ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

உடம்பே உன் விலை என்ன?

3 posters

Go down

உடம்பே உன் விலை என்ன? Empty உடம்பே உன் விலை என்ன?

Post by யாழவன் Thu Nov 05, 2009 8:09 am




இந்த உடம்பின் அவசியம் என்ன? உடம்பை மட்டுமே பார்த்துக் கொண்டிருந்தால் அது தன்னலம் ஆகாதா? இது எம் ஒவ்வொருவரின் மத்தியிலும் இருக்கும் இயல்பான கேள்வியாகும். இந்தக் கேள்விக்கு விளக்கமாக இந்தக் கட்டுரை அமைகிறது.




இந்த உடம்பை பெறுவதற்கு நாம் தவம் செய்திருக்க வேண்டும் என்று பக்தியில் தோய்ந்த அடியார்கள் மனம் உருகிப்பாடுகிறார்கள்.

புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப்

பல் விருகமாகிப் பறவையாய்ப் பாம்பாகிக்

கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்

வல் அசுரர் ஆகி முனிவராய்த் தேவராய்ச்

செல்லாஅ நின்ற இத் தாவர சங்கமத்துள்

எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தேன்

என்று திருவாசகம் பாடிய மாணிக்கவாசகர் குறிப்பிடுகிறார்.

'அரிது மானிடராய்ப் பிறத்தல் அரிது' என்று அவ்வைப்பாட்டி பாடுகிறார்.

உடற்கூற்று வல்லுனர்களாகிய அறிவியல் விஞ்ஞானிகள் எத்தனை ஆயிரம் ஆண்டுகளின் பரிணாம வளர்ச்சியில் இந்த உடம்பு இப்போது இருக்கும் நிலையை அடைந்திருக்கும் என்று வியப்படைகிறார்கள். நம் கைகளில் உள்ள விரல்களின் அமைப்பை பாருங்கள். இதில் இதோ இந்தப் பெருவிரல் அல்லது கட்டைவிரல் முதலில் எல்லா விரல்களோடும் சேர்ந்து இருந்ததாகவும் பின்னர் கால வளர்ச்சியில் பிரிந்ததாகவும் அறிஞர்கள் கூறுகிறார்கள்.

இப்போதும் இந்த கட்டைவிரல் மட்டும் நமக்கு இல்லாமல் இருந்திருந்தால் என்ன ஆகும் யோசித்துப் பாருங்கள்,

இந்தக் கட்டை விரல் குறித்து ஆங்கிலத்தில் ஆயிரக்கணக்கில் புத்தகங்கள் வெளிவந்துள்ளன. 'மனித குல வரலாறு' என்னும் நூலினை எழுதிய ஜார்ஜ் தாம்சன் என்னும் அறிஞர் கட்டை விரலின் அருமையை அற்புதமாய் விளக்கி எழுதி உள்ளார். இன்றைக்கும் நாம் ஏதாவது சாதனை செய்துவிட்டால் கட்டைவிரலை உயர்த்திக் காட்டுகிறோம். ஆனால் கல்வி அறிவு பெறாத நம் ஜனங்கள் அந்த விரலில்தான் மை தடவி ரேகை வைக்கிறார்கள்.

ஒரு ஞானியிடத்தில் ஒரு சீடன் சென்று சாமி இந்த உடம்பு நமக்குத் தேவையா? என்று கேட்டானாம். உடனே அந்த ஞானி, சீடனே கொஞ்சம் தண்ணீர் கொண்டு வா என்றாராம்.

அந்தச் சீடன் ஓடிச்சென்று ஒரு செம்பில் தண்ணீர் கொண்டு வந்தானாம். ஞானி திரும்பவும் தண்ணீர் கொண்டு வா என்று சொன்னாராம். திரும்பச் சென்ற சீடன் குவளை, பாத்திரம், அண்டா, பானை என்று பல பாத்திரங்களில் தண்ணீர் கொண்டு போக, அவர் மீண்டும் மீண்டும் சொன்னபடியே சொல்லிக் கொண்டிருக்க சாமி சோதிக்க வேண்டாம். நான் என்ன செய்யட்டும் என்று பணிவாகக் கேட்டானாம் சீடன்.

சீடனே நான் தண்ணீர்தானே கேட்டேன். நீ ஏன் அதைப் பாத்திரங்களில் கொண்டு வந்தாய்? என்று கேட்டாராம் ஞானி.

பாத்திரம் இல்லாமல் தண்ணீரை எப்படி கொண்டு வர முடியும்? என சீடன் கேட்க; அப்படிக் கேள். எந்தப் பொருளையும் எடுத்து வர, ஏந்தி வர, ஒரு பாத்திரம் வேண்டும் என்பது போல இந்த உயிரைத் தாங்கிவர ஒரு உடம்பு கட்டாயம் வேண்டும். இந்த உடம்பை பாதுகாத்தால்தான் உயிரையும் பாதுகாக்க முடியும்.

உயிர் இல்லாத உடலும் உடல் இல்லாத உயிரையும் நினைத்துப் பாருங்கள். அதுமட்டுமில்லை உயிரைப் பறவையாகவும், உடம்பை பறவை தங்கும் கூடாகவும் நம் வள்ளுவர் சொல்லவில்லையா?

இந்த உடம்புக்கும் உயிருக்கும் உள்ள உறவு எப்படிப்பட்டது தெரியுமா? எனக் கேட்கும் வள்ளுவர். அக்கேள்விக்கு தாமே விடையும் கூறுகிறார்.

"குடம்பை தனித்து ஒழியப் புற்பறந்தற்றே

உடம்போடு உயிரிடை நட்பு''

'தான் வாழ்ந்த கூடு தனித்து கிடக்க அதை விட்டுவிட்டு வேறிடத்திற்கு பறக்கும் பறவையின் உயிரைப் போன்றதுதான் உடலுக்கும் உயிருக்கும் உள்ள உறவு' என்பதாகும்.

பெற்ற தாய்தனை மகன் மறந்தாலும் பிள்ளையைப் பெறும் தாய் மறந்தாலும் உற்ற தேகத்தை உயிர் மறந்தாலும் உயிரை மேலாய உடம்பு மறந்தாலும் கற்ற நெஞ்சகம் கலை மறந்தாலும் கண்கள் நின்று இமைப்பது மறந்தாலும் நல்ல தவத்தவர் உள்ளிருந்து ஓங்கும் நமச்சிவாயத்தை நான் மறவேனே

என்கிறார் ராமலிங்க வள்ளலார் தன் திருவருட்பாவில்,

உலகெங்கும் மதச்சண்டைகள் நிகழ்ந்துகொண்டே இருக்கின்றன. அப்பாவி மக்கள் காரணமின்றி மடிந்து கொண்டே இருக்கிறார்கள். இதற்கு முடிவுதான் என்ன?

உலகெங்கும் மதங்களைத் தோற்றுவித்த பெரியவர்கள் மக்களை நல்வழிப்படுத்தவும் அவர்களுக்கு ஒழுக்கத்தோடு வாழ வேண்டும் என்ற உயரிய எண்ணத்தோடும்தான் அவற்றை உருவாக்கினார்கள். ஆனால் காலப்போக்கில் யார் மதம் உயர்ந்தது என்ற ஆதிக்கக் குழப்பங்களால் சண்டைகள் வளரத் தொடங்கின. அன்புகாட்டு, சகோதரப் பாசத்தை வளர்த்து கொள்.

இறைவன் ஒருவனே என்பதை உணர்ந்து பின்பற்று என்று எல்லா மதங்களும் சொல்லிக் கொண்டேதான் இருக்கின்றன. ஆனாலும் சண்டைகள் வரவில்லை. ஒரு தாயின் வயிற்றில் பிறக்கும் உயிருக்கு குழந்தை என்ற பொதுப் பெயர்தான் சூட்டுகிறோம். கடைசியில் இறந்துபோகும் மனிதனைப் பிணம் என்றுதான் குறிப்பிடுகிறோம். இங்கே சாதிப்பெயர் இல்லை. மதப்பெயரில்லை.

சீரடி சாய்பாபா என்ற மகான் ஒருவர் இந்த நாட்டிலே தோன்றினார். அவர் வாழ்ந்த காலத்தில் ஒரு துறவியாகத்தான் வாழ்ந்தார். வந்தோர் அனைவருக்கும் நல்வழி காட்டினார். அவரை இந்து என்று சிலர் சொன்னார்கள். இல்லை அவர் கிறித்தவர் என்று பலர் சாதித்தார்கள். இன்னும் சிலரோ அவர் நிச்சயமாக அவர் இசுலாமிய வகுப்பினைச் சார்ந்தவர் என்று சத்தியம் செய்தார்கள்.

உடம்பே உன் விலை என்ன? 002
அவரின் கடைசிக் காலத்தில் உடல் தளர்ந்த நிலையில் அவர் இருந்தார். அவரின் மறைவுக்குப்பின் அவருக்கான இறுதிச்சடங்கை எந்த மதத்தின்படி செய்வது என்று அப்போதே பலர் சண்டையிடத் தொடங்கினார்கள்.

இந்து மத வழக்கப்படி எரிக்க வேண்டும். இல்லை உடலை அடக்கம் செய்ய வேண்டும் என்று பலரும் கூக்குரல் எழுப்பியதைப் பார்த்துக் கொண்டிருந்த அந்த மகான் அனைவரையும் தன்னருகே வருமாறு அழைதார். எனக்கு நீங்க எல்லோரும் ஓர் உதவி செய்ய முடியுமா? என்று மென்மையாகக் கேட்டார். அனைவரும் செய்வதாக ஒப்புக் கொண்டார்கள்.

இங்கே வந்திருக்கும் இந்துக்கள், கிறித்தவர்கள், இசுலாமிய நண்பர்கள் அனைவரும் சத்தமின்றித் தனித்தனியே பிரிந்து நில்லுங்கள் என்றார். நாங்கள் அப்படித்தான் பிரிந்தே நிற்கிறோம் என்று அவர்கள் சொல்ல, நல்லது நண்பர்களே நீங்கள் எல்லோரும் அவரவர் இல்லத்திற்கு சென்று நீர்க்குடங்களில் தண்ணீர் கொண்டு வந்து இந்தப்பெரிய அண்டாவில் கொட்ட வேண்டும் செய்வீர்களா, எனக்கேட்டார். அவர் ஏதோ அற்புதம் நிகழ்த்தப் போகிறார் என நினைத்த மும்மதத்தினரும் விரைவாகச் சென்று பல்வேறு நீர்க்குடங்களில் நீரைக் கொண்டுவந்து அண்டாவில் நிரப்பினார்கள்.

சீரடி சாய்பாபா அங்கிருந்த இளைஞர் ஒருவரை அழைத்து இந்த தண்ணீர் முழுதையும் அந்தப் பெரிய கரண்டியால் கலக்குங்கள் என்று கூற அனைவரும் ஆச்சரியத்தோடு பார்த்துக் கொண்டிருந்தார்கள். கலக்கி முடிந்தவுடன் நண்பர்களே இப்போது அவரவர் கொண்டு வந்த தண்ணீரை அவரவர் எடுத்துக் கொள்ளலாம் வாருங்கள் என்று சீரடி சாய்பாபா கூற அத்தனை பேரும் குழப்பத்தோடு நின்றார்களாம்.

நண்பர்களே தண்ணீர் தண்ணீர்தான். இவர் கொண்டு வந்ததால் இந்து, அவர் கொண்டு வந்ததால் கிறித்துவம், அடுத்தவர் கொண்டு வந்தால் இசுலாமா? இந்த பேதங்களை விடுங்கள். இறைவன் எளிமையானவன். அன்புமயமானவன். நம்மை காக்கும் ரட்சகன். அவன் உங்கள் மதமும் இல்லை. என்மதமும் இல்லை என்று சொன்னாராம்.

எனவே கல்வி, அறிவியல் வளர்ச்சி இவற்றால் எதிர்காலத்தில் சாதி மதமற்ற உலகத்தை உருவாக்க வேண்டும் என்பதே இந்த அற்புதப் பிறவியினைப் பெற்ற எம் ஒவ்வொருவரினதும் வரலாற்றுக் கடமையாகும்.



button="hori";
submit_url ="http://ularuvaayan.blogspot.com/2009/11/blog-post_01.html"
யாழவன்
யாழவன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1051
இணைந்தது : 27/08/2009

Back to top Go down

உடம்பே உன் விலை என்ன? Empty Re: உடம்பே உன் விலை என்ன?

Post by தாமு Thu Nov 05, 2009 12:13 pm

நல்ல கட்டுரை யாழவன்... நல்ல தகவல்... உடம்பே உன் விலை என்ன? 677196 உடம்பே உன் விலை என்ன? 677196 உடம்பே உன் விலை என்ன? 677196
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

உடம்பே உன் விலை என்ன? Empty Re: உடம்பே உன் விலை என்ன?

Post by யாழவன் Thu Nov 05, 2009 5:12 pm

தாமு wrote:நல்ல கட்டுரை யாழவன்... நல்ல தகவல்... உடம்பே உன் விலை என்ன? 677196 உடம்பே உன் விலை என்ன? 677196 உடம்பே உன் விலை என்ன? 677196
உடம்பே உன் விலை என்ன? 678642 உடம்பே உன் விலை என்ன? 678642 உடம்பே உன் விலை என்ன? 678642 உடம்பே உன் விலை என்ன? 678642 உடம்பே உன் விலை என்ன? 678642 உடம்பே உன் விலை என்ன? 678642 உடம்பே உன் விலை என்ன? 678642 உடம்பே உன் விலை என்ன? 678642
யாழவன்
யாழவன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1051
இணைந்தது : 27/08/2009

Back to top Go down

உடம்பே உன் விலை என்ன? Empty Re: உடம்பே உன் விலை என்ன?

Post by வித்யாசாகர் Thu Nov 05, 2009 5:53 pm

மிக நல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல தகவல் யாழவன்.

முகில் நிச்சயம் காண வேண்டுமென குறிப்பெழுதி, பத்திரப் படுத்தியுள்ள பொருள்களில் ஷிரடி சாயி பாபாவின் வாழ்க்கை வரலாறு (தெலுங்கில்) திரைப்பட குறுந்தகடும் ஒன்று.

துபோன்ற பதிவுகளை நேரம் கிடைக்கையில் அல்லது சற்று நேரத்தையாவது ஒதுக்கி படிக்க எல்லோரையும் கேட்டுக் கொள்கிறேன் தோழர்களே.

மிக்க நன்றி யாழவன்!
வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009

http://www.vidhyasaagar.com

Back to top Go down

உடம்பே உன் விலை என்ன? Empty Re: உடம்பே உன் விலை என்ன?

Post by யாழவன் Thu Nov 05, 2009 6:03 pm

வித்யாசாகர் wrote:மிக நல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல தகவல் யாழவன்.

முகில் நிச்சயம் காண வேண்டுமென குறிப்பெழுதி, பத்திரப் படுத்தியுள்ள பொருள்களில் ஷிரடி சாயி பாபாவின் வாழ்க்கை வரலாறு (தெலுங்கில்) திரைப்பட குறுந்தகடும் ஒன்று.

துபோன்ற பதிவுகளை நேரம் கிடைக்கையில் அல்லது சற்று நேரத்தையாவது ஒதுக்கி படிக்க எல்லோரையும் கேட்டுக் கொள்கிறேன் தோழர்களே.

மிக்க நன்றி யாழவன்!
உடம்பே உன் விலை என்ன? 678642 உடம்பே உன் விலை என்ன? 678642 உடம்பே உன் விலை என்ன? 678642 உடம்பே உன் விலை என்ன? 678642 உடம்பே உன் விலை என்ன? 678642
யாழவன்
யாழவன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1051
இணைந்தது : 27/08/2009

Back to top Go down

உடம்பே உன் விலை என்ன? Empty Re: உடம்பே உன் விலை என்ன?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum