ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Today at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நம்பர் 1 பெண்கள் துப்பறியும் நிறுவனம்

3 posters

Page 7 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

Go down

நம்பர் 1 பெண்கள் துப்பறியும் நிறுவனம் - Page 7 Empty நம்பர் 1 பெண்கள் துப்பறியும் நிறுவனம்

Post by சிவா Fri Jul 18, 2014 12:12 am

First topic message reminder :

நம்பர் 1 பெண்கள் துப்பறியும் நிறுவனம் - Page 7 QzKZDftkRMOnYnAhqgg5+p19
நம்பர் 1 பெண்கள் துப்பறியும் நிறுவனம் - Page 7 SdpXBTNEQ3iYZ9MZ0CzE+image001

மண்ணால் வேறுபட்டிருந்தாலும் மனத்தால் உலகெங்கும் பெண்களின் துன்பங்களும் தைரியங்களும் ஒன்றேதான் என்பதற்கு அழுத்தமான ஆதாரம் நம்பர் 1 லேடீஸ் டிடெக்டிவ் ஏஜென்சி என்ற ஆங்கில நாவல். அலெக்ஸாண்டர் மெக்கால் ஸ்மித் எழுதியிருக்கும் இந்த நாவலின் நாயகி - எம்மா ரமோட்ஸ்வே! இவள், ஒவ்வொரு பெண்ணுக்குள்ளும் இருக்கிற சாதனைத் துடிப்பின் பிம்பம்.

எம்மா ரமோட்ஸ்வே பிறந்து, வளர்ந்து, வாழ்வதெல்லாமே ஆப்பிரிக்கக் கண்டத்தின் சின்னஞ்சிறு நாடான போட்ஸ்வானா மண்ணில்.

நிறத்தாலும் மொழியாலும் உருவ அமைப்பாலும் வேறுபட்டிருந்தாலும்கூட, போட்ஸ்வானா மக்கள் கிட்டத்தட்ட நம் கலாசாரத்தை அப்படியே நினைவுறுத்துகிறார்கள். மகளுக்கு சீதனமாகத் தர மாடுகளை வளர்க்கும் தந்தை, முழுக்க நம்பியவன் கைவிடும்போது ஏமாற்றத்தில் துடிக்கிற மகள், தொலைந்துபோன மகனை எண்ணி தவித்து நிற்கும் பெற்றோர்.. என்று ஒவ்வொரு பாத்திரத்தின் உள்ளேயும் ஊறுகிற உணர்வுகள், நம் கலாசாரத்தையும் வாழ்க்கைத் துடிப்பையும் அப்படியே நினைவூட்டுகின்றன.

துன்பங்கள் ஆயிரம் வந்தாலும், தைரியத்தோடு மட்டுமல்ல.. சின்னதொரு நகைச்சுவை உணர்வோடும் அவற்றை எதிர்கொண்டு தூளாக்க வேண்டும் என்பதில், எம்மா ரமோட்ஸ்வேக்கு நிகர் அவளேதான்!

ரமோட்ஸ்வே பயணிக்கிற பாதையில் வரும் அப்பாவிகள் நம்மை கண்கலங்க வைக்கிறார்கள். வினோத வில்லன்கள் நடுங்க வைக்கிறார்கள். கொடுமைக்காரர்கள் கொதிக்க வைக்கிறார்கள்.

தனியாக ஒரு தைரியப் பயணத்தைத் தொடங்குகிறாள் ரமோட்ஸ்வே. துணைக்கு நாமும் அவளுடன் கிளம்புவோம்..

எ ம்மா ரமோட்ஸ்வே ஆப்பிரிக்காவின் போட்ஸ்வானா நாட்டின் அழகான கலே மலை யடிவாரத்தில் சொந்தமாக ஒரு வீடு வைத்திருந்தாள். அதுவே தான் அவளது துப்பறியும் நிறுவனமும்.

நிறுவனம் என்ன பெரிய நிறுவனம், ஒரு சின்ன வெள்ளை நிற கார், இரண்டு மேஜை, நாற்காலிகள், ஒரு டெலிபோன். ஒரு பழைய மாடல் டைப் ரைட்டர்.. இதுதான் அந்த நிறுவனத்தின் மொத்த ஆஸ்தியே! போட்ஸ்வானா வின் ஒரேயரு துப்பறியும் நிபுணியும் ரமோட்ஸ்வேதான்.

இந்த மலையடிவாரத்தின் தேநீர் பார்க்க சிவப்பாகவும், நல்ல மணமாகவும் இருக்கும். இதைக் காய்ச்ச ஒரு கெட்டிலும், மூன்று கோப்பைகளும்.. ஒன்று அவளுக்கு. இன்னொன்று அவளுடைய காரியதரிசி எம்மா*மகுட்ஸிக்கு, மூன்றாவது அவளைத் தேடிவரும் வாடிக்கையாளருக்கு.

தனிப்பட்ட டிடெக்டிவ் ஏஜென்சிக்கு இதை விட, வேறு என்ன வேண்டும்? இதுபோன்ற வேலைகளுக்கு மூலதனமே புத்திக்கூர்மையும், உள்ளுணர்வும்தான். எம்மாவுக்கு இவை இரண்டும் தேவைக்கு அதிகமாகவே இருந்தது. இவைதான் அவளை இந்தத் துப்பறியும் தொழிலைத் தொடங்கச் செய்தது.

அவள், இதை விடவும் பெரிய நாட்டில்.. பெரிய நகரத்தில் போய், இதே தொழிலை ஆரம்பித்திருக்கலாம். பெரிய நகரங்களில் வாழும் மனிதர்களிடம் பணமும் அதிகம், பிரச்னைகளும் அதிகம்.. அதற்கேற்ற ஊதியமும் நிறையவே கிடைக்குமாயிருக்கும்.

ஆனால் அவளோ, நான் ஒரு ஆப்பிரிக்க பிரஜை என்பதில் வெட்கப்படவே இல்லை. சோதனைகள் நிறைந்த இந்த நாட்டையும், கடவுள் படைத்த எல்லா மக்களையும் மிகவும் நேசிக்கிறேன். முக்கியமாக இங்கு வசிப்பவர்கள் என் சகோதர, சகோதரிகள். அவர்களுக்கு உதவுவது என் கடமை. அவர்களது பிரச்னைகளை தீர்ப்பதுதான் என் வேலை என்பாள்.

ரமோட்ஸ்வே, தன் அப்பா விட்டுச் சென்ற ஆடு மாடுகளை விற்று, அதில் கிடைத்த பணத்தில்தான் இந்த நிறுவனத்தைத் தொடங்கினாள்.

ரமோட்ஸ்வேவின் தந்தை மிக மோசமான உடல் உபாதைகளுக்கு ஆட்பட்டிருந்ததால், அவரால் எந்த முடிவும் எடுக்க முடியவில்லை. உனக்கென்று ஒரு தொழிலை அமைத்துக் கொள் ரமோட்ஸ்வே. இப்பொழுது ஆடு, மாடுகளுக்கு நல்ல விலை கிடைக்கும். விற்ற பணத்தில் ஒரு கசாப்பு கடை அல்லது பாட்டில் ஸ்டோர், எது உனக்கு இஷ்டமோ அது.. அப்பா மரணப் படுக்கையில் இதைச் சொல்ல, ரமோட்ஸ்வே உருகிப் போனாள்.

உயிருக்கு உயிரான அப்பா, புழுதி நிறைந்த சுரங்கத்தில் வாழ்நாள் எல்லாம் பாடுபட்டு, தன் மகளுக்கு ஒரு நல்ல வாழ்க்கையை அமைக்க உழைத்த மனிதர். அவரது கரங்களைப் பிடித்துக் கொண்டு, கண்ணீர் மல்க அவரைப் பார்த்தாள் ரமோட்ஸ்வே. துக்கத்தில் பேச்சு வரவில்லை. ஆனாலும் திக்கித் திணறி தன் எண்ணத்தை வெளிப்படுத்தினாள்..

அப்பா.. நான் ஒரு டிடெக்டிவ் ஏஜென்சி ஆரம்பிக்கப் போகிறேன். போட்ஸ்வானாவின் மிகச் சிறந்த நிறுவனமாக அது இருக்கும்.

அதைக் கேட்ட அவளின் தந்தை, மிகுந்த சிரமத்துடன் விழிகளை விரித்து அவளைப் பார்த்தார். குழறியபடி பேச முயற்சித்தார்.

ஆனால்.. ஆனால்..

ஆனால், அவர் எதையும் சொல்வதற்கு முன்பே இறந்து போய்விட்டார். எம்மா ரமோட்ஸ்வே, அவரது மார்பில் முகத்தைப் புதைத்தபடி விசும்பினாள். அவரது பாசத்தையும், கௌரவமான வாழ்க்கையையும், தனக்காக அவர் பட்ட பாடுகளையும் இப்பொழுது நினைத்தாலும் மனம் கனத்துப் போகும் ரமோட்ஸ்வேக்கு.

இந்த வாழ்க்கை அவர் கொடுத்தது. அப்பாவை நினைத்தால் மட்டுமே துயரம் பொங்குமே தவிர, தான் கடந்து வந்த கரடுமுரடான வாழ்க்கையை நினைத்து ஒருபோதும் அவள் சலித்துக் கொண்டதே இல்லை.

போராட்டமும், காதலும், கசப்பும் நிறைந்ததுதான் வாழ்க்கை.. என்றாலும் இதையே நினைத்து மூலையில் உட்கார்ந்திருப்பது ஒரு டிடெக்டிவ்வுக்கு அழகில்லை.

நம்பர் ஒன் பெண்கள் துப்பறியும் நிறுவனம்! ரகசியமான தகவல்கள், விசாரிப்புகள் எல்லோருக்கும் திருப்தி தரும் முறையில் நேரடி மேற்பார்வையில் சேகரித்துத் தரப்படும் வர்ணம் தீட்டப்பட்ட இப்படி ஒரு விளம்பரப் பலகையை தனது அலுவலகத்தின் முன்பும், தன் உதட்டில் மெல்லிய முறுவலையும் ஒரு சேர மாட்டினாள் ரமோட்ஸ்வே.

அவளது துப்பறியும் நிறுவனம், பலருக்கும் வியப்பை அளித்தது. இருக்காதா பின்னே.. ஒரு பெண் துப்பறி கிறாளாமே!

ரேடியோவில் அவளது பேட்டி வேறு வந்தது. போதாக்குறைக்கு தினசரி ஒன்றிலும், நாட்டின் ஒரேயரு பெண் டிடெக்டிவ் ஏஜென்ட் என்கிற செய்தி வெளியாகி இருந்தது.

ரமோட்ஸ்வே இந்தச் செய்தியை கத்தரித்து, நகலெடுத்து, தன் ஆபீசின் பார்வையான இடத்தில் ஒரு நோட்டீஸ் போர்டு மாட்டி, அதில் ஒட்டி வைத்தாள்.எந்தவொரு சிறு விஷயத்தையும் அலட்சியப்படுத்துவதில்லை அவள்.

ஆ ரம்ப நாளில், தனது வாடிக்கையாளராக வந்த ஹேப்பி பபெட்ஸியை அத்தனை சுலபத்தில் மறக்க முடியுமா? பாவம்.. என்றைக்கோ காணாமல் போன தகப்பன் திரும்பி வந்து, மறுபடியும் காணாமல் போய்..

எனது வாழ்க்கை மிகவும் சந்தோஷமாக இருந்தது. அப்போதுதான் இது நேர்ந்தது. அதற்கு மேல் சொல்வதற்கு ஒன்றுமில்லை. இப்படிச் சொல்லி உதட்டைப் பிதுக்கினாள் பபெட்ஸி. ரமோட்ஸ்வே, அவளைக் கூர்ந்து பார்த்தபடியே தேநீரை உறிஞ்சினாள்.

ஒருவருடைய முகத்தைப் பார்த்தாலே, அவரைப் பற்றிய சகல விஷயங்களையும் அனுமானித்துவிடுவாள் ரமோட்ஸ்வே. தலையின் வடிவம் முக்கியமான ஒன்று என்று பல புத்திசாலி துப்பறிவாளர்கள், தங்களது அனு பவத்தில் எழுதியிருந்தாலும், ரமோட்ஸ்வே, அதையெல்லாம் நம்பவில்லை.

முகத்தின் பொதுவான தோற்றமும், கண்களும், கண் களின் ஓரத்தில் நெளியும் சிறு கோடுகளும் மனிதரின் மனதைத் துல்லியமாகச் சொல்லிவிடும். அதிலும் இந்தக் கண்கள்தான் ஜன்னல். அதனால்தானோ என்னவோ, நிறைய பேர், வீட்டில் இருக்கும்போது கூட கறுப்புக் கண்ணாடி அணிவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள். அவர்களை ஜாக்கிரதையாகக் கண்காணிக்க வேண்டும்.

ஹேப்பி பபெட்ஸி பெயரில் மட்டுமல்லாமல், உண்மையிலேயே சந்தோஷமான வாழ்க்கை வாழ்பவள் தான் என்பது முதல் பார்வையிலேயே தெரிந்தது. ஆனாலும் ஏதோ ஓர் ஆணால் ஏற்பட்ட பிரச்னையாகத்தான் இருக்கும் என்று ரமோட்ஸ்வே எண்ணினாள்.

எவனுடைய நடத்தையினாலோ இவள் பாதிக்கப் பட்டிருக்கிறாள் அவளது சிந்தனையை பபெட்ஸியின் குரல் கலைத்தது.

முதலில் என்னைப் பற்றிச் சொல்கிறேனே..

ம்! சொல்..

நான், ஒகாவாங்கர் அருகில் உள்ள மான் என்கிற இடத்திலிருந்து வருகிறேன். என் அம்மா ஒரு சிறிய கடை வைத்திருந்தாள். அதன் பின்புறமுள்ள வீட்டில்தான் நாங்கள் வசித்து வந்தோம். வீட்டில் நிறைய கோழிகள்.. நிறைய மகிழ்ச்சி..

.........
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down


நம்பர் 1 பெண்கள் துப்பறியும் நிறுவனம் - Page 7 Empty Re: நம்பர் 1 பெண்கள் துப்பறியும் நிறுவனம்

Post by சிவா Fri Jul 18, 2014 12:35 am



விபத்துப் புத்தகம் எங்கள் ஆபீஸில் உள்ளது. யாராவது, ஏதேனும் விபத்தில் பாதிக்கப்பட்டால், அதை அந்தப் புத்தகத்தில் எழுத வேண்டும். வக்கீல் சொன்ன தேதியைப் பார்த்தபோது, மாரெட்ஸி, வலது கை விரலில் காயம் பட்டதாக எழுதியிருந்தான். நான் எல்லோரையும் விசாரித்தேன். அவன், விரலில் அடிபட்டு விட்டதாகக் கூறியிருக்கிறான். அவன் இயந்திரத்தைச் சற்று நிறுத்திவிட்டு விரலுக்குக் கட்டுப் போட்டு வருவதாகச் சொல்லிப் போனானாம். அவர்கள், அது ஒன்றும் பெரிய காயமாக இருக்காது என்றே நினைத்தனர். எல்லோரும் அது பற்றி மறந்தும் போய்விட்டனர்.

அப்புறம் அவன் போய் விட்டான்..

ஆமாம்.. சில நாட்கள் கழித்து..

ஹெக்டர் கூற, ரமோட்ஸ்வே அவரைப் பார்த்தாள்.

ஒரு நல்ல, நாணயமான முதலாளியாகத்தான் அவர் தோற்றமளித்தார்.

யாருக்கு ஆபத்து என்றாலும், அவரால் முடிந்த உதவியை உடனே செய்திருப்பார் என்றே அவள் நம்பினாள்.

ஹெக்டர் காபியில் ஒரு மிடறு விழுங்கினார்.

நான் அவனை நம்ப வில்லை. எப்போதுமே நம்பவில்லை என்றுதான் நினைக்கிறேன். என்னுடைய தொழிற்சாலையில் அவன் நிச்சயம் விரலை இழந்திருக்க முடியாது. வேறு எங்கேயாவது அந்த விபத்து நேர்ந்திருக்க லாம். அதற்கும் எனக்கும் ஒரு தொடர்பும் இல்லை..

ரமோட்ஸ்வே புன்னகைத் தாள்.

அந்த விரலைத் தேடி கண்டுபிடிக்க வேண்டும். அதற்காகத்தானே என்னைக் கூப்பிட்டனுப்பினீர்கள்?

ஹெக்டர் பெரிதாகச் சிரித் தார்.

ஆமாம், ஆமாம்.. அது மட்டுமில்லை. நான், இங்கு வந்து உட்கார்ந்து உன்னுடன் பேசிக் கொண்டிருப்பதை மிகவும் விரும்புகிறேன். உன்னைக் கல்யாணம் செய்து கொள்ளலாம் என்று கூட எனக்குத் தோன்றுகிறது. ஆனால் நீ ஒரே பதிலைத்தான் கூறுவாய் என்பது எனக்குத் தெரியும்..

ரமோட்ஸ்வே, அந்த சிநேகிதனின் கையை ஆதரவாக தட்டிக் கொடுத்தாள்.

திருமணம் எல்லாம் நன்றாகத்தான் இருக்கும். ஆனால், துப்பறியும் நிறுவனம் நம்பர் 1 ஆக இருப்பது என்பது அத்தனை சுலபமானதல்ல. என்னால், வீட்டில் உட்கார்ந்து சமைத்துப் போட முடியாது. உங்களுக்கே அது தெரியும்..

ஹெக்டர் தலையசைத்தார்.

ஒரு சமையல்காரி இல்லை.. இரண்டு சமையல்காரியை ஏற்பாடு செய்கிறேன். நீ துப்பறியும் வேலையைத் தொடர்ந்து செய்து கொண்டிருக்கலாம்..

ரமோட்ஸ்வே வேகமாக மறுத்தாள்.

நீங்கள் எவ்வளவுதான் என்னிடம் கேட்டாலும் என் பதில் இதுதான். நீங்கள் என் சிநேகிதராக இருப்பது எனக்குப் பிடித்திருக்கிறது. கணவனாக முடியாது. எனக்கு கணவன் வேண்டியதில்லை. என் வாழ்வில் கணவன் என்கிற வார்த்தைக்கே இடமில்லை.

ஹெக்டர், அவளையே பார்த்தார்.

ரமோட்ஸ்வே, ஹெக்டரின் அலுவலகத்தில் உள்ள காகிதங்களை ஆராய்ந்தாள்.


நம்பர் 1 பெண்கள் துப்பறியும் நிறுவனம் - Page 7 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

நம்பர் 1 பெண்கள் துப்பறியும் நிறுவனம் - Page 7 Empty Re: நம்பர் 1 பெண்கள் துப்பறியும் நிறுவனம்

Post by சிவா Fri Jul 18, 2014 12:36 am



மேஜை மீது ரசீதுகள், பில், தொழில் சம்பந்தமான பட்டியல் எல்லாம் ஏகத்துக்கும் இறைபட்டுக் கிடந்தன.

எனக்கு ஒரு மனைவி இருந்தால், இந்த ஆபீஸ் இவ்வளவு களேபரமாக இருந்திருக்காது. உட்காரப் போதுமான இடம் இருந்திருக்கும். மேஜை மீது பூங்கொத்துக்கள் அலங்கரித் திருக்கும். ஒரு பெண் இருந் தால், அதுவே தனிதான்..

ஹெக்டர் சொல்ல, ரமோட்ஸ்வே புன்னகைத்தபடி பதில் பேசாமல் இருந்தாள். பிசுக்கு பிடித்த புத்தகம் ஒன்றை ஹெக்டர் மேஜை மீது வைக்க.. அதைப் புரட்டினாள். அதுதான் விபத்து பற்றிய விவரங்கள் அடங்கிய புத்தகம். மாரெட்ஸியின் கொட்டைக் கையெழுத்தில், அரைகுறை யாகப் படித்தவன் போல இந்த விபத்து பற்றி அவன் எழுதியிருந்தான்.

மாரெட்ஸியின் கட்டை விரலுக்கு அடுத்த இரண்டாவது விரல்தான் இயந்திரத்தினால் பாதிக்கப்பட்டது. வலது கை. தனக்குத் தானே கட்டு போட்டிருக்கிறான்.

மாரெட்ஸி தன் கையெழுத்தைப் போட்டிருந்தான். சாட்சிக் கையெழுத்து ஜீசஸ் க்ரைஸ்ட் என இருந்தது.. அதைத் திரும்பப் படித்த ரமோட்ஸ்வே, வக்கீலின் கடிதத்துடன் ஒப்பிட்டுப் பார்த்தாள். தேதிகள் சரியாக இருந்தன.

என் வாடிக்கையாளர், இந்த விபத்து மே மாதம் 10-ம் தேதி நடந்ததாகக் கூறுகிறார். மறுநாள் பிரின்ஸஸ் மெரினா மருத்துவ மனைக்குப் போனதாகக் கூறுகிறார். அவர்கள் கட்டுப் போட்டு அனுப்பினார்கள். ஆனால், அது அழுக ஆரம்பித்து விட்டதால், க்ஷ்மறு வாரம் அறுவை சிகிச்சை மூலம் அந்த விரல் அகற்றப்பட்டது (காண்க: மருத்துவமனையின் சான்றிதழ்). இயந்திரத்தின் ஓடும் பாகங்களை, உங்கள் நிறுவனம் சரியானபடி மூடி வைக்காத அலட்சிய மனப்பான்மைதான் இந்த இழப்புக்குக் காரணம் என்கிறார், என்னுடைய கட்சிக்காரர். அதனால், நஷ்ட ஈடு கேட்டு வாங்கித் தருமாறு என்னிடம் கேட்டுக் கொண்டார்.

எல்லோருடைய நன்மைகளையும் கருத்தில் கொண்டு, விரைவில், அவர் கேட்ட 4,000 புலாவை கொடுத்து விடுவது நல்லது. கோர்ட், கேஸ் என்று போனால் விதிக்கப்படும் நஷ்ட ஈட்டை விடவும் இது குறைவானதுதான். இருப்பினும் என் கட்சிக்காரர், இந்தத் தொகைக்கு ஒப்புக் கொள்கிறார்.

ரமோட்ஸ்வே, அந்த மருத்துவச் சான்றிதழைக் கூர்ந்து படித்தாள். சான்ழிதழ் மிகச் சரியாக இருந்தது. வக்கீல் கூறியது போல இருந்தது. தேதி சரியாக இருந்தது. கீழே டாக்டரின் கையெழுத்து இருந்தது. அந்த டாக்டரை ரமோட்ஸ்வேக்குத் தெரியும்.

அவள் தலையை உயர்த்தியபோது, எதிரில் ஹெக்டர் எதிர்பார்ப்புடன் நின்று கொண்டிருந்தார்.

எல்லாம் சரியாக இருக்கிறது.. அவன் கையில் காயம் பட்டு, புரை யோடிப் போய் விட்டது. இன்ஷூரன்ஸ் காரர்கள் என்ன சொல்கிறார்கள்?

ஹெக்டர் பெருமூச்செறிந்தார்.

நான் கொடுக்கத்தான் வேண்டும் என்று சொல்கிறார்கள். அவர்கள், எனக்கு நஷ்ட ஈடு அளிப்பார்களாம். அதுதான் சிக்கனமான வழி. வக்கீல்களுக்கு சம்பளம் கொடுத்து வழக்கை நடத்தினால் நஷ்ட ஈட்டுத் தொகையை விடவும் அதிகமாக ஆகும். 10,000 புலாக்கள் வரை நஷ்ட ஈடாகக் கொடுப்பது கூடப் பெரிய விஷயமில்லை. ஆனால், இது பற்றி வெளியே தெரிய வேண்டாம் என்கிறார்கள். தெரிந்தால், அவனவன் பிடுங்க ஆரம்பித்து விடுவான் என்கிறார்கள்.

நீங்கள் அப்படியே செய்யலாமே.. - ரமோட்ஸ்வே சொன்னாள்.

விபத்து நடக்கவே இல்லை என்று நிரூபிப்பது ரொம்பவும் கஷ்டம். அந்த மனிதனுக்கு விரல் போனதென்னவோ உண்மை. இன்ஷூரன்ஸ் கம்பெனி, இந்த நஷ்ட ஈட்டைத் தருவதற்குச் சம்மதிக்கும்போது உங்களுக்கு என்ன பிரச்னை?

அவள் கேட்கவில்லை. ஆனால், இந்த எண்ணம் அவள் மனதில் ஓடியது.


நம்பர் 1 பெண்கள் துப்பறியும் நிறுவனம் - Page 7 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

நம்பர் 1 பெண்கள் துப்பறியும் நிறுவனம் - Page 7 Empty Re: நம்பர் 1 பெண்கள் துப்பறியும் நிறுவனம்

Post by சிவா Fri Jul 18, 2014 12:36 am



ஹெக்டர் அவள் நினைப்பதைப் புரிந்து கொண்டார்.

நான் தர முடியாது. கண்டிப்பாக முடியாது. எவனோ ஒருவன் ஏமாற்றுவதற்கு நான் ஏன் பணம் தர வேண்டும்? நான் இப்போது கொடுத்தால், அவன் இன்னொருவனிடம் வேலைக்குப் போவான். அங்கேயும் இப்படி ஏதாவது செய்வான். அதை விட 4,000 புலாவை, நியாயமாகத் தேவைப்படுவோர் யாருக்காவது தரலாம்.

அவர், ஆபீஸையும் தொழிற் சாலையையும் இணைக்கும் கதவைச் சுட்டிக் காட்டினார். அங்கே ஒரு பெண்மணி வேலை செய்கிறாள். அவளுக்குப் பத்து குழந்தைகள். அவள் நன்றாக வேலை செய்வாள். 4,000 புலா அவளுக்குக் கிடைத் தால், பாவம்.. என் னென்ன செய் வாள்..?

ஆனால், அவளுக்கு விரல் போக வில்லையே.. - ரமோட்ஸ்வே சிரித்தாள். அவனுக்கு, பழையபடி நன்றாக வேலை செய்ய முடியாதபோது, இந்தப் பணம் உதவி யாக இருக்கும் இல்லையா?

சேச்சே.. அவன் ஒரு பெரிய கில்லாடி. அவனை வேலையை விட்டு நீக்க எனக்கு ஒரு காரணமும் கிடைக்கவில்லை. ஆனால், அவன் நம்பகமானவன் இல்லை என்று எனக்குத் தோன்றியது. இன்னும் இங்கே இருக்கிற சில பேருக்குக் கூட அவனைப் பிடிக்காது. மூளை வளர்ச்சி குன்றிய அந்தத் தேநீர் பையன் கூட அவனுக்கு தேநீர் எடுத்துப் போக மாட்டான். அவனுடைய உள்ளுணர்வுக்குக் கூட ஏதோ தோன்றியிருக்கிறது.

ஆனால், சந்தேகப்படுவது என்பது வேறு.. அதை சாட்சியங்களுடன் உறுதி செய்வது என்பது வேறு.. - ரமோட்ஸ்வே கூறினாள்.

லாபாட்ஸேயில் உள்ள ஹைகோர்ட்டில் இவன் சரியானவன் இல்லை என்று சும்மா அளந்து விட முடியாது. ஜட்ஜ் உங்களைப் பார்த்து சிரிப்பார். இப்படிச் சொன்னால் சும்மா சிரிக்கத்தான் செய்வார்கள். வேறென்றும் செய்ய மாட்டார்கள்.

ஹெக்டர் மௌனமாக இருந்தார்.

பேசமால், இன்ஷூரன்ஸ் மனிதர்கள் கூறுவது போல நஷ்ட ஈடு கொடுத்து விடுங்கள். இல்லாவிட்டால், 4,000 புலாவுக்கு அதிகமாகவே நீங்கள் செலவு செய்ய வேண்டியிருக்கும்.

ஹெக்டர் தலையாட்டி மறுத்தார்.

ஒருக்காலும் நான் செய்யாத ஒன்றுக்கு பணம் தர முடியாது..

இப்படி பல்லைக் கடித்தவாறு கூறினார்.

இந்த ஆள் என்ன சூழ்ச்சி செய்கிறான் என்பதை நீ கண்டுபிடிக்க வேண்டும். இன்னும் ஒரு வாரத்துக்குள் நான் செய்வது தவறு என்று நீ கூறினால், நான் தயங்காமல், முணுமுணுக்காமல் பணத்தைக் கொடுத்து விடுகிறேன். சரிதானா..

ரமோட்ஸ்வே சம்மதித்தாள். நஷ்ட ஈடு தர வேண்டிய அவசியம் இல்லாதபோது தருவதற்கு அவளுக்கும் விருப்பமில்லை. ஒரு வாரத்துக்கு அவள் கேட்கப் போகும் சம்பளமும் அதிகமாக இருந்து விடப் போவதில்லை.

ஹெக்டரிடம் நிறைய பணம் இருந்தது. தன்னுடைய கொள்கைகளை அவரால் கடைப்பிடிக்க முடியும். ஒருவேளை, மாரெட்ஸி பொய் சொல்லியிருந்தால் அவனுக்கு பதிலடி கொடுப்பது சரிதான். அதனால் அவள் ஒப்புக் கொண்டாள். காரை ஓட்டிச் செல்லும்போதே, காணாமல் போன விரலுக்கும் ஹெக்டரின் தொழிற் சாலைக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை என்பதை எப்படி நிரூபிப்பது என்று யோசித்தபடியே சென்றாள்.

அவளுடைய அலுவலக அறைக்குள் அவள் நுழையும்போது, அவளுக்கு இது பற்றி எந்தவொரு வழியும் தெரியவில்லை. தீர்வு காண முடியாத வழக்காகவே அவளுக்குத் தோன்றியது. சமையலறைக்குச் சென்று தேநீர் போட ஆரம்பித் தாள்.

ஹெக்டரைப் பற்றி அவள் சிந்தனை ஓடியது. அவர் மிகவும் பிடிவாத குணமுள்ளவர். அது எல்லோருக்குமே தெரியும். இருந்தாலும், அதற்காகவே அவள் அவரை மதித்தாள்.

எதற்காக நஷ்ட ஈடு தர வேண்டும்? இவர் என்ன சொன்னார்.. இப்போது நான் கொடுத்தால், அவன் இன்னொருவனிடம் சென்று ஏதாவது கோல்மால் செய்ய மாட்டான் என்பது என்ன நிச்சயம்? என்றுதானே சொன்னார்..

ஒரு நிமிட யோசனைக்குப் பிறகு, தேநீர் கோப்பையை மேஜை மீது வைத்தாள்.

அவள் மனதில் திடீரென்று ஓர் எண்ணம்.. நல்ல யோசனைகள் எல்லாம் அவளுக்கு அப்படித்தான் உதய மாகும்.


நம்பர் 1 பெண்கள் துப்பறியும் நிறுவனம் - Page 7 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

நம்பர் 1 பெண்கள் துப்பறியும் நிறுவனம் - Page 7 Empty Re: நம்பர் 1 பெண்கள் துப்பறியும் நிறுவனம்

Post by சிவா Fri Jul 18, 2014 12:37 am


----------------------------------------------------------------
ஈகரை தமிழ் களஞ்சியம் - www.eegarai.net
நம்பர் 1 பெண்கள் துப்பறியும் நிறுவனம்! - 16
----------------------------------------------------------------


ஒ ருவேளை மாரெட்ஸி முன்னதாகவே யாரிடமாவது இதேபோல் வம்படியாக நஷ்ட ஈடு வாங்கியிருக்கலாம் இல்லையா? ஹெக்டர்தான் முதல் மனிதராக இருக்க வேண்டும் என்கிற அவசியம் இல்லையே..

இந்த க்ளூ தோன்றிய பிறகு ரமோட்ஸ்வேயால் நிம்மதியாகத் தூங்க முடிந்தது. மறுநாள் காலையில் எழுந்தவுடன் சில விசாரிப்புகள், மால்ஃபேயில் இருக்கும் அந்த வக்கீலின் அலுவலகத்துக்கு ஒரு நடை போய் வருவது.. இதுவே அவனுடைய பொய்யான நஷ்ட ஈட்டுத் தொந்தரவுக்கு ஒரு முடிவு கட்டக் கூடியதாக இருக்கும் என்கிற நம்பிக்கையுடன் எழுந்தாள். சீக்கிரமாகவே காலை உணவை முடித்து கொண்டு தன் அலுவலகத்துக்குச் சென்றாள்.

அவள் அலுவலகத்தைப் பெருக்கும் பெண்மணி இவள் போகும்போதே வந்து விட்டிருந்தாள். ரமோட்ஸ்வே, அவளுடைய குடும்ப நிலை பற்றி விசாரித்தாள். அவளுடைய ஒரு மகன் ஜெயில் வார்டனாக வேலை பார்த்து வந்தான். இன்னொருவன் ஒரு ஹோட்டலில் சமையல் பயிற்சி எடுத்துக் கொண்டிருந்தான். அவர்கள் இருவருமே தங்கள் தொழிலில் வளர்ச்சி அடைந்திருந்தனர். ரமோட்ஸ்வேக்கு அவர்களது சாதனைகளைக் கேட்டு அறிவது மிகவும் விருப்பமான ஒன்று. ஆனால், இன்று அதிகமாகப் பேசாமல் வேலையில் மும்முரமாகி விட்டாள். வணிகப் புத்தகத்தில் அவள் தேடிய செய்தி கிடைத்தது. காபரோனில் பத்து இன்ஷூரன்ஸ் கம்பெனிகள் இருந்தன. அதில் நான்கு சிறிய நிறுவனங்கள் தனிப்பட்ட விசேஷ முறையில் இயங்கி வந்தன. மற்ற ஆறு கம்பெனிகளும், அந்தச் சிறிய நிறுவனங்களுக்கான வேலைகளையும் சேர்த்துச் செய்யும். அந்த நிறுவனங்களின் பெயர், போன் நம்பர், விலாசம்.. இவற்றைப் பட்டியலிட்டு வேலைகளை ஆரம்பித்தாள்.

போட்ஸ்வானா ஈகிள் கம்பெனிக்கு முதலில் போன் செய்தாள். அவர்கள் உதவி செய்யத் தயாராக இருந்தும், இவளுக்குத் தேவையான தடயங்கள் கிடைக்கவில்லை. அதே மாதிரி மியூச்சுவல் லைஃப் கம்பெனி, சதர்ன் ஸ்டார் கம்பெனி போன்றவற்றிலிருந்தும் அவளுக்குத் தேவையான தகவல்கள் கிடைக்கவில்லை. கலஹாரி விபத்து நஷ்ட ஈட்டு கம்பெனியிலிருந்து மூன்று மணி நேரத் தேடலுக்குப் பிறகு, அவளுக்குத் தேவையான தகவல்கள் தரப்பட்டன.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, ஒரு கார் ரிப்பேர் கம்பெனியில் மாரெட்ஸி என்கிற பெயரில் ஒரு ஆள், பெட்ரோல் போடும்போது, பம்ப்பை மாட்டுகையில் விரல் சிக்கித் துண்டாகி விட்டதாக நஷ்ட ஈடு கேட்டிருக்கிறான் .. - என்று அந்தக் கம்பெனியிலிருந்த பெண்மணி கூறியவுடன், ரமோட்ஸ்வேயின் இதயம் துள்ளிக் குதித்தது!

4,000 புலாவா?

கிட்டத்தட்ட அந்தத் தொகைதான் இருக்கும். 3,800 புலாவுக்கு நாங்கள் ஒப்புக் கொண்டோம்.

வலது கைதானே.. கட்டை விரலிலிருந்து இரண்டாவது விரல்தானே..

குமாஸ்தா, காகிதங்களைப் புரட்டிப் பார்த்து விட்டு, ஆமாம்.. டாக்டர் சர்டிஃபிகேட் கூட இருக்கிறது.. அது மெடிக்கல் லாங்குவேஜில் இருப்பதால், எனக்கு முழுசாகச் சொல்லத் தெரியவில்லை என்றாள்.

அதாவது, விரலின் ஆரம்ப மூட்டுப் பகுதியிலிருந்து வெட்டப்பட்டிருக்கிறது.. அப்படித்தானே?

அதேதான்...

குமாஸ்தா உறுதிபட சொன்னாள்.

ரமோட்ஸ்வே இன்னும் சில விஷயங்களைக் கேட்டுத் தெரிந்து கொண்டு, குமாஸ்தாவுக்கு நன்றி கூறினாள்.

இத்தனை சீக்கிரம் ஏமாற்று வேலையைக் கண்டுபிடித்த திருப்தியை, சில நிமிடங்கள் அனுபவித்து அசை போட்டாள். ஆனாலும் இன்னும் சில விவரங்கள் அவளுக்குத் தேவைப்பட்டன. அதற்கு அவள் மால்ஃபே போய்த்தான் ஆக வேண்டும். மாரெட்ஸியையும்.. முடிந்தால், அவனுடைய வக்கீலையும் பார்க்க அவள் மிகவும் ஆவலாக இருந்தாள். இரண்டு மணி நேர, கடினமான ஃபிரான்ஸிஸ் டவுன் ரோடு பயணம் - ஆனால், அது பயனுள்ளதாக இருக்கும் என்கிற நினைப்பே அவளுக்கு மகிழ்ச்சியளித்தது.

அந்த வக்கீல், அன்று பகலே அவளை சந்திக்க சம்மதித்தார். ஹெக்டர் தன்னுடைய கட்சிக்காரனின் கோரிக்கைக்கு சம்மதித்து அவளை அனுப்பியிருப்பதாக அவர் எண்ணினார். எப்படியாவது சரிக்கட்டி தன்னுடைய கட்சிக்காரர் கேட்ட தொகையை வாங்கித் தர வேண்டும்.. முடிந்தால் பல புதிய எதிர்பாராத திருப்பங்களினால் 4,000 புலா போதவில்லை.. சற்று அதிகமாகக் கேட்க நேரிடுகிறது என்று கூட அவர், அவளுடன் வாதாட எண்ணினார். தன்னுடைய சட்ட நுணுக்கமான பேச்சினால் அவளை அப்படியே அலற அடிக்க முடியும் என்றும் கோட்டை கட்டினார். அதுவும் ஒரு பெண்ணையா சரிக்கட்ட முடியாது?

இங்கு, ரமோட்ஸ்வே மனதுக்குள் சிரித்துக் கொண்டாள். மாரெட்ஸி ஏதாவது ஒரு மதுபானக் கடையில் உற்சாகமாக, வரப் போகும் 4,000 புலாவை எண்ணிக் கொண்டாட்டம் போட்டுக் கொண்டிருப்பான் என்று எண்ணினாள். ஆனால், எதிர்பாராத ஏமாற்றம் காத்திருப்பது அவனுக்கு எப்படித் தெரியும்?

மால்ஃபேயில் கசாப்பு கடைக்கு அருகில் இருந்த தன்னுடைய அலுவலகத்தில் வக்கீல் ஜேம்ஸன் உட்கார்ந்திருந்தார்.

என் கட்சிக்காரன் வருவதற்கு சிறிது தாமதமாகும். இப்போதுதான் அவனுக்கு நான் அனுப்பிய செய்தி கிடைத்ததாம். மீதி விவரங்களை அவன் வருவதற்கு முன்பே நாம் பேசி, ஓரளவுக்கு முடிவு கட்டலாம் என்று நான் நினைக்கிறேன்.

ரமோட்ஸ்வே அவர் கூறிய செய்தியை ரசித்தபடி, மிகவும் தாறுமாறாகக் கிடந்த அவரது ஆபீஸை சுற்றும் முற்றும் பார்த்தாள்.

இப்போது தொழில் அத்தனை நன்றாக இல்லையோ உங்களுக்கு?

ஜேம்ஸனுக்கு சுருக்கென்றது.

அதெல்லாம் ஒன்றுமில்லை. எனக்கு கழுத்து மட்டும் வேலை.. இதோ பாருங்கள்.. காலையில் ஏழு மணிக்கு இங்கே வருகிறேன். மாலை ஆறு மணி வரைக்கும் சற்று நேரம் கூட ஓய்வு ஒழிச்சல் இல்லை.

தினமும் அப்படித்தானோ?


நம்பர் 1 பெண்கள் துப்பறியும் நிறுவனம் - Page 7 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

நம்பர் 1 பெண்கள் துப்பறியும் நிறுவனம் - Page 7 Empty Re: நம்பர் 1 பெண்கள் துப்பறியும் நிறுவனம்

Post by சிவா Fri Jul 18, 2014 12:37 am


ரமோட்ஸ்வே வெகுளித்தனமாகக் கேட்பதுபோல கேட்டாள்.

ஜேம்ஸன், எரிச்சலான பார்வையை அவள் மீது வீசினார்.

ஆமாம். தினமும்.. சனி, ஞாயிறில் கூட சிலசமயம் நான் ஓய்வின்றி இருக்கிறேன்.

ஆமாம்.. ஆமாம்.. உங்களுக்கு நிறையவே வேலை இருக்கிறது.

வக்கீல், இதை ரமோட்ஸ்வேயின் சமாதானப் பேச்சாகவே கருதி புன்னகைத்தார்.

ஆனால், அவரது சந்தோஷத்தை அவள் நீட்டிக்கவில்லை.

மிக அதிகமாகத்தான் வேலை இருக்கும். கட்சிக்காரர்கள் எப்போதும் கூறும் பொய்களை வைத்துப் பொய்யாக வழக்கு ஜோடிக்கவும், சில நேரங்களில் உண்மைகள் வந்தால் அதைச் சமாளிக்கவும் வேண்டியிருக்கலாம்..

அது நேரம் வரையில் பேனாவைக் கையில் வைத்து உருட்டிக் கொண்டிருந்த ஜேம்ஸன், அதை மேஜை மீது போட்டார். அவளை முறைத்துப் பார்த்தார்.

யார் இந்தத் திமிர் பிடித்த பெண்.. அவருடைய கட்சிக்காரர்களைப் பற்றி தரக்குறைவாகப் பேசுவதற்கு? இவள் இப்படித்தான் நடந்து கொள்வாள் என்றால், சமாதானமாகப் பேசி, நஷ்ட ஈடு வாங்காமலேயே, கேஸை கோர்ட்டுக்கு எடுத்துச் செல்ல வேண்டும். ஜேம்ஸன், தன்னுடைய சம்பளத்தைக் கூடத் தியாகம் செய்யத் தயாரானார். அதனால், நஷ்ட ஈடு வருவதற்கு காலதாமதமானாலும் சரி என்று கூடத் தீர்மானித்து விட்டார்.

என்னுடைய கட்சிக்காரர்கள் மற்றவர்களைப் போல பொய் பேசுவது இல்லை. அவர்களைப் பொய்யர்கள் என்று சொல்ல உனக்கு எந்த உரிமையும் கிடையாது.. என்றார்.

அப்படியா?

ரமோட்ஸ்வே புருவத்தை உயர்த்தினாள்.

அப்படியானால், உங்கள் கட்சிக்காரருக்கு எத்தனை விரல்கள் என்று சொல்லுங்கள்..

ஜேம்ஸன் அவளை மிக இகழ்ச்சியாகப் பார்த்தார்.

ஏற்கெனவே பாதிக்கப்பட்டவரை கேவலமாகப் பேசி, கேலி செய்வது மிகவும் மட்டமான சமாசாரம். உனக்கு நன்றாகத் தெரியும்.. மாரெட்ஸிக்கு ஒன்பது விரல்கள். இன்னும் ரொம்பத் தெளிவாகச் சொல்லப் போனால் ஒன்பதரை விரல்கள்.

அப்படியானால் அவன் எப்படி மூன்று வருடங்களுக்கு முன்பு பெட்ரோல் ஸ்டேஷனில் விரல் வெட்டுப்பட்டதற்கு கலஹாரி விபத்து இன்ஷூரன்ஸ் கம்பெனியிலிருந்து நஷ்ட ஈடு வாங்கியிருக்க முடியும்?

வக்கீல் திகைத்தார்.

மூன்று வருஷங்களுக்கு முன்பா.. விரலுக்காகவா? - மெதுவாகக் கேட்டார்.

ஆமாம். 4,000 புலா கேட்டு, அவனுக்கு 3,800 புலாவுக்குத் தொகை தரப்பட்டதற்கான விவரம் இருக்கிறது. அந்த விவரம் அடங்கிய பேப்பரின் நம்பர் கூட என்னிடம் இருக்கிறது. நீங்கள் வேண்டுமானல் அவர்களைக் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம். ஏதேனும் இன்ஷூரன்ஸ் விஷயமான தில்லுமுல்லு என்றால் அவர்கள் அதற்காக உதவி செய்யத் தயாராக இருக்கிறார்கள்.

ரமோட்ஸ்வேக்கு, ஜேம்ஸனைப் பார்க்கப் பரிதாபமாக இருந்தது. அவளுக்கு வக்கீல்களைக் கண்டால் பிடிக்காது. ஆனால், அவர்களும் பிழைப்பு நடத்த வேண்டியிருக்கிறதே.. ரொம்பவும் கடுமையாக நடந்து கொண்டோமோ என்று கூட அவளுக்குத் தோன்றியது.

பாவம்.. ஒருவேளை வயதான பெற்றோரைக் காப்பாற்றிக் கொண்டிருப்பவராகக் கூட இருக்கலாம்..

மெடிக்கல் சர்டிஃபிகேட் இருக்கிறதா மிஸ்டர் ஜேம்ஸன்..? அதைப் பார்க்க விரும்புகிறேன்..


நம்பர் 1 பெண்கள் துப்பறியும் நிறுவனம் - Page 7 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

நம்பர் 1 பெண்கள் துப்பறியும் நிறுவனம் - Page 7 Empty Re: நம்பர் 1 பெண்கள் துப்பறியும் நிறுவனம்

Post by சிவா Fri Jul 18, 2014 12:37 am



இதோ..

அவர் ஒரு கோப்பிலிருந்து சான்றிதழை எடுத்து நீட்டியபடி சொன்னார்..

எல்லாம் சரியாகத்தான் இருக்கிறது. சந்தேகப்படும்படி எதுவும் இல்லை..

அதை வாங்கி, உற்றுப் பார்த்த ரமோட்ஸ்வே தலையாட்டினள்.

இதோ பாருங்கள்.. நான் நினைத்த மாதிரியே தேதியை அழித்து மாற்றியிருக்கிறான். ஒருமுறை விரல் போனதென்னவோ உண்மைதான். அது விபத்தினால் கூட இருக்கலாம். ஆனால், இப்போது அவன் செய்தது ஏதோ ஒரு திரவம் போட்டு அழித்ததுதான்..

வக்கீல் அந்தக் காதிதத்தைத் தூக்கி வெளிச்சத்தில் பார்த்தார். சிரமம் எதுவுமில்லாமலேயே அந்தத் தடயம் நன்றாகத் தெரிந்தது.

முதலிலேயே இதை நீங்கள் கவனிக்காதது எனக்கு மிகவும் வியப்பாக இருக்கிறது. இதைக் கண்டுபிடிக்க பெரிய லாபரட்ரி எதுவும் தேவைப்படாது..

வக்கீல் தலைகுனியும் இந்த நேரத்தில்தான் மாரெட்ஸி உள்ளே நுழைந்தான். நேராக வந்து ரமோட்ஸ்வேயிடம் கைகுலுக்க கை நீட்டினான். கையைப் பார்த்த ரமோட்ஸ்வேக்கு ஒரு விரல் இல்லாதது தெரிந்தது. அவள், அவன் நீட்டிய கையைக் கண்டுகொள்ளாமல் இருந்தாள்.

உட்கார்.. - ஜேம்ஸன் கோபமாகக் கூறினார். மாரெட்ஸிக்கு இது ஆச்சர்யத்தைக் கொடுத்தாலும், அவர் சொன்னபடி செய்தான்.

நீங்கள்தான் பணம் கொடுக்க வந்திருப்பவரா..? - அவன் கேட்க.. வக்கீல் அவனைத் தடுத்து நிறுத்தினார்.

அவள் உனக்குப் பணம் தர வரவில்லை. நீ எதற்காக அடிக்கடி தொலைந்த விரல்களுக்கு நஷ்ட ஈடு கேட்கிறாய் என்பதைத் தெரிந்து கொள்ளவே வந்திருக்கிறாள்..

வக்கீல் பேசும்போது, மாரெட்ஸியின் முகபாவங்களை ரமோட்ஸ்வே கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்தாள். அவனுடைய முகத்தில் தோன்றிய கலவரமே அவளுக்கு சாதகமாக இருந்தது. திடீரென்று உண்மை வெளிப்படும்போது, மனிதர்கள் திணறி விடுவார்கள். மிகச் சிலரே அதைச் சமாளிக்கும் திறமை உள்ளவர்களாக இருப்பார்கள்.

அடிக்கடியா..

- அவன் ஈனஸ்வரத்தில் கேட்க..

ஆமாம். நீ மூன்று விரல்களை இழந்து விட்டதாக நஷ்ட ஈடு கேட்டிருந்தாய். இப்போது எப்படி திடீரென்று இரண்டு விரல்கள் முளைத்து விட்டது என்று தெரியவில்லை. வெட்டப்பட்ட விரல்கள் திரும்பவும் வளர ஏதோ புது வகையான மருந்து கண்டு பிடித்திருப்பார்கள் என்று தோன்றுகிறது..

என்ன.. மூன்றா? - வக்கீல் அதிர்ந்தார்.

ரமோட்ஸ்வே, மாரெட்ஸியைப் பார்த்தாள்.

வந்து.. கலஹாரி விபத்து ஒன்று.. அப்புறம் அடடா.. நான் எதிலோ குறித்து வைத்திருந்தேன்.. அது என்ன வென்று கூற முடியுமா?


நம்பர் 1 பெண்கள் துப்பறியும் நிறுவனம் - Page 7 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

நம்பர் 1 பெண்கள் துப்பறியும் நிறுவனம் - Page 7 Empty Re: நம்பர் 1 பெண்கள் துப்பறியும் நிறுவனம்

Post by சிவா Fri Jul 18, 2014 12:38 am



மாரெட்ஸி, உதவி வேண்டி தனது வக்கீலைப் பார்க்க, அவர் முகத்தில் சினத்தைத்தான் கண்டான்.

ஸ்டார் இன்ஷூரன்ஸ்.. என மெதுவாகக் கூறினான்.

வக்கீல், அந்தக் காகிதத்தை அவன் முகத்தில் வீசியெறிந்தார்.

இந்த மாதிரி ஏமாற்று வேலை செய்து என்னை முட்டாளாக்கப் பார்க்கிறாயா? தப்பித்துக் கொள்ளலாம் என்று நினைத்து விட்டாயா?

மாரெட்ஸி பேசவில்லை. ரமோட்ஸ்வேயும்தான். அவள் ஆச்சர்யப்படவில்லை. தங்கள் பெயரின் பின்னால், சட்டப் படிப்பு பட்டம் இருந்தாலும், வக்கீல்களும் தங்கள் கேஸ்களில் இது போல வழுக்கி விழுவார்கள் என்பது அவளுக்குத் தெரியும்.

எது எப்படியானாலும் உன்னுடைய சாயம் வெளுத்து விட்டது. ஏமாற்று வேலை செய்ததற்கான குற்றச்சாட்டு உன் மேல் பதிவு செய்யப்படும். அப்போது, நான் உனக்காக நிச்சயம் வாதாட மாட்டேன். வேறு யாரையேனும் வக்கீலைப் பார்த்துக் கொள்.

மாரெட்ஸி, ரமோட்ஸ்வேயைப் பார்த்தான். அவனை நேராகப் பார்த்தவள், நீ ஏன் இப்படிச் செய்தாய்? தப்பித்துக் கொண்டு விடுவோம் என நினைத்தாயா.. எனக் கேட்டாள்

மாரெட்ஸி, சட்டைப் பையிலிருந்து ஒரு கைக்குட்டையை எடுத்து மூக்கைச் சிந்தினான்.

நான்தான் என் பெற்றோரைக் காப்பாற்றுகிறேன்.என்னுடைய சகோதரி தீராத நோய் வாய்ப்பட்டிருக்கிறாள். அவளுக்கு குழந்தைகள் வேறு. அவர்களையும் நான்தான் பார்த்துக் கொள்கிறேன்.

ரமோட்ஸ்வே, அவன் கண்களை நேருக்கு நேர் பார்த்தாள். அவன் உண்மையைத்தான் கூறுகிறான் என்பது அவளுக்குத் தெரிந்தது. அவள் துரிதமாக சிந்தித்தாள்.

இவனை ஜெயிலுக்கு அனுப்புவதில் எந்தவித பலனும் இல்லை. அதனால் அவனுடைய பெற்றோரும் சகோதரியும் மேன்மேலும் கஷ்டங்களைத்தான் அனுவிப்பார்கள்..

நல்லது.. இதுபற்றி நான் போலீஸுக்கு எதுவும் சொல்ல மாட்டேன். என்னுடைய கட்சிக்காரரும் சொல்ல மாட்டார். ஆனால் ஒன்று.. இது மாதிரி திருட்டு வேலைகளில் ஈடுபட மாட்டேன் என்று எனக்கு நீ சத்தியம் செய்து தர வேண்டும். புரிந்ததா?

மாரெட்ஸி, வேகமாக தலையாட்டினான்.

நீங்கள் உண்மையான கிறிஸ்தவப் பெண்மணி. கடவுள் உங்களுக்கு சொர்க்கத்தில் இடம் கொடுப்பார்.

வக்கீலைப் பார்த்தவாறு ரமோட்ஸ்வே புன்னகையுடன் கூறினாள்..

இந்த நாட்டில் சிலர் பெண்கள் என்றால் சாதுவானவர்கள்.. அவர்களை இஷ்டப்படி ஆட்டி வைக்கலாம் என்று நினைக்கிறர்கள். ஆனால், நான் அப்படிப்பட்டவள் இல்லை.. ஒரு ஆபத்து என்று வரும்போது, விஷமுள்ள நாகப்பாம்பைக் கூட இரண்டாக வெட்டிப் போடக் கூடிய தைரியம் எனக்கு இருக்கிறது..

அவள் தனது வலது கை இரட்டை விரலை, கத்தரி போல அவர் முன் காட்டி விட்டுக் கிளம்பினாள்.

வக்கீலின் வாய் திறந்தே இருந்தது. பேச்சுதான் வரவில்லை!


நம்பர் 1 பெண்கள் துப்பறியும் நிறுவனம் - Page 7 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

நம்பர் 1 பெண்கள் துப்பறியும் நிறுவனம் - Page 7 Empty Re: நம்பர் 1 பெண்கள் துப்பறியும் நிறுவனம்

Post by சிவா Fri Jul 18, 2014 12:38 am


----------------------------------------------------------------
ஈகரை தமிழ் களஞ்சியம் - www.eegarai.net
நம்பர் 1 பெண்கள் துப்பறியும் நிறுவனம்! - 17
----------------------------------------------------------------


எ ல்லாம் சரிதான்.. ஒரு வழக்கை எடுத்து துரிதமாக முடிப்பது வாடிக்கையாளரைப் பொறுத்தவரையிலும் - ஏன்.. ரமோட்ஸ்வே வரையிலும் கூட மிகவும் திருப்தியான ஒன்றுதான். ஆனால், அவளது மேஜை இழுப்பறையில் இருந்த அந்தக் காகித உறையையும் அதில் இருந்த பொருட்களையும் பற்றி அவளால் அலட்சியமாக இருக்க முடியவில்லை.

அதை அவள் காரியதரிசி மகுட்சி கண்ணில் படாமல் மறைவாக எடுத்து வைத்துக் கொண்டாள். மகுட்சி நம்பிக்கையானவள்தான். ஆனால், இம்மாதிரியான விஷயங்கள் மிகவும் ஆபத்தானவை. அதனால், மிக மிக ரகசியமாக வைத்திருப்பது அவசியம்.

வங்கிக்குப் போவதாகச் சொல்லி விட்டு, அவள் ஆபீஸிலிருந்து கிளம்பினாள். நிறைய காசோலைகள் இருந்ததால், அவற்றை வங்கியில் போட வேண்டியிருந்தது. ஆனால், அவள் உடனே நேரடியாக வங்கிக்குச் செல்லவில்லை. இளவரசி மரீனா மருத்துவமனைக்கு சென்று, ரசாயன பரிசோதனை கூடத்தை நோக்கிச் சென்றாள்.

ஒரு நர்ஸ் அவளைத் தடுத்து நிறுத்தினாள்..

இங்கே இறந்தவரின் சடலத்தை அடையாளம் காட்டவா வந்திருக்கிறீர்கள்?

ரமோட்ஸ்வே இல்லை என தலையசைத்தாள்.

நான் டாக்டர் குலுபனேவை பார்க்க வந்திருக்கிறேன். அவரிடம் அப்பாய்ன்ட்மென்ட் எதுவும் வாங்கவில்லை. ஆனால், நான் அவருடைய பக்கத்து வீட்டில் வசிக்கிறேன். அதனால், என்னைப் பார்க்க அனுமதிப்பார்..

நர்ஸ் நம்பவில்லை என்பதை அவளது பார்வையே சொல்லியது. இருப்பினும் டாக்டரை அழைத்து வரச் சென்றாள். சில நிமிடங்களில் திரும்பி வந்து, டாக்டர் சிறிது நேரத்தில் வந்து பார்ப்பார் எனக் கூறினாள்.

நீங்கள் இந்த மாதிரி, ஹாஸ்பிடல்ல வந்து தொந்தரவு செய்யக் கூடாது. எல்லாருமே இங்கே தலைக்கு மேல் வேலை பளுவோடு இருக்கிறார்கள். ஒருவருக்கும் நேரம் இருக்காது.

ரமோட்ஸ்வே, அந்த நர்ஸைப் பார்த்தாள். பத்தொன்பது அல்லது இருபது வயசுதான் இருக்கும். அவளுடைய தந்தையின் காலத்தில், இத்தனை சிறிய பெண் முப்பத்தைந்து வயதான பெண்ணை, தொந்தரவு செய்யும் குழந்தையை விரட்டுவது போலப் பேச மாட்டாள். ஆனால், இப்போது காலம் மாறி விட்டது. திடீரென மேலே வந்தவர்களுக்கு வயதானவர்களுக்கோ, பெரியவர்களுக்கோ எப்படி மரியாதை தர வேண்டும் என்பது தெரியவில்லை. தான் துப்பறிபவள் என்பதைச் சொல்லி விடலாமா என்று கூட நினைத்தாள் அவள். ஆனால், அவளிடம் சொல்வது, உபயோகமில்லாத ஒன்று. இது மாதிரிப்பட்டவர்களைக் கண்டு கொள்ளாமல் இருப்பதுதான் நல்லது.

டாக்டர் குலுபனே வந்து சேர்ந்தார். பச்சை நிற அங்கியை அணிந்திருந்தார். எந்த கண்றாவியான வேலையில் ஈடுபட்டிருந்தாரோ தெரியவில்லை. ஆனால், இது மாதிரி ஒரு இடைவெளி கிடைத்ததில் மகிழ்ச்சியடைந்தவர் போல காணப்பட்டார்.

என்னுடைய தனி அறைக்குப் போகலாம்.. வாருங்கள். அங்கே போய்ப் பேசலாம்..

ரமோட்ஸ்வே, வெராந்தாவின் கோடியில் இருந்த சிறு அறையை அடைந்தாள். அங்கே மேஜை சுத்தமாக, ஒன்றுமில்லாமல் வெறிச்சென இருந்தது. அரசாங்க குமாஸ்தா அலுவலகம் மாதிரிதான் இருந்தது. ஆனால், மருத்துவ சம்பந்தமான புத்தகங்கள் வைத்திருந்ததால், அது ஒரு டாக்டரின் அறை என்பதை ஊகிக்க முடிந்தது.

உங்களுக்கு தெரிந்திருக்கும்.. நான் ஒரு துப்பறியும் பெண் என்று..

டாக்டர், அகலச் சிரிப்பு ஒன்றை உதிர்த்தார். அவருடைய வேலையின் தன்மையில், அவர் மிகவும் உற்சாகமான மனிதராக இருந்தது அபூர்வமான ஒன்று..

என்னுடைய நோயாளிகளைப் பற்றி எதுவும் பேச மாட்டாய் என்று நினைக்கிறேன்.. அவர்கள் இறந்திருந்தாலும் கூட.

ரமோட்ஸ்வே, அவரது நகைச்சுவையை ரசித்தபடி இல்லையில்லை.. நான் உங்களிடம் காட்டும் சில பொருட்களை என்ன என்று கண்டுபிடித்துக் கூறினால் போதும் என்றாள். பின்னர், தன்னிடமிருந்த காகித உறையை எடுத்துப் பிரித்து, மேஜை மீது கவிழ்த்தாள்.

குலுபனே, சிரிப்பதை உடனே நிறுத்தி விட்டு, மூக்குக்கண்ணாடியைச் சரி செய்தபடி அந்த எலும்பை எடுத்துப் பார்த்தார். மூன்றாவது விரலுக்கும் மணிக்கட்டுக்கும் நடுவில் உள்ள எலும்பு.. எட்டு அல்லது ஒன்பது வயது குழந்தையுடையது.

- அவர் சொல்ல, ரமோட்ஸ்வேக்கு மூச்சு வாங்கியது.

குழந்தையா..

அதில் சந்தேகமேயில்லை. ஒரு சிறு குழந்தையுடையதாகத்தான் இருக்க முடியும். பெரியவர்கள் என்றால் இவ்வளவு சின்னதாக இருக்காது. பார்த்தவுடனேயே தெரிகிறது. ஏழு அல்லது எட்டு வயது இருக்கலாம். இல்லை, சற்று பெரிய குழந்தையாகவும் இருக்கலாம்..

எலும்பை மேஜை மீது வைத்து விட்டு, ரமோட்ஸ்வேயைப் பார்த்தார். உங்களுக்கு எங்கிருந்து கிடைத்தது?


நம்பர் 1 பெண்கள் துப்பறியும் நிறுவனம் - Page 7 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

நம்பர் 1 பெண்கள் துப்பறியும் நிறுவனம் - Page 7 Empty Re: நம்பர் 1 பெண்கள் துப்பறியும் நிறுவனம்

Post by சிவா Fri Jul 18, 2014 12:38 am



ரமோட்ஸ்வே தோள்பட்டையைக் குலுக்கிக் கொண்டாள்.

யாரோ என்னிடம் காட்டினார்கள். என்னுடைய வாடிக்கையாளர்களைப் பற்றி நீங்களும் விசாரிக்க மாட்டீர்கள்.. இல்லையா?

டாக்டர் அருவருப்புடன், இது மாதிரியான பொருட்கள், கை விட்டு, கை மாறிப் போகக் கூடாது என்றார்.

இந்த மனிதர்களுக்கு மரியாதையே தெரியாமல் போய் விட்டது..

ரமோட்ஸ்வே அதை ஆமோதித்தாள்.

வேறு ஏதாவது உங்களால் சொல்ல முடியுமா.. அதாவது, குழந்தை எப்போது இறந்திருக்கலாம் என்று..

டாக்டர், மேஜை இழுப்பறையிலிருந்து ஒரு பூதக்கண்ணாடியை எடுத்து, அந்த எலும்பை உள்ளங்கையில் வைத்து, திரும்ப நன்றாக ஆராய்ந்தார்.

ரொம்ப காலம் முன்பு என்று சொல்ல முடியாது. ஓரளவு சமீபத்தில்தான் இருக்க வேண்டும். அந்த எலும்பின் மீது சிறிய தசைப் பகுதி இருக்கிறது. ரொம்பவும் உலர்ந்து போகவில்லை. சில மாதங்களாகியிருக்கலாம். நிச்சயமாகக் கூற முடியாது..

ரமோட்ஸ்வே பயத்தில் மெலிதாக அதிர்ந்தாள். சாதாரண எலும்பைக் கையாளுவது வேறு.. ஆனால், மனித எலும்பைக் கையாளுவது என்பது வேறு.

இன்னொரு விஷயம்.. என்ற டாக்டர், இந்த எலும்புக்கு உரிய குழந்தை இறந்திருக்கும் என்று ஏன் நினைக்கிறீர்கள்? நீங்கள் ஒரு துப்பறிபவர். கை, கால் இழந்தாலும் கூட ஒரு குழந்தை உயிருடன் இருக்க முடியும். இதைப் பற்றி நீங்கள் நினைத்துப் பார்த்தீர்களா.. என்று கேட்டார்.

இந்தத் தகவலை, அன்றிரவு மட்கோனி டின்னருக்காக ரமோட்ஸ்வே வீட்டுக்கு வந்தபோது, அவள் சொன்னாள். அவர், ஏற்கெனவே இரவு சாப்பாட்டுக்கு வர சம்மதித்திருந்தார். ஒரு பெரிய பானையில் ஸ்டூ என்கிற குழம்பும், அரிசி, பூசணி சேர்ந்த ஒரு வகை உணவும் தயாரித்திருந்தாள். பாதி சாப்பிட்டுக் கொண்டிருந்த போது அவள், டாக்டரிடம் திரட்டிய தகவலைச் சொன்னாள். மட்கோனி சாப்பிடுவதைப் பாதியில் நிறுத்தினார்.

ஐயோ, குழந்தையா.. என திகைப்புடனும் கவலையுடனும் கேட்டார்.

டாக்டர் குலுபனே அப்படித்தான் சொன்னார். ஏழு அல்லது எட்டு வயது இருக்கலாம் என்று..

மட்கோனி சிலிர்த்துக் கொண்டார். அந்தப் பை, அவரிடம் கிடைக்காமலேயே இருந்திருக்கலாம். இந்த மாதிரியான சம்பவங்கள் நடப்பது எல்லோரும் அறிந்த ஒன்று. அதில் யாருக்குமே தலையிட பயம். அதுவும், சார்லி கோட்ஸ்ஸே சம்பந்தப்பட்டது என்றால் கேட்கவே வேண்டாம். தீராத கஷ்டங்கள்தான் ஏற்படும்.

நாம் என்ன செய்யலாம்? என்றாள் ரமோட்ஸ்வே.

மட்கோனி, கண்களை மூடிக் கொண்டு, எச்சிலை விழுங்கினார்.

போலீஸுக்குப் போகலாம். போனால், நான்தான் அந்தப் பையை எடுத்தவன் என்று கோட்ஸ்ஸேவுக்குத் தெரிந்து விடும். அவ்வளவுதான். என் கதை முடிந்து விடும்.

ரமோட்ஸ்வே, அவர் சொல்வதை ஆமோதித்தாள். குற்றங்களைக் கண்டுபிடிப்பதில் போலீஸுக்கு அத்தனை ஆர்வம் கிடையாது. அதில், சில சமாசாரங்களை துப்பறிவதில், அவர்களுக்குத் துளி கூட விருப்பமே கிடையாது. நாட்டில் அதிகாரம் மிகுந்த ஒருவன் மாந்திரீகத்தில் ஈடுபட்டிருந்தால், அந்தப் பக்கமே போலீஸார் தலை வைத்துப் படுக்க மாட்டார்கள்.

நாம் போலீஸுக்குப் போக வேண்டுமென எனக்குத் தோன்றவில்லை.. - ரமோட்ஸ்வே கூறினாள்.

அப்படியானால், இதை மறந்து விடலாம்.. என்று மட்கோனி, பரிதாபமாக அவளைப் பார்த்தார்.

இல்லை. அப்படிச் செய்ய முடியாது. எல்லாருமே இப்படிப்பட்ட விஷயங்களை மறந்துதான் விடுகிறார்கள். வெகுகாலமாகவே அப்படித்தான் நடக்கிறது. நாம் கண்டிப்பாக அப்படி இருக்கக் கூடாது..

மட்கோனி தலையைக் குனிந்து கொண்டார். அவருக்கு பசியே பறந்து போயிற்று. ஸ்டூ தட்டில் ஆறிக் கொண்டிருந்தது.

நாம் முதலில் செய்ய வேண்டியது என்னவென்றால், கோட்ஸ்ஸே, சர்வீஸுக்காக உங்களிடம் அனுப்பியுள்ள காரின் முன் பக்கக் கண்ணாடியை உடைத்து விடுவதுதான். அப்புறம், கோட்ஸ்ஸேவுக்கு போன் செய்து, யாரோ திருடர்கள் உடைத்து விட்டார்கள் என்றும், உங்களுடைய பாதுகாப்பில் இருக்கும்போது இப்படி நடந்து விட்டதால், நீங்களே அதற்கு புதிய கண்ணாடி போட்டு விடுவதாகவும் சொல்லுங்கள். அவன் என்ன கூறுகிறான் என்று பார்ப்போம்..

அப்புறம்?

அவன் வந்து ஏதோ ஒன்று, காருக்குள் இருந்தது காணாமல் போய் விட்டதாகக் கூறினால், நீங்கள் அந்தப் பொருளை மீட்க முயற்சிப்பதாகவும், உங்களுக்கு ஒரு சிறந்த துப்பறியும் பெண்மணியைத் தெரியும் என்றும், அவள் அந்தப் பொருளை கண்டுபிடித்துக் கொடுத்து விடுவாள் என்றும் கூறுங்கள்.. அதாவது, என் மூலமாக..

மட்கோனியின் முகம் வாடி விட்டது.


நம்பர் 1 பெண்கள் துப்பறியும் நிறுவனம் - Page 7 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

நம்பர் 1 பெண்கள் துப்பறியும் நிறுவனம் - Page 7 Empty Re: நம்பர் 1 பெண்கள் துப்பறியும் நிறுவனம்

Post by சிவா Fri Jul 18, 2014 12:39 am



அப்படியெல்லாம் கோட்ஸ்ஸேவிடம் பேசிவிட முடியாது. ஏகப்பட்ட சிபாரிசுகள் இருந்தால்தான் அவனை அணுக முடியும்..

அப்புறம்.. நான் அந்தப் பையை எடுத்துக் கொண்டு அவனைப் பார்க்கப் போகிறேன். அந்த மாந்திரீக வைத்தியரின் பெயரையும் கண்டுபிடிக்கிறேன். அப்புறம் என்ன செய்வது என்று யோசிப்போம்.

அவள் சொல்லும்போது, அது மிகவும் சுலபமான வேலையாகத்தான் தோன்றியது மட்கோனிக்கு. இந்தத் திட்டம் செயல்படக் கூடியது என்றும் தோன்றியது. நம்பிக்கை என்பது ஒரு சந்தோஷமான தொற்று நோய் மாதிரி. ஒருவரிடமிருந்து ஒருவருக்குப் போகும்.

மட்கோனிக்கு பசி திரும்பியது. இன்னொரு முறை ஸ்டூவுடன் ஒரு பிடி பிடித்தார். பெரிய கோப்பை நிறைய தேநீர் அருந்தினார். அவர் கார் வரையில் கூடவே சென்ற ரமோட்ஸ்வே அவரை வழி அனுப்பினாள்.

இருட்டில் காரின் வெளிச்சம் மறையும் வரையில் பார்த்துக் கொண்டு நின்றாள். டாக்டரின் வீட்டு விளக்குகள் எரிவது அவளுக்குத் தெரிந்தது. திரைச்சீலைகள் அகற்றப்பட்டிருந்தன. டாக்டர் அங்கு நின்று இருட்டைப் பார்த்துக் கொண்டிருந்தார். ரமோட்ஸ்வே இருளில் நின்று கொண்டிருந்ததனால், அவரால் அவளைப் பார்க்க முடியாது. ஆனால், அவர் வெளிச்சத்தில் நின்றபடி இவள் இருக்கும் பக்கமே ஊன்றிப் பார்ப்பது தெரிந்தது.


நம்பர் 1 பெண்கள் துப்பறியும் நிறுவனம் - Page 7 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

நம்பர் 1 பெண்கள் துப்பறியும் நிறுவனம் - Page 7 Empty Re: நம்பர் 1 பெண்கள் துப்பறியும் நிறுவனம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 7 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

Back to top

- Similar topics
» நம்பர் 1 பெண்கள் துப்பறியும் நிறுவனம் - மொழிபெயர்ப்பு மின்னூல்!
» நீரிழிவு நோய் பாதிப்பு இந்தியாதான் நம்பர் 1: உலக சுகாதார நிறுவனம் அறிக்கை
» பெண்கள் பாதுகாப்பில் தமிழகம் நம்பர் - 1 :)
» பெண்கள், சிறுமிகளை கடத்துவதில் தமிழ்நாடு 'நம்பர் ஒன்'!
» அதிகளவில் மது அருந்தும் பெண்கள்’ இந்த மாநிலம் தான் நம்பர் ஒன்!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum