ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Today at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மலேசிய விமானம் MH17 விபத்து: 295 பேர் பலி

+7
விமந்தனி
ஜாஹீதாபானு
பாலாஜி
ayyasamy ram
M.M.SENTHIL
சிவா
soplangi
11 posters

Page 6 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

Go down

மலேசிய விமானம் MH17 விபத்து: 295 பேர் பலி - Page 6 Empty மலேசிய விமானம் MH17 விபத்து: 295 பேர் பலி

Post by soplangi Thu Jul 17, 2014 10:09 pm

First topic message reminder :

295 பயணிகளுடன் கோலாம்பூர் நோக்கி பயணித்த மலேசிய விமானம், ரஷ்ய எல்லை அருகே விபத்துக்குள்ளானது.நெதர்லாந்து தலைநகர் ஆம்ஸ்டர்டாமிலிருந்து, மலேசிய தலைநகர் கோலாம்பூருக்கு போயிங் ரக மலேசிய விமானம் ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த விமானம் உக்ரைன் நிலப்பரப்பில், ரஷ்ய எல்லைக்கு 50 கி.மீ.,க்கு முன்னால் விபத்துக்குள்ளானதாக, இன்டர்பேக்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. விமானம் உக்ரைன் நிலப்பரப்பில் பறந்து கொண்டிருந்த போது, ரஷ்ய எல்லைக்கு முன்னால் திடீரென தாழ்வாக பறந்ததாகவும், பின்னர் விமானத்தில் தீப்பிடித்து விமானம் விழுந்து நொறுங்கியதாகவும் முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

சுட்டுவீழ்த்தப்பட்டதா?

உக்ரைனில் ரஷ்ய ஆதரவு படைகளுக்கு எதிராக அந்நாட்டு அரசுப்படைகள் நடத்திய தாக்குதலில் மலேசிய விமானம் சிக்கியிருக்கலாம் என சந்தேகங்கள் எழுந்துள்ளன. எனினும் இந்த தகவலை யாரும் உறுதிப்படுத்தவில்லை.

-- தினமலர்
soplangi
soplangi
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 980
இணைந்தது : 21/03/2013

Back to top Go down


மலேசிய விமானம் MH17 விபத்து: 295 பேர் பலி - Page 6 Empty Re: மலேசிய விமானம் MH17 விபத்து: 295 பேர் பலி

Post by சிவா Mon Jul 21, 2014 4:34 am

பேரதிர்ச்சியில் பயணிகள் உடனடி மரணம் அடைந்திருப்பார்கள் – நிபுணர் கருத்து

ஏவுகணை வந்து தாக்கி எம்எச்17 விமானம் வெடித்த போது, பேரதிர்ச்சியிலும், அதிக அளவிலான அழுத்தத்திலும் பயணிகள் அனைவரும் உடனடியாக இறந்திருக்கலாம் அல்லது சுயநினைவு இன்றி போயிருக்கலாம் என்று விமானப் போக்குவரத்து வல்லுநர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

நியூயார்க் அருகே கடந்த 1996 -ம் ஆண்டு டிடபிள்யூஏ 800 விமானம் வெடித்து சிதறிய சம்பவத்தை ஆராய்ச்சி செய்தவரான ஜேம்ஸ் வோஸ்வின்கெல் என்ற அதிர்ச்சி மற்றும் அறுவை சிகிச்சை நிபுணர் கூறுகையில், நடுவானில் விமானம் வெடித்து சிதறும் போது பயணிகளுக்கு பேரதிர்ச்சி மூன்று வழிகளில் ஏற்படும் என்று குறிப்பிட்டுள்ளார்.

ஒன்று வெடிக்கும் போது ஏற்படும் அதிக அளவிலான விசை, இரண்டு விமானம் மணிக்கு 500 கிலோமீட்டர் வேகத்தில் போகும் போது உடனடியாக அதன் வேகம் குறைதல் மற்றும் விமானம் கீழே விழுவது போன்ற மூன்று காரணங்களால் பயணிகளுக்கு இந்த பேரதிர்ச்சி ஏற்படும் என நியூயார்க்கின் ஸ்டோனி ப்ரூக் பல்கலைக்கழகத்தின் தலைமை அதிர்ச்சி மற்றும் அறுவை சிகிச்சை நிபுணரான வோஸ்வின்கெல் தெரிவித்துள்ளார்.

அதே வேளையில், விமானத்தில் ஏற்படும் அதிக அழுத்தத்தால், 33,000 அடி உயரத்தில் பயணிகளுக்கு நினைவு தப்பி உடனடியாக மரணத்தை அடைவார்கள் என்று தெரிவித்துள்ளார்.

“பயணிகளுக்கு அவர்களுக்கு என்ன நடக்கிறது என்றே தெரியாது. விமானம் அவ்வளவு உயரத்தில் இருந்து விழுவதும் தெரியாது” என்று வோஸ்வின்கெல் கூறியுள்ளார்.

நியூயார்க் அருகே லாங் தீவில் கடந்த 1996 -ம் ஆண்டு டிடபிள்யூஏ 800 விமானம் வெடித்து சிதறிய போது அதிலிருந்த 230 பயணிகளும் உடனடி மரணத்தைத் தழுவினர்.

“கடலில் விழுந்த பயணிகளின் உடலில் செய்யப்பட்ட பரிசோதனையில், அவர்களது நுரையீரலில் தண்ணீர் போகவில்லை.காரணம் பயணிகள் கடலில் விழும்போது அவர்கள் அனைவரின் மூச்சும் ஏற்கனவே நின்றிருக்க வேண்டும்” என்றும் வோஸ்வின்கெல் மேற்கோள்காட்டியுள்ளார்.


மலேசிய விமானம் MH17 விபத்து: 295 பேர் பலி - Page 6 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மலேசிய விமானம் MH17 விபத்து: 295 பேர் பலி - Page 6 Empty Re: மலேசிய விமானம் MH17 விபத்து: 295 பேர் பலி

Post by சிவா Mon Jul 21, 2014 4:35 am

இறந்தவர்களை ஹரிராயாவுக்கு முன்னர் கொண்டு வர வேண்டும், நஜிப்

சுட்டு வீழ்த்தப்பட்ட எம்எச்17 இல் கொல்லப்பட்ட அனைத்து மலேசிய குடிமக்களும் ஹரிராயாவுக்கு முன்னர் நாட்டிற்கு கொண்டு வரப்பட வேண்டும் என்று பிரதமர் நஜிப் கூறினார்.

“அடையாளம் காணப்பட்டவர்களை மலேசிய அரசாங்கம் நாட்டிற்கு கொண்டு வரும். அவர்கள் மலேசிய மண்ணில் அடக்கம் செய்யப்படுவர்” என்று நஜிப் இன்றிரவு கோலாலம்பூரில் கூறினார்.

எம்எச்17 கிழக்கு உக்ரேனின் இயங்கும் ரஷ்ய ஆதரவு பெற்ற பிரிவினைவாதிகளால் சுட்டு வீழ்த்தப்பட்டதாக நம்பப்படுகிறது.

சுட்டு வீழ்த்தப்பட்ட விமானத்தில் பயணித்த 44 மலேசியர்களின் உடல்கள் அடையாளம் காணப்படுவதில் உதவி அளிப்பதற்காக மலேசியா ஒரு நியுணர் குழுவை அனுப்பியுள்ளது. ஆனால், அக்குழு அந்த இடத்திற்கு செல்ல அனுமதிக்கப்படவில்லை.


மலேசிய விமானம் MH17 விபத்து: 295 பேர் பலி - Page 6 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மலேசிய விமானம் MH17 விபத்து: 295 பேர் பலி - Page 6 Empty Re: மலேசிய விமானம் MH17 விபத்து: 295 பேர் பலி

Post by சிவா Mon Jul 21, 2014 4:40 am


மலேசிய விமானம் வீழ்த்தப்பட்டதில் தமிழர் குடும்பமே பலி!

கோலாலம்பூர்: மலேசிய விமானம் வீழ்த்தப்பட்டதில் தமிழர் குடும்பமே பலியான சோகம் நிகழ்ந்துள்ளது.

மலேசிய ஏர்லைன்ஸ் விமானம் உக்ரைனில் சுட்டு வீழ்த்தப்பட்டு 298 பேர் பலியானதில், ஒரு தமிழர் குடும்பமும் அடங்கும். மலேசியாவில் உள்ள ‘ஷெல்’ நிறுவனத்தில் ஆசிய பசிபிக் பிரிவின் தலைவராகவும், ஐ.டி. பட்டதாரிகளின் ஆலோசகராகவும் பணியாற்றி வந்தவர் பால் ராஜசிங்கம் சிவஞானம். இவர் தனது மனைவி, மகனுடன் நெதர்லாந்து சென்றிருந்தார்.

நெதர்லாந்தில் பயணத்தை முடித்துக்கொண்டு இவர் குடும்பத்துடன் கோலாலம்பூர் வந்தபோதுதான் மலேசிய விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளது. இதனால் பால் ராஜசிங்கம் சிவஞானம் குடும்பமே இதில் பலியாகி விட்டது.

பால் ராஜசிங்கம் சிவஞானம் பணியாற்றி வந்த அதே ‘ஷெல்’ நிறுவனத்தில் கஜகஸ்தானில் பணியாற்றி வந்தவர் தம்பி ஜீ. இவர் தனது மனைவி அரிஜா காஜலீ, குழந்தைகள் முகமது ஆரிப், முகமது அப்சல், மார்ஷா அஜ்மீனா, முகமது அப்ரஸ் ஆகியோருடன் கோலாலம்பூர் வந்து கொண்டிருந்தார்.

இவர் கஜகஸ்தானில் இருந்து கோலாலம்பூருக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். புதிய பணியிடத்தில் சேருவதற்கு முன் அவர் குடும்பத்துடன் ரம்ஜான் கொண்டாட்டத்துக்காக வந்துகொண்டிருந்தார். அப்படி வரும்போதுதான் அவர் குடும்பத்துடன் பலியாகி விட்டார்.

கஜகஸ்தானில் அரிஜா, பிந்துலா வளர்ச்சிக்குழுமம் என்ற நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். கணவருடன் நாடு திரும்பும் நோக்கத்தில் அவர் வேலையை விட்டு விட்டு கணவருடன் பயணம் செய்தார் என தெரியவந்துள்ளது.


மலேசிய விமானம் MH17 விபத்து: 295 பேர் பலி - Page 6 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மலேசிய விமானம் MH17 விபத்து: 295 பேர் பலி - Page 6 Empty Re: மலேசிய விமானம் MH17 விபத்து: 295 பேர் பலி

Post by சிவா Mon Jul 21, 2014 4:40 am

MH17 விவகாரத்தில் நடுநிலையில்லாத செய்தி: ரஷ்ய நிருபர் பதவி விலகல்

மாஸ்கோ, 19 ஜூலை- கடந்த வியாழக்கிழமை உக்ரைன் எல்லையில் சுட்டுவீழ்த்தப்பட்ட மலேசிய விமானம் தொடர்பாக நடுநிலையான செய்திகள் வெளியிடப்படவில்லை என்பதைக் காரணம் காட்டி RT எனப்படும் ரஷ்யன் டுடே ஊடக நிருபர் பதவி விலகுவதாக அறிவித்துள்ளார்.

சாரா ஃபித் என்ற அந்த நிருபரோடு சேர்த்து, கடந்த மார்ச் மாதம் உக்ரைன் ரஷ்யா அரசியல் நெருக்கடி தொடர்பான செய்தியில் ஏமாற்றமடைந்ததாகக் கூறி பதவி விலகிய மற்றொரு நிருபரும் இதே போல் பதவி விலகினார்.

“நான் இன்று பதவி விலகிறேன். எனது சக பணியாளரை நான் மதிக்கிறேன். ஆனால் உண்மையின் பக்கம் இருக்கிறேன்” என தனது டிவிட்டர் சமூக வலைதளத்தில் சாரா ஃபிர்த் தெரிவித்தார்.

இதனிடையே இது குறித்து ரஷ்யாவைத் தலைமையகமாகக் கொண்ட RT ஊடகம் “சாரா ஃபிர்த் தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தியதுடன், உண்மையின் பக்கம் இருப்பதாகத் தெரிவித்தார். ஆனால் எங்களுக்கென தனி பாணி உள்ளது” என AFP செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளது.


மலேசிய விமானம் MH17 விபத்து: 295 பேர் பலி - Page 6 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மலேசிய விமானம் MH17 விபத்து: 295 பேர் பலி - Page 6 Empty Re: மலேசிய விமானம் MH17 விபத்து: 295 பேர் பலி

Post by சிவா Mon Jul 21, 2014 3:19 pm


ஏர் இந்தியா விமானி எம்எச்17 விமானத்தை தொடர்பு கொள்ள முயற்சித்திருக்கிறார்!

கோலாலம்பூர்,ஜூலை 21- மலேசியா ஏர்லைன்ஸ் எம்எச்17 விமானம் ரேடார் தொடர்பில் இருந்து விலகிய சில நிமிடங்களில், அதற்கு 25 கிலோமீட்டர் அருகாமையில் பறந்து கொண்டிருந்த ஏர் இந்தியா விமானத்தின் விமானி, அதை தொடர்பு கொள்ள முயற்சித்ததாக இந்தியாவின் டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.

உக்ரைன் விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டு அறையில் இருந்து வந்த அழைப்பிற்கு எம்எச்17 விமானத்தில் இருந்து எந்த பதிலும் இல்லாததால், கட்டுப்பாட்டு அறை அதிகாரிகள் ஏர் இந்தியா விமானத்தின் விமானியை மாஸ் விமானத்துடன் தொடர்பு கொள்ள முயற்சிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளனர்.

ஒரு விமானத்துடனான தொடர்பு துண்டிக்கப்பட்டால் அதன் சுற்றுவட்டாரத்தில் உள்ள பிற விமானங்கள் அந்த விமானத்துடன் தொடர்பு கொள்ளுமாறு கூறுவது விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டு அதிகாரிகளின் வழக்கமாகும்.

இந்நிலையில், எம்எச் 17 பேரிடர் நடப்பதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு, விமான போக்குவரத்து கட்டுப்பாட்டாளர்கள், மலேசிய விமானத்தை நேரடி பாதையை எடுக்குமாறு கட்டளையிட்டதை தான் கேட்டதாக ஏர் இந்தியா விமானி கூறியுள்ளதாக தி டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது.

எனினும், ஏர் இந்தியா செய்தி தொடர்பாளர் இவ்வறிக்கை குறித்து கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டார்.


மலேசிய விமானம் MH17 விபத்து: 295 பேர் பலி - Page 6 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மலேசிய விமானம் MH17 விபத்து: 295 பேர் பலி - Page 6 Empty Re: மலேசிய விமானம் MH17 விபத்து: 295 பேர் பலி

Post by சிவா Mon Jul 21, 2014 3:20 pm


எம்எச்370, எம்எச்17 இரு சம்பவங்களிலும் பாதிக்கப்பட்ட ஆஸ்திரேலிய குடும்பம்!

சிட்னி, ஜூலை 21 – மாஸ் விமானத்தின் இரு விபத்துகளிலும் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஒரு குடும்பம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது, அனைவரையும் சோகக் கடலில் ஆழ்த்தி உள்ளது.

உலக அளவில் பெரும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்திய மலேசியாவின் மாஸ் விமானம் எம்எச் 370-ன் பேரிடர் ஏற்படுத்திய வடுக்கள் இன்னும் ஆறாத நிலையில், கடந்த வியாழன் அன்று கிழக்கு உக்ரைனில் போராட்டக் குழுக்குகளால் எம்எச் 17 விமானம் வீழ்த்தப்பட்டது, ஒட்டு மொத்த மலேசியாவையும் நிலைகுலைய வைத்துள்ளது.

இந்த இரு பேரிடர்களிலும் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஒரு குடும்பம் பாதிக்கப்பட்டு இருப்பது, உலக அளவில் அந்த குடுபத்தின் மீது கவனத்தையும், அனுதாபத்தயும் ஏற்படுத்தி உள்ளது.

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த மேரி மற்றும் ஆல்பர்ட் ரிஸ்க் தம்பதிகள் ஐரோப்பாவில் ஒரு மாத விடுமுறையை கழித்து விட்டு மீண்டும் தங்கள் நாட்டிற்கு எம்எச் 17 விமானம் மூலம் திரும்பிக் கொண்டிருந்தனர்.

இந்நிலையில் யாரும் எதிர்பாரா வண்ணம் விமானம் உக்ரைன் கிளர்ச்சியாளர்களால் ஏவுகணை கொண்டு தாக்கி வீழ்த்தப்பட்டது. 298 பேரை பலிவாங்கிய இந்த தாக்குதலில், மேரி மற்றும் ஆல்பர்ட் ஆகிய இருவரும் அடங்குவர் என்பது மிகுந்த துயரமான செய்தியாகும்.

கடந்த மார்ச் 8-ம் தேதி கோலாலம்பூரிலிருந்து பெய்ஜிங் நோக்கி சென்ற போது, மாயமான எம்எச் 370 விமானத்தில், மேரியின் தாயார் வழிச் சொந்தமான ரோட்னி மற்றும் அவரது மனைவி மேரி பர்ரோஸ், ஆகியோர் பயணித்தது குறிப்பிடத்தக்கது.

அந்த சோகத்திலிருந்தே மீள்வதற்கு வழி தெரியாமல் தவித்த நிலையில், மேரியின் குடும்பம் தற்போது மேரியையும், அவரது கணவரையும் விபத்தில் இழந்திருப்பது பெரும் வேதனையை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து அவர்கள் உறவினர் கூறுகையில், “மலேசிய ஏர்லைன்ஸ்-ன் இரு விபத்துகளிலும் எங்கள் குடும்பம் பாதிக்கப்பட்டு இருப்பது குறித்து என்ன கூறுவதென்று எங்களுக்கு தெரியவில்லை. இந்த விபத்துகள் யாரும் எதிர்பாராமல் நடந்தவை. இதில் மாஸ் நிறுவனம் பற்றி குறை கூற ஒன்றும் இல்லை” என்று கூறியுள்ளார்.


மலேசிய விமானம் MH17 விபத்து: 295 பேர் பலி - Page 6 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மலேசிய விமானம் MH17 விபத்து: 295 பேர் பலி - Page 6 Empty Re: மலேசிய விமானம் MH17 விபத்து: 295 பேர் பலி

Post by சிவா Mon Jul 21, 2014 3:24 pm



மலேசிய விமானம் MH17 விபத்து: 295 பேர் பலி - Page 6 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மலேசிய விமானம் MH17 விபத்து: 295 பேர் பலி - Page 6 Empty Re: மலேசிய விமானம் MH17 விபத்து: 295 பேர் பலி

Post by சிவா Mon Jul 21, 2014 3:32 pm

ஐநா பாதுகாப்பு மன்றத்தில் உக்ரேன்மீது தீர்மானம்

உக்ரேனில் மலேசிய விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதன் தொடர்பில் இன்று ஐநா பாதுகாப்பு மன்றத்தில் ஒரு தீர்மானம் கொண்டுவரப்படுகிறது. அத்தீர்மானம், விமானம் சுட்டுவீழ்த்தப்பட்டதைக் கண்டிப்பதுடன் அச்சம்பவத்துக்குக் காரணமானவர்களைக் கண்டுபிடித்துப் பொறுப்பாக்க வேண்டும் என்றும் விமானம் விழுந்து நொறுங்கிய இடத்தில் கிளர்ச்சிப்படையினர் எவ்வித மாற்றத்தையும் செய்யக் கூடாது என்றும் கேட்டுக்கொள்ளும்.

அச்சம்பவத்தில் 28-பேரைப் பறிகொடுத்த ஆஸ்திரேலியாவால் வரையப்பட்ட அத்தீர்மானத்தை ரஷ்யா ஆதரிக்குமா என்பது தெரியவில்லை.

ரஷ்யாவைச் சாந்தப்படுத்தும் நோக்கத்தில் “சுட்டு வீழ்த்தப்பட்ட” விமானம் என்பதற்குப் பதிலாக “வீழ்த்தப்பட்ட” விமானம் என்று தீர்மான வாசகத்தில் திருத்தம் செய்யப்பட்டிருப்பதாக ராய்ட்டர்ஸ் கூறியுள்ளது.


மலேசிய விமானம் MH17 விபத்து: 295 பேர் பலி - Page 6 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மலேசிய விமானம் MH17 விபத்து: 295 பேர் பலி - Page 6 Empty Re: மலேசிய விமானம் MH17 விபத்து: 295 பேர் பலி

Post by சிவா Tue Jul 22, 2014 2:14 am

எம்.எச்.17: 'எனது மகளை கொலை செய்ததற்கு நன்றி' உயிரிழந்த சிறுமியின் தந்தை புதினுக்கு கடிதம்

எம்.எச்.17 மலேசிய விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதில் இறந்த சிறுமியின் தந்தை 'எனது மகளை கொலை செய்ததற்கு நன்றி' என்று தெரிவித்துள்ளார்.

நெதர்லாந்து தலைநகர் ஆம்ஸ்டர்டாமில் இருந்து கடந்த 17-ந்தேதி கோலாலம்பூர் நோக்கி வந்து கொண்டிருந்த மலேசியா ஏர்லைன்ஸ் விமானம் எம்.எச்.17, கிழக்கு உக்ரைன் பகுதியில் வந்த போது ரஷிய ஆதரவு கிளர்ச்சியாளர்களால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில், அந்த விமானத்தில் பயணம் செய்த 298 பேரும் உயிரிழந்தனர். இந்த சம்பவத்துக்கு ரஷியாவும் பின்னணியில் இருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதில் நெதர்லாந்தை சேர்ந்த 17 வயது மாணவி எல்ஸ்மிய்க் டி போர்ஸ்ட்டும் பலியானார். மலேசிய விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதில் உலக நாடுகளே அதிர்ச்சியில் உள்ளது. மேலும், சர்வதேச விசாரணையை வலியுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் மாணவியின் தந்தை ஹான்ஸ் டி போர்ஸ்ட், ரஷியா அதிபர் புதினுக்கு வெளிப்படையான ஒரு கடிதத்தை எழுதியுள்ளார். இந்த கடிதம் அந்நாட்டு ஆங்கில நாளிதழ்களில் வெளியிடப்பட்டுள்ளது. அதில் 'எனது மகளை கொலை செய்தவர்களுக்கு நன்றி' என்று குறிப்பிட்டுள்ளார். என்னுடைய அன்பு நிறைந்த மற்றும் ஒரே மகளான எல்ஸ்மியக் டி போஸ்ட்டை கொலை செய்த, ரஷியா அதிபர் விளாடிமீர் புதின், கிளர்ச்சி படையினர் மற்றும் உக்ரைன் அரசுக்கு மிகவும் நன்றி’ என்று குறிப்பிட்டுள்ளார். எதிர்பாராத விதமாக எனது மகள் பயணம் செய்த விமானம் போர் ஏற்பட்டுள்ள நாட்டில் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.

"எனது மகள் எச்ஸ்மியக் அடுத்த ஆண்டு பள்ளி படிப்பை தனது தோழிகள் ஜூலிலா மற்றும் மாரினெவுடன்(இவர்கள் விமானத்தில் பயணம் செய்யவில்லை) முடிக்கவுள்ளார். அவர் மிகவும் சிறப்பாக தனது பணியினை செய்தார். டெல்ப் பல்கலைக்கழகத்தில் சிவில் என்ஜினியரிங் படிக்க விரும்பினார். அதனை செய்வதில் அவள் மிகவும் உற்சாகமாக காணப்பட்டாள். ஆனால் அவள் தற்போது உயிருடன் இல்லை. அவள் போர் நடந்துவரும் நாட்டில் வானத்தில் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளார்" என்று குறிப்பிட்டுள்ளார். என்னுடைய மகள் மற்றும் அவரது கனவை சுட்டுத் தள்ளியதில் இதனை செய்த நீங்கள் மிகவும் கர்வமாக இருப்பீர்கள் என்று நான் நம்புகிறேன். மீண்டும் நன்றி. வாழ்க்கையே அழிந்து விட்டது. எல்ஸ்மியக் டி போஸ்ட் விடுமுறையை கொண்டாட, தனது தயார், சகோதரன் மற்றும் வளர்ப்பு தந்தையுடன் மலேசியா சென்றுள்ளார்.


மலேசிய விமானம் MH17 விபத்து: 295 பேர் பலி - Page 6 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மலேசிய விமானம் MH17 விபத்து: 295 பேர் பலி - Page 6 Empty Re: மலேசிய விமானம் MH17 விபத்து: 295 பேர் பலி

Post by சிவா Tue Jul 22, 2014 2:26 am

மலேசிய விமானம் சுட்டு வீழ்த்தப்பட்ட விவகாரம்; உலகநாடுகள் அழுத்தத்தில் ரஷியா

மலேசிய விமானம் சுட்டு வீழ்த்தப்பட்ட விவகாரத்தில் ரஷியாவிற்கு உலகநாடுகளின் அழுத்தம் ஏற்பட்டுள்ளது.

மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம்– எம்.எச்.17, உக்ரைனில் ரஷிய ஆதரவு கிளர்ச்சியாளர்கள் வசமுள்ள ஷக்தர்ஸ்க் என்ற இடத்தில் சுட்டு வீழ்த்தப்பட்டது. இந்த கோர சம்பவத்தில் விமானத்தில் பயணம் செய்த 298 பேரும் கூண்டோடு பலியானார்கள். இந்த சம்பவம் தொடர்பாக நம்பகமான, வெளிப்படையான, சர்வதேச விசாரணை நடத்தப்படவேண்டும் என்று அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா உள்ளிட்ட உலகத்தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். கிழக்கு உக்ரைனில் ரஷிய ஆதரவு கிளர்ச்சியாளர்கள் வசமுள்ள பகுதியிலிருந்து எஸ்.ஏ.–11 ஏவுகணைதான் விமானத்தை சுட்டு வீழ்த்தி இருப்பதாக அமெரிக்கா கூறுகிறது.

இதற்கிடையே மலேசிய விசாரணை குழுவினர் உக்ரைன் தலைநகர் கீவ் போய்ச் சேர்ந்தனர். சம்பவ இடம் சிதைக்கப்படாமல், ஆதாரங்கள் அழிக்கப்படாமல் பாதுகாக்கப்பட வேண்டும் என மலேசியா வேண்டுகோள் விடுத்துள்ளது. ஆனால் சம்பவ இடம் பாதுகாக்கப்படவில்லை என்று மலேசிய போக்குவரத்து மந்திரி லயவ் டயாங் லாய் கூறினார். இதற்கிடையே சம்பவ இடத்தில் ஐரோப்பிய பாதுகாப்பு, ஒத்துழைப்பு அமைப்பின் கண்காணிப்பாளர்களை துப்பாக்கி ஏந்திய ஆசாமிகள் அனுமதிக்காமல் தடுத்து விட்டதாகவும் புகார் எழுந்துள்ளது.

இவ்விவகாரத்தில் ரஷியாவிற்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. விமானம் வீழ்த்தப்பட்டது தொடர்பாக சர்வதேச விசாரணை நடத்த அமெரிக்கா அதிபர் ஒபாமா உலக நாட்டு தலைவர்களின் ஆதரவை கோரி வருகிறார். ஐரோப்பிய பாதுகாப்பு, ஒத்துழைப்பு அமைப்பின் கண்காணிப்பாளர்களை துப்பாக்கி ஏந்திய ஆசாமிகள் அனுமதிக்காததால் மலேசிய விமானம் சுட்டு வீழ்த்தப்பட்ட தடயங்களை அழிக்க ரஷியா உதவுவதாக உக்ரைன் பகிரங்கமாக குற்றம்சாட்டி உள்ளது. இதனையடுத்து விசாரணை குழுவினர் சம்பவ இடத்திற்கு அனுமதிக்கப்பட வேண்டும் என்று ரஷியாவிற்கு உலக நாடுகள் வலியுறுத்தியுள்ளன.

இவ்விவகாரம் தொடர்பாக அமெரிக்காவின் வெளியுறவுத் துறை மந்திரி ஜான் கெர்ரி, ரஷியாவின் வெளியுறவுத் துறை மந்திரி செர்ஜி லாவ்ரோவ்விடம் பேசியுள்ளார். அப்போது விசாரணை குழுவினர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்ட விவகாரத்தில் தங்களது கவலையை தெரிவித்துள்ளார். மலேசிய விமானம் சுட்டு வீழ்த்தப்பட்ட தடயங்களை அழிக்க ரஷியா உதவுகிறது என்ற உக்ரைன் நாட்டின் குற்றச்சாட்டையும் அமெரிக்கா பரிசீலித்து வருவதாகவும் அமெரிக்கா தெரிவித்துள்ளது.

விபத்து நடந்த பகுதியில் கிளர்ச்சியாளர் படையே மீட்பு பணியில் ஈடுபட்டனர். சடலங்களை அவர்கள் அழித்து வருகின்றனர் என்று கூறப்படுகிறது. விபத்தில் பலியானவர்களின் உடல்களை மீட்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. ஏராளமான உடல்கள் ஆங்காங்கே பல பாகங்களாக சிதறி கிடக்கின்றன. விபத்து நடந்து 2 நாட்களுக்கு மேலாகி விட்டதால் அவை அழுகி துர்நாற்றம் வீசுகின்றன என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.


மலேசிய விமானம் MH17 விபத்து: 295 பேர் பலி - Page 6 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மலேசிய விமானம் MH17 விபத்து: 295 பேர் பலி - Page 6 Empty Re: மலேசிய விமானம் MH17 விபத்து: 295 பேர் பலி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 6 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum