ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Yesterday at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Aug 20, 2024 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Aug 20, 2024 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Aug 20, 2024 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Aug 20, 2024 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Aug 20, 2024 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வரலாறு படைத்த வைர மங்கையர் ! தொகுதி 2. நூல் ஆசிரியர் : பேராசிரியர் பானுமதி தருமராசன் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.

2 posters

Go down

வரலாறு படைத்த வைர மங்கையர் !  தொகுதி 2.  நூல் ஆசிரியர் : பேராசிரியர் பானுமதி தருமராசன் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி. Empty வரலாறு படைத்த வைர மங்கையர் ! தொகுதி 2. நூல் ஆசிரியர் : பேராசிரியர் பானுமதி தருமராசன் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.

Post by eraeravi Tue Jul 29, 2014 9:20 am

வரலாறு படைத்த வைர மங்கையர் ! தொகுதி 2.
நூல் ஆசிரியர் : பேராசிரியர் பானுமதி தருமராசன்
நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.
வெளியீடு : புதுகைத் தென்றல், 24, திருநகர் முதன்மைச் சாலை, வடபழனி, சென்னை-26. அலைபேசி : 98410 42949, விலை : ரூ. 150. பக்கம் : 208
வரலாறு படைத்த வைர மங்கையர் தொகுதி 1 என்ற நூலின் மூலம் வரலாறு படைத்த வைர மங்கை பேராசிரியர் பானுமதி தருமராசன் அவர்களின் தொகுதி 2 என்ற இந்த நூலும் பெண்ணின் பெருமையை பறைசாற்றும் விதமாக வந்துள்ளது. கணவருக்கு இலக்கியத்தில் ஆர்வம் இருந்தால் மனைவிக்கு இலக்கியத்தில் ஆர்வம் இருப்பதில்லை. மனைவிக்கு இலக்கியத்தில் ஆர்வம் இருந்தால் கணவருக்கு இலக்கியத்தில் ஆர்வம் இருப்பதில்லை. இப்படித்தான் பல இணையர்கள் வாழ்ந்து வருகின்றனர். வெகு சிலர் மட்டுமே இரண்டு பேரும் இலக்கிய ஆர்வமுள்ள இணையர்களாக இருக்கிறார்கள். தமிழ்த்தேனீ இரா. மோகன், தமிழ்ச்சுடர் நிர்மலா மோகன் என்ற இலக்கிய இணையர் வரிசையில் புதுகை மு. தருமராசன் அவர்களையும் பேராசிரியர் பானுமதி அவர்களையும் சேர்க்கலாம். புதுகைத்தென்றல் என்ற மாத இதழின் ஆசிரியர் புதுகை தருமராசன் அவர்கள் மனைவி என்பதற்காக வாய்ப்பு வழங்காமல் எழுத்தின் வலிமை கண்டு உணர்ந்து புதுகைத் தென்றலில் தொடராக பிரசுரிக்க வாய்ப்பு வழங்கி அதனை தொகுத்து நூலாகவும் பதிப்பித்தவருக்கு பாராட்டுக்கள்.
பெண் குழந்தை பிறந்தால் பேதலிக்கும் அனைவரும், இந்த நூல் வாங்கி அவசியம் படிக்க வேண்டும். பெண்ணின் பெருமையை, ஆற்றலை, தியாகத்தை, உழைப்பை, புகழை, போராட்டகுணத்தை, துணிவை, வீரத்தை, இலட்சிய வேட்கையை, தாகத்தை உணர்த்தும் உன்னத நூல் இது.
16 கட்டுரைகளிலும் தொடக்கமாக சதுரத்திற்குள் சிறு குறிப்பு உள்ளது. அதனைப் படிக்கும் போதே முழுவதையும் படிக்க வேண்டும் என்ற ஆவலைத் தூண்டும் விதமாக எழுதி உள்ளார்கள். சிறு சுருக்கமே அவர்கள் யார் என்ற பிம்பத்தை வாசகர்களுக்கு உணர்த்தி விடுகின்றன.
கவிக்குயில் சரோஜினி தேவி தொடங்கி இரமணி நல்லதம்பி வரை 16 வைர மங்கையரின் வரலாற்றை ஆய்வுக்கட்டுரை போல பதிவு செய்துள்ளார்கள்.
காந்தியடிகள் பாராட்டிய கவிக்குயில் சரோஜினிதேவி என்பது மட்டுமே அறிந்த எனக்கு அவர் பற்றிய சுருக்க வரலாறு படித்து வியந்து விட்டேன். நூலில் உள்ள வரலாற்றில் இருந்து சில வரிகள் இதோ!
கவிக்குயில் சரோஜினிதேவி (1879-1949) இப்படி ஒவ்வொருவருக்கும் பிறப்பு, இறப்பு ஆண்டுகளை எழுதி இருப்பதிலிருந்தே வரலாற்றின் நுட்பத்தை உணர முடிகின்றது. 15வது கட்டுரையான மணலூர் மணியம்மாள் அவர்களின் பிறப்பு ஆண்டு விடுபட்டு உள்ளது. அடுத்த பதிப்பில் சேர்த்து விடுங்கள்.
கவிக்குயில் சரோசினி தேவி கட்டுரையின் தொடக்கத்தில் உள்ள சிறு குறிப்பு :
பாரத கோகிலம்� என்று காந்தியடிகளால் புகழப்பட்டவர். இந்து-முஸ்லீம் ஒற்றுமைக்காகப் பாடுபட்டவர். பெண்களின் வாக்குரிமைக்காகப் போராடியவர். தொண்டாற்றியவர். வெளிநாடுகளில் இந்திய சுதந்திரத்திற்காக வாதாடியவர். இந்திய தேசிய காங்கிரசின் தலைவராகப் பொறுப்பேற்ற முதல் இந்தியப் பெண்மணி, உப்பு அறப்போர் வீராங்கனை. சுதந்திர இந்தியாவின் முதல் பெண் ஆளுநர்.
திருமணத்திற்குப் பின்னர் சரோஜினி ஏராளமான கவிதைகளை எழுதிக் குவித்தார். ஹைதராபாத்திலிருந்து பம்பாய்க்குச் சென்றார். தாஜ்மகால் விடுதியில் தங்கிப் பல கவிதைகள் எழுதினார். மக்கள் இவரை கவியரசி, கவிக்குயில் என்று போற்றினர்.
இன்றும் பல பெண் கவிஞர்கள் திருமணமானதும் கவிதை எழுதுவதையே விட்டு விடுகின்றனர். கவிக்குயில் சரோஜினிதேவி போல திருமணமான பின்னும் கவிதை எழுதிட வேண்டும். வைஸ்ராய்க்கு ஒரு கடிதம் எழுதினார். பதக்கம் வேண்டாம் : அதில் பஞ்சாப் இராணுவ ஆட்சியில் நடந்த கொடுமைகளை விளக்கினார். அக்குற்றங்களுக்குப் பொறுப்பேற்க வேண்டிய அரசாங்கம், தமக்களித்த �கெய்சரிஹிந்த்� என்ற பதக்கத்தை அணிந்து கொள்ள முடியாது என்று கூறி அதைத் திரும்ப அனுப்பி விட்டார். �இந்தப் பதக்கத்தை அணிந்து கொள்வது என் கௌரவத்திற்கும் சுயமரியாதைக்கும் இழுக்கு� என்று தெரிவித்தார். இச்செய்கை நாட்டில் பெரும் எழுச்சியை ஏற்படுத்தியது. அவரைப் போன்றே பலரும் பட்டம் பதவிகளைத் துறந்தனர். பாரதி கண்ட புதுமைப் பெண்ணாக நெஞ்சில் துணிவுடன், நேர்மை திறத்துடன் சரோஜினி தேவி விளங்கினார் என்ற வரலாறு படிக்கப் படிக்க பெண்ணின் பெருமையை மேலும் மேலும் உயர்த்துவதாக நூல் உள்ளது. நூலாசிரியர் பேராசிரியர் பானுமதி தருமராசன் அவர்களுக்கு பாராட்டுக்கள். ஒரு கட்டுரை எழுதுவதற்கு அவர்கள் எவ்வளவு தேடுகிறார்கள். எவ்வளவு திரட்டுகிறார்கள் என எண்ணும் போது பிரமிப்பாக உள்ளது. புள்ளி விபரங்களும் மிக நுட்பமாக வைர மங்கையரின் வரலாறு ஆய்வுக்கட்டுரை என சிறப்பாக வடித்து உள்ளார்கள். சுதந்திரப் போராட்டம் என்பது எத்தனை பேரின் தியாகத்தால் குறிப்பாக பல பெண்களின் அளப்பரிய தியாகத்தால் வந்தது என்பதை நூல் நன்கு உணர்த்தி உள்ளது. பதச்சோறாக நூலிலிருந்து சில வரிகள் மட்டும். கடலூர் அஞ்சலையம்மாள் (1890-1961) �நீல் சிலை அகற்றும் போராட்ட�த்தின் போது அஞ்சலையம்மாளுக்கு கைது செய்யப்பட்டு ஓர் ஆண்டுக் கடுங்காவல் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. அவரது மகள் ஒன்பது வயதுச் சிறுமி அம்மாக்கண்ணு நான்கு ஆண்டுகள் சென்னையில் உள்ள சிறுமியர் காப்பகத்தில் இருக்க வேண்டும் என்றும் விதிக்கப்பட்டது. அஞ்சலை அம்மாளின் கணவர் முருகப்ப படையாட்சியும் நீல் சிலையை அகற்றும் போராட்டத்தில் கலந்து கொண்டார். இவரும் கைது செய்யப்பட்டு ஓராண்டுச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டார். கர்ம வீரர் காமராசரும் இந்தப் போராட்டத்தில் பங்கேற்றார் என்ற செய்தியும், மேலும் காமராசர், காந்தியடிகளிடம் 1927ஆம் ஆண்டு ஆதரவு கேட்டார் என்ற செய்தியும் நூலில் உள்ளது. இப்படி குடும்பம் குடும்பமாக சிறை சென்றனர். ஒரே அறையில் கழிவறையும் இருக்கும், வெளியே வர முடியாத கொடுமையான சிறை, தில்லையாடி வள்ளியம்மையும் இதுபோன்ற கொடுமை அனுபவித்த நிகழ்வும் என் நினைவிற்கு வந்தது. கடுங்காவல் சிறை என்றால் மிகவும் கொடூரமானது. இவ்வளவு கொடுமைகள் அனுபவித்து பெற்றுத் தந்த விடுதலையை நாம் மதிக்கிறோமா? என்றால் இல்லை என்றே சொல்ல வேண்டும். பல பெண்மணிகள் தியாகம் செய்துள்ளனர். இந்த நூலில் 16 வைர மங்கையரின் வீர வரலாறு நமக்கு உத்வேகம் தரும் விதமாக உள்ளது. இன்றைய பெண்கள் அனைவரும் சிந்தனையை சிதைக்கும் தொலைக்காட்சிச் தொடர்கள் பார்த்து, நேரத்தை விரயம் செய்வதை விடுத்து இதுபோன்ற நூல்களை படித்து சிந்தையை சிறப்பாக்க முன் வர வேண்டும்.
eraeravi
eraeravi
தளபதி

தளபதி

பதிவுகள் : 1818
இணைந்தது : 08/07/2010

http://www.kavimalar.com

Back to top Go down

வரலாறு படைத்த வைர மங்கையர் !  தொகுதி 2.  நூல் ஆசிரியர் : பேராசிரியர் பானுமதி தருமராசன் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி. Empty Re: வரலாறு படைத்த வைர மங்கையர் ! தொகுதி 2. நூல் ஆசிரியர் : பேராசிரியர் பானுமதி தருமராசன் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.

Post by M.M.SENTHIL Tue Jul 29, 2014 2:22 pm

eraeravi wrote: இன்றைய பெண்கள் அனைவரும் சிந்தனையை சிதைக்கும் தொலைக்காட்சிச் தொடர்கள் பார்த்து, நேரத்தை விரயம் செய்வதை விடுத்து இதுபோன்ற நூல்களை படித்து சிந்தையை சிறப்பாக்க முன் வர வேண்டும்.
மேற்கோள் செய்த பதிவு: 1076313

பெண்கள் சிந்திப்பார்களாக...


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

வரலாறு படைத்த வைர மங்கையர் !  தொகுதி 2.  நூல் ஆசிரியர் : பேராசிரியர் பானுமதி தருமராசன் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி. Empty Re: வரலாறு படைத்த வைர மங்கையர் ! தொகுதி 2. நூல் ஆசிரியர் : பேராசிரியர் பானுமதி தருமராசன் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.

Post by eraeravi Tue Jul 29, 2014 4:03 pm

நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
eraeravi
eraeravi
தளபதி

தளபதி

பதிவுகள் : 1818
இணைந்தது : 08/07/2010

http://www.kavimalar.com

Back to top Go down

வரலாறு படைத்த வைர மங்கையர் !  தொகுதி 2.  நூல் ஆசிரியர் : பேராசிரியர் பானுமதி தருமராசன் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி. Empty Re: வரலாறு படைத்த வைர மங்கையர் ! தொகுதி 2. நூல் ஆசிரியர் : பேராசிரியர் பானுமதி தருமராசன் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» வரலாறு படைத்த வைர மங்கையர் – தொகுதி 2 நூல் ஆசிரியர் : பேராசிரியர் பானுமதி தருமராசன் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.
» தி.க.சி. எனும் ஆளுமை ! நூல் ஆசிரியர்கள் : பேராசிரியர் இரா. மோகன், புதுகை மு. தருமராசன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.
» தி.க.சி. எனும் ஆளுமை ! நூல் ஆசிரியர்கள் : பேராசிரியர் இரா. மோகன், புதுகை மு. தருமராசன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.
» தி.க.சி. எனும் ஆளுமை ! நூல் ஆசிரியர்கள் : பேராசிரியர் இரா. மோகன், புதுகை மு. தருமராசன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.
» விழிப்புணர்வு ! நூல் ஆசிரியர் : எழுத்தாளர் புதுகை மு. தருமராசன் ! அலை பேசி 9841042949 நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum