ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

110 வது விதி - தமிழகத்தின் தலை-விதி

5 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

110 வது விதி - தமிழகத்தின் தலை-விதி Empty 110 வது விதி - தமிழகத்தின் தலை-விதி

Post by சிவா Fri Aug 15, 2014 10:20 pm

நெறிக்கப்படும் ஜனநாயகத்தின் குரல் வளை

110 வது விதி - தமிழகத்தின் தலை-விதி Jayalalitha

ஆட்சிக்கு வந்து 2 ஆண்டுகளில் சட்டப்பேரவையில் முதல்வர் ஜெயலலிதா 110 வது விதியின் கீழ் 100 முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டு சாதனை புரிந்துள்ளதாக மே 12ம் தேதி சட்டப்பேரவை தலைவர் ப. தனபால் மகிழ்ச்சியுடன் அறிவித்தார்.

இது சாதனையா வேதனையா? ஜனநாயகம் படும்பாடு எனப் பல்வேறு தலைப்புகளில் எதிர்க்கட்சியினர் தமிழகமெங்கும் இதை எதிர்த்து கண்டனக் கூட்டங்களை நடத்தினர். “விதியை மாற்றிய விதி” என்ற தலைப்பில் புத்தகம் வெளியிட்டு அதிமுகவினர் இதை கொண்டாடி வருகின்றனர். இதைப் பார்த்து தமிழக மக்கள் என்ன நடக்கிறது என்று புரியாமலேயே விழி பிதுங்கி நிற்கின்றனர்.

அப்படி 110 விதிதான் என்ன சொல்கிறது? அரசமைப்பு சட்டத்தின் 208-வது பிரிவு 1-வது உட்பிரிவின்படி இயற்றப் பெற்றவை தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதிகள். இதில் மொத்தம் 23 அத்தியாயங்கள், 292 விதிகள் உள்ளன. விதிகளில் உட்பிரிவுகளும் உள்ளன. இந்த விதிகள்படிதான் சட்டப்பேரவை நடத்தப்படவேண்டும். சட்டப்பேரவை உறுப்பினர்கள் நடந்து கொள்ள வேண்டும். இதில் ஒன்றுதான் விதி-110. இது என்ன சொல்கிறது?

(1) பொது முக்கியத்துவம் வாய்ந்த ஒரு பொருளைப்பற்றி ஓர் அமைச்சர் பேரவைத் தலைவரின் அனுமதியுடன் அறிக்கை ஒன்றை அளிக்கலாம்.

(2) அவ்வறிக்கையின் மீது எவ்வித விவாதமும் இருத்தல் கூடாது.

(3) உள் விதி 1-இன் கீழ்அறிக்கையளிக்க விரும்பும் ஓர் அமைச்சர் எந்நாளில் அந்த அறிக்கை அளிக்க விரும்புகிறார் என்பதையும் பேரவைத் தலைவரின் பார்வைக்கு வைக்க அதன் பிரதி ஒன்றையும் முன்கூட்டியே சட்ட பேரவை செயலாளருக்கு அனுப்ப வேண்டும்.


நாம் அடிக்கடி ஊடகங்களில் படிக்கும், கேட்கும் விதி-110 இதுதான். இந்த விதி எந்த காரணத்திற்காக கொண்டுவரப்பட்டது என்றால் பொது முக்கியத்துவம் வாய்ந்த ஒரு பிரச்சனைக்கு அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போது அப்பொருளைப்பற்றி உறுப்பினர்கள் விவாதித்தால் காலவிரயம் கூடும் அல்லது அப்பொருள் மீது உரிய நடவடிக்கை எடுக்க முடியாமல் போய்விடும் என அரசு கருதும் போது இந்த விதிப்படி அரசு பயன்படுத்த ஏதுவாக கொண்டுவரப்பட்டதுதான் விதி-110.

ஆனால் 14-வது சட்டப்பேரவைக்கு முதல்வராக பொறுப்பேற்றுள்ள ஜெயலலிதா தினமும் சட்டப்பேரவை விதி-110ன் கீழ் திட்டங்களை அறிவிப்பதையே வழக்கமாக மாற்றியுள்ளார். இது ஜனநாயகத்திற்கு மிகப்பெரிய ஆபத்தாக மாறிவிடும். விதி என்று ஒன்று எதிலும் உருவாக்கினால் விதிவிலக்கு என்று உருவாவது இயல்பே. ஆனால் விதிவிலக்கையே நிரந்தர விதியாக மாற்றுவது நோக்கத்தையே சிதைத்துவிடும். இந்த வேலையைத்தான் ஜெயலலிதா கனகச்சிதமாக தற்போது செய்து வருகிறார்.

இந்திய ஜனநாயகம் மக்களுக்காக மக்களால் தேர்ந்தெடுக்கப்படுவது. ஆனால் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஓர் அரசு மக்களுக்காக திட்டங்களை தீட்டும்போது மக்களுடன் (மக்கள் பிரதிநிதியான சட்டப்பேரவை உறுப்பினர்களுடன்) கலந்து ஆலோசித்து – விவாதித்து முடிவெடுக்க மறுத்தால் ஜனநாயகம் எங்கே இருக்கிறது? மக்களுக்கான அரசாங்கம் எங்கே இருக்கிறது? 110-விதியின் கீழ் அறிவிக்கப்படும் திட்டங்கள் உண்மையிலேயே மக்களுக்கு பயனுள்ள திட்டங்களாக இருந்தாலும் கூட அரசு சட்டப்பேரவையில் விவாதிக்கும் போதுதான் அத்திட்டம் மேன்மையுறும், மெருகேறும். முக்கியமாக ஜனநாயகம் காக்கப்படும்.

ஆனால் இதையெல்லாம் விட்டுவிட்டு, “110 விதியின் கீழ்தான் தினமும் அனைத்து திட்டங்களையும் அறிவிப்பேன்; அத்திட்டங்களைப் பற்றி சட்டப்பேரவையில் விவாதிக்க மாட்டேன், அதுபற்றி யாரும் கேள்வி கேட்க கூடாது, நான் பதிலும் சொல்ல மாட்டேன்” என விதி விலக்கை விதியாக மாற்றி ஜனநாயகவாதி என்ற போர்வையில் சர்வாதிகாரியாக செயல்படுவது மக்களாட்சி தத்துவத்தையே கேலிக்கூத்தாக்கி விடும். இப்படி ஜனநாயகத்தின் குரல்வளை நெறிக்கப்பட்டால் தமிழகத்தின் தலைவிதியை யாராலும் மாற்ற முடியாது.

1- “110 விதியின் கீழ் செய்யப்படும் அறிவிப்புகளுக்கு தனியாக நிதி ஒதுக்கப்படுமா? துறைக்கான அமைச்சர்களை மானியக் கோரிக்கை மீதான விவாதத்திற்குப் பதிலளித்த போது இந்த அறிவிப்புகளையெல்லாம் அமைச்சர்கள் ஏன் செய்யவில்லை?” என கருணாநிதி கேள்வி எழுப்பியதற்கு, “புதிய திட்டத்தை செயல்படுத்த எதிர்பாராத செலவு நிதியில் இருந்து வழங்கப்பட்டு செலவு செய்யப்படும். பின்னர் இதற்கான நிதி முதல் துணை மதிப்பீடு மற்றும் இறுதி துணை மதிப்பீடுகளில் சேர்க்கப்பட்டு சட்டப்பேரவையின் அனுமதி பெறப்படும்” என ஜெயலலிதா பதில் அளித்துள்ளார்.

2 - விதியில் 110-ல் மாற்றம் தேவை: 110-விதியின் கீழ் அறிவிக்கப்படும் அறிவிப்புகள் பற்றி பேரவை உறுப்பினர்கள் கேள்வி கேட்கவோ, விவாதிக்கவோ முடியாது என தற்போது விதி உள்ளது. இந்த விதியில் சில மாறுதல்களை கொண்டு வரவேண்டும். அதாவது விதி 110ன் கீழ் அறிவிப்பு-திட்டங்கள் அறிவித்தால் அன்றைய தினம் அதுபற்றி கேள்வி எழுப்பவோ விவாதிக்கவோ முடியாது எனவும் மறுநாள் இதை முதலாவதாக பேரவை உறுப்பினர்களின் விவாதத்திற்கு வைக்க வேண்டும் எனவும் திருத்தம் செய்யப்பட வேண்டும். மேலும் ஒரு கூட்டத்தொடரின் கடைசி நாளன்று 110-விதியின் கீழ் அறிவிப்பு செய்தால் அதுபற்றி அன்றே விவாதம் நடத்தவும் விதிகளில் திருத்தம் செய்யப்படவேண்டும்.

[thanks]லோக்சத்தா கட்சி[/thanks]


110 வது விதி - தமிழகத்தின் தலை-விதி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

110 வது விதி - தமிழகத்தின் தலை-விதி Empty Re: 110 வது விதி - தமிழகத்தின் தலை-விதி

Post by M.M.SENTHIL Fri Aug 15, 2014 10:27 pm

நம்ம சிவா, அண்ணாவிற்கு குண்டர் சட்டம் உறுதியாகி விட்டது..


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

110 வது விதி - தமிழகத்தின் தலை-விதி Empty Re: 110 வது விதி - தமிழகத்தின் தலை-விதி

Post by பாலாஜி Fri Aug 15, 2014 10:29 pm

110 விதியின் கீழ் இந்த பின்னுட்டத்தை எழுதுகின்றேன்


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

110 வது விதி - தமிழகத்தின் தலை-விதி Empty Re: 110 வது விதி - தமிழகத்தின் தலை-விதி

Post by M.M.SENTHIL Fri Aug 15, 2014 10:34 pm

பாலாஜி wrote:110 விதியின் கீழ் இந்த பின்னுட்டத்தை எழுதுகின்றேன்
மேற்கோள் செய்த பதிவு: 1079700

தல நீங்களும் கொஞ்சம் ஜாக்கிரதையா இருங்க, உங்களுக்கும் குண்டர் சட்டம்?


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

110 வது விதி - தமிழகத்தின் தலை-விதி Empty Re: 110 வது விதி - தமிழகத்தின் தலை-விதி

Post by யினியவன் Fri Aug 15, 2014 10:36 pm

விதியேன்னு கதியத்து வீதியில திரியற நமக்கு இவ்விதி எம்மாத்திரம் - அம்மா ஆத்திரம் வேண்டாம் - தொடருங்கள் தங்கள் பணியை விதி 110 ன் படியே...



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

110 வது விதி - தமிழகத்தின் தலை-விதி Empty Re: 110 வது விதி - தமிழகத்தின் தலை-விதி

Post by M.M.SENTHIL Fri Aug 15, 2014 10:38 pm

யினியவன் wrote:விதியேன்னு கதியத்து வீதியில திரியற நமக்கு இவ்விதி எம்மாத்திரம் - அம்மா ஆத்திரம் வேண்டாம் - தொடருங்கள் தங்கள் பணியை விதி 110 ன் படியே...
மேற்கோள் செய்த பதிவு: 1079706

விதியத்து வீதியில சுத்தினாலும், நம்மள நம்பி ஊட்டுல பொண்டு, புள்ளைங்க இருக்கே தல


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

110 வது விதி - தமிழகத்தின் தலை-விதி Empty Re: 110 வது விதி - தமிழகத்தின் தலை-விதி

Post by யினியவன் Fri Aug 15, 2014 10:42 pm

அவங்களும் விதியேன்னு நம்மள அட்ஜஸ்ட் பண்ணிக்குவாங்க புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

110 வது விதி - தமிழகத்தின் தலை-விதி Empty Re: 110 வது விதி - தமிழகத்தின் தலை-விதி

Post by சிவா Fri Aug 15, 2014 10:44 pm

M.M.SENTHIL wrote:நம்ம சிவா, அண்ணாவிற்கு குண்டர் சட்டம் உறுதியாகி விட்டது..


இல்லை பாஸ், நான் கொஞ்சம் ஒல்லியாகத்தான் உள்ளேன்!


110 வது விதி - தமிழகத்தின் தலை-விதி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

110 வது விதி - தமிழகத்தின் தலை-விதி Empty Re: 110 வது விதி - தமிழகத்தின் தலை-விதி

Post by சிவா Fri Aug 15, 2014 10:44 pm

பாலாஜி wrote:110 விதியின் கீழ் இந்த பின்னுட்டத்தை எழுதுகின்றேன்


 சிரிப்பு சிரிப்பு சிரிப்பு 


110 வது விதி - தமிழகத்தின் தலை-விதி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

110 வது விதி - தமிழகத்தின் தலை-விதி Empty Re: 110 வது விதி - தமிழகத்தின் தலை-விதி

Post by M.M.SENTHIL Fri Aug 15, 2014 10:49 pm

சிவா wrote:
M.M.SENTHIL wrote:நம்ம சிவா, அண்ணாவிற்கு குண்டர் சட்டம் உறுதியாகி விட்டது..


இல்லை பாஸ், நான் கொஞ்சம் ஒல்லியாகத்தான் உள்ளேன்!
மேற்கோள் செய்த பதிவு: 1079712

நீங்கள் ஒல்லிதான் ஆனால் சட்டம் குண்டாச்சே அண்ணா.


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

110 வது விதி - தமிழகத்தின் தலை-விதி Empty Re: 110 வது விதி - தமிழகத்தின் தலை-விதி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum