ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழ் பாடத்திற்கு மட்டும் குறைவான ஆசிரியர்கள் ஏன்?

Go down

 தமிழ் பாடத்திற்கு மட்டும் குறைவான ஆசிரியர்கள் ஏன்? Empty தமிழ் பாடத்திற்கு மட்டும் குறைவான ஆசிரியர்கள் ஏன்?

Post by சிவா Tue Aug 12, 2014 4:22 pm


சென்னை: அரசு பள்ளிகளில் புதிதாக நியமிக்கப்பட உள்ள ஆசிரியர்களில் தமிழ் பாடத்திற்கான ஆசிரியர் எண்ணிக்கை மிகவும் குறைவு. வெறும் 772 இடங்கள் மட்டுமே தமிழ் பாடத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.

பாட வாரியான பணி நியமன வரிசையில் தமிழை நான்காவது இடத்தில் வைத்திருப்பதுதான் இதற்கு காரணம் என, தமிழ் ஆசிரியர்கள் குற்றம் சாட்டுகின்றனர். பட்டதாரி ஆசிரியர் தேர்வில் பணி நியமனத்திற்கு தகுதி வாய்ந்தவர்களின் பட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டது. 10,726 பணியிடங்கள் ஒதுக்கியுள்ள போதும், தமிழ் பாடத்திற்கு 772 பணியிடங்கள் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளன.

வரலாறுக்கு அதிகம்:

ஆங்கிலத்திற்கு 2,822 இடங்களும், வரலாறு பாடத்திற்கு 3,592 இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன. அறிவியல் பாடத்திற்கு 1,600க்கும் அதிகமான பணியிடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளன. தமிழ் பாடத்திற்கு மட்டும் பணியிடங்கள் எண்ணிக்கையை குறைத்து வழங்கியதற்கு தமிழ் ஆசிரியர் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

இதுகுறித்து தமிழ் ஆசிரியர்கள் சிலர் கூறியதாவது: அரசியல் தலைவர்கள் தமிழ் தமிழ் என மூச்சுக்கு முன்னூறு முறை கூறுகின்றனர். ஆனால் தமிழகத்தில் தமிழ் பட்டதாரிக்கு ஏற்பட்டுள்ள உண்மையான நிலை இதுதான். தமிழ் பாடத்தில் 9,500 பேர் தேர்ச்சி பெற்று அதிக மதிப்பெண் பெற்றபோதும் 772 பேருக்கு தான் வேலை வாய்ப்பு கிடைத்து உள்ளது.

தமிழுக்கு முன்னுரிமை வேண்டும் மற்ற பாடங்களுக்கு இணையாக தமிழ் பாடத்திற்கும் வேலைவாய்ப்பு அளிக்க வேண்டும். ஆசிரியர் பணியிடங் களை நிரப்புவதில் தமிழ் பாடத்திற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். இவ்வாறு தமிழ் ஆசிரியர்கள் தெரிவித்தனர்.

இந்த விவகாரம் குறித்து தமிழக தமிழாசிரியர் கழகத்தின் சென்னை மாவட்ட தலைவர் தாயுமானவன் கூறியதாவது: ஆசிரியர் நியமன வரிசை கணிதம் அறிவியல் சமூக அறிவியல் தமிழ் ஆங்கிலம் என உள்ளது. 40 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் எனில் ஒரு வகுப்பில் 120 மாணவர்கள் இருந்தால் முதலில் கணிதம் அறிவியல் சமூக அறிவியல் என மூன்று பாட ஆசிரியர் நியமிக்கப்படுவர்.

அதே வகுப்பில் 160 மாணவர்கள் இருந்தால்தான் தமிழ் பாடத்திற்கு ஒரு பணியிடம் கிடைக்கும். அடுத்த 40 மாணவர்கள் கூடுதலாக இருந்தால் தான் ஆங்கிலத்திற்கு ஒரு பணியிடம் கிடைக்கும். மாணவர் எண்ணிக்கை குறைவாக இருந்தால் எட்டாம் வகுப்பு எடுக்கும் தமிழ் ஆசிரியரையே 10ம் வகுப்பு தமிழ் பாடமும் எடுக்க சொல்கின்றனர்.

இதனால் புதிதாக ஒரு பணியிடம் கிடைப்பது தடைபடுகிறது. ஆங்கிலத்திற்கும் இதே நிலைதான். ஆங்கில பட்டதாரி ஆசிரியர் இதுவரை கணிதம், அறிவியல், சமூக அறிவியல் பாட ஆசிரியர் தான் ஆங்கில பாடம் நடத்தி வந்தனர்.

தற்போதுதான் முதல்முறையாக நேரடியாக ஆங்கில பட்டதாரி ஆசிரியர் நியமிக்கப்படுகின்றனர். அதனால் ஆங்கிலத்திற்கு கூடுதல் பணியிடம் கிடைத்துள்ளது.

பணி நியமனத்தில் தமிழை முதலில் சேர்க்க வலியுறுத்தி பள்ளிக்கல்வித் துறை செயலர் சபிதாவிடம் கோரிக்கை மனு அளித்துள்ளோம். உரிய நடவடிக்கை எடுப்பதாக அவர் உறுதி அளித்துள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.

காரணம் என்ன?:

தமிழ் பாடத்திற்கு குறைவான இடங்கள் ஒதுக்கீடு செய்தது குறித்து டி.ஆர்.பி. (ஆசிரியர் தேர்வு வாரியம்) வட்டாரம் கூறியதாவது: காலி பணியிடங்களில் 50 சதவீதத்தை பதவி உயர்வு மூலமும் 50 சதவீதத்தை நேரடி பணி நியமனம் மூலமும் கல்வித் துறை நிரப்புகிறது.

இதில் தமிழ் பாடத்திற்கு மட்டும் 66.6 சதவீத இடங்கள் பதவி உயர்வு மூலம் நிரப்பப்படுகின்றன. 33.3 சதவீத இடங்கள் மட்டுமே நேரடியாக நியமிக்கப்படுகின்றன. இந்த முறையினால்தான் தமிழ் பாடத்திற்கு இடங்கள் குறைவாக வருகின்றன. இவ்வாறு டி.ஆர்.பி. வட்டாரம் தெரிவித்தது.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

Back to top

- Similar topics
» 600 யூனிட்டுக்குக் குறைவான மின்நுகர்வோருக்கு கட்டண உயர்வு இல்லை
» தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக போரிட்டால் மட்டும், தமிழ் மக்களுக்கு தீர்வு வழங்கிவிட்டதாக ஏற்று கொள்ள முடியாது - எம்.கே.தார்
» ஆங்கில பாடத்திற்கு பதில் ஆபாச படம்:பயிற்சி "டிவிடி' யில் உல்லாச காட்சிகள்
» 153 கல்லூரிகளில், 110ல் 50 சதவீதத்திற்கும் குறைவான தேர்ச்சி
» எண்ணெய் குறைவான உணவு வகைகள் தயாரிப்பு முறைகள்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum