ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Yesterday at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Yesterday at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Yesterday at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Fri Nov 15, 2024 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Fri Nov 15, 2024 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 3:54 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வீண்கோபம் வேண்டாம்

+3
பிளேடு பக்கிரி
M.M.SENTHIL
jesifer
7 posters

Go down

வீண்கோபம் வேண்டாம் Empty வீண்கோபம் வேண்டாம்

Post by jesifer Wed Aug 27, 2014 1:55 pm

வீண்கோபம் வேண்டாம்

கோபம் நம்மில் காணப்படும் ஒரு குறை. கோபத்திலே எதை ஆரம்பித்தாலும், அது அவமானத்தில்தான் முடியும்.
யாருக்கு வேண்டுமானலும் கோபம் வரலாம். ஆனால், சரியானவரிடம்-சரியான காரணத்துக்கு சரியான நேரத்தில்-சரியான வித்ததில் கோபம் வருவது கடினம்.
கோபம் வரும்போதெல்லாம் அது ஒரு காயத்தை ஏற்படுத்தாமல் போகாது என்பது முன்கோபிகளிடம் மாட்டி அவதிபட்டவர்களுக்குத்தான் தெரியும். ஒரு தந்தை தன் கோபக்கார மகனைத் திருத்த முயன்று தோற்றுப்போனார்.
கடைசியாக, மாதத்தின் முதல் தேதியில் அவனிடம் 31 கட்டங்கள் போடப்பட்ட ஒரு மரப்பலகையும், கொஞ்சம் ஆணிகளையும் கொடுத்தார், பிறரிடம் ஒவ்வொரு முறை கோப ப்படும்போதும் ஒரு ஆணி வீதம் அந்தந்த தேதிக்கான கட்டத்தில் அடிக்கச் சொன்னர்.
அவ்வாறே அந்த பையனும் ஆணிகளை அடித்துக் கொண்டே வந்தான். முதல் நாளில் 12 ஆணிகளை அடித்தவன், அடுத்தடுத்த தேதிகளில் தன் கோபத்தை தானே குறைத்துக் கொள்ள, ஆணியடிப்பதும் பத்து, ஏழு, நான்கு என்று குறைந்தது. 15-ம் தேதிக்குப் பின் அவன் கோபப்படவுமில்லை, ஆணி ஏதுவும் அடிக்கவுமில்லை.
பின்பு தன் தந்தையிடம் அந்த பலகையைக் காட்ட அவரும் மிகவும் சந்தோஷப்பட்டார். சரி… நல்லது. இனி, அடித்த ஆணிகளைப் பிடுங்கு என்றார், அவனும் அவ்வாறே பிடுங்கினான்.
எல்லா ஆணியையும் பிடுங்கிய பின், இப்போது இந்த பலகையில் உனக்கு என்ன வித்தியாசம் தெரிகிறது?
நீ ஆணியைப் பிடுங்கிய இடத்தில் எல்லாம் பள்ளங்கள் தெரியவில்லையா? இதேபோல் நீ கோபப்படும் போதெல்லாம் பிறர் மனதில் ஒரு காயத்தை ஏற்படுத்துகிறாய். அது அவர்களுக்கு மட்டும்தான் தெரியும். உனக்கு தெரியாது, என்று சொன்னார் தந்தை. பையன் மவுனமானான்.
பலருக்கு இதயநோய், ரத்தக்கொதிப்பு, மூட்டுவலி, மனநோய், பக்கவாதம் மற்றும் தோல் நோய்கள் முதலியன வர காரணமே கோபம்தான்.
கோபம் என்பது கொடியது அன்பை அழிப்பதில் வல்லது. அது மற்றவர்களைவிட, தன் சொந்த பந்தங்களைத்தான் அதிகம் சேதப்படுத்தும். சண்டை, கொலை, கற்பழிப்பு, விவாகரத்து போன்ற மோசமான விளைவுகளை உண்டாக்கும்.
பலவிதமான கோபக்காரர்கள் நாம் அன்றாடம் வாழ்வில் காணலாம். திடீர் கோபத்தை முன் கோபம் என்று என்கிறோம். இதை மைக்ரோவேவ் கோபம் என்று கூறுகின்றனர். மைக்ரோவேவ் அடுப்பு போல் சீக்கிரம் சூடாகி திடுதிடுவென சூடு தணிந்துவிடுவார்கள்.
என் கோபம், ஒரே நிமிடம்தான் என்று சிலர் மார்தட்டி சொல்வது உண்டு. ஆனால், துப்பாக்கி வெடிக்கவும் ஒரே விநாடி போதும். அந்த ஒரு விநாடியில் அது பலரையும் கொன்றுவிடலாம். அப்படித்தான் இக்கோபமும் என்பதை நாம் உணரவேண்டும்.
கட்டுப்பாடற்ற கோபக்காரர்கள், மற்றவர்கள் என்ன சொன்னாலும் கேட்க மாட்டார்கள். இப்படிப்பட்டவர்கள், பிரேக் இல்லாத வாகனத்தை வேகமாக ஓட்டுவதற்கு சம்மானவர்கள், தீராத கோபக்காரர்கள். தங்கள் கோபத்தை சேமித்து வைத்து பழிவாங்க சரியான நேரத்தை எதிர்பார்த்து காத்திருப்பார்கள்.
நம் கோபம் நியாயமானதா..இல்லையா? என்று தெரிந்துகொள்ள சில பரிசோதனைகள் உண்டு.
1. அது தனி நபர் குறித்தா?
2. அதில் பழிவாங்கும் நோக்கம் உண்டா?
3. மன்னிக்கும் எண்ணம் இல்லையா?
4. உணர்ச்சி வசப்பட்டதால் வந்ததா?
ஆம் என்றால் அது ஆபத்தான கோபம்தான், கோபத்தை ஒழிக்க வேண்டுமானால், அதை நியாயப்படுத்த முயற்சிக்கக் கூடாது.
கெடுதல் செய்தவர்களை மன்னித்தால், கோபம் வராது. நமக்கு தீமை செய்தவர்களை அவ்வப்போது மறந்துவிட்டால் கோபம் சேர வழியே இல்லை.
ஒருவர் வீட்டு மேசையில் பூட்டப்பட்ட இரண்டு அறைகள் இருக்கும். ஒன்றுக்கு சாவி உண்டு. அடுத்ததுக்கு சாவி இல்லை. சாவி உள்ள அறையில் தனக்குப்பிடித்தவர்களின் பெயர்களையும் அவர்கள் செய்த நன்மையையும் சிறு காகித துண்டுகளில் எழுதி போடுவாராம். அந்த மேசை அறையைத் திறந்து, துண்டு காகிதங்களை அடிக்கடி எடுத்து படிப்பாராம்.
அதே போல், சாவி இல்லாத அறையில் பலகை இடுக்கின் வழியே தனக்குப் பிடிக்காதவர்களின் பெயர்களையும், அவர்கள் செய்த தீமைகளையும் எழுதி போடுவாராம். கோபத்தில் எழுதி போட்டவை இவை. சாவி இல்லாத இந்த அறையை அவர் திறப்பதே இல்லை. தனக்கு தீமை செய்தவர்களைப்பற்றி நினைப்பதும் இல்லை. இதனால் அவருக்கு எதிரிகள் எவருமே இருந்ததில்லை என்பர்.
கோபத்துக்கு நல்ல மருந்து பொறுமைதான். எப்பேர்ப்பட்ட கோபக்காரரையும், பொறுமை சாந்தப்படுத்தும். அமெரிக்க ஜனாதிபதியாக ஆபிரகாம் லிங்கன் பதவி ஏற்றவுடன். அவர் ஜனாதிபதியானதை விரும்பாத பணக்கார செனட் உறுப்பினர் எழுந்து நின்று, உங்கள் குடும்பத்தை எனக்கு நன்றாக தெரியும். உங்களின் தந்தை செய்து கொடுத்த செருப்பு இன்னும் நன்றாகவே உழைக்கிறது. இப்போதுகூட அதைத்தான் நான் அணிந்திருக்கிறேன் என்று லிங்கனை இழிவுபடுத்தும் நோக்கத்துடன் பேச,
லிங்கன் எழுந்து, உங்களுக்கு மிக்க நன்றி, அந்த காலணியில் பழுது எதுவும் இருந்தால் சொல்லுங்கள், நான் அதை சரிசெய்து கொடுத்துவிடுகிறேன். அந்த தொழிலை என் தந்தையிடம் இருந்து நன்றாகவே கற்று இருக்கிறேன், என்ன்று சொல்ல, அந்த திமிர்பிடித்த உறுப்பினர் லிங்கனிடம் உங்கள் பொறுமையால் என் ம்மதையைக் கொன்றுவிட்டீர்கள். என்னை மன்னித்துவிடுங்கள், என்று மன்னிப்பு கேட்டாராம். கோபக்காரன், சண்டையை எழுப்புகிறான், நீடிய சாந்தம் உள்ளவனோ, சண்டையை அமர்த்துகிறான்.
எனவே, கோபத்தை விட்டொழிக்க முயற்சி எடுக்க வேண்டும். நாம் கோபத்தை காட்டாவிட்டால், நம்மை குறைவாக மதிப்பார்கள் என்று நினைப்பதை மாற்ற வேண்டும்.
நான் பெரிய கோபக்காரன் தெரியுமா? என்று வீம்பு பேசுவதை நிறுத்த வேண்டும். நான் அன்று மிகவும் நெருக்கடியில் இருந்தேன். நீங்களும் என் கோபத்தைக்கிளறி விட்டுவிட்டீர்கள். அதனால்தான் சற்று கோபப் பட்டுவிட்டேன் என்று நமது கோபத்துக்கு சமாதானம் சொல்வதை அடியோடு கைவிட வேண்டும்.
நமக்கும், மற்றவர்களுக்கும் தீமை விளைவிக்கும் கோபத்தை விட்டொழிப்பது நல்லதுதானே? நாம் ஏன் முழுமனதுடன் இந்த முயற்சியை செய்யக்கூடாது!.
jesifer
jesifer
கல்வியாளர்


பதிவுகள் : 466
இணைந்தது : 03/04/2014

Back to top Go down

வீண்கோபம் வேண்டாம் Empty Re: வீண்கோபம் வேண்டாம்

Post by M.M.SENTHIL Wed Aug 27, 2014 11:13 pm

நல்ல பகிர்வு ஜெசிபர் வீண்கோபம் வேண்டாம் 1571444738

சில சமயங்களில், கோபம் வாழ்க்கையை சிதைத்து விடும்.


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

வீண்கோபம் வேண்டாம் Empty Re: வீண்கோபம் வேண்டாம்

Post by பிளேடு பக்கிரி Wed Aug 27, 2014 11:51 pm

நல்ல பகிர்வு



வீண்கோபம் வேண்டாம் Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

வீண்கோபம் வேண்டாம் Empty Re: வீண்கோபம் வேண்டாம்

Post by சிவா Thu Aug 28, 2014 4:18 am

வீண்கோபம் வேண்டாம் 3838410834


வீண்கோபம் வேண்டாம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

வீண்கோபம் வேண்டாம் Empty Re: வீண்கோபம் வேண்டாம்

Post by T.N.Balasubramanian Thu Aug 28, 2014 4:41 am

கோபம் குடியை* கெடுக்கும் .
வீண்கோபம் வேண்டாம் 3838410834 வீண்கோபம் வேண்டாம் 3838410834
ரமணியன்

(*குடும்பம்.  )


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

வீண்கோபம் வேண்டாம் Empty Re: வீண்கோபம் வேண்டாம்

Post by ayyasamy ram Thu Aug 28, 2014 8:57 am

என்ன்று சொல்ல
-
ம்மதையைக் கொன்றுவிட்டீர்கள்

-
பிழையின்றி இருந்தால் சுவை கூடும்...
எனவே பதிவிட்டதும் ஒரு முறை படித்துப் பார்த்து
திருத்துதல் நலம்
-
பயனுள்ள பகிர்வு...
-
வீண்கோபம் வேண்டாம் 103459460
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84836
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

வீண்கோபம் வேண்டாம் Empty Re: வீண்கோபம் வேண்டாம்

Post by Dr.S.Soundarapandian Thu Aug 28, 2014 10:13 am

வீண்கோபம் வேண்டாம் 103459460 வீண்கோபம் வேண்டாம் 1571444738 மீண்டும் சந்திப்போம்


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9826
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

வீண்கோபம் வேண்டாம் Empty Re: வீண்கோபம் வேண்டாம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum