ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 4:51 pm

» கருத்துப்படம் 02/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:25 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஹோம் பட்ஜெட் :மாத கடைசியில் பணப் பற்றாக்குறை... எளிதாகச் சமாளிக்க 8 வழிகள்!

+6
உமேரா
ஜாஹீதாபானு
Dr.S.Soundarapandian
M.Saranya
யினியவன்
பாலாஜி
10 posters

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

Go down

ஹோம் பட்ஜெட் :மாத கடைசியில் பணப் பற்றாக்குறை... எளிதாகச் சமாளிக்க 8 வழிகள்! - Page 4 Empty ஹோம் பட்ஜெட் :மாத கடைசியில் பணப் பற்றாக்குறை... எளிதாகச் சமாளிக்க 8 வழிகள்!

Post by பாலாஜி Thu Aug 28, 2014 12:24 pm

First topic message reminder :

ஒண்ணுல இருந்து இருபது வரைக்கும் கொண்டாட்டம் கொண்டாட்டம், இருபத்தொண்ணுல இருந்து திண்டாட்டம்... கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் பாடிய இந்தப் பாடல் வெளிவந்து அரை நூற்றாண்டுகளுக்கு மேலாகிவிட்டது. ஆனால், அந்தப் பாடலின் கருத்து இன்றைக்கும் நூறு சதவிகிதம் நமக்குப் பொருந்தி வருகிறது.

ஒன்றாம் தேதி வாங்கும் சம்பளத்தைப் பார்த்துப் பார்த்துச் செலவு செய்தாலும் 20 தேதிக்குமேல் திண்டாட்டமாகவே இருக்கிறது நம்மில் பலருக்கு. 'கையில வாங்கினேன். பையில போடல; காசு போன இடம் தெரியலை’ என்று திருச்சி லோகநாதன் பாடிய பாடலை பாட வேண்டிய நிலையில்தான் இருக்கிறது நம் வாழ்க்கை. எனவே, 21-ம் தேதிக்குப்பின் யாரிடம் கடன் கேட்பது என்று யோசிக்க ஆரம்பித்துவிடுவோம்.

இந்தப் பிரச்னையிலிருந்து நாம் எப்படித் தப்பிப்பது? என நிதி ஆலோசகர் வி.சங்கரிடம் கேட்டோம். விளக்கமாக எடுத்துச் சொன்னார் அவர்.

நடுத்தரக் குடும்பத்தின் பெரிய பிரச்னையே மாத கடைசியில் கடன் வாங்காமல் சமாளிப்பது எப்படி என்பதுதான். இந்தப் பிரச்னையை எல்லாராலும் எளிதில் சமாளிக்க முடியும். ஆனால், உங்கள் பழக்கவழக்கத்தைக் கொஞ்சம் மாற்றிக்கொள்ள வேண்டும். என்னென்ன செய்யவேண்டும் என்பதை பாயின்ட் பை பாயின்டாகச் சொல்கிறேன்.

1. சம்பளம் வாங்கியவுடன் பட்ஜெட் போட வேண்டும். பட்ஜெட்டில் எழுதியதை அப்படியே பின்பற்ற வேண்டும். அதாவது, கல்விக் கட்டணம் ஒவ்வொரு மாதமும் 15-ம் தேதி செலுத்த வேண்டும் என்று வைத்துக்கொள்வோம். உங்களுக்கு 5-ம் தேதியே சம்பளம் வந்துவிடுகிறது என வைத்துக்கொள்வோம். சம்பளம் வந்தவுடன் இதைச் செலுத்திவிட வேண்டும். 15-ம் தேதிதானே, அன்றைக்கு கட்டினால் போதாதா என்று நினைக்கக் கூடாது. இப்படியே தள்ளிப்போட்டுக்கொண்டே போவது பிரச்னைகளை நாமே வரவழைத்துக்கொள்கிற மாதிரி ஆகிவிடும். இதனால் உரிய நேரத்தில் பணத்தைக் கட்டமுடியாத நிலைகூட நமக்கு வரலாம். அதனால் அபராதம் செலுத்தவேண்டிய சிக்கலும் வந்து சேரலாம். இந்தச் சிக்கலுக்கு எல்லாம் நாம் வழிவிடவே கூடாது.

2. சம்பளம் வந்ததும் அத்தியாவசி யமான செலவுகள் என்னென்ன, தவிர்க்கக்கூடிய செலவுகள் என்னென்ன என்பதைப் பட்டியலிட வேண்டும். வீட்டு வாடகை, மளிகைப் பொருட்கள் வாங்குவது, இ.எம்.ஐ செலுத்துவது, மருத்துவம் போன்றவற்றுக்கான பணத்தை எந்தக் காரணம் கொண்டும் வேறு தேவைகளுக்காகப் பயன்படுத்தக் கூடாது.

3. கட்டாயம் செய்யவேண்டிய செலவுகளுக்கான பணத்தை சம்பளம் வந்தவுடன் ஒதுக்கிவைத்துவிட வேண்டும். இதுபோக, மீதமுள்ள பணம் கையில் எவ்வளவு இருக்கிறது என்பதைப் பார்க்க வேண்டும். இந்த மீதமுள்ள பணத்தில் என்னென்ன செலவுகள் செய்யலாம், என்னென்ன செலவுகளை செய்யக்கூடாது என்பதைத் திட்டமிட்டுக்கொள்ள வேண்டும். அதாவது, அடிக்கடி ஹோட்டலுக்குப் போவது, ஷாப்பிங் செய்வது, சுற்றுலா போவது போன்ற செலவுகளைத் தவிர்க்கலாம்.

4. ஒவ்வொரு மாதமும் சம்பளம் வந்தவுடன், ஒரு சிறிய அளவு பணத்தை எடுத்து தனியாக ஒதுக்கி, ரிசர்வ் ஃபண்டாக வைத்துவிட வேண்டும். இதை எளிதில் எடுக்க முடியாதபடி வைத்திருப்பது நல்லது. உதாரணமாக, வேறு ஒரு வங்கிக் கணக்கில் அந்தப் பணத்தை வைத்துவிடலாம். இந்தப் பணத்தை மிக மிக அவசர தேவைகள் ஏற்பட்டாலொழிய, 20-ம் தேதிக்கு முன்பு தொடவே கூடாது. இப்படி ஒவ்வொரு மாதமும் சம்பளம் வாங்கிய வுடன் குறிப்பிட்ட அளவு பணத்தைப் போட்டுவைப்பது ஆபத்பாந்தவனாக உதவும்.

ரிசர்வ் ஃபண்ட்தான் இருக்கிறதே என்று நினைத்து 20 தேதிக்குள் தாம்தூம் என்று செலவழிக்கக் கூடாது. அவசரத்துக்கு மட்டுமே என ஒதுக்கிய அந்தப் பணம் ஒருவேளை பயன்படவில்லை எனில், அதை அந்தக் கணக்கிலேயே அப்படியே வைத்துவிடலாம். இப்படி ஒவ்வொரு மாதமும் சேரும் பணத்தை நீண்ட நாள் சேமிப்பாக மாற்றலாம்.

5. எப்போதுமே குறைந்த அளவில் கடனை வைத்துக்கொள்வது நல்லது. வீட்டுக் கடன் போன்ற சொத்து சேர்க்க உதவும் கடன்கள் தவிர்த்து, பிற கடன்கள் அனைத்துமே தேவை இல்லாத கடன்கள்தான். இதைத் தவிர்த்து, வாகனக் கடன், தனிநபர் கடன், நகைக் கடன் அனைத்துமே அதிகமான வட்டி விகிதத்தில்தான் கிடைக்கிறது. இந்தமாதிரியான கடன்களை வாங்கும்போது அதிகமான வட்டியைச் செலுத்தவேண்டியிருக்கும். இதனாலும் பட்ஜெட்டில் பற்றாக்குறை ஏற்பட்டு மாத கடைசியில் பிரச்னை உண்டாகும்.

ஹோம் பட்ஜெட் :மாத கடைசியில் பணப் பற்றாக்குறை... எளிதாகச் சமாளிக்க 8 வழிகள்! - Page 4 Nav60c
6. மளிகைப் பொருட்களை தினம் தினம் வாங்குவதால் நமக்கு நஷ்டம்தான். இதற்குப் பதில் மொத்தமாக வாங்கினால் கணிசமான பணத்தை மிச்சப்படுத்த முடியும். சம்பளம் வந்தவுடன் ஒரு மாதத்துக்குத்  தேவையான பொருட்களை மொத்தமாக வாங்கிவிடலாம். மொத்த விலைக் கடைகளில் மளிகைப் பொருட்களை வாங்கும்போது ஒரு மாதத்துக்கு 200 - 300 ரூபாய் வரை மிச்சமாகும். தவிர, மாத கடைசியில் கையில் பணம் இல்லையென்றால் பொருட்களை வாங்க முடியாது. இதனால் கடன் வாங்கவேண்டிய சூழ்நிலை உருவாகும்.

7. கையிலிருக்கும் பணத்தை வைத்துதான் செலவுகளை முடிவுசெய்ய வேண்டும். உதாரணமாக, அடுத்த வாரம் 2 ஆயிரம் ரூபாய் கூடுதலாகக் கிடைக்கும் எனில், உடனே எங்கு ஷாப்பிங் போகலாம், என்ன பொருளை வாங்கலாம் எனத் திட்டமிடக்கூடாது. ஏனெனில், அந்தப் பணம் வராமல் போவதற்கு  வாய்ப்புள்ளது. எனவே, கையில் உள்ளதைவைத்து திட்டமிட்டு சிறப்பாக வாழ்வதே புத்திசாலித்தனம்.

8. எல்லாவற்றுக்கும் மேலாக, சிக்கனமான வாழ்க்கைமுறைதான் அடுத்தவரிடம் கையேந்தாத நிலைமையை நமக்குத் தரும். விரும்பியதையெல்லாம் அனுபவித்தால் பணம் செலவழியவே செய்யும். இதனால் மாத கடைசியில் பணப் பற்றாக்குறை வரவே செய்யும். எனவே, சிக்கனத்துக்கான வழிவகைகளை அவசியம் தெரிந்துகொண்டு அதன்படி நடப்பது நல்லது'' என்றார் சங்கர்.

கிடைக்கும் சம்பளத்தைத் திட்டமிட்டு செலவு செய்தால், மாத கடைசியில் பணமுடையா இருக்கே என்று கவலைப்படாமல், நிம்மதி யாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கலாம்.

-முக நூல்
ந. விகடன்

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

ஹோம் பட்ஜெட் :மாத கடைசியில் பணப் பற்றாக்குறை... எளிதாகச் சமாளிக்க 8 வழிகள்! - Page 4 Empty Re: ஹோம் பட்ஜெட் :மாத கடைசியில் பணப் பற்றாக்குறை... எளிதாகச் சமாளிக்க 8 வழிகள்!

Post by ayyasamy ram Thu Aug 28, 2014 9:38 pm

பெருமாள் குபரனிடம் கல்யாணத்துக்கு வாங்கிய
கடனை அடைக்க முடியாமல் திண்டாடுகிறார்
என்று புராண கதை சொல்வார்கள்.
-
அதனால் கடன் வாங்கும்முன் நன்றாக யோசித்து
பின்னர் செயல்படுங்கள்...
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84175
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

ஹோம் பட்ஜெட் :மாத கடைசியில் பணப் பற்றாக்குறை... எளிதாகச் சமாளிக்க 8 வழிகள்! - Page 4 Empty Re: ஹோம் பட்ஜெட் :மாத கடைசியில் பணப் பற்றாக்குறை... எளிதாகச் சமாளிக்க 8 வழிகள்!

Post by krishnaamma Fri Aug 29, 2014 11:23 am

ayyasamy ram wrote:பெருமாள் குபரனிடம் கல்யாணத்துக்கு வாங்கிய
கடனை அடைக்க முடியாமல் திண்டாடுகிறார்
என்று புராண கதை சொல்வார்கள்.
-
அதனால் கடன் வாங்கும்முன் நன்றாக யோசித்து
பின்னர் செயல்படுங்கள்...
மேற்கோள் செய்த பதிவு: 1083498

ஆமாம் ராம் அண்ணா புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஹோம் பட்ஜெட் :மாத கடைசியில் பணப் பற்றாக்குறை... எளிதாகச் சமாளிக்க 8 வழிகள்! - Page 4 Empty Re: ஹோம் பட்ஜெட் :மாத கடைசியில் பணப் பற்றாக்குறை... எளிதாகச் சமாளிக்க 8 வழிகள்!

Post by Aarthi Krishna Fri Aug 29, 2014 1:45 pm

நல்ல பதிவு. இந்த கால வாழ்விற்கு, மிகவும் முக்கியமான தகவல்களை பகிர்தமைக்கு நன்றி பாலாஜி அவர்களே.அவை ஒவ்வொன்றையும் சிறந்த முறையில், எடுத்து கூறியதிற்கும் , மற்றும் உங்கள் அனுபவங்களை எங்களுடன் பகிர்தமைக்கு நன்றி அம்மா.
Aarthi Krishna
Aarthi Krishna
பண்பாளர்

பதிவுகள் : 92
இணைந்தது : 08/08/2012

Back to top Go down

ஹோம் பட்ஜெட் :மாத கடைசியில் பணப் பற்றாக்குறை... எளிதாகச் சமாளிக்க 8 வழிகள்! - Page 4 Empty Re: ஹோம் பட்ஜெட் :மாத கடைசியில் பணப் பற்றாக்குறை... எளிதாகச் சமாளிக்க 8 வழிகள்!

Post by பாலாஜி Fri Aug 29, 2014 1:59 pm

Aarthi Krishna wrote:நல்ல பதிவு. இந்த கால வாழ்விற்கு, மிகவும் முக்கியமான தகவல்களை பகிர்தமைக்கு நன்றி பாலாஜி அவர்களே.அவை ஒவ்வொன்றையும் சிறந்த முறையில், எடுத்து கூறியதிற்கும் , மற்றும் உங்கள் அனுபவங்களை எங்களுடன் பகிர்தமைக்கு நன்றி அம்மா.
மேற்கோள் செய்த பதிவு: 1083591

நன்றி .... நன்றி

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

ஹோம் பட்ஜெட் :மாத கடைசியில் பணப் பற்றாக்குறை... எளிதாகச் சமாளிக்க 8 வழிகள்! - Page 4 Empty Re: ஹோம் பட்ஜெட் :மாத கடைசியில் பணப் பற்றாக்குறை... எளிதாகச் சமாளிக்க 8 வழிகள்!

Post by krishnaamma Fri Aug 29, 2014 3:47 pm

Aarthi Krishna wrote:நல்ல பதிவு. இந்த கால வாழ்விற்கு, மிகவும் முக்கியமான தகவல்களை பகிர்தமைக்கு நன்றி பாலாஜி அவர்களே.அவை ஒவ்வொன்றையும் சிறந்த முறையில், எடுத்து கூறியதிற்கும் , மற்றும் உங்கள் அனுபவங்களை எங்களுடன் பகிர்தமைக்கு நன்றி அம்மா.
மேற்கோள் செய்த பதிவு: 1083591

ஒ......பார்த்துட்டியா ஆர்த்தி புன்னகை தேங்க்ஸ் மா ! அன்பு மலர் வேற ஏதும் பாயிண்ட் இருக்கா ஆர்த்தி? சொல்லு !

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஹோம் பட்ஜெட் :மாத கடைசியில் பணப் பற்றாக்குறை... எளிதாகச் சமாளிக்க 8 வழிகள்! - Page 4 Empty Re: ஹோம் பட்ஜெட் :மாத கடைசியில் பணப் பற்றாக்குறை... எளிதாகச் சமாளிக்க 8 வழிகள்!

Post by Aarthi Krishna Sat Aug 30, 2014 7:30 pm

krishnaamma wrote:
Aarthi Krishna wrote:நல்ல பதிவு. இந்த கால வாழ்விற்கு, மிகவும் முக்கியமான தகவல்களை பகிர்தமைக்கு நன்றி பாலாஜி அவர்களே.அவை ஒவ்வொன்றையும் சிறந்த முறையில், எடுத்து கூறியதிற்கும் , மற்றும் உங்கள் அனுபவங்களை எங்களுடன் பகிர்தமைக்கு நன்றி அம்மா.
மேற்கோள் செய்த பதிவு: 1083591

ஒ......பார்த்துட்டியா ஆர்த்தி புன்னகை தேங்க்ஸ் மா ! அன்பு மலர் வேற ஏதும் பாயிண்ட் இருக்கா ஆர்த்தி? சொல்லு !
மேற்கோள் செய்த பதிவு: 1083599

எனக்கு தெரிந்து, நீங்க எல்லா பாயிண்ட்டும் cover பண்ணிடிங்க அம்மா. மளிகை வாங்க போவதற்கும் முன் "list" எழுத வேண்டும் என்று சொன்னது மிகவும் முக்கியமானது. நீங்க சொன்னது போல் நாங்களும் "list" போட்டுதான் கடைக்கு போவோம் - with techology   சூப்பருங்க

"paper"இல் எழுதுவதற்கு பதிலாக, இந்த "list"யை , நாங்கள் "smart phone"இல் எழுதுவோம். ஆதாவது, "https://keep.google.com/" இந்த இணையதளத்தில் "list" எழுதினால், எங்கள்  "smart phone"இல் "sync" ஆகிவிடும். அதேபோல் "smart phone"இல் எழுதினால், இந்த இணையதளத்தில் "https://keep.google.com/" "sync" ஆகிவிடும்.

smart phone app link https://play.google.com/store/apps/details?id=com.google.android.keep

ஆகையால், கடைக்கும் போகும் பொது, "smart phone"இல் இருக்கும் இந்த "list"யை  பார்த்துதான், "Shopping" செய்வோம். மீண்டும் சந்திப்போம்
Aarthi Krishna
Aarthi Krishna
பண்பாளர்

பதிவுகள் : 92
இணைந்தது : 08/08/2012

Back to top Go down

ஹோம் பட்ஜெட் :மாத கடைசியில் பணப் பற்றாக்குறை... எளிதாகச் சமாளிக்க 8 வழிகள்! - Page 4 Empty Re: ஹோம் பட்ஜெட் :மாத கடைசியில் பணப் பற்றாக்குறை... எளிதாகச் சமாளிக்க 8 வழிகள்!

Post by krishnaamma Sat Aug 30, 2014 8:37 pm

Aarthi Krishna wrote:
krishnaamma wrote:
Aarthi Krishna wrote:நல்ல பதிவு. இந்த கால வாழ்விற்கு, மிகவும் முக்கியமான தகவல்களை பகிர்தமைக்கு நன்றி பாலாஜி அவர்களே.அவை ஒவ்வொன்றையும் சிறந்த முறையில், எடுத்து கூறியதிற்கும் , மற்றும் உங்கள் அனுபவங்களை எங்களுடன் பகிர்தமைக்கு நன்றி அம்மா.
மேற்கோள் செய்த பதிவு: 1083591

ஒ......பார்த்துட்டியா ஆர்த்தி புன்னகை தேங்க்ஸ் மா ! அன்பு மலர் வேற ஏதும் பாயிண்ட் இருக்கா ஆர்த்தி? சொல்லு !
மேற்கோள் செய்த பதிவு: 1083599

எனக்கு தெரிந்து, நீங்க எல்லா பாயிண்ட்டும் cover பண்ணிடிங்க அம்மா. மளிகை வாங்க போவதற்கும் முன் "list" எழுத வேண்டும் என்று சொன்னது மிகவும் முக்கியமானது. நீங்க சொன்னது போல் நாங்களும் "list" போட்டுதான் கடைக்கு போவோம் - with techology   சூப்பருங்க

"paper"இல் எழுதுவதற்கு பதிலாக, இந்த "list"யை , நாங்கள் "smart phone"இல் எழுதுவோம். ஆதாவது, "https://keep.google.com/" இந்த இணையதளத்தில் "list" எழுதினால், எங்கள்  "smart phone"இல் "sync" ஆகிவிடும். அதேபோல் "smart phone"இல் எழுதினால், இந்த இணையதளத்தில் "https://keep.google.com/" "sync" ஆகிவிடும்.

smart phone app link https://play.google.com/store/apps/details?id=com.google.android.keep

ஆகையால், கடைக்கும் போகும் பொது, "smart phone"இல் இருக்கும் இந்த "list"யை  பார்த்துதான், "Shopping" செய்வோம். மீண்டும் சந்திப்போம்
மேற்கோள் செய்த பதிவு: 1083750

Good சூப்பருங்க சூப்பர் ஆர்த்திபுன்னகை வி.பொ.பா. Techology inproved so much புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஹோம் பட்ஜெட் :மாத கடைசியில் பணப் பற்றாக்குறை... எளிதாகச் சமாளிக்க 8 வழிகள்! - Page 4 Empty Re: ஹோம் பட்ஜெட் :மாத கடைசியில் பணப் பற்றாக்குறை... எளிதாகச் சமாளிக்க 8 வழிகள்!

Post by krishnaamma Thu Jan 08, 2015 12:32 am

vimandhinikkaga idhai mele kondu varen புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஹோம் பட்ஜெட் :மாத கடைசியில் பணப் பற்றாக்குறை... எளிதாகச் சமாளிக்க 8 வழிகள்! - Page 4 Empty Re: ஹோம் பட்ஜெட் :மாத கடைசியில் பணப் பற்றாக்குறை... எளிதாகச் சமாளிக்க 8 வழிகள்!

Post by விமந்தனி Thu Jan 08, 2015 12:35 am

தாங்க்ஸ் கிருஷ்ணாம்மா...

ஹோம் பட்ஜெட் :மாத கடைசியில் பணப் பற்றாக்குறை... எளிதாகச் சமாளிக்க 8 வழிகள்! - Page 4 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஹோம் பட்ஜெட் :மாத கடைசியில் பணப் பற்றாக்குறை... எளிதாகச் சமாளிக்க 8 வழிகள்! - Page 4 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312ஹோம் பட்ஜெட் :மாத கடைசியில் பணப் பற்றாக்குறை... எளிதாகச் சமாளிக்க 8 வழிகள்! - Page 4 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

ஹோம் பட்ஜெட் :மாத கடைசியில் பணப் பற்றாக்குறை... எளிதாகச் சமாளிக்க 8 வழிகள்! - Page 4 Empty Re: ஹோம் பட்ஜெட் :மாத கடைசியில் பணப் பற்றாக்குறை... எளிதாகச் சமாளிக்க 8 வழிகள்!

Post by krishnaamma Thu Jan 08, 2015 12:43 am

விமந்தனி wrote:தாங்க்ஸ் கிருஷ்ணாம்மா...
மேற்கோள் செய்த பதிவு: 1114135

ஏதோ என்னால் ஆனது புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஹோம் பட்ஜெட் :மாத கடைசியில் பணப் பற்றாக்குறை... எளிதாகச் சமாளிக்க 8 வழிகள்! - Page 4 Empty Re: ஹோம் பட்ஜெட் :மாத கடைசியில் பணப் பற்றாக்குறை... எளிதாகச் சமாளிக்க 8 வழிகள்!

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum