ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:04 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:48 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 6:48 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 6:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெரியபாளையத்தில் ரவுடி ‘கேட்’ ராஜேந்திரன் வெட்டிக்கொலை; 5 பேர் கைது

3 posters

Go down

பெரியபாளையத்தில் ரவுடி ‘கேட்’ ராஜேந்திரன் வெட்டிக்கொலை; 5 பேர் கைது Empty பெரியபாளையத்தில் ரவுடி ‘கேட்’ ராஜேந்திரன் வெட்டிக்கொலை; 5 பேர் கைது

Post by சிவா Wed Jul 16, 2014 4:46 am


பெரியபாளையத்தில் ரவுடி ‘கேட்’ ராஜேந்திரன் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

ரவுடி

சென்னை திருவொற்றியூரை சேர்ந்தவர் கேட் ராஜேந்திரன் (வயது 55). இவருக்கு மேகலா (47) என்ற மனைவியும் கண்ணன் (27), கலைமணி (26) என்ற மகன்களும் உள்ளனர். ரவுடியான இவர் மீது கொலை, கொள்ளை, ஆள் கடத்தல் என்று சுமார் 25-க்கும் மேலான வழக்குகள் சென்னை திருவொற்றியூர், எண்ணூர், மாதவரம், செங்குன்றம் என பல்வேறு போலீஸ் நிலையங்களில் உள்ளது.

கடந்த 1992-ம் ஆண்டு முதல் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்ட இவர் பெரியபாளையம் போலீஸ் நிலையம் அருகே உள்ள மேற்கு கலைஞர் நகரில் தனது மனைவி மற்றும் மகன்களுடன் வீடு கட்டி குடியேறினார்.

இந்த நிலையில் சென்னை மாதவரம் போலீசார் அவரை கடந்த ஆண்டு கைது செய்து குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்தனர். கடந்த மாதம் 3-ந் தேதி சிறையில் இருந்து வெளியே வந்த அவர், திருந்தி வாழப்போவதாக பெரியபாளையம் போலீசாரிடம் கடந்த வாரம் கூறினார்.

வெட்டிக்கொலை

கேட் ராஜேந்திரன் நேற்று காலை 8½ மணி அளவில் தனது வீட்டின் அருகே சாலையோரம் உள்ள கடைக்கு சாப்பிடுவதற்காக தனது உதவியாளர் முனுசாமி என்பவருடன் சென்றார்.

அப்போது அவரை பின் தொடர்ந்து காரில் வந்த 5 பேர் அவரை விரட்டி சென்று கத்தியால் வெட்டினர். இதையடுத்து அவர் சாலையோரம் இருந்த குடிசைக்குள் புகுந்தார். இருப்பினும் அவர்கள் கேட் ராஜேந்திரனை சரமாரியாக தலை, கழுத்து, கைகளில் வெட்டினர். அவருடன் வந்த உதவியாளர் முனுசாமி அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

பின்னர் காரில் வந்த 5 பேரும் தப்பி சென்று விட்டனர். அவர்களில் ஒருவர் காரில் ஏற முடியாததால் அந்த வழியாக சென்ற ஒரு மோட்டார்சைக்கிளை வழி மறித்து அதில் வந்தவரை கீழே தள்ளி விட்டு அதில் ஏறி தப்பிச் சென்று விட்டார்.

சரமாரியாக வெட்டுப் பட்ட கேட் ராஜேந்திரன் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே இறந்தார்.

தகவல் அறிந்த பெரியபாளையம் இன்ஸ்பெக்டர் சீனிபாபு தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

5 பேர் கைது

பெரியபாளையம் போலீசார் தப்பிச்சென்றவர்களின் கார் பதிவு எண்ணை மற்ற போலீஸ் நிலையங்களுக்கு தெரிவித்தனர். நேற்று காலை புல்லரம்பாக்கம் போலீசார் ஊத்துக்கோட்டை-திருவள்ளூர் நெடுஞ்சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த காரை வழிமறித்து சோதனை செய்தனர்.

காரில் இருந்தவர்கள் கேட் ராஜேந்திரனை கொலை செய்ததை ஒப்புக்கொண்டனர். திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன் விரைந்து வந்து அவர்களிடம் விசாரணை நடத்தினார்.

விசாரணையில் காரில் இருந்தவர்கள் சென்னையை சேர்ந்த கார் டிரைவர் அந்தோணிராஜ் (26), திருப்பதி (38), இம்ரான் (33), மகேஷ் (23), மணிகண்டன் (21) ஆகியோர் என்பது தெரியவந்தது.

இவர்கள் ஏன் கேட் ராஜேந்திரனை கொலை செய்தனர்?. முன் விரோதம் காரணமா? இவர்கள் கூலிப்படையை சேர்ந்தவர்களா? அல்லது வேறு ஏதேனும் காரணமா என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

கேட் ராஜேந்திரன் திருவொற்றியூரில் உள்ள ரெயில்வே கேட் அருகே அமர்ந்துதான் பல்வேறு சட்ட விரோத செயல்களை செய்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் கேட் ராஜேந்திரன் என்ற பெயர் வந்ததாக கூறப்படுகிறது. அனைத்து செயல்களுக்கும் மூளையாக செயல்பட்ட ராஜேந்திரன் ஆட்களை அனுப்பிதான் கொலை, கொள்ளையில் ஈடுபடுவார் என்றும் கூறப்படுகிறது.

தினத்தந்தி
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

பெரியபாளையத்தில் ரவுடி ‘கேட்’ ராஜேந்திரன் வெட்டிக்கொலை; 5 பேர் கைது Empty Re: பெரியபாளையத்தில் ரவுடி ‘கேட்’ ராஜேந்திரன் வெட்டிக்கொலை; 5 பேர் கைது

Post by சிவா Wed Jul 16, 2014 4:49 am

30 ஆண்டுகளாக வடசென்னையை கலக்கிய கேட் ராஜேந்திரன்; போலீசாரின் துப்பாக்கி குண்டுக்கு தப்பியவர் எதிரிகளின் அரிவாளுக்கு பலியானார்

25 வழக்குகள்

சென்னையை அடுத்த பெரியபாளையத்தில் வெட்டிக் கொல்லப்பட்ட, வட சென்னை தாதா கேட் ராஜேந்திரன் 1980-ம் ஆண்டு வடசென்னையில் கால் ஊன்றினார். பிரபல சாராய வியாபாரியாக வலம் வந்த ராஜேந்திரன், 1986-ம் ஆண்டு தனது முதல் கொலையை பதிவு செய்து, சாராய வியாபாரி அந்தஸ்தில் இருந்து, ரவுடி அந்தஸ்துக்கு மாறினார்.

1986-ம் ஆண்டு சாராய வியாபார போட்டியில், வேணு என்பவரை வெட்டிக்கொன்ற வழக்கில் சிறைக்கு போனார். அடுத்து 90-ல் குள்ளபாபு என்பவரை கொன்ற வழக்கு, 91-ம் ஆண்டு கோபி என்பவரை போட்டுத் தள்ளிய வழக்கு, 93-ல் குமார் என்பவர் கொல்லப்பட்ட வழக்கு, 96-ம் ஆண்டு சென்னை நகரை உலுக்கிய எழும்பூர் கோர்ட்டுக்குள் வைத்து ரவுடி விஜி கொல்லப்பட்ட வழக்கு இப்படி 6 கொலை வழக்குகளில், கேட் ராஜேந்திரன் சிறைக்கு போனார்.

2002-ம் ஆண்டு சென்னை பர்மா பஜார் பகுதியில் வைத்து, பிரபல தொழில்அதிபர் ஒருவர் காரில் சென்றபோது, வெடிகுண்டு வீசி அவரை கொலை செய்ய முயன்ற வழக்கும் ராஜேந்திரன் மீது பாய்ந்தது. மொத்தம் 25 வழக்குகளை அவர் சந்தித்தார்.

தாதாவானார்

அந்த கால கட்டத்தில் தென் சென்னையில் அயோத்திகுப்பம் வீரமணி, குரங்குகுமார், ராட்டினகுமார், பங்க்குமார் போன்றோர் தாதாக்களாக வலம் வந்தனர். வட சென்னையில் வெள்ளைரவி, ஆசைத்தம்பி,சேரா, காட்டான் சுப்பிரமணியன் ஆகியோர் தாதாக்களாக கொடிகட்டி பறந்தனர். இவர்கள் வரிசையில் கேட் ராஜேந்திரனும், தாதாவாக பயமுறுத்தி, தனிக்காட்டு ராஜாவாக இருந்தார்.

மேற்கண்ட தாதாக்கள் வரிசையில் இருந்த வீரமணி, பங்க்குமார், வெள்ளைரவி, ஆசைத்தம்பி ஆகியோர் என்கவுண்டர் முறையில் போலீசாரால் சுட்டு கொல்லப்பட்டனர். ஆனால் காட்டான் சுப்பிரமணியமும், கேட் ராஜேந்திரனும் போலீசாரின் துப்பாக்கி குண்டுக்கும் பலியாகாமல் தப்பினார்கள்.

6 முறை குண்டர் சட்டத்தில் சிறைப்பறவையாக ராஜேந்திரன் இருந்துள்ளார்.

காண்டிராக்டு தொழில்

ஒரு கட்டத்தில் ரவுடி தொழிலில் இருந்து ஒதுங்கி, கப்பல் மூலம் இறக்குமதி செய்யப்படும் கியாஸ் சிலிண்டர்களை, கப்பலில் இருந்து இறக்குவதற்கு, ஆட்களை அனுப்பி வைக்கும் காண்டிராக்டு தொழில் செய்ய ஆரம்பித்தார். அதிலும் இவருக்கு புதிய எதிரிகள் உருவானார்கள்.

போலீசாரின் துப்பாக்கி பயமுறுத்தியதை விட, எதிரிகளின் அரிவாள் இவருக்கு சவாலாக இருந்தது. சந்தனக்கடத்தல் வீரப்பன் வீழ்வதற்கு சர்க்கரை நோய்தாக்குதல் ஒரு காரணமாக இருந்ததைப்போல, கேட் ராஜேந்திரன் வீழ்ச்சிக்கும் அவரை தாக்கிய சர்க்கரை நோயும் ஒரு காரணமாகி விட்டது.

அரிவாள் வீச்சுக்கு வீழ்ந்தார்

55 வயதை தொட்டுள்ள அவர், சர்க்கரை நோயால் சற்று தளர்ந்து போனார். இதை பயன்படுத்தி எதிரிகள் வீழ்த்திவிடக்கூடாது என்பதற்காக,அவர் சென்னையை அடுத்த பெரிய பாளையத்தில் பதுங்கி, ஒதுங்கி வாழ்ந்தார்.

கத்தியை எடுத்தவன், கத்தியால் மடிவான் என்ற பழமொழி, கேட்ராஜேந்திரன் வாழ்க்கையிலும் மெய்யாகிவிட்டது. கடைசிவரை போலீசாரின் துப்பாக்கியால் விழாத காட்டான் சுப்பிரமணியனும் எதிரிகளால்தான் வெட்டி வீழ்த்தப்பட்டார். அதுபோல கேட்ராஜேந்திரனும், எதிரிகளின் அரிவாள் வீச்சுக்கு பலியாகிவிட்டார்.


பெரியபாளையத்தில் ரவுடி ‘கேட்’ ராஜேந்திரன் வெட்டிக்கொலை; 5 பேர் கைது Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

பெரியபாளையத்தில் ரவுடி ‘கேட்’ ராஜேந்திரன் வெட்டிக்கொலை; 5 பேர் கைது Empty Re: பெரியபாளையத்தில் ரவுடி ‘கேட்’ ராஜேந்திரன் வெட்டிக்கொலை; 5 பேர் கைது

Post by அருண் Wed Jul 16, 2014 11:33 am

பெரியவர்கள் சொல்லி வைத்த பழ மொழி பொய்க்க வில்லை..
கத்தியை எடுத்தவன், கத்தியால் மடிவான்...என்ற கூற்று உண்மையாகி விட்டது..
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

பெரியபாளையத்தில் ரவுடி ‘கேட்’ ராஜேந்திரன் வெட்டிக்கொலை; 5 பேர் கைது Empty Re: பெரியபாளையத்தில் ரவுடி ‘கேட்’ ராஜேந்திரன் வெட்டிக்கொலை; 5 பேர் கைது

Post by மாணிக்கம் நடேசன் Wed Jul 16, 2014 12:58 pm

இது போன்ற ரவுடிகள் இப்படித்தான் சாகடிக்கப்பட வேண்டும், இதில் போலிசுக்கும் ஒரு வேளை பங்கிருக்கலாம்.
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

பெரியபாளையத்தில் ரவுடி ‘கேட்’ ராஜேந்திரன் வெட்டிக்கொலை; 5 பேர் கைது Empty Re: பெரியபாளையத்தில் ரவுடி ‘கேட்’ ராஜேந்திரன் வெட்டிக்கொலை; 5 பேர் கைது

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» சேலத்தில் 6 பேர் வெட்டிக்கொலை சரண்அடைந்தவரின் மகன் சிக்கினார்: ரகசிய இடத்தில் வைத்து விசாரணை
» சேலத்தில் பிரபல ரவுடி ஓட ஓட வெட்டிக்கொலை
»  சிவகங்கை: அ.தி.மு.க. பிரமுகரின் உறவினர்கள் 2 பேர் வெட்டிக்கொலை
» ஆள்இல்லா கேட்: ரயில்- பஸ் மோதல்; பள்ளி குழந்தைகள் 20 பேர் பலி!!
» டிக் டாக் ரவுடி பேபி சூர்யா குண்டர் சட்டத்தில் கைது

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum