ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Yesterday at 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Yesterday at 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Yesterday at 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Yesterday at 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Yesterday at 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Yesterday at 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Yesterday at 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Yesterday at 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:32 am

» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Yesterday at 7:23 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 11:33 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Fri Nov 08, 2024 11:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 9:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:02 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:17 pm

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 7:06 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:34 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:31 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 10:05 am

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:41 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:34 am

» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm

» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm

» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm

» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm

» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm

» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm

» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm

» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am

» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am

» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm

» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm

» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

என்னுயிர் நின்னதன்றோ...! விமந்தினி.

+2
அருண்பிரகாஷ்
விமந்தனி
6 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

என்னுயிர் நின்னதன்றோ...! விமந்தினி. - Page 2 Empty என்னுயிர் நின்னதன்றோ...! விமந்தினி.

Post by விமந்தனி Mon Jul 21, 2014 12:03 am

First topic message reminder :

ந்த இளமை பருவம் எதற்கு வருகிறது? இந்த வாலிபத்தை சட்டென்று கடந்து விடக்கூடாதா? எந்த கற்பனையும், கனவும் இல்லாமல் உடனே முதுமை நிலையை அடைந்து விடவேண்டும். அது தான் சுகம். இல்லையென்றால் இந்த மாதிரியான விவஸ்தை கேட்ட அவஸ்தைகள் எல்லாம் வருமா?

என்ன இது....? என்ன மாதிரியான பையித்தியகாரதனம் இது? யாருமே விரும்பாத முதுமையை விரும்பி ஏற்க துடிக்கும் மனம்?

காதல் வயப்பட்டதன் விளைவோ?

ஔவை கூட முதுமையை விரும்பி ஏற்றுக்கொண்டது தானே...? அதை எப்படி பயித்தியகாரதனம் என்று சொல்ல முடியம்? ஔவை-க்கு இறைவன் பால் கொண்ட அன்பா....?

காதல்...! எவ்வளவு சுயநலமாக சிந்திக்க தூண்டுகிறது... வருத்தமாகத்தான் இருக்கிறது, ஆனாலும் என்ன செய்வது? எதிர்நோக்கும் துணிச்சல் இல்லாமல் போகும் போதும், தோற்கும் சூழ்நிலை ஏற்படும் போதும் சுயநலம் தானாக தலைதூக்கத்தான் செய்கிறது.

பிள்ளை பிராயத்திலே – அவள்
பெண்மையை கண்டு மயங்கி விடேனங்கு,
ஆடிவருகையிலே – அவள்
அங்கோர் வீதிமுனையில் நிற்பாள்
நாடி அருகணைத்தால் – பல
ஞானங்கள் சொல்லி இனிமை செய்வாள்,
“இன்று கூடி மகிழ்வோம்..” என்றால்
விழிக்கோணத்திலே – நகை காட்டி
செல்வாளம்மா!

என்ற பாரதியின் பாடலை எத்தனை முறை எனக்குள் என்னவர் பாடியிருப்பார்? எத்தனை நாட்கள்? எத்தனை இரவுகள்? எத்தனை முறை? இந்த வார்த்தைகளுக்காக காத்திருந்து, ஏங்கி தவித்து... கேட்ட பிறகு பூரித்து ஆனந்தப்பட்ட அந்த பரவசம் நிஜத்திலும் கூட கிடைக்காது.

ஆமாம், அத்தனையும் கற்பனையில்.....

“என் கண்ணிற் பாவையன்றோ – கண்ணம்மா
என்னுயிர் இன்னதன்றோ!”
- இதே வரிகளை எனக்காக... இந்த கண்ணம்மாவிற்காக பாடி மெய் சிலிர்த்துப்போன அனுபவத்தை என்ன சொல்ல?

நிஜம் தான் –

பாரதி எல்லாம் உணர்ந்து எழுதியதா?
இருக்கலாம், இல்லை என்றால் வெறும் வார்த்தைகளுக்கு மட்டும் இப்படி உடம்பையும், மனதையும் ஒரு சேர லயித்து, சிலிர்க்க வைக்கும் சக்தி இருக்க வாய்ப்பில்லை.

கதை தொடரும்...

என்னுயிர் நின்னதன்றோ...! விமந்தினி. - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஎன்னுயிர் நின்னதன்றோ...! விமந்தினி. - Page 2 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312என்னுயிர் நின்னதன்றோ...! விமந்தினி. - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

என்னுயிர் நின்னதன்றோ...! விமந்தினி. - Page 2 Empty Re: என்னுயிர் நின்னதன்றோ...! விமந்தினி.

Post by விமந்தனி Wed Jul 23, 2014 2:43 pm

அருண்பிரகாஷ் wrote:ஜெயமோகனின் நாவல் மாதிரி நல்ல இருக்கு...வாழ்த்துக்கள்..தொடருங்கள்...

நன்றி அருண்.

என்னுயிர் நின்னதன்றோ...! விமந்தினி. - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஎன்னுயிர் நின்னதன்றோ...! விமந்தினி. - Page 2 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312என்னுயிர் நின்னதன்றோ...! விமந்தினி. - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

என்னுயிர் நின்னதன்றோ...! விமந்தினி. - Page 2 Empty Re: என்னுயிர் நின்னதன்றோ...! விமந்தினி.

Post by விமந்தனி Wed Jul 23, 2014 2:56 pm

ஜாஹீதாபானு wrote:ஏன் கவிதைப்பகுதியில் பதிவு போட்டிருக்கிங்க?

கதைகள் பகுதியில் சொந்த படைப்புகள் இருக்கிறதா என்பது தெரியவில்லை. சரி, பிறகு உங்களிடம் கேட்டு மாற்றி கொள்ளலாம் என்று நினைத்து தான் இந்த பகுதியில் பதிவிட்டேன். சரியான இடத்திற்கு மாற்றி விட்டு விடுங்கள்.

நன்றி பானு!

ரம்ஜான் வேலை எல்லாம் எப்படி போய் கொண்டிருக்கிறது?

Post by விமந்தனி Wed Jul 23, 2014 2:58 pm

Dr.S.Soundarapandian wrote:விமந்தனி- வாழ்வின் ஒரு குறுக்குவெட்டுத் தோற்றத்தைக் காட்டியுள்ளீர்கள் !

மிகவும் நன்றி ஐயா!

என்னுயிர் நின்னதன்றோ...! விமந்தினி. - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஎன்னுயிர் நின்னதன்றோ...! விமந்தினி. - Page 2 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312என்னுயிர் நின்னதன்றோ...! விமந்தினி. - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

என்னுயிர் நின்னதன்றோ...! விமந்தினி. - Page 2 Empty Re: என்னுயிர் நின்னதன்றோ...! விமந்தினி.

Post by ஜாஹீதாபானு Wed Jul 23, 2014 3:37 pm

விமந்தனி wrote:
ஜாஹீதாபானு wrote:ஏன் கவிதைப்பகுதியில் பதிவு போட்டிருக்கிங்க?

கதைகள் பகுதியில் சொந்த படைப்புகள் இருக்கிறதா என்பது தெரியவில்லை. சரி, பிறகு உங்களிடம் கேட்டு மாற்றி கொள்ளலாம் என்று நினைத்து தான் இந்த பகுதியில் பதிவிட்டேன். சரியான இடத்திற்கு மாற்றி விட்டு விடுங்கள்.

நன்றி பானு!

ரம்ஜான் வேலை எல்லாம் எப்படி போய் கொண்டிருக்கிறது?
மேற்கோள் செய்த பதிவு: 1075411

உங்க சொந்தக் கதையா? அப்படியென்றால் கதையின் தலைப்பில் உங்க பெயரை போட்டிருந்தால் உங்க கதை என தெரிந்திருக்கும்.

தலைப்பில் பெயர் போடவா?

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

என்னுயிர் நின்னதன்றோ...! விமந்தினி. - Page 2 Empty Re: என்னுயிர் நின்னதன்றோ...! விமந்தினி.

Post by ஜாஹீதாபானு Wed Jul 23, 2014 3:39 pm

ரம்ஜான்ல என்ன வேலை இருக்கபோவுது பெருநாள் அன்று தான் வேலை இருக்கும்....

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

என்னுயிர் நின்னதன்றோ...! விமந்தினி. - Page 2 Empty Re: என்னுயிர் நின்னதன்றோ...! விமந்தினி.

Post by விமந்தனி Wed Jul 23, 2014 5:58 pm

சரியான இடத்திற்கு கதையை மாற்றியதற்கு நன்றி பானு. அதே போல தலைப்பையும் என்னுயிர் நின்னதன்றோ...! - விமந்தனி என்று மாற்றிவிடவும்.

என்னுயிர் நின்னதன்றோ...! விமந்தினி. - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஎன்னுயிர் நின்னதன்றோ...! விமந்தினி. - Page 2 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312என்னுயிர் நின்னதன்றோ...! விமந்தினி. - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

என்னுயிர் நின்னதன்றோ...! விமந்தினி. - Page 2 Empty Re: என்னுயிர் நின்னதன்றோ...! விமந்தினி.

Post by விமந்தனி Wed Jul 23, 2014 10:33 pm

மாலை கீர்த்தியுடன் கோயிலுக்கு சென்றிருந்தேன். தீபாராதனை நடந்து கொண்டிருந்தது. “அடுத்த முறை வரும்போது அஜையோட வரணும்னு வேண்டிக்கோ அபி...!” கீர்த்தி கிசுகிசுப்பாய் சொல்ல, முனுக்கென்று எட்டிப்பார்த்த கண்ணீருடன் அவளை ஏறிட்டேன்.

“ச்சி... என்னதிது? தைரியமா இரு.. நல்லதே நடக்கும்னு நம்புவோம்... முதல்ல சாமி கும்பிடு...” கீர்த்தியின் வார்த்தைகளில் இருந்த நெகிழ்வு என்னை மேலும் கரைக்க, என் கண்ணீர், கன்னத்தை தொடும் முன் கைகூப்பி தலைகுனிந்தேன்.

‘கடவுளே! அவருக்கு கல்யாணம் ஆகப்போறதாம்... அப்புறம் எப்படி.... என்னால்...’

“அபி...?” ---- நிமிர்ந்தேன். இந்த கீர்த்தி இன்னும் தூங்கவில்லையா?

“என்ன...?”

"இந்த தலகாணி ரொம்ப உயரமா இருக்கு. உன்னோடத கொடேன்...”
கொடுத்தேன்.

“அபி...?”

“உம்...”

“அழுதியா...?”

“இல்லையே...!” அவசரமாக மறுத்தேன்.

“அப்புறம் எப்படி உன் தலைகாணி நனைஞ்சு இருக்கு?”

“....” ராட்சசி எதை எல்லாம் கேக்கிறாள் பார்.

“எது வந்தாலும் சாமானியத்துக்கு கலங்காத நீ..... இப்ப இந்த ஈரத்தை பார்த்தா.... எனக்கு கொஞ்சம் கலக்கமாயிருக்கு அபி...”

“.....”

“நீ அலட்டிகிறயோன்னு தோணுது எனக்கு.”

‘நான் அலட்டிகிறேனா! பைத்தியம்!! ம்...ம்....’ எனக்கு சிரிக்க தோன்றியது.
நைட் லாம்ப் வெளிச்சத்தில் என் அசைவு கீர்த்திக்கு தெரிந்திருக்கவேண்டும்.

“என்னவோ போ. எதையும் சந்திக்கற துணிவு உள்ளவ நீ. உங்களுக்கு எந்த வகையிலும் குறைஞ்சவ நானில்லைன்ற மாதிரி எதிராளியோட பேசற உன்னோட சாமர்த்தியம்... இப்ப இப்படி உடைஞ்சு போற போது தான், நீயும் சராசரி பொண்ணு தானோன்னு தோணுது... இவ்வளவு தைரியம் உள்ளவ இப்படி கோழை மாதிரி அழலாமா அபி...?”

“இல்ல கீர்த்தி. இது உனக்கு புரியா...”

“என்ன புரியாது... ம்...? உன்னை வித்தியாசமானவ-ன்னு நினைச்சேன் அபி. ஆனா, நீயும் ஒரு சராசரி பொண்ணு தான்னு....”

“ஆமா!” சட்டென்று இடைமறித்தேன், மேலும் அவளை தொடரவிடாமல். குரலும் சற்று உயர்ந்து தான் இருந்தது.

“ஆமா...! நானும் சராசரி பொண்ணு தான். வித்தியாசமானவன்னா..., எனக்கு மட்டும் மனசில்லையா? அதுல ஆசைகள் இல்லையா...? எந்நேரமும் ஜானகிராமனையும், சர்சிலையும் புரட்டிட்டு இருக்க சொல்றியா..?”

“ அ...தி...ல்...ல...அபி...”

“ஸாரி கீர்த்தி... எதுவும் சொல்லாதே. வித்தியாசமானவன்னு நினைச்சு என்னை உசந்த இடத்தில வச்சுடாதே.”

“இவ்வளவு தைரியமுள்ள உன்னோட இயல்புக்கு உன் மனசுல இருக்கற பிரச்சனையையும் தீர்க்க முடியும் இல்லையா...?”

“நிஜம் தான்! ஆனா, ஒரு பெண்ணோட இயல்பு ‘நாணம்’ தானே?”

“யம்மா... உங்கிட்ட பேசி ஜெயிக்க முடியுமா..?’

“அப்ப பேசாம தூங்கு...” என்றேன் நான்.

“ஆமா.. என்கிட்டே தான்... பேசவேண்டிய எடத்துல பேசாத...” முணுமுணுத்துக்கொண்டே கீர்த்தி திரும்பி படுத்துக்கொண்டாள்.

தொடரும்....

என்னுயிர் நின்னதன்றோ...! விமந்தினி. - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஎன்னுயிர் நின்னதன்றோ...! விமந்தினி. - Page 2 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312என்னுயிர் நின்னதன்றோ...! விமந்தினி. - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

என்னுயிர் நின்னதன்றோ...! விமந்தினி. - Page 2 Empty Re: என்னுயிர் நின்னதன்றோ...! விமந்தினி.

Post by ஜாஹீதாபானு Thu Jul 24, 2014 12:16 pm

இன்று தான் படித்தேன் அருமையான கதை தொடருங்கள் விமந்தினி

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

என்னுயிர் நின்னதன்றோ...! விமந்தினி. - Page 2 Empty Re: என்னுயிர் நின்னதன்றோ...! விமந்தினி.

Post by விமந்தனி Thu Jul 24, 2014 11:25 pm

ஜாஹீதாபானு wrote:இன்று தான் படித்தேன் அருமையான கதை தொடருங்கள் விமந்தினி

நன்றி பானு!

தலைப்பை மாற்றியமைத்தமைக்கு மீண்டும் நன்றி.

என்னுயிர் நின்னதன்றோ...! விமந்தினி. - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஎன்னுயிர் நின்னதன்றோ...! விமந்தினி. - Page 2 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312என்னுயிர் நின்னதன்றோ...! விமந்தினி. - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

என்னுயிர் நின்னதன்றோ...! விமந்தினி. - Page 2 Empty Re: என்னுயிர் நின்னதன்றோ...! விமந்தினி.

Post by விமந்தனி Fri Jul 25, 2014 12:23 am

றுநாள் - நானும், கீர்த்தியும் ஆபிஸ் புறப்பட பஸ் ஸ்டாண்ட் வந்தோம். எதிர்புறத்திலிருந்து வந்தனா அவள் அண்ணனுடன் வந்து கொண்டிருந்தாள். இருவரும் ரோட்டை க்ராஸ் செய்வதற்குள் அஜெயின் நண்பன் ஒருவன் குறிக்கிட, வந்தனா மட்டும் எங்கள் பக்கம் வந்தாள்.

“என்ன வந்தனா..? ரொம்ப சந்தோஷமா இருக்கே போலிருக்கே... கல்யாணம் நிச்சயம் ஆயிடுச்சா...?” – நாசூக்காக கேட்பதாய் நினைத்து பட்டென்று போட்டு உடைத்தேன்.

கீர்த்திக்கு இந்த கல்யாண விஷயம் தெரியாததால், ‘என்ன இப்படி அபத்தமாய் கேட்கற..’ – என்பது மாதிரி என்னை பார்த்தாள்.

“கல்யாணமா... யாருக்கு..?” – வந்தனா வசீகரமாய் புன்னகைத்தாள்.

“ஏய்...!” – சன்னமாக அதட்டினேன். மனம் பதட்டமானது.

“சரி... சரி... டென்ஷன் ஆகாதே. நான் சுத்தி விட்ட ரீல் தான் அது. உங்க ரெண்டு பேர் மனசையும் நான் புரிஞ்சுக்கிட்டேன். அத வெளிய சொல்ல உங்க ரெண்டு பேர்கிட்ட இருந்த பிடிவாதமும் தெரிஞ்சது. அதனால தான் உனக்கு கல்யாணம்னு எங்கண்ணன் கிட்டயும், எங்கண்ணனுக்கு கல்யாணம்னு உன்கிட்டயும் பொய் சொன்னேன். இந்த ரெண்டுநாளா நீங்க தவிச்ச தவிப்பு இருக்கே... இப்பதான் எங்கண்ணனிடமும் உண்மையை சொன்னேன்...” என்று வந்தனா என் தலையில் பூக்களாய் கொட்டினாள்.

என் சந்தோஷத்திற்கு எல்லையே இல்லாமல் போனது. நான் திரும்பி அஜஜ்யை பார்க்க,  அதே சமயம் அவரும் திரும்பி சிரிக்க... யப்பா! சத்தியமாய் சொல்கிறேன், நான் இந்த உலகத்திலேயே இல்லை. முதன் முதலாக என்னை பார்த்து, எனக்காகவே சிரித்த அஜய்... என்னுயிரானவன்.

....கதை முற்று பெற்றது....

என்னுயிர் நின்னதன்றோ...! விமந்தினி. - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஎன்னுயிர் நின்னதன்றோ...! விமந்தினி. - Page 2 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312என்னுயிர் நின்னதன்றோ...! விமந்தினி. - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

என்னுயிர் நின்னதன்றோ...! விமந்தினி. - Page 2 Empty Re: என்னுயிர் நின்னதன்றோ...! விமந்தினி.

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum