புதிய பதிவுகள்
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Yesterday at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Yesterday at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Yesterday at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Fri Nov 15, 2024 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Fri Nov 15, 2024 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 3:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பெருகிவரும் மார்பக புற்றுநோய்: கண்டுபிடிப்பது எப்படி? Poll_c10பெருகிவரும் மார்பக புற்றுநோய்: கண்டுபிடிப்பது எப்படி? Poll_m10பெருகிவரும் மார்பக புற்றுநோய்: கண்டுபிடிப்பது எப்படி? Poll_c10 
156 Posts - 79%
heezulia
பெருகிவரும் மார்பக புற்றுநோய்: கண்டுபிடிப்பது எப்படி? Poll_c10பெருகிவரும் மார்பக புற்றுநோய்: கண்டுபிடிப்பது எப்படி? Poll_m10பெருகிவரும் மார்பக புற்றுநோய்: கண்டுபிடிப்பது எப்படி? Poll_c10 
19 Posts - 10%
Dr.S.Soundarapandian
பெருகிவரும் மார்பக புற்றுநோய்: கண்டுபிடிப்பது எப்படி? Poll_c10பெருகிவரும் மார்பக புற்றுநோய்: கண்டுபிடிப்பது எப்படி? Poll_m10பெருகிவரும் மார்பக புற்றுநோய்: கண்டுபிடிப்பது எப்படி? Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
பெருகிவரும் மார்பக புற்றுநோய்: கண்டுபிடிப்பது எப்படி? Poll_c10பெருகிவரும் மார்பக புற்றுநோய்: கண்டுபிடிப்பது எப்படி? Poll_m10பெருகிவரும் மார்பக புற்றுநோய்: கண்டுபிடிப்பது எப்படி? Poll_c10 
5 Posts - 3%
E KUMARAN
பெருகிவரும் மார்பக புற்றுநோய்: கண்டுபிடிப்பது எப்படி? Poll_c10பெருகிவரும் மார்பக புற்றுநோய்: கண்டுபிடிப்பது எப்படி? Poll_m10பெருகிவரும் மார்பக புற்றுநோய்: கண்டுபிடிப்பது எப்படி? Poll_c10 
4 Posts - 2%
Anthony raj
பெருகிவரும் மார்பக புற்றுநோய்: கண்டுபிடிப்பது எப்படி? Poll_c10பெருகிவரும் மார்பக புற்றுநோய்: கண்டுபிடிப்பது எப்படி? Poll_m10பெருகிவரும் மார்பக புற்றுநோய்: கண்டுபிடிப்பது எப்படி? Poll_c10 
3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
பெருகிவரும் மார்பக புற்றுநோய்: கண்டுபிடிப்பது எப்படி? Poll_c10பெருகிவரும் மார்பக புற்றுநோய்: கண்டுபிடிப்பது எப்படி? Poll_m10பெருகிவரும் மார்பக புற்றுநோய்: கண்டுபிடிப்பது எப்படி? Poll_c10 
1 Post - 1%
prajai
பெருகிவரும் மார்பக புற்றுநோய்: கண்டுபிடிப்பது எப்படி? Poll_c10பெருகிவரும் மார்பக புற்றுநோய்: கண்டுபிடிப்பது எப்படி? Poll_m10பெருகிவரும் மார்பக புற்றுநோய்: கண்டுபிடிப்பது எப்படி? Poll_c10 
1 Post - 1%
Pampu
பெருகிவரும் மார்பக புற்றுநோய்: கண்டுபிடிப்பது எப்படி? Poll_c10பெருகிவரும் மார்பக புற்றுநோய்: கண்டுபிடிப்பது எப்படி? Poll_m10பெருகிவரும் மார்பக புற்றுநோய்: கண்டுபிடிப்பது எப்படி? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பெருகிவரும் மார்பக புற்றுநோய்: கண்டுபிடிப்பது எப்படி? Poll_c10பெருகிவரும் மார்பக புற்றுநோய்: கண்டுபிடிப்பது எப்படி? Poll_m10பெருகிவரும் மார்பக புற்றுநோய்: கண்டுபிடிப்பது எப்படி? Poll_c10 
321 Posts - 78%
heezulia
பெருகிவரும் மார்பக புற்றுநோய்: கண்டுபிடிப்பது எப்படி? Poll_c10பெருகிவரும் மார்பக புற்றுநோய்: கண்டுபிடிப்பது எப்படி? Poll_m10பெருகிவரும் மார்பக புற்றுநோய்: கண்டுபிடிப்பது எப்படி? Poll_c10 
46 Posts - 11%

14 Posts - 3%

8 Posts - 2%
prajai
பெருகிவரும் மார்பக புற்றுநோய்: கண்டுபிடிப்பது எப்படி? Poll_c10பெருகிவரும் மார்பக புற்றுநோய்: கண்டுபிடிப்பது எப்படி? Poll_m10பெருகிவரும் மார்பக புற்றுநோய்: கண்டுபிடிப்பது எப்படி? Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
பெருகிவரும் மார்பக புற்றுநோய்: கண்டுபிடிப்பது எப்படி? Poll_c10பெருகிவரும் மார்பக புற்றுநோய்: கண்டுபிடிப்பது எப்படி? Poll_m10பெருகிவரும் மார்பக புற்றுநோய்: கண்டுபிடிப்பது எப்படி? Poll_c10 
4 Posts - 1%
Balaurushya
பெருகிவரும் மார்பக புற்றுநோய்: கண்டுபிடிப்பது எப்படி? Poll_c10பெருகிவரும் மார்பக புற்றுநோய்: கண்டுபிடிப்பது எப்படி? Poll_m10பெருகிவரும் மார்பக புற்றுநோய்: கண்டுபிடிப்பது எப்படி? Poll_c10 
3 Posts - 1%

ஜாஹீதாபானு
பெருகிவரும் மார்பக புற்றுநோய்: கண்டுபிடிப்பது எப்படி? Poll_c10பெருகிவரும் மார்பக புற்றுநோய்: கண்டுபிடிப்பது எப்படி? Poll_m10பெருகிவரும் மார்பக புற்றுநோய்: கண்டுபிடிப்பது எப்படி? Poll_c10 
3 Posts - 1%
Barushree
பெருகிவரும் மார்பக புற்றுநோய்: கண்டுபிடிப்பது எப்படி? Poll_c10பெருகிவரும் மார்பக புற்றுநோய்: கண்டுபிடிப்பது எப்படி? Poll_m10பெருகிவரும் மார்பக புற்றுநோய்: கண்டுபிடிப்பது எப்படி? Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெருகிவரும் மார்பக புற்றுநோய்: கண்டுபிடிப்பது எப்படி?

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Jul 16, 2014 5:15 am

மனித உடலை 250 வகையான புற்றுநோய்கள் தாக்குவதாக சமீபத்திய மருத்துவ ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மனித உடல் திசுக்களில் ஏற்படும் அசாதாரணதன்மையும், கட்டுப்பாடற்ற, முறையற்ற வளர்ச்சியுமே புற்றுநோய் எனப்படுகிறது. உலகில், வருடத்திற்கு ஒரு கோடி பேர் புற்றுநோயால் மரணமடைகிறார்கள். இந்தியாவில் 25 லட்சத்திற்கு அதிகமான புற்றுநோயாளிகள் உள்ளனர். ஒவ்வொரு வருடமும் எட்டு லட்சம் பேர் கூடுதலாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டுக்கொண்டே இருக்கிறார்கள்.

புற்றுநோய் எதனால் ஏற்படுகிறது என்பது இதுவரை முழுமையாக கண்டுபிடிக்கப்படவில்லை. ஆனால் புற்றுநோய் வருவதற்கான சூழ்நிலைகளை அதிகரிக்கும் அநேக காரணங்கள் அடையாளங் காணப்பட்டுவிட்டன. அறிகுறிகளும் முழுமையாக உணரப்பட்டுவிட்டன. அதனால் தொடக்க நிலையிலே கண்டறிந்தால் பெரும்பாலான புற்றுநோய்களை வென்று நீண்ட காலம் வாழலாம்.

மார்பக புற்றுநோயை பொறுத்தவரையில் அது பெருகி, பெண்களை மிரட்டத்தான் செய்கிறது. ஆனாலும் சத்தமில்லாமல் கொல்ல முயற்சிக்கும் இந்த நோயை பெண்களால் எளிதாக தவிர்க்கவும், தடுக்கவும் முடியும்.

சுய பரிசோதனை:

சுயபரிசோதனை மூலம் தொடக்கத்திலே ஓரளவு கண்டறிய வாய்ப்பிருக்கிறது. பெண்கள் 20 வயதில் இருந்தே இதை செய்துவரவேண்டும். குளிக்க தயாராகும்போது கண்ணாடி முன்னால் நின்றுகொண்டு, நுனி விரல்களால் மார்பகம் முழுவதையும் மென்மையாக வருடிப்பார்த்தால் கட்டி ஏதாவது இருந்தால் கண்டுபிடித்துவிடலாம்.

கைகளை மேலே உயர்த்தியபடி நின்றால், கண்ணாடியில் மார்பக அளவுகளில் வித்தியாசங்கள் இருந்தால் தெரிந்துகொள்ள முடியும். காம்புகளில் ஏற்படும் மாற்றங்கள், அந்த பகுதி சருமங்களில் ஏதேனும் மாற்றம் இருந்தாலும் கண்டுபிடித்துவிடலாம். மாதவிலக்கு காலத்தில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்களால் சிலருக்கு மார்பகங்களில் நீர்க்கட்டிகள் தோன்றி மறையும். அதை புற்றுநோய் கட்டியாக நினைத்து பயந்துவிடக்கூடாது. அதனால் மாதவிலக்கு முடிந்த பத்து நாட்கள் கழித்து சுய மார்பக பரிசோதனை மேற்கொள்ளவேண்டும்.

இத்தகைய சுயபரிசோதனை முறைகளை கல்லூரி மாணவிகளுக்கு வாழ்க்கைப் பாடத்திட்டமாக பயிற்றுவிக்கவேண்டும். இந்த பரிசோதனைக்கு வசதியாக பெண்களின் குளியல் அறைகளில் கண்ணாடிகள் வைப்பது நல்லது.

நவீன பரிசோதனை:

சுய பரிசோதனையில் அறிகுறிகள் தெரிந்தாலும், தெரியாவிட்டாலும், 40 வயது ஆகிவிட்டாலே பெண்கள் ‘மேமோகிராம்’ பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். ஏன்என்றால் மார்பக புற்றுநோய் அறிகுறிகளை வெளிக்காட்டாமலே தோன்றி, உடலின் பல பகுதிகளுக்கு படரும் தன்மைகொண்டது. அதனால் மிகச் சிறிய அளவில் புற்றுநோய் கட்டி இருந்தாலும், மிக துல்லியமாக டிஜிட்டல் மேமோகிராம் கண்டுபிடித்துவிடும். இது சில நிமிடங்களில் எளிதாக முடிந்துவிடும் பரிசோதனை. அப்போதே ஸ்கிரீனில் பார்த்து மார்பக புற்றுநோய் இருக்கிறதா? இல்லையா? என்பதை கண்டுபிடித்துவிடலாம். இது வலி இல்லாதது. மிக நவீனமானது. எளிதானது.

பரிசோதனையின்போது கட்டிகள் போன்று ஏதாவது தென்பட்டால், அடுத்து ‘எப்.என்.ஏ.சி’ (பைன் நீடில் ஆஸ்பிரேஷன் சைட்டாலஜி) பரிசோதனை மூலம், அது புற்றுநோய்க்கானதுதானா– அல்லது வேறு விதமான கட்டியா என்று பார்க்கவேண்டும். இந்த பரிசோதனையில் மார்பக புற்றுநோய்தான் என்று உறுதியாகும் பட்சத்தில், ‘பெட்– ஸ்கேன்’ மூலம் எந்த பகுதிகளில், எந்தந்த அளவுக்கு படர்ந்திருக்கிறது என்பதை துல்லியமாக கண்டறிந்து, அதற்கு தக்கபடியான சிகிச்சையை மேற்கொள்ளவேண்டும். பிற்காலத்தில் நோய் எந்த அளவுக்கு குறைந்திருக்கிறது என்பதை கண்டறியவும் இந்த ஸ்கேன் அவசியமாகிறது. இளம் வயதில் பெண்களின் மார்பகங்கள் அடர்த்தியாக இருக்கும். அப்போது நோய் பாதிப்பு இருப்பதை கண்டறிய வேண்டும் என்றால், எம்.ஆர்.ஐ. ஸ்கேன் தேவைப்படும்.

முன்பெல்லாம் மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள், அந்த நோயால்தான் மரணமடைவார்கள். இப்போது அந்த நிலை மாறியிருக்கிறது. விரைவாக கண்டறிந்து, தரமான சிகிச்சையை மேற்கொண்டு அதிக காலம் வாழ்கிறார்கள். அதனால் புற்றுநோயை கண்டு பயம்கொள்ளவேண்டாம்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Jul 16, 2014 5:15 am

சேர்க்க வேண்டிய உணவுகள்:

தவறான உணவுப் பழக்கமும் புற்றுநோய்க்கு ஒரு காரணமாக இருக்கிறது. முறையான உணவுகளை உண்டால் புற்றுநோயை பெருமளவு தடுக்கலாம்.

தவிடு நீக்காத தானியங்கள், ஆடை நீக்கிய பால், தயிர், பழங்கள், பச்சை காய்கறிகள், மீன், கீரை வகைகளை தினமும் உணவில் சேர்க்கவேண்டும்.

பெரும்பாலான காய்கறி, பழங்களில் பூச்சி மருந்துகள் கலந்திருக்கின்றன. அவை புற்றுநோயை உருவாக்கும் தன்மை கொண்டது. அதனால் இயற்கை முறையில் விளைவிக்கும் உணவுப்பொருட்களை உண்ணுங்கள். அதற்கு வாய்ப்பு இல்லாவிட்டால் வாங்கிய பழம், காய்கறிகளை அரை மணிநேரம் உப்பு கலந்த நீரில் முக்கிவைத்துவிட்டு, வேகமாக பாயும் பைப் தண்ணீரில் நன்றாக கழுவிவிட்டு பயன்படுத்துங்கள்.

முழு கோதுமை ரொட்டி, முழு கோதுமை ஆட்டா மாவு போன்றவைகளில் தவிடு கலந்திருக்கும். அவற்றை அதிகம் பயன்படுத்துங்கள்.

நார்சத்து நிறைந்த உணவுகளை அதிகம் உண்ணுங்கள். அவை எளிதாக ஜீரணமாகி, உடலில் இருக்கும் விஷதன்மைகளை வெளியேற்றும் சக்தி கொண்டதாக இருக்கிறது. ரத்தத்தில் இருக்கும் சர்க்கரை, கொழுப்பை கட்டுப்படுத்தும் சக்தியும் நார்சத்துக்கு இருக்கிறது.

ஆன்டி ஆக்சிடென்ட் இருக்கும் உணவுகள் புற்றுநோயை தடுக்கும். கேரட், பீட்ருட், ஆரஞ்சு, பப்பாளி, குடை மிளகாய் போன்றவைகளில் அந்த சத்து இருக்கிறது. கிரீன் டீயில் ஆன்டி ஆக்சிடென்ட் நிறைய இருக்கிறது. தினமும் வெறும் வயிற்றில் அதை பருகலாம்.

சோயாபீன், சோயா மில்க் இரண்டிற்கும் புற்று நோயை தடுக்கும் ஆற்றல் இருக்கிறது.

முறையான உணவுகள் உண்பதோடு தினசரி உடற்பயிற்சிகளும் மேற்கொள்ளவேண்டும்.

இதை படிக்கும் பலரும், ‘முற்காலத்தில் இந்த அளவுக்கு புற்று நோய் இல்லையே?’ என்று கேட்பார்கள். முற்காலத்திலும் இருந்தது. அப்போது என்ன நோய் என்று கண்டுபிடிக்கப்படாமலே ஏராளமானவர்கள் இறந்தார்கள். இப்போது நவீன பரிசோதனைகள் மூலம், தொடக்கத்திலே எளிதாக கண்டறிந்து, சிகிச்சை அளித்து குணப்படுத்திவிட முடிகிறது. அதனால் மார்பக புற்றுநோயை பற்றி பயம்கொள்ளாமல் சர்க்கரை நோயையும், கொழுப்பையும் கண்டறிய தாமாகவே முன்வந்து பரிசோதனை செய்வதுபோல், பெண்களே உங்கள் மார்பகங்கள் ஆரோக்கியமாக இருப்பதையும் தைரியமாக பரிசோதனை மூலம் உறுதி செய்யுங்கள்.

டாக்டர் பியூலா இம்மானுவேல், (ரேடியாலஜிஸ்ட்)

பெருகிவரும் மார்பக புற்றுநோய்: கண்டுபிடிப்பது எப்படி? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Jul 16, 2014 5:16 am

யாரை எல்லாம் மார்பக புற்று நோய் தாக்கலாம்?

* 40 வயதை கடக்கும் பெண்களை தாக்கலாம்.

* ரத்தபந்தம் கொண்ட யாருக்கேனும் மார்பகம்– சினைப்பை– பெருங்குடல் புற்றுநோய் ஏதாவது இருந்திருந்தால், பாரம்பரிய அடிப்படையில் அடுத்த தலைமுறையையும் பாதிக்கலாம்.

* 35 வயதுக்கு மேலும் கர்ப்பம் தரிக்காதவர்கள்

* குழந்தைப் பேறு இல்லாதவர்கள்

* தாய்ப்பால் புகட்டாதவர்கள்

* 11 வயதுக்கு முன்பே வயதுக்கு வந்தவர்கள்

* 55 வயதுக்கு மேலும் மாதவிலக்கு ஏற்படுகிறவர்கள்

* கருப்பையை நீக்கியவர்கள்

* மருந்து, மாத்திரை மூலமாக ஹார்மோன் எடுத்துக்கொண்டவர்கள்

* உடல் குண்டானவர்கள்..

ஆகியோர்களை மார்பக புற்றுநோய் தாக்கலாம்!

பெருகிவரும் மார்பக புற்றுநோய்: கண்டுபிடிப்பது எப்படி? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Jul 16, 2014 5:16 am

அறிகுறிகள்:

* மார்பகத்தில் காணப்படும் கட்டி.

* மார்பக காம்புகளில் இருந்து திரவம் வெளியேறுதல். (தாய்ப்பால் புகட்டும் காலத்தில் பால் வெளியேறலாம். வேறு எப்போதும், எந்த திரவமும் மார்பக காம்புகளில் இருந்து வெளியேறக்கூடாது. வெளியேறினால் உடனடியாக கவனிக்கவேண்டும்)

* மார்பக காம்புகள் உள்அமுங்கிப்போகுதல்.

* காம்புகளை சுற்றி தடித்துப்போகுதல்.

* மார்பகங்கள் இரண்டிலும் ஒன்றுக்கொன்று அளவில் வித்தியாசம் காணுதல்.

* மார்பகத்தில் குழிவிழுதல்.

* மார்பக சருமத்தில் மாற்றம் ஏற்படுதல்.

* மார்பகத்தில் வலி தோன்றுதல்.

* அக்குளில் கட்டி ஏற்படுதல் மற்றும் அக்குளில் நெரி கட்டுதல்.

* இதயப் பகுதியில் ஏற்படும் அசவுகரியமான வலி.

மேற்கண்ட அறிகுறிகளில் ஏதாவது ஒன்று தென்பட்டாலே உஷாராகி விடவேண்டும். ஆனால் அதை மார்பக புற்றுநோய்க்கான அறிகுறியாக எடுத்துக்கொள்ளக்கூடாது. வேறுவிதமான பாதிப்புகளாலும் இந்த அறிகுறிகள் தென்படலாம்.

பெருகிவரும் மார்பக புற்றுநோய்: கண்டுபிடிப்பது எப்படி? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Wed Jul 16, 2014 10:09 am

பகிர்வுக்கு நன்றி.

பெருகிவரும் மார்பக புற்றுநோய்: கண்டுபிடிப்பது எப்படி? EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonபெருகிவரும் மார்பக புற்றுநோய்: கண்டுபிடிப்பது எப்படி? L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312பெருகிவரும் மார்பக புற்றுநோய்: கண்டுபிடிப்பது எப்படி? EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக