ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வழி !

+3
ஜாஹீதாபானு
M.M.SENTHIL
krishnaamma
7 posters

Go down

வழி ! Empty வழி !

Post by krishnaamma Mon Aug 25, 2014 10:52 pm

என் வாழ்க்கை பயணத்தை முடித்துக் கொள்ள தீர்மானித்து விட்டேன்.வாழ்க்கையில் பல்வேறு தோல்விகளை கண்டவன் நான்! ஆறு ஆண்டாய் வேலை தேடி அலைகிறேன்; ஒரு வேலையும் கிடைத்தபாடில்லை. குடும்பத்திலோ பணப் பிரச்னை, காதல் தோல்வி, வீட்டில், 'தண்டச்சோறு' அர்ச்சனை. அதனால் தான், இதற்கெல்லாம் ஒரே முடிவு, உயிரை முடித்துக் கொள்வது தான்.
படித்தது பி.எஸ்சி., கணிதம்; மேலே படிப்பதற்கு வீட்டில் பண வசதி இல்லை. இதை படிக்க வைப்பதற்கே அப்பாவும், அம்மாவும் படாதபாடு பட்டு விட்டனர்.

வேலை தேடுவதையே வேலையாக ஏற்று, நான் ஏறி, இறங்கிய கம்பெனிப் படிகள், என் உடம்பை மெருகேற்ற தான் உதவியதே தவிர, வேலை கிடைத்தபாடில்லை. நான் எழுதிய வங்கித் தேர்வுகளும், அரசு தேர்வுகளும் என் தலையெழுத்தை போலவே, பயன்படாத எழுத்துத் தேர்வுகளாக போய் விட்டன.
என் அப்பா ஒருவரின் சம்பளத்தில் தான் நான், அம்மா மற்றும் என், மூன்று தங்கைகள் என, ஆறு ஜீவன்கள் சாப்பிட வேண்டும். 'எனக்கு பின் எதற்காக மூணு பொம்பளப் புள்ளங்கள பெத்தே...' என அப்பாவை கேட்கும் போதெல்லாம், அவர் அளிக்கும் ஒரே பதில், 'எல்லாம் அவன் செயல்!'

சாப்பிடுவதற்காக நான் வீட்டிற்குள் நுழைந்து விட்டாலே, 'வந்துட்டான் பாரு... வக்கணையா கொட்டிக்க; தண்டச்சோறு! ஒரு வேலை தேடிக்க வழி இல்ல; சாப்பிடுறதுக்கு மட்டும் நேரம் தவற மாட்டேங்குது... தண்டச்சோறு... தண்டச்சோறு...' என்பார். ஒவ்வொரு வேளையும் சாப்பிடுவது, எனக்கு அனிச்சை செயலாகவே இருந்தது.

எது இருந்தாலும் இல்லாவிட்டாலும், எல்லாருக்கும் வருவது போல் எனக்கும் காதல் வந்தது. நான், அவளையே நினைத்து உருகிக் கொண்டிருக்க, அவளோ பெற்றோர் பார்த்த மாப்பிள்ளையை திருமணம் செய்து கொண்டு போய் விட்டாள்.பொறுத்தார் பூமி ஆள்வாராம்... இந்த பழமொழியின் உண்மையை சோதித்து பார்க்க, இனிமேலும் எனக்கு பொறுமை இல்லை.

புத்தருக்கு, போதி மரத்தடியில் ஞானம் கிடைத்தது போல, எனக்கு எங்கள் வீட்டு மாமரத்தடியில், என் துன்பங்களில் இருந்து விடுதலை பெற ஒரே வழி, தற்கொலையே என்ற தெளிவு பிறந்தது. அதுதான் கிளம்பி விட்டேன்... ரயில் தண்டவாளத்தை நோக்கி! இந்த திட்டத்தையாவது ஒழுங்காகச் செய்து முடிக்கணும் என ஆசைப்பட்டேன்.

விஷத்தை குடிக்கலாம் என்றாலோ எக்ஸ்பயரி தேதி தாண்டிய விஷத்தைக் குடிக்க போக, அது சரியாக வேலை செய்யாத பட்சத்தில், யாராவது மருத்துவமனைக்குக் கொண்டு சென்று பிழைக்க வைத்துவிடக் கூடும்.

தூக்கு போட்டுக் கொள்ளலாம் என்றால், கயிறு அறுந்து பிழைத்து விட்டால், மறுபடியும் வறுமை, தண்டச்சோறு அர்ச்சனை! அது மட்டுமா... தற்கொலை முயற்சி செய்ததற்காக, அப்பா, என் மீது பச்சாதாபம் படப் போவதில்லை; மாறாக அதற்கும் சேர்த்து திட்டுத்தான் கிடைக்கும்.
அதனால் தான் ரயில் தண்டவாளத்தில் உயிரை போக்க முடிவு செய்தேன்.

குண்டும், குழியுமான அந்த ரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்தேன். ஆங்காங்கே இருந்த ஒரு சில தெரு விளக்குகள் கோமா நிலையில், தன் கடமையைச் செய்து கொண்டிருந்தன. வேகமாக நடையை முடுக்கி விட்டேன்; நேரம் ஆகிவிட்டால் வண்டி சென்று விடக்கூடும்.

விரைவாக நடந்து சென்று கொண்டிருக்கையில், திடீரென்று மின்வெட்டு; எங்கும் இருட்டு; பாதையே தெரியவில்லை. சாகப் போகிறவனுக்கு, இருட்டில் நடக்க என்ன பயம்! ஆனால், இருட்டில் எங்கேயாவது குண்டு, குழியில் விழுந்து விட்டால், என் திட்டம் பாழாய் போய்விடுமே! நேரமோ ஓடிக் கொண்டிருந்தது; செய்தவறியாது திகைத்தேன்.

ரயில் போய் விடுமோ... கடவுளே... ரயில் வரும் சத்தம் கேட்கிறதே... அடுத்த ரயிலுக்கெல்லாம் காத்திருக்க முடியாது. ரயில்களுக்கென்ன வந்து கொண்டுதான் இருக்கும்; ஆனால், ரயிலில் விழுந்து உயிரை விட முடிவெடுந்திருக்கும் என்னுடை துணிச்சல், அடுத்த ரயில் வரும் வரை அப்படியே இருக்குமா என, சொல்ல முடியாது. என் மனது மாறிவிட்டால், அப்புறம் மீண்டும் அதே நரக வாழ்க்கை. ஐய்யோ... அந்த வாழ்க்கையை நினைக்கவே பயமாக இருக்கிறது. வேண்டவே வேண்டாம்; இதே ரயிலிலேயே, என் வாழ்வு முடிந்து விட வேண்டும். மின்சாரமே உடனே வா...

வாழத்தான் வழி தெரியவில்லை; சாகவும் முடியாதா... அதற்கும் நான் லாயக்கற்றவனா...
திடீரென்று, ஒரு ஒளி தென்பட்டது; எனக்குப் பின்னால் மங்கலாகத் தோன்றி, சிறிது சிறிதாக பெரிதாகி, என் பின்னாலிருந்து வந்து, என்னை கடந்து சென்றது. கண் இமைக்கும் நேரத்தில் என் பார்வையை விட்டு மறைந்தது ஒரு டூவீலர். அது தந்த ஒளியில், நான் நடக்க வேண்டிய பாதையை, மனதில் படம் பிடித்துக் கொண்டேன். என் மனம் வந்த வேலையைச் செய்ய தூண்டியது; வேகமாக ஓட ஆரம்பித்தேன்.
ஓடினேன்... ஓடினேன்...பின்னங்கால் பிடரியில் பட ஓடினேன். மூச்சு வாங்க ஓரிடத்தில் நின்றேன். திடீரென்று என் மனதில், ஒரு யோசனை.

நான் எடுத்துள்ளதோ திரும்பி வர முடியாத முடிவு. நான் ஏன் சாக வேண்டும்?
இருட்டில் வழி தெரியாமல் தவித்த எனக்கு, இருசக்கர வாகன ஒளி, வழி காட்டியது.
நான், அந்த வாகன ஓட்டியை, எனக்கு பாதை காட்டச் சொல்லி உதவி கேட்கவில்லை.
ஆனால், கண் இமைக்கும் நேரத்தில், தானாகவே எனக்கு உதவி கிடைத்திருக்கிறது. இருட்டில் தடுக்கி விழாமல், சரியான பாதையை காட்டி எனக்கு உதவி செய்தது, அந்த வாகன ஓட்டிக்கே தெரியாது. இதே போல் வாழ்க்கைப் பாதையிலும், யாராவது அவர்களையே அறியாமல் கூட எனக்கு வழி காட்டக் கூடும்!
வாழ்ந்து தான் பார்ப்போமே!

முடிவை மாற்றினேன்; வீடு நோக்கி நடந்தேன்.

வெ.ராஜாராமன்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

வழி ! Empty Re: வழி !

Post by M.M.SENTHIL Mon Aug 25, 2014 10:56 pm

நல்ல முடிவு, தோல்விக்கெல்லாம் தற்கொலை என்றால், எங்கே யாரும் உயிரோடு இருக்க முடியாதே. கதை அருமை அம்மா.


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

வழி ! Empty Re: வழி !

Post by ஜாஹீதாபானு Tue Aug 26, 2014 12:57 pm

கிடைக்கிற வேலையை செய்யலாமே நல்ல கதை புன்னகை


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

வழி ! Empty Re: வழி !

Post by சே.சையது அலி Tue Aug 26, 2014 1:15 pm

நல்ல கதை தோல்விகளுக்கு தற்கொலை முடிவல்ல கதையின் முடிவு அருமை
சே.சையது அலி
சே.சையது அலி
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 44
இணைந்தது : 19/07/2014

Back to top Go down

வழி ! Empty Re: வழி !

Post by krishnaamma Tue Aug 26, 2014 9:21 pm

M.M.SENTHIL wrote:நல்ல முடிவு, தோல்விக்கெல்லாம் தற்கொலை என்றால், எங்கே யாரும் உயிரோடு இருக்க முடியாதே. கதை அருமை அம்மா.

ஆமாம் செந்தில், ஆனால் எனக்கு அவன் அப்படியே ஓடிப்போய் விடுவானோ என்று இருந்தது புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

வழி ! Empty Re: வழி !

Post by krishnaamma Tue Aug 26, 2014 9:22 pm

ஜாஹீதாபானு wrote:கிடைக்கிற வேலையை செய்யலாமே நல்ல கதை புன்னகை

அதுதானே புன்னகை எவ்வளவோ உடம்பு முடியாதவர்கள் எல்லாம் வசவில்லையா? கை கால் நல்லா இருக்கும் இவன்..........


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

வழி ! Empty Re: வழி !

Post by krishnaamma Tue Aug 26, 2014 9:22 pm

சே.சையது அலி wrote:நல்ல கதை தோல்விகளுக்கு தற்கொலை முடிவல்ல கதையின் முடிவு அருமை

நன்றி சையத் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

வழி ! Empty Re: வழி !

Post by விமந்தனி Tue Aug 26, 2014 9:31 pm

சரியான முடிவு. நல்ல கதை.


வழி ! EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonவழி ! L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312வழி ! EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

வழி ! Empty Re: வழி !

Post by jesifer Tue Aug 26, 2014 10:46 pm

நல்ல பதிவு..........
jesifer
jesifer
கல்வியாளர்


பதிவுகள் : 466
இணைந்தது : 03/04/2014

Back to top Go down

வழி ! Empty Re: வழி !

Post by யினியவன் Wed Aug 27, 2014 2:06 am

Namma oorla ithukku thaan adikkadi pavar kat pannuraanga புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

வழி ! Empty Re: வழி !

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum