புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Today at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Today at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உயர்ந்த வாழ்க்கையை வீணாக்கிய காமம் I_vote_lcapஉயர்ந்த வாழ்க்கையை வீணாக்கிய காமம் I_voting_barஉயர்ந்த வாழ்க்கையை வீணாக்கிய காமம் I_vote_rcap 
92 Posts - 61%
heezulia
உயர்ந்த வாழ்க்கையை வீணாக்கிய காமம் I_vote_lcapஉயர்ந்த வாழ்க்கையை வீணாக்கிய காமம் I_voting_barஉயர்ந்த வாழ்க்கையை வீணாக்கிய காமம் I_vote_rcap 
39 Posts - 26%
வேல்முருகன் காசி
உயர்ந்த வாழ்க்கையை வீணாக்கிய காமம் I_vote_lcapஉயர்ந்த வாழ்க்கையை வீணாக்கிய காமம் I_voting_barஉயர்ந்த வாழ்க்கையை வீணாக்கிய காமம் I_vote_rcap 
10 Posts - 7%
mohamed nizamudeen
உயர்ந்த வாழ்க்கையை வீணாக்கிய காமம் I_vote_lcapஉயர்ந்த வாழ்க்கையை வீணாக்கிய காமம் I_voting_barஉயர்ந்த வாழ்க்கையை வீணாக்கிய காமம் I_vote_rcap 
7 Posts - 5%
sureshyeskay
உயர்ந்த வாழ்க்கையை வீணாக்கிய காமம் I_vote_lcapஉயர்ந்த வாழ்க்கையை வீணாக்கிய காமம் I_voting_barஉயர்ந்த வாழ்க்கையை வீணாக்கிய காமம் I_vote_rcap 
1 Post - 1%
viyasan
உயர்ந்த வாழ்க்கையை வீணாக்கிய காமம் I_vote_lcapஉயர்ந்த வாழ்க்கையை வீணாக்கிய காமம் I_voting_barஉயர்ந்த வாழ்க்கையை வீணாக்கிய காமம் I_vote_rcap 
1 Post - 1%
eraeravi
உயர்ந்த வாழ்க்கையை வீணாக்கிய காமம் I_vote_lcapஉயர்ந்த வாழ்க்கையை வீணாக்கிய காமம் I_voting_barஉயர்ந்த வாழ்க்கையை வீணாக்கிய காமம் I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உயர்ந்த வாழ்க்கையை வீணாக்கிய காமம் I_vote_lcapஉயர்ந்த வாழ்க்கையை வீணாக்கிய காமம் I_voting_barஉயர்ந்த வாழ்க்கையை வீணாக்கிய காமம் I_vote_rcap 
284 Posts - 45%
heezulia
உயர்ந்த வாழ்க்கையை வீணாக்கிய காமம் I_vote_lcapஉயர்ந்த வாழ்க்கையை வீணாக்கிய காமம் I_voting_barஉயர்ந்த வாழ்க்கையை வீணாக்கிய காமம் I_vote_rcap 
236 Posts - 37%
mohamed nizamudeen
உயர்ந்த வாழ்க்கையை வீணாக்கிய காமம் I_vote_lcapஉயர்ந்த வாழ்க்கையை வீணாக்கிய காமம் I_voting_barஉயர்ந்த வாழ்க்கையை வீணாக்கிய காமம் I_vote_rcap 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
உயர்ந்த வாழ்க்கையை வீணாக்கிய காமம் I_vote_lcapஉயர்ந்த வாழ்க்கையை வீணாக்கிய காமம் I_voting_barஉயர்ந்த வாழ்க்கையை வீணாக்கிய காமம் I_vote_rcap 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
உயர்ந்த வாழ்க்கையை வீணாக்கிய காமம் I_vote_lcapஉயர்ந்த வாழ்க்கையை வீணாக்கிய காமம் I_voting_barஉயர்ந்த வாழ்க்கையை வீணாக்கிய காமம் I_vote_rcap 
19 Posts - 3%
prajai
உயர்ந்த வாழ்க்கையை வீணாக்கிய காமம் I_vote_lcapஉயர்ந்த வாழ்க்கையை வீணாக்கிய காமம் I_voting_barஉயர்ந்த வாழ்க்கையை வீணாக்கிய காமம் I_vote_rcap 
12 Posts - 2%
Rathinavelu
உயர்ந்த வாழ்க்கையை வீணாக்கிய காமம் I_vote_lcapஉயர்ந்த வாழ்க்கையை வீணாக்கிய காமம் I_voting_barஉயர்ந்த வாழ்க்கையை வீணாக்கிய காமம் I_vote_rcap 
8 Posts - 1%
Guna.D
உயர்ந்த வாழ்க்கையை வீணாக்கிய காமம் I_vote_lcapஉயர்ந்த வாழ்க்கையை வீணாக்கிய காமம் I_voting_barஉயர்ந்த வாழ்க்கையை வீணாக்கிய காமம் I_vote_rcap 
7 Posts - 1%
T.N.Balasubramanian
உயர்ந்த வாழ்க்கையை வீணாக்கிய காமம் I_vote_lcapஉயர்ந்த வாழ்க்கையை வீணாக்கிய காமம் I_voting_barஉயர்ந்த வாழ்க்கையை வீணாக்கிய காமம் I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
உயர்ந்த வாழ்க்கையை வீணாக்கிய காமம் I_vote_lcapஉயர்ந்த வாழ்க்கையை வீணாக்கிய காமம் I_voting_barஉயர்ந்த வாழ்க்கையை வீணாக்கிய காமம் I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உயர்ந்த வாழ்க்கையை வீணாக்கிய காமம்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Jul 17, 2014 4:45 am

இந்திரனுக்கு தோஷம்

முனிவர் மகனான திரிசிரனைக் கொன்றதால், இந்திரன் பிரம்மஹத்தி தோஷத்தால் பீடிக்கப்பட்டான். அதனால் அவன் துன்பங்களில் சிக்கித் தவித்தான். தேவலோகத்தில் இருந்து கொண்டு அவனால் தனது அரசாட்சியை செவ்வனே செய்ய முடியவில்லை. இதனால் செய்வதறியாது திகைத்தவன், பிரம்மஹத்தி தோஷத்தில் இருந்து தற்காலிகமாக தப்பிக்க பூலோகம் சென்று ஒரு நீர் நிலைக்குள் போய் ஒளிந்து கொண்டான்.

அரசன் இல்லாத சொர்க்கலோகம் களை இழந்து காணப்பட்டது. தலைவன் இன்றி அரசவையில் பல குழப்பங்கள் ஏற்பட்டன. அதனை தீர்த்துக் கொள்ளும் வழி தெரியாமல், தேவர்கள் அனைவரும் பெரும் கஷ்டங்களை அனுபவித்து வந்தனர். தேவர்கள் ஆட்சியில் பலம் குன்றியதால், அவர்களின் பாதுகாப்பில், இதுவரை தவம் செய்து வந்த முனிவர்களுக்கு தொடர்ந்து இடையூறுகள் ஏற்பட்ட வண்ணம் இருந்தன.

புதிய அரசன்

என்ன செய்வது என்று யோசித்த முனிவர்களும், தேவர்களும் ஒரு முடிவுக்கு வந்தார்கள். அந்த முடிவு மேலும் துன்பத்தை ஏற்படுத்தப்போகிறது என்பது அப்போது அவர்களுக்குத் தெரியவில்லை. பூமியில் சிறப்பாக ஆட்சி புரியும் நகுஷன் என்ற அரசனை, தேவர்களின் அரசனாகப் பதவியேற்று ஆட்சி செய்யும்படி கூறுவதுதான் அந்த முடிவு. அவ்வாறே பூலோகம் சென்று நகுஷனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

‘பூமியில் ஆட்சி செய்யும் எனக்கு, தேவ லோகத்தில் ஆட்சி செய்யும் அளவு சக்தி இல்லை’ என்று நகுஷன் தயங்க, முனிவர்களும் தேவர்களும் அவனுக்கு ஒரு வழியைச் சொன்னார்கள். ‘முனிவர்கள், மற்றும் தேவர்களான எங்களை நீ பார்த்தாலே, அதன் மூலம் உனக்கு சக்தி அதிகமாகும். அது உனக்கு ஆட்சி புரிய உதவி செய்யும்’ என்றார்கள்.

அவர்கள் சொன்னதுபோலவே நடந்தது. தேவர்களையும், முனிவர்களையும் பார்க்க, பார்க்க நகுஷனின் சக்தி அதிகமாகிக்கொண்டே சென்றது. ஆகையால் மனதில் தைரியம் வந்தவனாக சொர்க்கத்தை ஆட்சி செய்யத் தொடங்கினான். நல்ல முறையில் அவன் ஆட்சி நடந்து கொண்டிருந்தது.

இந்திராணியின் மீது ஆசை

எவ்வளவு நல்லவனாக இருந்தாலும், ஏதாவது ஒரு நேரத்தில் அவனுக்குள் இருக்கும் சில வேண்டாத குணங்கள் எட்டிப்பார்க்கவே செய்கின்றன. நகுஷனுக்கு காமம் என்ற தீய குணம் கண்ணை மறைத்தது. சுக போகங்களுக்கு அடிமையானவன், தான் இருக்கும் இந்திரப் பதவியைப்போலவே, இந்திரனின் மனைவி இந்திராணியின் மீதும் மோகம் கொண்டான். அவளை அடைய வழிதேடினான்.

ஒரு வழியாக இந்திராணியிடமே நேரில் தன் விருப்பத்தை தெரிவித்து விடுவது என்ற முடிவுக்கு நகுஷன் வந்து விட்டான். அதன்படியே இந்திராணியை அழைத்து, தன் விருப்பத்தைச் சொன்னான்.

கலங்கிப்போன இந்திராணிக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை. இதற்கு மேலும் அங்கு இருந்தால், தன் மானம் பறிக்கப்பட்டு விடலாம் என்ற அச்சத்தில் அங்கிருந்து ஓடத்தொடங்கினாள். அவளது ஓட்டம் முடிவுற்ற இடம் தேவர்களின் குருவான பிரகஸ்பதி முனிவரின் ஆசிரமம்.

அஸ்வமேத யாகம்

இந்திர அரசவையில் நடந்ததை எல்லாம், பிரகஸ்பதி முனிவரிடம் இந்திராணி எடுத்துரைத்தாள். அவள் மனம் அடைக்கலம் தேடி அலைந்தது. பிரகஸ்பதி இந்திராணிக்கு ஆறுதல் கூறி தன் ஆசிரமத்திலேயே அடைக்கலம் கொடுத்தார். கொஞ்ச நாள் கழித்து இதற்கொரு முடிவு கட்டலாம் என்று பிரகஸ்பதி முனிவர் எண்ணினார்.

இதற்கிடையில் நீரில் ஒளிந்து கொண்டிருந்த இந்திரனுக்கு தன்னம்பிக்கை குறைந்தது. இனி என்ன செய்வது என்று யோசித்தான். இதற்கு மேலும் இங்கேயே ஒளிந்து கொண்டிருந்தால், இந்திரலோகத்தையும், இந்திராணியையும் மறந்து விடவேண்டியதுதான். எனவே விரைந்து ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைத்தான்.

இந்திரனை ரகசியமாகச் சந்தித்த தேவர்களும் முனிவர்களும், அவனை அஸ்வமேத யாகம் செய்யும்படிக் கேட்டுக் கொண்டார்கள். இதனால் அவன் பிரம்மஹத்தி தோஷம் விலகி, பழைய சக்தியைப் பெற்று விடலாம் என்றும் உற்சாக மூட்டினார்கள். இந்திரனும் அவர்கள் சொற்படி அஸ்வமேத யாகத்தை தொடங்கினான்.

பல்லக்கில் வலம்

இந்த நிலையில் இந்திராணிக்கு ஏற்பட்ட பிரச்சினையை தீர்க்க எண்ணிய பிரகஸ்பதி அவளிடம், ‘நீ நேராக நகுஷனிடம் போய், அவன் விருப்பத்திற்கு சம்மதிப்பதாகக் கூறு!’ என்றார்.

அதைக் கேட்டு அதிர்ச்சியில் உறைந்து போனாள் இந்திராணி. ‘சுவாமி! அதை விட நான் இறப்பதே மேல்!’ என்று அழுது புலம்பினாள்.

‘மகளே! அவசரப்படாதே! நீ அவ்வாறு சொல்லும்போது ஒரு நிபந்தனையை நகுஷனிடம் கூறு. அதாவது மிக அழகிய பல்லக்கு ஒன்றைச் செய்து அதில் நகுஷனை வைத்து முனிவர்கள் எல்லாம், அதனைத் தூக்கிக்கொண்டு தேவலோகத்தை வலம் வர வேண்டும் என்று சொல்!. நடப்பவை எல்லாம் நல்லபடியாக நடக்கும்’ என்று கூறினார் பிரகஸ்பதி.

தேவ குருவின் அறிவுரைப்படி நடக்க இந்திராணி முடிவு செய்தாள். தைரியத்தை வரவழைத்துக் கொண்டு நகுஷனை அணுகினாள். விருப்பத்திற்கு கட்டுப்படுவதாகவும், அதனுடன் நிபந்தனையையும் கூறினாள். நகுஷனுக்கு மகிழ்ச்சித் தாளவில்லை. பல்லக்கு செய்து பவனி வருவது என்ன பெரிய விஷயமா? என்று நினைத்தவன், உடனடியாக பல்லக்கை தயார் செய்ய உத்தரவிட்டான்.

பல்லக்கு தயாராகி முடிந்ததும், முனிவர்களை அழைத்தான் நகுஷன். முனிவர்கள் அனைவரும் வந்து சேர்ந்தனர். அவர்களை தன்னை பல்லக்கில் வைத்து, தூக்கிக்கொண்டு தேவலோகத்தை வலம் வரும்படி கூறினான். அரசனின் பேச்சைத் தட்டாத முனிவர்களும், அவன் பல்லக்கைத் தூக்கினார்கள். அந்த முனிவர் கூட்டத்தில் அகத்தியரும் ஒருவர்.

வாக்குவாதம்

பல்லக்கு போய்க்கொண்டிருந்தது. அப்போது, நகுஷனுக்கும் முனிவர்களுக்கும் யாகங்களைப் பற்றிய ஒரு வாக்குவாதம் ஏற்பட்டது. முனிவர்களின் கருத்தை ஏற்க நகுஷன் தயாராக இல்லை. வாக்குவாதம் கடுமையானதாக மாறியதில் கோபம் அடைந்த நகுஷன், பல்லக்கில் இருந்தபடி முனிவர்களின் கூட்டத்தை நோக்கி தன் காலால் உதைத்தான். அவனது கால், அகத்தியரின் தலையில் பட்டது.

மறுநொடியே நகுஷனின் சக்தி முழுவதும் அவனிடமிருந்து விலகியது. அவன் தேவலோகத்தில் இருந்து நழுவி பூலோகத்தில் விழுந்தான். அகத்திய முனிவரை உதைத்ததன் காரணமாக பல துன்பங்களை அனுபவிக்கும்படி அவனுக்கு நேர்ந்தது. இழிவான வாழ்க்கைக்கு தள்ளப்பட்டான்.

இந்த நிலையில் அஸ்வமேத யாகத்தை வெற்றிகரமாக முடித்ததனால், இந்திரனுக்கு ஏற்பட்டிருந்த பிரம்மஹத்தி தோஷம் விலகியது. அவன் மீண்டும் தன்னுடைய சக்தியை அடைந்து தேவலோகத்திற்கு திரும்பி தன் ஆட்சியை சிறப்புற செய்தான்.

ஒருவன் எவ்வளவு நல்லவனாக இருந்தாலும், முறையற்ற காமம் அவனது உயர்ந்த வாழ்க்கையை பாழாக்கி விடும் என்பதையே இந்தக் கதை உணர்த்துகிறது.

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Jul 17, 2014 3:19 pm

கதை வேறு மாதிரியாக கேட்ட ஞாபகம் இருக்கிறதே என்று இணையத்தில் தேடியபோது ஒரு தளத்தில் இது கிடைத்தது.



-----------------------------------------------------------------------------நன்றி---------------------------------------------------------------------------------

மகாபாரதத்தில் வரும் நகுஷனின் கதாப்பாத்திரம் ஒரு பேருண்மையை உலகிற்கு சொல்ல வந்த ஒன்று. புலன் இன்பங்களை அனுபவிக்காமல் வாழ்வதுதான் உண்மையான வாழ்க்கை என்று வாழ்ந்தவன் நகுஷன். மிகப்பெரிய பேரரசனான நகுஷன் மெய், வாய், கண், மூக்கு மற்றும் செவி என்னும் ஐம்புலன்களும் தரும் இன்பத்தை மறுத்து வாழ்ந்தவன். உலகத்தில் அரசர்கள் யாவரும் அனைத்து இன்பகளையும் அசாதாரணமாக அனுபவித்து வாழ்ந்து வருகையில் நகுஷன் எந்தவிதமான இன்பங்களையும் நுகராமல் வாழ்வது கண்டு அவனது அமைச்சர்கள் கவலையுற்று நகுஷனிடம் புலனின்பங்கள் நுகராமல் அவன் வாழ்வது எதற்க்காக என்று கேட்டார்கள். அதற்கு நகுஷன் இனி மானிடப்பிறவியே தனக்கு வாய்க்கக்கூடாது என்ற காரணத்தால் இப்படி வாழ்வதாக கூறினான். அதற்க்கு அவனுடைய அமைச்சர்கள் இவ்வளவு நாட்கள் புலனடக்கி அவன் பெற்ற புண்ணியம் அனைத்தும் ஒன்று கூடி, இந்திரப் பதவியை நகுஷன் அடைந்தால் இந்த மானிடப் பிறவியிலிருந்து விடிவு பெறலாம் என்று கூறினார்கள். இந்திரப் பதவி தான் அடைய என்ன செய்யவேண்டும் என்று கேட்டவனுக்கு நூறு அஸ்வமேத யாகம் செய்தால் அந்தப் பதவியை அடையலாம் என்று கூறினர் அவனது அமைச்சுகள்.

snake
நூறு அஸ்வமேத யாகங்களை வெற்றிகரமாக செய்து முடித்த நகுஷனை இந்திர உலகிற்கு அழைத்து செல்வதற்காக பல்லக்கோடு சப்த ரிஷிகளான ஏழு முனிவர்கள் வந்து சேர்ந்தனர். ஏழு முனிவர்கள் தன்னை தோளில் தூக்கிப் போவதற்கு வந்ததால் மிகவும் கூச்சமுற்றான் நகுஷன். இப்படி அவர்கள் தோளில் தான் ஏறித்தான் இந்திர லோகம் போக வேண்டும் என்று முன்னமே தெரிந்திருந்தால் தான் நூறு அஸ்வமேத யாகமே செய்திருக்க மாட்டேன் என்று சொன்னான் நகுஷன். முனிவர்கள் நூறு அஸ்வமேத யாகங்களை செய்தவனை சுமப்பது எங்களுக்கு பெருமை. நீ இதைப் பற்றி கவலைப்படவேண்டாம் ஏறி உட்கார் நாம் செல்லலாம் என்று அவனை ஏற்றி பல்லக்குள் உட்காரவைத்து சுமந்து கொண்டு ஒரே சீராக சென்றனர். போகும் வழியெல்லாம் முனிவர்கள் மீதேறிப் போகிறோமே என்ற கூச்சத்தில், மரியாதையில் அவர்கள் சிரமப் படுகிறார்களோ என்றெண்ணி “மெதுவாக மெதுவாக” என்று சொல்லிக் கொண்டே வந்தான். முனிவர்களும் “நகுஷா நீ ஒன்றும் கவலைப்படாதே நாங்கள் பார்த்துக்கொள்கிறோம் நாங்கள் மெதுவாகவும் போகவில்லை வேகமாகவும் போகவில்லை. ஒரே சீராகத்தான் செல்கிறோம்” என்று சொன்னார்கள். இருந்தாலும் முனிவர்கள் மேல் கொண்ட பற்றினால் அவ்வப்போது “மெதுவாக மெதுவாக” என்று வழிநெடுக வேண்டிக்கொண்டே வந்தான். முனிவர்களும் “எங்கள்பால் உன் அன்பை கண்டு மெச்சினோம். இருந்தாலும் நாங்கள் வேகமாகவும் போகவில்லை மெதுவாகவும் போகவில்லை. நீ ஒன்றும் கவலைப்படாமல் வா” என்று சொல்லிக்கொண்டே வந்தார்கள்.
பல்லக்கு ஏறக்குறைய இந்திரலோகம் அடைந்து இந்திரனின் அரண்மனை வாசலாக சென்றுகொண்டிருந்தார்கள். அப்போது இந்திராணி உப்பரிகையில் நின்று நீண்ட தலைமுடியை பறக்கவிட்டு தலை கோதிக் கொண்டிருந்தாள். அதுவரை பூஉலகத்தில் கண்டு, கேட்டு, உண்டு, உயிர்த்து, உற்று அறியும் ஐம்புல இன்பங்கள் வேண்டாம் என்று இருந்த நகுஷன், மண்ணுல இன்பங்கள் அனைத்தையும் மறுத்த நகுஷன் இந்திராணியின் அழகைக் கண்டவுடன் அளவற்ற ஆசை கொண்டான். அந்த ஆசையும், அவள்பால் கொண்ட மோகத்தின் காரணமாகவும் இப்போது பல்லக்கு மெதுவாக செல்வதுபோல் அவனுக்கு தோன்றியது. ஏன் மெதுவாகப் போகிறது என்று இப்போது ஆராய்ந்து பார்த்த நகுஷன் ஏழு முனிவர்களுள் அகத்தியர் சற்று உயரம் குறைவானவர். அவருடைய தோள்கள் பல்லக்கு காம்பில் சரியாக பொருந்தவில்லை. ஆகையால் பல்லக்கு மெதுவாகப் போகிறது என்று காரணம் எண்ணிக்கொண்டான். உடனே தன் கையில் இருக்கும் பிரம்பை கொண்டு அகத்தியரை “சர்ப்ப.. சர்ப்ப” என்று அடித்தான். சர்ப்ப சர்ப்ப என்றால் ஓடு ஓடு என்று அர்த்தம். அதுவரை பொறுமையாகவும் எப்போதும் ஒரே சீராகவும் பல்லக்கு தூக்கிக்கொண்டு வந்த அகத்தியர் சினம் கொண்டு சர்ப்ப சர்ப்ப என்று பிரம்பு கொண்டு நீ தீண்டியதால், எல்லோரையும் தீண்டும் சர்ப்பமாக போகக்கடவது என்று சாபமிட்டார். தன்னுடைய யாகத்தினாலும் விரதங்களினாலும் இந்திரலோகம் வரை சென்ற நகுஷன் பாம்பாக மாறி கீழே விழுந்தான்.

- mannairvs




T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Jul 17, 2014 6:06 pm

ராஜா கூறிய கதையை நான் 9ம் வகுப்பில் சம்ஸ்க்ருத மொழியில் படித்து உள்ளேன்.
"சர்ப்ப சர்ப்ப" என்றால் "வேகமாக வேகமாக" என்று பொருள் என்று நினைக்கிறன்.
இதனால் கோபம் அடைந்த ,குறுமுனிவர் ," சர்ப்போ பவ " என்று நகுஷனுக்கு  சாபம் இட்டதாக கதை தொடரும் .
சர்ப்பம் என்றால் பாம்பு என்று பொருள் உண்டெனென்பதை நாம் அறிவோம் .


ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக