புதிய பதிவுகள்
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:54 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:58 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கர்மவீரர் காமராஜர்
Page 1 of 1 •
- jesiferகல்வியாளர்
- பதிவுகள் : 466
இணைந்தது : 03/04/2014
கர்மவீரர் காமராஜர் பிறந்த நாள் இன்று..
'பொதுப் பணத்தை நெருப்பா நினைக்கணும்!'
கார் பழுது பட்டதால், டாக்சியில் ஏறி கட்சி அலுவலகத்துக்கு வந்தார் காமராஜர். டாக்சிக்கு பணம் கொடுத்து அனுப்பும்படி உதவியாளரிடம் கூறி விட்டு, தன் அலுவல்களைப் பார்க்க ஆரம்பித்தார். உதவியாளர் டாக்சி டிரைவரிடம் பணத்தைக் கொடுத்து இரசீது பெற்றுக் கொண்டார்.
அன்றைய வரவு செலவினைச் சரிபார்த்த காமராஜர், டாக்சிக்கு கொடுத்த பணம் அதிகம் என உணர்ந்து உதவியாளரைச் சாடினார்.
"டாக்சி மீட்டர் எவ்வளவு ரூபாய் காட்டியது என்று பார்த்தாயா?" - காமராஜர்.
"டாக்சி டிரைவர் கேட்ட பணத்தைக் கொடுத்தேன் ஐயா."
"நீ மீட்டரைப் பார்த்து, அதன் படிதானே பணம் தர வேண்டும்? மீட்டரைப் பார்க்காமல், டாக்சி டிரைவர் கேட்ட ரூபாயை நீ கொடுக்கலாமா? இது பொதுப்பணம் இல்லையா? அஞ்சு ரூபாய், பத்து ரூபாய்ன்னு, பொது மக்கள் கிட்ட வசூலிச்ச பணத்தை நாம நெருப்பு மாதிரிக் கையாளணும். சிக்கனமாகச் செலவழிக்கணும். கட்சிப் பணத்தை, காமராஜர் தன் இஷ்டத்துக்குச் செலவு பண்ணி, வீணாக்கிட்டார்னு குற்றச்சாட்டு வரக் கூடாது," எனக் கூறினார்.
இக்காலத்தில் இப்படி ஒருத்தரைக் காணலாமா??

- saskiபண்பாளர்
- பதிவுகள் : 231
இணைந்தது : 07/07/2014
.....அள்ள அள்ள குறையாத வார்த்தைகளின் கடல் தமிழ்....!
- mmani15646பண்பாளர்
- பதிவுகள் : 202
இணைந்தது : 26/12/2009
திரு.சோ அவர்கள் பெருந்தலைவரைப் பற்றிய புத்தகத்தில், பெருந்தலைவர் ஒருமுறை அவரிடம் பேசும் போது ( அப்போது அவர் காங்கிரஸ் தலைவர்) நீ எத்தனை முறை என்னைப்பார்க்க வீட்டிற்கு வந்திருப்பாய். ஒரு முறையாவது உனக்கு நான் குளிர்பானமோ அல்லது காப்பியோ கொடுக்கச் சொல்லியிருக்கேனா? இந்தச்சமயத்தில் திரு.சோ அவர்களுக்கு தர்மசங்கடமாக உணர்ந்துள்ளார். ஆனால் தலைவர் அவர் கூறியதுபோல் ஒரு முறை கூடக் கூறியதில்லை என்பதும் உண்மைதான். பிறகு அவரே தொடர்ந்து எனக்கு என்ன வருமானம் வருகிறது. என்னுடைய செலவிற்கு கட்சி மாதா மாதம் ஒரு தொகையைத்தருகிறது. அது கட்சித் தொண்டர்களிடம் சந்தாவாக வசூலித்தப் பணம். எனவே நான் அதனை மிகச் சிக்கனமாகச் செலவு செய்யவேண்டும் என்று கூறியுள்ளார்.
பெருந்தலைவரிடம் பணிபுரிந்த திரு வைரவன் காய்கறி மலிவாகக் கிடைத்தது என்று ஒரு முறை இரண்டு காய் மதிய உணவிற்காகச் செய்துவிட்டாராம். அதைப் பார்த்து பெருந்தலைவர் மிகவும் கடிந்து கொண்டாராம் வீண் செலவு செய்கிறாய் என்று.
9 ஆண்டுகள் முதல்வர், ஒன்றுபட்ட காங்கிரஸின் அகில இந்திய தலைவர், இரண்டு பிரதமர்களைத் தேர்வு செய்தவர். சொத்துமில்லை சுகமுமில்லை.
அவருக்குப் பின் வந்தவர்கள்????????????

மதுரையில் தீரர் சத்தியமூர்த்தி கலந்து கொண்ட ஒரு பொதுக்கூட்டத்தில் 15 வயது ஒரு சிறுவன் துடிப்புடன், சுறுசுறுப்புடன் செயல்பட்டு கூட்டத்தை ஒழுங்குபடுத்திக் கொண்டிருந்தான். அந்த சிறுவன் சத்தியமூர்த்தி அவர்களின் கவனத்தை மிகவும் கவர்ந்து விட்டான். அவனை மேடைக்கு அழைத்த அவர் உனது பெயர் என்ன என்று கேட்க, அச்சிறுவன் தனது பெயர் காமராஜர் என்று பணிவுடன் கூறினான். அதற்கு சத்தியமூர்த்தி அவர்கள் அப்பா நீ என்னை சென்னையில் வந்து பார் என்று கூறி விட்டு பின்னர் மதுரையிலிருந்து புறப்பட்டு வந்துவிட்டார்.
சில காலம் கழித்து சென்னை வந்த காமராஜரை தீரருக்கு மிகவும் பிடித்துவிட்டது. காமராஜரின் பணிவு சத்தியமூர்த்தியை வெகுவாக கவர்ந்தது. காமராஜர் அவரை குருநாதராகவும், தன்னை சீடராகவும் நினைத்து பழகி வந்தார். அவருடைய செயல்பாடுகள் தீரருக்கு மிகவும் பிடித்ததால் அவரது நம்பிக்கைக்கு உரியவராக காமராஜர் தேர்வானார்.
1940-ம் ஆண்டு காங்கிரசில் ராஜாஜி ஆதரவாளர்கள் என்றும், சத்தியமூர்த்தி ஆதரவாளர்கள் என்றும் இரு பிரிவினர் செயல்பட்டார்கள். மாநில காங்கிரஸ் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் ராஜாஜி தன்னுடைய ஆதரவாளரான கோவை சுப்பையாவை போட்டியிட செய்தார். தீரர் தன்னுடைய சீடரான காமராஜரை நிறுத்த முடிவு செய்தார்.
இதை காமராஜரிடம் சொன்னபோது அவர் ஏற்றுக் கொள்ளவில்லை. உங்கள் தொண்டன் நான். நான் தலைவராவதா? என்று காமராஜர் உருக்கமாக தீரரிடம் கேட்டார். உடனே தீரர் அவரிடம், நாட்டின் நன்மையை கருதி நீங்கள் தான் தலைவர் ஆக வேண்டும். தேர்தலில் போட்டியிட வேண்டும் என்று காமராஜரிடம் திட்டவட்டமாக கூறினார்.
தீரர் கூறியதை தட்ட முடியாத காமராஜர் தேர்தலில் போட்டியிட்டார். தியாகராய நகரில் உள்ள இந்தி பிரசார சபாவில் தேர்தல் நடந்தது. இந்தி பிரசார சபா வெளிவாசல் அருகில் தீரர் நின்று கொண்டு ஓட்டு போட வந்தவர்களை கைகூப்பி வணங்கியபடி, "நாட்டின் நலனை கருத்தில் கொண்டு காமராஜருக்கு ஓட்டு போடுங்கள்" என்று கேட்டுக் கொண்டார்.
தலைவர் தேர்தலில் 2 ஓட்டுகள் வித்தியாசத்தில் காமராஜர் வெற்றி பெற்று மாநில காங்கிரஸ் தலைவர் ஆனார். தீரர் காங்கிரஸ் மாநில செயலாளர் ஆனார். தன்னை குருவாக நினைத்த காமராஜரை தலைவர் ஆக்கி அவருக்கு கீழ் செயலாளர் பதவி வகித்த தீரரின் தியாகத்தை அரசியல் வரலாற்றில் இது வரை யாரும் செய்ததில்லை.
காமராஜர் எப்போதும் நாடு, நாட்டு மக்களை பற்றிதான் சிந்தித்துக் கொண்டிருப்பார். சுதந்திர காற்றை சுவாசிக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்த தீரர் சுதந்திரம் அடைவதற்கு முன்பே தனது 55-வது வயதில் இறந்து விட்டார். தீரரின் மரண செய்தியை கேட்ட காமராஜர் துடியாய் துடித்தார். துக்கம் தாங்காமல் கதறி அழுதார்.
காமராஜர் தன்னைப் பற்றியோ, தனது வீட்டைப் பற்றியோ சிந்திப்பதே கிடையாது. இதற்கு ஒரு சம்பவத்தை உதாரணமாக கூற முடியும். காமராஜர் முதல்-அமைச்சர் ஆன பிறகு தியாகராய நகரில் உள்ள இந்தி பிரசார சபா எதிரில் தணிகாசலம் சாலையில் தீரரின் குடும்பத்தினர் குடியிருக்கும் வீட்டுக்கு அடிக்கடி வருவார். காமராஜர் அவர்களிடம் ‘என்னை பார்க்க நீங்கள் வரவேண்டாம். நானே வருவேன்' என்று கூறுவார்.
ஒரு நாள் காமராஜரின் தாயார் சிவகாமி அம்மையார் தீரரின் குடும்பத்தினர் வசித்த வீட்டுக்கு வந்தார். அவர் தீரரின் மனைவி பாலசுந்தரத்திடம் விருதுநகரில் உள்ள வீட்டு சுற்று சுவர் இடிந்து உள்ளது. அதை தம்பி (காமராஜர்)யிடம் கட்டச் சொல்லுங்க என்று சிவகாமி அம்மையார் உருக்கமாக சொன்னார். தீரரின் மனைவி இவ்விஷயத்தை காமராஜர் வீட்டுக்கு வந்தபோது கூறினார்.
உடனே காமராஜர், முதல்-அமைச்சர் பதவிக்கு வந்த உடன் அவன் தன்னுடைய வீட்டு சுற்றுச் சுவரை கட்டியுள்ளான் என்று குற்றச்சாட்டு கூறுவார்கள்' என்று தீரரின் மனைவியிடம் கூறினார். இதை கேட்ட அவர் மவுனம் ஆகிவிட்டார்.
இன்னொரு நாள் சிவகாமி அம்மையார் தீரரின் மனைவியிடம் எனக்கு காமராஜர் ஒரே பையன். அவன் திருமணம் செய்யாமல் இருப்பது எனக்கு மிகவும் வருத்தமாக உள்ளது. அவனை திருமண கோலத்தில் பார்க்க வேண்டும் என்று எனக்கு ஆசையாக இருக்கிறது. அவனிடம் இதை எடுத்து சொல்லி திருமணத்துக்கு சம்மதிக்க செய்யுங்கள்' என்று கூறினார்.
இம்முறையும் காமராஜர் தீரர் குடும்பத்தினர் வசித்த வீட்டுக்கு வந்தபோது அவரிடம் திருமணம் செய்து கொள்ளுமாறு தீரரின் மனைவி கேட்டுக் கொண்டார். அதற்கு அவர் எந்த பதிலும் சொல்லாமல் மவுனமாக சென்று விட்டார்.
காமராஜரை காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைவராக தேர்ந்தெடுத்தார்கள். புவனேஸ்வரில் அவர் பதவி ஏற்பு விழா நடந்தது. தீரரின் குடும்பத்தை அவர் அந்த விழாவுக்கு அழைத்தார். அவர்கள் குடும்பத்துடன் ரெயிலில் சென்று பதவி ஏற்பு விழாவில் கலந்து கொண்டார்கள். அகில இந்திய காங்கிரஸ் தலைவராக காமராசர் பதவி ஏற்ற விழா மிகவும் சிறப்பாக இருந்தது. அந்த விழாவை தீரரின் குடும்பத்தினர் காமராசரின் திருமண விழாவாக நினைத்துக்கொண்டனர். அந்த அளவுக்கு நன்றி விசுவாசத்துடன் காமராஜர் தீரர் குடும்பத்தாரின் மீது அளவு கடந்த அன்பும், பாசமும் வைத்திருந்தார்.
முதல்-அமைச்சராக இருந்தபோது காமராஜரும், தீரரின் குடும்பத்தாரும் திருப்பதி கோவிலுக்கு சென்றார்கள். ஆந்திர முதல்-மந்திரியாக இருந்த பிரமானந்த ரெட்டியும் கோவிலுக்கு வந்திருந்தார். கோவிலில் தீரரின் பேரன்களான கிருஷ்ணமூர்த்தி, சத்தியமூர்த்தி ஆகியோருக்கு மொட்டை போட செய்தார்.
திரும்பி காரில் வரும்போது ரேணிகுண்டாவில் புதை மணலில் காரின் டயர்கள் சிக்கிக் கொண்டது. கார் நகரவில்லை. காரில் இருந்த காமராஜர் கீழே இறங்கி காரை தள்ளினார். முதல்-அமைச்சராக இருந்த அவர் எந்தவித கவுரவமும் பார்க்காமல் காரை தள்ளியது தீரரின் குடும்பத்தாருக்கு ஆச்சரியம் அளித்தது.
தீரர் மீது காமராஜர் அளவு கடந்த மதிப்பும், மரியாதையும் வைத்திருந்தார். இந்தியா சுதந்திரம் அடைந்த போது கோட்டையில் அவர் தேசிய கொடியை ஏற்றினார். சென்னை மாநகராட்சி அவருக்கு வரவேற்பு பத்திரம் கொடுப்பதற்காக அழைத்தது. அவர் பூண்டி நீர்தேக்கத்துக்கு தன்னுடைய குருநாதர் சத்தியமூர்த்தியின் பெயரை சூட்டினால் தான் வரவேற்பு பத்திரத்தை பெற்றுக் கொள்வேன் என்று கூறினார். அவர் கேட்டுக் கொண்டபடி சென்னை மாநகராட்சி பூண்டி நேர்தேக்கத்துக்கு சத்தியமூர்த்தி பெயரை சூட்டியது.
மாநகராட்சி வளாகத்தில் தீரரின் திரு உருவச் சிலையை பிரதமராக இருந்த நேருவை அழைத்து வந்து காமராஜர் திறக்க வைத்தார். பின்னர் இந்திராவை தீரரின் வீட்டுக்கு அழைத்து வந்து தீரரின் மனைவிக்கு அறிமுகப்படுத்தினார். தீரரை குருவாக மதித்து, அந்த குருவுக்கு பெருமையும் புகழும் சேர்த்த முதன்மை சிஷ்யராகவே காமராஜர் வாழ்ந்து மறைந்தார். இப்படி வாழ்ந்த காலம் முழுவதும்,
நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது
அன்றே மறப்பது நன்று
என்ற திருவள்ளுவரின் குறளுக்கு ஏற்ப நன்றி மறவாமல் வாழ்ந்த காமராஜரின் வழியை பின்பற்றி நாமும் நன்றி மறவாமல் வாழவேண்டும் என்று அவரது பிறந்த நாளான இந்த நாளில் சூளுரை ஏற்கவேண்டும் என்பதே நமது விருப்பம்.

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
காமராஜர் அவர்கள், தன்னைப் பாராட்டி யாராவது அதிகம் பேசினால், 'கொஞ்சம் நிறுத்துன்னேன்' என்று சட்டையைப் பிடித்து இழுப்பார். அடுத்த கட்சியை மோசமாகப் பேசினால், 'அதுக்கா இந்தக் கூட்டம்னேன்' என்றும் தடுப்பார்!
மாதம் 30 நாளும் கத்திரிக்காய் சாம்பார் வைத்தாலும் மனம் கோணாமல் சாப்பிடுவார். என்றைக்காவது ஒரு முட்டை வைத்துச் சாப்பிட்டால் அது அவரைப் பொறுத்தவரை மாயா பஜார் விருந்து!
சுற்றுப் பயணத்தின்போது தொண்டர்கள் அன்பளிப்பு கொடுத்தால், 'கஷ்டப்படுற தியாகிக்குக் கொடுங்க' என்று வாங்க மறுப்பார்!
மகன் முதலமைச்சரானதும் அம்மா சிவகாமிக்கு அவருடன் தங்க ஆசை. 'நீ இங்க வந்துட்டாஉன்னைப் பார்க்கச் சொந்தக்காரங்க வருவாங்க. அவங்களோட கெட்ட பேரும் சேர்ந்து வந்துடும். அதுனால விருது நகர்லயே இரு' என்று சொல்லிவிட்டார். அந்த வீட்டையாவது பெரிதாக்கி கட்டித் தரக் கேட்டபோதும் மறுத்துவிட்டார்!
பந்தாக்களை வெறுத்தவர். முதல் தடவை சைரன் ஒலியுடன் அவருக்கான பாதுகாப்பு கார் புறப்பட்டபோது தடுத்தார். 'நான் உயிரோடுதான இருக்கேன். அதுக்குள்ள ஏன் சங்கு ஊதுறீங்க?' என்று கமென்ட் அடித்தார்!
இரண்டு முறை பிரதமர் ஆக வாய்ப்பு வந்தபோதும் அதை நிராகரித்து லால் பகதூர் சாஸ்திரி, இந்திரா காந்தி ஆகியோரை பிரதமர் ஆக்கினார். 'கிங் மேக்கர்' என்ற பட்டத்தை மட்டும் தக்க வைத்துக்கொண்டார்!

காமராஜர் - 25 : விகடன்
- மாணிக்கம் நடேசன்கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
அவரது புகழ் வாழ்க
பெருந்தலைவர் பற்றிய ஜெசிபர் , எம்.மணி, சிவா, விமந்தனி ஆகியோர் பதிவுகள் கண்ணில் நீரை வரவழைத்துவிட்டன ! பல தலைமுறைகளுக்குக் காமராசர் ஒரு முன்மாதிரி !
காரைக்குடி தேவகோட்டைச் சாலையில் ராசு என்பவர் தேநீர்க்கடை வைத்திருந்தார்; காமராசர் பக்தர் அவர் !ஒருமுறை அவ்வழியே திறந்த காரில் காமராஜர் வந்தபோது சடக்கென்று ஒரு குழந்தையைத் தூக்கிக்கொண்டுவந்து , காமராஜரிடம் , “ஐயா எம் புள்ளைக்கு ஒரு பேர் வையுங்கையா !” என்று அவர் கையில் கொடுக்க அவரும் பேர்வைத்தார் ! அதைச்சொல்லிச்சொல்லி எங்களிடம் அந்த டீக்கடை ராசு நெடுநாளைக்குப் பெருமைப்பட்டுக்கொண்டார் !
ஒருமுறை காரைக்குடி மகர்நோன்புப் பொட்டலில் காமரசர் கூட்டம் ; மழை வந்துவிட்டது ! அருகிலிருந்த குடந்தை ராமலிங்கம் (அப்போது இவர் முன்னணிப் பேச்சாளர்!), குடையை விரித்துக் காமராசரின் தலைக்குமேல் பிடித்தார் ; “உமக்கு அறிவிருக்காண்ணே ! இத்தனை பேர் நனையும்போது நான்மட்டும் ஒசத்தியாண்ணே” என்று கூறியபடியே அவரே குடையை வாங்கிச் சுருக்கி ராமலிங்கத்திடம் கொடுத்துவிட்டார் !

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
- jesiferகல்வியாளர்
- பதிவுகள் : 466
இணைந்தது : 03/04/2014
மிகவும் நன்றி டாக்டர் சௌந்தரப்பாண்டியன் அவர்களே.... உங்கள் பொன் போன்ற பதிவுகளை நான் இனிதே தவறாமல் படிப்பதுண்டு.
ஆக்கங்கள் இனிதே தொடர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்....
ஆக்கங்கள் இனிதே தொடர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்....
- saskiபண்பாளர்
- பதிவுகள் : 231
இணைந்தது : 07/07/2014
.....அள்ள அள்ள குறையாத வார்த்தைகளின் கடல் தமிழ்....!
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1