Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்by heezulia Today at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm
» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நாட்டுக்குள் படையெடுக்கும் காட்டு விலங்குகள்
+2
ஜாஹீதாபானு
சிவா
6 posters
Page 1 of 1
நாட்டுக்குள் படையெடுக்கும் காட்டு விலங்குகள்
இயற்கை கொடுத்த வரப்பிரசாதம் நிலம், காடு, கடல் ஆகியவையாகும். இதில், ஒவ்வொன்றும் குறிப்பிட்ட வரையரைக்குள் இருந்து அடுத்தவற்றுக்குள் நுழையாமல் இருப்பதே நல்ல பாதுகாப்பாகும். கடல் நாட்டுக்குள் வருவது ஆபத்து. அதைத்தான் சுனாமி பாதிப்பு உலகுக்கு காட்டியது. இதுபோல, மொத்த நிலப்பரப்பில் 33 சதவீதம் காடுகள் இருக்கவேண்டும். எப்படி நாடு மனிதர்களின் வாழ்விடமோ, அதுபோல காடுகள்தான் வன விலங்குகளின் வாழ்விடமாகும். 33 சதவீதம் வனப்பரப்பு இருந்தால்தான், நாட்டில் மழை வளம் போதுமான அளவில் இருக்கும் என்பதோடு, வனவிலங்குகளும் தங்கள் எல்லைக்குள் வாழும். ஆனால், இந்தியாவில் வனப்பரப்பு 33 சதவீதம் இல்லை. 21.23 சதவீதம்தான் இருக்கிறது.
காடுகளோடு நாட்டில் உள்ள மர வளத்தையும் சேர்த்தால் 24.01 சதவீதம் உள்ளது. இந்தியாவில் வனவளம் குறைவாக இருக்கிறதே என்று பார்க்கும்போது, தமிழ்நாட்டில் உள்ள வனவளத்தைப் பார்த்தால் மிகவும் குறைவாக இருக்கிறது. இயற்கையிலேயே தமிழ்நாட்டில் வனவளம் மிகவும் குறைவு. தமிழ்நாட்டின் வனவளம் 17.59 சதவீதம்தான். அதனால்தான் தமிழக அரசு வனவளத்தைப் பெருக்குவதற்காக பல சிறப்புத்திட்டங்களை நிறைவேற்றி வருகிறது. சாண் ஏறினால் முழம் சறுக்கும் என்பதற்கேற்ப, அவ்வப்போது காடுகளில் ஏற்படும் தீவிபத்துக்கள் வளர்ந்து நிற்கும் மரங்களை அழித்துவிடுகிறது.
சமீபகாலங்களாக மற்றொரு மோதல் மனிதனுக்கும், வனவிலங்குகளுக்கும் அடிக்கடி நடக்கத்தொடங்கியுள்ளது. மலை அடிவாரங்களில் உள்ள குடியிருப்புகளுக்கு சிறுத்தைகள், யானைகள், கரடிகள், காட்டு பன்றிகள், சில நேரங்களில் மான்கள்கூட வரத்தொடங்கிவிட்டன. இதில் சிறுத்தையைத்தவிர, மற்ற மிருகங்களால் உயிர்சேதம் இல்லாவிட்டாலும், பொருட்சேதம் பெருமளவில் நடக்கிறது. கடந்த சில நாட்களாக சிறுத்தையின் கோரதாண்டவம் தொடங்கிவிட்டது. கடந்தவாரத்தில் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வனசரகத்துக்குட்பட்ட தலமலை வனச்சரகத்தில் உள்ள திம்பம் வனசோதனை சாவடியில் பணியில் இருந்த கிருஷ்ணன் என்ற வனக்காப்பாளர் சிறுநீர் கழிக்க ஒதுக்குப்புறமாக சென்ற நேரத்தில், திடீரென ஒரு சிறுத்தை இழுத்துச்சென்று கடித்து குதறி கொன்றுவிட்டது.
இவ்வளவுக்கும் அந்த சோதனைசாவடி அடிக்கடி வாகனங்கள் செல்லும் சாலையில்தான் இருக்கிறது. இதே சத்தியமங்கலம் வனப்பகுதியில்தான் கடந்த மாதத்தில் லாரியை நிறுத்திவிட்டு சிறுநீர் கழித்துக்கொண்டு இருந்த லாரி டிரைவரையும் சிறுத்தைப்புலி இழுத்துச்சென்று கொன்றுவிட்டது. அதாவது மலைப்பகுதி ஆனால் சென்னையை அடுத்த செங்கல்பட்டு அஞ்சூர் காட்டுப்பகுதியில் சிறுத்தைபுலி நடமாடுவது வனத்துறை கேமராவில் பதிவாகியுள்ளதுதான், இது எப்படி இங்கு வந்தது? என்று எல்லோருக்கும் ஆச்சரியமாக இருக்கிறது.
இப்படி காட்டில் வாழும் விலங்குகளெல்லாம், நாட்டுக்குள் வருவதற்கு முக்கிய காரணம், அடர்ந்த வனப்பகுதிகள் குறைவதும், வனவிலங்குகளின் வாழ்விடத்தை மனிதன் ஆக்கிரமித்ததுமே காரணம் என்கிறார்கள், வனவிலங்குகளின் ஆர்வலர்கள். யானைகளைப் பொருத்தமட்டில், ஒரே இடத்தில் வாழ்வதில்லை. இடம்விட்டு இடம் சென்றுகொண்டே இருக்கும். அதன் வழித்தடம் ஒன்றேதான். அந்த வழித்தடத்தில் திடீரென கட்டப்படும் வீடுகள், கட்டிடங்கள் அதன் பாதையை மாற்றிவிடுகிறது. இதுபோல, காடுகளில் பெருகிவரும் மனித நடமாட்டமே, சிறுத்தைபோன்ற விலங்குகளை தங்கள் இடத்தில் இருந்து தடம்மாற வைத்துவிடுகிறது. மேலும், மான் போன்ற மிருகங்களை துரத்தி வேட்டையாடி பிடிக்கமுடியாத அளவில் முதுமையோ, கால்களிலோ அல்லது உடலிலோ ஏதாவது ஊனம் ஏற்படுகிற நேரத்தில், எளிதில் பிடித்துக்கொல்லக்கூடிய மனிதனை ஒருமுறை அடித்து சாப்பிட்டுவிட்டால் பிறகு மனிதன்தான் அதன்குறி என்று ஓய்வுபெற்ற வன அதிகாரி ஒருவர் கூறினார். மேலும், காடுகளுக்குள் தண்ணீர் பற்றாக்குறை இருப்பதும் விலங்குகளை தண்ணீர் தேடி நாட்டுக்குள் வரவழைக்கிறது. சில நாட்களுக்கு முன்பு கோவையில் ஒரு பண்ணை வீட்டுக்கு வந்த யானை கூட்டம் அங்கே இருந்த தண்ணீர் குழாயை தும்பிக்கையால் திறந்து தண்ணீர் குடித்துவிட்டு போயிருக்கிறது. மொத்தத்தில், காடுகள் காடுகளாக இருக்கட்டும். அங்கு போய் மனிதன் வீடுகட்டவோ, விடுதிகள் கட்டவோ, பண்ணைகள் அமைக்கவோ, விவசாயம் செய்யவோ, நடமாட்டம் அதிகமானாலோ, இப்படித்தான் மனிதனுக்கும், விலங்குகளுக்கும் மோதல் ஏற்படும்.
தினத்தந்தி
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Re: நாட்டுக்குள் படையெடுக்கும் காட்டு விலங்குகள்
எங்க ஊருளேயும் நிறைய காட்டு பன்றிகள் ஊருக்குள்ளே வந்து தோட்டங்கள அநியாயம் பண்ணிட்டு போயிடுதுங்க.
மாணிக்கம் நடேசன்- கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
Re: நாட்டுக்குள் படையெடுக்கும் காட்டு விலங்குகள்
//மேலும், மான் போன்ற மிருகங்களை துரத்தி வேட்டையாடி பிடிக்கமுடியாத அளவில் முதுமையோ, கால்களிலோ அல்லது உடலிலோ ஏதாவது ஊனம் ஏற்படுகிற நேரத்தில், எளிதில் பிடித்துக்கொல்லக்கூடிய மனிதனை ஒருமுறை அடித்து சாப்பிட்டுவிட்டால் பிறகு மனிதன்தான் அதன்குறி என்று ஓய்வுபெற்ற வன அதிகாரி ஒருவர் கூறினார். //
ஆமாம் சிவா, எங்க அப்பா சொல்லுவா, ஒரு முறை அந்த மிருகங்கள் மனிதனை சுவைத்து விட்டால் மீண்டும் விலங்கை சப்பிடாதாம். ஏன் என்றால் நம் ரத்தத்தில் உப்பு இருப்பதால் ரொம்ப taste ஆக இருக்குமாம் அவைகளுக்கு
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: நாட்டுக்குள் படையெடுக்கும் காட்டு விலங்குகள்
குட்டியாடு தப்பிவந்தா குள்ளநரிக்குச் சொந்தம் !
குள்ளநரி தப்பி வந்தா குறவனுக்குச் சொந்தம் !
குறவன் தப்பி வந்தா கொடும்புலிக்குச் சொந்தம் !
குள்ளநரி தப்பி வந்தா குறவனுக்குச் சொந்தம் !
குறவன் தப்பி வந்தா கொடும்புலிக்குச் சொந்தம் !
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Re: நாட்டுக்குள் படையெடுக்கும் காட்டு விலங்குகள்
மனிதன் காடுகளை அழிக்கிறான்
விலங்கு மனிதனை அழிக்கிறது - அவ்வளவே!!
இதில் என்ன வருத்தம் என்றால்,
அழிப்பவன் சிக்குவதில்லை விலங்குகளிடத்தில்
அப்பாவி சிக்கிக் கொள்கிறான் அவைகளிடம் !!
விலங்கு மனிதனை அழிக்கிறது - அவ்வளவே!!
இதில் என்ன வருத்தம் என்றால்,
அழிப்பவன் சிக்குவதில்லை விலங்குகளிடத்தில்
அப்பாவி சிக்கிக் கொள்கிறான் அவைகளிடம் !!
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
Similar topics
» போதை தரும் பழங்கள் உண்டு ஆட்டம்போடும் காட்டு விலங்குகள்!( அசத்தல் காணொளி)
» உழவர்களை ஒழிக்க படையெடுக்கும் சட்டங்கள்
» நீலகிரி டூ கோவை... கோடை மழைக்கு படையெடுக்கும் பட்டாம்பூச்சிகள்...!
» தென்னிந்திய சினிமாவை நோக்கிப் படையெடுக்கும் பாலிவுட் நடிகர்கள்
» அதிசய நீலக் கிராமத்தை பார்க்க படையெடுக்கும் சுற்றுலாப் பயணிகள்
» உழவர்களை ஒழிக்க படையெடுக்கும் சட்டங்கள்
» நீலகிரி டூ கோவை... கோடை மழைக்கு படையெடுக்கும் பட்டாம்பூச்சிகள்...!
» தென்னிந்திய சினிமாவை நோக்கிப் படையெடுக்கும் பாலிவுட் நடிகர்கள்
» அதிசய நீலக் கிராமத்தை பார்க்க படையெடுக்கும் சுற்றுலாப் பயணிகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|