ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:32 am

» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Today at 7:23 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:33 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:02 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:06 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:34 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:05 am

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:41 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:34 am

» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm

» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm

» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm

» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm

» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm

» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm

» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm

» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am

» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am

» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm

» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm

» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:39 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:13 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:15 pm

» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Tue Nov 05, 2024 8:59 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 8:00 pm

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:54 pm

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:51 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:50 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:48 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:46 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 7:03 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 4:38 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Tue Nov 05, 2024 11:32 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

சொர்க்கம் எது? நரகம் எது?...

4 posters

Go down

சொர்க்கம் எது? நரகம் எது?... Empty சொர்க்கம் எது? நரகம் எது?...

Post by jesifer Sun Aug 24, 2014 3:47 pm

சொர்க்கம் எது? நரகம் எது?...

அந்த மரத்தின் அடியில் அமைதியாக அமர்ந்திருந்தார் ஒரு ஜென் குரு. அப்போது அந்த வழியாக ஒரு வீரன் குதிரையில் சென்று கொண்டிருந்தான். அமைதியாக வீற்றிருக்கும் துறவியைக் கண்டதும், அவன் குதிரையில் இருந்து இறங்கி அவரை நோக்கி வந்தான். பின்னர் அவர் அருகே வந்து கைக்கூப்பி வணங்கி நின்றான்.

சிறிது நேரம் கழித்து குரு தனது கண்களைத் திறந்து, அவனை ஊடுருவிப் பார்த்தாரே தவிர, அவனிடம் எதுவும் பேசவில்லை. ஆனால் அவன் பேசினான். ‘குருவே! எனக்கு நெடுநாளாக ஒரு சந்தேகம் இருக்கிறது. அதற்கு தகுந்த விடையை தாங்கள் தான் கூற வேண்டும்’ என்றான். அப்போதும் குருவானவர் எதுவும் பேசவில்லை.

மீண்டும் அந்த வீரனே பேச்சைத் தொடர்ந்தான். ‘சுவாமி! சொர்க்கம், நரகம் என்றெல்லாம் பலரும் சொல்லக் கேள்விப்பட்டு இருக்கிறேன். இவை இரண்டும் உண்மையிலேயே இருக்கின்றனவா?. அப்படியிருப்பின் அவை எங்கே இருக்கின்றன?’ என்று தன் சந்தேகத்தை, அந்த குருவின் முன்பாக வைத்தான்.

இப்போதும் ஜென் குரு அமைதியாகவே இருந்தார். எந்த பதிலும் சொல்லவில்லை. ஆனால் அந்த வீரனோ, பதில் கிடைக்காமல் இங்கிருந்து போகமாட்டேன் என்பது போல் அங்கேயே நெடும் நேரமாக அமர்ந்திருந்தான், குருவின் முகத்தைப் பார்த்தபடியே. குருவானவர் இப்போது அந்த வீரனை தீர்க்கமாக பார்த்தார்.

சிறிது நேரம் கழித்து, அவனிடம் ஒரு கேள்வியைக் கேட்டார். ‘நீ என்ன பணி செய்து கொண்டிருக்கிறாய்?’. அதற்கு அந்த வீரன், ‘குருவே! நான் இந்த நாட்டின் தளபதி. எல்லா படை வீரர்களுக்கும் பிரதான சேனாதிபதியாக இருக்கிறேன்’ என்று பெருமையுடன் கூறினான். குருவிடம் இருந்து ஒரு கேலிச்சிரிப்பு வெளிப்பட்டது.

அவர் வீரனைப் பார்த்து, ‘நீ ஒரு முழு முட்டாள். உன்னைப் போன்ற மடையனை எல்லாம் எவன் சேனாதிபதியாக நியமித்தான்?’ என்று கேட்டுவிட்டு மறுபடியும் கேலியாகச் சிரித்தார்.

வீரனுக்கு வந்ததே கோபம். கண்களின் நெருப்பு பொறி பறக்க, ‘ஏய்! என்ன சொன்னாய்?’ என்று ஆவேசம் பொங்க கர்ஜித்தபடி, தன் உறையில் இருந்து வாளை வேகமாக உருவினான்.

இதனைக் கண்ட குரு, ‘இதோ நரகத்தின் கதவுகள் திறக்கின்றன’ என்றார், தன் சிரிப்பை நிறுத்தாமல். அதைக் கேட்டு ஒரு நிமிடம் திகைத்து நின்றான் வீரன். அவனுக்கு ஏதோ விளங்குவதுபோல் இருந்தது.

சட்டென்று வாளை உறையில் போட்டு விட்டு, கைகளைக் கூப்பி குருவை வணங்கியபடி, ‘மன்னிக்க வேண்டும் குருவே!’ என்றான் பணிவுடன். ‘இதோ சொர்க்கத்தின் கதவுகள் திறந்து விட்டன’ என்றார் குரு மீண்டும் புன்சிரிப்புடன்.

சொர்க்கமும், நரகமும் நம்மில்தான் இருக்கின்றன. ஒருவன் கோபத்தைக் கையாளும் போது தனக்குள் இருக்கும் நரகத்தை நோக்கி நடைபோடுகிறான். அன்பையும், அமைதியையும் வெளிப்படுத்தும்போது தனக்குள் இருக்கும் சொர்க்கத்தை நோக்கி பயணப்படுகிறான்.
jesifer
jesifer
கல்வியாளர்


பதிவுகள் : 466
இணைந்தது : 03/04/2014

Back to top Go down

சொர்க்கம் எது? நரகம் எது?... Empty Re: சொர்க்கம் எது? நரகம் எது?...

Post by அகிலன் Sun Aug 24, 2014 3:57 pm

சொர்க்கம் எது? நரகம் எது?... 3838410834 


நேர்மையே பலம்
சொர்க்கம் எது? நரகம் எது?... 5no
அகிலன்
அகிலன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1362
இணைந்தது : 01/05/2009

http://aran586.blogspot.com

Back to top Go down

சொர்க்கம் எது? நரகம் எது?... Empty Re: சொர்க்கம் எது? நரகம் எது?...

Post by krishnaamma Sun Aug 24, 2014 6:25 pm

இது ஏற்கனவே இங்கு இருக்கு என்று நினைக்கிறேன் ஜெசிபர், படித்தாற்போல இருக்கு புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

சொர்க்கம் எது? நரகம் எது?... Empty Re: சொர்க்கம் எது? நரகம் எது?...

Post by விமந்தனி Mon Aug 25, 2014 3:29 pm

அருமையிருக்கு அருமையிருக்கு


சொர்க்கம் எது? நரகம் எது?... EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonசொர்க்கம் எது? நரகம் எது?... L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312சொர்க்கம் எது? நரகம் எது?... EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

சொர்க்கம் எது? நரகம் எது?... Empty Re: சொர்க்கம் எது? நரகம் எது?...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum