புதிய பதிவுகள்
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm

» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Thu Oct 31, 2024 11:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பரந்தாமனின் அவதாரங்கள் Poll_c10பரந்தாமனின் அவதாரங்கள் Poll_m10பரந்தாமனின் அவதாரங்கள் Poll_c10 
15 Posts - 79%
Barushree
பரந்தாமனின் அவதாரங்கள் Poll_c10பரந்தாமனின் அவதாரங்கள் Poll_m10பரந்தாமனின் அவதாரங்கள் Poll_c10 
1 Post - 5%
kavithasankar
பரந்தாமனின் அவதாரங்கள் Poll_c10பரந்தாமனின் அவதாரங்கள் Poll_m10பரந்தாமனின் அவதாரங்கள் Poll_c10 
1 Post - 5%
heezulia
பரந்தாமனின் அவதாரங்கள் Poll_c10பரந்தாமனின் அவதாரங்கள் Poll_m10பரந்தாமனின் அவதாரங்கள் Poll_c10 
1 Post - 5%
mohamed nizamudeen
பரந்தாமனின் அவதாரங்கள் Poll_c10பரந்தாமனின் அவதாரங்கள் Poll_m10பரந்தாமனின் அவதாரங்கள் Poll_c10 
1 Post - 5%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பரந்தாமனின் அவதாரங்கள் Poll_c10பரந்தாமனின் அவதாரங்கள் Poll_m10பரந்தாமனின் அவதாரங்கள் Poll_c10 
69 Posts - 83%
mohamed nizamudeen
பரந்தாமனின் அவதாரங்கள் Poll_c10பரந்தாமனின் அவதாரங்கள் Poll_m10பரந்தாமனின் அவதாரங்கள் Poll_c10 
4 Posts - 5%
Balaurushya
பரந்தாமனின் அவதாரங்கள் Poll_c10பரந்தாமனின் அவதாரங்கள் Poll_m10பரந்தாமனின் அவதாரங்கள் Poll_c10 
2 Posts - 2%
prajai
பரந்தாமனின் அவதாரங்கள் Poll_c10பரந்தாமனின் அவதாரங்கள் Poll_m10பரந்தாமனின் அவதாரங்கள் Poll_c10 
2 Posts - 2%
kavithasankar
பரந்தாமனின் அவதாரங்கள் Poll_c10பரந்தாமனின் அவதாரங்கள் Poll_m10பரந்தாமனின் அவதாரங்கள் Poll_c10 
2 Posts - 2%
Shivanya
பரந்தாமனின் அவதாரங்கள் Poll_c10பரந்தாமனின் அவதாரங்கள் Poll_m10பரந்தாமனின் அவதாரங்கள் Poll_c10 
1 Post - 1%
Barushree
பரந்தாமனின் அவதாரங்கள் Poll_c10பரந்தாமனின் அவதாரங்கள் Poll_m10பரந்தாமனின் அவதாரங்கள் Poll_c10 
1 Post - 1%
Karthikakulanthaivel
பரந்தாமனின் அவதாரங்கள் Poll_c10பரந்தாமனின் அவதாரங்கள் Poll_m10பரந்தாமனின் அவதாரங்கள் Poll_c10 
1 Post - 1%
heezulia
பரந்தாமனின் அவதாரங்கள் Poll_c10பரந்தாமனின் அவதாரங்கள் Poll_m10பரந்தாமனின் அவதாரங்கள் Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பரந்தாமனின் அவதாரங்கள்


   
   

Page 1 of 2 1, 2  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Feb 22, 2009 10:40 am

மச்சாவதாரம்
பரந்தாமனின் அவதாரங்கள் Matsya


வைகுண்டத்தில் ஸ்ரீமத் நாராயணன் லட்சுமிதேவியடன் அமர்ந்து அண்ட சராசரங்களையும் கவனித்ததுக் கொண்டிருந்தார். படைப்புக் கடவுளான பிரம்மா தன் பணிகளை முடித்து உறங்கத் தொடங்கினார். அப்போது கல்பம் முடியப்போகும் தறுவாயிலிருந்தது. பிரம்மா தூங்கும் போது அவருடைய நாசியிலிருந்து நான்கு வேதங்கள் வெளியே வந்து விட்டன. இந்த சந்தர்ப்பத்தை வெகு காலமாக எதிர்பார்த்துக் காத்திருந்த ஹயக்கிரீவன் என்ற அரக்கன் ஓடோடி வந்தான். நான்கு வேதங்களையும் அபகரித்துக்கொண்டு கடலுக்குள் பாய்ந்து சென்று மறைந்தான். இதை வைகுண்டபதி பார்த்துப் புன்முறுவல் செய்தார். அவர் வைகுண்டத்திலிருந்து புறப்பட்டார். முற்பிறப்பிலும் இப்பிறப்பிலும் பகவான் நாராயணனிடம் பூரண பக்தி கொண்டிருந்த சத்திய விரதன் எனும் அரசனுக்கு கருணை காட்ட பகவான் விரும்பினார்.

அப்போது மாலை நேரம், சத்தியவிரதன் நதியில் நீராடி ஜல தர்ப்பணம் செய்து கொண்டிருந்தான். அவன் இரண்டு கைகளிலும் தண்ணீரை எடுத்த போது அதில் ஒரு சிறு மீன் காணப்பட்டது. தாராள குணமுள்ள அவன் தண்ணீருடன் மீனை நதியில் சேர்த்தான். மீன் அவனை நோக்கி ~~ அரசனே! ஜீவ ஜந்துக்களிடம் கருணை உள்ளம் படைத்தவனே! என் இனத்தவர் எளியவரை வலியவர் கொன்று தின்னும் பழக்கமுடையவர்கள். உம்முடைய கையில் அடைக்கலம் புகுந்த என்னை நதியில் விட்டுவிட்டாயே|| என்று கேட்டது. அரசன் மறு பேச்சுப் பேசாமல் கமண்டலத்து நீருடன் மீனையும் எடுத்துச் சென்றான். தன் இருப்பிடத்தை அடைந்த சமயம் கமண்டலத்திலிருந்த சிறிய மீன் கமண்டலம் முழுவதும் நிறைந்து வளர்ந்திருப்பதைக் கண்டு ஒரு பெரிய கொப்பறையில் தண்ணீரை நிரப்பி அதில் மீனை விட்டான். மறு நாள் பொழுது விடிவதற்குள் மீன் கொப்பறை அளவிற்கு வளர்ந்து விட்டது. குளம், மடு முதலிய இடங்களில் விட்ட போதும் மீன் வளர்ந்து பெரிதாகிக்கொண்டே இருந்தது. இறுதியில் மீனை எடுத்துச் சென்று கடலில் விட்டான். உடனே அந்த மீன் ~~என்னைக் கடலில் விடுகிறாயே, மகா பெரிய மீன்கள் என்னைத் தின்று விடுமே!|| என்றது. சத்திய விரதன் அந்த மீன் யார் என்பதைத் தெரிந்து கொண்டான்.

~~ நாராயணரே! தங்களின் லீலையை யார் அறிவார்? கருணைக் கடலே உங்களை வணங்குகிறேன். எல்லா உயிர்களுக்கும் நன்மை செய்யும் நோக்கத்துடன் மீனாக வந்திருக்கிறீர்கள். இதில் சந்தேகமே இல்லை. தங்களுடைய அவதார காரணத்தை தெரிவிக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்|| என்றான். அதற்கு பகவான், ~~ இன்றிலிருந்து ஏழாவது நாள் பிரளயம் தோன்றப் போகிறது. அச்சமயம் உலகம் நீரில் மூழ்கிவிடும். பிரளயம் தோன்றுவதற்கு முதல் நாள் ஒரு தோணியை அனுப்புகிறேன். அதில் சப்த ரிசிகளை ஏற்றிக்கொள். மூலிகைச் செடிகளையும் மரங்கள் செடிகள் கொடிகளின் விதைகளையும் எடுத்து வைத்துக்கொண்டு நீயும் தோணியில் ஏறி அமர்ந்து கொள். எல்லா ஏற்பாடுகளையும் செய்து கொண்டு சப்த ரிஷிகளுடன் கடற்கரையிலேயே இரு எதைப்பற்றியும் கவலைப்படாதே || என்று கூறிவிட்டு மறைந்தார். பரந்தாமனுடைய கட்டளைப்படி சப்த ரிஷிகளையும் அழைத்துக் கொண்டு பகவான் கூறிய வண்ணம் தோணியை எதிர்பார்த்துக் கடற்கரையில் காத்திருந்தான் சத்தியவிரதன். ஏழாவது நாள் அதிகாலை ஒரு பெரிய தோணி அவனை நோக்கி வந்து நின்றது. சப்தரிஷிகளுடனும் பகவான் கூறிய பொருட்களுடனும் தோணியில் ஏறி அமர்ந்துகொண்டான். அனைவரும் பகவானைத் துதிக்கத்தொடங்கினார்கள்.

மேகம் கறுத்தது. தென்றல்போல வீசிய காற்று புயலாகியது. இலேசாகத்தொடங்கிய மழை சடுதியாய் மாரியாகி உலகத்தையே மூழ்கடிப்பது போல் பயங்கரமாகப் பொழிந்தது. அண்ட சராசரங்களும் நடுங்க இடியும் மின்னலும் தோன்றியது. அச்சமயம் ஒரு பெரிய மீன் தோணியை நோக்கி வந்தது. மீனின் முகத்தில் ஒற்றைக்கொம்பு காணப்பட்டது. பகவானுடைய கட்டளைப்படி வாசுகி என்ற சர்ப்பம் ஓடத்தை வாலால் பிணைத்துக்கொண்டு மீனின் கொம்பில் தலையால் சுற்றிவிட்டது. தோணி நகரத் தொடங்கிய அதே சமயம் கடல் பொங்கிற்று. உலகம் தண்ணீர்க் காடாகி விட்டது. சத்தியவிரதனுக்குப் பகவான் சாங்கிய யோகம், கர்ம யோகம் ஆகியவற்றை உபதேசித்தார். பிரளயம் முடிந்தது. மச்சாவதாரமெடுத்த பகவான் கடலுக் கடியில் சென்று ஹயக்கிரீவனுடன் போர் செய்து அவனை அழித்து நான்கு வேதங்களையும் மீட்டு வந்து பிரம்மதேவரிடம் ஒப்படைத்தார். நாராயணனுடைய கிருபையினால் சத்தியவிரதன் இந்த கல்பத்தில் வைவஸ்வத மனுவாக ஆனான்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Feb 22, 2009 11:38 am

கூர்மாவதாரம்


பரந்தாமனின் அவதாரங்கள் Kurmavataram

முன்பு ஒரு சமயம் துர்வாச முனிவர் அற்புதமான மலர்மாலை ஒன்றை எடுத்து வந்தார். எதிரே தெய்வேந்திரன் ஐராவதத்தின் மீது ஏறி வந்து கொண்டிருந்தான். முனிவர் அற்புத மலர் மாலையை இந்திரனுக்குக் கொடுத்தார். அதை அவன் வாங்கிக் கழுத்தில் அணியாமல் அலட்சியமாக யானையின் மத்த கயத்தின் மீது வைத்தான். யானையோ அந்த மாலையை எடுத்து தன் காலில் போட்டு மிதித்து நாசமாக்கியது. இதைக் கண்ட துர்வாச முனிவருக்குக் கடுங்கோபம் வந்தது. ~~அடே துராத்மா, அற்புதமான மாலையை உனக்கு அணிந்துகொள்ளக் கொடுத்தேன். உன் அலட்சிய புத்தியால் யானை அதைக் காலில் போட்டு மிதித்து நாசமாக்கி விட்டது. இனி மூன்று லோகங்களும் சோபை இன்றி லட்சுமி கடாட்சம் இல்லாமற் போகட்டும்|| என்று சாபம் அளித்தார். சாபத்தைக் கண்டு நடுநடுங்கிய இந்திரன், உடனே யானை மீதிருந்து இறங்கி முனிவரின் பாதங்களில் வணங்கி தெரியாது தான் செய்த தவறை மன்னித்து சாபத்தைத் திரும்பப் பெறுமாறு மன்றாடினான். இந்திரா சாபத்தை மீளப் பெற முடியாது. ஆனால் விரைவில் பகவான் கூர்மாவதாரம் எடுக்கப் போகிறார்;. அப்போது மகாலட்சுமியின் மூலம் சாபம் நீங்கும் || என்று கூறி முனிவர் அகன்றார். முனிவரின் சாபத்தினால் மூன்று உலகங்களும் களையிழந்து விட்டன. அந்தணர்களும் முனிவர்களும் நித்திய கருமங்களைச் செய்யவில்லை. யாகங்கள் நடைபெறவில்லை. தேவர்கள் வலிமைகுன்ற, அரக்கர்கள் வலிமை அடைந்தனர். அரக்கர்களுடன் நடந்த போர்களிலெல்லாம் தேவர்கள் பலர் தோல்விமேல் தோல்வியடைந்து மாண்டனர். ஆனால் போர்களில் மாண்ட அரக்கர்களையெல்லாம் சுக்கிராச்சாரியார் தம்முடைய சிரஞ்சீவி மந்திரத்தினால் உயிர்பெற்று எழச் செய்தார். அதனால் அரக்கர் குலம் காப்பாற்றப் பட்டது. தேவர் குலத்தவர் ஏராளமான தேவர்களை இழந்தனர். இந்திரன், வருணன், அக்கினி, வாயு முதலிய தேவர்கள் கலக்கமடைந்தனர். மீண்டும் தேவர்கள் வலிமையடையவும், மூன்று உலகங்களும் சோபை பெறவும் என்ன செய்வது என ஆலோசனை நடத்தினர். பிரம்ம தேவனைக் கண்டு வணங்கி தமது குறைகளைச் சொன்னார்கள். அவருக்கோ ஒரு வழியும் புலப்படவில்லை. இறுதியாக, ~~பரந்தாமனிடம் போய் நம் குறையைத் தெரிவிப்போம். அவர் நம்மைக் காப்பாற்றுவார்|| என்றார். அனைவரும் வைகுண்டம் புறப்பட்டனர். லட்சுமி சமேத வைகுண்டப் பெருமானை வணங்கித் தம் குறைகளை இயம்பினர். பரந்தாமன் பதிலுரைத்தார், ~~அரக்கர்களுக்கு இது யோக காலம். அத்துடன் இந்திரனுக்கு துர்வாச முனிவரின் சாபமும் சேர்ந்து கொண்டது. இப்பொழுது தேவர்கள் அரக்கர்களுடன் நட்புப் பாராட்டுவதே நல்லது. தேவர்கள் வலிமை பெறுவதற்காக திருப்பாற் கடலைக் கடைந்து அமிர்தம் பெற வேண்டும். கடலைக் கடைய தேவர்களால் மாத்திரம் முடியாது.

அசுரர்களின் உதவியும் தேவை. அவர்களுடன் சினேகம் செய்துகொண்டு திருப்பாற்கடலைக் கடைந்து அமிர்தம் பெற்று இருவரும் பங்கிட்டுக் கொள்ளலாம் என்று ஆசை காட்டுங்கள். கடலைக் கடைந்து அமிர்தம் வந்ததும் நான் பார்த்துக் கொள்கின்றேன்.|| என்றார். தேவர்கள் மகிழ்ச்சியடைந்தனர். பகவானை வணங்கி விடைபெற்றுச் சென்றனர். தேவர்கள் ஒருவாறு அரக்கர்களுடன் நட்புக் கொண்டு, அரக்கர் தலைவன் சம்பரன்காலநேமியிடம் அமிர்தத்தின் மகிமை பற்றிக் கூறி இரு தரப்பினரும் சேர்ந்து திருப்பாற் கடலைக் கடைந்து அமிர்தம் எடுத்து பங்கிட்டுக் கொள்ள முடிவு செய்தனர். திருப்பாற்கடலைக் கடைவதற்காக மந்தரமலையை பாற்கடலில் கொண்டு வந்து வைத்தார்கள். வாசுகி என்ற பாம்பை மலையைச் சுற்றி வடமாகச் செய்து கொண்டார்கள். கடலைக் கடைவதற்காக வாசுகியின் தலைப்பக்கம் தேவர்கள் சென்ற பொழுது, அசுரர்கள் வாசுகியின் வால்ப் பக்கம் பிடித்துக் கொள்வதை இழிவாகக்கருதி தாம் தலைப்பக்கம் பிடிக்கப்போவதாகக் கூறினர். பகவான் நாராயணரும் இதைத்தான் விரும்பினார். தேவர்கள் உடனே சம்மதித்து தலைப் பக்கத்தை அசுரர்களிடம் விட்டு தாம் வால்ப் பக்கத்ததைப் பிடித்தனர்.

தேவர்களும் அசுரர்களும் எவ்வளவு முயன்றும் மலை அசையவில்லை. அது கடலில் நன்றாக ஊன்றி உட்கார்ந்து விட்டது. அசுரர்கள் கவலைப்பட்டார்கள். தேவர்கள் உடனே திருமாலைத் துதித்தனர். தேவர்களின் துதிக்கு மகிழ்ந்த திருமால் கூர்மாவதாரமெடுத்து கடலுக்கடியில் சென்று மந்தர மலையை தன் முதுகில் தாங்கிக் கொண்டார். மலை அசையத் தொடங்கியது. தேவர்களும் அசுரர்களும் கடலை நன்றாகக் கடைந்தனர். வடமாக இருந்த வாசுகி வலி பொறுக்க முடியாது மூக்கிலிருந்து அக்கினிபோன்ற நச்சுக் காற்றை வெளிவிட்டது. நச்சுக் காற்றின் கடுமை தாங்காது வாசுகியின் தலைப் பக்கம் பிடித்திருந்த அரக்கர்களின் உடல் கறுத்தது. மரம், செடி, கொடிகள் எரிந்த சாம்பலாயின. தேவர்களின் ஆடைகளும் எரிந்து விட்டன. தேவர்கள் பரமேஸ்வரனிடம் ஓடினார்கள். ~~பார்வதியே எங்களைக் காப்பாற்றுங்கள். வாசுகி விட்ட மூச்சு மூன்று உலகங்களiயும் அழித்துவிடும் சக்தி கொண்டது. தாங்கள் தான் எங்களைக் காப்பாற்ற வேண்டும்|| என அவர் பாதங்களை வணங்கினர். உடனே பரமேஸ்வரன் ~~தேவி அரக்கர்களும் தேவர்களும் பாற்கடலை கடையும் போது வாசுகி விட்ட நச்சுத் தன்மையுள்ள மூச்சு இவர்களைச் சோர்வடையச் செய்து விட்டது. அத்துடன் பாற்கடலிலிருந்து முதலில் ஆலகால விஷமே தோன்றியிருக்கிறது. எளியோரைக் காப்பாற்ற வேண்டியது நமது கடமையல்லவா? உலகைக் காப்பாற்றுவதால் பரந்தாமனும் மகிழ்ச்சியடைவார் சகல லோகங்களும் நன்மையடையும். எனவே இக் கொடிய விஷத்தை நான் உண்டு அனைவரையும் காக்கிறேன்|| என்;று கூறினார். தேவி புன்னகைத்தார். பரமேஸ்வரன் கடலிலிருந்து வெளிப்பட்ட நஞ்சைக் கையில் எடுக்கும்போது சிறிது சிந்தி விட்டது. அந்தத் துகள்களே நச்சுத்தன்மையான செடிகளாகவும் உயிரினங்களாகவும் உலகில் உருவானது. பரமேஸ்வரன் நஞ்சை தனது வாயிற் போட்டார்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Feb 22, 2009 11:39 am

பார்வதிதேவி அவரின் கழுத்தைப் பற்றினார். அதனால் நஞ்சு கழுத்திலேயே தங்கி விட்டது. சிவந்த மேனியுடைய பரமேஸ்வரனின் கழுத்து மட்டும் நஞ்சின் கடுமையால் கறுத்துவிட்டது. இதனால் அவருக்க நீலகண்டன் என்ற பெயர் உண்டாயிற்று. நஞ்சையெல்லாம் பரமேஸ்வரன் எடுத்தபின் தேவர்களும் அசுரர்களும் கடலைக் கடைந்தனர். முதலில் தோன்றிய காமதேனுவை அவிசின் காரணமாக தேவர்கள் எடுத்துக்கொண்டனர். அடுத்து உச்சைசிரவஸ் என்ற வெள்ளைக் குதிரை தோன்றியது. பின் ஐராவதம் என்ற நான்கு தந்தங்களைக் கொண்ட வெள்ளை யானை தோன்றியது. இதை இந்திரன் எடுத்துக்கொண்டான். தொடர்ந்து பாரிஜாதம் தோன்றியது. அடுத்து தோன்றிய அழகிகள், அப்சரஸ்களை சொர்க்க வாசிகள் மனைவிகளாக்கிக் கொண்டனர். அடுத்து வெளிப்பட்ட அழகுடன் அமுதக் கிரணங்கள் வாய்ந்த சந்திரனை பரமேஸ்வரன் தன் ஜடாமுடியில் தரித்துக்கொண்டார். அதைத்தொடர்ந்து அமுத கலசத்தைத் தாங்கிக்கொண்டு தன்வந்தரி வெளிப்பட்டார். மேலும் கடைந்த போது கோடி சூரியப்பிரகாச அழகு மிக்க தாமரை மலர்மீது அமர்ந்த நிலையில் மகாலட்சுமி தோன்றினார். தேவியைக் கண்டதும் தேவர்கள் பெருமகிழ்ச்சியடைந்து ஸ்ரீசுக்தம் என்ற வேதமந்திரங்களால் தேவியைத் துதித்தனர். விசுவாவசு முதலிய கந்தர்வர்கள் வந்து திருமகளைத் துதித்தனர். ச்ருதுசி முதலான அப்சரஸ் மங்கையர் ஆனந்த நடனமாடினர். கங்கை முதலான புண்ணிய நதிகலெலாம் பெண்வடிவம் கொண்டு வந்து தேவியை நீராட்டினர். அஷ்ட திக்கு யானைகள் பொற்கலசங்களில் புனித நீரை மொண்டு தேவிக்கு அபிஷேகம் செய்தன. திருப்பாற்கடல் அரசன் வாடாத அற்புதமான தாமரை மலர் ஒன்றை எடுத்து வந்து தேவியின் கழுத்தில் சமர்ப்பித்தார். தேவ சிற்பி விசுவகர்மா ஓடோடி வந்து மகாலட்சுமியின் திருமேனியில் விதவிதமான ஆபரணங்களை அணிவித்தார்.

இக் காட்சியைக் கண்ட தேவர்கள் பெருமகிழ்வடைந்தனர். அப்போது அங்கிருந்த பரந்தாமனின் இதயத்தில் மகாலட்சுமி பிரவேசித்தார். இந்தக் காட்சியைக் கண்டு பேரானந்தமடைந்து நாராயணரையும் லட்சுமிதேவியையும் பலவாறு துதித்தனர். அமிர்த கலசத்துடன் வந்த தன்வந்திரியைக் கண்ட அரக்கர்கள் ஓடோடி வந்த அமிர்த கலசத்தைப் பறித்துக் கொண்டனர். இதைப் பார்த்த தேவர்கள் வருத்தமடைந்து திருமாலைத் துதித்தனர். திருமால் அவர்கள் முன் தோன்றி ~~ கவலை வேண்டாம் நானே வந்து உங்களின் விருப்பத்தைப் பூர்த்தி செய்கிறேன் || என்றார். அரக்கர்களும் தேவர்களும் அமிர்தத்துக்காகச் சர்ச்சை செய்து கொண்டிருந்தபோது திருமால் ஒரு மோகன வடிவம் கொண்டு அவர்கள் முன் தோன்றினார். அரக்கர்களை மயக்கி அமிர்த கலசத்தை வாங்கிக் கொண்டார். ~~எல்லாரும் வரிசையாக நில்லுங்கள் நான் பங்கிட்டுத் தருகிறேன் || என்றார். அரக்கர்கள் தங்களுக்கு அமிர்தத்தின் அடிப்பாகமே வேண்டும் என்றனர். மோகினியான மகாவிஷ்ணு அமிர்தத்தின் மேற் பாகத்திலிருந்து தேவர்களுக்கு ஒவ்வொரு கரண்டி அமிர்தத்தை வழங்கிக் கொண்டு வந்தார். அரக்கர்களில் சுவர்ணபானு என்பவன் மோகினியின் நடவடிக்கைகளைக் கவனித்தான். அமிர்தத்தில் ஒரு துளி கூட அசுரர்களுக்குக் கிடைக்காது என்பதை உணர்ந்தான். அவன் தேவரைப்போல் உருமாறி சூரியன் சந்திரன் இருவருக்கும் மத்தியில் வந்து நின்றான். அமிர்தத்தை அளித்து வந்த மோகினி அவனுக்கும் ஒரு கரண்டி கொடுத்து விட்டாள். அதை சுவர்ணபானு பருகினான். இரண்டாம் முறையாக மோகினி அமிர்தத்தை வழங்க வந்த போது சூரிய சந்திரர்கள் சுவர்ணபானுவின் தந்திரத்தை ஜாடையாகத் தெரிவித்து விட்டார்கள். கோபம் கொண்ட மோகினி கையிலிருந்த கரண்டியாலேயே சுவர்ணபானுவின் தலையை வெட்டி விட்டார். அவனே ராகு கேது என்ற கிரகங்களானான். உடனே பிரம்ம தேவர் சூரிய சந்திரர், பிரகஸ்பதி, சுக்கிரன், அங்காரகன், புதன், சனி ஆகியோருடன் ராகு, கேதுக்களையும் சேர்த்து நவநாயகர்களாகச் செய்து விட்டார். அமிர்தத்தைப் பங்கிட்டுக் கொடுத்து விட்டு மோகினியாக வந்த நாராயணன் மறைந்தார்.

அமிர்தம் கிடைக்காததால் ஆத்திரமுற்ற அரக்கர்கள் பலவிதமான ஆயுதங்களால் தேவர்களுடன் போர்புரிந்த போதிலும் அமிர்தம் உண்ட தேவர்களை வெற்றிகாண முடியவில்லை. அரக்கர் தரப்பில் பலர் அழிந்து போனதுடன் பலர் கை கால்களை இழந்தனர். ஈற்றில் நாரதர் தேவர்களிடம் பேசி போரை நிறுத்தி அமைதியை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து மூன்று லோகங்களும் மீண்டும் லட்சுமி கடாட்சம் பெற்று விளங்கின.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Feb 22, 2009 11:41 am

வராகவதாரம்
பரந்தாமனின் அவதாரங்கள் Varahavataram

வைகுண்ட வாயிலின் காவலர் துவாரபாலகர் ஜெயன், விஜயன் இருவரும் திருமாலுடைய அன்புக்குப் பாத்திரமானவர்கள். பகவானைத் தரிசிக்க வருபவர்களை பணிவுடன் வரவேற்று அவர்களுக்கு தேவையான உதவிகளைச் செய்பவர்கள்.

இவ்வளவு காலமும் இல்லாத எண்ணம் ஒன்று இருவருக்கும் ஏற்பட்டது. ~~ பகவானைத் தரிசிக்க வருபவர்கள் எல்லாம் முதலில் எம்மைப் பணிந்து விடைபெற்றுக் கொண்டு தானே செல்கின்றார்கள்.|| என்று கர்வம் கொண்டார்கள். இந்த எண்ணமானது அவர்களின் மனதில் பூலோக வாசிகளுக்கான வேற்றுமை, தற்பெருமை, கர்வம் போன்ற தீய குணங்களின் ஆட்சியை துவக்கின. ~~ இன்று யார் வந்தாலும் நம் உத்தரவு பெறாமல் உள்ளே செல்ல அனுமதிக்கக் கூடாது|| என்று முடிவு செய்தார்கள். இருவரும் வைகுண்டத்தின் வாயிலில் கம்பீரமாகக் கதாயுதத்துடன் நின்றனர்.

சிறிது நேரத்திற்கெல்லாம் சனகர், சனந்தனர், சனத்குமாரர்,சனாதனர் என்ற நான்கு சகோதரர்கள் லட்சுமிசமேத நாராயணனைச் சந்திக்க வந்தனர்.

பிரம்ம தேவர் படைப்புத் தொழிலைத் தொடங்கிய போது நற்குணங்களுடைய நால்வரைப் படைத்தார். அவர்களே இந்த நால்வரும். மகாயோகிகளான அவர்கள் எந்த நேரத்திலும் பகவானையும் பிராட்டியையும் தரிசிக்க வைகுண்டத்திற்க வரும் உரிமை பெற்றவர்கள். அத்தகைய யோகிகளைப் பார்த்தும் ஜெய விஜயர்கள் அன்று காலையில் செய்து கொண்ட தீர்மானப்படி வழியை மறித்துக் கதாயுதத்தையும் வைத்து விறைப்பாக நின்றனர். எப்போதும் தம்மைக் கண்டதும் பணிவுடன் சிரத்தின்மேல் கைகுவித்து பகவானுடைய நாமத்தைச் சொல்லி வரவேற்பவர்களுக்கு என்னவாயிற்று என்று முனிவர்கள் சிந்தித்தார்கள். சற்றைக்கெல்லாம் அவர்களின் மனதிலுள்ளவற்றையும் அறிந்து கொண்டார்கள். பொறுமைக் கடலான அவர்களுக்கு ஆத்திரம் தோன்றியது. அப்போது நாராயணர் பிராட்டியுடன் அவர்கள் முன் தோன்றினார். பிராட்டியுடன் பகவானைக் கண்டதும் நடந்தவற்றை மறந்து பகவானையும் பிராட்டியையும் வலம் வந்து வணங்கித் துதித்தனர். நாராயணர் முனிவர்களுக்கு ஆசி கூறிவிட்டு ஜெய விஜயரை நோக்கி ~~ வேற்றுமை, கர்வம், தற்பெருமை ஆகிய பூலோக வாசிகளைப் போன்ற குணங்கள் உங்களுக்கு தோன்றிவிட்டன. அதனாலேயே இம்முனிவர்களிடத்தில் தவறாக நடந்து கொண்டீர்கள். எனவே நீங்கள் இருவரும் சில காலம் பூலோகம் சென்று வசித்து வர வேண்டும்|| என்றார். ஜெய விஜயர் தங்கள் தவறை உணர்ந்து, பகவானிடம், தங்களை மன்னிக்கும் படி கேட்டுக் கொண்டனர். பகவானைப் பிரிந்து தங்களால் இருக்க முடியாது எனக் கூறி வருந்தினார்கள். சனகாதி முனிவர்களும் அவர்களை மன்னிக்கும்படி நாராயணனைப் பிரார்த்தித்தார்கள்.~~ சனகாதி முனிவர்களே இவர்கள் மனதில் சில காலமாக பலவித விகாரங்கள் தோன்றியிருக்கின்றன. சில நாட்களுக்க முன் தேவியின் கோபத்திற்கும் ஆளாகியிருக்கின்றார்கள். இவர்கள் பூலோகம் சென்று தீய எண்ணங்களைப் போக்கிக் கொண்டு மீண்டும் என்னிடம் வரட்டும் || என்றார் நாராயணர்.

ஜெய விஜயர்கள் கண்களில் நீர் ஆறாகப் பெருக தடைப்பட்ட குரலில், ~~ கருணைக்கடலே, பக்தவத்சலனே உங்களைப் பிரிந்து, உங்கள் நாமத்தை மறந்து எப்படி நாம் வாழ்வோம்? எங்களை தங்களின் வாயில் காப்போனாகவே ஏற்றுக்கொள்ளுங்கள ||; என்று சிரம் தாழ்த்தி வேண்டி நின்றனர். பக்தர்களுக்கு அருளும் நாராயணர், ~~ஜெய விஜயா, உங்களுக்கு ஒரு சந்தர்ப்பம் அளிக்கிறேன். நீங்கள் என் பக்தர்களாக நூறு பிறவி எடுத்து என்னை வந்து அடைகிறீர்களா? அல்லது என்னுடைய கொடிய விரோதியாக மூன்று பிறவி எடுத்து என்னை வந்தடைகிறீர்களா? || என்ற கேட்டார். ஜெய விஜயர்கள் ~~ பக்தனாக நூறு பிறவியா? அவ்வளவு காலம் உங்களைப் பிரிந்திருக்க எங்களால் முடியாது பகவானே. கொடிய விரோதியானாலும் மூன்றே பிறவியாதலால் அதையே ஏற்றுக் கொள்கிறோம். ஆனாலும் நீங்கள் எங்களுக்கு ஒரு வரம் தந்தருள வேண்டும். எங்களுக்குத் தங்களைத் தவிர வேறு எவராலும் மரணம் ஏற்படக் கூடாது.|| என்ற கேட்டுக் கொண்டனர். பகவான் புன்முறுவல் செய்தார். ~~ அப்படியே ஆகட்டும் || என்று அவர்களை வாழ்த்தி விடை கொடுத்தார். அது அவ்வாறிருக்கப் பூலோகத்திலே பிரம்மாவின் புதல்வரான மரீசி முனிவருடைய குமாரர் காசிப முனிவருக்கு தட்சப் பிரஜாபதி தன்னுடைய புதல்விகளில் பதின்மூவரைத் திருமணம் செய்து கொடுத்தார். காசிபரின் பதின்மூன்று மனைவிகளுள் திதியும் ஒருத்தியாவாள். ஒருநாள் மாலை மயங்கும் நேரத்தில் மன்மத பாணத்திற்கு இலக்கான திதி, சந்தியா காலக் கடமைகளைச் செய்து கொண்டிருந்த அவள் கணவரிடம் சென்று, ~~ மாமுனிவரே மன்மதன் என்னை வாட்டி வதைக்கிறான் என்னுடைய சகோதரிகள் பிள்ளைகளைப் பெற்றுக் கொண்டு ஆனந்தமாக இருக்கின்றார்கள். எனக்கோ குழந்தைச் செல்வமே ஏற்படவில்லை. எனது வேதனை நீங்க தாங்கள் இச்சமயம் என் தாபத்தைத் தீர்த்து மக்கட் செல்வம் ஏற்பட அருள் புரிய வேண்டும். || என்று பணிவுடன் வணங்கி நின்றாள். மன்மதனால் துன்புற்த்தப் பட்டு வேதனைப்படும் தம் மனைவியை நோக்கி காசிப முனிவர், ~~ அன்பே மனைவியின் ஆசையைப் பூர்த்தி செய்வது கணவனின் கடமை. சிறிது நேரம் பொறுத்துக் கொள் தக்க தருணம் வரட்டும். || என்றார். கணவன் கூறிய வண்ணம் பொறுத்திருக்க முடியாத அவள்,அச்சம் , மடம், நாணம் என்பதை விட்டு மோகத்தோடு கணவனின் ஆடையைப் பற்றி இழுத்தாள்.வேளையற்ற வேளையில் மனைவி மோகத்ததால் மதி இழந்து நடந்து கொள்வதை உணர்ந்து அவளுடைய இச்சைக்கு இணங்கினார். பகவானைத் துதித்து விட்டு அவளுடைய விருப்பத்தை பூர்த்தி செய்தார். பிறகு நதிக்குச் சென்று காசிபர் நீராடி மற்றக் கடமைகளைச் செய்ய பகவானைத் தியானித்தார். வேளையற்ற வேளையில் தகாத முறையில் நடந்து கொண்டதற்காக திதி நாணிக் கோணி கணவர் முன் வந்து நின்றாள். ~~ மாமுனிவரே இப்போது எனக்கு உண்டாகியிருக்கும் கர்ப்பம் சிதையாமல் உருப்பெற பரமேஸ்வரன் அருள் புரிவாராக. கொடியவர்கள் கூடப் பெண்களிடம் இரக்கம் காட்டுவார்கள். பரமேஸ்வரன் என்னிடம் கருணை காட்ட மாட்டாரா? கருணைக் கடலான அவரை வணங்குகிறேன் || என்றாள்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Feb 22, 2009 11:42 am

தன் கடமைகளை முடித்துவிட்டு காசிபர் மனைவியை நோக்கிச் சொன்னார். ~~ பெண்ணே வேளையற்ற வேளையில் மோகத்துக்கு ஆளாகி தேவர்களின் கோபத்திற்கு ஆளாகி விட்டாய். நான் சொன்னதையும் மீறி நடந்து கொண்டாய். பிள்ளைகள் பிறப்பார்கள். அவர்களின் கொடுமையால் மூன்று உலகமும் துன்புறும். பெரியோர், முனிவர், பெண்களின் கோபத்திற்கு ஆளாவார்கள். நாராயணன் இவர்களைக் கொல்ல பூலோகத்தில் அவதாரம் எடுப்பார்.|| கணவர் சொன்னதைக் கேட்ட திதி ~~ மாமுனிவரே! தூயவரே! என்னுடைய பிள்ளை பரந்தாமனின் கரத்தால் மடிவதால் நான் மிக மகிழ்ச்சி அடைவேன். ஆனால் என் பிள்ளை மகாத்மாக்களின் சாபத்திற்குள்ளாகாமல் இருந்தால் போதுமானது.|| என்றாள். ~~ பெண்ணே தவறை உணர்ந்து வருந்துகிறாய். நல்லது கெட்டதைப் புரிந்து கொண்டிருக்கிறாய். நாராயணன், பரமேஸ்வரனிடத்தில் பக்தி செய்யத் தொடங்கியுள்ளாய். என்னிடமும் அன்போடு நடந்து கொள்கிறாய். உன்னடைய மகன் இரண்யகசிபுவிற்குப் பிறக்கும் நான்கு குமாரர்களில் ஒருவன் பரந்தாமனுடைய பக்தனாய் உலகம் புகழ வாழ்வான்.|| என்றார் காசிபர். திதி தன் கர்ப்பத்தை மிகவும் எச்சரிக்கையுடன் காப்பாற்றினாள். கர்ப்பத்திலிருந்து ஏற்பட்ட ஒளி சூரியனுடைய ஒளியை மங்கச் செய்தது. லோக பாலர்களின் ஆற்றல் குறைந்தது. அகிலத்திலும் இருள் சூழ்ந்து கொண்டது. லோக பாலர்கள் ஒன்றும் புரியாமல் பிரம்மாவிடம் சென்றனர். பிரம்மாவை வணங்கி, ~~ ஐயனே அகிலத்தில் இருள் சூழ்ந்து கொண்டு விட்டது. எதனால் இவ்விதம் இருள் கவ்வியிருக்கிறது? இரவு பகல் வேறுபாடு தெரியாது எமக்கு அச்சமாக உள்ளது. தயவு செய்து இவ் இருளுக்கான காரணத்ததைக் கூறுவீர்களா? ||என்று வேண்டி நின்றனர்.

~~ லோக பாலர்களே, எனது குமாரர்களான சனகாதியர் ஒரு சமயம் வைகுண்ட பதியைத் தரிசிக்கச் சென்ற போது அப்போது வாயில் காப்போனாக இருந்த ஜெய விஜயர்கள் அவர்களை வழிமறித்து அகம்பாவத்துடன் நடந்து கொண்டனர். இதை அறிந்த பகவான் அவர்களை பூமியில் பிறந்து சில காலம் வசித்து பின் தன்னை வந்தடையுமாறு கட்டளையிட்டார். அதற்கேற்ப அவர்கள் இருவரும் திதியின் கர்ப்பத்தில் தோன்றியிருக்கிறார்கள். || என்று கூறினார் பிரம்ம தேவர்.

லோக பாலர்கள் அச்சம் நீங்கி பிரம்மாவை வணங்கிவிடைபெற்றனர்.திதிக்கு இரட்டைக் குழந்தைகளாய் இரண்டு ஆண் குழந்தைகள் பிறந்தன. குழந்தைகள் பிறக்கும் சமயம் உலகத்தில் பல அப சகுனங்கள் தோன்றின. பிரளயமே தோன்றி விட்டது போன்று அனைவரும் அச்சமடைந்தனர். திதியின் முதல் பிள்ளைக்கு இரண்யாச்சன் என்றும் இரண்டாவது பிள்ளைக்கு இரண்யகசிபு என்றும் காசிப முனிவர் பெயரிட்டார். இருவரும் புஜபல பராக்கிமசாலிகளாக எல்லையற்ற ஆற்றலுடன் உலகத்தையே ஆட்டிப் படைப்பவர்களானார்கள். இருவரும் பிரம்மாவையும் ஈஸ்வரனையும் நோக்கித் தவமிருந்து பல வரங்களைப் பெற்றார்கள். இருவரும் சிறந்த போர் வீரராகத் திகழ்ந்தார்கள். இரண்யகசிபு தன் புஜபல பராக்கிரமத்தால் மூன்ற உலகத்தையும் வென்று ஆட்சிசெய்யத் தொடங்கினான். அண்ணன் இரண்யாட்சன் தம்பியை அதிகம் நேசித்தான். அவனுக்குள்ள ஆற்றலையும் போரில் அவனுக்குள்ள திறமையையும் பாராட்டினான். இரண்யாட்சன் கையில் கதாயுதத்துடன் அண்ட சராசரங்களினூடே சுற்றித் திரிந்தான். அவனை எதிர்த்துப் போர் செய்யப் பயந்து தேவர்களும் ஓடி மறைந்தனர். இரண்யாட்சன் மத யானைபோல உலகம் நடுங்க நடந்து வரும்போது ஜீவ ஜந்துக்களும் ஓடி மறையும். இவனை எதிர்க்க ஒருவரும் தென்படாததால் கடலில் இறங்கினான். நீர் வாழ் உயிரினங்கள் பயந்து ஒளித்துக் கொண்டன. கடலில் பல ஆண்டுகள் மத யானைபோல் உலாவிய இரண்யாட்சன் ஒருநாள் வருண பகவான் வசிக்குமிடம் சென்று ஏளனமாகச் சிரித்தபடியே ~~ லோக பாலர்களின் தலைவரே பெரும் ஆற்றல் பெற்ற தங்களுடன் போர் செய்ய வந்திருக்கிறேன் || என்றான்.

இரண்யாட்சனுடைய ஏளனப் பேச்சைக் கேட்ட வருணபகவானுக்கு கோபம் வந்தது. அதை அடக்கிக் கொண்டு, அவன் பகவானால் அழியப் போகும் நாள் நெருங்கி விட்டது என்பதை உணர்ந்து அவனைப் பார்த்து, ~~ போர் ஆற்றல் மிக்கவனே! இப்போது எனக்குப் போர் புரிய விருப்பமில்லை. உன்னுடன் போர் செய்யத் தகுதியானவர் நாராயணர் ஒருவர்தான். நீ அவருடன் சென்று போர் புரி. ||என்றார். தன்னுடன் போர் செய்யத் தகுதியானவர் ஒருவர் இருப்பதை அறிந்ததும் இரண்யாட்சன் பெருமகிழ்ச்சி அடைந்தான். அட்டகாசமாகச் சிரித்தபடி எதிரியைத் தேடிப் புறப்பட்டான். எங்கெங்கோ தேடி அலைந்தான். அப்போது மூன்று உலகிற்கும் செல்லும் நாரத முனிவரைக் கண்டு மகிழ்ந்து வணங்கினான். ~~ நாராயனருடன் போர் செய்ய விரும்புகிறேன். அவரை எங்கே பார்க்கலாம்? || என்று கேட்டான்.

~~ இப்போது பகவானைக் கடலடியில் சந்திக்கலாம். || என்று கூறிவிட்டு நாரத முனி நகர்ந்தார்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Feb 22, 2009 11:42 am

இரண்யாட்சன் கடலில் குதித்து அடிப் பாகத்தை நோக்கி வேகமாகச் சென்றான். இரண்யாட்சன் நாராயணரைத் தேடிச் செல்லும் சமயத்தில் சுவாயம்பு தன் மனைவி சத்ருவையுடன் பிரம்ம தேவரைக் காணச் சென்றான். அவரை வணங்கினான். இருவரையும் வாழ்த்திய பிரம்ம தேவர், ~~ உங்கள் இருவரையும் கண்டு மகிழ்ச்சி அடைகிறேன். உத்தம குணமுள்ள நீங்கள் நீண்ட நாட்கள் வாழ்வீர்கள். நீங்கள் இருவரும் பிள்ளைகளை அன்புடன் வளர்த்து நித்திய கருமங்களையும் யாகங்களையும் செய்து வருவீர்களாக. எல்லா வகையிலும் இப் பூமியைச் சிறப்புடன் ஆண்டு வருவீர்களாக! || என்று கூறினார். சுவாயம்புமனு கரங்குவித்து வணங்கி பதிலுரைத்தான். ~~ தங்கள் கட்டளைப்படியே நடந்து கொள்கிறேன். சகல உயிரினங்களுக்கும் ஆதாரமான பூமி பிரளயத்தின்போது நீரில் மூழ்கிக் கிடக்கிறது. அதை மேலே எடுத்தது வர வேண்டும். பூமியை எப்படி நீருக்கடியிலிருந்து மேலே எடுத்து வருவது என்று பிரம்ம தேவர் யோசிக்கத் தொடங்கினார். அப்போது அவருடைய நாசித்துவாரத்திலிருந்து ஒரு சிறு காட்டுப் பன்றி வெளிப் பட்டது. சிறிது நேரத்தில் அது பெரிதாக வளர்ந்து அதன் மூக்குப் பகுதியில் கூர்மையான ஒரு கொம்பு தோன்றியது. பிரம்மதேவரும் சுவாயம்புமனுவும் நாராயணர்தான் பன்றி உருவத்தில் எல்லோருக்கும் நன்மை செய்ய வந்திருக்கிறார் என்பதை உணர்ந்தனர். அனைவரும் பகவானைக் குறித்து தோத்திரம் செய்தனர்.

சிங்கம் போல அந்தப் பன்றி கர்ஜித்தது. அண்ட சராசரங்களும் நடுங்கும் வண்ணம் பலமாக உறுமிக் கொண்டு நீரினுள் பாய்ந்தது. பன்றி உருவத்தில் தோன்றிய நாராயணர் பூமி அமிழ்ந்திருக்கும் இடத்தை நோக்கி வேகமாகச் சென்றார். பூமியைத் தனது கோரைப் பற்களால் பெயர்த்துத் தூக்கிக் கொண்டு நின்றார். மூக்கின் மீது பூமியைத் தூக்கிக்கொண்டு பகவான் வராகவதாரத்துடன் நிற்கும்போது இரண்யாட்சன் அங்கு வந்தான்.

பகவானை ஏளனமாகப் பார்த்து கையிலிருந்த கதாயுத்தைக் காட்டி, ~~ இங்கே வா என்னுடன் போர் செய். பூமியை இங்கேயே வைத்து விடு || என்று உரத்த குரலில் கத்தினான். இரண்யாட்சனை ஆட்டம் காட்டி நீருக்குமேல் அழைத்து வந்த நாராயணர், பூமியை ஒரு குடத்தில் நிலைத்திருக்கச் செய்தார். பிறகு இரண்யாட்சனுடன் போர் செய்யத் தொடங்கினார். கடற்கரை ஓரமாகப் போர் நடைபெற்றது. நீண்ட நேரம் அவனுடன் விளையாடுவது போல் காட்டி பின் ஒரே பாய்ச்சலாக அவன் மீது பாய்ந்து கோரைப்பற்களாலும் கூரிய கொம்பாலும் அவனுடைய உடலைக் கிழித்துக் கொன்றார். இந்த அபூர்வக் காட்சியைக் கண்ட தேவர்கள் பூமாரி பொழிந்தனர். மங்கள வாத்தியங்கள் முழங்கின.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Feb 22, 2009 11:44 am

நரசிம்மாவதாரம்

பரந்தாமனின் அவதாரங்கள் Narsmha
நாராயணர் வராக அவதாரமெடுத்து தன் சகோதரன் இரண்யாட்சனைக் கொன்ற செய்தியைக் கேட்டதும் இரண்யகசிபுக்கு அடங்காத கோபம் ஏற்பட்டது. கண்கள் சிவக்க வானத்தையும் பூமியையும் நோக்கினான். கையில் சூலாயுதத்தை எடுத்தான். அரக்கர் கூட்டத்தைக் கூவி அழைத்தான்.

~~ புறப்படுங்கள் தேவர்கள் எங்கெங்கு காணப்படுகிறார்களோ அங்கேயே கொன்று குவியுங்கள். தேவர்கள் காரணமாகவே நாராயணர் என் சகோதரனைக் கொன்றார். அவரைக் கொன்று பழியைத் தீர்க்கா விட்டால் சகோதரனுடைய ஆத்மா சாந்தியடையாது. தேவர்களைக் கொல்வதுடன் அவர்களுக்கு வலிமை சேர்க்கும் தானம், தவம், யாகம் போன்றவற்றைச் செய்வோரையும் கொன்று தீயிலிட்டுக் கொழுத்துங்கள். || என்று கூறி அசுரர்களை உற்சாகப் படுத்தி அனுப்பிவைத்தான்.

அன்னை திதிக்கும் இரண்யாட்சனுடைய மனைவி மக்களுக்கும் இரண்யகசிபு ஆறுதல் கூறினான். சகோதரன் இரண்யாட்சனுக்கு முறைப்படி ஈமக்கிரியைகள் செய்தான். பின் அன்னையிடம் விடைபெற்றுத் தவம் செய்யப் புறப்பட்டான். மந்தார மலையின் குகையொன்றினுள் சென்று தவம் செய்யத் தொடங்கினான். அரக்கர்கள் இரண்யகசிபுவின் கட்டளைப்படி தேவர்களைக் கண்ட இடங்களில் கொல்லத் தலைப்பட்டார்கள். தேவர்கள் பயந்து ஓடி மறைந்தார்கள் . அரக்கர்களுக்குப் பயந்து ஓடிய இந்திரனுக்கு இரண்யகசிபு தவம் செய்யப் போயிருப்பது தெரிந்தது. அப்போது இரண்யகசிபுவின் மனைவி கயாது கர்ப்பம் தரித்திருந்தாள். தேவேந்திரன் இதுதான் தக்க தருணம் கயாதுவை இழுத்த வந்து அவள் கர்ப்பத்தில் வளரும் சிசுவைக் கொன்று விடவேண்டும் என்று தீர்மானித்தான். அவன் நேராக இரண்யகசிபுவின் அரண்மனைக்குச் சென்று கணவனோ, காவலோ இன்றியிருந்த கயாதுவைக் கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு புறப்பட்டான். கயாது நடுங்கியபடி உரக்கக் கத்திக்கொண்டே இந்திரன் இழுத்த இழுப்புக்குச் சென்றாள். வழியில் குறுக்கிட்ட நாரத முனிவர் ~~ இந்திரா! நீ செய்வது தவறு கர்ப்பவதியான அவளை கணவனும் இல்லாதவேளை இழுத்து வந்திருக்கிறாய். அவளை விட்டு விடு. || என்றார். இந்திரன் கோபத்துடன் ~~ முனிவரே! இவள் கர்ப்பத்தில் இரண்யகசிபுவின் சந்ததி வளர்கிறது. அவன் கொடியவன் அவனது பிள்ளை அவனை விடக் கொடியவனாக இருப்பான். எனவே அவள் பிரசவிக்கும் வரை இவளை இங்கு வைத்திருந்து, பிரசவித்ததும் குழந்தையைக் கொன்று விடுவேன். || என்றான்.

~~ இந்திரா உன் நினைப்புத் தவறு. இவள் கர்ப்பத்தில் வளரும் குழந்தை பரந்தாமனுடைய பக்தனாக இருப்பான். நீ இவளை என்னிடம் ஒப்படைத்துச் செல். || என்று நாரத முனி கூறினார். இந்திரன் கயாதுவை மும்முறை வலம் வந்து வணங்கி நாரதமுனிவரிடம் ஒப்படைத்துச் சென்றான். நாரதர் அவளைத் தன் குடிலுக்க அழைத்துச் சென்றார். ~~ கயாது, கவலையோ பயமோ வேண்டாம். உன் கணவன் தவம் முடிந்து வரும்வரை இங்கேயே இரு. || என்று கூறினார். நாள் தோறும் நாரதர் நாராயணனுடைய கலியாணகுணங்கள், தர்மத்தின் இரகசியம் ஆகியவற்றைக் கூறி வந்தார். கருவில் வளரும் குழந்தைக்கு அஷ்டாட்சர மந்திரத்தை உபதேசித்தார். கருவில் வளரும் குழந்தைக்கு சகல சாஸ்த்திரங்களையும் ஞான மார்க்கத்தையும் போதித்தார். இரண்யகசிபு பிரம்மாவை நோக்கி கடுமையாக இருந்த தவத்தின் மகிமையால் அவனது தலைமுடி ஜடையாயிற்று. அதிலிருந்து பயங்கரமாகப் புகை ஏற்பட்டது. சூரியனைப் பழிக்கும் ஒளி தோன்றியது. பூமி நடுங்கிற்று. ஆறுகள் திசை மாறி ஓடின. நட்சத்திரக் கூட்டங்கள் திசை மாறின. சில தரையிலும் விழுந்தன. அவன் உடலிலிருந்து ஜ்வாலையும் ஒளியும் வீசின. பல ஆண்டுகள் ஆகாரம், உறக்கமின்றித் தவம் செய்ததால் அவனது உடல் மெலிந்து எலும்புகள் மட்டுமே தெரிந்தன. அவனது கடும் தவத்தால் மகிழ்ந்த பிரம்மதேவர் அவனுக்கு அருள் புரிய விரும்பினார். இரண்யகசிபு தவம் செய்யும் குகைக்கு வந்தார். அவர் இரண்யகசிபுவை நோக்கி, ~~ காசிபமுனிவரின் குமாரனே! உன் தவத்தால் மகிழ்ந்தேன். எழுந்து வா. வேண்டும் வரங்களைக் கேள். || என்றார். பிரம்மாவின் அழைப்பில் தவம் கலைந்து கண்விழித்தான். உடனே அவனுடல் பூரண பொலிவுடன் தங்கம் போல் பிரகாசமாயிற்று. அவன் பிரம்ம தேவரை கரங்கூப்பி மனங்குளிரத் துதித்தான். பின் சிரமேற் குவித்த கரங்களுடன் வரத்தைக் கேட்டான். ~~ தேவரீர்! எனக்கு இந்த மூவுலகையும் ஆளும் வல்லமை வேண்டும். இரவிலோ, பகலிலோ, தேவனாலோ, மனிதனாலோ, விலங்காலோ, பறவையாலோ, ஆயுதங்களாலோ, நீரிலோ, நிலத்திலோ, ஆகாயத்திலோ எனக்கு மரணம் ஏற்படக் கூடாது. எனது உடலிலிருந்து ஒரு சொட்டு இரத்தம் நிலத்தில் சிந்தினாலும் என்னைக் கொல்ல முயற்சிப்பவனின் தலை ஆயிரம் துண்டுகளாக வெடித்து விட வேண்டும். இந்த வரத்தைக் கொடுத்தாலே போதும். || என்றான். அவனது தவத்திற்கும் தோத்திரத்திற்கும் பயனாக அவன் கேட்ட வரத்தை வழங்கி பிரம்மதேவர் மறைந்தார். இரண்யகசிபு வரத்துடன் ஊர் திரும்பும் சமயம் கயாது அழகிய மகனைப் பெற்றிருந்தாள். நாரதர் தன் பொறுப்பிலிருந்த கயாதுவையும் அவளது மகனையும் அழைத்து வந்து அவனிடம் ஒப்படைத்தார். இரண்யகசிபு குழந்தைக்குப் பிரகலாதன் எனப் பெயர் சூட்டி சீரும் சிறப்புமாக வளர்க்கத் தொடங்கினான். இரண்யகசிபு பிரம்ம தேவர் வழங்கிய வரத்தால் மூன்று உலகையும் ஆட்டிப் படைத்தான். அவன் கட்டளைப் படியே மூன்று உலகமும் நடக்கவேண்டும். மரம் செடி கொடி கூட அவன் விருப்பத்திற்கு மாறாக பூக்கவோ காய்க்கவோ கூடாது. சூரியன், சந்திரன், வருணன், வாயு ஆகியோர் கூட தன் கட்டளைப் படிதான் செயற்பட வேண்டும் என்றான். எல்லாவற்றிற்கும் மேலாக நாராயணன் நாமத்தை எவரும் உச்சரிக்கக் கூடாது என்றான். தன்னையே பூஜிக்க வேண்டும் என்றான். தேவர்களும் முனிவர்களும் அல்லற் பட்டனர். மூவுலகமும் நடுநடுங்கியது. இரண்யகசிபு அல்லும் பகலும் அவனுடைய விரோதியான நாராயணனரை கொல்லும் எண்ணத்துடனேயே இருந்தான்.

பிரகலாதனுக்கு தக்க வயது வந்ததும் குலகுரு சுக்கிராச்சாரியாரின் பிள்ளைகள் இருவரிடம் குருகுல வாசத்திற்கு ஒப்படைத்தான் இரண்யகசிபு. மகன் பிரகலாதனுக்கு சகல கல்விகளையும் அரக்கர்களின் நீதி முறைகளையும் போதிக்கும்படி கூறினான்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Feb 22, 2009 11:45 am

சுக்கிராச்சாரியாரின் புதல்வர்களான சண்டன், அமர்க்கன் இருவரும் பிரகலாதனை அழைத்துச் சென்றனர். மற்ற அரக்க குழந்தைகளுடன் அவனும் கல்வி கற்கத் தொடங்கினான். சில மாதங்களின் பின் இரண்யக்கசிபு மகனை அழைத்துவரச் சொன்னான். அவனை மகிழ்வுடன் மடியிலிருத்தி தின்பண்டங்கள் கொடுத்து குருவிடம் கற்றவற்றில் சிலவற்றைக் கூறும்படி கேட்டான். பிரகலாதன் பணிவுடன் சொன்னான். ~~ தந்தையே! நான் என்ற கர்வம் கூடாது. என்னுடையது என்று எதையும் உரிமை கொண்டாடுவது கூடாது. உலக வாழ்க்கையே மாயை. பந்தம் பாசம் என்பவற்றை மனத்திலிருந்து அகற்றி ஸ்ரீமத் நாராயணனை இடைவிடாது தியானம் செய்வதே சிறந்தது. || தனது கொடிய எதிரியின் பெயரை மகனே புகழ்ந்து பேசியது அவனுக்கு பெருங் கோபமாகவும் ஆச்சரியமாகவும் இருந்தது. யாரோ அவனுடைய மனதை கெடுத்திருக்கிறார்கள் எனக் கூறி அவன் மனதை மாற்றி நல்ல வழிக்குக் கொண்டு வருமாறு மீண்டும் குருவின் பிள்ளைகளுடன் அனுப்பி வைத்தான். குடிலுக்குச் சென்றதும் பிரகலாதனின் குருவான சண்டன், அமர்க்கன் இருவரும், ~~ குழந்தாய் நாங்கள் போதித்தவற்றை மறந்து உன் தந்தையிடம் ஏதேதோ கூறினாயே. அவற்றை யார் உனக்குப் போதித்தது || என வினாவினர். பிரகலாதன் சிறிதும் தயங்காமல் பதிலுரைத்தான். ~~குருதேவர்களே! நான் உண்மையைத்தான் சொன்னேன். பரந்தாமனைத் துதிப்பவர்களுக்கு பேத உணர்வு, அகங்காரம் என்பன ஏற்படாது. பிறவித் துன்பமும் இருக்காது.|| சண்டன், அமர்க்கன் இருவருக்கும் கடுங்கோபம் ஏற்பட்டது. நாங்கள் சொல்வது போல் செய்யாது விட்டால் உனக்கு எதுவித ஆகாரமும் வழங்காமல் சித்திரவதை செய்வோம் எனக் கூறி பிரம்பால் நன்கு அடித்தனர்.

பரந்தாமனின் நாமங்களை பிரகலாதன் உச்சரித்தான். பிரம்படிகள் அவனுக்கு தூசு தட்டுவது போல் இருந்தது. நாள்தோறும் ஆச்சாரியர்கள் இருவரும் பிரகலாதனை திருத்தப் பல வழிகளை கையாண்டனர். அடித்துத் துன்புறுத்தினர். ஆகாரமின்றி வாட விட்டனர். நயமாகச் சொல்லிப் பார்த்தனர். கடைசியாக தாம் சொல்லிக் கொடுப்பதை தந்தையிடம் கூறும்படி கேட்டுக்கொண்டனர். பிரகலாதன் மீண்டும் தந்தையிடம் சென்றான் மகனைக் கண்ட இரண்யகசிபு மகனை மகிழ்வுடன் அழைத்து மடியிலிருத்தி கற்றவற்றைக் கூறும்படி கேட்டான். ~~ தந்தையே! பரந்தாமனுடைய கலியாண குணங்களை கேட்பதும், சொல்லுவதும், அவரைத் துதிப்பதும் ஆனந்தத்தைக் கொடுக்கும்.|| என்றான் பாலகன். கோபம் கொண்ட இரண்யகசிபு மகனைத் தூக்கிக் கீழே போட்டான். கொலையாளிகளை அழைத்து, ~~ இவனை மலை உச்சியிலிருந்து கீழே உருட்டி விடுங்கள் || என்றான். மலையிலிருந்த உருட்டி விடப்பட்ட பிரகலாதன் நாராயணனுடைய நாமங்களை உச்சரித்த படியே ஒரு சிறு காயம் தானுமின்றி மலையடிவாரத்தை வந்தடைந்தான். இதைக் கொலையாளிகள் மூலம் அறிந்து கொண்ட இரண்யகசிபு கொடிய நாகத்தைக் கொண்டு பிரகலாதனை கொல்லக் கட்டளையிட்டான். பிரகலாதனைப் பார்த்துச் சீறிவந்த நாகம் ~~ ஓம் நமோ நாராயணா || என்ற பிரகலாதனின் மந்திரத்திற்குக் கட்டுப் பட்டு பிரகலாதனை மும்முறை வலம் வந்து அவனுடைய பாதத்தில் தலை வைத்துவிட்டு அங்கிருந்து வேகமாகச் சென்று மறைந்தது. கோபம் பன்மடங்கான இரண்யகசிபு முரட்டு யானையை வைத்து அதன் காலில் பிரகலாதனை மிதிக்க உத்தர விட்டான். நாகத்தைப் போலவே யானையும் ~~ ஓம் நமோ நாராயணா || என்ற பிரகலாதனின் மந்திரத்திற்குக் கட்டுப்பட்டு பிரகலாதனை வணங்கிச் சென்றது. கோபம் அடங்காத இரண்யகசிபு மனைவி கயாதுவை அழைத்து ஒரு கோப்பையில் நஞ்சைக் கொடுத்து பிரகலாதனுக்கு பருகத் தருமாற கட்டளையிட்டான். நஞ்சுக் கோப்பையுடன் கலங்கியபடி நின்ற தாயின் வேதனையைக் கண்ட பிரகலாதன் அவளிடமிருந்து கோப்பையைப் பெற்று பகவானின் நாமத்தை உச்சரித்தபடியே பருகினான். என்ன ஆச்சரியம்? அந்தக் கொடிய நஞ்சு கூட அவனை ஒன்றும் செய்யவில்லை. இரண்யகசிபு கோபத்துடன் உரத்த குரலில், ~~ஏ மூடனே! மூவுலகத்திலும் என் பெயரைச் சொன்னால் நடுநடுங்குகிறார்கள் நீயோ அச்சமின்றி ஏதேதோ பேசுகிறாய். உனக்கு இவ்வளவு துணிவு யாரால் எப்படி வந்தது? || என்று கேட்டான். பிரகலாதன் தந்தையை வணங்கி, கரம் குவித்து, நாராயணனை மனதில் துதித்து ~~ தந்தையே! இதற்கெல்லாம் அனைத்து உலகத்திலும் மேலான அந்தப் பரந்தாமனின் திருநாமமே காரணமாகும். || என்றான்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Feb 22, 2009 11:45 am

~~என்னடா பிதற்றுகிறாய்? மூவுலகத்திலும் என்னிலும் மேலானவன் இருக்கிறானா? அவன் எங்கே இருக்கிறான்? || என்று ஆத்திரமாகக் கேட்டான் இரண்யகசிபு'~தந்தையே அவர் தூணிலும் இருப்பார். துரும்பிலும் இருப்பார். என் நாவிலும் இருப்பார். உங்கள் சொல்லிலும் இருப்பார். || என்று அமைதியாகக் கூறினான். வாளுடன் தூணை நோக்கிச் சென்ற இரண்யகசிபு ~~ இதோ இந்ததத் தூணிலும் இருக்கிறாரா? எங்கே காட்டு || என்று தூணை வாளாள் வெட்டினான்.

மறுகணம் தூண் இரண்டாகப் பிளந்தது. அதிலிருந்து நரசிங்கர் தோன்றினார். தலை சிங்கமாகவும் உடல் மனிதனாகவும் இருந்த மனிதனுமற்ற விலங்குமற்ற நரசிங்கர் உருவத்தைப் பார்த்து இரண்யகசிபு மலைத்தான். நரசிங்கரின் கண்கள் மின்னின. பிடரிமயிர் குலுங்க அவர் தலையை அசைத்துக் கர்ச்சித்தார். அவருடைய வாயில் கூர்மையான கோரைப் பற்கள் காணப்பட்டன. கையில் நீண்ட கூர்மையான நகங்களும் பலம் வாய்ந்த கை கால்களும் மார்பும் காணப்பட்டன. இரண்யகசிபு கலக்கம் தெளிந்து நரசிம்மரை வெட்ட வாளை எடுத்தான். அவர் அதைத் தட்டி விட்டு அவனைக் கட்டிப் பிடித்து மல்யுத்தம் புரிந்தார். மாலை மங்கும் வரை காலங் கடத்தினார். அந்தி சந்திக்கும் வேளையில் இரண்யகசிபுவைப் பற்றியிழுத்துத் தூக்கிக் கொண்டு வாயில் நிலைப்படிக்கு வந்தார். அவனை மடியில் கிடத்திக் கொண்டார். பிடியிலிருந்து விடுவிக்க முயற்சி செய்யும் இரண்யகசிபுவை விடாது தனது நகங்களால் அவன் உடலைக் கிழித்தார். இரண்யகசிபு மடிந்ததையறிந்த மூவுலகமும் மகிழ்சியடைந்தது. பிரகலாதன் நரசிங்கரை கரம்கூப்பித் துதித்தான். நரசிங்கர் மகிழ்ச்சியடைந்து பிரகலாதனை வாழ்த்தி ~~ குழந்தாய் உன் பக்தி என்னைப் பரவசப்படுத்துகிறது. உனக்கு என்ன வரம் வேண்டும் சொல் || என்றார். அவர் மலரடிகளில் விழுந்த பிரகலாதன் ~~ பரந்தாமனே பந்த பாசம், ஆசை, மோகம் ஆகிய படு குழிகளில் விழாமல் என்னை தங்களின் திருவடிகளில் சேர்த்துக் கொள்ள வேண்டும். || என்றான். ~~ பிரகலாதா! என்னிடம் பக்தி பூண்டவர் பற்றற்ற நிலையிலேயே இருப்பார்கள். அவர்களை ஆசாபாசங்கள் எதுவும் பீடிக்காது. நீ உனது காலம்; முழுவதும் பூலோகத்தை ஆண்டு கடைசியில் என்னை வந்து சேர். || என்று கூறி மறைந்தார்.

பிரகலாதன் தன் தந்தையின் ஈமச்சடங்குகளைச் செய்தான். பெரியோர் பிரகலாதனுக்கு முடி சூட்டினார்கள். அவனும் உலகை நீதி தவறாது ஆண்டு வந்தான்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Feb 22, 2009 11:47 am

வாமனாவதாரம்

பரந்தாமனின் அவதாரங்கள் Vamana

பாற்கடலைக் கடைந்து அமிர்தம் எடுத்துப் பருகியதும் தேவர்கள் வளம் பெற்றார்கள். அவர்கள் அசுரர்கள் பலரை வீழ்த்தினார்கள். பலரைப் படுகாயமடையச் செய்தார்கள். அவர்களில் திருமாலின் பரமபக்தன் பிரகலாதனின்; பேரனும் வீரசேனர் மகனுமாகிய பலியும் ஒருவன். பிருகு குலத்தைச் சேர்ந்தவர்கள் அரக்கர்களுக்கு உதவி செய்தார்கள். குலகுருவான சுக்கிராச்சாரியார் தன் தவ வலிமையால் இறந்த அரக்கர்களை உயிர் பெற்று எழச் செய்தார். பலியின் காயங்களை ஆற்றினார். அன்றிலிருந்து பிருகு குலத்தவரிடம் பலிக்கு மிகுந்த பக்தி ஏற்பட்டது. அவர்களை ஆதரித்தான். அவர்கள் சொற்படி நடந்தான். இதனால் மகிழ்ந்த பிருகு குலத்தவர் பலி விரும்பியதைச் செய்யக் காத்திருந்தனர்.

இந்திரனை ஜெயித்து அமராவதியைக் கைப்பற்ற எண்ணினான் பலி. இதை அறிந்த பிருகு குலத்து முனிவர்கள் அவனைப் பீடத்தில் அமர்த்தி அபிஷேகம் செய்தனர். விஸ்வஜித் என்னும் யாகத்தைச் செய்யத்தொடங்கினர். அந்த யாகக் குண்டத்திலிருந்து பச்சை நிறக் குதிரை, சிம்மக்கொடி, இரண்டு அம்புறாத்தூணிகள், ஒரு வில் ஆகியவை வெளியே வந்தன. அவற்றை முனிவர்கள் பலிக்கு அளித்தனர். பலி அவர்களை வணங்கினான். பாராட்டினான். பாட்டனார் பிரகலாதனை வணங்கி தேரில் ஏறி அமர்ந்து அரக்கர்படை பின்தொடர அமராவதிப் பட்டணத்தை நோக்கிச் சென்று முற்றுகையிட்டான். முன்பு படு தோல்வியடைந்து ஓடிய அரக்கர் படை இப்போது எப்படி இங்கு வந்திருக்கிறார்கள் என ஆச்சரியப்பட்ட தேவர்கள், அதை அறிவதற்காக தம் குலகுருவான பிரகஸ்பதியை நோக்கிச் சென்றனர். குருவை வணங்கி விபரத்தைச் சொல்லி ~~ இப்போது பலி வந்திருக்கிறானே. அவனை எளிதில் வெல்ல முடியாது போல் தோன்றுகிறது. அவனுக்கு இவ்வளவு வலிமையும் துணிவும் எப்படி உண்டாயிற்று? || என்று இந்திரன் கேட்டான்.

~~ இந்திரனே! தேவர்களே! சுக்கிராச்சாரியாரின் உதவியும் பிருகு முனிவர்களின் ஆதரவும் பலியும் அரக்கர்களும் வலிமை பெறக் காரணமாகும். அவர்களை வெல்ல இப்போது உங்களால் முடியாது. நல்ல காலம் வரும்வரை நீங்கள் எங்காவது சென்று மறைந்திருங்கள். பலிக்கு இப்போது இருக்கும் குருவின் உதவி அவனைக் காக்கிறது. விரைவில் குருவின் சாபத்திற்கு ஆளாவான். அதுவரை காத்திருங்கள் || என்றார் பிரகஸ்பதி. குருவின் வாக்கை சிரமேற்கொண்டு இந்திரனும் தேவர்களும் பரிவாரங்களும் ஓடி மறைந்தார்கள்.

பலி சுலபமாக இந்திரனின் பட்டணத்தைக் கைப்பற்றி முடி சூட்டிக் கொண்டான். இந்திரப் பதவி நிலைத்திருப்பதற்காக பிருகு குலத்து முனிவர்கள் நூறு அசுவமேத யாகங்களைச் செய்தார்கள். இதன் மூலம் மூன்று உலகையும் கைப்பற்றிய பலி மூவுலகச் சக்கரவர்த்தியாக பட்டாபிஷேகம் செய்யப்பட்டான். மூவுலகையும் செம்மையாக ஆட்சி செய்த அவனது புகழ் எங்கும் பரவியது. அரக்கர்கள் தேவலோகத்தை கைப்பற்றிக் கொண்டதையும் தேவர்கள் ஓடி மறைந்ததையும் அறிந்த தேவர்களின் தாயான அதிதி மனம் வேதனைப் பட்டாள். அவள் தன் கணவர் காசிபரிடம் வந்தாள். காசிபர் பலகாலமாகத் தவத்திலிருந்து தன்னை மறந்த நிலையில் இருந்தார். அவர் கண் விழித்துப் பார்த்த போது குடில் களையிழந்து இருப்பதையும் மனைவி அதிதி கவலையுடன் இருப்பதையும் கண்டார். ~~ அன்பே, ஏன் கவலையுடன் உள்ளாய்? உன்னுடைய பிள்ளைகளான தேவர்கள் நலந்தானே? || என்று கேட்டார். அதிதி அவரை வணங்கி நா தழுதழுக்கச் சொன்னாள், ~~சுவாமி அரக்கர்கள் என் பிள்ளைகளை விரட்டி விட்டு தேவலோகத்தைக் கைப்பற்றி விட்டார்கள். என் பிள்ளைகள் எங்கோ சென்று மறைந்து வாழ்கிறார்கள். அவர்களுக்கு மீண்டும் தேவ லோகம் கிட்டி அவர்கள் மகிழ்வுடன் வாழ அருள் புரிய வேண்டும். காசிபர் புன்னகை செய்தார். ~~ அதிதி, ஸ்ரீமத் நாராயணருடைய விளையாட்டுக்கள் வேடிக்கையானவை. ஒருவருடைய ஆசை நிறைவேற திருமாலைக் குறித்த பயேகி விரதம் இருந்து திருமாலைப் பூஜிக்க வேண்டும். நீ அந்த விரதத்தை மேற்கொண்டு திருமாலை வழிபடு, உன் விருப்பம் நிறைவேறும் || என்றார். கணவர் சொன்ன விதம் அதிதி விரதமிருந்து திருமாலைப் பூஜித்து வந்தாள். சரியாகப் பன்னிரண்டாம் நாள் நாராயணர் அவளுக்கு தரிசனம் தந்தார். அதிதி அவரை வலம் வந்து பாதம் பணிந்தாள். அவளின் கண்களிலிருந்து ஆனந்தக் கண்ணீர் பெருகியது. பகவான் அதிதியை நோக்கி, ~~ தேவர்களின் அன்னையே! உன் கவலையைத் தெரிந்து கொண்டேன். இப்போது அரக்கர்களை ஒன்றும் செய்ய இயலாதெனினும் விரைவிலேயே அவர்களை அழித்து உன் புதல்வர்களுக்கு மீண்டும் தேவலோகத்தை பெற்றுக் கொடுப்பேன். அதற்காக நான் உன் பிள்ளையாகத் தோன்றுவேன். இந்த ரகசியத்தை யாரிடமும் சொல்லாதே|| என்ற கூறி மறைந்தார். தேவர்களுககு நன்மைசெய்யும் நோக்கத்துடன் அதிதியின் பிள்ளையாகத் தோன்றிய வாமனருக்கு தக்க வயதில் பிரம்மோபதேசம் செய்தார்கள். காசிபர் மேகலையை வாமனருக்குக் கொடுத்தார். பூமாதேவி மான் தோலை அளித்தாள். பிரம்மா கமண்டலத்தைக் கொடுத்தார். சந்திரன் தண்டத்தைக் கொடுத்தான். சரஸ்வதி ஜபமாலையைக் கொடுத்தாள். குபேரன் பிட்சா பாத்திரத்தைக் கொடுத்தார். பரமேஸ்வரி அதில் பிச்சையைப் போட்டாள்.

அச் சமயத்தில் பலிச் சக்கரவர்த்தி நர்மதை ஆற்றின் வடகரையில் பிருகு குசம் என்ற இடத்தில் அசுவமேத யாகம் ஒன்றைப் பிருகு குலத்தவரின் உதவியுடன் செய்துகொண்டிருந்தான். இதை அறிந்த வாமனர் பலிச்சக்கரவர்த்தி யாகம் செய்யும் யாகசாலையை சென்றடைந்தார். அவருடைய மேனியின் பிரகாசத்தைக் கண்ட பிருகு வம்ச முனிவர்கள் திகைத்தனர். அவர்கள் எழுந்து வந்து வாமனரை எதிர் கொண்டு அழைத்து வந்தனர். வாமனரைக் கண்டதும் பலிச்சக்கரவர்த்தியே பக்தியுடன் எழுந்து அவரை ஆசனத்தில் அமரச் செய்தான். அவருடைய பாதங்களை நர்மதை நீரால் அபிஷேகம் செய்தான். அந்த நீரை எடுத்து தலையில் தெளித்து கண்களிலும் ஒத்திக் கொண்டான். ~~ பிருகு குலத்தவர் செய்த தவத்தின் பயனாலும் என் பாக்கியத்தாலும் தாங்கள் இங்கு வந்திருக்கிறீர்கள். தாங்கள் எதையோ எதிர் பார்த்து வந்துள்ளதாகத் தோன்றுகிறது. தங்களுக்கு என்ன விருப்பமோ தெரிவியுங்கள் அதை நான் தட்டாது தருகிறேன் || என்றான் பலிச் சக்கரவர்த்தி. பலியின் பணிவையும் உயர்ந்த குணத்தையும் கண்ட வாமனர் சொன்னார், ~~ குலப் பெருமைக்கேற்ப நடந்து கொள்கிறீர்கள். யாசித்து வந்தவருக்கு ஒன்றைக் கொடுப்பதாகச் சொல்வது சுலபம். கொடுப்பது மிகவும் கடினம். ஆனால் உங்கள் குலத்தவர் அவ்விதம் நடந்து கொண்டதில்லை. என் தேவை என் காலடியால் மூன்றடி இடம்தான். தேவைக்கு அதிகமாக விரும்புபவன் திருடனுக்குச் சமமாவான். ~~ தோற்றத்திலும் வயதிலும் சிறியவராகக் காணப்பட்டாலும் அறிவிற் சிறந்தவராக இருக்கிறீர.; தாங்கள் மூன்றடி இடம் கேட்பது ஆச்சரியமாக இருக்கிறது. தங்களுக்கு எவ்வளவு வேண்டுமோ அதைக் கொடுக்கக் காத்துக் கொண்டிருக்கிறேன் || என்றான் பலி.

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக