புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:25 am

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
 கொள்ளை போகும் மணல் வளம் Poll_c10 கொள்ளை போகும் மணல் வளம் Poll_m10 கொள்ளை போகும் மணல் வளம் Poll_c10 
5 Posts - 45%
ayyasamy ram
 கொள்ளை போகும் மணல் வளம் Poll_c10 கொள்ளை போகும் மணல் வளம் Poll_m10 கொள்ளை போகும் மணல் வளம் Poll_c10 
3 Posts - 27%
mohamed nizamudeen
 கொள்ளை போகும் மணல் வளம் Poll_c10 கொள்ளை போகும் மணல் வளம் Poll_m10 கொள்ளை போகும் மணல் வளம் Poll_c10 
2 Posts - 18%
VENKUSADAS
 கொள்ளை போகும் மணல் வளம் Poll_c10 கொள்ளை போகும் மணல் வளம் Poll_m10 கொள்ளை போகும் மணல் வளம் Poll_c10 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
 கொள்ளை போகும் மணல் வளம் Poll_c10 கொள்ளை போகும் மணல் வளம் Poll_m10 கொள்ளை போகும் மணல் வளம் Poll_c10 
5 Posts - 45%
ayyasamy ram
 கொள்ளை போகும் மணல் வளம் Poll_c10 கொள்ளை போகும் மணல் வளம் Poll_m10 கொள்ளை போகும் மணல் வளம் Poll_c10 
3 Posts - 27%
mohamed nizamudeen
 கொள்ளை போகும் மணல் வளம் Poll_c10 கொள்ளை போகும் மணல் வளம் Poll_m10 கொள்ளை போகும் மணல் வளம் Poll_c10 
2 Posts - 18%
VENKUSADAS
 கொள்ளை போகும் மணல் வளம் Poll_c10 கொள்ளை போகும் மணல் வளம் Poll_m10 கொள்ளை போகும் மணல் வளம் Poll_c10 
1 Post - 9%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கொள்ளை போகும் மணல் வளம்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jul 26, 2014 10:55 pm


கட்டுமானத் தொழிலுக்கு முக்கியத் தேவை மணல்தான். ஆனால் அதன் அருமை தெரியாமல் தமிழகம் முழுவதும் ஆறுகளில் இருந்து மணல் வளம் நாள்தோறும் கொள்ளையடிக்கப்படுகிறது.

மணல் கொள்ளை போவதால், நமது வாரிசுகள் நீருக்காகத் தவிக்க நேரிடும். இதைப் பற்றி யாரும் கவலைப்படுவதாகத் தெரியவில்லை.

இன்றைய தேவை நிறைவேறினால் போதும் என்ற போக்கில் அரசு நிர்வாகம் உள்பட எல்லோருடைய செயல்பாடும் இருப்பது ஆபத்தானது.

சட்டப்பேரவையில் வேட்டி விஷயத்துக்கு வரிந்துகட்டிக் கொண்டு குரல் கொடுத்தவர்கள், மணல் கொள்ளையர்கள் லாரி, லாரியாக கொள்ளையடித்து அண்டை மாநிலங்களுக்கு அனுப்பி நம் பொக்கிஷத்தை கரைப்பதைப் பற்றி கவலைப்படவில்லையே!

சென்னை, பெங்களூரு ஆகிய இரு மாநகரங்களில் கட்டப்படும் அனைத்து கட்டடங்களும் பாலாற்று மணலில் எழுந்தவைதான் என்பது பலருக்குத் தெரியாது. இரு பெரும் நகரங்களின் கட்டமைப்புக்காகத் தொடர்ந்து பாலாற்று மணல் சுரண்டப்பட்டு வருகிறது.

பாலாற்றில் எல்லைமீறி மணல் சுரண்டப்படுவதால், வேலூர், காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களின் நிலத்தடி நீராதாரம் அபாயக மான நிலையை எட்டத் தொடங்கியதுள்ளது என்பதை மத்திய நிலத்தடி நீர் ஆணையம் ஆய்வு செய்து ஒன்றியம் வாரியாக பட்டியலிட்டு மாநில அரசு நிர்வாகத்தை எச்சரித்துள்ளது.

இன்றைய விஞ்ஞானத்தால் இயற்கையாகக் கிடைக்கும் மணலை செயற்கையாக உருவாக்க முடியாது. ஒரு கனஅடி மணல் உருவாக 100 ஆண்டுகள் ஆவதாக கணக்கிட்டுள்ள பொறியாளர்கள், இந்த மணல் வளம் குன்றுவதன் காரணமாகவே பல மாவட்டங்களில் நிலத்தடி நீராதாரம் நாளுக்கு நாள் குறைந்து வருகிறது என்பதையும் குறிப்பிடுகிறார்கள்.

ஆற்றுப்படுகைகளில் உள்ள மணல் வளம்தான் மழைக் காலத்தில் ஆங்காங்கே பெய்யும் மழை ஆற்றை அடைந்ததும், நிலத்தடி பகுதிக்கு கொண்டு சென்று சேமிக்க உதவுகிறது என்பதை நாம் ஏனோ மறந்துவிட்டோம்.

மணல் எடுக்க அனுமதி இல்லாத இடங்களில் மாட்டு வண்டிகள் மூலம் மணல் கடத்துவதும், இதற்கு பல இடங்களில் தடை விதிக்கப்பட்டாலும், வருவாய்த்துறை, காவல் துறையில் உள்ள கருப்பு ஆடுகளுக்கு கொடுக்க வேண்டியதை கொடுத்து பல நூறு மாட்டு வண்டிக்காரர்கள் பிழைப்பு நடத்துவதையும் யாரும் மறுக்க முடியாது.

அரசு ஒரு யூனிட் மணலுக்கு நிர்ணயிக்கும் விலை ரூ.315. மூன்று யூனிட் மணலுக்கான விலை ரூ.915. ஆனால் லாரிகள் நூற்றுக்கணக்கில் மணல் குவாரிகளில் 3 நாள் கூட வரிசையில் காத்திருந்து மணல் எடுத்துச் செல்லும் அளவுக்கு இத்தொழிலில் ஒருசிலர் பல மடங்கு லாபம் ஈட்டுகின்றனர்.

சென்னை, பெங்களூரு உள்ளிட்ட மாநகரங்களுக்கு 3 யூனிட் மணல் ரூ.15 ஆயிரம் வரை விற்பனைக்கு அனுப்பப்படுகிறது. இதில் அரசுக்கு சொற்ப வருவாயும், இடைத் தரகர்களுக்கு கோடிக்கணக்கிலும் வருவாயும் கிடைப்பது ஊரறிந்த ரகசியம்.

அதிகபட்சம் மூன்று அடி ஆழத்துக்கு மட்டுமே மணல் எடுக்கலாம். இயந்திரங்களைப் பயன்படுத்தக் கூடாது. காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை மட்டுமே மணல் அள்ள வேண்டும்.

கரையில் இருந்து 60 அடி தள்ளியே அள்ள வேண்டும். குடிநீர் கிணறு இருக்கும் இடங்களில் ஒரு கிலோ மீட்டர் தொலைவுக்கு அப்பால்தான் அள்ள வேண்டும்.

தரைப்பாலம், மேம்பாலம் இருக்கும் இடங்களில் 100 அடி தூரத்துக்கு மணல் அள்ளக் கூடாது போன்ற அரசின் விதிமுறைகள் எதுவும் மணல் அள்ளப்படுவதில் பின்பற்றப்படுவதில்லை என்பதும் வேதனைக்குரிய விஷயம்.

ஆற்றுப் படுகைகளில் அதிக அளவில் மணல் எடுப்பதால் நில அதிர்வுகள், இயற்கை சீற்றத்துக்கு ஆளாக நேரிடும் என்பது சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் பலரின் ஆதாரப்பூர்வமான தகவல்களை நாம் கவனத்துடன் உற்று பார்க்க வேண்டியுள்ளது.

கடுமையான சுற்றுச்சூழல் பாதிப்பு, குடிநீர் பற்றாக்குறை, வேளாண்மை பாதிப்பு போன்றவற்றை தவிர்க்க இனியாவது அரசும் நிர்வாகமும் விழித்துக் கொள்ள வேண்டும்.

அரசு நிர்வாகம் மணலை விதிமுறை மீறி அள்ளுவதை தடுத்து நிறுத்தியாக வேண்டும்.

எல்லா விஷயத்திலும் மேலை நாடுகளை பின்பற்றும் நாம், கட்டுமானத் தொழிலிலும் மணலை குறைவாக பயன்படுத்தி உறுதியான கட்டடங்களை உருவாக்கும் மேலை நாட்டு நவீன கட்டுமானத் தொழில்நுட்பத்தை கட்டட வல்லுநர்கள் பின்பற்ற ஊக்குவிக்க வேண்டும்.

தினமணி

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9767
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sun Jul 27, 2014 2:21 pm

 கொள்ளை போகும் மணல் வளம் 103459460 



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக