ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Today at 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Today at 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Today at 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Today at 6:33 pm

» வா.ஃக்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Today at 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Today at 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Today at 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Today at 6:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 12:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 11:54 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:26 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 11:14 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:04 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:07 pm

» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:29 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Yesterday at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Yesterday at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Yesterday at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Yesterday at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Yesterday at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Yesterday at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 5:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:50 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Yesterday at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sun Sep 22, 2024 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:08 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:04 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பச்சடி வகை சமையல் குறிப்புகள்

Page 5 of 5 Previous  1, 2, 3, 4, 5

Go down

பச்சடி வகை சமையல் குறிப்புகள் - Page 5 Empty பச்சடி வகை சமையல் குறிப்புகள்

Post by சிவா Mon Aug 11, 2014 3:20 am

First topic message reminder :

தக்காளி - தேங்காய் பச்சடி

தேவையானவை: புளிக்காத தயிர் - 1 கப், தேங்காய் துருவல் - அரை கப், தக்காளி (நல்ல சிகப்பு நிறம்) - 2, பச்சை மிளகாய் - 2, இஞ்சி - ஒரு சிறு துண்டு, உப்பு - தேவைக்கு. தாளிக்க: கடுகு - கால் டீஸ்பூன், எண்ணெய் - ஒன்றரை டீஸ்பூன்.

செய்முறை: இஞ்சி, பச்சை மிளகாய், தக்காளியை பொடியாக நறுக்கிக்கொள்ளுங்கள். இவற்றுடன் தேங்காய் துருவல், உப்பு சேர்த்து தயிருடன் ஒன்றாகக் கலந்து, எண்ணெயைக் காயவைத்து கடுகு தாளித்து சேருங்கள். விருப்பமுள்ளவர்கள், மல்லித்தழையை பொடியாக நறுக்கி சேர்க்கலாம். கோடைக்கு ஏற்ற குளுகுளு தயிர்பச்சடி இது.

(தேங்காயை மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றி எடுத்தும் சேர்க்கலாம்).
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down


பச்சடி வகை சமையல் குறிப்புகள் - Page 5 Empty Re: பச்சடி வகை சமையல் குறிப்புகள்

Post by சிவா Mon Aug 11, 2014 3:38 am

வெண்டைக்காய் புளி பச்சடி

தேவையானவை: பிஞ்சு வெண்டைக்காய் - கால் கிலோ, சின்ன வெங்காயம் - ஐந்தாறு, புளி - ஒரு சுளை, மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை, மிளகாய்தூள் - அரை டீஸ்பூன், கடுகு - அரை டீஸ்பூன், உளுத்தம்பருப்பு - 2 டீஸ்பூன், வெங்காய வடகம் - 2, கறிவேப்பிலை, மல்லித்தழை - தலா சிறிதளவு, உப்பு - திட்டமாக, எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன், தேங்காய் துருவல் - கால் மூடி, சீரகம் - கால் டீஸ்பூன்.

செய்முறை: வெண்டைக்காயைக் கழுவி இரண்டாக வகிர்ந்து பொடியாக நறுக்கவும். சின்ன வெங்காயத்தைப் பொடியாக நறுக்கவும். ஒரு வாணலியில் கொஞ்சம் எண்ணெய் விட்டு சின்ன வெங்காயத்தை வதக்கி, பிறகு வெண்டைக்காயைச் சேர்த்து நன்கு வதக்கவும். (காய் நன்கு வதங்கினால்தான் பச்சடி ருசியாக இருக்கும். இல்லை என்றால் ‘கொழகொழ’வென்று இருக்கும்).

புளியைக் கரைத்து விட்டு, மஞ்சள்தூள் போடவும். காய் வெந்ததும் தேங்காய், சீரகம் அரைத்துப் போட்டு ஒரு கொதி வந்ததும் இறக்கி, மல்லித்தழை நறுக்கிச் சேர்க்கவும். கடுகு, உளுத்தம்பருப்பு, வடகம், கறிவேப்பிலை தாளித்துக் கொட்டவும்.


பச்சடி வகை சமையல் குறிப்புகள் - Page 5 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

பச்சடி வகை சமையல் குறிப்புகள் - Page 5 Empty Re: பச்சடி வகை சமையல் குறிப்புகள்

Post by சிவா Mon Aug 11, 2014 3:38 am

மிக்ஸ்டு வெஜிடபிள் பச்சடி

தேவையானவை: மாங்காய் - கால் துண்டு, கேரட் - (சிறியது) - 1, தக்காளி - 1, பீட்ரூட் (சிறியது) - 1, பிஞ்சாக வெள்ளரிக் காய் - 1, பச்சை மிளகாய் - 4, கடுகு - கால் டீஸ்பூன், உளுத்தம்பருப்பு - ஒரு டீஸ்பூன், தயிர் - 2 கப், எண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு - திட்டமாக, மல்லித்தழை - சிறிதளவு.

செய்முறை: காய்கறிகளைப் பொடியாக நறுக்கவும். எண்ணெயில் கடுகு, உளுத்தம்பருப்பு, பச்சை மிளகாய், கறிவேப்பிலை தாளித்து காய்க் கலவையில் கொட்டி, உப்பு சேர்த்துக் கலக்கவும்.

தயிர், பொடியாக நறுக்கிய மல்லித்தழை சேர்த்துச் சாப்பிடவும். உடலுக்கு ஆரோக்கியம் தரும் பச்சடி இது.


பச்சடி வகை சமையல் குறிப்புகள் - Page 5 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

பச்சடி வகை சமையல் குறிப்புகள் - Page 5 Empty Re: பச்சடி வகை சமையல் குறிப்புகள்

Post by சிவா Mon Aug 11, 2014 3:39 am

நெல்லிக்காய் பச்சடி

தேவையானவை: பெரிய நெல்லிக்காய் - நான்கைந்து, பெருங்காயத்தூள் - 2 சிட்டிகை, தயிர் - ஒரு கப், பச்சை மிளகாய் - 2, தேங்காய் துருவல் - ஒரு டேபிள்ஸ்பூன், மல்லித்தழை - சிறிதளவு, உப்பு - திட்டமாக, கறிவேப்பிலை - 2 ஆர்க்கு, எண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன்.

செய்முறை: பச்சை மிளகாயை வதக்கிக்கொள்ளவும். நெல்லிக்காயை வதக்கி, கொட்டையை எடுத்துவிட்டு, சதைப் பாகத்துடன் உப்பு, வதக்கிய பச்சை மிளகாய், பெருங்காயம் சேர்த்து அரைக்கவும். அரைத்த நெல்லிக்காயைத் தயிரில் கலக்கவும். கடுகு, கறிவேப்பிலை தாளித்துக் கொட்டி, பொடியாக நறுக்கிய மல்லித்தழை சேர்க்கவும். தேங்காய் துருவலை அப்படியே சேர்க்கலாம். அல்லது நெல்லிக்காயுடன் அரைத்தும் கலக்கலாம்.


பச்சடி வகை சமையல் குறிப்புகள் - Page 5 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

பச்சடி வகை சமையல் குறிப்புகள் - Page 5 Empty Re: பச்சடி வகை சமையல் குறிப்புகள்

Post by சிவா Mon Aug 11, 2014 3:39 am

விளாம்பழ பச்சடி

தேவையானவை: விளாம்பழம் - 3, வெல்லம் - முக்கால் கப், கடுகு - கால் டீஸ்பூன், எண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன்.

செய்முறை: விளாம்பழத்தை உடைத்து ஓடு, நரம்பை அகற்றிவிட்டு நன்கு பிசையவும். பிசைந்த பழத்துடன் ஒரு டம்ளர் தண்ணீர் மற்றும் வெல்லம் சேர்த்துக் கொதிக்க விடவும். எண்ணெயைக் காயவைத்து, கடுகு தாளித்துக் கொட்டவும். அவரவர் தேவையை, விருப்பத்தைப் பொறுத்து வெல்ல அளவை கூட்டிக் குறைத்துக் கொள்ளலாம்.


பச்சடி வகை சமையல் குறிப்புகள் - Page 5 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

பச்சடி வகை சமையல் குறிப்புகள் - Page 5 Empty Re: பச்சடி வகை சமையல் குறிப்புகள்

Post by சிவா Mon Aug 11, 2014 3:39 am

புடலங்காய் தயிர் பச்சடி

தேவையானவை: புடலங்காய் - பாதி, பச்சை மிளகாய் - 2, சின்ன வெங்காயம் - ஐந்தாறு, கடுகு - அரை டீஸ்பூன், உளுத்தம்பருப்பு - 2 டீஸ்பூன், தேங்காய் துருவல் - ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு - திட்டமாக, கறிவேப்பிலை, மல்லித்தழை - தலா சிறிதளவு, எண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன்.

செய்முறை: மிகவும் இளசான புடலங்காயாகப் பார்த்து வாங்கவும். அதைப் மிகப் பொடியாக நறுக்கவும். பச்சை மிளகாயை நீளமாகவும், சின்ன வெங்காயத்தைப் பொடியாகவும் நறுக்கவும். எண்ணெயில் தாளிதம் போட்டு வெங்காயம், பச்சை மிளகாயை வதக்கிக் கொள்ளவும். இத்துடன் புடலங்காயை லேசாக வதக்கி, உப்பு சேர்த்துக் கலக்கவும். (அல்லது காயில் உப்பு பிசறி வைத்திருந்து தண்ணீரைப் பிழிந்து விட்டுப் பச்சையாகச் சேர்க்கலாம்). தேங்காய் துருவலையும் சேர்க்கவும். பரிமாறும்பொழுது தயிர், பொடியாக நறுக்கிய மல்லித்தழை சேர்க்கவும்.


பச்சடி வகை சமையல் குறிப்புகள் - Page 5 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

பச்சடி வகை சமையல் குறிப்புகள் - Page 5 Empty Re: பச்சடி வகை சமையல் குறிப்புகள்

Post by சிவா Mon Aug 11, 2014 3:40 am

நார்த்தங்காய் பச்சடி

தேவையானவை
: சுமாரான அளவில் நார்த்தங்காய் - 2, மிளகாய்தூள் - அரை டீஸ்பூன், உப்பு - திட்டமாக, கடுகு - கால் டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு, வெல்லத் தூள் - கால் கப், எண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன்.

செய்முறை: நார்த்தங்காயைப் பொடியாக நறுக்கி, எண்ணெய் விட்டு வதக்கி, பிரஷர் குக்கரில் வேகவைக்கவும். வாணலியில் கடுகு, கறிவேப்பிலை தாளித்து வெந்த நார்த்தங்காயைப் போட்டு உப்பு, மிளகாய்தூள், கொஞ்சம் தண்ணீர் சேர்த்துக் கொதிக்க விடவும். கடைசியாக வெல்லத் தூளைப் போட்டு, கரைந்ததும் இறக்கவும். பொதுவாக இந்தப் பச்சடிக்கே இனிப்பு கொஞ்சம் கூடுதலாகத் தேவைப்படும். எனவே, காயின் கசப்பைப் பொறுத்து வெல்லம் போட வேண்டும்.


பச்சடி வகை சமையல் குறிப்புகள் - Page 5 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

பச்சடி வகை சமையல் குறிப்புகள் - Page 5 Empty Re: பச்சடி வகை சமையல் குறிப்புகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 5 of 5 Previous  1, 2, 3, 4, 5

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum