புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by E KUMARAN Today at 12:50 pm
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 12:29 pm
» கருத்துப்படம் 21/11/2024
by mohamed nizamudeen Today at 9:43 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Thu Nov 21, 2024 4:53 pm
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 3:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 2:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Thu Nov 21, 2024 2:28 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 2:15 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Thu Nov 21, 2024 1:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Thu Nov 21, 2024 1:21 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 12:54 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 12:38 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Thu Nov 21, 2024 12:02 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Thu Nov 21, 2024 11:49 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Wed Nov 20, 2024 11:35 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 11:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 11:13 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Wed Nov 20, 2024 10:11 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 9:39 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:17 pm
» மாயை எனும் இரவில்....
by ayyasamy ram Wed Nov 20, 2024 6:32 pm
» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:33 pm
» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:31 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:29 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 2:23 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 12:45 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Wed Nov 20, 2024 11:55 am
» தீக்ஷிதர் பார்வையில் திவ்ய நாயகி
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:23 am
» களங்கம் போனது, கன்னிகையும் கிடைத்தாள்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:21 am
» துளசி வழிபாடு பரம்பதம் அளிக்கும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:18 am
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:17 am
» பந்தல் இருந்தால் கொடி படரும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:14 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:45 am
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:43 am
» நீதிக்கதை - தனித் திறமை
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:35 am
» நவம்பர் 20- திப்பு சுல்தான் அவர்களின் பிறந்த தினம்
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:34 am
» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:59 pm
» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:52 pm
» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:50 pm
» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:48 pm
» நாளைய காவியமே!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:43 pm
» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:42 pm
» மெய் உறக்கம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:41 pm
» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:40 pm
» மிருகப் பூச்சி
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:39 pm
» உள்ளம் தொலைந்ததடி!

» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:38 pm
» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:37 pm
» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:36 pm
» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Tue Nov 19, 2024 3:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
E KUMARAN | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
sram_1977 | ||||
Guna.D | ||||
Shivanya |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
sram_1977 | ||||
Anthony raj |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சிறுகதைகளும், தொடர்கதைகளும்!
Page 1 of 1 •
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
சுரேஷுக்கு வெறுப்பாகவும், எரிச்சலாகவுமிருந்தது. அவனுடைய வேலையில் பயணம் என்பது தவிர்க்க முடியாதது என்றாலும், பிரம்மசாரியாக இருந்தவரை வேலை நிமித்தம் ஏற்பட்ட பயணங்கள் உற்சாகத்தையே தந்தன.
திருமணமாகி ஒரு குழந்தை பிறந்து விட்டது; மனைவி ஐ.டி.ஐ.,யில் வேலை செய்கிறாள். உடன் அப்பா, அம்மா இருந்தாலும், அவ்வப்போது வந்து போகும் மாமியார், மாமனார், சொந்தங்கள், மறுக்காமல் போக வேண்டிய திருமணங்கள், வரவேற்புகள் இத்யாதி என, திடீர் பயணங்களால், இந்த விசேஷங்களில் பங்கு பெறுவது தடைபடுவதால், பயணங்கள் சுரேஷுக்கு கசந்து போனது.
தொழிற்சாலை பாதுகாப்பு பற்றி ஆராய்ந்து, அவர்களின் பாதுகாப்பு முறைகளை சொல்லும் ஆலோசகர் வேலை. இவன் வேலை செய்த நிறுவனத்திற்கு தொழிற்சாலைகள் மத்தியில் நல்ல மதிப்பும், மரியாதையும் இருந்தது; இவர்கள் தரும் ஆலோசனைகள் நடைமுறைக்கு ஒத்து வருவதால், வேலைகள் வந்து குவிந்தன.வாரம் ஒருமுறை, ஏதாவது ஒரு தொழிற்சாலையைப் பார்க்கவோ, அந்த ஊழியர்களுடன் பேசி நிலைமையை அறிந்து கொள்ளவோ பயணம் செய்ய வேண்டியிருக்கும்.
போன வாரம்தான் மும்பையிலுள்ள ஒரு தொழிற்சாலையை பார்வையிட்டு திரும்பி இருந்தான். இந்த வாரம் கடலூருக்குச் செல்ல வேண்டும்; அதுவும் காரில்! ஐந்து மணி நேரப்பயணம்தான் என்றாலும், நினைக்கவே ஆயாசமாக இருந்தது.
மனைவி, குழந்தை குடும்பத்துடன் இருக்கும் நேரம் குறைந்து கொண்டே செல்வது போல் தோன்றியது.
அங்குள்ள தொழிற்பேட்டையிலுள்ள இரண்டு, மூன்று நிறுவனங்களுக்குச் செல்ல வேண்டியிருந்ததால், தொழிற்சாலை விருந்தினர் விடுதியில் ஒரு இரவு தங்க வேண்டிய நிலை.
ஒவ்வொரு நிறுவனத்திலும் நிறைய விஷயங்களையும், சிக்கலான தொழில்முறைகள் பற்றிய விவரங்களையும் சேகரிக்க வேண்டி இருக்கும். இத்தகைய தொடர் வேலை பளுவினால், தன் குணம் கொஞ்சம் கொஞ்சமாக மாறி வருவது சுரேஷுக்குப் புரிந்தது. முப்பத்தைந்து வயதில் லேசாக ரத்த அழுத்தம் தோன்றியிருப்பதை, அவனை பரிசோதித்துப் பார்த்த டாக்டர் உறுதி செய்து, 'ஊறுகாய், அப்பளம், எண்ணெய் பலகாரங்களை சாப்பிடாதீர்கள்; சாப்பிட்டாலும் கொஞ்சம் உப்பு குறைவாகவே இருக்கட்டும்...' என்று கூறி, மாத்திரைகளை எழுதித் தந்தார்.
இதனால், பயணத்தின் போது கையில் மருந்து, மாத்திரைகளை மறக்காமல் கொண்டு போக வேண்டிய கட்டாயம்.
மனைவி அலுவலக மீட்டிங் என்று ஓடிக் கொண்டிருப்பதால், அவள் வீட்டிலிருக்கும் நேரம் குறைவு; குழந்தையை அப்பா, அம்மா பார்த்துக் கொள்வதால், அந்தக் கவலை இல்லை.
கடன் வாங்கி வீடு வாங்கியுள்ளதால், மனைவியை வேலையை விடச் சொல்ல முடியவில்லை.
என்ன வாழ்க்கை இது! எதற்காக இந்த ஓட்டம் என, ஆயாசமாக இருந்தது சுரேஷிற்கு!
அன்று மாலை, 3:00 மணிக்கு ஒரு தொழிற்சாலையின் பாதுகாப்பு விவரங்களை சேகரிக்க, தொழிற்சாலைக்குள் நுழைந்த போது, காரணம் தெரியாத எரிச்சல் வந்தது.
அவன் சந்திக்க வேண்டிய நபர், வயதில் பெரியவராக இருந்தார். மேனேஜிங் டைரக்டர் சுரேஷை, பரமேஸ்வரனிடம் அறிமுகம் செய்து வைத்தார்.
''இவர் மிஸ்டர் பரமேஸ்வரன்; இந்த தொழிற்சாலை இன்று வெற்றிகரமாக நடந்து கொண்டிருக்கிறதென்றால், இதற்கு இவர்தான் காரணம்; ஆரம்ப காலத்திலிருந்து பணிபுரிந்து வருகிறார். பரமேஸ்வரன் சார்... இவர் சுரேஷ்; தொழிற்சாலை பாதுகாப்பு ஆலோசகர். நம்முடைய தொழிற்சாலையின் பாதுகாப்பு பற்றி ஆராய வந்திருக்கிறார்; உதவி செய்யுங்கள்,'' என்று சொல்லி சென்றார்.
பரமேஸ்வரன் உயரமாக, பருமனுடன் இருந்தார். அவரைப் பார்த்தால் கிட்டத்தட்ட ஓய்வு பெறும் தறுவாயில் உள்ளவர் போல் தெரிந்தது. சுத்தமாக உடையணிந்திருந்த அவர் முக மலர்ச்சியுடன் காணப்பட்டார்.
ஆனால், சுரேஷுக்கு அவரைப் பார்க்க கடுப்பாக இருந்தது. அவன் அனுபவத்தில், இளவயதினருடன் தான் சரியான முறையில் பேசி விஷயங்களை வாங்க முடியும்; வயதானவர்கள் தாங்கள் பிடித்த முயலுக்கு, மூன்று கால் என, சில விஷயங்களில் பிடிவாதம் செய்வர் என, நினைத்தான்.
'ஐயோ... இந்த பெரியவரிடம் பேசி விஷயத்த வாங்கணுமா செத்தேன்...' என்று, உள்ளூற அலுத்துக் கொண்டே அவர் எதிரில் அமர்ந்தான் சுரேஷ்.
''பேக்டரியைச் சுத்திப் பாத்துட்டீங்களா?'' என்று கேட்டார் பரமேஸ்வரன்.
''இல்ல சார்,'' என்றான்.
''வாங்க, பேக்டரிய சுற்றிக் காட்டுறேன்; அப்பத்தான் உங்களுக்கு பல விஷயம் புரியும்,'' என்றார்.
அது சரிதான் என்றாலும், வெயிலில் வேர்க்க விறுவிறுக்க தொழில் கூடங்களைச் சுற்றி முடித்து வரும் போது, உடம்பு பல சமயங்களில் ஓய்ந்து விடும்.பரமேஸ்வரன், 'விருட்'டென எழுந்து, ஒரு ஹெல்மெட்டையும், மாஸ்க்கையும் எடுத்து சுரேஷிடம் கொடுத்து, ''வாங்க போகலாம்,'' என்றார் சுறுசுறுப்பாக.வேறு வழியில்லை; வேலையையும், விதியையும் நொந்தபடி கிளம்பினான் சுரேஷ். மனதிற்குள், 'எந்தக் காலத்திலோ இன்ஜினியரிங் படித்து, வேலைக்கு வந்திருக்கும் இவருக்கு என்ன தெரிந்திருக்கப் போகிறது...' என்று, மனதில் நினைத்துக் கொண்டே உடன் சென்றான்.
அவன் கேட்க கேட்க, பரமேஸ்வரன் விளக்கங்களைக் கூறிக் கொண்டே வந்தார். தொழிற்சாலையில் வேலை பார்த்த ஒவ்வொருவரும் பரமேஸ்வரனைப் பார்த்ததும், மலர்ந்த முகத்துடன் வணக்கம் தெரிவித்தனர். அவர் ஒவ்வொருவரிடமும் அன்புடன் உரையாடுவது சுரேஷுக்கு ஆச்சரியமாக இருந்தது. 'பெரிசு' என்று பல சிறுசுகள் பெரியவர்களை மதிக்காமல் இருப்பதைப் பார்த்துத்தான் அவனுக்கு வழக்கம்.
அவனுடைய, 'பாஸ்' கூட வயதானவர் தான்; அவ்வளவாக விஷயமில்லாத அலட்டல் ஆசாமி. பரமேஸ்வரன் அவர்களில் கொஞ்சம் வித்தியாசமானவராகத் தோன்றினார். முக்கால் மணி நேரம் தொழிற்சாலையையும், ரசாயனப் பொருட்கள் உள்ள கிடங்குகளையும் பார்த்துவிட்டு, பரமேஸ்வரனின் அறைக்கு வந்தபோது சுரேஷுக்கு அயர்ச்சியாக இருந்தது.''என்ன மிஸ்டர் சுரேஷ்... எங்கள் தொழிற்சாலை எப்படி இருக்கு? பாதுகாப்பு பற்றிய உங்க அபிப்ராயம் என்ன? எந்த இடத்தில் மாற்றம் தேவையோ அதை தயங்காம சொல்லுங்க,'' என்றார் பரமேஸ்வரன்.சுரேஷ் லேசாக புன்னகை செய்தவன், ''முதல்ல குடிக்றதுக்கு கொஞ்சம் குளிர்ந்த தண்ணீ கொடுங்க; அப்பத்தான் என்னால பேச முடியும்,'' என்றான்.
''ஓ... சாரி...'' என்று கூறி, அழைப்பு மணியை அழுத்தினார். உள்ளே வந்த பியூனிடம், ''ஒரு பாட்டில தண்ணீர்... அப்பறம் என்ன கூல்ட்ரிங் இருக்கோ அதை கொண்டு வா,'' என்றார் பரமேஸ்வரன்.
தண்ணீரைக் குடித்து, குளிர்ந்த பானத்தையும் பருகும் வரையில் சுரேஷ் பேசவில்லை.
பரமேஸ்வரனும் அவனை மேற்கொண்டு எதுவும் கேட்காமல், தன் மேஜை மேல் இருந்த பேப்பர்களைப் படித்து, அவற்றில் எதையோ எழுதி, 'ட்ரே'யில் போட்டுக் கொண்டிருந்தார்.
சுரேஷ் தொண்டையைக் கணைத்து, ''சார், எனக்கு சில விவரங்கள் தேவை,'' என்றான்.
பரமேஸ்வரன் தன் வேலையை நிறுத்தி, ''சொல்லுங்க,'' என்றார்.
அவன், சில விவரங்களை கேட்டதும் அதற்கான விளக்கங்களைக் கொடுத்தார்.
சுரேஷ் மேலோட்டமாகத் தொழிற்சாலையைப் பார்த்ததில் கண்ட சில சமாசாரங்களை சொல்ல, அவைகளை குறித்துக் கொண்டிருந்த போது, அவருக்கு போன் வந்தது. எடுத்து பேசியவர், ''ஓ... அப்படியா சரி... நான் பாத்துக்கிறேன்,'' என்று சொல்லி போனை வைத்தார்.
''உங்களுக்கு எங்க, 'கெஸ்ட் ஹவுசி'ல் தங்குறதுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நான் வீட்டுக்கு போகும்போது, உங்கள அங்கே இறக்கிவிட்டுப் போகச் சொன்னாங்க,'' என்றார் புன்னகையுடன்.
'அட இம்சையே... இந்தப் பெரியவருடன் இன்னும் ஒரு மணி நேரத்த கழிக்கணுமா...' என்று நினைத்துக் கொண்டான் சுரேஷ்.
''உங்களுக்கு தொழிற்சாலை பற்றிய விவரங்கள் இன்னும் ஏதாவது தேவையா?'' என்று கேட்டார் பரமேஸ்வரன்.
''வேண்டாம் சார்... தேவையா இருந்தா பின்னால் கேட்கிறேன்,'' என்று சுற்று முற்றும் பார்த்தவன் கண்களில், அவருக்கு பின்னால், ஓர் அழகான இயற்கைக் காட்சி ஓவியம் தொங்குவதைப் பார்த்தான். சூரியன் உதயமாகும் காட்சி; கடலின் பரப்பிலிருந்து அது கிளம்புவதை தத்ரூபமாகக் காட்டியது.
'இதை எப்படி இவ்வளவு நேரம் கவனிக்காமல் இருந்தேன்...' என்று நினைத்தவனாக அந்தப் படத்தைக் ஆர்வமாகப் பார்த்தான் சுரேஷ். அதைக் கவனித்த பரமேஸ்வரன், அவனைப் பார்த்து புன்னகைத்தார்.
''சார், இது, 'ஆர்ட்-வொர்க்'கா... போட்டோ மாதிரி ரொம்ப அழகா இருக்குகே'' என்றான்.
''ஆர்ட் - வொர்க் தான்.''
''எங்க வாங்குனீங்க சார்?''
''நான் வரைஞ்சது,'' என்றார், புன்னகையுடன் பரமேஸ்வரன்.
சுரேஷுக்கு ஆச்சரியமாக இருந்தது; இத்தனை வயதான ஒருவர், அதுவும் ஒரு இன்ஜினியர், ஓவியம் வரைபவராக இருப்பது வியப்பாக இருந்தது.
''ஓ... நீங்க ஆர்டிஸ்ட்டா?'' என்று கேட்டான்.
''அப்படி நினைச்சுக்கிட்டுத்தான் வரையுறேன்,'' என்று சொல்லி பெரிதாக சிரித்தவர், பின், தணிந்த குரலில், ''இது எனக்கு பிடிச்ச பொழுதுபோக்குகளில் ஒன்று,''என்றார்.
''இன்னொன்று?''
''புத்தகம் படிக்கிறது!''
''எனக்கும் படிக்கிறதில ஆர்வமுண்டு சார். ஆனா, நேரம் தான் கிடைக்க மாட்டேன்ங்கிறது,'' என்றான் சுரேஷ்.
''நேரம் கிடைக்காது; நாம தான் உருவாக்கணும்,'' என்று சொல்லி சிரித்தவர், ''படிப்பதும், படம் வரைவதும் என்னோட சின்ன வயசுலருந்து தொடரும் பழக்கங்கள்; என் தொழிலோ, வாழ்க்கையோ அதை மாற்றல,'' என்றார்.
''உங்கள் வயசுல இந்தத் தொழில்ல நான் ஒரு ஆர்ட்டிஸ்ட்டை பாத்ததேயில்ல,'' என்றான், ஏதோ சொல்ல வேண்டுமே என்பதற்காக.
''வாழ்க்கை ஒரு தொடர்கதை; அதில் பார்க்க வேண்டியதும், தெரிஞ்சுக்க வேண்டியதும் நிறைய இருக்கு,'' என்றார் பரமேஸ்வரன்.
''என்ன சார் வாழ்க்கை இது! ஒரே ஓட்டமா ஓட வேண்டி இருக்கு; குடும்பத்தோட உட்கார்ந்து சந்தோஷமா பேசி சிரிக்க முடியல,'' என்றான் எரிச்சலுடன்.
தொடரும்..............

''ஏன்... நீங்க, உங்க வேலைய விரும்பலயா?'' என்று கேட்டார் பரமேஸ்வரன்.''அப்படியில்ல...'' என்று, இழுத்தான் சுரேஷ். அவனுக்கு இதற்கு என்ன விளக்கம் தருவது என்று தெரியவில்லை. 'என்னுடைய பிரச்னை இவருக்கு என்ன தெரியும்... இன்னும் ஓரிரு ஆண்டுகளில் ஓய்வு பெற்று அமெரிக்காவிலோ, ஆஸ்திரேலியாவிலோ இருக்கும் பிள்ள யோடயோ, பெண்ணோடயோ போய் வாழப் போறார்...' என்று, உள்ளூர நினைத்துக் கொண்டான்.
''உங்கள் வேலையையும், வாழ்க்கையையும் ரசிக்கக் கத்துக்கங்க,'' என்றார்.
அவருடைய பேச்சு சுரேஷுக்கு அலுப்பு தட்டியது. பேச்சை மாற்றலாம் என நினைத்து, ''உங்க பையன்களும் இன்ஜினியராக தான் இருப்பாங்க இல்லயா சார்?'' என்று கேட்டான்.
''இல்ல.''
''பின்னே டாக்டரா?'' என்றான் சுரேஷ்; அவன் குரலில் லேசாக ஏளனம் தொணித்தது.
''இல்ல... எனக்கு ஒரே மகன் தான்; அவனுக்கு அறிவியல் பாடத்தில் தான் ஆர்வமிருந்தது. எம்எஸ்.சி., கெமிஸ்ட்ரி முடித்து, 'டாக்டரேட்' படிக்க கலிபோர்னியா யுனிவர்சிட்டியில இடம் கிடைச்சது...'' என்று நிறுத்தினார்.
''ஓ... யு.எஸ்.சில்., இருக்கிறாரா?''
''இல்ல; அவன் போகல,'' என்றார் பரமேஸ்வரன்.
''ஏன்?'' என்றான் வியப்புடன் சுரேஷ்.
''அவன் யு.எஸ்., கிளம்ப ஒரு வாரம் இருக்கும் போது, சாலை விபத்தில இறந்துட்டான்,'' என்றார் சலனமற்ற குரலில்.
அதிர்ந்த சுரேஷ், ''ஓ...ஐ ம் சாரி,'' என்றான் மெதுவாக.
''இது நடந்து பதினைஞ்சு ஆண்டுகளாகியிருச்சு; பெருமைக்காக சொல்லல மிஸ்டர் சுரேஷ்... என் மகன், மிகவும் புத்திசாலி. பாக்கவும் ரொம்ப அழகா இருப்பான்; நல்ல ஸ்போட்ஸ்மேன். 'புட்பால்' விளையாடுவான்; ரொம்ப நல்லா சினிமா பாட்டு பாடுவான்; கிட்டத்தட்ட ஒரு ஹீரோ மாதிரி இருந்தான். மரணம், அவனை, ஒரு நொடியில ஒண்ணுமில்லாம ஆக்கிருச்சு.''
இதைக் கேட்டதும், சுரேஷுக்கு அதிர்ச்சியாகி விட்டது.
''இத, உங்க மனைவி எப்படி தாங்கிக்கிட்டாங்க?'' என்று கேட்டான்.
''அவளால தாங்க முடியல; அதனாலதான், அவனைத் தேடி, அவன் போன ரெண்டு வருஷத்துலயே அவளும் போய் சேர்ந்துட்டா,'' என்றார்.
''சில சமயங்களில், கடவுளின் செயல்களுக்கு விளக்கமே தர முடியறதில்ல,'' என்றான் நிஜமான வருத்தத்துடன் சுரேஷ்.
''அவங்க கூட வாழ்ந்த ஒவ்வொரு நாளும், அதுதரும் நினைவுகளும் தான் எனக்கு துணையா இருக்கு; இதுக்காக நான் கடவுள பழிக்கிறதோ, அவரது செயல்களை விமர்சிக்கிறதோ இல்ல. எத்தனையோ கதைகள படிக்கிறோம்... ஒவ்வொரு கதையிலும் ஒரு சுவையும், சுகமும் இருக்கிறது இல்லயா... அது மாதிரி என் மகனுடன் வாழ்ந்த நாட்கள், சுவாரசியமான ஒரு சிறுகதை; மனைவியுடன் இருந்த அந்த மகிழ்ச்சியான காலம், ஒரு குறுநாவல்; என் வாழ்க்க மட்டும் ஒரு தொடர்கதை. அதை எழுதுற விதியோட கைகள் மாற்றியா எழுதப் போகுது?'' என்றார் தெளிவாக.
இப்போது சுரேஷ் அவரைப் பார்த்த பார்வையில், வித்தியாசம் இருந்தது. 'இவ்வளவு சோகத்தையும், சுமையையும் மனசுக்குள்ள வச்சுக்கிட்டு, ஒருத்தர் மகிழ்ச்சியுடன் வேலை செய்கிறார்ன்னா அது எவ்வளவு பெரிய விஷயம்...'என்று நினைத்தவனுக்கு தன்னுடைய குறைகளும், ஆயாசமும் அற்பமாக தோன்றியது.
பரமேஸ்வரன் அவனை கனிவுடன் பார்த்தார்.
''உங்க வாழ்க்கையையும், உங்களுடன் இருப்பவர்களையும் ரசிக்கவும், நேசிக்கவும் கத்துக்கங்க மிஸ்டர் சுரேஷ். உங்க தொழில் மூலம், எவ்வளவு நிறுவனங்களோட பாதுகாப்பை உணர்த்தி, விபத்துகளை தவிர்த்து, எத்தனையோ மனித உயிர்களை காப்பாத்துறீங்க... அத்தகைய இந்த உயர்ந்த தொழில ஆசையோடு செய்யுங்க; அப்பத்தான் அது குறித்த அலுப்போ, சலிப்போ ஏற்படாது,''என்றார்.ஏனென்று தெரியாமல், சுரேஷின் கண்களில் கண்ணீர் நிரம்பி, பார்வையை மறைத்தது.
தேவவிரதன்

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1