புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Today at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நம்பர் 1 பெண்கள் துப்பறியும் நிறுவனம் - Page 8 I_vote_lcapநம்பர் 1 பெண்கள் துப்பறியும் நிறுவனம் - Page 8 I_voting_barநம்பர் 1 பெண்கள் துப்பறியும் நிறுவனம் - Page 8 I_vote_rcap 
91 Posts - 61%
heezulia
நம்பர் 1 பெண்கள் துப்பறியும் நிறுவனம் - Page 8 I_vote_lcapநம்பர் 1 பெண்கள் துப்பறியும் நிறுவனம் - Page 8 I_voting_barநம்பர் 1 பெண்கள் துப்பறியும் நிறுவனம் - Page 8 I_vote_rcap 
38 Posts - 26%
வேல்முருகன் காசி
நம்பர் 1 பெண்கள் துப்பறியும் நிறுவனம் - Page 8 I_vote_lcapநம்பர் 1 பெண்கள் துப்பறியும் நிறுவனம் - Page 8 I_voting_barநம்பர் 1 பெண்கள் துப்பறியும் நிறுவனம் - Page 8 I_vote_rcap 
10 Posts - 7%
mohamed nizamudeen
நம்பர் 1 பெண்கள் துப்பறியும் நிறுவனம் - Page 8 I_vote_lcapநம்பர் 1 பெண்கள் துப்பறியும் நிறுவனம் - Page 8 I_voting_barநம்பர் 1 பெண்கள் துப்பறியும் நிறுவனம் - Page 8 I_vote_rcap 
7 Posts - 5%
sureshyeskay
நம்பர் 1 பெண்கள் துப்பறியும் நிறுவனம் - Page 8 I_vote_lcapநம்பர் 1 பெண்கள் துப்பறியும் நிறுவனம் - Page 8 I_voting_barநம்பர் 1 பெண்கள் துப்பறியும் நிறுவனம் - Page 8 I_vote_rcap 
1 Post - 1%
viyasan
நம்பர் 1 பெண்கள் துப்பறியும் நிறுவனம் - Page 8 I_vote_lcapநம்பர் 1 பெண்கள் துப்பறியும் நிறுவனம் - Page 8 I_voting_barநம்பர் 1 பெண்கள் துப்பறியும் நிறுவனம் - Page 8 I_vote_rcap 
1 Post - 1%
eraeravi
நம்பர் 1 பெண்கள் துப்பறியும் நிறுவனம் - Page 8 I_vote_lcapநம்பர் 1 பெண்கள் துப்பறியும் நிறுவனம் - Page 8 I_voting_barநம்பர் 1 பெண்கள் துப்பறியும் நிறுவனம் - Page 8 I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நம்பர் 1 பெண்கள் துப்பறியும் நிறுவனம் - Page 8 I_vote_lcapநம்பர் 1 பெண்கள் துப்பறியும் நிறுவனம் - Page 8 I_voting_barநம்பர் 1 பெண்கள் துப்பறியும் நிறுவனம் - Page 8 I_vote_rcap 
283 Posts - 45%
heezulia
நம்பர் 1 பெண்கள் துப்பறியும் நிறுவனம் - Page 8 I_vote_lcapநம்பர் 1 பெண்கள் துப்பறியும் நிறுவனம் - Page 8 I_voting_barநம்பர் 1 பெண்கள் துப்பறியும் நிறுவனம் - Page 8 I_vote_rcap 
235 Posts - 37%
mohamed nizamudeen
நம்பர் 1 பெண்கள் துப்பறியும் நிறுவனம் - Page 8 I_vote_lcapநம்பர் 1 பெண்கள் துப்பறியும் நிறுவனம் - Page 8 I_voting_barநம்பர் 1 பெண்கள் துப்பறியும் நிறுவனம் - Page 8 I_vote_rcap 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
நம்பர் 1 பெண்கள் துப்பறியும் நிறுவனம் - Page 8 I_vote_lcapநம்பர் 1 பெண்கள் துப்பறியும் நிறுவனம் - Page 8 I_voting_barநம்பர் 1 பெண்கள் துப்பறியும் நிறுவனம் - Page 8 I_vote_rcap 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
நம்பர் 1 பெண்கள் துப்பறியும் நிறுவனம் - Page 8 I_vote_lcapநம்பர் 1 பெண்கள் துப்பறியும் நிறுவனம் - Page 8 I_voting_barநம்பர் 1 பெண்கள் துப்பறியும் நிறுவனம் - Page 8 I_vote_rcap 
19 Posts - 3%
prajai
நம்பர் 1 பெண்கள் துப்பறியும் நிறுவனம் - Page 8 I_vote_lcapநம்பர் 1 பெண்கள் துப்பறியும் நிறுவனம் - Page 8 I_voting_barநம்பர் 1 பெண்கள் துப்பறியும் நிறுவனம் - Page 8 I_vote_rcap 
12 Posts - 2%
Rathinavelu
நம்பர் 1 பெண்கள் துப்பறியும் நிறுவனம் - Page 8 I_vote_lcapநம்பர் 1 பெண்கள் துப்பறியும் நிறுவனம் - Page 8 I_voting_barநம்பர் 1 பெண்கள் துப்பறியும் நிறுவனம் - Page 8 I_vote_rcap 
8 Posts - 1%
Guna.D
நம்பர் 1 பெண்கள் துப்பறியும் நிறுவனம் - Page 8 I_vote_lcapநம்பர் 1 பெண்கள் துப்பறியும் நிறுவனம் - Page 8 I_voting_barநம்பர் 1 பெண்கள் துப்பறியும் நிறுவனம் - Page 8 I_vote_rcap 
7 Posts - 1%
T.N.Balasubramanian
நம்பர் 1 பெண்கள் துப்பறியும் நிறுவனம் - Page 8 I_vote_lcapநம்பர் 1 பெண்கள் துப்பறியும் நிறுவனம் - Page 8 I_voting_barநம்பர் 1 பெண்கள் துப்பறியும் நிறுவனம் - Page 8 I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
நம்பர் 1 பெண்கள் துப்பறியும் நிறுவனம் - Page 8 I_vote_lcapநம்பர் 1 பெண்கள் துப்பறியும் நிறுவனம் - Page 8 I_voting_barநம்பர் 1 பெண்கள் துப்பறியும் நிறுவனம் - Page 8 I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நம்பர் 1 பெண்கள் துப்பறியும் நிறுவனம்


   
   

Page 8 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Jul 18, 2014 12:12 am

First topic message reminder :

நம்பர் 1 பெண்கள் துப்பறியும் நிறுவனம் - Page 8 QzKZDftkRMOnYnAhqgg5+p19
நம்பர் 1 பெண்கள் துப்பறியும் நிறுவனம் - Page 8 SdpXBTNEQ3iYZ9MZ0CzE+image001

மண்ணால் வேறுபட்டிருந்தாலும் மனத்தால் உலகெங்கும் பெண்களின் துன்பங்களும் தைரியங்களும் ஒன்றேதான் என்பதற்கு அழுத்தமான ஆதாரம் நம்பர் 1 லேடீஸ் டிடெக்டிவ் ஏஜென்சி என்ற ஆங்கில நாவல். அலெக்ஸாண்டர் மெக்கால் ஸ்மித் எழுதியிருக்கும் இந்த நாவலின் நாயகி - எம்மா ரமோட்ஸ்வே! இவள், ஒவ்வொரு பெண்ணுக்குள்ளும் இருக்கிற சாதனைத் துடிப்பின் பிம்பம்.

எம்மா ரமோட்ஸ்வே பிறந்து, வளர்ந்து, வாழ்வதெல்லாமே ஆப்பிரிக்கக் கண்டத்தின் சின்னஞ்சிறு நாடான போட்ஸ்வானா மண்ணில்.

நிறத்தாலும் மொழியாலும் உருவ அமைப்பாலும் வேறுபட்டிருந்தாலும்கூட, போட்ஸ்வானா மக்கள் கிட்டத்தட்ட நம் கலாசாரத்தை அப்படியே நினைவுறுத்துகிறார்கள். மகளுக்கு சீதனமாகத் தர மாடுகளை வளர்க்கும் தந்தை, முழுக்க நம்பியவன் கைவிடும்போது ஏமாற்றத்தில் துடிக்கிற மகள், தொலைந்துபோன மகனை எண்ணி தவித்து நிற்கும் பெற்றோர்.. என்று ஒவ்வொரு பாத்திரத்தின் உள்ளேயும் ஊறுகிற உணர்வுகள், நம் கலாசாரத்தையும் வாழ்க்கைத் துடிப்பையும் அப்படியே நினைவூட்டுகின்றன.

துன்பங்கள் ஆயிரம் வந்தாலும், தைரியத்தோடு மட்டுமல்ல.. சின்னதொரு நகைச்சுவை உணர்வோடும் அவற்றை எதிர்கொண்டு தூளாக்க வேண்டும் என்பதில், எம்மா ரமோட்ஸ்வேக்கு நிகர் அவளேதான்!

ரமோட்ஸ்வே பயணிக்கிற பாதையில் வரும் அப்பாவிகள் நம்மை கண்கலங்க வைக்கிறார்கள். வினோத வில்லன்கள் நடுங்க வைக்கிறார்கள். கொடுமைக்காரர்கள் கொதிக்க வைக்கிறார்கள்.

தனியாக ஒரு தைரியப் பயணத்தைத் தொடங்குகிறாள் ரமோட்ஸ்வே. துணைக்கு நாமும் அவளுடன் கிளம்புவோம்..

எ ம்மா ரமோட்ஸ்வே ஆப்பிரிக்காவின் போட்ஸ்வானா நாட்டின் அழகான கலே மலை யடிவாரத்தில் சொந்தமாக ஒரு வீடு வைத்திருந்தாள். அதுவே தான் அவளது துப்பறியும் நிறுவனமும்.

நிறுவனம் என்ன பெரிய நிறுவனம், ஒரு சின்ன வெள்ளை நிற கார், இரண்டு மேஜை, நாற்காலிகள், ஒரு டெலிபோன். ஒரு பழைய மாடல் டைப் ரைட்டர்.. இதுதான் அந்த நிறுவனத்தின் மொத்த ஆஸ்தியே! போட்ஸ்வானா வின் ஒரேயரு துப்பறியும் நிபுணியும் ரமோட்ஸ்வேதான்.

இந்த மலையடிவாரத்தின் தேநீர் பார்க்க சிவப்பாகவும், நல்ல மணமாகவும் இருக்கும். இதைக் காய்ச்ச ஒரு கெட்டிலும், மூன்று கோப்பைகளும்.. ஒன்று அவளுக்கு. இன்னொன்று அவளுடைய காரியதரிசி எம்மா*மகுட்ஸிக்கு, மூன்றாவது அவளைத் தேடிவரும் வாடிக்கையாளருக்கு.

தனிப்பட்ட டிடெக்டிவ் ஏஜென்சிக்கு இதை விட, வேறு என்ன வேண்டும்? இதுபோன்ற வேலைகளுக்கு மூலதனமே புத்திக்கூர்மையும், உள்ளுணர்வும்தான். எம்மாவுக்கு இவை இரண்டும் தேவைக்கு அதிகமாகவே இருந்தது. இவைதான் அவளை இந்தத் துப்பறியும் தொழிலைத் தொடங்கச் செய்தது.

அவள், இதை விடவும் பெரிய நாட்டில்.. பெரிய நகரத்தில் போய், இதே தொழிலை ஆரம்பித்திருக்கலாம். பெரிய நகரங்களில் வாழும் மனிதர்களிடம் பணமும் அதிகம், பிரச்னைகளும் அதிகம்.. அதற்கேற்ற ஊதியமும் நிறையவே கிடைக்குமாயிருக்கும்.

ஆனால் அவளோ, நான் ஒரு ஆப்பிரிக்க பிரஜை என்பதில் வெட்கப்படவே இல்லை. சோதனைகள் நிறைந்த இந்த நாட்டையும், கடவுள் படைத்த எல்லா மக்களையும் மிகவும் நேசிக்கிறேன். முக்கியமாக இங்கு வசிப்பவர்கள் என் சகோதர, சகோதரிகள். அவர்களுக்கு உதவுவது என் கடமை. அவர்களது பிரச்னைகளை தீர்ப்பதுதான் என் வேலை என்பாள்.

ரமோட்ஸ்வே, தன் அப்பா விட்டுச் சென்ற ஆடு மாடுகளை விற்று, அதில் கிடைத்த பணத்தில்தான் இந்த நிறுவனத்தைத் தொடங்கினாள்.

ரமோட்ஸ்வேவின் தந்தை மிக மோசமான உடல் உபாதைகளுக்கு ஆட்பட்டிருந்ததால், அவரால் எந்த முடிவும் எடுக்க முடியவில்லை. உனக்கென்று ஒரு தொழிலை அமைத்துக் கொள் ரமோட்ஸ்வே. இப்பொழுது ஆடு, மாடுகளுக்கு நல்ல விலை கிடைக்கும். விற்ற பணத்தில் ஒரு கசாப்பு கடை அல்லது பாட்டில் ஸ்டோர், எது உனக்கு இஷ்டமோ அது.. அப்பா மரணப் படுக்கையில் இதைச் சொல்ல, ரமோட்ஸ்வே உருகிப் போனாள்.

உயிருக்கு உயிரான அப்பா, புழுதி நிறைந்த சுரங்கத்தில் வாழ்நாள் எல்லாம் பாடுபட்டு, தன் மகளுக்கு ஒரு நல்ல வாழ்க்கையை அமைக்க உழைத்த மனிதர். அவரது கரங்களைப் பிடித்துக் கொண்டு, கண்ணீர் மல்க அவரைப் பார்த்தாள் ரமோட்ஸ்வே. துக்கத்தில் பேச்சு வரவில்லை. ஆனாலும் திக்கித் திணறி தன் எண்ணத்தை வெளிப்படுத்தினாள்..

அப்பா.. நான் ஒரு டிடெக்டிவ் ஏஜென்சி ஆரம்பிக்கப் போகிறேன். போட்ஸ்வானாவின் மிகச் சிறந்த நிறுவனமாக அது இருக்கும்.

அதைக் கேட்ட அவளின் தந்தை, மிகுந்த சிரமத்துடன் விழிகளை விரித்து அவளைப் பார்த்தார். குழறியபடி பேச முயற்சித்தார்.

ஆனால்.. ஆனால்..

ஆனால், அவர் எதையும் சொல்வதற்கு முன்பே இறந்து போய்விட்டார். எம்மா ரமோட்ஸ்வே, அவரது மார்பில் முகத்தைப் புதைத்தபடி விசும்பினாள். அவரது பாசத்தையும், கௌரவமான வாழ்க்கையையும், தனக்காக அவர் பட்ட பாடுகளையும் இப்பொழுது நினைத்தாலும் மனம் கனத்துப் போகும் ரமோட்ஸ்வேக்கு.

இந்த வாழ்க்கை அவர் கொடுத்தது. அப்பாவை நினைத்தால் மட்டுமே துயரம் பொங்குமே தவிர, தான் கடந்து வந்த கரடுமுரடான வாழ்க்கையை நினைத்து ஒருபோதும் அவள் சலித்துக் கொண்டதே இல்லை.

போராட்டமும், காதலும், கசப்பும் நிறைந்ததுதான் வாழ்க்கை.. என்றாலும் இதையே நினைத்து மூலையில் உட்கார்ந்திருப்பது ஒரு டிடெக்டிவ்வுக்கு அழகில்லை.

நம்பர் ஒன் பெண்கள் துப்பறியும் நிறுவனம்! ரகசியமான தகவல்கள், விசாரிப்புகள் எல்லோருக்கும் திருப்தி தரும் முறையில் நேரடி மேற்பார்வையில் சேகரித்துத் தரப்படும் வர்ணம் தீட்டப்பட்ட இப்படி ஒரு விளம்பரப் பலகையை தனது அலுவலகத்தின் முன்பும், தன் உதட்டில் மெல்லிய முறுவலையும் ஒரு சேர மாட்டினாள் ரமோட்ஸ்வே.

அவளது துப்பறியும் நிறுவனம், பலருக்கும் வியப்பை அளித்தது. இருக்காதா பின்னே.. ஒரு பெண் துப்பறி கிறாளாமே!

ரேடியோவில் அவளது பேட்டி வேறு வந்தது. போதாக்குறைக்கு தினசரி ஒன்றிலும், நாட்டின் ஒரேயரு பெண் டிடெக்டிவ் ஏஜென்ட் என்கிற செய்தி வெளியாகி இருந்தது.

ரமோட்ஸ்வே இந்தச் செய்தியை கத்தரித்து, நகலெடுத்து, தன் ஆபீசின் பார்வையான இடத்தில் ஒரு நோட்டீஸ் போர்டு மாட்டி, அதில் ஒட்டி வைத்தாள்.எந்தவொரு சிறு விஷயத்தையும் அலட்சியப்படுத்துவதில்லை அவள்.

ஆ ரம்ப நாளில், தனது வாடிக்கையாளராக வந்த ஹேப்பி பபெட்ஸியை அத்தனை சுலபத்தில் மறக்க முடியுமா? பாவம்.. என்றைக்கோ காணாமல் போன தகப்பன் திரும்பி வந்து, மறுபடியும் காணாமல் போய்..

எனது வாழ்க்கை மிகவும் சந்தோஷமாக இருந்தது. அப்போதுதான் இது நேர்ந்தது. அதற்கு மேல் சொல்வதற்கு ஒன்றுமில்லை. இப்படிச் சொல்லி உதட்டைப் பிதுக்கினாள் பபெட்ஸி. ரமோட்ஸ்வே, அவளைக் கூர்ந்து பார்த்தபடியே தேநீரை உறிஞ்சினாள்.

ஒருவருடைய முகத்தைப் பார்த்தாலே, அவரைப் பற்றிய சகல விஷயங்களையும் அனுமானித்துவிடுவாள் ரமோட்ஸ்வே. தலையின் வடிவம் முக்கியமான ஒன்று என்று பல புத்திசாலி துப்பறிவாளர்கள், தங்களது அனு பவத்தில் எழுதியிருந்தாலும், ரமோட்ஸ்வே, அதையெல்லாம் நம்பவில்லை.

முகத்தின் பொதுவான தோற்றமும், கண்களும், கண் களின் ஓரத்தில் நெளியும் சிறு கோடுகளும் மனிதரின் மனதைத் துல்லியமாகச் சொல்லிவிடும். அதிலும் இந்தக் கண்கள்தான் ஜன்னல். அதனால்தானோ என்னவோ, நிறைய பேர், வீட்டில் இருக்கும்போது கூட கறுப்புக் கண்ணாடி அணிவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள். அவர்களை ஜாக்கிரதையாகக் கண்காணிக்க வேண்டும்.

ஹேப்பி பபெட்ஸி பெயரில் மட்டுமல்லாமல், உண்மையிலேயே சந்தோஷமான வாழ்க்கை வாழ்பவள் தான் என்பது முதல் பார்வையிலேயே தெரிந்தது. ஆனாலும் ஏதோ ஓர் ஆணால் ஏற்பட்ட பிரச்னையாகத்தான் இருக்கும் என்று ரமோட்ஸ்வே எண்ணினாள்.

எவனுடைய நடத்தையினாலோ இவள் பாதிக்கப் பட்டிருக்கிறாள் அவளது சிந்தனையை பபெட்ஸியின் குரல் கலைத்தது.

முதலில் என்னைப் பற்றிச் சொல்கிறேனே..

ம்! சொல்..

நான், ஒகாவாங்கர் அருகில் உள்ள மான் என்கிற இடத்திலிருந்து வருகிறேன். என் அம்மா ஒரு சிறிய கடை வைத்திருந்தாள். அதன் பின்புறமுள்ள வீட்டில்தான் நாங்கள் வசித்து வந்தோம். வீட்டில் நிறைய கோழிகள்.. நிறைய மகிழ்ச்சி..

.........


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Jul 18, 2014 12:39 am


----------------------------------------------------------------
ஈகரை தமிழ் களஞ்சியம் - www.eegarai.net
நம்பர் 1 பெண்கள் துப்பறியும் நிறுவனம்! - 18
----------------------------------------------------------------


மெ க்கானிக் பையன் கிரீஸ் படிந்த பிசுக்கு விரல்களால் மட்கோனியின் தோளைத் தட்டிக் கூப்பிட்டான். அவன் எப்போதுமே இப்படித்தான் செய்வான். இது, மட்கோனிக்கு துளிக்கூட பிடிப்பதில்லை. மிகவும் கோபம்தான் வரும்.

எனக்கு ஒரு பெயர் உண்டு. என்னை பெயர் சொல்லிக் கூப்பிட்டுப் பேசு. உன் அழுக்குப் படிந்த விரல்களால் எதற்காக அநாவசியமாக என்னைத் தொட்டுப் பேசுகிறாய்..

இப்படி பல சமயங்களில் கோபித்துக் கொண்டிருக்கிறார். அந்தப் பையன் அப்போதைக்கு மன்னிப்பு கேட்பான். அவ்வளவுதான். மறுநாளே திரும்பவும் தொட்டுப் பேசுவான். இவனைத் திருத்தவே முடியாது என்கிற முடிவுக்கு வந்து விட்டார் அவர்.

யாரோ உங்களைப் பார்க்க வந்திருக்கிறார். உங்கள் ஆபீஸில் காத்துக் கொண்டிருக்கிறார்.

கையிலுள்ள ஸ்பேனரை கீழே போட்டுவிட்டு, கையைத் துடைத்துக் கொண்டு எழுந்தார் மட்கோனி. அந்த சமயத்தில் அவர் மிகவும் இடைஞ்சலான வேலையில் ஈடுபட்டிருந்தார். கிரேஸ் என்பவனின் காரை சரிபார்ப்பது என்பது கஷ்டமான வேலைதான். ஏனென்றால், அவன் எப்போதும் காரை மிக வேகமாகவே ஓட்டுவான். அவனது காரின் சத்தம் காத தூரத்துக்குக் கேட்கும். அது, தன்னுடைய கை வண்ணம் என்பதில் மட்கோனிக்கு அளவிட முடியாத மகிழ்ச்சி. அவருக்கு அது ஒரு விளம்பரமாகக் கூட இருந்தது. ஆனால், அவன் காரை மிகவும் தகர டப்பாவாக்கி வைத்திருந்தான். அந்த காரை ஓட வைப்பது என்பது அத்தனை சுலபமான காரியமாக இல்லை.

வந்திருந்தவன் ஆபீஸ் அறையில் உட்கார்ந்திருந்தான்.. அதுவும் மட்கோனியின் நாற்காலியில். மட்கோனி நுழையும்போது, கார் டயர் பற்றிய புத்தகத்தைப் புரட்டிக் கொண்டிருந்தவன், அவரைப் பார்த்ததும் மேஜை மீது புத்தகத்தை வீசி எறிந்து விட்டு எழுந்தான்.

அவனது தோற்றத்தை கண நேரம் எடை போட்டார் மட்கோனி. ராணுவ வீரன் போல காக்கி நிற உடை அணிந்திருந்தான். விலையுயர்ந்த பாம்புத் தோலினாலான பெல்ட் இடுப்பைச் சுற்றி.. கையில் பெரிய கைக்கடிகாரம் ஆரவாரமான ஆடம்பரத்துக்கு எடுத்துக்காட்டாக.. அதிலும் விநாடி முள் நீளமானதாகக் காணப்பட்டது. இது போல, நீண்ட விநாடி முள் உடைய கடிகாரத்தை அணிபவர்களுக்கு, ஒவ்வொரு விநாடியும் மதிப்புடையதாக இருக்கும்போல என்று தோன்றியது அவருக்கு.

நீங்கள் இன்று காலை கோட்ஸ்ஸேவுக்கு போன் செய்தீர்கள் அல்லவா.. அவர்தான் என்னை இங்கு அனுப்பினார்.

மட்கோனி, இதை ஆமோதிக்கும் வகையில் தலையசைத்தார்.

காரின் முன்பக்க கண்ணாடியை உடைத்து கண்ணாடிச் சில்லுகளை அங்குமிங்கும்.. காருக்கு வெளியேயும், அருகிலேயும் இறைப்பது மிகச் சுலபமான வேலையாகத்தான் இருந்தது. கோட்ஸ்ஸே வீட்டுக்கு போன் செய்து, கார் உடைக்கப்பட்டு விட்டதாகக் கூறுவதும் ஒன்றும் கடினமான வேலையாக இல்லை. ஆனால், நேருக்கு நேர் பொய் சொல்லும்போதுதான் மிகவும் கஷ்டமானதாக இருந்தது. அது கோட்ஸ்ஸே அல்ல.. அவன் ஆள்தான் என்றாலும் - முகத்தைப் பார்த்துப் பேச முடியவில்லை.

எல்லாம் இந்த ரமோட்ஸ்வேயினால் வந்த வினை. நான் சாதாரண மெக்கானிக். இந்த மாதிரி துப்பறியும் விளையாட்டில் எல்லாம் ஈடுபட வேண்டிய அவசியமே இல்லை.. நான் மிகவும் பலவீனமானவன்..

உண்மைதான். ரமோட்ஸ்வே சம்பந்தப்பட்ட எதுவானாலும் அவர் பலவீனமானவர்தான். அவள் எதைச் சொன்னாலும் அவரால் தட்ட முடியாது.

அவர் மனதில் ஒரு கற்பனை இருந்தது. அவரும் ரமோட்ஸ்வேயும் கலஹாரி பாலைவனத்துக்குப் போகிறார்கள். அப்போது ரமோட்ஸ்வேயை ஒரு சிங்கம் தாக்க வருகிறது. அவர் குரல் கொடுத்து, சிங்கத்தின் கவனத்தைத் திசை திருப்புகிறார். அது, இவரைப் பார்த்து உறுமுகிறது. அதன் கவனம் திசை திருப்பப்பட்டதால் ரமோட்ஸ்வே தப்பி ஓட, அவர் இந்த சிங்கத்தை கத்தியால் குத்திக் கொல்கிறார்.

ரமோட்ஸ்வேயை சிங்கத்திடமிருந்துகூட காப்பாற்ற அவர் தயார்தான். ஆனால், இந்த விஷயமே வேறு. போலீஸிடம் கூட பொய்யான தகவலைத் தரும்படி இருக்குமோ என பயந்தார். போலீஸ் வரையில் போகாவிட்டாலும், அவருடைய பலவீனத்தினால் இப்போது ஒரு குற்றவாளியாகி விட்டார். ரமோட்ஸ்வேயிடம் அவர் கண்டிப்பாக முடியாது என மறுத்திருக்க வேண்டும். காதலுக்காக பெரிய தியாகியாக மாற வேண்டிய அவசியமே இல்லை.

கோட்ஸ்ஸே மிகவும் கோபமாக இருக்கிறார். பத்து நாட்களாக அந்த கார் உங்களிடம்தான் உள்ளது. இப்போது போன் செய்து, உடைக்கப்பட்டிருப்பதாகச் சொல்கிறீர்கள். இது என்ன பாதுகாப்பு? உங்கள் வாட்ச்மேன் என்ன செய்து கொண்டிருந்தான்? உங்கள் மீது எப்படி நம்பிக்கை வரும்?



நம்பர் 1 பெண்கள் துப்பறியும் நிறுவனம் - Page 8 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Jul 18, 2014 12:39 am



மட்கோனி வியர்த்து விறுவிறுத்தார். என்ன ஒரு சங்கடமான நிலைமை!

திறமையான பழுது பார்ப்பவர்கள் அதிக நேரம் எடுத்துக் கொண்டார்கள். தவிர, புதிதாக சாமான்கள் வாங்கும்படியாயிற்று.. இது மாதிரியான விலையுயர்ந்த கார்களுக்கு, கையில் கிடைக்கிற உதிரி பாகத்தைப் பொருத்தி விட முடியாது.. இல்லையா?

சரி.. சரி.. இந்த ஆட்கள் எவ்வளவு சோம்பேறிகள் என்பது எனக்குத் தெரியும். நீங்கள் காரை காட்டுங்கள்..

இருவரும் ஆபீஸ் அறையிலிருந்து வெளியே வந்தனர். இப்போது அந்த ஆள், அத்தனை முரடனாகத் தெரியவில்லை. கோபத்தை அவ்வளவு சீக்கிரம் மாற்றிக் கொள்ள முடியுமா..? அதுவும் தெரியவில்லை.

காரின் முன் வந்து நின்றனர். மட்கோனியின் ஆட்கள் காருக்கு புதிய கண்ணாடியை மாற்றியிருந்தனர். இருந்தாலும் அந்த உடைந்த கண்ணாடியை சுவரில் சாய்த்து வைத்திருந்தனர். முன்னெச்சரிக்கையாக சில கண்ணாடித் துண்டுகள் டிரைவர் இருக்கையிலும் சிதறிக் கிடந்தன.

வந்தவன் கார் கதவைத் திறந்து உள்ளே எட்டிப் பார்த்தான்.

நான் என் செலவிலேயே கண்ணாடியை மாற்றியிருக்கிறேன். பில்லை மிகவும் குறைத்தே போடுகிறேன்.. என்றார் மட்கோனி.

அவன் ஒன்றும் பதில் பேசவில்லை. கார் ஸீட்டின் மீது சரிந்து, முன்பக்கம் உள்ள அறையைத் திறந்தான். மட்கோனி அமைதியாகப் பார்த்துக் கொண்டிருந்தார்.

காரிலிருந்து வெளியே வந்தவன், கையைத் தன்னுடைய காற்சட்டையிலேயே துடைத்துக் கொண்டான். சிறிய கண்ணாடித் துண்டுகள் அவன் கையைப் பதம் பார்த்து விட்டன.

அந்த டாஷ் போர்ட் கம்பார்ட்மென்ட்டில் இருந்த பொருட்கள் காணப்படவில்லை. அது பற்றி உங்களுக்கு ஏதாவது தெரியுமா? தெரியாது என மட்கோனி, மூன்று முறை தலையசைத்தார். அந்த மனிதன் கையை வாயில் வைத்து, வெட்டுப்பட்ட இடத்தை உறிஞ்சினான்.

கோட்ஸ்ஸேவுக்கு அதில் வைத்திருந்தது நினைவேயில்லை. கார் உடைக்கப்பட்டு விட்டது என்று நீங்கள் சொன்னவுடன்தான் நினைவுக்கு வந்தது. இந்த மாதிரி பொருட்கள் காணாமல் போனால் அவருக்கு மிகவும் கோபம் வரும்.

மட்கோனி சிறிய கந்தல் துணியை அவன் கையில் கொடுத்தார்.

உங்கள் கையில் கண்ணாடி குத்தி விட்டதைப் பார்க்க ரொம்பவும் கஷ்டமாக இருக்கிறது. முன்பக்க கண்ணாடி உடைந்ததால், எங்கு பார்த்தாலும் கண்ணாடித் துண்டுகள் பரவிக் கிடக்கும்..

என்னைப் பற்றி இப்போது கவலைப்பட வேண்டியதில்லை. கோட்ஸ்ஸேவுக்கு சொந்தமான பொருளை யாரோ திருடி விட்டதுதான் இப்போது பிரச்னை.

மட்கோனி தலையைச் சொறிந்து கொண்டார்.

போலீஸினால் ஒரு உபயோகமும் இல்லை. இந்த மாதிரியான சமாசாரங்களை கண்டுபிடிக்கும் ஒருவரை எனக்குத் தெரியும்..

அப்படியா.. யாரது?



நம்பர் 1 பெண்கள் துப்பறியும் நிறுவனம் - Page 8 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Jul 18, 2014 12:40 am



ஒரு துப்பறியும் பெண்மணி. கலே மலை செல்லும் வழியில் ஒரு ஆபீஸ் வைத்திருக்கிறாள். நீங்கள் பார்த்திருப்பீர்களே..

இருக்கலாம். இல்லாமலும் இருக்கலாம்..

மட்கோனி புன்னகைத்தார்.

அவள் மிகவும் திறமையான பெண்மணி. அவளுக்கு நடக்கும் எல்லா விஷயங்களும் தெரியும். நான் கேட்டுக் கொண்டால், யார் இப்படி செய்திருப்பார்கள் என்பதை கண்டுடித்து விடுவாள். தொலைந்த பொருட்களைக் கூட சில சமயம் மீட்டுத் தருவாள். அது என்ன பொருள்?

பொருளா.. மிஸ்டர் சார்லி கோட்ஸ்ஸேவுக்கு சொந்தமான சிறிய பொருள்.

அப்படியா..

அந்த மனிதன் ரத்தத்தைத் துடைத்த துணியை விசிறி எறிந்தான்.

அப்படியானால், அந்தப் பெண்மணியைக் கேட்டு, பொருளை மீட்டுத் தருகிறீர்களா..? - அவன் எரிச்சலுடன் கேட்டான்.

கண்டிப்பாக. நான் இன்றே அவளுடன் பேசி விடுகிறேன். அவள் நிச்சயமாக ஏதாவது செய்வாள் என்று நான் நம்புகிறேன். கார் சரியாகி விட்டது. எப்போது வேண்டுமானாலும் காரை எடுத்துச் செல்லலாம் என்று கோட்ஸ்ஸேவிடம் கூறுங்கள். நான் கண்ணாடித் துண்டுகளை சுத்தப்படுத்தி விடுகிறேன்..

அப்படியே செய். கண்ணாடி குத்தினால் கோட்ஸ்ஸே சும்மா இருக்க மாட்டார்..

கோட்ஸ்ஸேவுக்கு விரலில் கண்ணாடி குத்தினால் பிடிக்காதோ.. - மனதுக்குள் மட்கோனி சிரித்துக் கொண்டார்.

நீ பயங்கரமான சின்ன புத்திக்காரன். உன் மாதிரியான நிறைய பேரை எனக்குத் தெரியும். நான் பள்ளியில் படிக்கும்போது இப்படித்தான் ஒருவன், விளையாட்டு மைதானத்தில் எல்லாரையும் வம்புக்கு இழுத்து, அடித்து, உதைத்து, விலையுயர்ந்த பொருட்களை நாசம் செய்து.. ஆசிரியர் பிரம்படி கொடுத்தபோதும், அழாமல் தைரியமாக இருப்பது போலக் காட்டிக் கொள்வான். அதே மாதிரிதான் இந்த கோட்ஸ்ஸேவும். கெட்ட நடவடிக்கையும், விலையுயர்ந்த காரும் வைத்திருந்தாலும் அவனும் சின்னத்தனமானவன்தான்.

இந்த மாதிரி ரமோட்ஸ்வேக்கு அபரிமிதமான சலுகை கொடுத்திருப்பதும் தவறுதான் என மனதுக்குள் உறுதிபட நினைத்தார் மட்கோனி. அவள்பாட்டுக்கு எதைச் சொன்னாலும் இவர் செய்வார் என்று எண்ணிக் கொண்டிருக்கிறாள். இவரும்தான் அவள் சொல்வதற்கெல்லாம் தலையை ஆட்டிக் கொண்டிருக்கிறார். எதுவும் அவள் இஷ்டப்படிதான் நடக்கிறது. ஏனெனில் இவர் எந்தவித எதிர்ப்பையும் காட்டுவதில்லை.

இதோடு போதும். நான் யார் என்று உடனே அவளுக்குப் புரிய வைக்கிறேன். இந்தத் துப்பறியும் வேலைக்கெல்லாம் ஒரு முடிவு கட்டி விடுகிறேன்.




நம்பர் 1 பெண்கள் துப்பறியும் நிறுவனம் - Page 8 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Jul 18, 2014 12:40 am


காரேஜை விட்டு, மிகவும் எரிச்சலுடனும் கோபத்துடனும், அவளிடம் எப்படி பேச வேண்டும் என்கிற ஒத்திகையுடனும் ரமோட்ஸ்வேயின் அலுவலகத்தை நோக்கிச் சென்றார் மட்கோனி.

ரமோட்ஸ்வே, நீ என்னை பொய் சொல்ல வைத்து விட்டாய். ஒரு கேலிக்குரிய - ஆபத்தான இக்கட்டில் என்னைச் சிக்க வைத்திருக்கிறாய். இது நமக்கு சம்பந்தமே இல்லாத சமாசாரம். என்னால் காரைத்தான் ரிப்பேர் செய்ய முடியும். பிறருடைய வாழ்க்கையை அல்ல. இந்தக் கடைசி வாக்கியம் அவருக்கு மிகவும் வலுவானதாகத் தோன்றியது. திரும்பத் திரும்ப அதை அனுபவித்தபடி சொல்லிப் பார்த்துக் கொண்டார். அவளுக்கும் அவருக்கும் இடையே உள்ள மிகப் பெரிய வேறுபாடே இதுதான். அவள், மனிதர்களை - அவர்களின் வாழ்க்கையைச் சீரமைக்கிறாள். இவரோ, காரை - அவற்றின் இயந்திரங்களைச் சரி செய்கிறார். தான் இதைக் கண்டிப்பாகச் சொல்லத்தான் வேண்டும்.. அதை அவள் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும். இதனால் தங்களுடைய நட்பு அழியாது என அவர் நம்பினார். அவரால் இந்தப் பொய், ஏமாற்று வேலைகளில் ஈடுபட முடியாது. இப்போது போலீஸிடம் மட்டுமில்லை.. மிகவும் அதிகார வெறி பிடித்த மனிதன் சம்பந்தப்பட்ட சிக்கலிலும் அவர் மாட்டிக் கொண்டு விட்டார்.

அவர் அவளை, அவளுடைய துப்பறியும் நிறுவன அலுவலக வாசலில் சந்தித்தார். தேநீர் கோப்பையில் உள்ள துகள்களை, தோட்டத்தில் அவள் சுத்தம் செய்து கொண்டிருந்தபோது, அவரது கார் அங்கு வந்து நின்றது.

என்ன.. எல்லாம் திட்டப்படி நடந்ததா?

ரமோட்ஸ்வே, நான் என்ன நினைக்கிறேன் என்றால்..

அவனே வந்தானா.. இல்லை அவனுடைய ஆட்கள் யாரையாவது அனுப்பியிருந்தானா..?

ஒரு ஆள்தான் வந்திருந்தான். இரு.. நான் சொல்வதைக் கேள்.. நீயோ மனித வாழ்க்கையை சரி செய்ய முயற்சிக்கிறாய். நானோ ஒரு சாதாரண..

நீங்கள், நான் அந்தப் பொருட்களை மீட்டுத் தருவேன் என்று கூறினீர்களா.. அவனுக்கு அதில் அக்கறை இருந்ததா?

நான் இயந்திரங்களைத்தான் சரி பார்ப்பேன்.. என்னால் முடியாது.. இங்கே பார்.. என் வாழ்க்கையில் நான் எப்போதுமே பொய் பேசியதில்லை. நான் சிறுவனாக இருந்தபோதுகூட பொய் பேச என் நாக்கு ஒத்துழைக்காது. என்னால் பொய் சொல்லவே முடியாது..

ரமோட்ஸ்வே, கடைசி தடவையாக தேநீர் குடுவையை தலைகீழாகக் கவிழ்த்துக் குலுக்கினாள். மிச்ச சொச்ச துகள்கள் வெளியேறின.

நீங்கள் மிகவும் சரியாக செய்திருக்கிறீர்கள். ஒரு நல்ல காரணம் என்றால், தாராளமாகப் பொய் சொல்லலாம். ஒரு அறியா சிறுவனைக் கொன்றது யார் என்பதைத் தெரிந்து கொள்வது அவசியமா இல்லையா? பொய் சொல்வது என்ன, கொலை செய்வதை விட பெரிய தவறா.. மட்கோனி, சொல்லுங்கள்..

கொலை மிகப் பெரிய குற்றம்தான். ஆனால்..

பார்த்தீர்களா.. நீங்கள் அது பற்றி சிந்திக்கவே இல்லை. இப்போது தெரிந்து விட்டதல்லவா?

அவள், அவரைப் பார்த்துப் புன்னகைத்தாள்.

உடனே மட்கோனியின் மனம் அப்படியே அவள் வசம் திரும்பியது.

நான் மிகவும் கொடுத்து வைத்தவன். இவள், என்னைப் பார்த்துச் சிரிக்கிறாள். இந்த உலகில் என்னிடம் அன்பு செலுத்த யாருமே இல்லை. ஆனால், இவள் என்னைப் பார்த்து அன்புடன் சிரிக்கிறாள். இவள் சொல்வது சரிதான். கொலை செய்வதென்பது ஒரு பொய் சொல்வதை விடவும் மிகப் பெரிய குற்றம்தான்..

ரமோட்ஸ்வே புன்னகை மாறாமல் அழைத்தாள்..

உள்ளே வாருங்கள். என் காரியதரிசி மகுட்சி சூடாக தேநீர் வைத்திருக்கிறாள். அதைக் குடித்தபடி அடுத்து என்ன செய்வது என்று திட்டமிடலாம்..




நம்பர் 1 பெண்கள் துப்பறியும் நிறுவனம் - Page 8 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Jul 18, 2014 12:41 am


----------------------------------------------------------------
ஈகரை தமிழ் களஞ்சியம் - www.eegarai.net
நம்பர் 1 பெண்கள் துப்பறியும் நிறுவனம்! - 19
----------------------------------------------------------------


சா ர்லி கோட்ஸ்ஸே, ரமோட்ஸ்வேயை உற்றுப் பார்த்தார். அவருக்கு பருமனான பெண்களிடம் மதிப்பு உண்டு. ஐந்து வருடங்களுக்கு முன்பு ஒரு குண்டுப் பெண்ணை மணந்து கொண்டவர்.

நீங்கள்தான் மட்கோனியிடமிருந்து வரும் பெண்ணா?

அவளுக்கு, அவர் கேள்வி கேட்ட விதம், குரல் எதுவும் பிடிக்கவில்லை. குரல், உப்புத்தாள் கொண்டு தேய்ப்பது போல கரகரவென்றிருந்தது. அது மட்டுமின்றி வார்த்தை சரியாகப் படவில்லை.

உனக்கு என் அதிகாரமும் அந்தஸ்தும் புரிகிறதுதானே.. அதோடு நிறுத்திக் கொள். என் தேவை என்னவோ, அதை மட்டும் செய் என்கிற தொனி அதில் இருந்தது.

மட்கோனி என் உதவியைக் கேட்டார். நான் ஒரு துப்பறிபவள்..

கோட்ஸ்ஸே, ஒரு ஏளனச் சிரிப்புடன் அவளை உற்றுப் பார்த்தார். நான், உன்னுடைய நிறுவனத்தை, காரில் போகும்போது பார்த்திருக்கிறேன். பெண்களுக்கான துப்பறியும் நிறுவனம் மாதிரி ஏதோ என்று எண்ணிக் கொண்டிருந்தேன்..

இது பெண்களுக்காக மட்டும் இல்லை. நாங்கள் பெண்களாக இருந்தாலும், ஆண்களுக்காகவும் வேலை செய்கிறோம்.. பட்டேல் கூட எங்களை கலந்தாலோசித் திருக்கிறார். அவருடைய சிரிப்பு இன்னும் விரிந்தது.

ஆண்களுக்குக் கூட நீங்கள் யோசனை கூறுவீர் களா?

ரமோட்ஸ்வே நிதானமாகப் பதிலளித்தாள்: சில சமயங்களில், சில விஷயங்களில் ஆண்கள் மிகவும் கர்வத்துடன் நடந்து கொள்வார்கள். இவள் என்ன சொல்வது.. நாம் என்ன கேட்பது என்பது போலிருப் பார்கள். அப்படிப்பட்டவர்களுக்கு நாங்கள் எதுவும் செய்ய மாட்டோம்.

அவர், கண்களை இடுக்கிக் கொண்டு, அவளைப் பார்த்தார். அவளுடைய பேச்சு, சந்தேகமாகவும், பல பொருள்படும்படியும் இருந்தது.

அவள், கர்வம் பிடித்தவன் என்கிறாளா.. அல்லது பிற ஆண்களைப் பற்றி கூறுகிறாளா?

எதுவும் புரியவில்லை. ஆனால், அப்படி நிறைய பேர் இருக்கிறார்களே.. எது எப்படியானாலும் சரி. என்னுடைய காரில் இருந்து பொருட்கள் களவு போயிருக்கிறது. நீங்கள் அதை யார் எடுத்தார்கள் என்று கண்டுபிடித்து விட்டீர் கள்.. என்றார்.

ரமோட்ஸ்வே ஆமோதித்து, தலையசைத்தாள்.

உங்கள் காரை உடைத்தது யார் என்று கண்டுபிடித்து விட்டேன். சில பையன்கள்தான் அதைச் செய்திருக் கிறார்கள்.



நம்பர் 1 பெண்கள் துப்பறியும் நிறுவனம் - Page 8 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Jul 18, 2014 12:41 am



கோட்ஸ்ஸேவுக்கு கோபம் வந்தது.. அவர்கள் யார் என்று சொல்.. யார்?

நான் அதைச் சொல்ல முடியாது.. என்றாள் ரமோட்ஸ்வே.

நான் அவர்களை அடித்து, கொன்று போட வேண்டும். சொல்..

ரமோட்ஸ்வே பயப்படவில்லை. கோட்ஸ்ஸேவை நேராகப் பார்த்தாள். சில நிமிடங்கள் எதுவும் பேசவில்லை. பிறகு அவள் கூறினாள்..

அவர்கள் எடுத்த பொருளை திருப்பிக் கொடுத்து விட்டால், அவர்களைக் காட்டிக் கொடுக்க மாட்டேன் என்று ஒப்பந்தம். அது எங்களுடைய ஒப்பந்தம்..

பேசும்போதே அவளுடைய கண்கள், அந்த அறையைத் துழாவியது..

கடைகள் நிரம்பிய அங்காடிக்குப் பின்புறம் ஒரு குறுகிய சந்தில் கோட்ஸ்ஸே என்டர்பிரைசஸ் என்கிற பெரிய நீல நிறப் பலகையுடன் அமைந்திருந்தது அந்த அறை. உள்ளே, மிகவும் சாதாரண மேஜை, நாற்காலிகள் தான் காணப்பட்டன. அங்கே சுவரில் தொங்கும் புகைப் படங்கள் மட்டும் இல்லையென்றால், ஒரு பெரிய பணக்காரருடைய அலுவலக அறை என்று யாரும் நம்ப மாட்டார்கள். ஆனால், அந்தப் புகைப்படங்கள் அவரது பெருமையை பறைசாற்றின. கோட்ஸ்ஸே, பஸாத்தோவின் அரசருடன் இன்னும் பல பிரபலங்களுடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள்.. இப்படி அவரது நாட்டைக் கடந்தும் அவர் பெயர் எத்தனை தூரம் பரவியிருந்தது என்பது புரிந்தது.

நீ என் சார்பில் அவர்களுக்கு வாக்கு கொடுத்தாயா..

ஆமாம். அப்படித்தான் செய்தேன். அந்த ஒரு வழியில் தான் பொருட்கள் திரும்பக் கிடைக்கும் என்று செய்தேன்..

கோட்ஸ்ஸே ஒரு நிமிடம் யோசிப்பது போலத் தோற்றமளித்தார். ரமோட்ஸ்வே, ஒரு பெரிய தொகைக்கு கோட்ஸ்ஸே காசோலை கொடுப்பது போன்ற புகைப் படத்தை பார்த்தபடி இருந்தாள். புகைப்படத்தில் எல்லாரும் மலர்ந்த முகத்துடன் இருந்தனர். ஏதோ ஒரு நல்ல காரியத்துக்கு கொடுக்கப்பட்ட மிகப் பெரிய தொகை என்கிற விளம்பரங்கள் காணப்பட்டன.

நல்லது. அவ்வளவுதான் செய்ய முடியும் என்று நினைக்கிறேன். அந்தப் பொருள் எங்கே?

ரமோட்ஸ்வே, தன் கைப்பையிலிருந்த அந்த தோல் பையை எடுத்தாள்.

இதுதான் அவர்கள் கொடுத்தது..

அவள், மேஜை மீது வைத்ததை கோட்ஸ்ஸே கையில் எடுத்துக் கொண்டார்.

இது என்னுடையது இல்லை. என்னுடைய ஆட்களில் ஒருவனுக்கு சொந்தமானது. இதை, அவனுக்காகத்தான் பத்திரப்படுத்தி வந்தேன். இது என்ன என்று கூட எனக்குத் தெரியாது..

முட்டி.. மந்திரவாதி மருத்துவன் கொடுத்தது தானே..

இறுகிய பார்வையுடன் கோட்ஸ்ஸே கேட்டார்.

மூட நம்பிக்கையுள்ளவர்களுக்கு ஏதோ வசியமருந்து மாதிரியா?

ரமோட்ஸ்வே தலையைக் குலுக்கிக் கொண்டாள்.



நம்பர் 1 பெண்கள் துப்பறியும் நிறுவனம் - Page 8 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Jul 18, 2014 12:41 am



நான் அப்படி நினைக்கவில்லை. அது ரொம்பவும் வீரியமான மருந்து, மிகவும் விலையுள்ளதாக இருக்கும்..

வீரியமானதா.. கோட்ஸ்ஸேவின் தலை அசையவில்லை. அதை ரமோட்ஸ்வே கவனித்துக் கொண்டாள். அவள் உதடுகள் மட்டும் வார்த்தைகளை மெதுவாக வெளியிட்டன.

ஆமாம். அது மிகவும் உபயோகமுள்ளது. எனக்கு கூட அது மாதிரி கிடைத்தால் உபயோகமாக இருக்கும்..

கோட்ஸ்ஸே, ரமோட்ஸ்வேயைக் கண்களால் அளந்தார்.

ஒருவேளை உங்களுக்கு நான் உதவக் கூடும்..

ரமோட்ஸ்வே, உடனே யோசித்து, நீங்கள் எனக்கு உதவி செய்ய முடிந்தால் நல்லது. நானும் ஏதேனும் செய்ய முடியும்.. என்றாள்.

கோட்ஸ்ஸே, மேஜை மீதிருந்த சிகரெட்டை எடுத்து, பற்ற வைத்தபடியே அவளைப் பார்த்தார்.

எந்த விதத்தில் நீ எனக்கு உதவ முடியும்? நான், தனி ஆளாக இருக்கிறேன் என்று நினைக்கிறாயா?

நீங்கள் தனி ஆசாமி இல்லை, உங்களுக்கு நிறைய பெண் சிநேகிதிகள் உண்டு என்பதும் எனக்குத் தெரியும். இன்னொரு பெண் உங்களுக்குத் தேவையில்லை..

அதை நான்தானே தீர்மானிக்க முடியும்!

இல்லை. உங்களுக்கு பல விஷயங்களைத் தெரிந்து கொள்ளப் பிடிக்கும். அப்படி தெரிந்தால்தான் நீங்கள், உங்களுடைய அதிகாரத்தைச் செலுத்த முடியும். நீங்கள் இன்னும் உங்களை வலுப்படுத்த முட்டி யையும் வைத்திருக்கிறீர்கள்...அப்படித்தானே..

அவர், உதட்டிலிருந்த சிக ரெட்டை எடுத்து பெரிய கண்ணாடி சாம்பல் தட்டில் வைத்தார். இப் பொழுது பேசினார். வார்த்தை களைத் தெளிவாக உச்சரித்துப் பேசவும் முடியும் இந்த மனிதரால் என்பது போல..

மாந்திரீகத்தைப் பற்றி பேசுபவர்கள், கண்டிப்பாகப் பின்னால் வருத்தப்படுவார்கள்.. நான் ஒன்றும், உங்களை குற்றம் கூறவில்லையே.. நானே அதை உபயோகிக்கிறேன் என்று சொல்லவில்லையா.. நான் சொல்வது என்னவென்றால், இந்த ஊரில் என்னென்ன நடக்கிறது என்பது உங்களுக்குத் தெரிந்திருக்க வேண்டும். இல்லையா? அதுதானே உங்கள் பலம்? உங்கள் காதுகளை மெழுகினால் அடைத்துக் கொண்டால், பல விஷயங்களை நீங்கள் தவற விட்டு விடுவீர்களே..

கோட்ஸ்ஸே, திரும்பவும் சிகரெட்டை எடுத்து ஊதினார். உன்னால் பல விஷயங்களைக் கூற முடியும். இல்லையா?

ரமோட்ஸ்வே ஆமோதித்தாள்.

என் தொழிலில் நான் பல சுவாரஸ்யமான தகவல்களை அறிந்து கொள்ள முடிகிறது. அங்காடியில் உங்களுடைய கடைக்கு அருகில் புதிய கட்டடம் கட்டுபவனைப் பற்றி உங்களுக்குத் தெரியுமா? காபரோனுக்கு வருவதற்கு முன் அவன் என்னவெல்லாம் செய்தான் என்று தெரியுமா? அது பற்றி மற்றவர்கள் அறிவதை அவன் விரும்ப மாட்டான்..

கோட்ஸ்ஸே, தன் பல்லிடுக்கில் மாட்டியிருந்த சிகரெட் துணுக்கை எடுத்தார்.



நம்பர் 1 பெண்கள் துப்பறியும் நிறுவனம் - Page 8 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Jul 18, 2014 12:42 am



நீ மிகவும் சுவாரஸ்யமான பெண்மணிதான். உன்னை என்னால் நன்றாகப் புரிந்து கொள்ள முடிகிறது. அந்த மந்திரவாதியின் பெயரைக் கூறுகிறேன். நீ இந்த உபயோகமான தகவலைக் கொடுத்தாய் பார்.. அதற்காக.. சரியா?

ரமோட்ஸ்வே தலையசைத்தாள்.

இது மிகவும் நல்லது. எனக்கு ஏதாவது புது தகவல்கள் கிடைக்கும். அது, உங்களுக்கும் உபயோகமாக இருக்கும் பட்சத்தில், உங்களுக்கும் சொல்கிறேன்..

நீ மிகவும் நல்லவள்.

கோட்ஸ்ஸே ஒரு காகிதத்தை எடுத்தார்.

இந்த மாந்திரீகன் ஒரு காட்டில் மோஸோ போலே அருகே வசிக்கிறான். அவன் இருப்பிடத்தைக் கண்டு பிடிப்பது மிகவும் கஷ்டம். நான் அவன் இடத்துக்குப் போகும் வழியை வரைந்து தருகிறேன். அவன், மிகவும் அதிகமாகப் பணம் வாங்குபவன். ஆனால், கோட்ஸ்ஸே வின் சிநேகிதி என்று நீ சொன்னால் இருபது சதவிகிதம் சலுகை காட்டிக் குறைப்பான். பரவாயில்லையா?

பா றைகளுக்கு இடையே வளைந்து செல்லும் ஒரு புழுதி படிந்த பாதை. கண்ணுக்கு எட்டிய தூரம் வரை பகல் வெயிலில் தகிக்கும் வானம். கோட்ஸ்ஸே வரைந்து காட்டிய வரைபட வழியில் ரமோட்ஸ்வே தன்னுடைய காரை எங்கே பாறைகளில் இடிபடுமோ என்கிற பயத்துடன் ஓட்டினாள்.

இது ஒரு வறண்ட பூமி. கால்நடைகளோ, ஆடுகளோ இல்லாமல் வெறும் முட்புதர்களும் கற்றாழைச் செடிகளும் நிறைந்த உயிரில்லாத பூமி. கிராமத்திலிருந்தும் நகரத்திலிருந்தும் வெகு தொலைவில் இருந்து இங்கு வந்து யார் இருப்பார்கள் என்பதே விடை காண முடியாத கேள்வி.

அவளது பார்வையில் மரங்களின் பின்னே மறைந்து கிடந்த அந்த வீடு தெரிந்தது. மிகப் பழமையான வீடு. மண்ணால் பூசப்பட்ட சுவர்கள். கண்ணாடியில்லாத ஜன்னல்கள். முழங்கால் அளவு சுவரால் சுற்றிலும் கட்டப்பட்ட முற்றம். இதுதான் அந்த வீடு. முன்பு குடியிருந்தவர்கள் சுவர்களில் பல சித்திரங்கள் தீட்டியிருந்தனர். அவையெல்லாம் உரிந்து வெளிறிக் கிடந்தன.

காரை நிறுத்தி விட்டு, மூச்சை உள்ளிழுத்துக் கொண்டாள் அவள். ஏமாற்றுக்காரர்கள், பொறாமை பிடித்த மனைவிகள், கோட்ஸ்ஸே போன்றவர்கள் என பலரையும் அவள் சந்தித்திருக்கிறாள். ஆனால், இந்த சந்திப்பு மிக வித்தியாசமாக இருக்கும் என எதிர் பார்த்தாள். இது, பாவமே உருவான ஒன்று.. இருளடைந்த ஒன்று.. அவமானச் சின்னம்.. இங்குள்ள மனிதன், மாயமந்திரம் என்று சொல்லி கொலை செய்பவன்.

கார் கதவைத் திறந்து கொண்டு வெளியே இறங்கினாள். சூரியனின் உஷ்ணம் மிகுந்த கதிர்கள் அவள் மேனியைத் தீய்த்தன.

அந்த இடம் மேற்குப்புறத்தில் கலஹாரி பாலைவனத்தின் மிக அருகில் இருந்தது. அவளுடைய தயக்கம் அதிகரித்தது. இது, அவள் வளர்ந்த அன்பான ஆப்பிரிக்கா இல்லை. இரக்கமற்ற, நீரில்லாது வறண்ட ஆப்பிரிக்கா.

அவள் அந்த வீட்டை நோக்கி நடக்கும்போது, யாரோ அவளைப் பார்த்துக் கொண்டிருப்பது போன்ற உணர்வு. எந்த சலனமும் இல்லா விட்டாலும், வீட்டின் உட்புறமிருந்து கண்கள் அவளைப் பார்ப்பது போல் உணர்ந்தாள்.

வீட்டு வாசலில் அவர்கள் வழக்கப்படி நின்று கூப்பிட்டாள்.

எனக்கு வெயிலின் சூடு தாங்கவில்லை. சிறிது தண்ணீர் வேண்டும்..

வீட்டின் உள்ளிருந்து எந்தவொரு பதிலும் வரவில்லை. ஆனால், இடதுபுறமிருந்த புதர்கள் சலசலத்தது.. குற்றவுணர்வுடன் திரும்பினாள். ஒரு பெரிய வண்டு, தனது கூர்மையான மூக்கினால், ஏற்கனவே வெயிலில் சுருண்டு இறந்து விட்ட பூச்சியை புரட்டிக் கொண்டிருந்தது.

சின்னச் சின்ன விபத்துக்கள்.. சின்னச் சின்ன வெற்றிகள்.. மனிதர்கள் மாதிரிதான் இந்த வண்டுகள்..

யார்..?



நம்பர் 1 பெண்கள் துப்பறியும் நிறுவனம் - Page 8 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Jul 18, 2014 12:42 am



சட்டெனத் திரும்பினாள் ரமோட்ஸ்வே. ஒரு பெண்மணி தன் கையைத் துடைத்தவாறு, வீட்டு வாசலில் நின்றாள்.

சுவரின் இடைவெளி வழியே நுழைந்த ரமோட்ஸ்வே, நான் ரமோட்ஸ்வே.. வணக்கம் என்றாள்.

அந்தப் பெண்மணி தலையசைத்தாள்.

நான் நோட்ஷி..

ரமோட்ஸ்வே, அந்தப் பெண்மணியை நன்கு பார்த்தாள். வயது ஐம்பதுக்கு மேல் இருக்கும். நீண்ட அங்கி போன்ற பாவாடையை அவள் அணிந்திருந் தாள்.

நான் உன் கணவரை சந்திக்க வந்திருக்கிறேன்.. அவரிடம் ஒன்று கேட்க வேண்டும்.

அந்தப் பெண், இருட்டிலிருந்து வெளிச்சத்துக்கு வந்து, ரமோட்ஸ்வேயை, கூர்மையாக சங்கடத்தை உண்டாக்கும் விதமாகப் பார்த்தாள்.

நீ எதையாவது என் கணவரிடம் இருந்து வாங்கு வதற்கு வந்திருக்கிறாயா?

அதை ஆமோதித்த ரமோட்ஸ்வே, அவர் மிக நல்ல மருத்துவர் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். எனக்கு ஒரு பெண்ணுடன் தகராறு. அவள், என் கணவரை, தன் பிடியில் வைத்துக் கொண்டு இருக்கிறாள். அதை நான் நிறுத்த விரும்புகிறேன்.. என்றாள்.

அந்தப் பெண்மணி புன்னகைத்தாள்.

அவர் உனக்கு உதவ முடியும். அவரிடம் ஏதேனும் இருக்கும். ஆனால், அவர் இங்கு இல்லை. லோபட்ஸ்வேக்குப் போயிருக்கிறார். சனிக்கிழமை வரை அங்கேதான் இருப்பார். அதற்கு அப்புறம் நீ எப்பொழுது வேண்டுமானாலும் வந்து பார்க்கலாம்..

ரமோட்ஸ்வே பெருமூச்சு விட்டாள்.

ரொம்ப தொலைவிலிருந்து வந்திருக்கிறேன். எனக்கு ஒரே தாகமாக இருக்கிறது. கொஞ்சம் தண்ணீர் தருகிறாயா சகோதரி?

உள்ளே வா.. உட்கார்ந்து தண்ணீர் குடிக்கலாம்.

அது மிகச் சிறிய அறை. ஒரு ஓட்டை மேஜையும் இரண்டு நாற்காலிகளும் இருந்தன. தானியம் சேமித்து வைக்கும் சால் ஒன்றும் நசுங்கிய டிரங்கு பெட்டி ஒன்றும் இருந்தன.

ரமோட்ஸ்வே ஒரு நாற்காலியில் உட்கார்ந்தாள். பெரிய வெள்ளை நிறப் பானையில் அந்தப் பெண்மணி தண்ணீர் கொண்டு வந்து கொடுத்தாள். சற்று உப்பு கரித்தது போலிருந்தாலும் ரமோட்ஸ்வே நன்றியுடன் அதைக் குடித்தாள்.

பானையைக் கீழே வைத்து விட்டு, அந்தப் பெண்ணைப் பார்த்தாள்.

நான் ஒன்றை வாங்குவதற்குத்தான் வந்திருக்கிறேன். ஆனால், உன்னை எச்சரிக்கை செய்வது அவசியம் என்று நினைக்கிறேன்.. என்றாள்.

அந்தப் பெண்மணி, அப்படியே இன்னொரு நாற்காலியில் உட்கார்ந்தாள்.




நம்பர் 1 பெண்கள் துப்பறியும் நிறுவனம் - Page 8 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Jul 18, 2014 12:42 am

----------------------------------------------------------------
ஈகரை தமிழ் களஞ்சியம் - www.eegarai.net
நம்பர் 1 பெண்கள் துப்பறியும் நிறுவனம்! - 20
----------------------------------------------------------------


''எச்சரிக்கை செய்ய வந்தாயா?'' என்ற மாந்திரீகனுடைய மனைவி, ரமோட்ஸ்வேயை விறைத்துப் பார்த்தாள்.

''ஆமாம். நான் ஒரு டைப்பிஸ்ட். அப்படி என்றால் என்ன என்று தெரியுமா?''

'தெரியும்' என்பது போல, அந்தப் பெண்மணி தலையசைத்தாள்.

''நான் போலீஸுக்கு வேலை செய்கிறேன். உன் கணவரைப் பற்றிய விவரங்களை நான் டைப் செய்தேன். காட்ஸானாவிலிருந்து பையனை அழைத்துப் போய் அவன் கொன்று விட்டான் என்பது போலீஸ§க்குத் தெரியும். முட்டி மந்திரவாதிக்காக அவன்தான் அந்தப் பையனைக் கடத்திச் சென்றான் என்பதும் போலீஸ் இலாகாவுக்குத் தெரியும். அவர்கள் சீக்கிரமே உன் புருஷனை கைது செய்து, தூக்கில் தொங்க விடப் போகிறார்கள். நீயும் அதில் சம்பந்தப்பட்டிருக்கிறாய் என அவர்கள் நினைக்கிறார்கள். ஆனால், பெண்களைத் தூக்கில் போடுவதை நான் விரும்பவில்லை. நான் எதற்கு இங்கே வந்தேன் என்றால், உன்னை என் கையோடு கூட்டிப் போய், போலீஸிடம் நீ எல்லா உண்மைகளையும் சொல்ல முன் வந்தால்.. உன்னை விட்டு விடுவார்கள். இந்த அபாண்டத்திலிருந்து உன்னை மீட்கலாம். உண்மையை ஒப்புக் கொண்டால் அவர்கள் உன்னை நம்புவார்கள். இல்லையென்றால், அநேகமாக நீ அடுத்த மாதத்துக்குள் தூக்கில் தொங்க நேரலாம். போலீஸ§க்கு ஆண், பெண் என்கிற பாகுபாடெல்லாம் கிடையாது.''

ரமோட்ஸ்வே இப்படிக் கூறி விட்டு நிறுத்தினாள். அந்தப் பெண்மணி, கையிலிருந்த துணியை நழுவ விட்டு, ரமோட்ஸ் வேயையே பயத்துடன், வைத்த கண் வாங்காமல் பார்த்தாள்.

ரமோட்ஸ்வேக்கு, பயப்படுபவர்களின் வாசனை தெரியும். இப்போது அந்த அறை முழுவதும் பயத்தின் வாடை நிறைந்திருந்தது.

''உனக்கு நான் சொல்வது புரிந்ததா?''

''நான் அந்தப் பையனைக் கொல்லவில்லை'' - அந்த மந்திரவாதியின் மனைவி, பீதியுடன் முனகினாள்.

''எனக்கு நன்றாகத் தெரியும்.. பெண்கள் இவ்வாறு செய்ய மாட்டார்கள் என்று. ஆனால், போலீஸ§க்கு அது பற்றி கவலையில்லை. அரசாங்கத்திடம் உனக்கு எதிரான ஆதாரங்கள் இருக்கின்றன. உன்னையும் சேர்த்துதான் தூக்கில் போடுவார்கள். முதலில் உன் கணவன்.. அடுத்தது நீ! இந்த மாயமந்திரங்கள் எல்லாம் போலீஸ§க்கோ, அரசாங்கத்துக்கோ பிடிக்காது. அது அவமானப்பட வேண்டிய ஒன்று என அவர்கள் நினைக்கிறார்கள். இந்தக் காலத்துக்கு ஏற்றதில்லை என்று கருதுகிறார்கள்..''

''அந்தப் பையன் இறக்கவில்லை. ஆடு, மாடுகளை வைத்திருக்கும் இடத்தில் அவன் வேலை செய்கிறான். அவன் உயிருடன்தான் இருக்கிறான்..''

அவ்வளவுதான்.. ரமோட்ஸ்வே, அந்தப் பெண்மணியையும் காரில் ஏற்றிக் கொண்டு, கார் கதவை அறைந்து சாத்தினாள். காரைச் சுற்றி வந்து, டிரைவிங் ஸீட்டில் ஏறி உட்கார்ந்தாள். சூரிய வெப்பம், உடை வழியே ஊடுருவிச் சென்று தகித்தெடுத்தது. ஆனால், அதையெல்லாம் இப்போது அவள் லட்சியம் செய்யவில்லை. அந்தப் பெண் சொன்னது போல, சுமார் நான்கு மணி நேரம் பயணம் மேற்கொள்ள வேண்டும். இப்போது மதியம் ஒரு மணி. இதே வேகத்தில் போனால் மாலை ஐந்து மணிக்குள் அங்கு சென்று விடலாம். திரும்பி வருவதற்குள் இருட்டி விட்டால், வண்டியிலேயே தூங்க வேண்டியதுதான். அந்தப் பையனை எப்படியாவது காப்பாற்றி விட வேண்டும். அதுதான் இப்போது முக்கியம்.

அவர்கள் பயணம் மௌனமாக கடந்தது. அந்தப் பெண்மணி ஏதோ பேச முயற்சித்தபோது, ரமோட்ஸ்வே அதைக் கண்டுகொள்ளவில்லை. அவளுக்கு, அந்தப் பெண்மணியுடன் முகம் கொடுத்துப் பேசப் பிடிக்கவில்லை.

''நீ நல்ல பெண் இல்லை. நான் உன்னுடன் பேச இவ்வளவு முயற்சித்தும், நீ என்னை அலட்சியப் படுத்துகிறாய். உனக்கு, என்னைவிடவும் நீ உயர்ந்தவள் என்கிற நினைப்பு.. அப்படித்தானே?''

ரமோட்ஸ்வே, அரை வட்டமாகக் கழுத்தைத் திருப்பி, அவளைப் பார்த்தாள்.

Sponsored content

PostSponsored content



Page 8 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக