புதிய பதிவுகள்
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Today at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Today at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Today at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Today at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Today at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Today at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Today at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Today at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Today at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Today at 8:36 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:25 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Today at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am

» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பழைய பாட்டியும் புது வடையும் Poll_c10பழைய பாட்டியும் புது வடையும் Poll_m10பழைய பாட்டியும் புது வடையும் Poll_c10 
81 Posts - 68%
heezulia
பழைய பாட்டியும் புது வடையும் Poll_c10பழைய பாட்டியும் புது வடையும் Poll_m10பழைய பாட்டியும் புது வடையும் Poll_c10 
24 Posts - 20%
வேல்முருகன் காசி
பழைய பாட்டியும் புது வடையும் Poll_c10பழைய பாட்டியும் புது வடையும் Poll_m10பழைய பாட்டியும் புது வடையும் Poll_c10 
9 Posts - 8%
mohamed nizamudeen
பழைய பாட்டியும் புது வடையும் Poll_c10பழைய பாட்டியும் புது வடையும் Poll_m10பழைய பாட்டியும் புது வடையும் Poll_c10 
4 Posts - 3%
sureshyeskay
பழைய பாட்டியும் புது வடையும் Poll_c10பழைய பாட்டியும் புது வடையும் Poll_m10பழைய பாட்டியும் புது வடையும் Poll_c10 
1 Post - 1%
viyasan
பழைய பாட்டியும் புது வடையும் Poll_c10பழைய பாட்டியும் புது வடையும் Poll_m10பழைய பாட்டியும் புது வடையும் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பழைய பாட்டியும் புது வடையும் Poll_c10பழைய பாட்டியும் புது வடையும் Poll_m10பழைய பாட்டியும் புது வடையும் Poll_c10 
273 Posts - 45%
heezulia
பழைய பாட்டியும் புது வடையும் Poll_c10பழைய பாட்டியும் புது வடையும் Poll_m10பழைய பாட்டியும் புது வடையும் Poll_c10 
221 Posts - 37%
mohamed nizamudeen
பழைய பாட்டியும் புது வடையும் Poll_c10பழைய பாட்டியும் புது வடையும் Poll_m10பழைய பாட்டியும் புது வடையும் Poll_c10 
29 Posts - 5%
Dr.S.Soundarapandian
பழைய பாட்டியும் புது வடையும் Poll_c10பழைய பாட்டியும் புது வடையும் Poll_m10பழைய பாட்டியும் புது வடையும் Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
பழைய பாட்டியும் புது வடையும் Poll_c10பழைய பாட்டியும் புது வடையும் Poll_m10பழைய பாட்டியும் புது வடையும் Poll_c10 
18 Posts - 3%
prajai
பழைய பாட்டியும் புது வடையும் Poll_c10பழைய பாட்டியும் புது வடையும் Poll_m10பழைய பாட்டியும் புது வடையும் Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
பழைய பாட்டியும் புது வடையும் Poll_c10பழைய பாட்டியும் புது வடையும் Poll_m10பழைய பாட்டியும் புது வடையும் Poll_c10 
8 Posts - 1%
Guna.D
பழைய பாட்டியும் புது வடையும் Poll_c10பழைய பாட்டியும் புது வடையும் Poll_m10பழைய பாட்டியும் புது வடையும் Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
பழைய பாட்டியும் புது வடையும் Poll_c10பழைய பாட்டியும் புது வடையும் Poll_m10பழைய பாட்டியும் புது வடையும் Poll_c10 
7 Posts - 1%
mruthun
பழைய பாட்டியும் புது வடையும் Poll_c10பழைய பாட்டியும் புது வடையும் Poll_m10பழைய பாட்டியும் புது வடையும் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பழைய பாட்டியும் புது வடையும்

Page 1 of 2 1, 2  Next

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Aug 22, 2014 4:59 am

பழைய பாட்டியும் புது வடையும்

பூவரசம்பட்டி அழகிய சிறிய கிராமம். அந்தக் கிராமத்தில் உள்ள டீக்கடைக்குப் பக்கத்தில் ஒரு அரச மரம் இருந்தது.
அந்த மரத்திற்குக் கீழே ஒரு பாட்டி பலகாரக் கடை வைத்திருந்தாள். காலையில் இட்லி சுட்டு விற்பாள்.
மாலையில் வடை, போண்டா, பஜ்ஜி சுட்டு விற்பாள். அந்தப் பாட்டியின் பெயர் பொன்னம்மா. எப்போதும்
புன்சிரிப்போடுதான் இருப்பாள். பாட்டிக்கு இரக்கக்குணம் கொஞ்சம் அதிகம். காசு இல்லையென்றாலும்
சின்னக் குழந்தைகளுக்குப் பலகாரம் கொடுப்பாள்.
ஒருநாள் வழக்கபோல பொன்னம்மா பாட்டி வடை சுட்டுக்கொண்டிருந்தாள்.அப்போது காக்கா ஒன்று பறந்து வந்தது.
பக்கத்தில் இருந்த கல் ஒன்றின் மீது உட்கார்ந்தது. பாட்டி வடையைச் சுட்டு, அதைக் கூடை போட்டு மூடி வைத்தாள்.
காக்கா ஏக்கமாகப் பார்த்தபடி இருந்தது.

உடனே பாட்டி,“என்ன...வடை எடுத்துட்டுப் போக வந்தீயா..?” என்று காக்காவைப் பார்த்துக் கேட்டாள்.
“இல்லே...இல்லே… திருடக் கூடாது, அது தப்புன்னு எங்க அம்மா சொல்லியிருக்காங்கன்னு” சொன்னது காக்கா.
பாட்டி சிரித்துக்கொண்டே,

“ ஒனக்குப் பசிக்கிதா?”என்றாள்.
“ஆமா பாட்டி” என்று காக்கா தலையாட்டியது. உடனே, பாட்டி கூடையைத் திறந்து, வடை ஒன்றை எடுத்தாள்.
“இந்தா சாப்பிடு...” என்று நீட்டினாள். காக்கா வடையை வாங்கவில்லை.

“வேண்டாம். ‘உழைக்காம யார்க் கிட்டேயும் எதையும் இலவசமா வாங்கக் கூடாது’ன்னு
எங்கப்பா சொல்லியிருக்காரு” என்றது காக்கா.
வடையைத் திருடும் காக்கா பற்றி பாட்டி சிறு வயதில் கதை படித்திருக்கிறாள்.
ஆனால், இந்தக் காக்கா இப்படிச் சொன்னது பாட்டிக்கு ஆச்சரியமாக இருந்தது
“எனக்கு ஏதாவது வேலை இருந்தாக் கொடு பாட்டி. நான் செய்யிறேன்.
அதுக்குக் கூலியா வடை கொடு” என்று சொன்னது காக்கா.
பாட்டிக்கு சந்தோசமாகிவிட்டது.யோசித்து விட்டுச் சொன்னாள்,
“அடுப்பெரிக்க எனக்கு சுள்ளி பொறுக்கிக் குடு. வடை தர்றேன்.”
காக்காவும் ‘சரி’ என்று தலையாட்டிப் பறந்தது.
தோப்புப் பக்கமாய்ச் சுற்றி அலைந்தது காக்கா. என்ன சோதனை..!
ஒரு விறகுகூடக் கிடைக்கவில்லை. மிகவும் வருத்தத்துடன் மரக்கிளையின் மீது உட்கார்ந்தது காக்கா.
அந்த மரத்தில் விளையாடிக் கொண்டிருந்த குரங்கு, காக்காவின் அருகே வந்தது.
“ஏன் கவலையா இருக்கே” என்றது குரங்கு. காக்கா நடந்ததைக் கூறியது.
“சுள்ளிதானே...கவலைப்படாதே. நான் உனக்கு உடைச்சுத் தர்றேன்.
நீ எனக்கு என்ன தருவே?’ என்று குரங்கு கேட்டது“பாட்டி தர்ற வடைய ரெண்டு பேரும்
சரிசமமா பிரிச்சுக்கலாம்” என்று காக்கா கூறியது.
குரங்கும் சம்மதித்தது. தாவித் தாவி மரத்திற்கு மரம் குதித்தது. கிளைகளைப் பிடித்து வேகமாக உலுக்கியது.
பட்டுப் போயிருந்த சிறு கிளைகள் ‘பட்’ ‘பட்’டென ஒடிந்து கீழே விழுந்தன.

காக்காவுக்கு ஒரே சந்தோஷம்.
ஒவ்வொரு சுள்ளியாய் பொறுக்கிக் கொண்டுபோய்,
பாட்டியின் கடையருகே போட்டது காக்கா.
பாட்டியின் மனம் குளிர்ந்து போனது.
“உழைச்சுப் பொழைக்கணும்னு நினைக்கிற உனக்கு ஒரு கொறையும் வராது.
நீ நல்லாயிருப்பே...” என வாயார வாழ்த்தி, காக்காவுக்கு இரண்டு வடைகளைச் சாப்பிடக் கொடுத்தாள்.
காக்கா வடையோடு பறந்து வந்தது. குரங்கிடம் ஒரு வடையைக் கொடுத்தது.
குரங்கும் வாங்கி, ருசித்துச் சாப்பிட்டது.
காக்கா தன் பங்கு வடையைத் தின்னப் போனது. அப்போது அந்தப் பக்கமாய்
நரி ஒன்று வந்தது. காக்கா இப்போது சுதாரித்துக் கொண்டது.
“எனக்குப் பாட்டெல்லாம் பாடத் தெரியாது. இருக்கிறதே ஒரு வடைதான்.
ஒனக்கும் வேணும்னா ஆளுக்குப் பாதியா சாப்பிடலாம்”என்று காக்கா சொன்னது.
“யாரோட உணவையும் தட்டிப் பறிச்சு சாப்பிடக் கூடாதுன்னு எங்கம்மா
சொல்லியிருக்காங்க. எனக்கு ஏதாவது வேலையிருந்தா வாங்கிக் கொடு” என்று கேட்டது நரி.
“வேலையா...? அந்தப் பக்கமாப் போனா, ஒரு அரச மரத்தடி வரும். அந்த மரத்தடிக்குக் கீழே ஒரு பாட்டி
வடை சுட்டுக்கிட்டு இருப்பாங்க. அவங்ககிட்டே போயி கேளு. வேலை தருவாங்க” என்று காக்கா சொன்னது.
காக்காவுக்கு ‘நன்றி’ கூறிவிட்டு, அரச மரத்தடிக்கு நரி வந்தது.

வடை சுட்டுக்கொண்டிருந்த பாட்டியைப் பார்த்தது.
நரி பாட்டியிடம் வந்து, “ஏதாவது வேலை இருந்தா கொடு பாட்டி. செய்யிறேன்” என்றது.
“சாப்பிடுறவங்களுக்கு கை கழுவத் தண்ணி வேணும். காலியா இருக்கிற இந்தத் தொட்டியில,
கிணத்திலேர்ந்து தண்ணி கொண்டு வந்து ரொப்பு”என்று நரிக்கு பாட்டி வேலை கொடுத்தாள்.
வாளி ஒன்றைக் கவ்விக்கொண்டு கிணற்றடிக்குப் போனது நரி.
நீர் இறைக்க கயிறு இல்லை. எங்கே போவது..? நரி யோசித்தது.
அருகேயிருந்த வீட்டின் முன் நின்று,
“அக்கா...அக்கா...”என்று கூப்பிட்டது நரி.
உள்ளேயிருந்து ஒரு குட்டிப் பெண் வந்தாள்.
“அக்கா, கிணத்திலெ தண்ணி இறைக்க கயிறு வேணும். இருந்தா கொடுங்க.
என்னோட வருமானத்தில பாதிய தர்றேன்” என்று நரி சொன்னது.
அதற்கு அந்தப் பெண், “அடுத்தவங்களை ஏமாத்தி வாழாம, சுயமா வேலை செய்ய நினைக்கிற
உன்னோட குணத்தைப் பாராட்டுறேன். இந்தா...கயிறு. எனக்கு எதுவும் நீ தர வேண்டாம்” என்று சொன்னாள்.
நரியும் கயிற்றில் வாளியைக் கட்டி, தண்ணீரை இறைத்தது. ஒவ்வொரு வாளியாகக்
கொண்டு போய், தண்ணீர்த் தொட்டியில் ஊற்றியது. தண்ணீர்த் தொட்டியும் நிரம்பியது.
பாட்டி நரியைப் பாராட்டி, மூன்று வடைகள் கொடுத்தாள்.
நரி ஒரு வடையைத் தின்றது.மீதமுள்ள இரு வடைகளையும்
தன் தம்பி, தங்கைக்குக் கொடுக்க எடுத்துக் கொண்டுப் போனது.
“ அம்மா... எப்படியிருக்கு...என்னோட பாட்டி வடை சுட்ட கதை...?”என்று கேட்டான் மதன்.
அம்மாவும் பெருமிதத்தோடு, “நல்லா இருக்குடா...என் தங்கமே...” என்றாள்.
உடனே, மதன் சொன்னான்; “நீயும்தான் எனக்கு முன்னாடி பாட்டி வடை
சுட்ட கதை சொல்வியே, காக்கா வடையைத் திருடும், நரி ஏமாத்தி அதைப் பிடுங்கிக்கும்ன்னு...”
“தெரியாம சொல்லிட்டேன்டா. அம்மா உன்னை மாதிரி பள்ளிக் கூடம் போயி படிக்கல.
ஏதோ எனக்குச் சொன்னதை நானும் சொன்னேன்...!”என்று அம்மா சமாளித்தாள்.
“செய்யாத தப்பை செஞ்சதாச் சொல்லி காக்கா, நரி மேல பொய்யா திருட்டுப் பட்டம் கட்டிட்டோம்.
அதுங்க பாவந்தானே...” சொல்லும்போதே மதனின் குரல் கம்மியது.

“நீ சொன்ன வடைதான் சரி, எஞ்செல்லமே...!” மதனை அப்படியே கட்டியணைத்துக் கொஞ்சினாள் அம்மா.
----------------------------------------------------------
நன்றி மு .முருகேஷ் -தி ஹிந்து

நான் மிகவும் ரசித்து படித்த கதை - இனி நம் குழந்தைகளுக்கு இதை கூறலாம் .
நம் ஈகரை வடை பாட்டிக்கு சமர்ப்பணம்

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Fri Aug 22, 2014 7:54 am

இந்தக் கதையில் கதாநாயகன் யார், காகமா, நரியா அல்லது மதனா?

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Aug 22, 2014 9:32 am

அருமை அய்யா வடை சாரி வடை கதை புன்னகை

(நம்ம பானு தான் எல்லாமே மாணிக்கம் அய்யா) புன்னகை

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Aug 22, 2014 11:56 am

அருமையான கதை ஐயா பகிர்வுக்கு நன்றி புன்னகை

இனிமே என் பேரப்பிள்ளைகளுக்கு இந்தக் கதையை சொல்கிறேன்.

வடை, பாட்டி என்றால் என் நினைவு வருகிறது தானே பெருமையா இருக்கு.

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Aug 22, 2014 11:58 am

யினியவன் wrote:அருமை அய்யா வடை சாரி வடை கதை புன்னகை

(நம்ம பானு தான் எல்லாமே மாணிக்கம் அய்யா) புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1081333

அது சரி  மகிழ்ச்சி 

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஸ்ரீரங்கா
ஸ்ரீரங்கா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 320
இணைந்தது : 08/08/2014

Postஸ்ரீரங்கா Fri Aug 22, 2014 12:10 pm

கதை  பழைய பாட்டியும் புது வடையும் 3838410834  பழைய பாட்டியும் புது வடையும் 1571444738 

இனிமே என் பிள்ளைக்கு இந்தக் கதையை சொல்கிறேன்.

avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Fri Aug 22, 2014 12:20 pm

அப்போ எங்க சின்ன அக்கா தான் எல்லாமேவா, அது சரி இதுல பாடல்கள் யாரு பாடுரது? பானு அக்கா ஏதாவது பாடல் பாடுராங்களா?

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Aug 22, 2014 12:26 pm

அவங்க வடைக்கு மாவு அரைக்கறது உங்களுக்கு பாட்டா கேக்குது அய்யா புன்னகை

கம்பன் வீட்டு..... அது மாதிரி பானு வீட்டு அரவை மெஷினும் பாட்டு பாடுமாம் புன்னகை

jesifer
jesifer
கல்வியாளர்

பதிவுகள் : 466
இணைந்தது : 03/04/2014

Postjesifer Fri Aug 22, 2014 12:35 pm

ரமணியன் சார்... என்னா மாற்று மாற்றுறீங்க.................

நேர்மையற்றவர்களை நேர்மையாக்கி மிகவும் சாதுரியமாக புனைந்துள்ளீர்கள்... ரசித்துப் படித்தேன்... இருந்தாலும்.. என் மகள் பழைய கதையை கேட்கமுன்னாடி இதை நான் அவருக்கு சொல்லியாகனும்.. இல்லாட்டி ஒத்துக்கமாட்டார்.......அப்பா பொய் சொல்லுறாரு ன்னு அம்மாவிடம் போட்டுக்கொடுத்திருவாரு.....ஹீஹீ

 சூப்பருங்க  பழைய பாட்டியும் புது வடையும் 103459460 

jesifer
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் jesifer

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Aug 22, 2014 7:15 pm

jesifer wrote:ரமணியன் சார்... என்னா மாற்று மாற்றுறீங்க.................

நேர்மையற்றவர்களை நேர்மையாக்கி மிகவும் சாதுரியமாக புனைந்துள்ளீர்கள்... ரசித்துப் படித்தேன்... இருந்தாலும்.. என் மகள் பழைய கதையை கேட்கமுன்னாடி இதை நான் அவருக்கு சொல்லியாகனும்.. இல்லாட்டி ஒத்துக்கமாட்டார்.......அப்பா பொய் சொல்லுறாரு ன்னு அம்மாவிடம் போட்டுக்கொடுத்திருவாரு.....ஹீஹீ

 சூப்பருங்க  பழைய பாட்டியும் புது வடையும் 103459460 
மேற்கோள் செய்த பதிவு: 1081393

Jessifer,
f]]"பெருமைக்குரியவர் திரு mu.முருகேஷ் , தி ஹிந்து"
[/b] .

கண்ணில் பட்டதும் ,
உடனே சுட்டதும் ,
பட்டென பதிவிட்டதும் தான் , நான் !
.
ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக