ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am

Top posting users this week
ayyasamy ram
வேத மரம் ! Poll_c10வேத மரம் ! Poll_m10வேத மரம் ! Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

வேத மரம் !

Go down

வேத மரம் ! Empty வேத மரம் !

Post by கிருபானந்தன் பழனிவேலுச்சா Fri Aug 08, 2014 12:22 am



கீதை 15 : 1 யுகபுருஷன் கிரிஷ்ணர் கூறினார் : உன்னதத்தில் வேர்களையும் ; பூமியை நோக்கி வளரும் கிளைகளையும் ; வேதபதங்களை இலைகளாகவும் கொண்டதாக நித்தியங்களை அருளும் ஒரு ஆலமரம் சித்தரிக்கப்படுகிறது . அதனை உணர்ந்தவன் எவனோ அவனே வேதங்களை உணர்ந்தவன் .

யுகபுருஷன் இம்மரம் பைதீகமாக இருப்பதாக கூறவில்லை . இவ்வாறு சித்தரிக்கப்ப்டுகிறதே அதனை உணர்ந்தவனே வேதங்களை உணர்ந்தவன் என்கிறார் .

எவ்வாறு சித்தரிக்கப்படுகிறது ? முதலாவது இம்மரம் ஒரு ஆலமரம் .

ஆலமரத்தை ஒரு மரம் என கூறமுடியாது . அது பண்மைகளின் தொகுதி – ஐக்கியம் அல்லது குழுமம் – ஆனாலும் பிரிந்திராமல் ஒரே மரமாகவே இருக்கவும் கூடியது .

ஏறக்குறைய அழிவில்லாதது .

அது பக்கவாட்டில் அடர்ந்து பரவக்கூடியது . அவ்வாறு பரவும் அதன் கிளைகள் ஒவ்வொன்றும் தனது விழுதை பூமியில் இறக்கி அதனை வேராக மாற்றி உணவை எடுத்துக்கொள்ளகூடியது . அதனால் ஒவ்வொரு கிளையும் தனித்த மரம் போலவே விருத்தியாகும் .

இம்மரம்போலவே வேதங்களும் இருக்கின்றன என்கிறார் ஸ்ரீகிருஷ்ணர் .

வேதமாகிய ஆலமரம் – உன்னதமாகிய பரத்திலே வேரை உடையது . பூமியில் இன்று நிலைத்துள்ள வேதங்கள் பல உள்ளன . அவைகள் இல்லாத இன்னும் சில வழிபாடுகளும் - கொள்கைகளும் சில காலம் பூமியில் பிரபலமாகவும் இருந்தன . அவைகளில் பல அழிந்தும் விட்டன . எவைகள் அழிவடையாமல் நிலைத்துள்ளனவோ அவை பரத்திலிருந்து வந்தவை . எவைகள் பரத்திலிருந்து வராமல் பூமியில் மனிதர்களின் சீரிய சிந்தனைகளால் – அல்லது உலகியல் மரபுகளிலிருந்து தோன்றியவையோ – அவைகள் நல்ல நோக்கத்துடனேயே துவக்கப்பட்டிருந்தும் அழிவை சந்தித்து விட்டன .

ஏறக்குறைய இந்துமதம் ; கிறிஸ்தவம் ; இசுலாம் தவிர ஏனைய பல மார்க்கங்கள் அழிந்தே விட்டன . அல்லது மேற்கண்ட மதங்களில் அமிழ்ந்து விட்டன . பெளத்தம் ; யூதம் ; சீக்கியம் ; பகாய் போன்ற உபமார்க்கங்கள் உள்ளன .

இவைகள் ஒன்றை ஒன்று அழிக்க எவ்வளவோ பகீரத பிரயத்தனங்கள் செய்யப்பட்டும் அழிவற்றவைகளாக நிலைக்கின்றன .

எப்படி வேத மரத்தின் மூல வேர் பரத்திலிருந்து பூமிக்குள் மரமாக வளர்ந்திருக்கிறதோ அதைப்போல அந்த மரத்தின் கிளைகளிலிருந்து தோன்றிய விழுத்களில் எவைகள் பரத்தை நோக்கி வளர்ந்து பரத்தில் வேர் விட்டதோ அந்த விழுதுகள் பரத்திலிருந்து ஜீவன் பெற்று தனி வேத மரம் போலவே ஆகிவிட்டன .

வேதமரத்தின் கிளைகள் பூமியில்தான் உள்ளன . ஏனெனில் வேதம் என்பதே பூமியில் உழலும் மனிதர்கள் நல்வழி பெற வேண்டும் என்கிற இறைவனின் சித்தத்தித்தின் வெளிப்பாடு .

பூமியில் மனித குலம் ; வாழ்விடம் சூழ்நிலை பொருத்து பழக்கவழக்கங்கள் ; பண்பாடுகளில் வித்தியாசம் இருப்பது இயல்பு . அந்த வித்தியாசங்களுக்கு ஒத்து இறைவனிடமிருந்து வரும் வழிகாட்டுதல் ஆகிய வேதங்களிலும் வித்தியாசம் இருக்கவே செய்யும் . அந்தந்த கிளைகளுக்கு விழுதுகள் பரத்திலிருந்து உணவை கிளைகளுக்கு ஏற்ப கொடுப்பதுபோல .

கலியுகத்தில் பூமி முழுதும் ஏறக்குறைய மூன்று இனங்கள் இருப்பதாக கொள்ளலாம் .

1)திராவிடம் 2) ஆரியம் 3) ஐரோப்பியம்

முந்தய ஜலப்பிரலயத்தின் மணுவாகிய நோவாவுக்கு மூன்று பிள்ளைகள் இருந்தார்கள் . இம்மூவருமே உலகின் இன்றைய மூன்று இனங்களாக பெருத்தார்கள் .

மூத்த மகனாகிய அப்பா சிந்து சமவெளியை தேடி வந்து திராவிட இனம் உண்டாயிற்று . இரண்டாவது மகன் சாமா யுப்ரட்டீஷ் சமவெளியில் நிலைத்து ஆரிய இனம் உண்டாயிற்று . மூன்றாவது மகன் காமா ஐரோப்பாவில் பெருத்தார்

திராவிடத்திற்கு இந்து மதமும் ; ஆரியத்திற்கு இசுலாமும் ; ஐரோப்பியத்திற்கு கிறிஸ்தவமும் இறைவன் புறத்திலிருந்து அருளப்பட்டவையாக இன்றும் நிலைத்துள்ளன .

ஆனால் இளம்பிள்ளை கோளாறு – முந்திரிக்கொட்டைத்தனம் என்னவென்றால் அந்த வேதங்களைக்கொண்டு அவரவர் இனத்தை சீர்படுத்தவே இன்னும் முடியாமல் இருக்கும்போது அடுத்த இனத்தின் மீது அடுத்த இனத்தை தினித்து இனவழிப்பு செய்யும் குழப்பங்களை மத மாற்றம் என்ற பெயரால் செய்வது மனிதர்களின் வேலையாகிவிட்டது .

வேதங்களின் உண்மைகளை மட்டும் இனவழிப்பு செய்யாமல் ஒருவரிடமிருந்து ஒருவர் சுவீகரித்தால் அது வளர்ச்சி . ஆனால் இயேசுவை குருவாக ஏற்றுக்கொள்ள நீ வெள்ளைக்காரனாக மாறவேண்டும் . இசுலாத்தின் அரூப வழிபாட்டை ஏற்றுக்கொள்ள நீ அரபியனாக மாறவேண்டும் என்று இனவழிப்பு செய்வதால் பிரச்சினை வருகிறது . தவறிலும் குழப்பத்திலும் போய் முடிகிறது .

இயேசுவை ஏற்றுகொள்ள எதற்காக ஐரோப்பியனாக மாறவேண்டும் .அவர் ராமராகவும் கிரிஷ்ணராகவும் இந்தியாவில்தானே அவதரித்தார் ? அவரின் உபதேசங்களை கிறிஸ்தவர்கள் கடைபிடித்ததை விட காந்திதானே அஹிம்சையாக வளர்த்தெடுத்தார் .

அருப வழிபாட்டிற்கு ஏன் அரபியனாக மாறவேண்டும் ? இந்தியாவில் ஆதியிலிருந்தே அருப வழிபாட்டுக்காரர்கள் – சித்தர்கள் ; ஞானிகள் இருந்துகொண்டுதானே இருக்கிறார்கள் .

அந்தந்த இனத்திற்கு மேற்கண்ட மூன்று மதங்களும் இறைவனின் புறத்திலிருந்து வந்தவை என்பது உண்மை . அது எவ்வளவு உண்மையோ அவ்வளவு உண்மை அவைகளில் மனித சரக்குகள் கலந்து விட்டன என்பதும் உண்மை .

ஆக அவரவர் மதத்திலேயே மனித சரக்குகள் – கலப்படங்கள் மலிந்துவிட்டது .அதை சீர்படுத்துவதுதான் அவரவர் பிரதான பணி . அடுத்தவரை சீர்திருத்துவதல்ல . இந்த பொதுநோக்கு வந்து விட்டால் எல்லா மதங்களும் பரத்திலே வேரை வைத்துக்கொண்டுள்ளன என்ற உண்மை புரியும் எல்லா மதங்களுக்கும் - வேதங்களுக்கும் மூல மரம் பரத்திலிருந்து முளைத்தது . அந்த மூல மரமே வேதங்களுக்கெல்லாம் வேதமானது . அவரே புருஷோத்தமன் – நாராயணன் – பரமாத்மா . அவரே காப்ரியேல் . மோசேக்கும் முகமதுவுக்கும் தரிசனமாகி ஆப்ரகாமின் வாரீசுகளுக்கு வேதத்தை கொடுத்தவரும் அவரே !

ஆனாலும் அந்த மூல மரத்திலிருந்து உலகம் முழுவதிலும் உலகம் உய்ய எண்ணற்ற கிளைகள் உள்ளன . அவைகளில் பலவும் சொந்த விழுதை நேரடியாகவே பரத்திலே வைத்துக்கொண்டும் உள்ளன . அவைகளே பலதரப்பட்ட குரு பாரம்பரியங்கள் . அவைகள் மூலமாக அந்தந்த சிஷ்ய கோடிகளுக்கு அவரவருக்கு உரிய உபதேசங்கள் . இத்தகு உபதேசங்களே கிளைகளில் பல ; பல இலைகளாக உள்ளன . இந்த இலைகளே எண்ணற்ற வேத பதங்கள் – சந்தாம்ஸி என்கிறார் ஸ்ரீகிருஷ்ணர் .

சந்தம் என்ற வார்த்தையே இருக்கிற இடத்திற்கு ஒத்தது என்கிற அர்த்தத்தை தருவது . வேத பதங்கள் என்பதை சந்தாம்ஸி என்றே ஸ்ரீகிருஷ்ணர் உச்சரித்துள்ளார் . ஒத்து இசைந்து அதிலிருந்து விரிந்த பார்வையை தருபவையே வேதங்கள் என்பது இதன் அர்த்தம் . வேதங்கள் மாறாதவையல்ல . காலத்துக்கு காலம் அவைகள் செழுமைப்பட்டே ஆகும் . பல மாற்றங்கள் அமுல்படுத்தப்படும் . அதை புருஷோத்தமனோ அல்லது அவரின் நண்பர்களான ஆத்மாக்களோ (இறைதூதர்களோ) உலகத்திற்கு கொண்டுவந்திருக்கிறார்கள் என்பதே வரலாற்று உண்மை .

ஸ்ரீகிருஷ்ணர் இந்த சுலோகத்தில் இன்னும் ஒரு முத்தாய்ப்பை சொல்கிறார் . இந்த உண்மையை – எல்லா மதங்களும் பரத்திலிருந்தே வந்தவை என்கிற உண்மையை எவனொருவனால் புரிந்து கொள்ள முடியுமோ அவனே வேதங்களை உணர்ந்தவன் . மற்றவன் மனப்பாடம் செய்து ஒப்பிப்ப்பவன் மட்டுமே . வறட்டு சூத்திரதாரி .
கிருபானந்தன் பழனிவேலுச்சா
கிருபானந்தன் பழனிவேலுச்சா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 604
இணைந்தது : 28/12/2011

http://kirubarp.blogspot.com

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum