புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
'ஐஸ் பக்கெட் சவால்'  -  'ஹன்சிகாவின்' வீடியோ ! Poll_c10'ஐஸ் பக்கெட் சவால்'  -  'ஹன்சிகாவின்' வீடியோ ! Poll_m10'ஐஸ் பக்கெட் சவால்'  -  'ஹன்சிகாவின்' வீடியோ ! Poll_c10 
30 Posts - 81%
வேல்முருகன் காசி
'ஐஸ் பக்கெட் சவால்'  -  'ஹன்சிகாவின்' வீடியோ ! Poll_c10'ஐஸ் பக்கெட் சவால்'  -  'ஹன்சிகாவின்' வீடியோ ! Poll_m10'ஐஸ் பக்கெட் சவால்'  -  'ஹன்சிகாவின்' வீடியோ ! Poll_c10 
3 Posts - 8%
heezulia
'ஐஸ் பக்கெட் சவால்'  -  'ஹன்சிகாவின்' வீடியோ ! Poll_c10'ஐஸ் பக்கெட் சவால்'  -  'ஹன்சிகாவின்' வீடியோ ! Poll_m10'ஐஸ் பக்கெட் சவால்'  -  'ஹன்சிகாவின்' வீடியோ ! Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
'ஐஸ் பக்கெட் சவால்'  -  'ஹன்சிகாவின்' வீடியோ ! Poll_c10'ஐஸ் பக்கெட் சவால்'  -  'ஹன்சிகாவின்' வீடியோ ! Poll_m10'ஐஸ் பக்கெட் சவால்'  -  'ஹன்சிகாவின்' வீடியோ ! Poll_c10 
1 Post - 3%
dhilipdsp
'ஐஸ் பக்கெட் சவால்'  -  'ஹன்சிகாவின்' வீடியோ ! Poll_c10'ஐஸ் பக்கெட் சவால்'  -  'ஹன்சிகாவின்' வீடியோ ! Poll_m10'ஐஸ் பக்கெட் சவால்'  -  'ஹன்சிகாவின்' வீடியோ ! Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

'ஐஸ் பக்கெட் சவால்' - 'ஹன்சிகாவின்' வீடியோ !


   
   

Page 1 of 2 1, 2  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Aug 22, 2014 9:08 pm

'ஐஸ் பக்கெட் சவால்'  -  'ஹன்சிகாவின்' வீடியோ ! XzGoIZOT1itoqhmAlhNk+Tamil_News_797370553017

நியூயார்க்: ஐஸ் பக்கெட் சவால் என்பது அமெரிக்காவை தவிர்த்து தற்போது இந்தியாவிலும் மிகவும் பிரபலமாகிக் கொண்டிருக்கிறது. இந்த சவாலை பல பிரபலங்களும் ஏற்று கொண்டுள்ளனர். ஐஸ் பக்கெட் சவால் என்று குரல் எழுப்பிக் கொண்டு பிரபலங்கள் தங்களது தலை மேல் ஒரு பக்கெட் ஐஸ் நீரை ஊற்றிக் கொண்டு ஐஸ் பக்கெட் சவாலை பிரபலமாக்கி வருவதை நீங்கள் பார்த்திருக்கலாம். ஏன் அவர்கள் அப்படி செய்கிறார்கள் என்று தெரிந்து கொள்ளுங்கள்.

ஏ.எல்.எஸ். எனப்படும் நரம்பு சம்பந்தமான நோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும், அதற்காக நிதி திரட்டவும் தான் பிரபலங்கள் ஒரு பக்கெட் ஐஸ் நீரை தங்கள் தலையில் ஊற்றிக் கொள்கிறார்கள். அமியோட்ராபிக் லேட்டரல் ஸ்க்லீரோசிஸ் என்று அழைக்கப்படும் இந்த நோய் நரம்புகளை பாதிக்கும். இந்த நோய் பாதித்தவர்களால் பேச, உணவை விழுங்க ஏன் மூச்சு விடக் கூட சிரமமாக இருக்கும். அவர்களின் கட்டுப்பாட்டில் எந்த செயல்களும் இருக்காது. ஏ.எல்.எஸ். நோய் ஏற்பட்டால் அதிகபட்சம் 39 மாதங்கள் தான் உயிருடன் இருக்க முடியும். இந்த வகை நோயாளிகளில் 4 சதவீதம் பேரே 10 ஆண்டுகளை தாண்டி வாழ்வார்கள். உலக மக்கள் தொகையில் லட்சத்தில் இருவருக்கு ஏ.எல்.எஸ். நோய் ஏற்படுகிறது என்று கருதப்படுகிறது.

பிரபல எழுத்தாளரான இங்கிலாந்தை சேர்ந்த ஸ்டீபன் ஹாக்கிங் ஏ.எல்.எஸ். நோயால் பாதிக்கப்பட்டபோதிலும் 50 ஆண்டுகளுக்கும் மேல் தாக்குப்பிடித்துள்ளார். இது மிகவும் அரிது என்று கூறுகிறார்கள் மருத்துவர்கள். இந்த ஏ.எல்.எஸ். நோய் குறித்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும், சிகிச்சைக்கு நிதி திரட்டவும் தான் இந்த ஐஸ் பக்கெட் சவால் விடுக்கப்படுகிறது. இந்த சவால் தற்போது மகிவும் பிரபலமாகி வருவதுடன் நிதியும் குவிகிறது. ஐஸ் பக்கெட் சவாலை எதிர்கொள்பவர்கள் தங்கள் மீது குளிர்ந்த நீரை ஊற்றிக் கொண்ட பிறகு 3 பேருக்கு ஐஸ் பக்கெட் சவால் விடுக்க வேண்டும். அவர்கள் சவாலை ஏற்காவிட்டால் 100 அமெரிக்க டாலரை ஏ.எல்.எஸ். அசோசியேஷனுக்கு நன்கொடையாக வழங்க வேண்டும்.

அமெரிக்காவைச் சேர்ந்த பேஸ்பால் வீரரும், ஏ.எல்.எஸ். நோயாளியுமான பீட் ஃபிராட்ஸ் ஐஸ் பக்கெட் சவாலை அறிமுகப்படுத்தி சமூக வலைதளங்களில் வெளியிட்டார். அவருக்கு இந்த ஐடியாவை அவரது நண்பர் ஒருவர் கொடுத்துள்ளார். கடந்த ஜூன் மாதம் 1ம் தேதி முதல் ஆகஸ்ட் 13ம் தேதி வரை ஐஸ் பக்கெட் சவாலை ஏற்றுக் கொண்ட 10 லட்சத்திற்கும் மேற்பட்டோரின் வீடியோக்கள் ஃபேஸ்புக்கில் ஷேர் செய்யப்பட்டுள்ளது. இந்த ஐஸ் பக்கெட் சவாலை அடுத்து ஏ.எல்.எஸ். அசோசியேஷனுக்கு இதுவரை சுமார் ரூ. 139 கோடி நிதி கிடைத்துள்ளது. இணையதளத்தில் தற்போது இந்த ஐஸ் பக்கெட் சவால் தீயாக பரவிக் கொண்டிருக்கிறது. பலரும் இந்த சவாலை ஏற்று வருகின்றனர்.

நன்றி : தினகரன்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Aug 22, 2014 9:27 pm

'ஐஸ் பக்கெட் சவால்'  -  'ஹன்சிகாவின்' வீடியோ ! NPnjC6APQA29KzMhyyCV+bilgates_2073715g

தலையில் தண்ணீர் ஊற்றிக் கொண்டு குளிப்பது நம் ஊரில் சிறு குழந்தை கூட செய்யும் செயல். அதிலும் குளிர் காலங்களில் சில்லென்ற பச்சைத் தண்ணீரை, மூச்சைப் பிடித்துக் கொண்டு, தலையில் ஊற்றிக் குளித்த அனுபவம் நம்மில் பலருக்கு இருக்கும். கோயில் திருவிழாக்களின்போது, அதிகாலையிலோ, நள்ளிரவிலோ, தலையில் மஞ்சள் தண்ணீரை ஊற்றிக் கொண்டு வலம் வருபவர்களையும் பார்த்திருப்போம். ஆனால் ஒரு பக்கெட்டில், ஐஸ் கட்டிகள் கலந்த, கரைந்த தண்ணீரை தலையில் ஊற்றிக் கொள்ளும் தைரியம் உங்களுக்கு இருக்கிறதா?

இதுதான் ஐஸ் பக்கெட் சவால் (ice bucket challenge). உலகம் முழுவதிலும் தற்போது பலதரப்பட்ட மக்கள் இந்த ஐஸ் பக்கெட் சவாலை கையிலெடுத்துள்ளனர். அதுவும் நற்செயலுக்காக.

காரணம்?

ஏ.எல்.எஸ் (Amyotrophic lateral sclerosis) எனப்படும் நோயைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும், அந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்காக நிதி சேர்க்கவும் இந்த ஐஸ் பக்கெட் சவாலை பலர் மேற்கொண்டுள்ளனர். இந்த நோயால் நரம்பு மண்டலம் பாதிப்படைவதால், நோயாளிகளுக்கு நடப்பது, பேசுவது போன்ற செயல்கள் மிகக் கடினம். ஒரு கட்டத்தில் அவை சுத்தமாக நின்றும் போகும். இது மரணத்தில் முடியும் அபாயமும் உள்ளது.

விதிகள்

முதல் விதி, இந்த சவாலை ஏற்றுக் கொண்ட 24 மணிநேரத்தில் இதை செய்து முடித்து 10 டாலரை மட்டும் ஏ.எல்.எஸ் அமைப்புக்கு நன்கொடையாகத் தர வேண்டும். சவாலை செய்ய முடியவில்லை என்றால் 100 டாலர்களை நன்கொடையாகத் தர வேண்டும்.

ஏற்றுக் கொள்பவர்கள் முதலில் கேமராவின் முன் நின்று தாம் இந்த சவாலை ஏற்றுக் கொள்வதாக தெரிவிக்க வேண்டும். அடுத்து ஐஸ் கட்டிகள் நிறைந்த பக்கெட் அல்லது, ஐஸ் கட்டிகள் கரைந்த பக்கெட் நீரை நிறுத்தாமல் தலையில் ஊற்றிக் கொள்ளவேண்டும். அடுத்து, தனக்குத் தெரிந்த ஒருவருக்கோ, பலருக்கோ சவால் விட வேண்டும். அவ்வளவே.

இந்த சவால் விடும் முறை எப்படி, எங்கு ஆரம்பித்தது என்பது தெரியவில்லை. ஆனால் இதற்கு முன்னரே பல நல்ல காரியங்கள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த இந்த ஐஸ் பக்கெட் முறை வேறு வேறு பெயர்களில் பின்பற்றப்பட்டுள்ளது.

வைரலான வீடியோக்கள்

ஐஸ் பக்கெட் சாலஞ்சை திரை, விளையாட்டு மற்றும் அரசியல் பிரபலங்கள் பலர் செய்து வருவதால், அவர்களின் சவால் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் படுவேகமாகப் பரவி வருகின்றன. பொதுமக்கள் பலரும் தங்கள் பங்குக்கு தலையில் தண்ணீர் ஊற்றி அதை வீடியோவில் பதிவு செய்து, பகிர்ந்து வருகின்றனர். எக்குத்தப்பாக செய்து நகைச்சுவையில் முடிந்த வீடியோக்களும் உள்ளன.

மார்க் ஸக்கர்பெர்க், பில் கேட்ஸ், ஜார்ஜ் புஷ், பிரிட்னி ஸ்பியர்ஸ், ‘ராக்’ டுவைன் ஜான்சன், அண்டர்டேகர், கெவின் பீட்டர்சன், லயனல் மெஸ்ஸி என எண்ணற்ற பிரபலங்களது ஐஸ் பக்கெட் சவால் வீடியோக்கள் யூடியூபில் காணக் கிடக்கின்றன.

அமெரிக்க அதிபர் ஒபாமாவிற்கு பலரும் சவால் விட்டிருந்தனர். ஆனால், ஒபாமா, அதற்கு பதிலாக நன்கொடை அளித்து விடுவதாக உறுதியளித்துள்ளார்.

இந்தியாவிலிருந்து சானிய மிர்சா, யுவராஜ் சிங், அக்‌ஷய் குமார், பிபாஷா பாசு, அபிஷேக் பச்சன் உள்ளிட்டோர் இந்த பட்டியலில் சேர்ந்துள்ளனர். தமிழ் சினிமா நடிகைகள் ஹன்சிகா, கார்த்திகா போன்றோரும், தாங்கள் எடுத்த சவாலை ட்விட்டரில் பகிர்ந்துள்ளனர். இதில் வித்தியாசமாக சோனாக்‌ஷி சின்ஹா, தண்ணீரை மிச்சப்படுத்த வேண்டும் என்று கூறி, ஒரே ஒரு ஐஸ் கட்டியை தலையில் சாய்த்து, கண்டிப்பாக நன்கொடை வழங்குங்கள் எனக் கேட்டுக் கொண்டுள்ளார்.

குவிந்த நன்கொடை

இந்த சவால் பிரபலமானதால், ஏ.எல்.எஸ் பற்றிய விழிப்புணர்வு அதிகரித்துள்ளதாகவும், கடந்த சில வாரங்களில் மட்டும் 15.6 மில்லியன் டாலர் நன்கொடை சேர்ந்துள்ளதாகவும் ஏ.எல்.எஸ் அமைப்பு தெரிவித்துள்ளது. ஜூன் முதல் வாரத்தில் இருந்து, ஆகஸ்ட் இரண்டாம் வாரம் வரை, கிட்டத்தட்ட 1.2 மில்லியன் ஐஸ் பக்கெட் சவால் வீடியோக்கள் ஃபேஸ்புக்கில் பகிரப்பட்டுள்ளதாக ஒரு புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. மேலும் 2.2 மில்லியன் முறை, இந்த வார்த்தை தங்களது பயனர்களால் குறிப்பிடப்பட்டுள்ளதாக ட்விட்டர் தளம் தெரிவித்துள்ளது.

விமர்சனங்கள்

வழக்கம் போல, ஐஸ் பக்கெட் சாலஞ்ச் பற்றிய விமர்சனங்களும் வந்துகொண்டுதான் இருக்கின்றன. இந்த சவாலை செய்யும் பல பிரபலங்கள் நன்கொடை தரவேண்டும் என்பதை சொல்ல மறந்துவிடுகின்றனர். வெறும் பரபரப்புக்காக மட்டுமே பலர் இதை செய்து வருகின்றனர் என்ற குற்றச்சாட்டு பரவலாக எழுந்துள்ளது. எது எப்படியோ, எளிமையான ஒரு செயலின் மூலம், உலகை திரும்பிப் பார்க்க வைக்க முடியும் என்று இந்த ஐஸ் பக்கெட் சாலஞ்ச் நிரூபித்துள்ளது.



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Aug 22, 2014 9:28 pm



இது போல நிறைய பிரபலங்கள் செய்துள்ளர்களாம் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Aug 22, 2014 9:44 pm

மைக்ரோசாப்ட் நாதெள்ள சத்யா , முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி ஜியார்ஜ் புஷ்
சமிபத்தில் ஐஸ் பக்கெட் அனுபவத்தில் ஈடுபடுத்திக்கொண்டு இருக்கின்றார்கள் .
தொன்று தொட்டு நாம் இதை பழகி வந்துள்ளோம் .
சனி நீராடு என்ற பழமொழி ஒன்றுண்டு .
[color:8db4= rgb(255, 0, 0)]சனிக்கிழமை (எண்ணெயை தேய்த்துக் ) குளி என்று தப்பாக
கூறுபவர்களும் உண்டு


சனி நீராடு என்றால் என்ன ?
சனிக்கின்ற (ஓடுகின்ற ) நதியில் குளி  என்று அர்த்தம் .
ஓடுகின்ற குளிர்ந்த நீரில் , தலை முழுகி குளிக்கின்ற போது,
இப்போது கிடைக்கின்ற பலன்கள் கிடைக்கும் .
இப்போது அனுபவிக்கின்ற அலை அதிர்ச்சிகள் அளவாய்
வேண்டுமளவு  கிடைக்கும்  .
[/color]நம்மவர்களுக்கு அயல் நாட்டினர் செய்யும்  காரியங்கள்தான்
அரிதாக படுகிறது .
நம் நாட்டில் இந்த அனுபவம் அனுபவிக்க ,
குற்றாலம் அருவி இருக்கிறது . அல்லது
ஹரித்வாரில் கங்கை நதி குளியல் இருக்கிறது .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Aug 22, 2014 10:10 pm

T.N.Balasubramanian wrote:மைக்ரோசாப்ட் நாதெள்ள சத்யா , முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி ஜியார்ஜ் புஷ்
சமிபத்தில் ஐஸ் பக்கெட் அனுபவத்தில் ஈடுபடுத்திக்கொண்டு இருக்கின்றார்கள் .
தொன்று தொட்டு நாம் இதை பழகி வந்துள்ளோம் .
சனி நீராடு என்ற பழமொழி ஒன்றுண்டு .
[color:01a0= rgb(255, 0, 0)]சனிக்கிழமை (எண்ணெயை தேய்த்துக் ) குளி என்று தப்பாக
கூறுபவர்களும் உண்டு


சனி நீராடு என்றால் என்ன ?
சனிக்கின்ற (ஓடுகின்ற ) நதியில் குளி  என்று அர்த்தம் .
ஓடுகின்ற குளிர்ந்த நீரில் , தலை முழுகி குளிக்கின்ற போது,
இப்போது கிடைக்கின்ற பலன்கள் கிடைக்கும் .
இப்போது அனுபவிக்கின்ற அலை அதிர்ச்சிகள் அளவாய்
வேண்டுமளவு  கிடைக்கும்  .
[/color]நம்மவர்களுக்கு அயல் நாட்டினர் செய்யும்  காரியங்கள்தான்
அரிதாக படுகிறது .
நம் நாட்டில் இந்த அனுபவம் அனுபவிக்க ,
குற்றாலம் அருவி இருக்கிறது . அல்லது
ஹரித்வாரில் கங்கை நதி குளியல் இருக்கிறது .

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1081489

ஆமாம் ஐயா, இதோ அவர்கள் தந்த லிஸ்ட் புன்னகை

சானியா மிர்சா

பில்கேட்ஸ்

ஜார்ஜ் புஷ்

சக்கர்பெர்க்

ஹன்சிகா

சோனாக்‌ஷி சின்ஹா

அபிஷேக் பச்சன்

பிபாஷா பாசு

அக்‌ஷய் குமார்

யுவராஜ் சிங்

மந்திரா பேடி



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Aug 22, 2014 10:15 pm



இது 'ஹன்சிகாவின்' வீடியோ !



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Aug 22, 2014 10:15 pm

இன்றுதான் இதைப் பற்றிக் கேள்விப்படுகிறேன்! நன்றி அக்கா!



'ஐஸ் பக்கெட் சவால்'  -  'ஹன்சிகாவின்' வீடியோ ! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Aug 22, 2014 10:18 pm

T.N.Balasubramanian wrote:மைக்ரோசாப்ட் நாதெள்ள சத்யா , முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி ஜியார்ஜ் புஷ்
சமிபத்தில் ஐஸ் பக்கெட் அனுபவத்தில் ஈடுபடுத்திக்கொண்டு இருக்கின்றார்கள் .
தொன்று தொட்டு நாம் இதை பழகி வந்துள்ளோம் .
சனி நீராடு என்ற பழமொழி ஒன்றுண்டு .
[color:2b72= rgb(255, 0, 0)]சனிக்கிழமை (எண்ணெயை தேய்த்துக் ) குளி என்று தப்பாக
கூறுபவர்களும் உண்டு


சனி நீராடு என்றால் என்ன ?
சனிக்கின்ற (ஓடுகின்ற ) நதியில் குளி  என்று அர்த்தம் .
ஓடுகின்ற குளிர்ந்த நீரில் , தலை முழுகி குளிக்கின்ற போது,
இப்போது கிடைக்கின்ற பலன்கள் கிடைக்கும் .
இப்போது அனுபவிக்கின்ற அலை அதிர்ச்சிகள் அளவாய்
வேண்டுமளவு  கிடைக்கும்  .
[/color]நம்மவர்களுக்கு அயல் நாட்டினர் செய்யும்  காரியங்கள்தான்
அரிதாக படுகிறது .
நம் நாட்டில் இந்த அனுபவம் அனுபவிக்க ,
குற்றாலம் அருவி இருக்கிறது . அல்லது
ஹரித்வாரில் கங்கை நதி குளியல் இருக்கிறது .

ரமணியன்

சனி நீராடு என்றால் சனிக்கிழமை குளி என்பதில்லையா? இது தெரியாமல் நான் ஒவ்வொரு சனிக்கிழமையும் தேவையில்லாமல் குளித்து வருகிறேன். இனிமேலாவது இந்த முட்டாள் தனமான செயலை (குளிப்பதை) நிறுத்த வேண்டும்.

சனிக்கின்ற (ஓடுகின்ற ) நதியில் குளி என்று அர்த்தம் .

விளக்கத்திற்கு நன்றி ஐயா!



'ஐஸ் பக்கெட் சவால்'  -  'ஹன்சிகாவின்' வீடியோ ! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Aug 25, 2014 9:48 pm

சிவா wrote:இன்றுதான் இதைப் பற்றிக் கேள்விப்படுகிறேன்! நன்றி அக்கா!
மேற்கோள் செய்த பதிவு: 1081500

நானும்.................அதுதான் இங்கே பகிர்ந்தேன் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Aug 25, 2014 9:52 pm



//சனி நீராடு என்றால் சனிக்கிழமை குளி என்பதில்லையா? இது தெரியாமல் நான் ஒவ்வொரு சனிக்கிழமையும் தேவையில்லாமல் குளித்து வருகிறேன். இனிமேலாவது இந்த முட்டாள் தனமான செயலை (குளிப்பதை) நிறுத்த வேண்டும். //


சுத்தம்......................புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக