ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 13:55

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 13:54

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Today at 13:53

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 13:51

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 13:31

» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 8:41

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 8:37

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Today at 0:57

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 19:23

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 18:06

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 15:16

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 14:58

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 14:55

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 14:53

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 14:52

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 14:50

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 14:49

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 14:48

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 14:46

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 14:09

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 10:24

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 0:36

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 22:38

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:23

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:05

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:02

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:01

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:58

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:56

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:55

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:54

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:52

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:43

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:31

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:07

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:05

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:03

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:01

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:00

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:57

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:53

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:52

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:49

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:46

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:44

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:40

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:39

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:37

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:28

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:26

நிகழ்நிலை நிர்வாகிகள்

புறக்கணிக்கப்படும் தேசிய விழாக்கள்

3 posters

Go down

 புறக்கணிக்கப்படும் தேசிய விழாக்கள் Empty புறக்கணிக்கப்படும் தேசிய விழாக்கள்

Post by சிவா Sun 24 Aug 2014 - 7:01


சில ஆண்டுகளுக்கு முன்பு வரை, சுதந்திர தினம், குடியரசு தினம் என்றால் பள்ளிக் குழந்தைகளிடம் கொண்டாட்டமும் கும்மாளமும் இருந்தது. அன்று, வழக்கத்தைவிட முன்னதாகக் கிளம்பி உற்சாகமாகப் பள்ளிக்குச் செல்வார்கள்.

பள்ளியில் கொடிக் கம்பத்துக்கு முன் வரிசையாக நின்று தமிழ்த்தாய் வாழ்த்து, கொடிப்பாட்டு பாடி தேசியக் கொடியேற்றியபின் தேசியகீதம் பாடப்படும். பின்னர் இனிப்பு வழங்கப்படும். தொடர்ந்து கலைநிகழ்ச்சிகள் அல்லது விளையாட்டுப் போட்டிகள் நடைபெறும்.

ஆனால், இன்றோ, சுதந்திர தினம் என்றால் என்ன என குழந்தைகள் நம்மை கேள்வி கேட்கும் நிலையாகிப்போனது. இதற்குக் காரணம் பள்ளிக்கூடங்கள்தான்.

அரசுப் பள்ளிகள் தவிர பிற பள்ளிகளில் சுதந்திர தினம், குடியரசு தினம் ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுவதில்லை. பெயருக்கு சில ஆசிரியர்களையும் சில மாணவ, மாணவியரையும் வரவழைத்து ஏதோ ராணுவ ரகசியம்போல அவசர கதியில் கொடியேற்றி, சுதந்திர தினம், குடியரசு தினங்களைக் கடமைக்கு கொண்டாடுகின்றனர்.

பெரும்பாலான தனியார் பள்ளிகளில் இந்த அளவுக்குக் கூட நிகழ்ச்சிகள் நடத்தப்படுவதில்லை. பல பள்ளிகளில் இத்தகைய விழாக்களைக் கொண்டாட, திடலோ, கொடிக் கம்பமோ இல்லை என்பது கொடுமையிலும் கொடுமை.

கட்டண வசூல், பொதுத் தேர்வுகளில் அதிக மதிப்பெண் எடுக்க வைப்பது என இந்த இரு விஷயங்களில் மட்டுமே அக்கறை காட்டும் தனியார் கல்வி நிறுவனங்கள் நமது தேசிய விழாக்களிலும் அக்கறை காட்ட வேண்டும்.

எண்ணிலடங்கா உயிர்களை பலிகொடுத்து நாம் பெற்ற சுதந்திரம் குறித்தும், அதன் முக்கியத்துவம் குறித்தும் தற்கால சந்ததியினர் அறியும் நிலை முற்றிலும் இல்லை.

தேசத் தலைவர்களைக் கொஞ்சம் கொஞ்சமாக இளைய தலைமுறையினர் மறந்து வருவது வேதனையளிக்கிறது.

பெரியோர் மத்தியிலும் சுதந்திரத்தின் பெருமிதம் மங்கிப்போய்விட்டது. எல்லா வளமும் கொண்ட இந்திய திருநாட்டில் கடமை, பொறுப்பு, தேசப்பற்று இவற்றை மக்கள் மறந்துவிட்டதாக பல சமூக ஆர்வலர்கள் கூறியும் அவற்றை யாரும் நினைத்துப்பார்ப்பதில்லை.

பெரியோர் பொறுப்புடன் நடந்தால்தான் அவர்கள் குழந்தைகளுக்கு உபதேசிக்க முடியும். பல பெரியோர் சுதந்திர தினம், குடியரசு தினம் போன்றவற்றைப் பொருள்படுத்துவதே இல்லை. ஏன் அவர்களே அதனைப் பொருள்படுத்துவதுமில்லை.

கடந்த ஆக. 15-ஆம் தேதியன்று பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள் போன்ற இடங்களில் சுற்றித் திரிந்த பெரியவர்களையும், பெண்களையும், மாணவ, மாணவியரையும் காண முடிந்தது.

தொண்டு நிறுவனங்களைச் சேர்ந்த சிலர், அவர்களுக்கு சுதந்திர தின வாழ்த்து கூறி, தேசியக் கொடியைக் கொடுத்தபோது, வேண்டா வெறுப்புடன் அதனைப் பெற்றுக்கொண்டு சென்றனர்.

சுதந்திரத்தைப் பொருள்படுத்தாதவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் பெருகி வருவதாகத் தோன்றுகிறது. இதனைப் போக்க சுதந்திர தின, குடியரசு தின விழாக்கள் குறித்து அரசு கடுமையான உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும்.

இல்லையேல், வரும் தலைமுறைக்கு சுதந்திர தினம், குடியரசு தினம் என்றால் என்ன, அவற்றை ஏன் கொண்டாடுகின்றோம் என்ற சந்தேகம் வந்துவிடும்.

தனியார் நிறுவனங்கள் அனைத்திலும் சுதந்திர தின விழா, குடியரசு தின விழா கொண்டாடப்பட வேண்டும் என அரசு உத்தரவிட வேண்டும். மறுத்தால் தேசத்துரோக வழக்கு பதிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

குறிப்பாக, இவற்றைக் கொண்டாடாத கல்வி நிறுவனங்களின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என அறிவிக்க வேண்டும்.

அரசு நிறுவனங்களில் விடுமுறையை மட்டுமே கவனத்தில் கொண்டு, சுதந்திர தினத்தை சுற்றுலா தினமாக கொண்டாடி வருகின்றனர். கும்பலாக சுற்றுலா தலங்களுக்குச் செல்கின்றனர்.

அந்த நாள்களில் சுற்றுலாத் தலங்களில் கூட்டம் அலை மோதுகிறது. சுற்றுலா போகட்டும், சுதந்திர தினத்தை கொண்டாடிவிட்டு சுற்றுலா செல்லட்டுமே. தேசத்தை மறப்பவருக்கு அரசு வேலை ஏதற்கு? தேசப்பற்றுள்ள வேறு யாருக்காவது அந்த வேலை கிடைக்கட்டும்.

தேசிய விழாக்களைக் கொண்டாடாமல் இருப்போரை பணி நீக்கம் அல்லது பணியிடை நீக்கமாவது செய்ய வேண்டும். அப்போதுதான் அவர்கள் சுதந்திரத்தின், குடியரசின் அருமையையும் பெருமையையும் உணர்வார்கள்!

தினமணி


 புறக்கணிக்கப்படும் தேசிய விழாக்கள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

 புறக்கணிக்கப்படும் தேசிய விழாக்கள் Empty Re: புறக்கணிக்கப்படும் தேசிய விழாக்கள்

Post by Dr.S.Soundarapandian Sun 24 Aug 2014 - 10:51

தினமணியும் சிவாவும் போற்றுதலுக்கு உரியவர்கள் !

  புறக்கணிக்கப்படும் தேசிய விழாக்கள் 103459460   புறக்கணிக்கப்படும் தேசிய விழாக்கள் 1571444738  நன்றி  மீண்டும் சந்திப்போம் 


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9826
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

 புறக்கணிக்கப்படும் தேசிய விழாக்கள் Empty Re: புறக்கணிக்கப்படும் தேசிய விழாக்கள்

Post by krishnaamma Sun 24 Aug 2014 - 20:32

//அந்த நாள்களில் சுற்றுலாத் தலங்களில் கூட்டம் அலை மோதுகிறது. சுற்றுலா போகட்டும், சுதந்திர தினத்தை கொண்டாடிவிட்டு சுற்றுலா செல்லட்டுமே. தேசத்தை மறப்பவருக்கு அரசு வேலை ஏதற்கு? தேசப்பற்றுள்ள வேறு யாருக்காவது அந்த வேலை கிடைக்கட்டும்.

தேசிய விழாக்களைக் கொண்டாடாமல் இருப்போரை பணி நீக்கம் அல்லது பணியிடை நீக்கமாவது செய்ய வேண்டும். அப்போதுதான் அவர்கள் சுதந்திரத்தின், குடியரசின் அருமையையும் பெருமையையும் உணர்வார்கள்!//


ரொம்ப சரி சிவா, சில பள்ளிகளில் முதல்நாளே கொண்டாடிவிடுகிறார்கள் ...............அப்போ

அது " பாகிஸ்தான் சுதந்திர தினம் " என்று ஆகாதா?  கோபம் 


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

 புறக்கணிக்கப்படும் தேசிய விழாக்கள் Empty Re: புறக்கணிக்கப்படும் தேசிய விழாக்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» வடக்கு வாழ்கிறது.. தெற்கு தேய்கிறது! தெரிந்தே புறக்கணிக்கப்படும் தென் மாவட்டங்கள்
»  அரசு விழாக்கள், கூட்டங்களில் பாட்டில் குடிநீருக்குத் தடை
» கமல்ஹாசனை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும்: இந்திய தேசிய லீக் கட்சி
» உலகின் சிறந்த தேசிய கீதம் இந்தியாவின் தேசிய கீதமா?
» அரசு விழாக்கள் அரசியல் விழாக்களாக மாறுவதாக பேரூராட்சி தலைவர் புகார்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum