ணைக் கண்டுபிடிக்க அவர் போடும் கணிதப் புதிரும் அதை அதர்வா சில விநாடிகளில் தீர்ப்பதும் நன்று. ஆனால், இந்த அளவு புத்திசாலித்தனம் உள்ள ஒருவர், காதலி கடத்தப்பட்டாள் எனத் தெரிந்ததும் அடுத்து என்ன செய்வது என்று தெரியவில்லை என முழிபிதுங்கி நிற்பது, பொருத்தமாக இல்லை.
அது போல், பிரியா ஆனந்த் இவ்வளவு பெரிய பைக் ஆர்வலர் என்றால், அவருக்கு பைக் ஓட்டத் தெரியாதா? ராய் லட்சுமி கூட பைக் ஓட்டுவது போல் காட்சி இருக்கிறது. ஆனால், பிரியாவுக்கு இல்லை. மேலும், மருத்துவக் கல்லூரி மாணவியான அவர், யாருக்காவது முதலுதவியாவது செய்து, தனது மருத்துவத் திறனைக் காட்டியிருக்கலாம். ஒவ்வொரு பாத்திரத்தின் பின்புலமும் கதையுடன் இணைந்து செல்ல வேண்டும். அப்படி இல்லாதபட்சத்தில் பிரியா, மருத்துவம் படித்தால் என்ன? கணிப்பொறி படித்தால் என்ன? அல்லது சும்மா ஊர் சுற்றினால்தான் என்ன?
ஏழாம் அறிவு படத்தில் வில்லனாக நடித்த ஜானியே இந்தப் படத்திற்கும் வில்லன். அவரது பைக் சாகசங்கள், நேரடிக் காட்சிகளாக இல்லை. வீடியோ கிளிப்பிங்ஸைக் காட்டி இயக்குநர் சமாளித்திருக்கிறார். டுகாட்டி பைக்கை ஜானி தேடி வந்த காரணமும் சுவாரசியமாக இல்லை.
சண்டைக் காட்சிகளில் ஜானிக்கு முன்னால் அதர்வா, சோப்ளாங்கியாக இருக்கிறார். இந்த அழகில் அவர், இந்தப் படத்துக்காக சிக்ஸ் பேக் வேறு வைத்திருக்கிறார். இறுதிக் கட்டக் காட்சிகளில் நடக்கும் பைக் ரேஸில் காடு மலை எல்லாம் தாண்டி முதலில் வந்து சேரும் அதர்வா, எல்லைக் கோட்டினை எட்டியதும் சரியாக நிற்கத் தெரியாதா? அங்கே கீழே விழுந்து, அடிபட்டுக் கிடப்பது, அதர்வாவின் பாத்திரத்தை இன்னும் சிதைக்கிறது.
ஒட்டுமொத்தமாக இந்தப் படத்தில் இயக்குநர் யுவராஜ் போஸ் தோற்றிருக்கிறார். கதை, திரைக் கதை இரண்டிலும் கோட்டை விட்டிருக்கிறார். அதர்வாவும் தயாரிப்பாளரும் சரியான கதையைத் தேர்ந்தெடுக்கவில்லை.
குருதேவின் ஒளிப்பதிவு தெளிவாக இருந்தாலும் அதில் புதுமை எதுவும் இல்லை. ஜி.வி.பிரகாஷ் குமாரின் இசையும் ஏமாற்றம் அளிக்கிறது. Hello Brother என்னமா Party-கு தான் போலாமா என்ற குத்துப் பாட்டில் மாயா லோகமிது தேயா தேகமிது ஓயா ஆட்டமிது மேயா தோட்டமிது என வரும் வரிகள் நன்று.
படத்தின் தலைப்பில் ஒற்றுப் பிழை இருக்க, உள்ளேயோ வேறு பிழைகள். பந்தயக் குதிரை போல் சென்றிருக்க வேண்டிய ஒரு பைக், திரைக் கதை ஓட்டைகளால் பல இடங்களில் பஞ்சர் ஆகியிருக்கிறது.
வெப்துனியா
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: இரும்பு குதிரை - திரை விமர்சனம்
திரை விமர்சனம்: இரும்புக் குதிரை - இந்து டாக்கீஸ் குழு
பைக் ரேஸை விட்டு விலகியிருக்கும் ஒருவன், காதலிக்காக எப்படி மீண்டும் பைக் ரேஸராக மாறுகிறான் என்பதுதான் இரும்பு குதிரை. ‘ஈரம்’ படத்தின் உதவி இயக்குநர் யுவராஜ் போஸ் இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார்.
பிரித்வி (அதர்வா) பைக் ரேஸர். ஆனால் பைக் விபத்தில் அப்பாவை இழந்த பிறகு கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகிறான். பைக் ரேஸையே விட்டுவிட்டு ‘ஸ்லோ’ பீட்சா டெலிவரி செய்பவனாக மாறிவிடுகிறான். அப்பாவின் மரணம் ஏற்படுத்திய தாக்கத்தில் இருந்து மகனை மீட்பதற்கு பிரித்வியின் அம்மா (தேவதர்ஷினி) முயற்சி செய்துகொண்டிருக்கிறார்.
இந்நிலையில் பேருந்தில் சந்திக்கும் சம்யுக்தாவைப் (ப்ரியா ஆனந்த்) பார்த்தவுடனே காதலிக்க ஆரம்பிக்கிறான் பிரித்வி. பிரித்வியின் நண்பர்களான கிரிஸ்டினாவும் (ராய் லட்சுமி) ஜெகனும் அவன் காதலுக்கு உதவி செய்கிறார்கள். காதலியின் வற்புறுத்தல் காரணமாக ‘டுகாட்டி’ பைக் வாங்கும் பிரித்வி, வில்லன் ஜானி டிரை நுயனை எதிர்கொள்ள வேண்டிவருகிறது. ஜானி யிடம் மாட்டிக்கொள்ளும் சம்யுக்தாவை பைக் என்னும் இரும்புக் குதிரையை வைத்து எப்படி பிரித்வி காப்பாற்றுகிறான் என்பதுதான் படம்.
இயக்குநர் திரைக்கதையையே எழுத வில்லையோ என்ற கேள்விகூட எழுகிறது. பைக் ரேஸைப் பின்னணியாகக் கொண்ட காதல் கதை எப்படிப் பயணிக்க வேண்டுமோ அப்படி ‘இரும்பு குதிரை’ பயணிக்கவேயில்லை. படத்தில் கடைசி பதினைந்து நிமிடம் மட்டுமே ’பைக்’ பிரதானமாக வருகிறது. அந்தக் காட்சிகள் நன்கு படமாக்கப்பட்டிருந்தாலும் அது பார்வையாளர்களைத் திரையுடன் ஒன்றவைக்கவில்லை. காரணம், அந்தக் காட்சிக்குப் பாதை வகுக்கும் திரைக்கதையில் உள்ள பலவீனம்.
வசனம், ஜி.வி. பிரகாஷின் இசை, தாமரையின் பாடல்கள் என எதுவுமே மனதில் நிற்கவில்லை. திரைக்கதைக்குத் தொடர்பே இல்லாமல் வரும் பாடல்கள் எரிச்சலை ஏற்படுத்துகின்றன. அதிலும், லட்சுமி, அக்ஷராவின் ‘ஐட்டம்’ பாடல்கள் வலிந்து திணிக்கப்பட்டிருக்கின்றன.
படத்தின் முதல் பாதியில் எந்த சுவாரஸ்யமும் இல்லை. இரண்டாம் பாதியில், படத்தின் திருப்புமுனையான ப்ளாஷ்பேக்கை இரண்டு கதாபாத்திரங்கள் வாய்ஸ் ஓவரில் அலட்சியமாக முடித்துவிடுகிறார்கள். மந்தமாக நகரும் படத்தில் கிளைமாக்ஸ் பைக் ரேஸுக்காகக் காத்திருக்கும் பொறுமை பார்வையாளர்கள் பலருக்கு இல்லை.
நடிப்பைப் பொறுத்தவரை படத்தில் தேவதர்ஷினி, ஜெகன், ஜானி மட்டுமே நடித்திருக்கிறார்கள். அதர்வா, பிரியா ஆனந்த் நடிப்பு, திரையில் எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. படத்தில் அதர்வா, பிரியா ஆனந்தைத் தீவிரமாகக் காதலிக்கிறார் என்ற விஷயத்தை வசனத்தால் மட்டுமே பார்வையாளர்களுக்கு நினைவூட்டுகிறார். அதுவும் மனதில் ஒட்டவில்லை. பிரியா ஆனந்த் படத்தில் வசனம் மட்டும் பேசுகிறார் அவ்வளவே. லட்சுமியைத் திரையில் பார்ப்பதற்கே பயமாக இருக்கிறது. அதர்வாவிற்கு பால்ய தோழியாகக் காட்டுவதற்கு வேறு யாருமே இயக்குநருக்கு கிடைக்கவில்லையா என்று எண்ணத் தோன்றுகிறது.
ஆமாம், இந்தப்படத்தில் பைக் ரேஸர் அலிஷா அப்துல்லா என்ன செய்கிறார்? இயக்குநர் அவரை நடிக்க அழைத்ததையே சுத்தமாக மறந்துவிட்டார் போல இருக்கிறது.
பைக் ரேஸிங் காட்சிகளிலும், பாண்டிச்சேரியைப் படம்பிடித்திருக்கும் விதத்திலும் மட்டுமே குருதேவ் மற்றும் கோபியின் கேமிராக்கள் வேலை செய்திருக்கின்றன.
இயக்குநர் யுவராஜ் போஸ் திரைக்கதையை எழுதிவிட்டு ‘இரும்பு குதிரை’யை ஓட விட்டிருக்கலாம்.

Similar topics
» எந்திரன் திரை விமர்சனம்-இணையதள உலகின் முதல் விமர்சனம்.
» அழகர்சாமியின் குதிரை >> விமர்சனம்
» பொய்க்கால் குதிரை - விமர்சனம்
» அழகர்சாமியின் குதிரை விமர்சனம்..
» 83 -திரை விமர்சனம்
» அழகர்சாமியின் குதிரை >> விமர்சனம்
» பொய்க்கால் குதிரை - விமர்சனம்
» அழகர்சாமியின் குதிரை விமர்சனம்..
» 83 -திரை விமர்சனம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|