Latest topics
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்by heezulia Today at 12:01 pm
» 10 மில்லியன் டாலர் மதிப்பிலான சாமி சிலைகள் கடத்தல்: இந்தியாவிடம் ஒப்படைத்த அமெரிக்கா
by ayyasamy ram Today at 12:01 pm
» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm
» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மாவின் அமுத மொழிகள்
2 posters
Page 3 of 4
Page 3 of 4 • 1, 2, 3, 4
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மாவின் அமுத மொழிகள்
First topic message reminder :
வெளியீடு :
இயக்குநர்,
செய்தி-மக்கள் தொடர்புத்துறை,
சென்னை - 600 009.
பதிப்புரை
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்களின் சிந்தையிலும் எழுத்திலும் பேச்சிலும் ஒளிர்ந்த கருத்துமணிகளைத் தொகுத்து “மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மாவின் அமுத மொழிகள்” எனும் தலைப்பில், செய்தி மக்கள் தொடர்புத் துறையால் இந்த அழகிய சிறு நூல் வெளியிடப்பட்டுள்ளது.
மொழி, கல்வி, இலக்கியம், ஆன்மீகம், பொருளாதாரம், மகளிர் மேம்பாடு, அரசியல் போன்றவை குறித்து மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்களின் சிந்தனைப் பூங்காவில் மலர்ந்த வாசமிகு மலர்கள், இந்நூலை வாசிக்கும் வாசகர்களின் நெஞ்சங்களிலெல்லாம் நறுமணம் பரப்பும் என்பதில் ஐயமில்லை.
மாண்புமிகு முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்களின் கருத்துச் செல்வங்களை, அவர்கள் ஆற்றிய பல்வேறு உரைகளிலிருந்து எடுத்து, சீரிய முறையில் தொகுத்து,
“மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மாவின் அமுத மொழிகள்”
என்ற தலைப்பில் நூலாக வழங்கியுள்ள செய்தி மக்கள் தொடர்புத்துறை இயக்குநர் திரு. மகேசன் காசிராஜன், இஆப அவர்களையும் இப்பணிக்கு உறுதுணை புரிந்த செய்தித்துறை அலுவலர்களையும் பாராட்டுகிறேன்.
மூ. இராசாராம், இஆப
அரசுச் செயலாளர்
தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை
வெளியீடு :
இயக்குநர்,
செய்தி-மக்கள் தொடர்புத்துறை,
சென்னை - 600 009.
பதிப்புரை
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்களின் சிந்தையிலும் எழுத்திலும் பேச்சிலும் ஒளிர்ந்த கருத்துமணிகளைத் தொகுத்து “மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மாவின் அமுத மொழிகள்” எனும் தலைப்பில், செய்தி மக்கள் தொடர்புத் துறையால் இந்த அழகிய சிறு நூல் வெளியிடப்பட்டுள்ளது.
மொழி, கல்வி, இலக்கியம், ஆன்மீகம், பொருளாதாரம், மகளிர் மேம்பாடு, அரசியல் போன்றவை குறித்து மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்களின் சிந்தனைப் பூங்காவில் மலர்ந்த வாசமிகு மலர்கள், இந்நூலை வாசிக்கும் வாசகர்களின் நெஞ்சங்களிலெல்லாம் நறுமணம் பரப்பும் என்பதில் ஐயமில்லை.
மாண்புமிகு முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்களின் கருத்துச் செல்வங்களை, அவர்கள் ஆற்றிய பல்வேறு உரைகளிலிருந்து எடுத்து, சீரிய முறையில் தொகுத்து,
“மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மாவின் அமுத மொழிகள்”
என்ற தலைப்பில் நூலாக வழங்கியுள்ள செய்தி மக்கள் தொடர்புத்துறை இயக்குநர் திரு. மகேசன் காசிராஜன், இஆப அவர்களையும் இப்பணிக்கு உறுதுணை புரிந்த செய்தித்துறை அலுவலர்களையும் பாராட்டுகிறேன்.
நவில்தொறும் நயம் படைக்கும் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் கருத்துச் செல்வங்களைத் தமிழக மக்கள் கருத்தூன்றிப் படித்துப் பயன்பெற்றிட அன்புடன் விழைகின்றேன்.
மூ. இராசாராம், இஆப
அரசுச் செயலாளர்
தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மாவின் அமுத மொழிகள்
காவலர்களுக்குப் பயிற்சி
காவலர்கள் பணியாற்றுவதற்கு ஏற்ற சூழலை ஏற்படுத்திக் கொடுத்தால் மட்டும், அவர்கள் தங்கள் பணியினை திறம்பட ஆற்றிட இயலாது. காவலர்கள், தங்களது கடமையை திறம்பட ஆற்றுவதற்கு பயிற்சி மிகவும் அவசியம் ஆகும்.
தகுதியானவர்களுக்கே கருணை
மனிதவாழ்வு சிறப்புற மேம்படுவதற்காக ஏற்படுத்தப் பட்டவைதான் சட்டங்கள், சட்டத்தை செயல்படுத்தும்போது, மனிதநேயத்துடன் அதனை செயல்படுத்த வேண்டும். தகுதி இல்லாதவர்களிடத்தில் அபரிமிதமான கருணை இருக்கக் கூடாது. தகுதியானவர்களிடம்தான் கருணை காட்ட வேண்டும்.
காவலர்களுக்குத் தேவை அளவுக்கு உட்பட்ட கடினம்
காவல் துறையில் பணி புரிவோர் நீங்கள், சட்டத்தை நிலைநாட்டுவதில், மனித நேயத்துடன் பணிபுரியும் அதே நேரத்தில், மென்மையான அணுகுமுறை பயன்பெறாத இடத்தில் கடினமான அணுகுமுறையை பயன்படுத்த வேண்டும். ஆனால், அந்த கடினமும் தேவையான அளவுக்கு உட்பட்டே இருக்க வேண்டும்.
அறிவுசார் மனிதவள மேம்பாடு
ஒரு மாநிலம், நிறைந்த பொருளாதார வளர்ச்சி அடைய வேண்டும் என்றால், அங்கு மனித வள மேம்பாட்டிற்கு, குறிப்பாக, அறிவுசார் மனித வள மேம்பாட்டிற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும். அறிவுசார் மனித வள மேம்பாட்டில் முக்கிய அங்கம் வசிப்பது கல்வி அறிவு தான்.
அமைதியே இன்றியமையாதது
நாட்டின் பொருளாதார வளர்ச்சியும், தனி மனித மேம்பாடும் நிலைத்திட இன்றியமையாததாக விளங்குவது அமைதி. அத்தகைய அமைதி சூழலை ஏற்படுத்துவதில், காவல் துறை முக்கியப் பங்காற்றுகிறது. திறமையுடன் பணிசெய்ய பயிற்சி அவசியம். பயிற்சிதான் மனிதனை பக்குவப்படுத்தும். எந்தத் துறையாக இருந்தாலும், அதில் பயிற்சி பெற்றால் தான் ஒருவர் தன்னுடையப் பணியைத் திறமையாகவும், செம்மையாகவும் செய்ய இயலும்.
ஒழுக்கம் மனிதனைத் தெய்வமாக்கும்
ஒழுக்கம் என்பது எண்ணத்தாலும், சொல்லாலும், செயலாலும், தூய்மையாக நடந்து கொள்வதாகும். இவ்வொழுக்கமே, மனிதனை மனிதனாகவும், தெய்வமாகவும் உயர்த்தும் வன்மை பெற்றிருத்தலால், இது உயிரைக் காட்டிலும் உயர்வானது.
மக்கள் பாராட்டைப் பெற ஒழுக்கம் அடிப்படை
ஒழுக்கம் இருந்தால்தான், விருப்பு வெறுப்பின்றி; வேண்டியவர் வேண்டாதவர் என்ற பாகுபாடின்றி; சட்டத்தின் மாட்சிமையை நிலைநிறுத்தும் வண்ணம், காவல் துறையினர் தங்கள் கடமையை ஆற்ற முடியும். அவ்வாறு கடமை ஆற்றும்போது தான், காவலர்கள் தங்கள் பணியினைச் செவ்வனே செய்கிறார்கள் என்று மக்களே காவல் துறையினரின் பணிகளைப் பாராட்டுவார்கள்.
நாடு அதை நாடு!
இந்தியா என் தாய்நாடு, இந்தியர் அனைவரும் என் உடன் பிறந்தோர், அவர்களுடைய வளம் மற்றும் நலனில் மட்டுமே எனது மகிழ்ச்சி உள்ளது.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மாவின் அமுத மொழிகள்
அன்பு செலுத்துவதற்கே இல்லறம்!
இல்லறம் என்பது அன்பு செலுத்துவதற்காகவே. அதனால் தான், இல்வாழ்க்கை பண்புடையதாகவும், பயனுடையதாகவும் இருப்பதற்கு அன்பும், அறமும் தேவை என்று வான்புகழ் வள்ளுவர் கூறியிருக்கிறார்.
இல்லற வாழ்வு என்பது...
இல்லற வாழ்வு என்பது இரு ஆன்மாக்களின், மனங்களின், உணர்வுகளின் முழுமையான இணைப்பு.
விசால மனம் வேண்டும்
இல்லற வாழ்வு இனிமையாக இருக்க வேண்டுமென்றால், சலனமில்லாத, விசாலமான மனம் வேண்டும். பொறுமை, விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை வேண்டும். இன்றைக்கு பல குடும்பங்களில் அர்த்தமில்லாத சண்டைகள் தான்அதிகம். அவ்வாறு சண்டை போடுபவர்கள் அடுத்தவரின் எண்ணத்திலிருந்து சிந்தித்துப் பார்த்தால், சச்சரவுக்கே இடமில்லாது போய்விடும்.
நல்லதொரு குடும்பம்
கணவனும், மனைவியும் அன்பாக இருக்க வேண்டும்; ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ள வேண்டும்; விட்டுக் கொடுக்கிற மனப்பான்மை வேண்டும். இதுதான் நல்ல குடும்பத்திற்கு அழகு.
திருமணம்... இரு குடும்பங்களின் சங்கமம்!
திருமணம் என்பது இரு மனம் இணைவது மட்டுமல்ல; இரு வேறு குடும்பங்களின் சங்கமம்.
திறமைமிக்க மாலுமி கடக்க வேண்டிய சவால்!
அமைதியான கடல் நல்ல மாலுமியை உருவாக்காது. ஆர்ப்பரிக்கும் அலைகள், மிரட்டிப் பார்க்கும் இடி, மின்னல், மழை, சூறாவளிக் காற்று ஆகியவற்றினைக் கொண்ட கடல்தான் ஒரு மாலுமிக்கு சவால். இந்தச் சவாலை மாலுமி வெற்றிகரமாகக் கடந்து விட்டால், அவர் சிறந்த, திறமைமிக்க மாலுமியாகிவிடுவார்.
ஒற்றுமையே உயர்வு
இன்பமும், துன்பமும் நிறைந்ததுதான் இல்வாழ்க்கை. மணமக்கள் ஒற்றுமையுடன் துன்பத்தை எல்லாம் தகர்த்தெறிந்துவிட்டால் வாழ்க்கை சுவையாக அமையும்.
சவால்களை எதிர்கொள்ளும் துணிவும் தெளிவும் பெறுக!
வாழ்க்கையே ஒரு சவால் தான். அதுவும் திருமண வாழ்க்கை என்பது சவால்கள் நிறைந்தது தான். இந்தச் சவால்களை எதிர்கொள்ளும் துணிவையும், தெளிவையும் (மணமக்கள்) பெற வேண்டும்.
சவாலைச் சமாளி. சமூகம் வரவேற்கும்
சவால்களை எதிர்கொள்வதிலிருந்து விலகி ஓடும் மனிதர்களை விட எதிர்த்து நின்று போராடும் மனிதர்கள் தான் வாழ்க்கையில் வெற்றி பெறுகிறார்கள். சவால்களைக் கண்டு அஞ்சுபவர்களைச் சமூகம் கண்டு கொள்வதில்லை. சவால்களைத் துணிச்சலுடன் சந்திக்கும் நபரைத்தான் சமூகம் வரவேற்கும்.
நம்மை வாழ வைப்பது துணிவே!
சந்திக்க வேண்டிய சவால்களை அடையாளம் கண்டு, அவற்றைத் துணிவுடன் எதிர்கொள்ள முடிவெடுத்துவிட்டால், அதற்கான வழிமுறைகள் தானாகத் தோன்றும். துன்பங்களைக் கண்டு துவண்டுவிடும் கோழைத்தனத்தை விட எதிர்த்துப் போராடும் துணிவே நம்மை வாழ வைக்கிறது.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மாவின் அமுத மொழிகள்
எதிர்க்கட்சி இல்லாமல் ஜனநாயகம் இல்லை
ஜனநாயகம் என்பது ஆளும் கட்சி, எதிர்க்கட்சி என்ற இரண்டும் சேர்ந்ததுதான். எதிர்க்கட்சி இல்லாமல் ஜனநாயகத்தை நிலை நிறுத்த முடியாது என்பதுதான் எனது திடமான எண்ணமாகும்.
பெரும்பான்மையோருக்கு பயனளிக்க...
எந்த ஒரு பிரச்சினையிலும் பல்வேறு வகையான கருத்துகள் வெளிப்பட்டால்தான், அந்தக் கருத்துகளைச் சீர்தூக்கிப் பார்த்து பெரும்பான்மையோருக்குப் பயனளிக்கக்கூடிய நடவடிக்கைகளை எடுக்க இயலும்.
மாறுபட்ட சிந்தனைகளும் மாற்றுக் கருத்துகளும்
மாறுபட்ட சிந்தனைகளைச் செவிமடுத்து, ஒரே பொருள் பற்றிய வேறு வேறு கருத்துகளையும் சீர்தூக்கிப் பார்த்தால்தான் பெரும்பான்மையான மக்களுக்கு நன்மை செய்ய இயலும்.
எதிர்க்கட்சியின் இலக்கணம்
எதிர்க்கட்சி என்றால் அரசின் கொள்கைகளை, திட்டங்களை எதிர்க்கின்ற கட்சி என்ற பொருள் இல்லை. அரசுத் திட்டங்களின் நிறை குறைகளை எடுத்துச் சொல்லி, குறைகளைக் களைவதற்கான ஆலோசனைகளை வழங்குவது தான் எதிர்க்கட்சிக்கு இலக்கணமாக அமைய வேண்டும்.
சோற்றைப் பதம் பார்க்கலாம் பானையை உடைத்து விடக்கூடாது
“ஆளுங்கட்சி கொதிக்கிற சோறு என்றால், எதிர்க்கட்சி பதம் பார்க்கிற அகப்பை” என்று பேரறிஞர் அண்ணா அவர்கள் கூறுவார்கள். ஆனால், சோற்றைப் பதம் பார்க்கிறேன் என்று கூறி பானையை உடைக்கும் பணியில் அகப்பை ஈடுபடுமானால், அகப்பையைப் பதம் பார்க்க வேண்டிய நிலைமைதான் ஏற்படும்.
உலகிலேயே கடினமான காரியம்
ஓடுகின்ற நதியில், பாய்கின்ற ஆற்றில் ஒரு ஈர்ப்பு சக்தி இருக்கும். அதற்குப் பெயர்தான் கரண்ட். அந்த ஆற்றில், நதியில் நீந்த வேண்டும் என்று நினைப்பவர் அந்த நீர் ஓடுகின்ற பாதையிலேயே, அந்த ஈர்ப்பு சக்தி, கரண்ட் பாய்கின்ற திசையிலேயே நீந்திச் சென்றால் நீந்துவது என்பது மிகவும் எளிதான காரியம். அவர் எந்த சிரமமும்பட வேண்டிய அவசியம் இல்லை. அந்த கரண்டே அவரை ஈர்த்துச் சென்று அக்கரையில் சேர்த்துவிடும். ஆனால், அதற்கு மாறாக ஒருவர் சந்தர்ப்ப சூழ்நிலையால் அந்தக் கரண்டை எதிர்த்து எதிர் நீச்சல் போட வேண்டுமென்றால் அதைப் போன்ற ஒரு கடினமான காரியம் இந்த உலகத்திலேயே இருக்க முடியாது.
மாநிலங்களுக்கிடையே ஒத்திசைவு மிக அவசியம்
இன்றுள்ள பல அடுக்கு ஆட்சி முறையில் இந்தியா போன்ற ஒருங்கிணைந்த அமைப்பில் பிற மாநிலங்களுக்கு இடையேயான ஒத்திசைவான தொடர்புகள் விலக்க இயலாதவை ஆகும். இந்த உலகம் புனைவியலாக சிறியதாகின்றது என்று கருதுமிடத்து மாநிலங்கள் தன்னந்தனியாக நிலைப்பதோ, தொடர்வதோ கற்பனை செய்திடவும் இயலாததாகும்.
அனைத்துக் கட்சியினரின் உறுதுணை
வீணையின் நரம்புகள் தனித்தனியாக இருந்தாலும், அதை விரலாலே மீட்டுகின்ற போது, ஒரே இசையை எழுப்புவதைப் போல, அனைத்துக் கட்சியினருக்கும் பொதுவான நோக்கமாக விளங்கும் தமிழகத்தின் வளர்ச்சி மற்றும் தமிழக மக்களின் வளர்ச்சி ஆகியவற்றை மேம்படுத்தும் எனது நடவடிக்கைகளுக்கும், தமிழகத்தின் உரிமையை நிலைநாட்டும் எனது முயற்சிக்கும், அரசியலுக்கு அப்பாற்பட்டு அனைத்துக் கட்சியினரும் உறுதுணையாக இருக்க வேண்டும்.
கலிங்கமும் தமிழ்நாடும்
பண்டையக் காலத்தில் மிகப்பெரிய ராணுவக் கட்டமைப்பையும் சிறந்த பூகோள அடையாளமும் கொண்டதாக கலிங்க நாடு திகழ்ந்தது. தமிழ்நாட்டுக்கும் ஒடிசா மாநிலத்திற்கும் இடையேயான கலாச்சார மற்றும் கலைத் தொடர்புகள் சோழப் பேரரசு காலத்திலே இருந்தது. தமிழ்நாட்டைப் போல வரலாறு மற்றும் பாரம்பரியப் பெருமை உள்ள மாநிலமாக ஒடிசா திகழ்வதால் ஒடிசா மாநிலத்துடன் தொடர்பு வைத்திருப்பது மிகப் பெருமையாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கிறது.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மாவின் அமுத மொழிகள்
தமிழர் வாழ்வின் நெறிமுறைகள்
5 ஆயிரம் ஆண்டுகளின் நாகரிகம் தலைமுறை தலைமுறையாகச் செம்மை பெற்று வந்தவையே நம் வாழ்வின் நெறிமுறைகள்.
தேசத்தின் வளர்ச்சி...
ஒரு தேசத்தின் வளர்ச்சி என்பது ஏழைகளின் கண்ணீரைத் துடைப்பதாக இருக்க வேண்டும். அரசின் சட்டங்கள் மற்றும் திட்டங்கள் மக்கள் நலன் கருதியே அமைய வேண்டும்.
மாநிலங்களின் உறவு
நமக்கு மொத்தப் பயனை அளிக்கும் வகையில் நாம் (மாநிலங்கள்) இணைந்து செயலாற்றுவதும் வளர்ச்சி பெறுவதும், நன்கு புரிந்து கொள்ளப்பட்ட பரஸ்பர தொடர்புகள் பெறுவதுமான இச்சூழ்நிலை, மிக உயர்ந்த அளவிலான பரஸ்பரம் சார்ந்திருக்கின்ற நிலைமை உருவாகின்றதைச் சுட்டுகின்றது. இந்தச் சொற்றொடர் எளிதாக சொல்லப்படுகிறது. ஆயின் இதனைச் செயல்படுத்திட அதிக அளவில் முயற்சி தேவைப்படுகிறது.
விடுதலைப்போரில் தமிழகத்தின் மகத்தான பங்கு
ஆங்கிலேயர்களை இந்திய மண்ணில் இருந்து விரட்டி சுதந்திரத்தைப் பெற பாரதம் முழுவதும் தன்னலமற்ற தியாகிகள் பலர் தங்கள் உடல், பொருள், ஆவி அனைத்தையும் ஈந்து அரும்பாடுபட்டனர். ஆங்கிலேய அடிமைத்தளையைத் தகர்த்தெறிய நடைபெற்ற விடுதலைப் போராட்டத்தில் தமிழகத்தின் பங்கு மகத்தானது.
எனது இலட்சியம்
தமிழ்நாட்டை இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக ஆக்குவது மட்டுமல்லாமல், விரைந்த வளர்ச்சி எய்தும் நடுத்தர வருவாய் நாடுகளுக்கு இணையாகத் தமிழகத்தின் வளர்ச்சி இருத்தல் வேண்டும் என்பதே எனது இலட்சியம் ஆகும்.
உண்மையான சுதந்திரம்
சுதந்திரம் என்பது ஒவ்வொருவருக்கும் வேண்டும். ஆனால், அந்தச் சுதந்திரம் வரம்பை மீறாமல் இருக்க வேண்டும். எல்லா விதத்திலும் கண்ணியம் மற்றும் கட்டுப்பாட்டினைக் கடைப்பிடிக்க வேண்டும். அது தான் உண்மையான சுதந்திரம்.
சுதந்திரம் என்பது அடுத்தவர் உரிமையில் தலையிடுவதல்ல
எனக்குச் சுதந்திரம் இருக்கிறது என்று அடுத்தவரின் சுதந்திரத்தை, உரிமையை, வாழ்வாதாரத்தைப் பறிக்கும் விதத்திலோ, பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையிலோ எவரேனும் செயல்பட்டால், அவர்கள் யாராக இருந்தாலும் சரி, அவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
என் கடமை
“உங்களுக்காக நான் என்பது மட்டுமல்ல; உங்களால் நான்” என்ற உணர்வோடு, நான் எனது கடமையை நிறைவேற்றிட தமிழக மக்களாகிய நீங்கள் எல்லாம் எனக்கு ஒத்துழைப்பு நல்க வேண்டும்.
உழவர்க்கு உதவும் வங்கிகள்
இந்திய நாட்டின் செல்வம் அனைவருக்கும் பயன்பட வேண்டும் என்பதன் அடிப்படையில், தனியார் வசம் இருந்த வங்கிகள் நாட்டுடைமை ஆக்கப்பட்டன. இதன் காரணமாக, ஏழை உழவர்களுக்கு, விவசாயத்திற்காக வங்கிகள் கடன் கொடுத்து உதவுகின்றன.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மாவின் அமுத மொழிகள்
துன்பமிலா வாழ்வுக்கு சேமிப்பு
“சிறு துளி பெரு வெள்ளம்”, “சிறுகக் கட்டி பெருக வாழ்” போன்றவை சிறுசேமிப்பின் இன்றியமையாமையை விளக்குகின்றன. “பொருளிலார்க்கு இவ்வுலகம் இல்லை” என்பது வள்ளுவரின் வாக்கு. பொருளைப் பெறாவிட்டால் பட்டறையில் இரும்பு படுவது போன்று துன்பப்பட வேண்டும் என்பதை உணர்ந்து மக்கள் எல்லோரும் சேமிப்பில் ஈடுபட வேண்டும்.
மக்கள் நலனில் வங்கிகளின் பங்கு
வேலையின்றித் தவிக்கும் படித்த இளைஞர்கள் சுயதொழில் தொடங்க வங்கிகள் நிதி உதவி செய்கின்றன. ஆட்டோ மற்றும் வாகன ஓட்டுநர்கள் சொந்தமாக வாகனங்களைப் பெற்றுத் தங்கள் வாழ்வை வளப்படுத்திக் கொள்ள வங்கிகள் கடன் உதவி புரிகின்றன. மக்களின் அன்றாட வாழ்வுக்குத் தேவையான இரு சக்கர வாகனம் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்களை, குறைந்த வட்டியில், தவணை முறையில் பெற வங்கிகள் உதவுகின்றன. மாற்றுத் திறனாளிகள் வாழ்வு சிறக்க வங்கிகள் பெரிதும் உதவி புரிகின்றன. சிறிதும் வளர்ச்சி அடையாத சிற்றூர்களைத் தம் மேற்பார்வையில் கொணர்ந்து பல்வேறு நலத் திட்டங்களை, வங்கிகள் செயல்படுத்துகின்றன.
சேமிப்பால் விளையும் பயன்
சிறுசேமிப்பின் மூலம் பணம் வீணாகாமல் பெருகுவதோடு, வட்டியும் கிடைக்கிறது; பணம், பாதுகாப்பாகவும் இருக்கிறது. இந்தச் சேமிக்கும் பழக்கம் சிக்கனத்தை வளர்ப்பதோடு, எதிர்பாராச் செலவுகளுக்கும் கைகொடுக்கிறது.
நாட்டுக்கும் வீட்டுக்கும் பயனளிக்கும் சேமிப்பு
ஒரு மலையிலிருந்து பெருக்கெடுத்தோடும் ஆறு, பயனில்லாத இடங்கள் வழியாகப் பாய்ந்து கடலில் கலப்பதால் யாருக்கும் எவ்விதப் பலனும் இல்லை. அந்நீர் அணைகளில் தேக்கப்பட்டு, வாய்க்கால் வழியாக, வயல்களுக்குப் பாய்ந்தால் பயிர் செழிக்கும், உயிர்கள் வாழ வழிவகை ஏற்படும். அது போல, ஒரு மனிதன் தன் உழைப்பினால் ஈட்டிய பணத்தைத் தனக்கும் தன் நாட்டிற்கும் பயன்பட சேமித்தல் அவசியம்.
பணத்தால் பெற இயலாதவையும் உலகில் உண்டு
பணம் மட்டுமே வாழ்க்கையாகி விடாது. பணத்தை வைத்துக் கொண்டு எல்லாவற்றையும் பெற்றுவிட இயலாது. பணத்தால் பெற இயலாதவையும் இந்த உலகத்திலே உண்டு.
சட்டமன்ற ஜனநாயகம்
சட்டமன்ற ஜனநாயகம் என்பது, கடமை, கண்ணியம், கட்டுப்பாடு ஆகியவற்றை ஏற்றுக்கொண்டு அவற்றை முழு அளவில் உறுதிப்படுத்தும் ஒரு சீரிய அமைப்பாகும்.
பணமும் நல்ல மனமும் வேண்டும்
பணத்தால் நல்ல கட்டில், மெத்தை, தலையணை ஆகியவற்றை வாங்க இயலும். ஆனால், அவை மட்டுமே நமக்குத் தூக்கத்தைக் கொடுக்காது. பணத்தால் சிறந்த சத்தான உணவு வகைகளை வாங்க இயலும். ஆனால், பணம் பசியை ஏற்படுத்தாது. நோய்வாய்ப்பட்டால், அதனைச் சரி செய்வதற்கு மருந்து மாத்திரைகளைப் பணத்தால் வாங்க இயலும். அழகு சாதனைங்களைப் பணத்தால் வாங்க இயலும். ஆனால், பணத்தால் உடல் ஆரோக்கியத்தைப் பெற இயலாது. எனவே, பணத்துடன் கூடிய நல்ல மனமும் வேண்டும். அதுவே எப்பொழுதும் நமக்கு நல்ல மகிழ்ச்சியை தரும்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மாவின் அமுத மொழிகள்
வங்கிப் பணி
வங்கி அதிகாரிகள், மக்களின் வாழ்க்கைத் தரம் முன்னேறும் வகையில் குறைந்த வட்டியில் அதிக தவணை முறையில் அவர்களுக்குத் தேவையான கடன் உதவிகளை வழங்க வேண்டும். இதே போன்று, கடன் பெறுவோரும், வாங்கிய கடனை, தவறாமல் திரும்பச் செலுத்தி, மேலும், பல பயன்களை வங்கி மூலம் பெற வேண்டும். இந்தக் கொடுக்கல் வாங்கலில் இரு சாராரும் தங்கள் மனசாட்சிக்கேற்ப நடந்து கொள்ள வேண்டும்.
மலைக்கோட்டையைச் சுற்றியே மனம் சுழலும்
தமிழகத்தின் ஒவ்வொரு தொகுதியும் என்னுடைய தொகுதிதான் என்றாலும், இது (ஸ்ரீரங்கம்) என்னுடைய சொந்தத் தொகுதி. நான் சென்னையில் உள்ள புனித ஜார்ஜ் கோட்டையிலிருந்து ஆட்சி புரிந்து கொண்டிருந்தாலும், என்னுடைய எண்ணம் எல்லாம் மலைக்கோட்டையைச் சுற்றித்தான்.
புனிதக் கடமை
என்னை ஆட்சிப் பொறுப்பில் அமர்த்தியவர்கள் நீங்கள். நான் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதே என்னுடைய புனிதக் கடமை, நன்றிக் கடன் என கருதுகிறேன். ஏழை, எளிய மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற நான் ஒரு போதும் தவறியதில்லை.
சட்டமன்ற உறுப்பினர்களின் ஜனநாயகக்கடமை
சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களது ஜனநாயகக் கடமையை உணர்ந்து செயல்பட வேண்டும். உண்மையை உரைப்பவர்களாகவும்; உரிமைக்குக் குரல் கொடுப்பவர்களாகவும்; மாற்றாரை மதிக்கும் தன்மை கொண்டவர்களாகவும்; நியாயத்திற்குத் தலை வணங்குகிறவர்களாகவும் சட்டமன்ற உறுப்பினர்களின் செயல்பாடுகள் அமைய வேண்டும்.
ஜனநாயகப் பண்புகளைக் கட்டிக்காத்திடுக!
சட்டமன்ற ஜனநாயகம் வெற்றி பெற வேண்டுமானால், சட்டமன்ற உறுப்பினர்கள் ஜனநாயகப் பண்புகளை எந்த ஒரு சூழ்நிலையிலும், எந்த ஒரு நெருக்கடியிலும் செம்மையாகக் கட்டிக்காக்க வேண்டும்.
அருமை வாய்ந்த ஆட்சிமுறை
ஜனநாயகம் என்பது பண்பட்டதும், பயனுடையதும், ஆற்றல் மிகுந்ததும், அருமை வாய்ந்ததுமான ஆட்சி முறையாகும்.
அனைவரின் நன்மையே குறிக்கோள்
ஆள்பவர், ஆளப்படுபவர் என்ற பேதம் இல்லாமல், நாட்டில் உள்ள அனைவரின் நன்மையையும், முன்னேற்றத்தையும் குறிக்கோளாகக் கொண்டது தான் ஜனநாயகம் ஆகும்.
கொள்கையை தீர்மானிப்பவர் மக்களே!
ஜனநாயகத்தில் மக்கள்தான் அரசின் கொள்கைகளைத் தீர்மானிக்கின்றனர். கருத்துக்களைச் சுதந்திரமாகப் பிரதிபலிக்கும் இடம் உயரிய ஜனநாயக ஆட்சியில் சுதந்திரமாகக் கருத்துகளைப் பிரதிபலிக்கும் இடமாக இந்த தமிழ்நாடு சட்டமன்றம் திகழ்கின்றது.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மாவின் அமுத மொழிகள்
கண்ணயராக் காவல் பணி
காவல் பணி என்பது கடினமானப் பணி. சட்டம் ஒழுங்கினைப் திறம்படப் பராமரிப்பது; குற்றங்கள் நிகழாமல் தடுப்பது; நிகழ்ந்துவிட்ட குற்றங்களைப் புலனாய்வு செய்து குற்றவாளிகளைக் கண்டுபிடிப்பது; அவர்களைச் சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனை பெற்றுத் தருவது; போன்ற கடினமான பணிகளைக் காவல்துறை மேற்கொண்டு வருகிறது.
இன்றியமையாத நடுநிலைமை
வீணையிலிருந்து சரியான இசை வர வேண்டும் என்றால், அதனுடைய தந்திகள், அதாவது வீணையின் நரம்புகள் இறுக்கமாகவும் இல்லாமல், தளர்வாகவும் இல்லாமல் நடுநிலைமையில் இருக்க வேண்டும். அது போல், இந்த அவை (சட்டமன்றம்) சீரோடும், சிறப்போடும் நடைபெற வேண்டுமென்றால் அதற்கு இன்றியமையாததாக விளங்குவது நடுநிலைமை.
காவல்துறையின் பணி
ஒரு நாட்டில் சட்டத்தின் ஆட்சி நிலைநாட்டப்பட வேண்டுமானால், அதற்கு இன்றியமையாததாக விளங்குவது காவல் துறையின் பணி ஆகும். மனித சமுதாயத்தை நெறிப்படுத்த வகுக்கப்படும் சட்டங்களை நிலைநாட்டுபவர்கள் காவல் துறையினர்.
அமைதியை நிலைநாட்டும் காவல் பணி
ஒரு நாடு நல்லதொரு பொருளாதார வளர்ச்சியினை, சமுதாய மேம்பாட்டினை அடைய வேண்டுமானால் அங்கு அமைதி நிலவ வேண்டும். ஆரோக்கியமான சூழ்நிலை உருவாக வேண்டும். இந்த அரிய பணியினை ஆற்றி வரும் துறையாகக் காவல் துறை விளங்குகிறது.
காவல் துறையின் மகத்தான பொறுப்பு
பொதுமக்களின் உயிருக்கும், உடைமைக்கும் உத்தரவாதம் அளிப்பதோடு மட்டுமல்லாமல், பாதிக்கப்பட்டவர்களுக்குப் பரிகாரமும், மன நிறைவும் அளிக்கும் மகத்தான பொறுப்பும் காவல் துறையிடம் தான் இருக்கிறது.
சிறந்த ஜனநாயக முறை
வளத்தைப் பெருக்குதல்; வாழ்வில் மக்கள் முன்னேற்றம் அடையச் செய்தல் ஆகிய கொள்கைகளில் ஆளும் கட்சிக்கும், எதிர்க்கட்சிக்கும் எந்தவித வேறுபாடும் இருக்க முடியாது. அதே சமயத்தில், அதை நிறைவேற்றுகின்ற முறையில், திட்டங்களின் வடிவமைப்பில் வேறுபாடுகள் இருப்பதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. இவ்வாறு ஒருமனதாக, அதாவது unanimous ஆக முடிவெடுக்க முடியாத சூழ்நிலையில், வேறுபாட்டினை ஒற்றுமையின் அடிப்படையில்; உடன்பாட்டின் அடிப்படையில்; அதாவது consensus--ன் அடிப்படையில் களைவதுதான் சிறந்த ஜனநாயக முறையாக இருக்கும். இல்லையெனில் ஜனநாயகம் செயலிழந்து, பேச்சு சுதந்திரம் மட்டுமே மிஞ்சி இருக்கும்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மாவின் அமுத மொழிகள்
தீயணைப்புத் துறையின் தியாகப்பணி
புயல், மழை, வெள்ளம், நில நடுக்கம், தீ விபத்துகள் போன்ற இயற்கை இடர்பாடுகளினால் மக்கள் அல்லல்படும் போது அவர்களை அரவணைக்கும் கடமையினைத் தீயணைப்புத் துறையினர் ஆற்றி வருகின்றனர்.
நல்வழிப்படுத்தும் சிறைத்துறை
குற்றவியல் நீதி முறையின் அங்கமாக விளங்கும் சிறைத் துறைப் பணியாளர்கள், சிறைக் கைதிகளைச் சீர்திருத்துவது, அவர்களுக்கு மறுவாழ்வு அளிப்பது, மீண்டும் குற்றம் இழைக்கா வண்ணம் அவர்களை நல்வழிப்படுத்துவது போன்றவற்றை இலட்சியமாகக் கொண்டு பணியாற்றி வருகிறார்கள்.
தலைமைப் பண்பு
ஒரு மாநிலத்தின் காவல் துறை உயர்ந்த குறிக்கோளுடன் செவ்வனே பணியாற்றுவது என்பது அந்த நாட்டை ஆளும் தலைவரின் தலைமைப் பண்பைப் பொருத்தே அமையும்.
அரசின் உறுதிப்பாடு
இந்த அரசு, தூய்மையான, வெளிப்படையான, செம்மையான மற்றும் பொறுப்புமிக்க நிருவாகத்தை அளிப்பதற்கு முற்றிலும் பொறுப்பேற்றுள்ளது.
தமிழனின் குணம்
தன்மானம் பெரிது என்று வாழ்பவன்தான் தமிழன். மதிக்கத்தக்க சிறந்த வாழ்க்கை இந்த மாநில மக்கள், திட்டவட்டமாக நிருவாகப் பொறுப்பை நமக்கு அளித்ததன் மூலம், இந்த அரசிடம் அவர்கள் வைத்துள்ள நம்பிக்கையை மீண்டும் வலியுறுத்தியுள்ளனர். எனவே, ஏழை எளிய மக்களும், தாழ்த்தப்பட்ட மக்களும், மதிக்கத்தக்க, சிறந்த வாழ்க்கையை நடத்துவதற்கு சாத்தியமான அனைத்து உதவிகளும் அளிக்கப்படுவதை உறுதி செய்ய, இந்த அரசு பொறுப்பேற்றுள்ளது.
நேர்மையுள்ள சமுதாயமே வளம் காணும்
நியாயமும், நேர்மையும் உள்ள சமுதாயம் விரைவில் வளம் காணும் என்பது அனைவரும் நன்கு அறிந்த ஒன்றாகும். அத்தகைய சமுதாயம், பொருளாதார ரீதியில் நல்ல நிலையில் இருப்பதுடன், உண்மையான மகிழ்ச்சியுடன் நிலவும்.
புதிய சிந்தனைகள்... வெற்றிக்கு வழி!
ஒரு நிறுவனம் மேன்மை அடைய வேண்டும் என்றால்; அதன் விற்பனைத் திறன் அதிகரிக்கப்பட வேண்டும் என்றால்; வழக்கத்திற்கு மாறாக சிந்திக்க வேண்டும். புதிய சிந்தனைகள் பெரும் மாற்றங்களை ஏற்படுத்தும். வெற்றியை அளிக்கும்.
வெற்றி நிச்சயம்
வியாபாரத்தில் புது யுக்தியுடன் தன்னம்பிக்கையும் சேர்ந்தால் வெற்றி நிச்சயம்.
ஆசிரியர் பணி
ஒழுக்கத்தை, பண்பை, பொது அறிவை, ஆன்மீகத்தை மாணவ-மாணவியரிடையே எடுத்துச் சொல்லும் பணி ஆசிரியர் பணி.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மாவின் அமுத மொழிகள்
முன்னேற்றப் பாதை
வாழ்க்கையில் முன்னேறுவதற்குப் படிப்பு மட்டும் இருந்தால் போதாது; கடுமையான உழைப்பும், தன்னம்பிக்கையும் தேவை. நமக்குக் கிடைக்கும் சந்தர்ப்பங்களை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளும் அறிவும், திறமையும் தேவை.
தன்னம்பிக்கை
வாழ்க்கையிலே முன்னேற நினைக்கிறவர்களுக்கு தன்னம்பிக்கை மிகவும் முக்கியம். இந்தத் தன்னம்பிக்கையை மாணவ-மாணவியருக்கு இளம் பருவத்திலேயே ஏற்படுத்தினால் அவர்களால் சாதிக்க முடியாதது ஏதுமில்லை.
பெற்றோரின் கடமை
ஆசிரியர், மாணவர், பெற்றோர் என்பது ஒரு முக்கோண வடிவம். இதில் முக்கியப் பங்கு வகிப்பவர்கள் ஆசிரியர்கள்தான். அதே சமயத்தில் பெற்றோர்களும் பிள்ளைகளைப் பள்ளிக்கூடங்களுக்கு அனுப்பி விட்டதாலேயே தங்கள் கடமை முடிந்துவிட்டது என்று நினைக்கக் கூடாது. பெற்றோர் பிள்ளைகளை உயர்த்த உறுதுணையாக இருக்க வேண்டும்.
நிச்சய வெற்றிக்கு...
எந்த நிலைமையையும் சந்திப்பதற்கு, சமாளிப்பதற்கு உரிய துணிச்சல், மன உறுதி இருந்தால் வெற்றி நிச்சயம்.
உலகையே அடக்கி நிற்கும் ஆற்றல் படைத்த திருக்குறள்
இரண்டே வரிகளில் இருந்தாலும், அதனுள் உலகையே அடக்கி நிற்கும் ஆற்றல் படைத்தது திருக்குறள். திருக்குறளில் திருவள்ளுவர் கூறிய கருத்துகள் அனைவராலும் ஏற்றுக் கொள்ளக் கூடியவையாக விளங்குகின்றன. இதனால்தான்,
“வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்
புகழ் கொண்ட தமிழ்நாடு” என்று பாடினார் மகாகவி பாரதியார்.
உலகின் தலைமையிடத்திற்கு நம்நாடு வந்திட...
நம் நாடு ஒரு சிறந்த நாடு. உலகின் தலைமையிடத்திற்கு வர நாம் முயற்சிக்க வேண்டும். நம் மக்களை தீவிரவாத அச்சுறுத்தலில் இருந்து பாதுகாப்பதன் மூலமும், திட்டமிட்ட, நிலையான பொருளாதார மேம்பாட்டின் மூலமும் மட்டுமே இயலும்.
மனித வளத்தை மேம்படுத்துவது கல்வியே!
நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு அடித்தளமாக அமைவது மனித வளம்தான். மனிதவள மேம்பாட்டில் முக்கியப் பங்காற்றுவது கல்வி. கல்வியில் மேம்பட்ட சமுதாயத்தால்தான் வளர்ச்சிக் குறியீடுகளை எளிதாக அடைய இயலும்.
மதிப்புமிக்க மாணவச் செல்வம்
இளைஞர்கள் ஒரு நாட்டின் மதிப்புமிக்க செல்வம். கல்வியில் மேன்மை; விளையாட்டு மற்றும் போட்டிகளில் திறமை; சேவை மனப்பான்மைக்கு வித்திடும் வகையில் சமுதாயத் தேவைகள் குறித்த விழிப்புணர்வு, ஆகியவை ஒரு மாணவனை சிறந்த மனிதனாக உருவாக்க உதவுகின்றன.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மாவின் அமுத மொழிகள்
நாளைய நம்பிக்கை நட்சத்திரங்கள்...
இன்றைய குழந்தைகளே நாளைய சமுதாயத்தின் நம்பிக்கை நட்சத்திரங்கள் ஆவர். சுகாதாரம், பாதுகாப்பு, கல்வி ஆகியவற்றை எவ்வித இடர்ப்பாடும் இன்றி பெற்று மகிழ்ச்சி நிறைந்த சூழ்நிலையில் வளரும் குழந்தைகளே வளமான மற்றும் வலிமையான தலைமுறையினராக உருவாகின்றனர்.
கல்வி வளர்ச்சி பெற வேண்டும்
தமிழகம் வீறு பெற்று, உலக அரங்கில் தனிச் சிறப்புடன் விளங்க வேண்டும் என்றால், உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி வளர்ச்சி பெறுதல் வேண்டும். சுற்றுப்புறத் தூய்மை மிக அவசியம் தூய்மை என்பது உண்ணும் உணவு, உடுக்கும் உடை, இருக்கும் இடம் ஆகியவற்றில் மட்டுமல்லாமல் மாசுமறுவற்ற காற்றும், தூய்மையான குடிநீரும் கிடைக்கும் வண்ணம் சுற்றுப்புறமும் தூய்மையாக இருத்தல் வேண்டும்.
ஆட்சி அதிகாரமும், பதவியும் எதற்காக?
என்னைப் பொறுத்த வரையில், எப்படியாவது ஆட்சியை பிடிக்க வேண்டும் என்பது என் விருப்பம் அல்ல. மக்களுக்கு நன்மைகள் செய்ய வேண்டும் என்பது தான், என்னுடைய குறிக்கோள். இந்தக் குறிக்கோளை அடைய வேண்டுமென்றால் அதற்கு ஆட்சி அதிகாரம் முக்கியம். அதற்காகத்தான், இந்த முதலமைச்சர் பதவியை நான் வகித்துக் கொண்டிருக்கிறேன்.
கொடை குணம்... அது பிறவிக்குணம் !
கொடை கொடுப்பதற்கும் ஒரு மனம் வேண்டும். பிறவிக் குணம் இல்லாமல் கொடை கொடுக்கிற மனம் தானாக வராது. அதேபோல் தான், தமிழர்களுக்கு காவிரி நீரைப் பெற்றுத் தர வேண்டும் என்பதற்கும் மனம் வேண்டும்.
பிள்ளைகளின் விருப்பத்தை மதித்திடுக!
படிக்கும் ஆர்வத்தைப் பிள்ளைகளிடையே ஏற்படுத்தும் அதே சமயத்தில், அவர்களின் விருப்பத்திற்கேற்ற பாடத்தைப் படிக்க அனுமதித்தால் அனைத்து மாணவ - மாணவியருக்கும் வெற்றி உறுதி.
தொண்டு என்பது...
தொண்டு என்பது சுயநலமின்றி, பிறர் நலத்திற்காக உழைப்பது. அனைத்து மதங்களும் பிறருக்கு உதவுவதைப் போதிக்கின்றன.
தொண்டுகள் பலவகை
தொண்டுகளிலே பல வகை உண்டு. நாட்டுக்குச் செய்யும் சேவை “தேசத் தொண்டு”. மக்களுக்குச் செய்யும் சேவை “மக்கள் தொண்டு”. இறைவனுக்குச் செய்யும் சேவை “திருத்தொண்டு”.
வெற்றிக்கு வழி
தொழிலிலே வெற்றி, தோல்வியுண்டு. ஆனால், தொண்டிலே தோல்வி என்பது கிடையாது. சுயநலமின்றி எந்தவிதப் பலனையும் எதிர்பாராமல், எந்தப் பணியைச் செய்தாலும் அதில் வெற்றி நிச்சயம்.
மக்கள் சேவையில்...
விவேகானந்தர் வழியில்...
சுவாமி விவேகானந்தர் துறவியாக இருந்து மக்கள் சேவையைப் புரிந்தார். நானும் அவர் வழியில், அரசியலில் துறவறம் பூண்டு மக்கள் சேவையைச் செய்து வருகிறேன்.
தமிழக மக்கள் நலனில் நான்
தமிழக மக்களால் நான்; தமிழக மக்களுக்காகவே நான்.
எல்லாமே தமிழக மக்கள்தான்!
எனக்கு சுயநலம் என்பது அறவே கிடையாது. எனக்கென்று எதுவும் தேவையில்லை. எனக்கென்று யாருமே கிடையாது. எனக்கு எல்லாமே தமிழக மக்கள் தான்.
உலகை வாழ வைக்கும் பெண்ணாய் மகளிர் உயர்ந்திடுக!
அறிவுக்கண் திறந்து, ஆக்கப்பூர்வமாய்ப் பணியாற்றி, உலகை வாழ வைக்கும் பெண்ணாக அனைத்து மகளிரும் உயர்ந்து விளங்கிட வேண்டும்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Page 3 of 4 • 1, 2, 3, 4
Page 3 of 4
Permissions in this forum:
You cannot reply to topics in this forum